March 14, 2009

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள்...!!!

எனக்கு (நமக்கு?!!) மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று இசை. காலையில் கேட்கும் பாடல்கள் அன்று முழுவதும் என் உதடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு சில பாடல்கள் நல்ல படங்களில் இடம் பெறாத காரணத்தினாலேயே கவனிக்கப்படாமல் போவது உண்டு. சில பாடல்களை நாம் கேட்டிருப்போம். ஆனால் என்ன படம்.. யார் இசை என்று தெரியாது. அதுபோல் உள்ள சில பாடல்களைப் பற்றித்தான் இங்கே தொகுத்துள்ளேன்.இவை எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

இரு கண்கள் சொல்லும் காதல் சேதி...
(படம்: காதல் சாம்ராஜ்யம் இசை: யுவன் ஷங்கர் ராஜா..)
தேசிய விருது பெற்ற அகத்தியனின் படம். பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பு. படம் கடைசி வரை வெளிவரவே இல்லை. SPB சரண் மற்றும் புதுமுகங்கள் நடித்து இருந்தனர். அருமையான காதல் பாடல். ஒரு முறை ப்ரொவ்சிங் சென்டரில் கேட்டேன். பிடித்துப் போனது. என்னுடைய ஆல்டைம் காதல் ஹிட்சில் இந்தப் பாடலும் உண்டு.

என்னம்மா தோழி பொம்மையக் காணோம்...
(படம்: காலைப்பனி இசை: ?!!!!!...)
நாசர் நடித்த படம். வேற ஒன்றும் எனக்கு தெரியாது. ஆனால் அருமையான பாடல். ஒரு தாய் தன் மகளை தோழியாக பாவித்து பாடும் பாடல்.

வினோதனே.. வினோதனே.. விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்..
(படம்: தென்னவன் இசை: யுவன் ஷங்கர் ராஜா...)
சத்தியமா நம்ப மாட்டீங்க. இது ஒரு விஜயகாந்த் படப் பாடல். கிரண் நடித்து இருப்பார். இதே படத்தில் வரும் இன்னொரு பாடலான "சாமி சத்தியமா" கேட்க நன்றாக இருக்கும். ஒரே விஷயம் தயவு செஞ்சு பாட்ட கேக்குறதோட நிறுத்திக்கோங்க.. பார்த்தா ஏற்படக் கூடிய விளைவுகளுக்கு நான் பொறுப்பு அல்ல..

யார் யாரோ.. நான் பார்த்தேன்..
(படம்: சின்னா இசை: டி. இமான்...)
அர்ஜுன் நடித்து சுந்தர்.சி இயக்கிய படம். SPB மிகவும் ரசித்து பாடி இருப்பார். இதே பாடலை வெறும் இசைக் கோர்வையாக ( வரிகள் இல்லாமல்) வீணை கொண்டு வாசித்து இருப்பார்கள். அதுவும் நன்றாக இருக்கும்.

பையா பையா சின்ன பையா..
(படம்: அலை இசை: வித்யாசாகர்...)
அட்டகாசமான துள்ளலிசைப் பாடல். சிம்பு நடித்த படம். விக்ரம் குமார் (யாவரும் நலம் இயக்குனர்) இயக்கிய முதல் படம். பாலிவுட் கவர்ச்சி நடிகை கிம் ஷர்மா கெட்ட ஆட்டம் போட்டு இருப்பார். வழக்கம் போல் சிம்புவும் நடனத்தில் தூள் கிளப்பி இருப்பார்.

தொட்டு விடத்தான் நான் தொட்டு விடத்தான்..
(படம்: கருப்பு ரோஜா இசை: ?!!!....)
பிரமாண்டத்திற்கு பெயர் போன ஆபாவாணனின் படம். மாய மந்திரம் என்று என்ன எல்லாமோ வரும். இந்த படத்தால் தான் நான் ஒழிந்தேன் என்று எழுத்தாளர் இந்துமதி பேட்டி கொடுத்ததாக ஞாபகம். ஆனால் பாட்டு கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கும்.

வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா..
(படம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி..)
நிறைய பேருக்கு இந்த பாட்டு தெரியும் ஆனால் என்ன படம் என்று தெரியாது. ஹரிஹரன் அனுபவித்து பாடி இருப்பார். ஒரு பாட்டை எப்படி படமாக்கினால் கொலைவெறி வரும் என்பதற்கு சிறந்த உதாரணம். லிவிங்ஸ்டானின் சேட்டைகள் அவ்வளவு கொடூரமாக இருக்கும். படம் வெளிவரவே இல்லை.

நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா..
(படம்: தாயின் மணிக்கொடி இசை: வித்யாசாகர்...)
இதுவும் பிரபலமான பாடல்தான். படத்தின் கதாநாயகி நிவேதா படம் வெளி வரும் முன்னரே மரணம் அடைந்தார். மற்ற எல்லாமே துள்ளலிசைப் பாடல்கள். எல்லா பாட்டுமே நன்றாக இருக்கும்.

இது போல் இன்னும் சில பாடல்கள் உள்ளன. முடிந்தால் அதையும் எழுதுகிறேன். இதே போல் உங்களுக்குத் தெரிந்த நல்ல பாடல்கள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

63 comments:

முரளிகண்ணன் said...

நல்ல கலக்கலான தொகுப்பு.

shabi said...

மாப்பிள்ளை வந்தாச்சு படதில் அருகமனி கருகமனி-இளயராஜா இசை/

Anonymous said...

நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா..
//
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் தலைவா. அசத்தல் பதிவு. தொடருங்கள்.

ஹேமா said...

ஓ...இப்படித் தேடினால் நிறையவே பாடல்கள் மறைந்து கிடக்கிறது.
உடனடியாக ஞாபகம் வருகுதில்லை.
சில பாடல்கள் கேட்டாலும் என்ன படம் என்று தெரிவதில்லை.நான் கூடுதலாக சூரியன் Fm சென்னை தான் கேட்பேன்.அதில் இரவில் தொகுப்பாளர்கள் நல்ல நல்ல பலகாலங்கள் கேட்காத பாடல்களைப் போடுவார்கள்.அந்தச் சமயங்களில் இப்படிப்பட்ட பாடல்கள் நிறைய நான் கேட்டிருக்கிறேன்.

ஆதவா said...

அப்ப தல யோட பாடல்கள் ஒண்ணுகூட இல்லை.....

நீங்க சொன்னபாடல்களில் நான் ரசித்தவை

1. வினோதனே.. வினோதனே.. விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்..

2. வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா..

பெரும்பாலும் தமிழ் பாடல்கள் பார்ப்பது இல்லை.... மனதைத் தொடும் பாடலாக இருந்தால் மட்டுமே ரசிப்பதுண்டு!!!

இப்போது முணுமுணுத்துக் கொண்டிருப்பது : My Life Would Suck Without You (Kelly Clarkson)

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிக்கண்ணன் SAID..
நல்ல கலக்கலான தொகுப்பு.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//shabi said..
மாப்பிள்ளை வந்தாச்சு படதில் அருகமனி கருகமனி-இளயராஜா இசை//

இந்த பாடல் நான் கேட்டதில்லை நண்பா.. கேட்க முயற்சிக்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said..
அசத்தல் பதிவு. தொடருங்கள்.//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said..
ஓ...இப்படித் தேடினால் நிறையவே பாடல்கள் மறைந்து கிடக்கிறது.//

நன்றி தோழி.. ஏதாவது பாட்டு உங்களுக்கு பிடிச்சு அவ்வளவா ஹிட் ஆகாம இருந்தா அதப்பத்தி எழுதுங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
அப்ப தல யோட பாடல்கள் ஒண்ணுகூட இல்லை.....//

வாங்க நண்பா.. தல பாட்டு நல்லா இல்லன்னாலும் சூப்பர் ஹிட் ஆகிடும்ல.. ஹி ஹி ஹி.. இன்னும் கொஞ்சம் பாட்டு இருக்கு நண்பா.. அடுத்து எழுதுறேன்..

ஆ.ஞானசேகரன் said...

பாட்டுல ஆராட்சியே நடக்குது

அகநாழிகை said...

கார்த்தி, கலக்கறீங்க... நல்ல பதிவு. என்னை மிகவும் கவர்ந்த சில பாடல்கள்...
1.அழகிய கண்ணே... (உதிரிப்பூக்கள்)
2.அவள் ஒரு மேனகை...
3.ஆகாயம் மேலே பாதாளம் கீழே
4.வெச்ச பார்வை தீராதடி...
5.உன்னிடம் மயங்குகிறேன்
6.செந்தாழம்பூவில் (முள்ளும் மலரும்)
7.அடி ஆடு பூங்கொடியே... (காளி)
8.பொன்னான மேனி (மீண்டும் கோகிலா)
9.சின்னஞ்சிறு வயதில்...
10.முக்குத்திப்பூ மேலே...
11.கண்ணன் ஒரு கைக்குழந்தை...
12.என் இனிய பொன் நிலாவே...
13.அதிசய ராகம்...
14.தாழம்பூவே வாசம் வீசு...
15.பிள்ளை நிலா...
சொல்லித்தீராத இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அகநாழிகை said...

