June 25, 2009

உக்கார்ந்து யோசிச்சது (25-06-09)......!!!

மனம் பூராவும் நிறைந்து வழியும் மகிழ்ச்சியோடு இந்தப் பதிவை எழுதுகிறேன். நேற்று என் தங்கையின் திருமண வைபவம் இனிதே நடந்து முடிந்தது. கல்யாணம் என்பது இரு உள்ளங்களின் சங்கமம் மட்டும் அல்ல, இரு குடும்பங்களின் இணைப்பும் கூட. புதிதாக சில உறவுகள், பொறுப்புக்கள்.. எல்லாமே எனக்கு புதிய அனுபவம். வாரநாள் (புதன்கிழமை) என்றபோதும் எனக்காக திருமணத்திற்கு வந்த நண்பர்களையும், மாணவர்களையும் பார்த்த போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. நான் உறவை விட அதிகமாக நட்பை மதிப்பவன். நம்மால் இவ்வளவு மனிதர்களை சம்பாதிக்க முடிந்ததே என்று மனதுக்கு நிறைவாக இருந்தது .
சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பதிவுலக நண்பர்களும் பெருமளவில் வந்து வாழ்த்தினர். சீனா ஐயா மற்றும் அவரது துணைவியார், ஸ்ரீதர், அன்பு, சுந்தர், ஜாலிஜம்பர், பாலகுமார், சொல்லரசன், ஆதவா, தம்பதி சமேதராக வந்த தருமி ஐயா மற்றும் தேவன்மாயம் என அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் வர முடியாத காரணத்தால் தங்கள் அண்ணனை அனுப்பி வைத்த நண்பர்கள் முத்துராமலிங்கம், அன்புமணி.. போனில் அழைத்து வாழ்த்திய ரம்யா அக்கா, வால்பையன், mayvee, ஞானசேகரன், இளைய கவி.. பதிவில் வாழ்த்திய நண்பர்கள்.. எல்லாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
***************
அண்ணன் அஞ்சாநெஞ்சன் மதுரையின் எம்.பியான போது கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது நடக்கும் காட்சிகளை பார்க்கும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. பல வருடங்களாக நிறைவேறாமல் இருந்த மதுரை மக்களின் கோரிக்கையான சென்ட்ரல் மார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு மாற்றும் பணி தொடங்கி விட்டது. மதுரை ஏர்போர்ட் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கட்சி எம்.எல்.ஏவான நன்மாறனின் வேண்டுகோளை ஏற்று மாசாத்தியார் பெண்கள் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. பாலங்களும் வேகமாக கட்டுப்படுகின்றன. கண்டிப்பாக இவை எல்லாமே மக்களிடம் அஞ்சாநேஞ்சனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியே இந்த போஸ்டர் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தவும், தென் மாவட்டங்களுக்கு தொழிற்சாலைகளை கொண்டு வரவும் முயற்சிகள் எடுத்தால் மக்கள் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.
***************
இந்திய அணி T20 கிரிக்கட்டில் தோற்றுப் போனதற்கு காரணங்களைத் தேடித்தேடி, பக்கம் பக்கமாக போட்டு வருகின்றன பத்திரிக்கைகள். ஆனால் சத்தமே இல்லாமல் ஒரு பெண் சாதனை செய்து இருப்பதை மீடியா கண்டு கொள்ள மறுக்கின்றது. ஒரே ஒரு பத்தியில் போனால் போகட்டும் என்று எழுதுகிறார்கள். சாய்னா நேவால்.. இந்தியாவின் புதிய பூப்பந்து வீராங்கனை. சூப்பர் சீரீஸ் என்னும் முக்கியமான போட்டியில் ஜெயித்து இருக்கிறார். கிரிக்கட் வீரர்களுக்கு மட்டும் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் நம் அரசாங்கம் ஏன் மற்ற விளையாட்டுக்களை கண்டு கொள்ள மறுக்கிறது? இந்த நிலை மாறி எல்லா விளையாட்டு வீரர்களையும் நாம் ஊக்கப்படுத்தா விட்டால் இன்னும் எத்தனை காலம் ஆனாலும் ஒலிம்பிக்கில் ஒரு மெடலுக்கும் ரெண்டு மெடலுக்கும் நாம் பிச்சை எடுத்து கொண்டிருக்கும் அவலம் தொடரத்தான் செய்யும்...
***************
ஒரு சின்ன கவிதை...


நீண்டும் சிறுத்தும்..
ஒரு நிலையில் நில்லாமல்...
நேரத்திற்கு தகுந்தாற்போல்..
மாறிக்கொண்டு இருக்கின்றன..
நிழல்கள் - மனித
மனங்கள் போலவே..!!!
***************
கடைசியா கொஞ்சம் குட்டி ஜோக்ஸ்..


