May 7, 2009

மே 13 - திருச்சியில் பதிவர் சந்திப்பு..!!!

பதிவுலகத்துல எழுதறதால கிடைக்கக் கூடிய சில நன்மைகள் என்னன்னா..

1. நம்மோட எண்ணங்களை நாலு பேரு கிட்ட பகிந்துக்க முடியுது..

2. நீங்க எழுதுறது நல்லா இருக்குன்னு மக்கள் பாரட்டுரப்போ கிடைக்குற சந்தோஷம்..

3. புதிய நண்பர்கள் வட்டம்.. எந்த எந்த ஊர்லையோ இருந்து நண்பர்கள் கிடைக்குறது எவ்வளவு நல்ல விஷயம்..

அதனாலத்தான் பதிவர் சந்திப்புகள் நடத்தி நட்பை இன்னும் வலுப்படுத்திக்கிறோம்.. இதை பத்தி திருக்குறள் என்ன சொல்லுதுன்னா..

"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே பதிவர் தொழில்"

(ஹி ஹி ஹி.. வள்ளுவர் நம்மளை மன்னிப்பாராக..)
எதுக்காக இவ்வளவு பில்டப்புன்னா..

டும் டும் டும் டும்..

இதனால சகல பதிவுலக மக்களுக்கும் சொல்லிக்கிறது என்னன்னா..

வர மே மாசம் பதிமூணாம் தேதி.. நிறைஞ்ச புதன்கிழமை..

நம்ம மலைக்கோட்டை நகரமான திருச்சில..

பதிவர் சந்திப்பு நடக்கப் போகுது சாமியோவ்..

அதனால..
ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாகோ..

அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாகோ..

துபாய்ல இருக்க மச்சான் வாராகோ..

அப்படின்னு எல்லாம் கதை சொல்லாம நம்ப பதிவுலக மக்கள் எல்லாம் வந்து கலந்துக்கனும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிறோம் சாமியோவ்....
என்னது? சந்திப்புக்கு யார் யாரு வராங்களா?

சிங்கப்பூர்ல இருந்து நம்ம நண்பர் ஆ. ஞானசேகரன் வாராரு..

ஆஸ்திரேலியாவுல இருந்து தமிழ் மதுரம் கமல் வாராரு..

காரைக்குடியில இருந்து நம்ம டாக்டர் ஐயா தேவன்மாயம் வாராரு..

திருப்பூர்ல இருந்து நண்பர்கள் ஆதவா மற்றும் சொல்லரசன் வாராங்க..

மதுராந்தகத்துல இருந்து அண்ணன் அகநாழிகை வாராரு..

சிவகாசில இருந்து தம்பி அன்புமதி வராரு..
இன்னும் நம் பதிவுலக உறவினர்கள் எல்லாம் வராங்க..
அதனால நீங்களும் வந்து நிகழ்ச்சிய சிறப்பிச்சு தரணும்னு வேண்டிக்கிறோம்.. காலைல ஒன்பது மணில இருந்து திருச்சி ரயில் நிலையம் கிட்டக்க வந்து ஒரு குரல் கொடுத்திங்கன்னா உங்களை பிக்கப் பண்ணிக்கிறதுக்கு ஏற்பாடுகள் செஞ்சாச்சு சாமியோவ்..
டும் டும் டும் டும்..!!!
கண்டிப்பா வாங்க.. நிறைய புது நண்பர்களோட அறிமுகத்துக்காக ஆவலா இருக்கோம்.

தொடர்புக்கு:

மா.கார்த்திகைப் பாண்டியன் -- 98421 71138

"அகநாழிகை" பொன். வாசுதேவன் -- 99945 41010
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

71 comments:

வினோத் கெளதம் said...

பதிவர் சீரும் சிறப்புமாய் மங்களகரமாய் நடக்க வாழ்த்துக்கள்..

வினோத் கெளதம் said...

சந்திப்பு மிஸ் ஆயிடுச்சு சேத்து படிங்க..

லக்கிலுக் said...

பதிவர் சந்திப்பு பட்டையைக் கிளப்ப வாழ்த்துக்கள்.

