January 23, 2009

முதல் காதல்!!!


நான் அப்போ எட்டாவது கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன். நாங்க இருந்த ஏரியா பேரு சோலைஅழகுபுரம். நான் இருந்த காம்பவுண்ட்ல மொத்தம் இருபது வீடு. என்னோட வாழ்க்கைல ரொம்ப முக்கியமான விஷயத்த நான் கத்துக்கிட்டு இருந்த டைம் அது. அது தான்பா, பிகர் மடிக்கிறது. நம்ம தோழர் ஒருத்தன் இருந்தான். பேரு குமாரு. நாங்க செல்லமா அவன வீனா கூனானு தான் கூப்டுவோம். இந்த மேட்டர்ல பெரிய ஆளு. ஆறில் இருந்து அறுபது வரை.. யாரையும் விட மாட்டான். அவன் தான் நம்மளோட மானசீக குரு.

ரொம்ப ஜாலியா போயிட்டு இருந்த நம்ம லைப்ல திடீர்னு ஒரு ட்விஸ்ட். நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு புதுசா ஒரு குரூப் குடி வந்துச்சு. அய்யர் வீடு. ரெண்டு பொம்பள பிள்ளைங்க. நம்ம பசங்களுக்கு நல்ல நாள்லயே சூடு ஏறும். இதுல ரெண்டு பொம்பள பிள்ளைனு சொன்னா கேக்கவா வேணும். நம்ம தானைத் தலைவர் குமார் அரும்பாடுபட்டு அவங்கள பத்தின தகவல்கள கொண்டு வந்தான். மூத்த பொண்ணு காலேஜ் முத வருஷம். ரெண்டாவது பொண்ணு +2. ஏன்டா மாப்ள, ரெண்டுமே நம்மள விட பெரிய புள்ளைகளா இருக்கேனு நான் சொன்னதுக்கு நம்மாளு ஒரு மொற தான் மொரச்சான். நான் அப்புறம் ஒண்ணுமே கேக்கலியே. தலைவன் எவ்வழி.. நாமும் அவ்வழி.. ஹி ஹி ஹி..

அவங்க ரெண்டு பேர்ல சின்ன பிள்ளைக்குத்தான் நெறைய ரசிகர்கள். சும்மா தள தளனு ரோஸ் கலர்ல கும்முன்னு இருப்பா. அவள கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வரதுக்கே ஒரு குரூப் இருந்தாங்க. அவகிட்ட யார் பேசினாலும் நல்ல பேசுவா. அதனால பசங்க எல்லாம் அவ பின்னாடி தான் லோ லோனு சுத்திகிட்டு இருந்தானுங்க. அக்காவுக்கு கொஞ்சம் மாறுகண். அவ யார் கிட்டவும் சிரிச்சு பேசி நாங்க பார்த்ததே இல்ல. ஆனா எனக்கு என்னமோ அவள ரொம்ப பிடிச்சு இருந்தது. பசங்க எல்லாம் என்ன கிண்டல் பண்ணினாலும் நான் கண்டுக்கல. எனக்கு பிடிச்சிருக்கு, அவ்ளோ தான் போங்கடானு ரொம்ப தீவிரமா அவள பார்க்க ஆரம்பிச்சேன்.

காலைல நாம ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியும் சரி, திரும்பி வந்ததுக்கு அப்புறமும் சரி, அவள பார்த்தா தான் வேலை ஓடும்னு ஆகி போச்சு. ஜன்னல் வழியா ஒரு லுக்கு. அவ அந்த இடத்துல இருந்து நம்மள ஒரு தடவ பார்த்துட்டானா அப்படியே பறக்குற மாதிரி ஒரு பீலிங். அட கருமமே, இதுதான் காதலானு குஷி ஆகிட்டேன். என்னடா , இவ்ளோ சீரியஸா பேசுறானேன்னு பசங்க கூட கொஞ்சம் பயந்துட்டானுங்க . நாம அதெல்லாம் கண்டுக்கவே இல்லையே. லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சுல. டெய்லி அவள ஜன்னல் வழியா பார்த்துகிட்டே பொழப்ப ஓட்டிட்டு இருந்தேன். அவ நம்மள பார்க்கிறாலானு கூட தெரியாம நம்ம லவ் பயங்கர ஸ்பீடா டெவலப் ஆகிட்டு இருந்தது.