கார்த்தி... மறுபடி நான்...
நல்ல பாட்டு ஒன்று, ‘ஒரு கணம் ஒரு யுகமாக....‘ (நாடோடி தென்றல்)

ராம்.CM said...

எனக்கு பாடல் கேட்கும் அளவுக்கு நேரம் கிடைப்பதில்லை! நீங்கள் சொன்னவுடன் திடீரென ஞாபகம் வந்த விஜயகாந்த் படப்பாடல்... பாத்துப்போ...மாமா பாத்துப்போ.... [படம் பெயர் தெரியவில்லை]. தங்கள் பதிவு நல்லாயிருந்தது! வாழ்த்துக்கள்!

குடந்தை அன்புமணி said...

//நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா.. //
நீங்கள் கொடுத்திருக்கும் பாடலில் இதுவொன்றுதான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அடுத்து 'நவரச நாயகன்' கார்த்திக் நடித்த 'அரிச்சந்திரா' என்ற படத்தில் 'நாடோடி பாட்டு'... என்ற பாடல் அருமையான காதலைச் சொல்லும்!

வினோத் கெளதம் said...

நண்பா அருமையான தொகுப்பு.

எனக்கு ரொம்ப பிடித்த பாடல் "இது கண்கள் சொல்லும் காதல் செய்தி"..
ஆனால் படம் வெளி வரவில்லை.

வினோதன் பாடலும் தான்.

அலை படத்தில் "இவன் தான இவன் தான " என்று ஒரு பாடல் நன்றாக இருக்கும்.

மகேஷ் பத்தி கேட்டிங்கள.

சொல்லரசன் said...

பிலிம்நியூஸ் ஆனந்தனையை மிஞ்சிட்டிங்க "தல"

Unknown said...

//நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா..
//‘ஒரு கணம் ஒரு யுகமாக....‘ (நாடோடி தென்றல்)
Beautiful songs

எபி குஞ்சுமோன் நடித்த கோடீஸ்வரன் பட பாடல்களும் சூப்பர். படம் வெளிவரவே இல்ல.
The best one is தொலைவினிலே வானம்

Raju said...

வழக்கம் போல சூப்பரு ஸார்....

ஆளவந்தான் said...

//
நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா..
(படம்: தாயின் மணிக்கொடி இசை: வித்யாசாகர்...)
இதுவும் பிரபலமான பாடல்தான். படத்தின் கதாநாயகி நிவேதா படம் வெளி வரும் முன்னரே மரணம் அடைந்தார். மற்ற எல்லாமே துள்ளலிசைப் பாடல்கள். எல்லா பாட்டுமே நன்றாக இருக்கும்.
//

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு :))

நல்ல பதிவு கா.பா.

யாத்ரீகன் said...

பாஸூ... அப்படியே அந்த அந்த பாட்டுக்கும் லிங்க் குடுங்களேன்... சில பாட்டு எங்கயும் கெடைக்கல..

*இயற்கை ராஜி* said...

நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா..///

keeturukken..romba naalla paattu

Anonymous said...

நண்பரே .... இந்த பாடலை விட்டுவிட்டீர்களே ... பாடல்:"எந்தன் உயிரே எந்தன் உயிரே" படம்: "உன்னருகே நானிருந்தால்".. நேரம் இருந்தால் கேட்டுப்பாருங்கள்.அருமையாக இருக்கும்.

Anonymous said...

என்ன தல பாடலோடை லிங்குகளையும் தந்திருந்தால் என்னை மாதிரி பாவப்பட்டவங்களுக்கு பிரியோசனமாக போகும்!
சில பாடல்களை இதுவரை நான் கேட்கவேயில்லை!

மேவி... said...

sema colourfulyana thogppu saga...
antha enma tholi patu enakku romba pudikkum

மேவி... said...

