February 14, 2009

சிவா மனசுல ஷக்தி...!!!


செம ராவடியாக ஒரு படம் பண்ண வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கி இருக்கிறார்கள். அதில் பாதி கிணறு மட்டும்தான் தாண்டி உள்ளார்கள். விகடனின் முதல் தயாரிப்பு. சமீப காலத்தில் முழுக்க முழுக்க காதலை அடிப்படையாக கொண்டு வந்துள்ள ஒரே தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும். வெள்ளித்திரையில் ஒரு டாம் அண்ட் ஜெர்ரி ஷோ. இது தான் "சிவா மனசுல ஷக்தி". தலைப்பிலேயே "ஜீவா கலாய்க்கும்" என்றுதான் போட்டிருக்கிறார்கள். அது போலவே படம் முழுக்க செம ஜாலி, கிண்டல், நக்கல் என்று இருக்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதை மற்றும் கிளைமாக்ஸ் மட்டும் நன்றாக இருந்திருந்தால் படம் பட்டையை கிளப்பி இருக்கும். ஆனால் சொதப்பி விட்டார்கள். இந்த படத்திற்கு விகடன் என்ன மார்க் தருகிறது என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

ரயிலில் அனுயாவை சந்திக்கிறார் ஜீவா. முதல் சந்திப்பிலேயே பிடித்துப் போகிறது. தான் ஒரு மிலிடரிமேன் என்று சொல்கிறார். அனுயா தான் ஒரு விமான பணிப்பெண் என்கிறார். இருவருக்குள்ளும் ஒரு பழக்கம் உண்டாகிறது. ஆனால் உண்மையில் இவர்கள் சொன்னது பொய். ஜீவா கொரியரில் வேலை பார்க்கிறார். அனுயா ஹல்லோ fm இல் RJயாக உள்ளார். இருவருக்கும் உண்மை தெரிய வரும் போது எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். அனுயாவின் அண்ணன் கல்யாணத்திற்கு ஜீவா உதவுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்குகிறார்கள். ஆனால் ஈகோ பிரச்சினையால் அடித்து கொள்கிறார்கள். கடைசியில் இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதே SMS.

ஜீவாவுக்கு பொருத்தமான வேடம். செமையாக கலாய்க்கிறார். நகைச்சுவை ரொம்ப எளிதாக வருகிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு அவருடைய செயல்களைப் பார்க்கும்போது நமக்கு எரிச்சல் வரக் காரணம் இயக்குனர் தான். சட்டையை கழட்டி விட்டி ரேடியோ ஆபிசில் அவர் செய்யும் அலம்பல் ரொம்ப ஓவர் ரகம். புதுமுகம் அனுயாவுக்கு நடிக்க மட்டும் வரவில்லை. மற்றபடி ஓகே. ஒரு சாயலில் மதுமிதா போலவும் இன்னொரு சாயலில் ராக்கி சாவந்த் மாதிரியும் தெரிகிறார். வசனங்களை ரொம்ப கஷ்டப்பட்டு ஒப்பிக்கிறார். எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.. அவருடைய ரெண்டு நீளமான, அழகான கால்கள்தான்.

சந்தானம் கெட்டவார்த்தை காமெடி செய்வதை நிறுத்தவே மாட்டார் போல. அவருடைய போனை ஜீவா ஒவ்வொரு முறையும் உடைத்து போடும் காட்சிகள் நன்றாக உள்ளன. அனுயாவின் அண்ணனாக வரும் சத்யன் நன்றாக காமெடி செய்கிறார். படத்தில் பெரிய லூஸ் யாரென்றால், ஜீவாவின் அம்மாவாக வரும் ஊர்வசிதான். நகைச்சுவை செய்வதாக எண்ணி நம்மை மண்டை காய வைக்கிறார். படத்துக்கு தேவை இல்லாத இன்னொரு மனிதர் கு. ஞானசம்பந்தன். பாவம், அவர் சீரியஸ் அப்பாவா இல்லை காமெடி அப்பாவா என்று கடைசி வரை தெரியவே இல்லை.

ரொம்ப நாளைக்கு பிறகு யுவனின் இசையில் எல்லாப் பாடல்களுமே நன்றாக உள்ளன. "ஒரு சொல், ஒரு கண்ணாடி" பாடலில் முத்துக்குமார் தெரிகிறார். "எப்படி மாட்டிக்கிட்டேன், ஒரு அடங்காப்பிடாரி" ஆகிய பாடல்களை நன்றாக படமாக்கி உள்ளார்கள். டைட்டில் மியூசிக், இடைவேளையில் வரும் காதல் தீம், பின்னணி இசை என யுவன் சிறப்பாக செய்து இருக்கிறார். ஒளிப்பதிவு ஷக்தி சரவணன். பரவாயில்லை ரகம்தான். வசனம் யாரென்று தெரியவில்லை. நச்சென்று எழுதி இருக்கிறார். நகைச்சுவை படம் முழுவதும் வழிந்தோடுகிறது.

