November 15, 2008

வாரணம் ஆயிரம் - விமர்சனம்!!!வாரணம் ஆயிரம் - மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்திருக்கும் திரைப்படம். வெற்றி பெற்ற கவுதம் - ஹாரிஸ் ஜெயராஜ் - சூர்யா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறார்கள். பெரும் ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு இளைஞனின் வாழ்க்கையை பதிவு செய்ய முயன்று இருக்கிறார்கள். அதனூடாக தந்தை-மகன் பாசம், காதல், சோகம், தன்னை தானே உணரும் பருவம் என அனைத்தையும் சொல்ல முற்பட்டுள்ளார் கவுதம். படத்தின் முடிவில் நமக்கு ஆயாசமே ஏற்ப்படுகிறது.


கிருஷ்ணாவின் மகன் சூர்யா(இரண்டும் சூர்யா தான்). கிருஷ்ணா இறக்கும் காட்சியில் படம் தொடங்குகிறது. தொலைவில் ஒரு மிஷனில் இருக்கும் மேஜர் சூர்யாவிற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவரின் நினைவுகள் வாயிலாக படம் விரிகிறது. பள்ளி மாணவனாக, பின்பு கல்லூரியில் படிக்கும் இளைஞனாக சூர்யா. ஒரு சந்திப்பில் மேக்னாவிடம் (சமீரா ரெட்டி) மனதை பறிகொடுக்கிறார். விக்ரமன் படம் போல ஐந்தே நிமிடங்களில் வீட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கிறார். தாய் தந்தை உதவியோடு அமெரிக்கா சென்று அவள் இதயத்தில் இடம்பிடிக்கிறார்.ஆனால் ஒரு விபத்தில் மேக்னா இறந்து போகிறாள். சோகத்தில் சூர்யா போதை மருந்திற்கு அடிமை ஆகிறார். பின்பு அதிலிருந்து மீண்டு காஷ்மீர் செல்கிறார். அங்கு தீவிரவாதிகளிடம் இருந்து ஒரு குழந்தையை மீட்கிறார். பிறகு ராணுவத்தில் சேர்கிறார். இதன் நடுவே தன்னை காதலிக்கும் ப்ரியாவை (ரம்யா) திருமணம் செய்கிறார். அப்பாவிற்கு உடல் நலம் இல்லாமல் போகிறது. தொண்டையில் கான்சர். தான் விரைவில் திரும்பி வருவதாக சொல்லி சூர்யா ஒரு மிஷனுக்காக கிளம்புகிறார். இதோடு படம் மீண்டும் நிகழ் காலத்திற்கு வருகிறது. வேலையே முடித்த உடன் சென்று தனது தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்கிறார். இதோடு படம் முடிகிறது. இதை சொல்றதுக்கே கண்ணை கட்டுகிறதே.. பார்த்தால்?...


சூர்யா - ஒரே வார்த்தையில் சொல்வதானால்.. அற்புதம். ரொம்ப மெனக்கட்டிருக்கிறார். உடலை குறைத்து, கூட்டி, சிக்ஸ் பாக் என மிகவும் உழைத்து இருக்கிறார். உணர்வுகளை வெளிப்படுத்துவதாகட்டும், சின்ன சின்ன சேட்டைகளிலும் மிளிர்கிறார். இரண்டு ரோல்களிலும் வித்தியாசத்தை காட்டியுள்ளார் . அப்பாவுக்கு மட்டும் ஒப்பனை சரியாக பொருந்தவில்லை. மற்றபடி சூர்யா அசத்துகிறார். அவரின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராக போனது தான் கொடுமை. மூன்று நாயகிகளில் ரம்யாவிற்கு தான் முதலிடம். பக்கத்து வீட்டு பெண்ணை போல இருக்கிறார். சிம்ரன் அம்மாவாக வந்து போகிறார். சமீரா ரெட்டி..முதிர் கன்னி போல தோற்றம் கொண்ட இவரைப் பார்த்து சூர்யா இவ்வளவு உருக வேண்டாம் எனத் தோன்றுகிறது.