"ஹேமா கூறியது...
ஓ...இப்படித் தேடினால் நிறையவே பாடல்கள் மறைந்து கிடக்கிறது.
உடனடியாக ஞாபகம் வருகுதில்லை.
சில பாடல்கள் கேட்டாலும் என்ன படம் என்று தெரிவதில்லை.நான் கூடுதலாக சூரியன் Fm சென்னை தான் கேட்பேன்.அதில் இரவில் தொகுப்பாளர்கள் நல்ல நல்ல பலகாலங்கள் கேட்காத பாடல்களைப் போடுவார்கள்.அந்தச் சமயங்களில் இப்படிப்பட்ட பாடல்கள் நிறைய நான் கேட்டிருக்கிறேன்."

hema nanum suryan fm matrum big fm thaan night time la kettpen....
arumaiyana padalgal varum..
ketkka inimaiya irukkum

மேவி... said...

me th 27

மேவி... said...

mudal mariyathai pada pattai eravu nerathila ketta appadiya sorgam poi varalam

சம்பத் said...

பனிக்காற்றே பனிக்காற்றே from ரன் ....கேட்க நன்றாக .இருக்கும் ...காசெட்டில் இடம்பெற்று படத்தில் இடம் பெறாத பாடல்.

என்.இனியவன் said...

//நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா.. //

இது எனக்கும் பிடித்த பாடல்.

மற்றும்
1. ராகங்கள் பதினாறு உருவான வரலாறு.
2. பூங்கதவே தாழ் திறவாய் ( நிழல்கள்)
3. மலரே மௌனமா (சுபாஷ்)
4. மலைக்காற்று வந்து தமிழ் பேசுமா( வேதம்)
5. எனதுயிரே எனதுயிரே (பீமா)
6. சங்கத்தமிழ் கவியே (மனதில் உறுதி வேண்டும்)
7. கல்யாணத்தேன் நிலா (மௌனம் சம்மதம்)
8. இதழில் கதை எழுதும் (உன்னால் முடியும் தம்பி)

ஹேமா said...

கார்த்திகைப் பாண்டியன்,நேற்று நீங்கள் பழைய பாடல்களை ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.மனதைக் குடைந்தபடி சில பாடல்கள் முழுமையான் வரிகள் தெரியாமல்.
பழைய பாடல்களில்...
1)கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா கண்மணி சுகமா சொல் என்றேன்....2)உனக்காகவா நான் எனக்காகவா....உன்னைக் காண வா உன்னில் என்னை காண வா...
3)நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்.சேர்ந்து வரும் ............தேவி நடமாடுகிறாள்....

இதன் பிறகு ஜேசுதாஸ்-ஜானகி- சுசீலா பாடல்கள் அமுதம்.அதில் எப்போதோ ஒரு பாடல் ஞாபகம்.
நீ ஒரு மகராணி...நான் ஒரு கலைஞானி...இப்படித் தொடங்கும்.
அடுத்த வரிகளோ இசையோ ஞாபகம் இல்லை.

இன்னும் பாலமுரளி கிருஷ்ணாவின் சில பாடல்கள் மனதில் நிற்கிறது.
வெளியே வருகுதில்லை.கொஞ்சம் இடைக்காலப் பாடல்களைச் சிலசமயங்களில் கேட்கக் கூடியதாகவோ அல்லது இணயத்திலாவது எடுத்துக் கொள்ள முடியும்.பழைய பாடல்களை....?

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said..
பாட்டுல ஆராட்சியே நடக்குது//

ஏதோ நம்ம லெவலுக்கு நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை//
நன்றி நண்பரே.. இவை எல்லாம் மக்களுக்கு நன்றாக தெரிந்த பாடல்கள்.. நான் அவ்வளவாக ஹிட்டாகாத பாடல்களை பற்றி சொல்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம் said..
நீங்கள் சொன்னவுடன் திடீரென ஞாபகம் வந்த விஜயகாந்த் படப்பாடல்... பாத்துப்போ...மாமா பாத்துப்போ.... [படம் பெயர் தெரியவில்லை]. தங்கள் பதிவு நல்லாயிருந்தது! வாழ்த்துக்கள்!//

ராம்.. நீங்கள் சொல்லும் படம் "நெறஞ்ச மனசு".. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தைஅன்புமணி said..
நீங்கள் கொடுத்திருக்கும் பாடலில் இதுவொன்றுதான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அடுத்து 'நவரச நாயகன்' கார்த்திக் நடித்த 'அரிச்சந்திரா' என்ற படத்தில் 'நாடோடி பாட்டு'... என்ற பாடல் அருமையான காதலைச் சொல்லும்!//