அந்த நாள், இன்னைக்கு வரைக்கும் என்னால மறக்க முடியல. என்னைக்கும் போல சாதரணமாதான் தொடங்குச்சு. காலைல போகும்போது நம்ம புள்ளைய பார்க்க முடியல. ஒரு பீலிங்கோடதான் ஸ்கூலுக்கு போயிட்டு வந்தேன். சாயங்காலம் வேகம் வேகமா டிரஸ் மாத்திட்டு அவ வீட்டுக்கு முன்னாடி போய் பட்டறைய போட்டாச்சு. தரிசனம் கிடைக்குமானு பார்த்திட்டு இருந்தப்ப திடீர்னு கதவ திறந்துகிட்டு அவளே வந்தா. மொகத்தில அப்படி ஒரு கோவம். "நானும் டெய்லி பார்த்துகிட்டே இருக்கேன். போறப்ப வரப்ப எல்லாம் இங்கயே பார்த்துகிட்டு இருக்க. நீ என்ன பெரிய இவனா? இங்க என்ன அவுத்து போட்டா ஆடிட்டு இருக்கோம்? ஒழுங்கா இருந்துக்க ". அவ்ளோ தான். உள்ளே போய் கதவ சாத்திட்டா. எனக்கு உள்ள நான் கட்டி வச்சு இருந்த காதல் கோட்டை ஒரே நிமிசத்துல சுக்கு நூறா உடஞ்சு போச்சு. அவளால இப்படி பேச முடியும்னு நான் நெனச்சு கூட பார்க்கல. சரி சரி, சுனா பானா, யாரும் பார்க்கலை, விடு விடுன்னு எஸ்கேப் ஆகிட்டேன். இப்படியாக என்னோட முதல் காதல் சொல்லாமலேயே தோத்து போச்சு. பசங்க அப்புறமா கேட்டப்ப நான் சொன்ன பதில், அதெல்லாம் ஒரு ஆளாடா? ஹி ஹி ஹி.. கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைல!!!

(இது ஆரம்பத்துல எழுதுனது.. மறுபடியும் போட்டிருக்கேன்.. )

12 comments:

புல்லட் said...

கதை நல்லாத்தான் இருக்கு! ஆனா பின்விளவு மோசமா இருக்கப்போகுதே? உங்க ஸ்டுடன்டஸ் யாராச்சும் இதை வாசிச்சுட்டு வாக்குக்கண் மாதிரி கண்ணை வச்சுட்டு வந்தாங்கன்னா வேற வழியிலாம எக்சாமுல 100 மார்க்கு போட்டு சமாளிச்சு விட்டுடுங்க. ஓவரா ஓபன் பண்ணினா ஆப்பு அது பாட்டுக்கு இறங்கி இருந்துடும் பாஸ். கவனம்!

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி தோழர்.. மாணவர்கள் இதை பார்ப்பதால் பெரிய பிரச்சினை ஒன்றும் வந்து விடாது.. அனைவரும் நமக்கு நெருக்கமானவர்களே.. உண்மையை சொல்வதானால் என்னுடைய வலைப்பூவின் முதல் வாசகர்கள் அவர்கள் தான்..-)

ச.பிரேம்குமார் said...

//சும்மா தள தளனு ரோஸ் கலர்ல கும்முன்னு இருப்பா.//

தல, இது கொஞ்சம் நாகரீகமா எழுதியிருக்கலாம்.... கல்லூரி வழக்குலேயே எழுதிட்டீங்க போல :)

ச.பிரேம்குமார் said...

//அதெல்லாம் ஒரு ஆளாடா? ஹி ஹி ஹி.. கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைல!!!//

அந்த வயசுல மீசையே இருந்திருக்காதே பாண்டியன் :)

ச.பிரேம்குமார் said...

//எனக்கு பிடிச்சிருக்கு, அவ்ளோ தான் போங்கடானு ரொம்ப தீவிரமா அவள பார்க்க ஆரம்பிச்சேன்.//

கிகிகி... எல்லாம் பருவக்கோளாறு!!!

Karthik said...

கதை நல்லாருக்கு.

நீங்க லெக்சரரா? ஒரு இன்ப அதிர்ச்சி.
:)

ராம்.CM said...

//சும்மா தள தளனு ரோஸ் கலர்ல கும்முன்னு இருப்பா.//

தல, இது கொஞ்சம் நாகரீகமா எழுதியிருக்கலாம்....

ரீப்ப்ப்ட்ட்டு..............

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம் said...
தல, இது கொஞ்சம் நாகரீகமா எழுதியிருக்கலாம்.... கல்லூரி வழக்குலேயே எழுதிட்டீங்க போல :)//

பிரேம், கருத்து சரிதான்.. கொஞ்சம் டீசெண்டாக எழுதி இருக்கலாம.. அடுத்த முறை திருத்தி கொள்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம் said...
அந்த வயசுல மீசையே இருந்திருக்காதே பாண்டியன் :)//

அட.. அரும்பு மீச இருந்துச்சுபா.. நம்புங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கார்த்திக் said..
கதை நல்லாருக்கு.

நீங்க லெக்சரரா? ஒரு இன்ப அதிர்ச்சி.
:)//
வருகைக்கு நன்றி கார்த்திக்.. நான் கொங்கு பொறியியல் கல்லூரியில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// ராம். CM said..
தல, இது கொஞ்சம் நாகரீகமா எழுதியிருக்கலாம்....

ரீப்ப்ப்ட்ட்டு..............//

முதல் முறையாக என் தளத்திற்கு வருகை தந்துள்ளீர்கள் ராம்.. நன்றி..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்