December 19, 2011

உக்கார்ந்து யோசிச்சது (19-12-11)

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நானெழுதும் “உக்கார்ந்து யோசிச்சது” இது. கடைசியாக இதனை எழுதியது மார்ச் 19 - மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கும் இன்றைக்கும் 19 என்பதொரு சின்ன ஆச்சரியம். கடுமையான வேலைப்பளு மற்றும் வலசை இதழுக்கான வேலைகள் என ஓடிக் கொண்டிருந்ததில் வலைப்பக்கத்தில் எழுதுவது வெகுவாகக் குறைந்து போய் விட்டது. பஸ்ஸில் வம்பளந்து கொண்டிருந்ததும் இன்னொரு காரணம். நல்ல வேளையாக இப்போது பஸ்ஸை இழுத்து மூடி விட்டார்கள். எனவே, என்னை நானே திருத்திக் கொண்டு இனித் தொடர்ச்சியாக எழுதும் எண்ணம். (நீ எழுதலைன்னு யாருடா அழுதான்னு சொல்லும் மக்களுக்கு கண்டிப்பாக கும்பிபாகம்தான்). நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் என் அனுபவங்கள் சார்ந்து தொடரொன்று எழுதவும் ஆசை இருக்கிறது. பார்க்கலாம்.

***************

நேற்று ஈரோட்டில் பதிவர் சங்கமம் இனிதே நடந்து முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எழுத்தின் மூலம் மட்டுமே நாம் அறிந்த நண்பர்களை நேரடியாய்ச் சந்தித்துப் பேசி அளவளாவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் சங்கமம் அற்புதமான விசயம். இந்த வருடம் இன்னுமொரு சிறப்பாக பதிவுலகில் இயங்கி வரும் மக்களில் பதினைந்து நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவித்தது ஈரோட்டு நண்பர்களின் நல்ல மனதுக்கு எடுத்துக்காட்டு. வழக்கம்போல விருந்தோம்பலும் உணவு ஏற்பாடுகளும் அட்டகாசம் என களைகட்டியது. என்னை அவர்களில் ஒருவன் என உணரச்செய்யும் ஈரோடு தமிழ்ப்பதிவர் குழுமத்திற்கு எப்போதுமிருக்கும் எனதன்பும், வாழ்த்துகளும், நன்றியும்.

**************

ஆதி - பரிசல் - யுடான்ஸ் இணிந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது. பதிவுலக மக்களை ஊக்குவிக்கத் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் சவால் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் நம் நண்பர்களுக்கும், வெற்றி பெற்ற சக பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

***************

அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை வாசித்தேன். அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த சில மாதங்களின் அனுபவத்தை புனைவு கலந்து தந்திருக்கிறார். கிட்டத்தட்ட பயணக்கட்டுரை வடிவத்தில் வந்திருக்கக் கூடிய விசயத்தைப் புனைவாக மாற்றுகிற இடத்தில் ஜெயிக்கிறார் மனிதர். அலட்டிக்கொள்ளாத வெகு சாதாரணமான மொழி. சற்றே நான் லீனியராக சொல்லப்படும் அத்தியாயங்கள். வாசிக்கும்போது பெரிதாக ஏதும் தாக்கமில்லை. ஆனால் கடைசி அத்தியாயத்தில் அனைவரிடம் இருந்தும் அவர் விடைபெறும் காட்சியில் லேசாக எனக்கும் பாரமாக இருந்தபோதுதான் நானும் அவரோடு பயணித்தபடியே இருந்ததையும் நாவல் என்மீது ஏற்படுத்தி இருந்த பாதிப்பையும் உணர முடிந்தது. மாஸ்டர்ஸ்..:-))

***************

பாலாவின் அடுத்த படம் எரிதணல் என்பதாகச் சொல்கிறார்கள். 1930களில் ஆனைமலைத் தேயிலைத் தோட்டங்களில் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்த கூலித் தொழிலாளர்களின் கதை என்பதாகக் கேள்வி. இது உண்மையானால் கண்டிப்பாக அது பி.ஹெச்.டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் அடிப்படையில் எடுக்கப்படும் படமாகத்தான் இருக்கும். ஏழாம் உலகம், நெடுங்குருதி (திருடர்களின் கிராமம்) எனத் தொடர்ச்சியாக நாவல்களைப் படமாக்கத் துணியும் பாலாவுக்கு வாழ்த்துகள்.

***************

யுவனுக்கு அவ்வளவாக நேரம் சரியில்லை என நினைக்கிறேன். கழுகு படத்தில் அசத்தியவர் ராஜபாட்டையிலும் வேட்டையில் பெரிதாகக் கோட்டை விட்டிருக்கிறார். பாடல்கள் எனக்கு அத்தனை பிடிக்கவில்லை. அடுத்த வாரம் மூன்று மற்றும் நண்பன் பாடல்கள் வெளியாக இருக்கின்றன. ஏழாம் அறிவில் சொதப்பிய ஹாரிஸ் என்ன செய்கிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். என்னுடைய இந்த வார டாப் - 5 பாடல்கள்..