இயக்குனர் ராஜேஷுக்கு இது முதல் படம். இளைஞர்களுக்கான ஒரு படமாக இதை எடுக்க முனைந்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகி விட்டது. கிளைமாக்ஸ் பார்க்கையில் நமக்குத்தான் வாந்தி வருகிறது. ஜீவாவிடம் அனுயா காதலை சொல்வதுடன் படத்தை முடித்து இருக்கலாம். நன்றாக இருந்து இருக்கும். அதை விடுத்து, அனுயாவை அலைய விட்டு, ஜீவாவை உளர வைத்து, நம் பண்பாட்டையே கேவலப்படுத்தி.. நம்மை இந்தப் பாடு படுத்தி இருக்க வேண்டாம். ஒரு நல்ல படம் பார்க்கிறோம் என்று இடைவேளை வரை இருந்த உணர்வு.. படம் முடிந்து வெளியே வந்தபோது காணாமல் போய் விட்டது.

சிவா மனசுல ஷக்தி - முதல் பாதி சூப்பர்.. இரண்டாம் பாதி மசமொக்கை..

32 comments:

ஆதவா said...

இடைவேளை வரை சக்க..... அதுக்கப்பறம் மொக்க யா????

எப்படிங்க, படத்தோட ரிசல்ட் தெரியாமல்யே பார்க்கறீங்க... நமக்கெல்லாம் ஒத்து வராதப்பா.....

சன் டி.வியில போடுவாங்க... அப்ப பார்க்கவேண்டியதுதான்.

விகடனோட நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கு.... பொறுத்து இருந்து பார்ப்போம்...

கார்த்திகைப் பாண்டியன் said...

சினிமா பார்ப்பது எனக்கு விருப்பமான ஒன்று நண்பா.. முதல் நாளே பார்த்து விடுவேன்.. ரிசல்ட் கேட்டுப் பார்ப்பது பிடிக்காது..

*இயற்கை ராஜி* said...

//கிளைமாக்ஸ் பார்க்கையில் நமக்குத்தான் வாந்தி வருகிறது.//

ம‌க்க‌ளே..யாரும் இவ‌ர் கூட‌ சினிமாக்கு போயிடாதீங்க‌.ப‌ட‌ம் பிடிக்க‌லைன்னா உங்க‌ மேல‌ வாந்தி எடுத்துடுவார்:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//இயற்கை said..
ம‌க்க‌ளே..யாரும் இவ‌ர் கூட‌ சினிமாக்கு போயிடாதீங்க‌.ப‌ட‌ம் பிடிக்க‌லைன்னா உங்க‌ மேல‌ வாந்தி எடுத்துடுவார்:-)))//

ஐயோ தோழி.. அந்த கிளைமாக்ஸ் அவ்வளவு கேவலம்.. பெண்களை ஒட்டுமொத்தமாக அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்..

பூச்சாண்டியார் said...

காதலர் தின வாழ்த்துக்கள். படத்தை காதலியோடு சென்று பார்த்தீர்களோ?

சொல்லரசன் said...

இப்படி படம் பார்த்துகொண்டுஇருந்தால்,எப்போது பாடம் நடத்துவது

தாரணி பிரியா said...

ஆஹா அப்ப இந்த படமும் பாக்க முடியாதா. டிரைய்லர் பாத்தப்ப நல்லா இருக்குமுன்னு தோணிச்சே :)

அப்புறம் ஆதவா விகடன் நேர்மையா அது எல்லாம் காணாம போய் ரொம்ப நாளாச்சுங்க. அவங்க கோலங்களை பாராட்டி அவள் விகடன்ல போட்ட கட்டுரையை எல்லாம் நீங்க படிக்கலை போல இருக்கு.

கார்த்திகைப் பாண்டியன் said...

//பூச்சாண்டியார் வாங்க நண்பா.. காதலர் தின வாழ்த்துக்கள். படத்தை காதலியோடு சென்று பார்த்தீர்களோ?//

நமக்கு எங்கப்பா காதலி எல்லாம்? நம்மோட முந்தின பதிவ படிக்கலையா? தனியாத்தான் பார்த்தேன்.. :-(

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன்..
இப்படி படம் பார்த்துகொண்டுஇருந்தால்,எப்போது பாடம் நடத்துவது//

அதெல்லாம் கம்பெனி சீக்ரெட் நண்பா.. வெளிய சொல்லாதீங்க:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//தாரணி பிரியா said..
அப்புறம் ஆதவா விகடன் நேர்மையா அது எல்லாம் காணாம போய் ரொம்ப நாளாச்சுங்க. //

வாங்க தோழி.. சரியா சொன்னிங்க.. விகடன் அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டது என்றதான் நானும் நினைக்கிறேன்..

SPIDEY said...

//எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.. அவருடைய ரெண்டு நீளமான, அழகான கால்கள்தான்.//
me too
great men think alike

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க spidey.. படம் பார்த்தாச்சா? எப்படி ரெண்டு பேருக்குமே ஒண்ணா தோணிருக்கு பார்த்தீங்களா.. நீங்க சொன்ன மாதிரி.. great man think alike.. hi hi hi

தேவன் மாயம் said...

