November 3, 2010

ஹேப்பி பர்த்டே டு மீ :-)))

இன்றோடு "பொன்னியின் செல்வனு"க்கு இரண்டு வயது பூர்த்தி ஆகிறது. இந்த வலைப்பூவ சின்னப்புள்ள விளையாட்டு மாதிரி ஆரம்பிச்சது. இப்போப் பார்த்தா ரெண்டு வருஷம் ஆகிடுச்சுன்னு சொல்லும்போது ஆச்சரியமாவும் பிரமிப்பாவும் இருக்கு. நான் இவ்வளவு ஜல்லி அடிப்பேன்னு சத்தியமா நினச்சு கூட பார்த்தது இல்ல.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நண்பர்களே.சொந்தக்கதை சோகக்கதை, சினிமா, வாசிக்குற புத்தகம், சமூகத்துல என்னை பாதிக்குற விஷயங்கள், மொக்கைன்னு ஒண்ணு பாக்கி விடாம உள்ள தோணுற எல்லாமே எழுதி இருக்கிறேன். புரியற மாதிரி எழுதணும், சுவாரசியமாவும் இருக்கணும். இதைத்தான் என் அளவுகோலா வச்சிருக்கேன். என்னோட எழுத்துகள் மூலமா உங்ககூட நான் பேசுறேன். அவ்வளவுதான்..

நண்பர் திருச்செந்தாழை ஒரு விஷயத்த அடிக்கடி சொல்வாரு.. "உன் மனசுல தோணுற விஷயங்கள எந்த பாசாங்கும் இல்லாமநேர்மையா எழுது நண்பா.." அதன்படி இருக்கத்தான் முயற்சி பண்றேன். ஆரம்பத்துல இருந்த ஹிட்ஸ், பாலோவர் மோகம்லாம் இப்போ குறைஞ்சு போச்சு. ஓரளவு உருப்புடியா எழுதுறோமான்னு மட்டும்தான் பாக்குறேன்.

வலையுலகம் எனக்குத் தந்திருக்குற மிகப்பெரிய பொக்கிஷம் - என்னுடைய நட்புகள். நட்புங்கிறத மீறி உறவுன்னு சொல்லக் கூடிய மனிதர்கள். கிட்டத்தட்ட என் வாழ்வின் ஒரு அங்கமாகிப்போன அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அத்தோட பதிவுலக ரெண்டு வருஷத்துல நிறைய புது விஷயங்கள் கத்துக்கிட்டு இருக்கேன். வாசிக்குற பழக்கம் கொஞ்சமா அதிகரிச்சு இருக்கு. நிறைய உலகப்படங்கள தேடி தேடி பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன். ரொம்ப நிறைவாக உணருகிறேன்.

இந்த நேரத்துல மொதமொத என்னைக் கண்டுபிடிச்சு ஊக்கம் சொன்ன பிரேமை நினச்சு பார்க்கிறேன். “பிரேம்.. நீங்க மட்டும் இல்லைன்னா ஆளில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தணும்னு அன்னைக்கே கடைய சாத்திட்டு கிளம்பி இருப்பேன். ரொம்ப நன்றி நண்பா..”

என்னோட ரம்பத்த தாங்கிக்கிட்டு இருக்குற, தாங்கப்போற அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. என்னோட இந்த சந்தோஷத்த உங்க எல்லார்கூடவும் சேர்ந்து பகிர்ந்துக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி நண்பர்களே..

சுவீட் எடு.. கொண்டாடு... ஹேப்பி பர்த்டே டு “பொன்னியின்செல்வன்”..!!!

பின்குறிப்பு 1: புதிய தலைமுறையில் வலைத்தளங்கள் பற்றிய கட்டுரையில் என்னையும் குறிப்பிட்டு இருக்கும் லக்கிக்கும், தகவலைப் பகிர்ந்து கொண்ட அண்ணன் ஜாக்கி சேகருக்கும் நன்றிகள் பல..

பின்குறிப்பு 2: நண்பர்கள் அனைவருக்கும் (அட்வான்ஸ்) தீபாவளி நல்வாழ்த்துகள்..

28 comments:

vasu balaji said...

வாழ்த்துகள் கார்த்திக்:)

Ravichandran Somu said...

வாழ்த்துகள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் பாண்டியன்..
தீபாவளி வாழ்த்துக்களும்.. :)

Balakumar Vijayaraman said...

வாழ்த்துகள் கார்த்தி !

R. Gopi said...

வாழ்த்துக்கள் காபா !

புஸ்தகத்தில் எல்லாம் உங்க பேர் வந்துட்டுது. பெரிய பதிவர் ஆயிட்டீங்க !

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்.

Ramesh said...

நல்வாழ்த்துக்கள் கார்த்திக் தீபாவளிக்கும் சேர்த்து.
தொடருங்கள்.
இலக்கங்களை கடந்தாச்சு இலக்குகளையும் சேர்த்துக்கொண்டு.
வாழ்க எழுதுக தொடர்க

sathishsangkavi.blogspot.com said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

குமரை நிலாவன் said...

வாழ்த்துகள்

Manoj said...

My Hearty Wishes sir.....

I Wish u all Success...

Eniya deepathirunal Valthukkal...

அன்பேசிவம் said...

ஹேப்பி பர்த்டே பொன்னியில் செல்வன்,
ஹேப்பி தீபாவளி கார்த்திகை பாண்டியன்..

:-))
வாழ்த்துகள், புதியதலைமுறை அறிமுகத்திற்கு..

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

சிவக்குமரன் said...

வாழ்த்துக்கல் நண்பா!

Raj said...

வாழ்த்துகள் கார்த்திக்

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

வேந்தன் said...

வாழ்த்துக்கள்....!

நீச்சல்காரன் said...

வாழ்த்துகள் டு U

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் வாத்யாரே!

Jackiesekar said...

வாழ்த்துக்கள் நண்பா.... மென்மேலும் வளர ஆசை..

Mahi_Granny said...

இன்னும் இன்னும் உயரம் தொட வாழ்த்துக்கள் கார்த்திக் பையா

vimalanperali said...

வாழ்த்துக்கள் சார்.உங்களுக்கு ஒரு பிரேம் இருந்த மாதிரி எனக்கு ஒரு காம்ஸ் இருக்கிறார்.மனதில் படுபவைதானே சத்திய எழுத்துக்கள்.தொடருங்கள்.என் போன்றோரையும் ஊக்குவியுங்கள்.தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..:-))

malarvizhi said...

நல்வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்.

Kamil said...

வாழ்த்துகள்..!!

cheena (சீனா) said...

அன்பின் கார்த்தி - இனிய தீப ஒளி நல்வாழ்த்துகளுடன் கூடிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். மேன்மேலும் வளர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தருமி said...

ரெண்டே வருஷத்தில இம்புட்டா ..

வளர வாழ்த்துகள்

Unknown said...

Hai anna ..... today only i saw abt tis birthday..... manamarndha vazhthukal unga arumaiya valaithalathuku na.....