1) இரண்டு பெண்கள் அமைதியாக உக்கார்ந்து இருக்கிறார்கள்.


2) இரண்டு சர்தார்கள் செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.


3) போனுக்கான பில்லை காதலி கட்டுகிறாள்.


தாங்க முடியல இல்ல? சரி.. இன்னும் ஒண்ணே ஒண்ணு..


4) "விஜய்" தான் அடுத்த நடிகர் திலகம்.


ஹி ஹி ஹி.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்... :)))))))))))(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

42 comments:

கே.என்.சிவராமன் said...

ஸாரி நண்பா, திருமணத்துக்கு வர முடியாம போயிடுச்சு... என்றாலும் நண்பர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள் என்பதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தீப்பெட்டி said...

திருமணம் இனிதே நடந்ததில் மகிழ்ச்சி கார்த்தி..
*****
அழகிரியின் புண்ணியத்தில் மதுரை தமிழகத்தில் பழைய சிறப்பை அடைந்தால் மகிழச்சியே..
*****
சாய்னா நேவலுக்கு வாழ்த்துகள்..
*****
கவிதை நன்று
*****
//"விஜய்" தான் அடுத்த நடிகர் திலகம்.//

அரசியல்ல தான சொல்லுறீங்க..

பாலகுமார் said...

வாழ்த்துக்கள் கார்த்தி....

//ஆனால் இப்போது நடக்கும் காட்சிகளை பார்க்கும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது.//

ஒரு வேளை, மதுரைக்கு நல்லது நடந்திடுமோ ???? :)

நட்புடன்,
பாலகுமார்.

நாடோடி இலக்கியன் said...

நண்பா கவிதை டக்கர்.
முழுசா படிச்சிட்டு பொறுமையா அப்புறம் வருகிறேன்.

நையாண்டி நைனா said...

வாடி மாப்ளே...
அசத்துரே...

Anbu said...

சாய்னா நேவலுக்கு வாழ்த்துகள்..

Anbu said...

கவிதை சூப்பர் அண்ணா..

கல்யாணத்தில் நான் கலந்து கொண்டது எனக்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா

மார்கழிச் சோழன் said...

மண மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஐப்பசி சேரன் said...

திருமணம் இனிதே நடந்தேறியது அறிந்து மகிழ்ச்சி!

மணமக்கள் 16 செல்வங்களும் குறைவறப் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்!

ராம்.CM said...

முதலில் கல்யாணத்திற்கு வரமுடியாததற்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.என் வரவேற்று அழைப்பிதழ் அனுப்பியதற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வேலை பளு சற்று அதிகம். லீவு கிடைப்பது குதிரைக்கொம்பு. (இது மட்டும் காரணமல்ல.என் வாரிசுக்கு ஐந்து மாதம் என்பதால் அவரையும்,அவரது அம்மாவையும் தனியாக விட்டு வரவும்,அதே நேரத்தில் அழைத்துவரவும் முடியவில்லை.)
சகோதரிக்கு எங்கள் குடும்பம் சார்பாக எங்களது மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துகள்.
****
எப்பொழுதுமே திறமையான வீரர்கள்,வீராங்கனைகள் இந்தியாவில் மதிக்கப்படுவதில்லை.
****
கவிதை அழகு.
****
ஜோக்'லிஸ்ட்டில் நம்ம தலயா?.

குடந்தை அன்புமணி said...

திருமணத்திற்கு வரமுடியவில்லையென்றாலும் போனில் வாழ்த்து தெரிவித்ததும், தங்கச்சியுடன் பேசியதும் மனதுக்கு மகிழ்வை தந்தது. வாழ்க மணமக்கள் பல்லாண்டு! அனைத்து நலங்களையும் பெற்று என்று மீண்டும் வாழ்த்துகிறேன்.!


மதுரை அழகரியால் ஜொலித்தால் நலமே! சென்னையில் முக்கிய பகுதிகளில் போஸ்டர் ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கும் அமுலாகட்டும்!


கிரிக்கெட்.... நோ கமெண்ட்ஸ்!


கவிதை வழமைபோலவே அருமை! இப்போது உங்கள் மனமும் அப்படித்தான் அைலந்து கொண்டிருக்கும்... பாசத்தேதாடு....


குட்டி ஜோக்கில் கடைசிதான் சூப்பர்!

தினேஷ் said...

மண மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

துபாய் ராஜா said...

திருமணம் இனிதே நடந்ததில் மகிழ்ச்சி கார்த்தி..

//"இந்த போஸ்டர் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தவும், தென் மாவட்டங்களுக்கு தொழிற்சாலைகளை கொண்டு வரவும் முயற்சிகள் எடுத்தால் மக்கள் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்"//

நிதர்சனமான உண்மை.

