March 13, 2009

எனக்குப் பிடித்தவர்கள்...!!!

ரொம்ப நாளைக்கு முன்னதாகவே நண்பர் ஆதவா என்னை இந்தத் தலைப்பில் பதிவிட அழைத்து இருந்தார். சமீபத்தில் தோழர் mayveeயும் கூப்பிட்டு விட்டார். எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் புத்தகமும் இசையும். எஸ்ரா பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். இசையை பொறுத்தவரை எனக்கும் ஏ. ஆர். ரஹ்மான் பிடிக்கும். அவரைப் பற்றி இணையத்தில் எல்லாருமே எழுதி விட்டார்கள். வேறு யாரைப் பற்றி எழுதலாம் என்றெண்ணியபோது... இந்த வரலாற்று நாயகர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று உறுதி செய்தேன். நாம் இன்று அனுபவித்து வரும் சுதந்திரம் என்பது ஒரே நாளில், ஒரு சில மனிதர்களின் முயற்சியால் கிடைத்தது அல்ல. பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடி வாங்கித் தந்தது நம் விடுதலை. நம் நாட்டுக்காக போராடிய, தன் இன்னுயிரை ஈந்த... எனக்கு பிடித்த இருவரை பற்றி இங்கே எழுதி உள்ளேன்.

வாஞ்சிநாதன்

நம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்துக்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு. 1857 ஆம் ஆண்டுதான் சுதந்திரப்போருக்கான முதல் முயற்சி நடைபெற்றது என்று வரலாற்றில் சொன்னாலும் அதற்கு முன்னரே கட்டபொம்மன், பூலித்தேவன் என்று நம் தமிழக மன்னர்கள் பலர் ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடி உள்ளனர். நம் தமிழ் மண்ணில் பிறந்த வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்.. வாஞ்சிநாதன்.

நெல்லை அருகே உள்ள செங்கோட்டையில் 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன். செங்கோட்டையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த வாஞ்சி வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்களின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார். இதனால் சுதந்திர உணர்வானது அவரது இளம் ரத்தத்தில் இயல்பாக ஊறியது. தனது கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்கும்போது, வாஞ்சிநாதனுக்கு பொன்னம்மாள் என்பவர் மணம் முடித்து வைக்கப்பட்டார். இதன் பிறகு புனலூர் வனத்துறையில் அவருக்கு வேலை. ஆனால், ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சிமுறை, வாஞ்சிநாதனின் மனதை பணியில் ஒட்டச் செய்யாமல் சுதந்திரப் போரின் பக்கம் திருப்பியது.

புதுச்சேரில் இருந்த பிரெஞ்சு அரசு உதவி, ஆங்கிலேயருக்கு எதிராக வாஞ்சியின் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது. தனது சுதந்திரத் தாகத்திற்கு இடையூறாக இருந்த அரசுப் பணியை உதறித் தள்ளி, முழுமூச்சாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக களமிறங்கினார் வாஞ்சி. புதுச்சேரியில் நடந்த வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய பாரதியார் ஆகியோரின் சந்திப்புகள் வாஞ்சிநாதனுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது. இதற்கிடையே நடந்த சம்பவம் ஒன்று, வாஞ்சிநாதனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது. தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார். இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார். வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன் தான் தனக்கு எமன் என்பதை அறியாமல், முதல் வகுப்புப் பெட்டியில் களிப்புடன் அமர்ந்திருந்தார் கலெக்டர் ஆஷ். யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார். ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு வீர மரணம் எய்தினார்.

இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக வாஞ்சிநாதன் தனக்குத்தானே முடிவுரை எழுதிக் கொண்டார். ஆனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கை, அன்று தனது துயிலைக் கலைத்தது. பிற்காலத்தில், பாரத முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களால் வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற வரலாற்றுச் சிறப்புப்பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

பகத்சிங்

"இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை.."

பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் செப்டம்பர் 27, 1907 அன்று பிறந்தார். இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். 1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உந்தப்பட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவருடைய நண்பர்கள் ராஜகுரு மற்றும் சுகதேவ். தனது பதிமூன்றாவது வயதில் மஹாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.

இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமை கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய ஆங்கிலேயக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.