நான் கொடுத்துள்ள மற்ற பாடல்களை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் நண்பா.. கேட்டுப்பாருங்கள்.. நன்றாக இருப்பவை..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
நண்பா அருமையான தொகுப்பு.
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் "இது கண்கள் சொல்லும் காதல் செய்தி"..
ஆனால் படம் வெளி வரவில்லை.
வினோதன் பாடலும் தான்.அலை படத்தில் "இவன் தான இவன் தான " என்று ஒரு பாடல் நன்றாக இருக்கும்.
மகேஷ் பத்தி கேட்டிங்கள.//

நன்றி நண்பா.. மகேஷ் பற்றி இன்னும் விசாரிக்க வில்லை.. இரண்டொரு நாளில் கேட்டு விடுகிறேன்.. தாமதத்திற்கு மன்னிக்கவும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
பிலிம்நியூஸ் ஆனந்தனையை மிஞ்சிட்டிங்க "தல"//

இதெல்லாம் ரொம்ப ஓவரு.. கொஞ்சமா ஓட்டுங்கப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//kichaa said..
எபி குஞ்சுமோன் நடித்த கோடீஸ்வரன் பட பாடல்களும் சூப்பர். படம் வெளிவரவே இல்ல.
The best one is தொலைவினிலே வானம்//

எனக்கு அந்தப்படத்தில் நான் கீழ் நாட்டுக் கிளியோபாட்ரா பாட்டு ரொம்ப பிடிக்கும் நண்பா.. வருகைக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்....
வழக்கம் போல சூப்பரு ஸார்....//

சார் எல்லாம் வேண்டாம் தோழா..நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆளவந்தான் said..
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு :))
நல்ல பதிவு கா.பா.//

ரொம்ப நன்றி தோழா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//யாத்ரீகன் said..
பாஸூ... அப்படியே அந்த அந்த பாட்டுக்கும் லிங்க் குடுங்களேன்... சில பாட்டு எங்கயும் கெடைக்கல..//

நான் இந்தப்பாட்டு எல்லாம கேசட்ல கேட்டதுதான் நண்பா.. முடிஞ்சா லிங்க் கிடைக்குதான்னு பாக்குறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இயற்கை said..
keeturukken..romba naalla paattu//

வருகைக்கு நன்றி தோழி..

ஆண்ட்ரு சுபாசு said...

மௌனமே பார்வையாய் பேசிகொண்டோம் ....."அன்பே சிவம்" படத்திற்காக இசையமைக்க பெற்று படத்தில் இடம் பெறாத பாடல் ..இயன்றால் கேட்டுப்பார்க்கவும் ..நான் மிகவும் விரும்பும் பாடல் இது ..இதுபோல படத்தில் இடம்பெறாமல் போன நல்ல பாடல்கள் பல உண்டு ..அதை வைத்து கூட ஒரு பதிவு இடலாம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//சுபாங்கி கூறியது...
நண்பரே .... இந்த பாடலை விட்டுவிட்டீர்களே ..பாடல்:"எந்தன் உயிரே எந்தன் உயிரே" படம்: "உன்னருகே நானிருந்தால்".. நேரம் இருந்தால் கேட்டுப் பாருங்கள்.அருமையாக இருக்கும்.//

நன்றி தோழி.. அது எனக்கும் பிடித்த பாடல்தான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
என்ன தல பாடலோடை லிங்குகளையும் தந்திருந்தால் என்னை மாதிரி பாவப்பட்டவங்களுக்கு பிரியோசனமாக போகும்!
சில பாடல்களை இதுவரை நான் கேட்கவேயில்லை!//

நான் இந்தப்பாட்டு எல்லாம கேசட்ல கேட்டதுதான் நண்பா.. முடிஞ்சா லிங்க் கிடைக்குதான்னு பாக்குறேன்..
ரிப்பீட்டு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
sema colourfulyana thogppu saga...
antha enma tholi patu enakku romba pudikkum//

ஆகா.. அந்த பாட்டு எனக்கு தெரியும்னு நீங்க சொன்னதே ரொம்ப சந்தோஷம் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said..
பனிக்காற்றே பனிக்காற்றே from ரன் ....கேட்க நன்றாக இருக்கும் ...காசெட்டில் இடம்பெற்று படத்தில் இடம் பெறாத பாடல்.//

சூப்பர் பாட்டு நண்பா.. பார்த்தீங்களா.. தானா எத்தன பாட்டு ஞாபகத்துக்கு வருது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//என். இனியவன் //

வருகைக்கு நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said....
இன்னும் பாலமுரளி கிருஷ்ணாவின் சில பாடல்கள் மனதில் நிற்கிறது.
வெளியே வருகுதில்லை.கொஞ்சம் இடைக்காலப் பாடல்களைச் சிலசமயங்களில் கேட்கக் கூடியதாகவோ அல்லது இணயத்திலாவது எடுத்துக் கொள்ள முடியும்.பழைய பாடல்களை....?//