படத்தின் பெரிய பலம் இசை. தாமரையின் வரிகளில் எல்லா பாடல்களுமே நன்றாக உள்ளன. எனினும் பாடல்களை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் மண்டை காய வைக்கிறது. குறிப்பாக முன்தினம், அஞ்சல பாடல்கள் நம்மை பாடாய் படுத்துகின்றன. காதலி இறந்த சோகத்தில் வரும் பாடலாக அஞ்சலை பாடல் நம்மை கொலைவெறி கொள்ள செய்கிறது. பாடல்களுக்கு நடனம் அமைத்தவரை ஓட விட்டு கல்லால் அடிக்கத் தோன்றுகிறது. பின்னணி இசையில் பெரிதும் மெனக்கடவில்லை ஹாரிஸ். கவுதமுடன் இது தான் கடைசி படம் என்பதால் இது போதும் என் நினைத்து விட்டாரோ என்னவோ. ரத்னவேலு ஒளிப்பதிவு. பாதி படம் இருட்டிலேயே இருப்பது போல ஒரு உணர்வு. ஒவ்வொரு ஷாட் முடியும் போதும் திரை இருண்டு போவது எரிச்சலைதான் தருகிறது. எடிட்டிங் -ஆண்டனி. முடிந்ததை செய்து இருக்கிறார். பேசுபவர்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே பேசி கொண்டிருப்பதால் நாம் பார்ப்பது தமிழ் படம் தானா என சந்தேகம் வருகிறது.


தந்தை மகனுக்கு இடையே உள்ள நெருக்கத்தை எந்த காட்சிகளுமே சொல்லாத நிலையில் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. இதுதான் இந்த படத்தின் பெரும் பலவீனம். கவுதம் ஆங்கில படங்கள் பார்ப்பதை குறைத்து கொண்டு தமிழர்களுக்காக படம் எடுக்க வேண்டும். படத்தின் நீளம் மூன்று மணி நேரத்தையும் தாண்டி செல்கிறது. படம் ரொம்ப மெதுவாக போவதால் நம்மால் தாங்க முடியவில்லை. தனது தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பணம் செய்து இருக்கிறார் கவுதம். அதற்கு நாம் தானா கிடைத்தோம்?


ஆக மொத்தத்தில்..


வாரணம் ஆயிரம் - பார்க்காமல் இருக்க காரணம் ஆயிரம்....

November 14, 2008

அடங்கொக்காமக்கா...!!!


நடிகர் கவுண்டமணி ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரங்கள் வருமாறு...

"என்னடா..ரிக்கி தம்பி.. எப்படிடா இருக்க அண்டார்டிக்கா வாயா ... வீட்ல எல்லாரும் சௌக்கியமா? அட எதிரியா இருந்தாலும் நலம் விசாரிக்கிறது தானேப்பா தமிழ் மரபு...ஐயா இன்னும் இந்தியா கிட்ட தோத்த பீலிங்க்ஸ்ல இருந்து வெளிய வரல போல இருக்கு? அட..விளையாட்டுல இதெல்லாம் சகஜமப்பா.. ஒன்கிட்ட சில விஷயம் சொல்லணும்னு ஆசைடா.. அதுக்கு தான் இந்த லெட்டர்..

உண்மைய சொல்லனும்னா இந்தியாகாரன் அத்தன பெரும் உனக்கு கடன்பட்டு இருக்கோம்டா பேரிக்கா தலையா.. நாக்பூர் டெஸ்ட்ல நம்ம பசங்க திடீர்னு ஆறு விக்கெட் அவுட் ஆனவுடனே சரி.. அவ்ளோ தான்னு நினச்சேன்... ஆனா உன்னோட அறிவு அப்போ வேல செஞ்ச ஸ்டைல் இருக்கே..அடங்க்கொன்னியா ரொம்ப பொறாமையா இருக்குடா..ஓவர் ரேட் மெதுவா இருக்குன்னு சொல்லி ஹஸ்சி, வைட், கிளார்க்னு எப்படிப்பட்ட உலகத்தரமான பவுலர்ஸ யூஸ் பண்ணி நம்ம பசங்கள நீ காப்பாத்துனனு எனக்கு தெரியும்டா.. முள்ளம்பன்றித் தலையன் வடிவேலு சொல்ற மாதிரி சொல்லணும்னா.. நீ ரொம்ப நல்லவன்டா... உனக்கு மட்டும் எப்படிடா நாயே இதெல்லாம் தோணுது?