1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்த போது அதில் பகத்சிங்கின் நவஜவான் பாரத் அமைப்பும் ஈடுபட்டது. அந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 ஆம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.

லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவனை, லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 17 ஆம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சுட்டுக் கொன்றனர். சாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவும் தலைமறைவாயினர்.
அடுத்ததாக இந்தியாவை காப்பதாக சொல்லி ஆங்கில அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 8, 1929 அன்று சட்டசபையில் கையெறி குண்டுகளை வீசினர். அப்போது பகத்சிங் சொன்ன வார்த்தைகள்தான்.. "இன்கிலாப் ஜிந்தாபாத்.." (புரட்சி ஓங்குக).

சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. "நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பத்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.'' — சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய ஒரு கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். உயிர் துறந்த அவர்களின் உடல்களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சட்லஜ் நதிக்கரையில் எரித்தனர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் மூட்டிய விடுதலைத் தீ நாடு முழுவதும் பற்றி எரிந்தது. பகத்சிங் நாட்டு மக்களால் ஷகீத் (shaheed) என்று கொண்டாடப்பட்டார்.

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். நம் நாட்டுக்காக போராடிய மக்களில் நமக்கு தெரிந்தது கொஞ்சம் என்றால்.. முகம் தெரியா மக்கள் பல பேர். அவர்களின் தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் கடமை நமக்கு உண்டு. நம் தேசத்துக்காக வாழ்ந்து மடிந்த அவர்களுக்கு என் வீரவணக்கம்.

( நன்றி - தகவல்கள் உதவி: தமிழ் விக்கிபீடியா.. வெப்உலகம்.. )

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

46 comments:

குமரை நிலாவன் said...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். நம் நாட்டுக்காக போராடிய மக்களில் நமக்கு தெரிந்தது கொஞ்சம் என்றால்.. முகம் தெரியா மக்கள் பல பேர். அவர்களின் தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் கடமை நமக்கு உண்டு. நம் தேசத்துக்காக வாழ்ந்து மடிந்த அவர்களுக்கு என் வீரவணக்கம்.

என்னுடைய வீரவணக்கமும்

Anonymous said...

என்னுடைய வீரவணக்கமும்

ராமலக்ஷ்மி said...

//சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். நம் நாட்டுக்காக போராடிய மக்களில் நமக்கு தெரிந்தது கொஞ்சம் என்றால்.. முகம் தெரியா மக்கள் பல பேர். அவர்களின் தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் கடமை நமக்கு உண்டு.//

ஆமாங்க.


// நம் தேசத்துக்காக வாழ்ந்து மடிந்த அவர்களுக்கு என் வீரவணக்கம். //

வீரவணக்கங்கள்!

Anbu said...

me the 4th

Anbu said...

படித்துவிட்டு வருகிறேன் அண்ணா

Anbu said...

நன்றாக இருக்கிறது அண்ணா!!ஒரு ஐந்து வருடங்கள் பின்னே சென்றுவிட்டேன்..

நான் படிக்கும்போது என் சமூக அறிவியல் ஆசிரியர் நடத்தினார்..

அதன் பின் இன்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்

Anbu said...

இதுபோலவே நானும் ஜாலியன் வாலாபாக் படுகொலை எழுதலாம் என்று இருக்கிறேன்..நன்றாக இருக்குமா அண்ணா

அகநாழிகை said...

நாட்டுப் பற்று என்றாலே சுதந்திர தினத்திலும், குடியரசு தினத்திலும் நினைவுக்கு வந்து போவது என்றாகிவிட்ட நிலையில் நம் சுதந்திர உணர்வை மீட்டெடுக்கும் அருமையான பதிவு.

குடந்தை அன்புமணி said...

