January 26, 2010

குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கம் - மதுரையில்..!!!

சென்ற வருடம் செப்டம்பர் மாத இறுதியில் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடானது. "இதை செய்யணும் அதை செய்யணும் என்று வெறுமனே பேசிக் கொண்டும், பதிவுகளில் எழுதிக் கொண்டிருப்பதொடும் நில்லாமல் இந்த சமூகத்துக்கு நாமும் உருப்புடியாய் ஏதாவது செய்ய வேண்டும்.. என்ன செய்யலாம்?" என்பதே அந்த சந்திப்பின் சாராம்சமாக இருந்தது.

அந்த சூழ்நிலையில்தான் ஜெர்மனியில் இருக்கும் நண்பர் குமார் எங்களைத் தொடர்பு கொண்டார். சென்னையில் நடைபெற்ற டாக்டர். ஷாலினியின் குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கத்தை மதுரையில் நடத்தினால் என்ன என்பது அவருடைய எண்ணம். அதை நண்பர்களிடம் சொன்னபோது எல்லோரும் ஒத்த கருத்தோடு இதை செய்யலாம் என்று ஒத்துக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக.. மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (31-01-10) இந்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

இன்றைய சமூக சூழலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களும் ஒன்று. மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த காமவெறியன், சிதைக்கப்பட்டு புதரில் கிடந்த குழந்தை என்று திரும்பிய பக்கம் எல்லாம் காணக் கிடைக்கும் செய்திகள் நம்மை பயம் கொள்ள செய்வதாக இருக்கின்றன. ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லாக் குழந்தைகள் மீதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனக்கு நடப்பது என்ன என்று தெரியாமலேயே சீரழிக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்? இதனால் குழந்தைகள் உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தம் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை பெற்றோருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் தான் உண்டு. இத்தகைய நச்சு சூழலில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பிரச்சினைகளை நாம் எப்படி எதிர்கொள்வது? எது நல்ல தொடுகை என்றும் எது கெட்ட தொடுகை என்றும் குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது? இது போன்ற விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசுவதே இந்தக் கருத்தரங்கத்தின் நோக்கம். குழந்தைகள் மனநலம் பற்றியும், அவர்களை அணுகும் முறை பற்றியும் டாக்டர்.ஷாலினி உரையாற்ற இருக்கிறார். நம்முடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான கேள்வி நேரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 31.01.2010 ஞாயிறு

காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை

இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )

கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி

பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.சமூகத்துக்கு நம்மாலான ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் வடிவம்தான் இந்த சிறு முயற்சி. இதற்கு நண்பர்கள் அனைவரும் உங்களுடைய ஆதரவினைத் தர வேண்டும் என மதுரைப் பதிவர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மதுரையில் தொடர்ந்து நடக்க இருக்கும் நிகழ்வுகளுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என நம்புகிறேன். THIS IS JUST THE BEGINNING.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் அலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்தால் மற்ற ஏற்பாடுகள் (போக்குவரத்து, சிற்றுண்டி) செய்வதற்கு வசதியாகஇருக்கும்.

அலைபேச:

தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138

மின்னஞ்சல் தொடர்புக்கு:

dharumi2@gmail.com
sridharrangaraj@gmail.com
karthickpandian@gmail.com

தொடர்புடைய மற்ற இடுகைகள்:

ஸ்ரீதர்
பாலகுமார்
சீனா

நல்லதொரு முறையில் நிகழ்ச்சியை நடத்த உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம். வாருங்கள் நண்பர்களே.. சாதித்துக் காட்டுவோம்..!!!

32 comments:

மேவி... said...

congrats.....

let it be a huge success

வால்பையன் said...

சிறப்பாக செய்து முடிப்போம் நண்பரே!

Ganesan said...

அன்பின் கார்த்திகை பாண்டியன்,

இந்த வாரம் என் மதுரைக்கு வருகிறேன்,அவசியம் வருகிறேன்.

அன்புடன்,
காவேரி கணேஷ்

vasu balaji said...

அசத்துங்க:)

குமரை நிலாவன் said...

நல்லது அசத்துங்க நண்பர்களே

அண்ணாமலையான் said...

பாராட்டுக்கள்

malarvizhi said...

congrats.

அத்திரி said...

வாழ்த்துக்கள் ...............

SK said...

அசத்தலாக நடத்துங்க நண்பா. பாராட்டுக்கள் மொத்த குழுவிற்கும்.

Pradeep said...

Congrtas Karthick..And you have chosen a good doctor.....really good.

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
congrats....let it be a huge success//

thanks pa..

//வால்பையன் said...
சிறப்பாக செய்து முடிப்போம் நண்பரே//

கண்டிப்பா தல

கார்த்திகைப் பாண்டியன் said...