எல்லா துறைலயும் இந்தியா நல்லா விளையாண்டாங்க..நாங்க தோல்விய ஒத்துக்கிறோம்னு நீ யாருக்குமே புரியாத ஒரு இங்கிலிஷ்ல சொன்னப்ப சரி ரைட்டு..பய புள்ள நல்லவந்தாண்டா நான் நினச்சேன்..ஆனா உங்க ஊர்ல போய் நீ போடுற சீனப்பாத்தா.. அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமின்னு தோணுது... ஏண்டா.. ஏன் தோத்திங்கனு கேட்டா யாரும் சரியா விளையாடலை.. அதனாலே தோத்தோம்னு சொல்லு.. அத விட்டுட்டு, சம்பந்தமே இல்லாம.... போன வருஷம் நாங்க ஆஸ்திரலியாவில விளையாண்டப்ப எங்க வாரியம் எங்கள கை விட்டுறுச்சு அத பத்தி பேசுங்கனு சொல்ற.. ..விட்டா சைமண்ட்ஸ் மீன் பிடிக்க போனதால தான் நாங்க தோத்தோம். அதனாலே..இனிமேல் யாரும் மீனே பிடிக்க கூடாதுன்னு கூட சொல்லுவ போல.. போடா டுபாக்கூரு.. அது இதுனு ஏண்டா உளர்றே..

இந்த டூர்ல நீ விளையாண்ட லட்சணம் என்னனு உனக்கு தெரியுமா? இதுல ஊருக்கு போய் இறங்கின உடனே ஐயா பேட்டி தர்றிங்க.. எல்லாரும் ஒழுங்கா விளையாடனும்.. இல்லனா டீம்ல இருக்க முடியாதுன்னு.. முதல நீ ஒழுங்கா விளையாடுடா பச்சில புடுங்கி.. விட்டா அம்பயருக்கு அன்னைக்கு மூடு சரி இல்ல.. ஜலதோஷம்..அதனால மூக்க தொடைக்க அடிக்கடி கைய தூக்கிகிட்டே இருந்தாரு.. அத போய் அவுட்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லுவ போல..டே டிஸ்னிலான்ட் மண்டையா..உண்மைய ஒத்துக்கொங்கடா..

அது என்னடா உங்களுக்கு அப்படி ஒரு மப்பு.. எதிர் டீம்காரன்கிட்ட போய் உன் பொண்டாட்டி நல்லா இருக்காளா? அக்கா, அம்மா எல்லாம் சௌக்கியமானு கேட்டு கடுப்பேத்த வேண்டியது.. அதையே வேற எவனாவது உன்கிட்ட கேட்டுட்டான்னா, ஐயோ...அம்மா...மானம் போச்சே...மரியாத போச்சேன்னு பொலம்ப வேண்டியது.. அவங்க அழுகுணி ஆட்டம் ஆடுறாங்கன்னு வேற கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது.. ஏண்டா அணுகுண்டு வாயா... நீங்க பண்ணா ரைட்டு.. மத்தவங்க பண்ணா தப்பா..

சரி தம்பி.. முடிஞ்சது முடிஞ்சுபோச்சு.. நீங்க முன்னாடி மத்த டீம்க்கு என்ன செஞ்சிங்களோ அத தான் இன்னைக்கு அவங்க உங்களுக்கு செய்றாங்க..களத்துக்குள்ள வெச்சு எதிரணிக்காரங்கள திட்டுறதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா கிரிக்கெட் ஆடுற வழிய பாருங்க.. அவ்ளோதாண்டா ஆப்பத்தலையா....


அன்புடன்,

கவுண்டமணி

November 13, 2008

அவனும் அவளும்.....!!!!

அவன் கதவைத் திறந்து கொண்டு மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தான். டிவியில் டாம் அன்ட் ஜெர்ரி ஓடி கொண்டு இருந்தது. அவள் சமையலறையில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக சென்று பின்னால் இருந்து அணைத்து கொண்டான்.

"ஐயோ.. என்ன இது.. விடு விடு.. ஐயா ரொம்ப நல்ல மூட்ல இருக்கீங்க போல?"

"ஆமாம்மா.. இன்னைக்கு ...... புத்தகம் பார்த்தியா? அதுல என்னோட கதை வந்திருக்கு.. ஆபீஸ்ல எல்லாரும் பார்த்திட்டு கூப்பிட்டு பாராட்டினாங்க தெரியுமா?"

"ம்ம்ம்ம்ம்.. அப்படியா? சரிப்பா..."

