January 21, 2011

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அபத்தங்கள் (2)

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அபத்தங்கள்

கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த மொத பதிவை எழுதினேன். ஆனா அது இன்னைக்கு வர்ற படங்களுக்குக் கூட பொருத்தமா இருக்கு. ஒரு சில விஷயங்கள் எப்போ சொன்னாலும் எந்த காலத்துக்கும் பொருந்தும் போல... இன்னைக்கும் கூட சில விஷயங்கள் தமிழ் சினிமாவுல இன்னும் மாறாமயே இருக்குன்னு சொல்லும்போது தனியா பொலம்புரதத் தவிர வேறென்ன பண்ண முடியும்? வாங்க.. நம்ம ஊரு சினிமால மாறாத இன்னும் சில விஷயங்களை பார்ப்போம்..

--> ஹீரோ ரெட்டைப்புள்ளையா இருந்தா அதுல ஒருத்தர் கண்டிப்பா ரொம்பக் கெட்டவனா இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல “நான் ஏன் அப்படி இருந்தேன் தெரியுமா”ன்னு ஒரு பாடாவதி டயலாக் பேசி நல்லவனா மாறிடுவார். அவருக்கு ஒரு இளிச்சவா ஃபிகரு சோடியா வேற இருக்கும்.

--> படத்தோட உச்சக்கட்டமா வில்லன் எங்கேயாவது பாம் வச்சுடுவான். அதை டிஃப்யூஸ் பண்ண வர்ற ஹீரோ எந்த கலர் வயர வெட்டுறது அப்படின்னு டென்ஷனாகி செவப்பா நீலமான்னு மாத்தி மாத்தி யோசிப்பார். ஆனா அவர் கவலையே பட வேண்டாம். ஏன்னா அவர் எந்த வயர வெட்டினாலும் பாம் அமந்து போகும். (நீ புடுங்குற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..)

--> வில்லன் குரூப்பு அடி பின்னி எடுப்பானுங்க.. கத்தியக் கொண்டு குத்துவாங்க.. ஏன் அப்பப்ப துப்பாக்கி குண்டு கூட உண்டு. அதை எல்லாத்தையும் தாங்கிகிட்டு சண்டை போட்டு முடிப்பாரு நம்ம ஹீரோ. அப்ப எல்லாம் எதுவும் தெரியாது. ஆனா ஹீரோயின் ஃபிகரு அந்தக் காயத்த கிளீன் பண்ண வந்தா மட்டும் அவனுங்க கொடுக்குற சவுண்டு எஃபக்டு இருக்குதே.. ங்கொய்யால.. உலக நடிப்புடா சாமி..

--> லஃப்ஸ் வந்த ஒடனே ஹீரோ தெருவுல லூசு மாதிரி ஆடிக்கிட்டே வரணும்.. அது ஒரு ரூல். அட.. இது கூட ஓகே.. சோஷியல் மேட்டர்.. பண்ணிக்கலாம்.. ஆனா ரோட்டுல சும்மா போறவய்ங்களும் கரெக்டா அதே ஸ்டெப்பப் போடுற கொடுமைய என்னான்னு சொல்றது.

--> போலிஸ் ட்யூட்டில இருக்கும்போது எதையுமே நம்ம ஹீரோ கண்டுபிடிக்க மாட்டாரு.. ஆனா எவனாவது தீவரவாதி எஸ்ஸாகி அவர சஸ்பெண்டு பண்ணிட்டா போதும்.. எங்க இருந்து தான் அந்த வீரம் வருமோ.. ஒடனே குடு குடுன்னு ஓடிப்போய் வில்லன் குரூப்ப ஒரு கை பார்த்துப்புடுவாரு..

--> படம் மதுரைப்பக்கம் நடக்குறதா இருந்தா தொலஞ்சான் ரசிகன். ஹீரோவுக்கு பதினஞ்சு நாளா சிரைக்காத தாடி.. இத்துப்போன ஒரு கைலி.. வேலை வெட்டி இல்லாத ரவுடித்தனம்.. இதுதான் மதுரை தமிழ்னு அவங்களா நம்பிக்கிட்டி இழுத்து இழுத்துப் பேசுறது... அப்புறம் படத்துல கொடூரமா ஒரு கிளைமாக்ஸ் தவிர்க்கவே முடியாதது..

--> அடுத்ததா பேய்ப்பட ஸ்பெஷல்.. பேய்ப்படமா இருக்க தகுதி என்னன்னா, படத்துல ஆளே வராத ஒரு பாழடஞ்ச பங்களா அவசியம்.. அப்புறம் அங்க ஒரு வேலைக்காரனோ காரியோ வாய் கோணிக்கிட்ட மாதிரி இழுத்து இழுத்து பேசுறதும் அவசியம்.. யாராவது மொத தடவை வீட்டுக்குள்ள நொழஞ்சு சுத்திப் பாக்குற போது, ஒரு பூனையோ எலியோ அலமாரிக்குள்ள இருந்து தவ்வி ஓடி எல்லாரையும் பயமுறுத்த வைக்கும்.