Suresh said...

மச்சான் கலக்குங்க நானும் வரலாம் என்று ஆசை ஆனா காரணத்தை உன்னிடம் சொல்லிட்டேன் ;)

வருத்தமே எங்க ஊருல நடக்குது என்னால வர முடியாம போச்சேனு தான்

நல்லா நடத்துங்க வாழ்த்துகள்

சுந்தர் said...

வாழ்த்துகள் அண்ணே, நம்ம ஊருல எப்போஅண்ணே பதிவர் சந்திப்பு.

Suresh said...

கண்டிப்பா வர முயற்சி செய்கிறேன்

தீப்பெட்டி said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்...
ஆமா அப்போ யாரும் ஓட்டு போடுறதா இல்லையா...
தேர்தல் புறக்கணிப்பா(-;

சென்ஷி said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!

என்னால் மே 13 வர இயலாது. ஆனால் திருச்சி வரும் சமயம் பதிவர்களை சந்திக்க இயலுமென்றால் எனக்கு தங்களின் தொலைபேசி எண்ணை எனது மின்மடலிற்கு தனிமடலில் அனுப்பி வைக்கவும்.

senshe.indian@gmail.com

ஆ.சுதா said...

எனக்கும் நிரம்ப ஆசைதான் எல்லோரையும் சந்திக்கனும்னு, ஆனா வேலை நாட்களில் என்னால் விடுப்பெடுத்து வர முடியாது!! ரொம்ப வருத்தப்படுரேன்.
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். (ஏக்கத்தோடு)

தேன் தமிழ் பாலா said...

ரொம்ப சந்தோஷம். ஜனநாயக கடமை ஆற்றும் தினத்தில் வைத்திருக்கிறீர்களே?
வேறு ஒரு நாளில் வைக்கக்கூடாதா நண்பரே
சென்னையிலும் இது போன்ற கூட்டத்தை நடத்தினால் நன்றாக இருக்குமே

ஸ்ரீ.... said...

பதிவர் சந்திப்பு சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள். அடிக்கடி நடத்துங்கள். நேரம் அனுமதிக்கும் போது நிச்சயம் கலந்து கொள்கிறேன்.

ஸ்ரீ....

முரளிகண்ணன் said...

பதிவர் சந்திப்புக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

Raju said...

ஆரம்பிச்சுட்டாங்கப்பா...!
உலக வரலாற்றில் முதன்முறையாக திருச்சியில் பதிவர் சந்திப்பு..!
சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்..!
ஒருங்கினைத்த கார்த்திகை பாண்டியன் மற்றும் வாசுதேவனுக்கு நன்றிகள் பல..!

நையாண்டி நைனா said...

/*1. நம்மோட எண்ணங்களை நாலு பேரு கிட்ட பகிந்துக்க முடியுது..*/

வீட்லயோ உள்ளூர்லையோ சொன்னா அடி விழும், அதனாலேதான் .....

/*2. நீங்க எழுதுறது நல்லா இருக்குன்னு மக்கள் பாரட்டுரப்போ கிடைக்குற சந்தோஷம்..*/

இந்த அப்புராணி பய என்ன சொன்னாலும் நம்புராண்டா.... (இருக்காதே பின்னே, அவன் தமிழனாச்சே...)

/*3. புதிய நண்பர்கள் வட்டம்.. எந்த எந்த ஊர்லையோ இருந்து நண்பர்கள் கிடைக்குறது எவ்வளவு நல்ல விஷயம்.. */
ஆகா "பல ஊரு தண்ணி"ய பாக்குறதுக்கு இப்படி ஒரு பில்டப்பா???

சரி... சரி... நண்பா அப்படி முறைக்காதே...

திருச்சி என்னை வளர்த்த மண்ணு... எனக்கும் வருவதற்கு ஆசைதான்... இருப்பினும் என்னோட நண்பர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா said...

மாப்பி டக்கு நல்ல கீறியா மாமே...

Raju said...