* ஹே அனாமிக்கா - மௌனகுரு
* பப்பப்பா பாப்பப்பா - வேட்டை
* பாதகத்தி - கழுகு
* எந்த உலகில் - 18 வயசு
* பொடிப்பையன் போலவே - ராஜபாட்டை

***************

நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக சாரதா ராஜன்ஸ் ஹோட்டலுக்குப் போயிருந்தேன். அணிந்திருந்தது கறுப்பு நிற வட்டக்கழுத்து தேநீர்ச்சட்டையும் (அதான்யா ரவுண்டு நெக்கு டி-ஷர்ட்) வெளிர்நீல நிற ஜீன்சும். அவரோடு பேசிவிட்டு வெளியே வரும் வழியில் நான்கைந்து இளைஞர்கள், இருபது இருபத்து இரண்டு வயதுக்குள் இருப்பவர்கள், வழியை மறித்து நின்றிருந்தார்கள். விலகிக் கொள்ளும்படி சொல்லிவிட்டுத் தாண்டி வருகையில் அவர்களில் ஒருவன் சொன்னது காதில் கேட்டது.

எப்படிப் போகுது பாரு.. மனசுக்குள்ள அடிதடி சத்யராஜ்னு நினைப்பு..

அடப்பாவிகளா... நினைச்ச மாதிரி உடுத்தக்கூட விடமாட்டீங்களா? நானும் யூத்துதான்யா.. நம்புங்கப்பா..:-)))

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ச்டு மீட் பண்ணுவோம்..:-)))

14 comments:

Thozhirkalam Channel said...

nice

ஷர்புதீன் said...

எரியும் பனிக்காடு புதினத்தை படித்துவிட்டு , குப்பன்-வள்ளியின் நினைவாக இருக்கும் நபர்களின் அடியேனும் ஒருவன்! இதனை பற்றி நானும், கே ஆர் பீ செந்திலும் சிலாகித்து ஈரோடு சங்கமத்தில் பேசியபோது நீங்கள் அங்கு இருந்தீர்களா?!!

கார்த்திகைப் பாண்டியன் said...

@ஷர்புதீன்

இல்லையே தலைவரே.. இது போன வாரம் நான் பஸ்ல விட்ட சின்னப் பதிவு. இன்னைக்கு சேர்த்து எழுதி இருக்கேன்..:-))

@cpede news

நன்றிங்க..:-))

அருண்மொழிவர்மன் said...

ஒற்றன் பற்றிய உங்கள் கருத்தை முன்வைத்து,
//அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை வாசித்தேன். அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த சில மாதங்களின் அனுபவத்தை புனைவு கலந்து தந்திருக்கிறார். கிட்டத்தட்ட பயணக்கட்டுரை வடிவத்தில் வந்திருக்கக் கூடிய விசயத்தைப் புனைவாக மாற்றுகிற இடத்தில் ஜெயிக்கிறார் மனிதர். அலட்டிக்கொள்ளாத வெகு சாதாரணமான மொழி. சற்றே நான் லீனியராக சொல்லப்படும் அத்தியாயங்கள். வாசிக்கும்போது பெரிதாக ஏதும் தாக்கமில்லை. ஆனால் கடைசி அத்தியாயத்தில் அனைவரிடம் இருந்தும் அவர் விடைபெறும் காட்சியில் லேசாக எனக்கும் பாரமாக இருந்தபோதுதான் நானும் அவரோடு பயணித்தபடியே இருந்ததையும் நாவல் என்மீது ஏற்படுத்தி இருந்த பாதிப்பையும் உணர முடிந்தது. மாஸ்டர்ஸ்..:-))
//

ஒற்றன் எனக்கும் பிடித்தே இருந்தது. ஒற்றன் வாசித்த அதே உணர்வை சாந்தன் எழுதிய உறவுகள் ஆயிரம் என்கிற குறு நாவலிலும் கிடைக்கப்பெற்றேன். சாந்தனின் இந்தக் கதை விளிம்பில் உலாவுதல் என்கிற அவரது தொகுப்பில் இடம்பெற்றிருந்தது. இதில் என்ன ஒரு முக்கிய ம்சம் என்றால் அசோகமித்திரன் அமெரிக்க அனுபவ அடிப்படையில் தனது படைப்பை முன்வைக்க, சாந்தனோ ரஷ்யப் பயண அடிப்படையில் தனது அனுபவங்களை முன்வைக்கின்றார். 2011 ஒக்ரோபர் மாத காலம் இதழில் (அசோகமித்திரன் சிறப்பிதழ்) அசோகமித்திரன் தனது அமெரிக்கப் பயணம் "பனிப்போரின் விளைவுகளில் ஒன்று" என்கிற பொருள்படப் பதில் தந்திருந்தார்.

