January 2, 2009

நம்ப முடியவில்லை.. இல்லை.. இல்லை!!!


2009- புதிய ஆண்டு பிறந்து விட்டது. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று காலை கணினியின் முன் வந்து அமர்ந்தால் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

அதிர்ச்சி 1: முதல் வேலையாக என் வலைப்பூவை திறந்தேன். தங்களை ஒருவர் பின்தொடர்கிறார் என்று இருந்தது. இது நமது தளம் தானா என சரிபார்த்துக் கொண்டேன். உண்மை தான். முதல் முறையாக இணையத்திலிருந்து ஒரு தோழர் எனது எழுத்துக்களை படித்திருக்கிறார். சந்தோசம் தாங்க வில்லை. நம்மளையும் நம்பி ஒருத்தரா? என்று வியந்து போனேன். நாம் நமது திருப்திக்காகத்தான் எழுதுகிறோம் என்றபோதிலும், இன்னொருவர் அதை படித்து கருத்து கூறும்போது நம்மையும் அறியாமல் ஒரு குதூகலம் உண்டாவதை உணர்ந்தேன். அன்பர் பிரேம்குமாருக்கு நன்றி.

அதிர்ச்சி 2: இரண்டு நாட்களுக்கு முன் எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். நான் அவருடைய எழுத்துக்களை விரும்பி வாசிப்பது உண்டு. அவருடைய எழுத்துக்கள் பற்றியும், சமீபத்தில் அவர் கூறி இருந்த சில விஷயங்கள் பற்றியும் என்னுடைய கருத்துக்களை சொல்லி இருந்தேன். சாருவின் வலைத்தளத்தை நான் தினமும் படிக்கும் பழக்கம் உண்டு. இன்றும் அதே போல் எதேச்சையாக திறந்தால், என்னுடைய கடிதம் வெளியிடப்பட்டு அதை ஒட்டிய சாருவின் விளக்கமும் இருந்தது. அட போங்கடா.. முடியல. மிகவும் குஷியாகிப் போனேன். நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.

புத்தாண்டு பிறந்ததை மாணவ நண்பர்களோடு கேக் வெட்டி கொண்டாடினேன். ஆக மொத்தத்தில் இந்த புத்தாண்டு ரொம்ப இனிதாகவே பிறந்திருக்கிறது. எங்கும் அமைதியும் சந்தோஷமும் நிலவட்டும். தோழர்கள் அனைவருக்கும், மீண்டும் ஒரு முறை... என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!

2 comments:

ச.பிரேம்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துகள் பாண்டியன் :)

நாங்களும் மதுரையில் பிறந்தவுங்க தாண்ணே ... அப்புறம் நானும் என்னோட அறிமுகத்தில் 'உங்களில் ஒருவன்' அப்படின்னு போட்டுருக்கேன் :)

ஹி ஹி ஹி... நன்றிக்கு நன்றி :)

கார்த்திகைப் பாண்டியன் said...

சந்தோசம்.. ஒரே ஊருக்காரங்களா வேற போய்ட்டீங்க.. ரொம்ப சந்தோசம்