\\மாப்பி டக்கு நல்ல கீறியா மாமே...\\

நல்லக்கீறேன் நைனா..!

sakthi said...

nalla vishayam

pathivar santhipu nandrai nadaka

valthukkal

குடந்தை அன்புமணி said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!

Suresh said...

@ சென்ஷி

நான் உங்களுக்கு மெயில் அனுப்பிடேன் கண்டிப்பா மீட் பண்ணூவோம்

பீர் | Peer said...

வாழ்த்துக்கள்,

நம்ம மேட்டர் என்னாச்சு?

வினோத் கெளதம் said...

dustan//லக்கிலுக் said...
பதிவர் சந்திப்பு பட்டையைக் கிளப்ப வாழ்த்துக்கள்.

May 7, 2009 11:25 AM//


// Suresh said...
மச்சான் கலக்குங்க நானும் வரலாம் என்று ஆசை ஆனா காரணத்தை உன்னிடம் சொல்லிட்டேன் ;)

வருத்தமே எங்க ஊருல நடக்குது என்னால வர முடியாம போச்சேனு தான்

நல்லா நடத்துங்க வாழ்த்துகள்

May 7, 2009 11:27 AM//

என்ன இது இப்படி நெருக்கமாக அடுத்து அடுத்து வந்து உள்ளிர்கள்..
நீங்கள் இருவரும் எதிரிகள் என்பதை மனதில் வைத்து கொள்ளவும்..

Anonymous said...

”என்ன இது இப்படி நெருக்கமாக அடுத்து அடுத்து வந்து உள்ளிர்கள்..
நீங்கள் இருவரும் எதிரிகள் என்பதை மனதில் வைத்து கொள்ளவும்..’’

இன்னா காமெடிப்பா இது. லக்கிக்கு வெத்துபய சுரேஷு எதிரியா? லக்கிலுக்குக்கு எதிரியா இருக்க கூட ஒரு தகுதி இருக்கணும். கண்ட கழிசடை பயலுவ எல்லாம் எதிரி ஆயிட முடியாது.

நீங்கள்லாம் நாய் மாதிரி அந்தாளை பாத்து குரைக்கிறீங்களே திரும்பி பார்த்து சட்டையாவது பண்ணுறானாய்யா. அப்புறம் எதுக்கு மானம் கெட்டு போயி இன்னும் கொறைச்சிக்கிட்டு இருக்கீங்க.

முடிஞ்சா அந்த அளு மாதிரி வளருங்க. இல்லேன்னா மூடிக்கிட்டு சும்மா இருங்க.

வினோத் கெளதம் said...

//முடிஞ்சா அந்த அளு மாதிரி வளருங்க. இல்லேன்னா மூடிக்கிட்டு சும்மா இருங்க.//


ரொம்ப நன்றிங்க அனானி..
அவர் என்ன Height அப்படின்னு சொன்னின்கன கொஞ்சம் அவரு மாதிரி வளர முயற்சி செய்வேன்..

மத்தபடி அது சும்மா தமாசுக்கு போட்ட பின்னுட்டம் யாரையும் புன்ப்படுதும் நோக்கத்தில் அல்ல..

புதியவன் said...

பதிவர் சந்திப்பு மகிழ்ச்சியாய் அமைய வாழ்த்துக்கள்
சந்திப்பு முடிந்ததும் அதைப் பற்றி பதிவிடுங்கள்
நாங்களும் மகிழ்கிறோம்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham..
லக்கிலுக்..//

நன்றி நண்பர்களே

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said...
மச்சான் கலக்குங்க நானும் வரலாம் என்று ஆசை ஆனா காரணத்தை உன்னிடம் சொல்லிட்டேன் ;) //

பரவா இல்லை மாப்பு.. அடுத்த தடவை பார்த்துக்குடலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//sundar said...
வாழ்த்துகள் அண்ணே, நம்ம ஊருல எப்போஅண்ணே பதிவர் சந்திப்பு.//

வாங்க நண்பா.. கூடிய சீக்கிரம் ஏற்பாடு பண்ணிடலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said...
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்...
ஆமா அப்போ யாரும் ஓட்டு போடுறதா இல்லையா...
தேர்தல் புறக்கணிப்பா(-;//

கனத்த மனதோடு.. ஆமா நண்பா

உமா said...

பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். [உங்களை மாதிரி நானெல்லாம் சட்டென்று வெளியில் கிளம்பி விடமுடியாததால் சற்றே பொறாமையுடன் ]

Prabhu said...

அது என்ன திருச்சில..... அங்க என்ன ஸ்பெஷல்.... அட்லீஸ்ட் 49'o' formஆவது போடுங்க பாஸ்....

குமரை நிலாவன் said...

பதிவர் சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள்

(நிறைய ஏக்கத்தோடு)

குமரை நிலாவன் said...

நையாண்டி நைனா செளக்கியமா இருக்கீயளா

கார்த்திகைப் பாண்டியன் said...

//சென்ஷி said...
பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!
என்னால் மே 13 வர இயலாது. ஆனால் திருச்சி வரும் சமயம் பதிவர்களை சந்திக்க இயலுமென்றால் எனக்கு தங்களின் தொலைபேசி எண்ணை எனது மின்மடலிற்கு தனிமடலில் அனுப்பி வைக்கவும்.
senshe.indian@gmail.com//

ரொம்ப நன்றிங்க.. கண்டிப்பா மெயில் அனுப்புறேன்.. :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
எனக்கும் நிரம்ப ஆசைதான் எல்லோரையும் சந்திக்கனும்னு, ஆனா வேலை நாட்களில் என்னால் விடுப்பெடுத்து வர முடியாது!! ரொம்ப வருத்தப்படுரேன்.
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். (ஏக்கத்தோடு)//

கவலை வேண்டாம் நண்பா.. கூடிய சீக்கிரம் உங்களை சந்திக்க வழி செய்து விடலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேன் தமிழ் பாலா said...
ரொம்ப சந்தோஷம். ஜனநாயக கடமை ஆற்றும் தினத்தில் வைத்திருக்கிறீர்களே?
வேறு ஒரு நாளில் வைக்கக்கூடாதா நண்பரே..சென்னையிலும் இது போன்ற கூட்டத்தை நடத்தினால் நன்றாக இருக்குமே//

சங்கடத்தோடு சொல்கிறேன்.. இந்த தடவை கடமை ஆற்ற வில்லை நண்பரே..அப்புறம்.. உங்கள் சென்னைல தானப்பா அடிக்கடி சந்திப்பு நடக்குது.. விசாரிச்சு பாருங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஸ்ரீ....
முரளிகண்ணன் said...

பதிவர் சந்திப்புக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி தோழர்களே.. முரளி.. கூடிய சீக்கிரம் உங்களை நம்ம ஊரில் சந்திக்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
திருச்சி என்னை வளர்த்த மண்ணு... எனக்கும் வருவதற்கு ஆசைதான்... இருப்பினும் என்னோட நண்பர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்.//

சீக்கிரம் ஊருப்பக்கம் வாங்கப்பா.. ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்....... said...
ஆரம்பிச்சுட்டாங்கப்பா...!
உலக வரலாற்றில் முதன்முறையாக திருச்சியில் பதிவர் சந்திப்பு..!
சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்..!
ஒருங்கினைத்த கார்த்திகை பாண்டியன் மற்றும் வாசுதேவனுக்கு நன்றிகள் பல..!//

நன்றி டக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//sakthi said...
nalla vishayam
pathivar santhipu nandrai nadaka
valthukkal//


//குடந்தைஅன்புமணி said...
பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!//

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மக்களே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Chill-Peer said...
வாழ்த்துக்கள்,நம்ம மேட்டர் என்னாச்சு?//

திங்கக்கிழம கன்பார்ம் பண்றேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham..
anonymous..//