// KaveriGanesh said...
அன்பின் கார்த்திகை பாண்டியன், இந்த வாரம் என் மதுரைக்கு வருகிறேன்,அவசியம் வருகிறேன்.//

ரொம்ப சந்தோசம் நண்பா.. கண்டிப்பா கலந்துக்கனும்..

//வானம்பாடிகள் said...
அசத்துங்க:)//

உங்களோட உதவிக்கு ரொம்ப நன்றி பாலா சார்

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
நல்லது அசத்துங்க நண்பர்களே//

நன்றி நண்பா

//அண்ணாமலையான் said...
பாராட்டுக்கள்//

நன்றிங்க

//malarvizhi said...
congrats.//

thanks a lot..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
வாழ்த்துக்கள் ...............//

நன்றிண்ணே..

//SK said...
அசத்தலாக நடத்துங்க நண்பா. பாராட்டுக்கள் மொத்த குழுவிற்கும்.//

கண்டிப்பா நண்பா.. இதை ஆரம்பிச்சு வச்ச உங்களுக்கும் நன்றி

//Pradeep said...
Congrtas Karthick..And you have chosen a good doctor.....really good//

thanks boss

*இயற்கை ராஜி* said...

valthukkal:-)

வினோத் கெளதம் said...

நடக்கட்டும்..

Anonymous said...

நானும் வரவா பாண்டியன்....

அ.மு.செய்யது said...

நல்ல முயற்சி கார்த்திகை பாண்டியன் !!!வாழ்த்துக்கள்.

உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும் !!! இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கு !!!

அ.மு.செய்யது said...

//தமிழரசி said...
நானும் வரவா பாண்டியன்....
//

உங்களுக்காக தானே புரோக்க்க்கிராமே !!!! தலைப்ப பாக்கலியா நீங்க..!!

தருமி said...

http://tucklasssu.blogspot.com/2010/01/31.html

கார்த்திகைப் பாண்டியன் said...

// இய‌ற்கை said...
valthukkal:-)//

நன்றி தோழி

//வினோத்கெளதம் said...
நடக்கட்டும்..//

:-))))

// தமிழரசி said...
நானும் வரவா பாண்டியன்....//

கண்டிப்பா சகோதரி.. வாங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//அ.மு.செய்யது said...
நல்ல முயற்சி கார்த்திகை பாண்டியன் !!!வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும் !!! இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கு !!!//

நன்றி நண்பா

@ தருமி

பார்த்துட்டேன் ஐயா.. டக்கு கிட்ட சொல்லிப் போட சொல்லியாச்சு

"உழவன்" "Uzhavan" said...

nalla muyarchi.. congtratz

சொல்லரசன் said...

முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்

Henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

Dhavappudhalvan said...

வாழ்த்துக்கள் நண்பரே! சீரிய முயற்ச்சி சிறப்பாக தொடங்கி, விரிவாக வளரட்டும். கை கொடுப்போம் உங்கள் முயற்ச்சிக்கும், வாழ்த்துகளை தெரிவிக்கவும்.

க.பாலாசி said...

நல்ல விசயம்... பலர் பயனடைவர்... தங்களின் முயற்சியும் சிறப்படைய வாழ்த்துகிறேன்.

Jerry Eshananda said...

கலக்கல் கார்த்தி.

குடந்தை அன்புமணி said...

நிகழ்வு சிறப்பாக, பயனுள்ள முறையில் நடைபெற வாழ்த்துகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//" உழவன் " " Uzhavan " said...
nalla muyarchi.. congtratz//

வாழ்த்துக்கு நன்றி நண்பா

//சொல்லரசன் said...
முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்//

இதை மதுரையில வந்து சொல்லுங்கண்ணே..:-))))

// Dhavappudhalvan said...
வாழ்த்துக்கள் நண்பரே! சீரிய முயற்ச்சி சிறப்பாக தொடங்கி, விரிவாக வளரட்டும். கை கொடுப்போம் உங்கள் முயற்ச்சிக்கும், வாழ்த்துகளை தெரிவிக்கவும்.//

ஆரம்ப காலம் முதலே வாழ்த்தி உற்சாகப்படுத்தி வரும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பத்ரி சார்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//க.பாலாசி said...
நல்ல விசயம்... பலர் பயனடைவர்... தங்களின் முயற்சியும் சிறப்படைய வாழ்த்துகிறேன்.//

நன்றி பாலாஜி

// ஜெரி ஈசானந்தா. said...
கலக்கல் கார்த்தி.//

:-))))

//குடந்தை அன்புமணி said...
நிகழ்வு சிறப்பாக, பயனுள்ள முறையில் நடைபெற வாழ்த்துகள்//

எல்லாம் நீங்க தரும் ஊக்கம் தான் நண்பா :-)))))

K.S.Muthubalakrishnan said...

Good Effort Congratz