//"விஜய்" தான் அடுத்த நடிகர் திலகம்.//

அரசியல்ல தான சொல்லுறீங்க..//

இதுதான் சூப்பர்...

ஹாஹ்ஹ்ஹ்ஹாஹாஹா.........

வேத்தியன் said...

முதலில் புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

சாய்னா நேவல் போன்று இன்னும் பல வீர வீராங்கனைகள் இருக்கின்றனர்..
திரும்பி பார்க்க மாட்டேங்கிறாங்களே...

2 பெண்கள் பேசாம இருக்கிறாங்களா??
எங்க சொல்லுங்க.. நான் வந்து பாக்கனும்..
:-)

முரளிகண்ணன் said...

புதுமண தம்பதியர்க்கு வாழ்த்துக்கள்.

ஜோக்ஸ் சூப்பர்

அப்துல்மாலிக் said...

உக்காந்து யோசிச்சி சூப்பரான ஒரு கலவையை கொடுத்திருக்கீங்க‌

வாழ்த்துக்கள் புது தம்பதியருக்கு

நல்லது செய்தால் நல்லதுதானே அவருக்கும் மக்களுக்கும்

வாழ்த்துக்கள் சாய்னா, நானும் வருந்தியது உண்டு

ஜோக்கு சூப்பரு...

Prabhu said...

அஞ்சாநெஞ்சன் பத்தி என்னோட பதிவுல அன்னைக்கே சொல்லியிருந்தேன் நினைவிருக்கா? இப்ப நடந்திருச்சுல்ல!

சாய்னா நோவலுக்கு தோத்துப் போன சானியாவுக்கு கிடைச்ச பப்ளிசிட்டி கூட கிடைக்குறதில்ல. அந்த பொண்ணும் ரொம்ப காலமாத்தான் விளையாடிட்டு இருக்கு.

சுந்தர் said...

இவ்வளவு பணிகளுக்கிடையேயும் பதிவிட்ட உங்களை வாழ்த்துகிறேன்.
கல்யாண வீட்டில் அத்தனை சொந்தங்களையும், தங்கள் மாணவர்களையும் , நண்பர்களையும் தாங்கள் விழுந்து விழுந்து உபசரித்து வழியனுப்பியது, விருந்தில் சாப்பிட்ட பாயாசத்தை விட இனித்தது. .

மேவி... said...

வாழ்த்துக்கள் ........

சொல்லரசன் said...

அவ்வளவு கூட்டத்திலும் எங்களை உபசரித்து விருந்து கொடுத்தற்கு நன்றிங்க‌

அத்திரி said...

தளபதிய சீண்டாம இருக்க முடியாதா?

அத்திரி said...

தளபதிய சீண்டாம இருக்க முடியாதா?

வழிப்போக்கன் said...

என்ன அண்ணா வாழ்த்துகளை சொன்னீர்களா????
//"விஜய்" தான் அடுத்த நடிகர் திலகம்.
//
இது தான் இந்த பதிவின் ஹைலைட்...
:)))

Raju said...

நான் தான் நைட்டு ரொம்ப நேரம் கழிச்சு வாழ்த்திட்டேனோ...!
10.44 P.M.

ஆமாப்பா, இந்த போஸ்டர் கலாச்சாரத்துல‌ நம்ம மதுரையில்,சேவேகுவேராவையும் விட்டு வைக்கல நம்ம‌'அ'னாவின் அடிபொடிகள்.

சித்து said...

வாழ்த்துக்கள் அன்னே, கடைசி சோக்கு அருமை. இன்று பருகூர் (வே.மா) சென்றிருந்தேன், அங்கே பேருந்து நிலையத்தில் அனைத்து கட்சி கொடிகளும் பறந்துக் கொண்டிருந்தது அதன் நடுவே நம்ம டாக்டர்-இன் ரசிகர் மன்ற கொடியும் தான். என்ன கொடுமை சார் இது??

ஆ.சுதா said...

வாழ்த்துக்கள் நண்பா (கலைப்பு தீர்ரதுக்குள்ள உக்கார்ந்து யோசிச்சிட்டீங்களா!!)
கலவையான பதிவு. கவிதை நன்று.

ஆ.ஞானசேகரன் said...

//சூப்பர் சீரீஸ் என்னும் முக்கியமான போட்டியில் ஜெயித்து இருக்கிறார். கிரிக்கட் வீரர்களுக்கு மட்டும் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் நம் அரசாங்கம் ஏன் மற்ற விளையாட்டுக்களை கண்டு கொள்ள மறுக்கிறது? இந்த நிலை மாறி எல்லா விளையாட்டு வீரர்களையும் நாம் ஊக்கப்படுத்தா விட்டால் இன்னும் எத்தனை காலம் ஆனாலும் ஒலிம்பிக்கில் ஒரு மெடலுக்கும் ரெண்டு மெடலுக்கும் நாம் பிச்சை எடுத்து கொண்டிருக்கும் அவலம் தொடரத்தான் செய்யும்.///

கசப்பான உண்மை

ஆ.ஞானசேகரன் said...