அன்பு நண்பரே!
படம் விமரிசனம் அருமை!
தேவா..

கிரி said...

//இய‌ற்கை சொன்னது…
//கிளைமாக்ஸ் பார்க்கையில் நமக்குத்தான் வாந்தி வருகிறது.//

ம‌க்க‌ளே..யாரும் இவ‌ர் கூட‌ சினிமாக்கு போயிடாதீங்க‌.ப‌ட‌ம் பிடிக்க‌லைன்னா உங்க‌ மேல‌ வாந்தி எடுத்துடுவார்:-)))//

ஹா ஹா ஹா

Anonymous said...

அப்ப படம் சொதப்பல் எங்கிறீங்க...
இங்கை படம் தியேடருக்கு வராது... திருட்டு விசிடி தான் எல்லாம்..

Anonymous said...

//கிளைமாக்ஸ் பார்க்கையில் நமக்குத்தான் வாந்தி வருகிறது.//

ம‌க்க‌ளே..யாரும் இவ‌ர் கூட‌ சினிமாக்கு போயிடாதீங்க‌.ப‌ட‌ம் பிடிக்க‌லைன்னா உங்க‌ மேல‌ வாந்தி எடுத்துடுவார்:-)))\\
ஹி..ஹி..ஹி

Anonymous said...

ஸாரி ங்க உங்க நான் கடவுள் விமர்சனத்துக்கு போடவேண்டிய பின்னோட்டாத இங்க போட்டுடேன்...


Maruthu
Kollam

சம்பத் said...
This comment has been removed by the author.
சம்பத் said...

விமர்சனம் அருமை !!! trailer நன்றாக இருந்ததால் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தேன்.

என்னோட ஆடியோ விமர்சனம் கீழே.
http://tamilsam.blogspot.com/2009/01/blog-post.html

butterfly Surya said...

"கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகி விட்டது. கிளைமாக்ஸ் பார்க்கையில் நமக்குத்தான் வாந்தி வருகிறது""

Thanx for saving me.

கார்த்திகைப் பாண்டியன் said...

//thevanmayam said..
அன்பு நண்பரே!
படம் விமரிசனம் அருமை!
தேவா..//
ரொம்ப நாளைக்கு பிறகு வருகை தந்து இருக்கேங்க.. தேவா.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கிரி said..
ஹா ஹா ஹா //
என்னப்பா.. என்னோட கஷ்டம் இப்படி சிரிப்பா சிரிக்குதா.. வருகைக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
அப்ப படம் சொதப்பல் எங்கிறீங்க...
இங்கை படம் தியேடருக்கு வராது... திருட்டு விசிடி தான் எல்லாம்..//
வாங்க கவின்.. எங்கடா ஆள காணோமேன்னு பார்த்தேன்.. வருகைக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//maruthu said..
ஸாரி ங்க உங்க நான் கடவுள் விமர்சனத்துக்கு போடவேண்டிய பின்னோட்டாத இங்க போட்டுடேன்...//
பரவா இல்லை மருது.. உங்களுக்கான பதில நான் கடவுள் விமர்சனத்துல சொல்லி இருக்கேன் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said..
விமர்சனம் அருமை !!! trailer நன்றாக இருந்ததால் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தேன்.
என்னோட ஆடியோ விமர்சனம் கீழே.
http://tamilsam.blogspot.com/2009/01/blog-post.html//
படித்து விட்டேன் சம்பத்... வருகைக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வண்ணத்துப்பூச்சியார் said..
Thanx for saving me//
வாங்க வண்ணத்துப்பூச்சியாரே.. நன்றி..

கணேஷ் said...

அட ஆமாண்ணே.. கலக்கல் வாழ்த்துக்கள்

நையாண்டி நைனா said...

good review.

you people are lucky to see more movies.

But. Ithar kuch nahi. Ithar jyaatha hindi film hee aa re.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்சுரேஷ் said..
அட ஆமாண்ணே.. கலக்கல் வாழ்த்துக்கள்//
வருகைக்கு நன்றி நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
good review.you people are lucky to see more movies.But. Ithar kuch nahi. Ithar jyaatha hindi film hee aa re.//

dhanyavaad nainaa ji.. kya kare aap kaa haal aisaa hai.. tamil movies dekh nahi sakthe, lekin poora hindi pictures dekh sakthe hai na.. life ki rule hai yaar.. kuch hai to, kuch nahi hoga.. yahi zindagi hai..

விழியன் said...

ரொம்ப செயற்கை தனமா இருந்தது பல காட்சிகள். கண்டிப்பா கண்டிக்க வேண்டும்,இப்படிப்பட்ட கிளைமேக்ஸ்சுகள் வைத்த இயக்குனரை.

முதல் பாதியோடவே படத்தை முடிச்சி இருக்கலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப சரியா சொன்னீங்க நண்பா.. வருகைக்கு நன்றி..