நண்பர்களே..நாம எல்லாருமே இணையம் மூலமா ஒண்ணா இருக்கோம்.. நமக்குள்ள எதுக்கு பிரச்சினையும் போட்டியும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சு போய்ட்ட பிரச்சினையே இல்ல.. சுரேஷும் லக்கியும் நண்பர்களா மாறட்டும்னு வேண்டிக்குறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said...
பதிவர் சந்திப்பு மகிழ்ச்சியாய் அமைய வாழ்த்துக்கள்சந்திப்பு முடிந்ததும் அதைப் பற்றி பதிவிடுங்கள்
நாங்களும் மகிழ்கிறோம்...//

கண்டிப்பா நண்பா.. உங்கள் தொடரும் ஊக்கத்துக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//உமா said...
பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். [உங்களை மாதிரி நானெல்லாம் சட்டென்று வெளியில் கிளம்பி விடமுடியாததால் சற்றே பொறாமையுடன் ]//

நீங்க மனசுல வச்சுக்கிட மாட்டேங்கன்னு தெரியும் தோழி.. நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

// pappu said...
அது என்ன திருச்சில..... அங்க என்ன ஸ்பெஷல்.... அட்லீஸ்ட் 49'o' formஆவது போடுங்க பாஸ்....//

சுத்திப்பாக்க பக்கத்துல இடம் இருக்கு.. அத்தோட ரெண்டு மூணு பதிவர்கள் அந்த ஊரு.. அதனால்தான் பப்பு திருச்சி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
பதிவர் சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள்(நிறைய ஏக்கத்தோடு)//

நன்றி நண்பா.. உங்கள் ஏக்கம் சீக்கிரமே தீர்வதாக.. அதாவது நீங்க எங்களைப் பார்க்க ஊருக்கு வாங்கன்னு சொல்றேன் நண்பா

வெற்றி-[க்]-கதிரவன் said...

திருச்சிலன்னு போட்டுகிரிங்க, திருச்சில எடம் எங்கன்னு சொல்லலையே...

நடுரோடுல நிக்கவச்சிபுடாத அப்பு அவளவுதான் சொல்லுவேன் (சிவாஜி மாதரி படிக்கவும் )

சொல்லரசன் said...

//காலைல ஒன்பது மணில இருந்து திருச்சி ரயில் நிலையம் கிட்டக்க வந்து ஒரு குரல் கொடுத்திங்கன்னா உங்களை பிக்கப் பண்ணிக்கிறதுக்கு ஏற்பாடுகள் செஞ்சாச்சு சாமியோவ்..//

யார் பிக்கப் பண்றது?

சொல்லரசன் said...

பித்தன் said...
//திருச்சிலன்னு போட்டுகிரிங்க, திருச்சில எடம் எங்கன்னு சொல்லலையே...

நடுரோடுல நிக்கவச்சிபுடாத அப்பு அவளவுதான் சொல்லுவேன் (சிவாஜி மாதரி படிக்கவும் )//

உச்சி பிள்ளையார் இருக்க என்ன பயம்

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

அத்திரி said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்

வால்பையன் said...

அன்னைக்கு ஓட்டு போடனுமே தல!

Dhavappudhalvan said...

நானும் வரலாந்தான் பாக்குறேன். ஆனா ஓட்டு போடுனுமே!!!!........ ஹி ஹி ஹீ...."""பதிவர் சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள்"""

தேவன் மாயம் said...

திருச்சி சந்திப்புக்கு ரெஸ்பான்ஸ் கடுமையா இருக்கே!!
எல்லோரும் சந்திப்பை வெற்றிகரமாக நடத்த வாழ்த்துக்கள்!!

ஆ.சுதா said...

கார்த்திகைப் பாண்டியன் said...
//ஆ.முத்துராமலிங்கம் said...
எனக்கும் நிரம்ப ஆசைதான் எல்லோரையும் சந்திக்கனும்னு, ஆனா வேலை நாட்களில் என்னால் விடுப்பெடுத்து வர முடியாது!! ரொம்ப வருத்தப்படுரேன்.
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். (ஏக்கத்தோடு)//

கவலை வேண்டாம் நண்பா.. கூடிய சீக்கிரம் உங்களை சந்திக்க வழி செய்து விடலாம்..

--- நன்றி நன்பரே, எதிற்பார்ப்போடு இருக்கின்றேன்.