இந்த பாடல்களை கேட்க முயல்கிறேன் தோழி.. புது லிஸ்டாக உள்ளது.. உங்களை இவ்வளவு தூரம் பாடல்களை தேட வைத்து விட்டேன் என்று சந்தோஷமாக உள்ளது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆண்ட்ரு சுபாசு said..
மௌனமே பார்வையாய் பேசிகொண்டோம் ....."அன்பே சிவம்" படத்திற்காக இசையமைக்க பெற்று படத்தில் இடம் பெறாத பாடல் ..இயன்றால் கேட்டுப்பார்க்கவும் ..நான் மிகவும் விரும்பும் பாடல் இது ..இதுபோல படத்தில் இடம்பெறாமல் போன நல்ல பாடல்கள் பல உண்டு ..அதை வைத்து கூட ஒரு பதிவு இடலாம்.//

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.. நீங்கள் சொன்ன மாதிரி கூட பதிவு இடலாம்.. முயற்சி செய்கிறேன்..

குமரை நிலாவன் said...

தல படம்
உயிரிலே கலந்தது என்ற படம்
ஒரு பாட்டு இருக்கு.
அன்பே அன்பே
இந்த பாட்டு அருமையாக இருக்கும்

அத்திரி said...

//"இது கண்கள் சொல்லும் காதல் செய்தி"..//


இந்த பாட்டு எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்ச பாட்டு................

நல்ல தொகுப்பு நண்பா

நசரேயன் said...

நல்ல தொகுப்பு

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன் said..
தல படம் உயிரிலே கலந்தது என்ற படம் ஒரு பாட்டு இருக்கு.
அன்பே அன்பே இந்த பாட்டு அருமையாக இருக்கும்//

ஆமா நண்பா.. நல்ல பாட்டு.. எனக்கு ரொம்ப பிடிக்கும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
இந்த பாட்டு எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்ச பாட்டு................
நல்ல தொகுப்பு நண்பா//

வாங்க நண்பா.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன்..//

வருகைக்கு நன்றி நண்பரே..

புல்லட் said...

ம்ம்! நல்லதொரு கலா ரசிகரோ? நல்லாஞாபகம் வச்சு எழுதியிருப்பதிலிருந்தே தெரியுது... வாழ்க உங்கள் இசையறிவு... வளர்க உங்கள் எழுத்தறிவு...
:)

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி புல்லட்.. சும்மா ஞாபகத்துல இருந்த பாட்டெல்லாம் எழுதுனேன்...

Anbu said...

நல்ல பதிவு அண்ணா!!

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி அன்பு..

Anonymous said...

Song: Enna enna naan solla
Singer: Swarnalatha

Movie: Amudhey

Cast: Jai Akash, Madhumitha, Uma
Music Director: Sunil S
Director: Ezhil
Producer: Aim Production
Lyrics:
Year: 2005

Anonymous said...

Song: Enna enna naan solla
Singer: Swarnalatha

Movie: Amudhey

Cast: Jai Akash, Madhumitha, Uma
Music Director: Sunil S
Director: Ezhil
Producer: Aim Production
Lyrics:
Year: 2005

தனிமரம் said...

நல்லா அசத்திரிங்க நண்பா எனக்குப்பிடித்தது கோடிஸ்வரன் படத்தில் நான் மேல்நாட்டு கிளியோபார்ரா கிட்டவந்துபழகு அருமையானபாடல் படம் வரவில்லை சங்கரால் ஆண்டியான குஞ்சுமேனன்படம்.கோகுலம் படப்பாடல் எல்லாம் சிறப்பானது அதில் சித்திராபாடும் அந்தவாணம் எந்தன் கையில் வந்து சேரும்  இதமானது.ராசையா படத்தில் காதல்வானிலே நல்ல பாடல் இளையராஜாவின் இசையை சீரலித்த படம்.சூரிய பார்வையில் கதவை திறக்கும் காற்றில்லே ரோஜாவின் வாசம் என்ன "" ஆங்கிலப்படத்தை கொப்பியடித்த அர்ஜீன்படம்.ஞானப்பழம் படத்தில் யாரும் இல்லாத தீவு வேண்டும் அழகான கற்பனை சொதப்பல் படம் இன்னும் அதிகமுண்டு மீண்டும் வருகிறேன்