"ஏம்மா... மேடம் ரொம்ப சலிச்சுக்கற மாதிரி தெரியுது?... நீ படிச்சியா?"

"படிச்சேன்..ஆனா..எனக்கு பிடிக்கல.."

"பிடிக்கலியா?..ஏன்?.."

"சொல்ல தெரியல.. ஆனா பிடிக்கல"

"என் பிரெண்ட்ஸ் எல்லோரும் பிடிச்சிருக்குனு தானே சொன்னாங்க.. ஆபீஸ்ல கூட அதே தான் சொன்னாங்க.."

"அதுக்காக.?எனக்கு பிடிக்கலேனா பிடிக்கலைனு தான் சொல்லுவேன்"

"அது தான் ஏன்னு கேட்குறேன்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லு.."

"இங்கே பார்..உனக்கு என்ன பிடிக்குமோ அது எல்லாம் எனக்கும் பிடிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. அது எல்லாத்தையும் உன்கிட்ட நான் சொல்லி தான் ஆகணும்னு எந்த சட்டமும் கிடையாது.. பிடிக்கலைனு சொன்னா விடேன்.. ஏன் என் உயிரை வாங்குற?..."

விளையாட்டாக ஆரம்பித்தது.... வினையாகப் போனது. அவன் அமைதியாக நடந்து சென்று சோபாவில் அமர்ந்தான். டிவியில் இப்போது டாம் ஜெர்ரியை கண்டு பயந்து ஓடிக்கொண்டு இருந்தது. அவள் சமையலறையின் உள்ளேயே இருந்தாள். அங்கே விவரிக்க முடியாத ஒரு மௌனம் மட்டுமே இருந்தது.

சற்று நேரத்திற்கு பின் அவள் மெதுவாக நடந்து வந்து அவன் முன் அமர்ந்தாள். அவன் கண்களை பார்த்து சொன்னாள்..

"நீ எழுதுறது எனக்கு பிடிக்குதோ இல்லையோ.. உன்னோட விருப்பங்கள் எனக்கு படிக்குதோ இல்லையோ..அதெல்லாம் தாண்டி.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா.. உன்னோட அன்பு தாண்டா எனக்கு எல்லாமே.."

அவள் கண்களில் நீர் திரண்டிருந்தது. அவன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். "நானும் அப்படித்தான்மா.."என்றவாறே அழத் தொடங்கினான். அங்கே காதல் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது!!!!

November 7, 2008

காமிக்ஸ் என்னும் அற்புத உலகம்!!!இன்று 25 முதல் 40 வயது வரை இருக்க கூடிய யாரை கேட்டாலும் காமிக்ஸ் பற்றி பெருமையாக சொல்வார்கள். நம் நிஜ வாழ்வில் நினைத்து பார்க்க இயலாத வீரத்தீர சாகசங்களும் மாயாஜால மந்திரங்களும் நிறைந்த ஒரே அற்புத உலகம் காமிக்ஸ்களின் உலகம். ஆரம்ப காலங்களில் லைன், முத்து, திகில், மினி லைன் என்று பல காமிக்ஸ்கள் வந்து கொண்டு இருந்தன. நம்மால் மறக்க முடியாத பல கேரக்டர்களை இவை நமக்கு அறிமுகம் செய்து வைத்தன.


நிழல் உலக சக்கரவர்த்தி spider, டெக்ஸ் வில்லர், கார்சன், டைகர், ஆர்ச்சி என எண்ணிலடங்கா கதாபாத்திரங்களை நம் கண் முன் உலவ விட்டவை காமிக்ஸ்களே. புதிய இடங்களும் புதுப் புது அனுபவங்களையும் காமிக்ஸ்கள் நமக்கு தந்தன. காட்சிகள் நம் கண் முன்னே விரிய அவற்றின் ஊடான நமது வாசிப்பு தரும் இன்பம் அலாதியானது. காமிக்ஸ் என்பது சிறியவர்களுக்கு மட்டும் அல்லாது அனைவரும் படிக்க கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.