போரடிக்காத வகையில் ஒரு வரலாற்று செய்திகளை தரமுடியும் என்பதை தங்கள் பதிவு காட்டுகிறது. சுதந்திரத்திற்காக உழைத்தவர்களுக்கு எனது வீரவணக்கங்கள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன் SAID..
என்னுடைய வீரவணக்கமும்//

வருகைக்கு நன்றி நிலாவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said..
என்னுடைய வீரவணக்கமும்//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராமலஷ்மி//

வருகைக்கு நன்றி மேடம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
நான் படிக்கும்போது என் சமூக அறிவியல் ஆசிரியர் நடத்தினார்..
அதன் பின் இன்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்//

இதுதான் நம் பிரச்சினை அன்பு.. நாம் நம் வரலாற்றை பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்கிறோம்.. இந்த நிலை மாற வேண்டும்

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
இதுபோலவே நானும் ஜாலியன் வாலாபாக் படுகொலை எழுதலாம் என்று இருக்கிறேன்..நன்றாக இருக்குமா அண்ணா//

கண்டிப்பாக எழுதுங்கள் அன்பு.. நன்றாக இருக்கும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை said..
நாட்டுப் பற்று என்றாலே சுதந்திர தினத்திலும், குடியரசு தினத்திலும் நினைவுக்கு வந்து போவது என்றாகிவிட்ட நிலையில் நம் சுதந்திர உணர்வை மீட்டெடுக்கும் அருமையான பதிவு.//

வருத்தப்பட வேண்டிய விஷயம்.. மாறினால் சந்தோஷம்.. ரொம்ப நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தைஅன்புமணி said..
போரடிக்காத வகையில் ஒரு வரலாற்று செய்திகளை தரமுடியும் என்பதை தங்கள் பதிவு காட்டுகிறது. சுதந்திரத்திற்காக உழைத்தவர்களுக்கு எனது வீரவணக்கங்கள்!//

ஊர் பேரையும் சேர்த்து? பேர மாத்தியாச்சா.. நன்றி நண்பரே..

நையாண்டி நைனா said...

சும்மா அடிச்சு ஆடு .... நண்பா...
சும்மா நெத்தி பொட்டிலே நாச்சுன்னு அடிக்கிற பதிவு...

வாழ்க சுதந்திரம்.
வளர்க தமிழ்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க நைனா.. ரொம்ப நன்றி.. வாழ்க சுதந்திரம். வளர்க தமிழ்.

ஆதவா said...

ஆஹா.. அருமையான பதிவு கார்த்திகைப் பாண்டியன்.

வாஞ்சி நாதன் வீரமரணம் குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும், அவரது ஆதி நோக்கம் வெளிநாட்டவரை வெளியேற்றுவதில் இருந்தமையால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்..

பகத்சிங்/// நான் சிறுவயதில் வரைந்த இரு ஓவியங்களில் பகத்சிங்கும் ஒருவர்...

இருவருமே சுத்த வீரர்கள்.....

வீரவணக்கம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி ஆதவா.. வாஞ்சியின் மரணம் பற்றிய சர்ச்சைகள் உள்ளனவா..? முடிந்தால் அவற்றை பற்றி எழுதுங்கள்.. தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்..

சொல்லரசன் said...

நீண்டநாளக எதிர்பார்த்த பதிவு.இன்றைய இளைஞர்கள் அறிந்த கொள்ளவேண்டியவர்கள்,இருவரும் வேறு என்றாலும் கொண்டகொள்கையில் ஒருவரே.இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள்

*இயற்கை ராஜி* said...

ந‌ன்று தோழா

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
நீண்டநாளக எதிர்பார்த்த பதிவு.இன்றைய இளைஞர்கள் அறிந்த கொள்ளவேண்டியவர்கள்,இருவரும் வேறு என்றாலும் கொண்ட கொள்கையில் ஒருவரே.இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள்//

வாங்க நண்பா.. காணோமேன்னு பார்த்தேன்.. நான் கொஞ்சம் காலம் தாழ்த்திட்டேன் நண்பா.. முதலில் நேதாஜி பற்றித்தான் எழுத எண்ணி இருந்தேன்.. நமக்கு முன்னர் இன்னொரு நண்பர் எழுதி விட்டதால் இவர்களைப் பற்றி எழுதினேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இயற்கை said..
ந‌ன்று தோழா//

வருகைக்கு நன்றி தோழி..

Anonymous said...

வாஞ்சிநாதன் குறித்து சர்ச்சைகள் இருந்த்தாகச் சொன்னேன்...  அதேசமயம் அவரின் ஆதி நோக்கம் ஆங்கிலேயரை விரட்டுவது  என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

கீழ்காணும் எழுத்துக்கள் வாஞ்சிநாதனின் வாக்குமூலம். அதாவது அவர் சுட்டு இறந்த பின்னர் அவரது சட்டைப் பையில் எழுதியிருந்த கடிதம்...


