July 29, 2013

பட்டத்து யானை
பட்டத்து யானை – போலச் செய்தலின் துயரம்”னு தான் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். ஆனா சாரி, இந்தப்படம் அதுக்கெல்லாம் வொர்த் இல்லை. கொஞ்ச நாள் முன்னாடி – வேட்டைக்காரன் வெளியான சமயம் – ஆனந்த விகடன்ல விஜய் ரசிகர்கள் கடிதம் எழுதின மாதிரி ஒரு மேட்டர் பண்ணியிருந்தாங்க. போஸ்டர்ல இருக்க கதாநாயகியோட முகமும், பாட்டும் வேற வேறயா இருக்குறத வச்சுத்தான் தலைவா உங்க படங்களுக்கு நடுவுல இருக்க வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடியுதுன்னு எழுதி இருப்பாங்க. அது விஷாலோட பட்டத்து யானைக்கும் பொருந்தும். நாம நடிச்ச படத்தோட கதைலயே மறுபடியும் நடிக்கிறோமேன்னு சின்ன குற்றவுணர்ச்சி கூட இவங்களுக்கு எல்லாம் வராதா?


அந்நியன் – கந்தசாமி


மலைக்கோட்டை – பட்டத்து யானை


விக்ரம் – விஷால் – விளங்கிரும் (இதுல இன்னொரு வி-யும் வரும்.... அதான் ஊருக்கே தெரியுமே)


வெடி, சமர்னு ரெண்டு பிளாக்பஸ்டருக்குப் பிறகு இந்தப்படமாவது ஓடாதான்னு விஷால் ஏங்கிப் போயிருக்காரு. சாரி பாஸ், பாண்டியநாடு எதையாவது மாத்துதான்னு பார்ப்போம். வெளிறிப் போன வெள்ள காக்கா (அல்லது) வேக வைக்காத கருவாடு மாதிரி இருக்காங்க ஐஸ்வர்யா அர்ஜுன். அவங்களுக்கு ரெண்டு பாட்டு + நாலு சீன் = கேமிராமேன் இஸ் வெரி பாவம். படம் முழுக்க வந்தும் சந்தானத்தால யாரையும் சிரிக்க வைக்க முடியலைன்னா அவர் கேரக்டர் எவ்வளவு மொக்கைன்னு பார்த்துக்கோங்க. கலர் ஜெராக்ஸ் போட்ட காட்ஸில்லா, காடையை வறுத்து கல்லாவுல உட்கார வச்சது எவண்டான்னு டிரைலர் காமெடியைப் பார்த்து ஏமாந்து படத்துக்கு போன நமக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். விஷால் கிட்ட அடி வாங்கிச் சாகுறதுக்கு ஒரு சீரியஸ் வில்லன், சில பல காமெடி வில்லன்கள்னு பலர் வந்து போறாங்க.. வந்து… போறாங்க.. அவ்வளவே. எப்பவும் போல ரெண்டு சீனே வந்தாலும் மயில்சாமி பட்டாசு.


இண்டெர்வல் ப்ளாக்ல வருது பாருங்க ஒரு ட்விஸ்டு.. யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். வில்லன் காண்டாகிக் கத்துறாரு.. “ஆஃப்டர் ஆல் ஒரு சமையக்காரன் நீ.. என்ன அடிச்சிட்டியா..” ஒடனே விஷால் அடிக்கிறாரு பாருங்க ரிபீட்டு.. “ஆமாண்டா.. நா சமையக்காரன் தான்.. ஆனா நா சமையல் கத்துகிட்டது எங்க தெரியுமா.. மதுர ஜெயில்லடா..” எனக்கோ ஒரே பயம். “நான் சாணக்கியன் இல்ல.. சத்திரியண்டா...” ஹோ ஹோ ஹோன்னு பேக்கிரவுண்டு முசீக் போட்டு மீனாட்சி அம்மன் கோயிலைக் காட்டிருவாய்ங்களோன்னு. நல்ல வேளை தப்பிச்சோம்டா சாமி. இப்படித்தான் போகும்னு தெரிஞ்சாலும் ஃபிளாஷ்பேக்குல வர்ற குழந்தையோட கதை – அந்தப் பத்து நிமிஷம் மட்டும்தான் கொஞ்சமாவது படத்தோட டிராவல் பண்ண முடிஞ்சது.     


ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு அருள் மாதிரி தமனுக்கு இந்தப்படம். ஒரு பாட்டு கூட வெளங்கலை. என்னவொரு என்னவொரு அழகியடா பாட்டு மட்டும் பரவாயில்லை ரகம். ஆனா அதையும் இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கு. படமே சரியில்லைன்னு ஆன பிறகு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் பத்தியெல்லாம் தனித்தனியா பேசி என்ன ஆகப்போவுது? விடுங்க.. பூபதிபாண்டியனோட காதல் சொல்ல வந்தேன் கான்செப்ட் மோசம்னாலும் படம் பார்க்க நல்லா இருந்தது. ஆனா திரைக்கதை சொதப்பினதால பட்டத்து யானைல சுத்தமா உட்காரவே முடியலை. டைரக்டர் சார்.. முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரே ஒரு டவுட்டு.. இந்தப்படத்துக்கு எதுக்கு சார் பட்டத்து யானைன்னு பேர் வச்சீங்க?

6 comments:

அத்திரி said...

//ஆனந்த விகடன்ல விஜய் ரசிகர்கள் கடிதம் எழுதின மாதிரி ஒரு மேட்டர் பண்ணியிருந்தாங்க. போஸ்டர்ல இருக்க கதாநாயகியோட முகமும், பாட்டும் வேற வேறயா இருக்குறத வச்சுத்தான் தலைவா உங்க படங்களுக்கு நடுவுல இருக்க வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடியுதுன்னு எழுதி இருப்பாங்க//
yoov vaththi........santhula sinthu paduringa........ithellam nallathukkillai

Unknown said...

pattathu yaanai nu vachathuku pathila,pallu pona poonai nu vachurukalaam.. :P

நையாண்டி நைனா said...

சாதா யானைன்னு பேரு வச்சி பிச்சை எடுக்காவிட்டா அஞ்சு பத்து தான் தேறும் இப்ப அம்பது நூறு விழும் அதான்

வினோத் கெளதம் said...

விஷால் கதையெல்லாம் முடிந்து வருடங்கள் பல ஆகிவிட்டன.

Prabu M said...

நான் மலைக்கோட்டையும் பாக்கல...... பட்டத்துயானையும் பாக்கல....
ஆனாலும் ரெண்டு படத்தையும் பாத்தமாதிரிதான் ஃபீலாகுது!! :-))

உங்க ஃபீலுங் புரியுது..... ஃபார்முக்கு வந்துட்டீங்கன்னு நினைக்குறேன்..... அப்படியே கொஞ்சம் உக்காந்து யோசிக்கலாம்ல.... ரொம்ப நாளாச்சு அந்த டைப் பதிவை உங்க கிட்டயிருந்து பாத்து! :-)

சச்சின் said...

னீஙக மட்டும்தான் பாஸ் ஐஸ்வர்யா வ கரெக்டா கேவலமா சொல்லிருகீங்க.. தேங்க்ஸ் பாஸ்.. இப்ப தான் ஆறுதலா இருக்கு.. வக்காளி .. அவன் அவன் குழந்தைங்கிறான்.. செல்லம்ங்கிறான்..