கவிதை நல்லாயிருக்கு, ஜோக்ஸ் தாங்கமுடியல.... இன்னொரு தபா சொன்னிங்க அழுதுருவேன்...

ஷங்கி said...

நல்ல ஒரு மினி மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி. வாழ்த்துகள் தங்கைக்கும், உங்களுக்கும், மற்றும் குடும்பத்தாருக்கும்.
ஏன், சாப்பாட்டை உவமானமாக உபயோகித்தேன்?, இன்றைய என் பதிவைப் படித்தால் புரியும் ):

cheena (சீனா) said...

அன்பின் கா.பா,

அன்புத் தங்கையின் திருமணத்தில் நாங்கள் கலந்து கொண்டது மிக்க மன மகிழ்வினைத் தந்தது. இதன் காரணமாக பல பதிவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தியமைக்கும் நன்றி

அலுவல் காரணமாக அவசரமாகச் சென்றது வருத்தத்தினை அளிக்கிறது. என்ன செய்வது ....

பழைய கல்லூரியில் இருந்து அன்பின் - நட்பின் காரணமாக இத்தனை மாணவச் செல்வங்கள் வந்திருந்து வாழ்த்தியது - ஆசிரியர் மாணவர் உறவினைக் காட்டுகிறது.

தந்தையையும் பதிவர்களுக்கு அறிமுகப்படுத்தியது நல்ல செயல் .

மொத்தத்தில் கா.பாவினைப் பற்றிய முழு அறிமுகம் கிடைத்தது

மகிழ்ச்சி

தங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் நல்வாழ்த்துகள்

லோகு said...

மணமக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்..


விஜயை கேவலப்படுத்தி ஜோக் எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன்.. நீங்க எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம்..
அவை குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்...

விக்னேஷ்வரி said...

என் சார்பிலும் உங்கள் தங்கைக்கு வாழ்த்துக்கள்.

பரவாயில்லேயே, இவர் மதுரைக்கு இவ்வளவு செய்றாரா.... வாழ்க வளமுடன்.

ஆமா, கிரிக்கெட்டை இந்தியாவை விட்டு தூக்கினா நிறைய விளையாட்டுகளை முன்னுக்கு கொண்டு வர முடியும்.

கவிதை நச்.

ஜோக்ஸுக்கு ஹாஹாஹா....

வால்பையன் said...

முதல் மேட்டர் நாளை நேரில் பேசலாம்!

அஞ்சாநெஞ்சம் நல்லது செய்தால் அவருக்கு அடுத்த வாய்ப்பு செலவில்லாமல்

சாய்னாவுக்கு வாழ்த்துக்கள்


இது தான் கவிதை
(எதிர்கவிதை வேணுமா)


குட்டி ஜோக்ஸ் சூப்பர்


ஓட்டு போட்டாச்சு! பின்னூட்டமும் போட்டாச்சு!

Anonymous said...

புதுமண தம்பதிக்கு வாழ்த்துகள்...
இறுதியில் நீங்கள் கூறிய ஒரு வரி சிரிப்பொலிகள் அருமை...

Karthik said...

வாழ்த்துக்கள்..! :))

கடைசி ஜோக் செமையா இருந்தது. ;)

Rajeswari said...

தங்கைக்கு வாழ்த்துக்கள்..

//பல வருடங்களாக நிறைவேறாமல் இருந்த மதுரை மக்களின் கோரிக்கையான சென்ட்ரல் மார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு மாற்றும் பணி தொடங்கி விட்டது. மதுரை ஏர்போர்ட் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. //

மகிழ்ச்சியாய் உள்ளது..

குமரை நிலாவன் said...

திருமணம் இனிதே நடந்ததில் மகிழ்ச்சி
நண்பா

கவிதை அருமை நண்பா

இளைய கவி said...

//"விஜய்" தான் அடுத்த நடிகர் திலகம்.//

நீ அடங்க மாட்டடா.

இளைய கவி said...

.

தீப்பெட்டி said...

//லோகு said...

விஜயை கேவலப்படுத்தி ஜோக் எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன//

லோகு இதெல்லாம் ஓவரா தெரில..

☀நான் ஆதவன்☀ said...

மணமக்களுக்கு வாழ்த்துகள் நண்பா

Karthik Lollu said...

//4) "விஜய்" தான் அடுத்த நடிகர் திலகம்.//


Appa ajith thaan adutha ulaga nayagan!!