“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு

R. வாஞ்சி அய்யர்”

இக்கடிதத்தின் படி, "அழியாத ஸ்னாதன தர்மத்தை" அழித்து வருவதாகச் சொல்லும் வாஞ்சி ஐயர், தான், சுதந்திரப் போராட்டத்திற்காகத்தான் சுட்டுக் கொன்றேன் என்று சொல்லவில்லை. அதற்கு அடுத்த வரிகளை கவனியுங்கள்... ஒவ்வொரு இந்தியனும் சுதந்திரம் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறார்கள் என்பதோடு நின்றுவிடுகிறது.

இவைகள்தான் வாஞ்சி நாதன் ஐயர் மேல் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள்...

காய்ந்த மரம் கல்லடி படும் என்ற சொலவடைக்கு ஏற்றாற்போல்.... ஆனாளப்பட்ட பாரதியைக் குறித்தே தவறான கட்டுரைகள் எழுதிய நம்மவர்கள் வாஞ்சிநாதம் எம்மாத்திரம் என்பது போல், கடித்தத்தைத் திரிக்கிறார்கள்...

அன்புடன்
ஆதவா.

Anonymous said...

I misspelled.... sorry Kaarthikai Pandiyan.

by
aathava...

நசரேயன் said...

பகிர்வுக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//aadhavaa said..
வாஞ்சி நாதன் ஐயர் மேல் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள்...//

விரிவான விளக்கத்துக்கு நன்றி ஆதவா.. நீங்கள் சொன்னதுபோல் காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும்.. புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.. நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said..
பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கு நன்றி நண்பரே..

ஹேமா said...

அசத்தீட்டீங்க கா.பாண்டியன்.
அருமையா இருக்கு.
ஆதவா சந்தோஷப்படுவார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும்.. நன்றி தோழி...

Anonymous said...

ஒரு வரலாற்று பாடமே நடத்திட்டீங்க... நல்ல பகிர்வு

Anonymous said...

ஒரு வரலாற்று பாடமே நடத்திட்டீங்க... நல்ல பகிர்வு

geevanathy said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்...

"நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பத்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.''

பகத்சிங் பற்றிய திரைப்படமும் பார்த்ததாக ஞாபகம்....

அத்திரி said...

இந்த தொடர் பதிவிலும் வித்தியாசம் காட்டிய நண்பா....... கலக்குங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
ஒரு வரலாற்று பாடமே நடத்திட்டீங்க... நல்ல பகிர்வு//

நன்றி கவின்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தங்கராசா ஜீவராஜ் said..
பகத்சிங் பற்றிய திரைப்படமும் பார்த்ததாக ஞாபகம்....//

நன்றி நண்பா.. சமீபத்தில் இந்தியில் மூன்று நான்கு படங்கள் ஒரே நேரத்தில் வந்தன.. அதில் அஜய் தேவ்கன் நடித்த படம் நன்றாக இருந்தது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
இந்த தொடர் பதிவிலும் வித்தியாசம் காட்டிய நண்பா....... கலக்குங்க//

வாழ்த்துக்கு நன்றி நண்பா..

narsim said...

வீரவணக்கம்.. சீரிய வார்த்தைகள் கொண்ட பதிவு..

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி நர்சிம்...

செந்தில் குமார் தங்கவேல் said...

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா !!!
கண்ணீர் விட்டல்லவா வளர்த்தோம் - பாரதி

செந்தில் குமார் தங்கவேல் said...

வணக்கம் தோழரே .. என்னோட பக்கத்துக்கும் முடிஞ்சா வந்து போங்க

ராஜ நடராஜன் said...

பகிர்வுக்கு நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி செந்தில் குமார் தங்கவேல் மற்றும் ராஜ நடராஜன்

ஆண்ட்ரு சுபாசு said...

http://karuvarayilirunthu.blogspot.com/

வாசிக்கவும் அண்ணா ..

Ram said...

But we are selling this freedom to corrupted politians, we are now not ready to stand up against this blody basters.