சாந்தன், அசோகமித்திரன் இருவரின் படைப்புகளில் இருக்கும் நேர்த்ததியும் அதில் இருக்கின்ற ஒரே இயல்புகளையும் கவனிப்பது ஆச்சர்யமாக இருக்கின்றது. அண்மையில் நண்பர் டிசேயுடன் பேசிக்கொண்டிருந்தபோது சாந்தன், அசோகமித்திரனின் படைப்புகளில் காணப்படும் ஒற்றுமைகளை அவர் சொல்ல நான் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒத்துக்கொள்ளவும் செய்கின்றேன்....

(அசோகமித்திரன் கட்டுரைகளிலும், மேற்சொன்ன காலம் இதழில் அவர் சொன்ன சில கருத்துக்களிலும் இருக்கின்ற முரணைத் தாண்டி அவரது ஒற்றன் என்கிற படைப்பை முன்வைத்தே அவரது எழுத்துக்கள் பற்றிய எனது கருத்துக்களை இங்கே சொல்லியிருக்கின்றேன்)

மேவி... said...

மரண தண்டனையை எதிர்த்தவங்க கூட கும்பிபாகத்தை கண்டுக்கல. ஏன் தெரியுமா ? அது உங்களை தண்டிக்க பயன்படுமே தான்..
=
"பஸ்ஸில் வம்பளந்து கொண்டிருந்ததும் இன்னொரு காரணம்"

பூனம் புஜ்ஜிமாவை பார்த்து ஜொள்ளு விட்டதை என்ன நாசூக்கா சொல்லுது பாரு பயபுள்ள.
=

"நானும் அவரோடு பயணித்தபடியே இருந்ததையும் நாவல்என்மீது ஏற்படுத்தி இருந்த பாதிப்பையும் உணர முடிந்தது."

அவரோட வித் அவுட் ல போனது நீங்க தானா ???? நாவலை பிடிச்சிண்டே இருந்ததால கை வெளிச்சத்தை சொல்லுறீங்களா காபா

=
"யுவனுக்கு அவ்வளவாக நேரம் சரியில்லை என நினைக்கிறேன்."

ஒரு வேளை "கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நானெழுதும் “உக்கார்ந்து யோசிச்சது” இது." காரணமாக இருக்குமோ ???

=
"தேநீர்ச்சட்டையும் (அதான்யா ரவுண்டு நெக்கு டி-ஷர்ட்)"

அப்ப coffee table t shirts யை என்னன்னு சொல்லுவீங்க ? கொட்டை வடிநீர் சட்டைன்னா ??

" நானும் யூத்துதான்யா.. நம்புங்கப்பா..:-)))"

அது எப்படி நம்புறது ?? எக்ஸ்பிரஸ் அவென்யூ ல பார்த்த ஜில்பான்ஸ் பொண்ணுகளை எல்லாம் உங்களுக்கு பிடிக்கவில்லையே ???

டிஸ்கி - நானும் ரொம்ப நாள் கழித்து பதிவுகளில் கமெண்ட் போடுறேன் ...

செ.சரவணக்குமார் said...

தொடரை சீக்கிரமா ஆரம்பிங்க நண்பா.

ஈரோடு சங்கமம் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றதாக அறிந்தேன். ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

எனக்கும் ‘ஒற்றன்’ ஒரு அருமையான வாசிப்பனுபமாக இருந்தது. எஸ்.ராவின் நூறு நாவல்கள் பரிந்துரையிலும் இருக்கிறது என நினைக்கிறேன்.

//எப்படிப் போகுது பாரு.. மனசுக்குள்ள அடிதடி சத்யராஜ்னு நினைப்பு.. //
:)

CS. Mohan Kumar said...

வேட்டை பாட்டு நல்ல இல்லைன்னு சொல்லிட்டு அதில் ரெண்டு பாட்டை இந்த வார டாப்பில்
சொல்லிருக்கீங்களே !!

நீங்க சொன்னபிறகு யோசிச்சா நீங்க கொஞ்சம் சத்யராஜ் மாதிரி தான் இருக்கீங்க :))

முரளிகண்ணன் said...

\\எப்படிப் போகுது பாரு.. மனசுக்குள்ள அடிதடி சத்யராஜ்னு நினைப்பு.. \\

சேம் பிளட்

Balakumar Vijayaraman said...

நல்லா இருக்கு

நேசமித்ரன் said...

// நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் என் அனுபவங்கள் சார்ந்து தொடரொன்று எழுதவும் ஆசை இருக்கிறது. //

ரைட்டு ! :))

வாழ்த்துகள் !

ஈரோடு கதிர் said...

நன்றி கா.பா!

Manoj said...

"அடப்பாவிகளா... நினைச்ச மாதிரி உடுத்தக்கூட விடமாட்டீங்களா? நானும் யூத்துதான்யா.. நம்புங்கப்பா..:-)))"

Na Solluren sir.....neega youthu youthu youthu.....

Suresh Subramanian said...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com