இன்று ஊடகங்கள் பெரிதும் வளர்ந்து விட்ட நிலையில் காமிக்ஸ்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன.பாலமித்ரா, பூந்தளிர், பார்வதி சித்திரக் கதைகள் என பல புத்தகங்களும் இன்று இருந்த இடம் தெரியவில்லை. மதுரையில் இருந்து வெளிவந்தது கொண்டு இருந்த கலைப்பொன்னியின் மாயாஜால புத்தகங்களும் நின்று போயின. ராணி காமிக்ஸ் தனது தனித்தன்மை இழந்து விட்டது. லயன் காமிக்ஸ் மட்டுமே இன்று வரை பிடிவாதமாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்று வரை தரமான படைப்புகளை தந்து கொண்டு இருக்கும் லயன் ஆசிரியர் எஸ். விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


நமது பால்ய பருவங்கள் கதைகளால் சூழப்பட்டு இருந்தது. ஆனால் நமது அடுத்த தலைமுறைக்கோ கதைகள் என்றால் என்ன என கேட்கும் நிலை வந்து விடுமோ என்று அச்சமாக உள்ளது. கம்ப்யூட்டர்களின் முன்னும் தொல்லைகாட்சிகளின் முன்னும் தங்களின் நேரத்தை தொலைக்கும் அவர்களுக்காக நாம் பரிதாபப்பட மட்டுமே முடியும். காமிக்ஸ்களோடு வாழ்ந்த அந்த நாட்களை பற்றி சொல்வதானால், அது ஒரு அழகிய நிலாக்காலம்.
November 6, 2008

நாங்களும் இப்போ தமிழ்ல எழுதுறோமல!!!!!

அனைத்து எழுத்துலக நண்பர்களுக்கு, இப்போதுதான் தமிழில் டைப் செய்ய பழகி உள்ளேன். இனிமேல் எனது எழுத்துக்களை நம் தாய்மொழியிலேயே படிக்க முடியும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களில் ஒருவனாக என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மா. கார்த்திகைப் பாண்டியன்

What are we heading for?

I would first like to register my strong condemn for the arrogant acts happening in srilanka... From the olden days, say 10 A D, its a well known fact that tamilians are also a part of the island. A lot of evidances are found in history to prove this. We people in Tamilnadu have always felt that they are our brothers. But what the hell is happening there is highly unacceptable. The photographs of people being tortured by the lankan soldiers is unbearable. It looks the war is not against the tigers but against the entire tamil community. Its not the fault of the people but of the government. Looks like they have only one agenda, to completely destroy the base of tamilians. And its a real pity that our country is also supporting the cause of this irrarionalist srilankans. We give them arms to shoot at our own brothers..Isnt that a shame? When our Chief Minister took this issue in his hand, I thought he would do his level best to ensure the safety of the tamilians. But.. what has happened to him? The comments that he say everyday are totally contradictory. One day he says that MP's would resign if the government wont take action. Next day, he reverts that it was said to force the central people and not in a serious mode. When a reporter asked can we intervene into another country's politics, he reminds him of Bangladesh. The next day itself he goes on the other side that a country has some limitations to look into other country's political affairs. Do we people look like jokers? The best comedy happened on the day of people demonstrating a human chain to showcase their support. The directors seeman, ammeer participated in the event and our CM was waving hands towars them. In few hours they were arrested. What to say about this? Then comes the turn of this people from film fraternity. What do they think about themselves? Saviours? Its good that they support the cause of tamilians but the reality is that most of these people do not know what the actual problem is.. The directors were arrested for their comments at Rameshwaram. It was fine till then.. The events that took place after this totally changed or robbed the cause. They were hailed as martyrs and when they came out of jail were given a red carpet reception, totally deviating from the issue. The one good thing was the hunger fast staged by the actors. Ya, I do agree that people came to see the stars and not to listen what they said. But some of the actors really registered their exact views. Especially Rajni. He may be a confused man but is a man driven by his emotions. One thing he said was exactly true. You are fighting for thirty years but still could not defeat a group. Then why dont you accept the defeat graciuosly as a man? Apart from that some actors spoke mindlessly.. But they had registered their feelings. One big problem here in Tamilnadu is that Srilankan Tamil issue is handled as a political concept for the local politicians. They are not really caring for the people over there but about how to run the politics here with that issue.But i can insist that we people are not intended in getting anything out of this. we would do the needful to support our brothers over there.Pray to God that finally peace prevails over the island.

November 3, 2008

my first writing...

hi friends...

i am M.Karthigai pandian... Lecturer in an Engineering college in perundurai... basically from madurai... a very keen follower of tamil blogs... would love to write in tamil but i dont have the necessary softwares here... anyway happy that am also able to join the blogging community... hope to have a nice time....