--> இப்போ நான் சொல்றது ரொம்ப முக்கியமான விஷயம்.. அது என்ன மாயமோ இல்ல மந்திரமோ இல்ல அந்த பேய்களுக்கு எல்லாம் எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ.. கரெக்டா சொல்லி வச்ச மாதிரி ஹீரோவும் ஹீரோயினும் மேட்டர் பண்ணும்போதுதான் கொல்ல வரும்.. சீனுக்கு சீனும் ஆச்சு.. பேயையும் காட்டியாச்சு..

--> அப்புறம் பேய்ங்களோட காஸ்ட்யூம்.. எல்லாப் பேய்களுமே வெள்ள பொடவையும் ஒரு கம்பெனி பாட்டோடயுமே சுத்துதுங்க.. ஏதாவது சொட்டுநீலம் வெளம்பரத்துல நடிச்ச பேயோட பரம்பரையா இருக்குமோ?

ஸ்டாப்.. இதுல நெறய விஷயங்கள் குறுந்தகவலா வந்தது. நம்ம சினிமால இந்த மாதிரியான காமெடிகள் ஒரு வத்தாத கடல் மாதிரி. விட்டா வந்துக்கிட்டே இருக்கும். அதானல ஞான் இவிடே முடிக்குன்னு. ஒங்களுக்குத் தெரிஞ்ச வேற மாதிரியான அபத்தங்களயும் பின்னூட்டங்கள்ல சொல்லுங்க மக்களே..:-))

11 comments:

சமுத்ரா said...

ஆஹா...அருமை

லோகு said...

யாரவது படத்தோட முதல் சீன்ல சாகும் போது, சொல்ல வந்த ரகசியத்தை சொல்லாம செத்துடுவாங்க.. இதுவே கடைசி சீனா இருந்தா எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டு தான் சாவாங்க..

சாகும் போது கண்ணை திறந்திட்டேதான் சாவாங்க, நம்ம ஹீரோ கண் இமைகளை தடவி மூடுவார்.

நீங்க எல்லாம் தொண்டை கிழிய பேசி கிளாஸ் எடுத்தாலும் கடைசில இருக்கற Studentsக்கு கேக்குமான்னு சந்தேகம் தான்.. ஆனா ஹீரோ பாடறது நாலு கிலோமீட்டர் சுத்தளவுல எல்லோருக்கும் கேக்கும்.

நல்லதொரு ரேப் சீனை நாசமாக்க வரும் நம்ம ஹீரோ, வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார்.
ஆனா அந்த பொண்ணு ஹீரோயினா இருந்து அதுவே அடுத்த சீன்ல அரைகுறையா ஆடும் போது நம்மாளு கண்டுக்க மாட்டாரு..

கிளைமாக்ஸ் பைட்டுல நிராயுதபாணியா நிற்கிற ஹீரோவை வில்லன் குத்தவோ / சுடவோ வரும் போது அவரை யாரவது பின்னாடி இருந்து குத்திடுவாங்க.. வில்லன் மெதுவா சரிய பின்னாடி யாருன்னு பார்த்தா செகன்ட் ஹீரோயினோ, கடைசியா திருந்தின வில்லியோ இருப்பாங்க.. சுபம்.

Raju said...

படத்துல, ஹீரோ எனும் புனித் பிம்பம் காவல்துறையைச் சேர்ந்தவர்ன்னா, கண்டிப்பா "குரக்கோடைல்" பிராண்டு ஆஃப் சிலாக் டீ ஷர்ட்டும் ஜீன்ஸும்தான் காஸ்ட்யூம்.

படத்துல டாக்டர்ன்னு ஒருத்தர் இருந்தா, கண்டிப்பா அவரு கண்ணாடி போட்ருப்பாரு! அப்போதானே, அந்த கண்ணாடியைக் கழட்டிக் கையில வச்சுக்கிட்டு, "ஸாரி, நம்ம கையில என்ன இருக்கு?"ன்னு டயலாக் பேச முடியும்.

ரேப் ஸீனுக்கு புலி, மானைக் காட்டுறது. முதலிரவு ஸீனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கப்பறம் லைட்டை ஆஃப் செஞ்சிடறது. மேக்ஸிமம் ரேப் ஸினுக்கு நம்ம ஹீரோயின் சேலைதான் கட்டியிருப்பாங்க.
:‍((

ஹீரோயின் தண்ணிக்குள்ள விழுந்ததும், ஹீரோவும் உள்ள குதிச்சு ஹீரோயினையும் "வெயிட் லிப்ட்டிங்" பண்ணி தூக்கீட்டு வந்து கரைல வச்சு வயித்தை அமுக்கி விடுறது. சமயத்துல இது ஹீரோவுக்கும் நடக்கும்.


ஹீரோயினை வில்லன் கடத்தி வச்சுருக்கும் போது, ஹீரோயின் அக்கா ஹீரோ மாமாவைப் பத்தி வில்லன்க்கிட்ட வீரபிரதாபம் பேசுறது. அதை அந்த கருமம் புடிச்ச வில்லனும் கேட்டுக்கிட்டு இருப்பான்!

எல்லா மீட்டிங்கியும், "ரவுண்ட் டேபிள் கான்ஃபிரன்ஸாக"வே காட்டுவது. அதுல ஹீரோ மட்டுமே மாற்றுக் கருத்து தெரிவிப்பார்.

எல்லா படத்துக் காவல் துறைலயும் வில்லனுக்குன்னு ஒரு ஆள் இருப்பது. அவர் முக்கியமான மீட்டிங்கின் போது மொபைலை ஸ்விட்ச் ஆன் செய்து சட்டைப் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்வது.

மலையில உருளும் போது, உயரத்துல இருந்து விழும் போது இடையில ஒரு பிடிப்பு கிடைச்சு அதப் பிடிச்சி..அப்பறம் அது உடைஞ்சு..கீழ விழுந்து..உஸ்ஸ்ஸப்ப்பா..!

அதுவரைக்கும் முட்டாள்ப்பயலா இருந்த நம்ம ஹீரோ, பாடல்கள்ல மட்டும் சும்மா கவித்துவமா காறி காறித் துப்புவாரு. எதுகை மோனைலயெல்லாம் லெஃப்ட் டர்ன் எடுத்து ரைட் இன்டிகேட்டர் போடுவாரு.

பனி பொழியுற நாட்டுப் பாடல் காட்சிகள்ல, ஹீரோ மட்டும் கோட்டு, சூட்டு, கிளவுஸ் எல்லாம் போட்ருப்பாரு, ஆனா ஹீரோயின் அம்மணிக்கு மட்டும் டூபீஸ்.ஆணாதிக்கம்!

Raju said...

ஒரு சில டைரக்டர்ஸுக்குன்னும் தனியா சில கிளிஷேஸ் இருக்கு!

ஆதவா said...

ஒருசில படங்கள் இதற்கு மாற்றாக இருந்தாலும் அவைகளும் ஐந்தாறு வருடத்திற்கு ஒருமுறைதான் வருகின்றன.!! அவ்வ்..

துவைச்ச துணியை துவைச்சுட்டு இருந்தா கிழிஞ்சது கூட தெரியாது!!!
தமிழ் சினிமா அப்படித்தான் போய்ட்டு இருக்கு

Jayadev Das said...

@ ♠ ராஜு ♠
உங்க பின்னூட்டம் நல்லாயிருக்கு, ரசித்துப் படித்தேன் நன்றி.

பெயிலானால் திரும்பவும்
அதே வகுப்பில் படிக்கும் வசதி கொண்ட கல்லூரிகள் தமிழ் சினிமாவில் மட்டுமே இருக்கும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

@ சமுத்ரா
நன்றிங்க..

@ லோகு & @ ♠ ராஜு ♠
ரெண்டு பயபுள்ளைகளும் பட்டாசு கெளப்புரீங்கையா

@ ஆதவா..
உங்களுக்குத் தெரியாததா நண்பா.. மக்கள் ஏதாவது புதுசா பண்ணுரப்ப மட்டும் மனச தேத்திக்க வேண்டியதுதான்..

@ jayadev das
முதல் வருகைக்கு நன்றிங்க..

மதன் said...

முண்ணனி நடிகர் மூஞ்சிய காட்றதுக்கு முன்னாடி.....

அவரு யாருனு தெரியுமா(அதான் போஸ்ட்டர்லயே அந்த நொன்னைய பாத்துடுறோமே அப்புறம் என்னடா இழுவை...), அவரு பரம்பரைய பத்தி தெரியுமா(ஆமாம் பெரிய சிவராஜ் சித்த வைத்தியர் பரம்பரை...சொல்லி தொலைங்கடா...) இந்த டயலாக்கலா சொல்றதுக்கு ஒரு பெரும் கூட்டத்தையே பேச உடரது....

இது பெருங்கடலில் ஒரு சிறு துளி தாங்க தல....இவனுங்க இம்சை தாங்க முடியல....

குறை ஒன்றும் இல்லை !!! said...

மாறுவேசத்தில வர்ர ஹீரோவ நம்ம வடக்கு பட்டி ராமசாமி கூட கண்டு பிடிச்சிடுவார் ஆனா அத்தன அடியாள வச்சு மேய்க்கிற இண்டர்நேசனல் கிரிமினல் வில்லனுக்கு தெரியாது பாவம் !!!

கார்த்திகைப் பாண்டியன் said...

@மதன்
மொத பாகத்த பாருங்க தல.. நீங்க சொன்ன விஷயத்த எழுதி இருக்கேன்..:-))

@குறை ஒன்றும் இல்லை
தமிழ்படம்..:-))))

kannamma said...

இன்னொரு விசயத்த சொல்லலயே நம்ம ஹீரூ போலீசா இருந்தா அவரோட மனைவி கண்டிப்பா இறந்துருக்கணும்
பின்ன அவரோட சொந்தகாரங்களுக்கும் அதே நிலைமை தான் ,இது தான் தமிழ் சினிமா போலீஸ் வரலாறு