Anonymous said...

பதிவர் சீரும் சிறப்புமாய் மங்களகரமாய் நடக்க வாழ்த்துக்கள்..

குவாட்டர் கோயிந்தன் said...

*** கடையம் ஆனந்த் said...
பதிவர் சீரும் சிறப்புமாய் மங்களகரமாய் நடக்க வாழ்த்துக்கள்..***

அல்லா பதிவரும், நல்லா தானே நடக்கிறாங்க????

Unknown said...

அன்று தானே எலக்ஷன் நடக்கிறது... உங்களால் எப்படி நடத்த முடிகிறது. ஒரு வேலை திருச்சியில் வேறு நாட்களில் நடக்கிறதோ?

கார்த்திகைப் பாண்டியன் said...

// பித்தன் said...
திருச்சிலன்னு போட்டுகிரிங்க, திருச்சில எடம் எங்கன்னு சொல்லலையே...நடுரோடுல நிக்கவச்சிபுடாத அப்பு அவளவுதான் சொல்லுவேன் (சிவாஜி மாதரி படிக்கவும் )//

கல்லணை போகலாம்னு இருக்கோம்னே.. நம்பி வர மக்களை ரோட்டுல விட்டுற மாடோம்னே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன்.. //

நீங்க இருக்குறப்ப என்னண்ணே பயம்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said...
வாழ்த்துக்கள்//

//அத்திரி said...
பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்//

நன்றி நண்பர்களே

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
அன்னைக்கு ஓட்டு போடனுமே தல!//

நாம இந்த தடவை போடல வால்..:-(

கார்த்திகைப் பாண்டியன் said...

//Dhavappudhalvan said...
நானும் வரலாந்தான் பாக்குறேன். ஆனா ஓட்டு போடுனுமே!!!!........ ஹி ஹி ஹீ...."""பதிவர் சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள்"""//

ரொம்ப நன்றி நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

// thevanmayam said...
திருச்சி சந்திப்புக்கு ரெஸ்பான்ஸ் கடுமையா இருக்கே!!
எல்லோரும் சந்திப்பை வெற்றிகரமாக நடத்த வாழ்த்துக்கள்!!//

என்னது எல்லாருமா? மருத்துவர் ஐயா.. நீங்களும்தான் ஆட்டைல இருக்கீங்க..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said...
பதிவர் சீரும் சிறப்புமாய் மங்களகரமாய் நடக்க வாழ்த்துக்கள்..//

டாங்க்ஸ் பங்காளி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said... நன்றி நன்பரே, எதிற்பார்ப்போடு இருக்கின்றேன்.//

கண்டிப்பா செஞ்சுடலாம் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//குவாட்டர் கோயிந்தன் said...
அல்லா பதிவரும், நல்லா தானே நடக்கிறாங்க????//

ஆகா.. அவரா நீங்க? அது சரி..நீங்க ஏன் நண்பா தலைகீழா நிக்கிறீங்க?

கார்த்திகைப் பாண்டியன் said...

//Krishna Prabhu said...
அன்று தானே எலக்ஷன் நடக்கிறது... உங்களால் எப்படி நடத்த முடிகிறது. ஒரு வேலை திருச்சியில் வேறு நாட்களில் நடக்கிறதோ?//

எல்லாருக்கும் அல்வா கொடுக்கிற இந்த தேர்தலை மதிக்கல நண்பா..:-(

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள் நண்பர்களே.. கலக்குங்க.. கூடுமானவரை ஜனநாயகக் கடமையை ஆற்ற மறவாதீர்கள் :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//" உழவன் " " Uzhavan " said...
வாழ்த்துக்கள் நண்பர்களே.. கலக்குங்க.. கூடுமானவரை ஜனநாயகக் கடமையை ஆற்ற மறவாதீர்கள் :-)//

வாழ்த்துக்கு நன்றி நண்பா... இந்த தடவை யாரும் ஓட்டு போடறதா இல்லை.:-(

Anonymous said...

சொம்ம ஷோக்கா நடக்கனும் பா மீட்டிங்கு! மீட்டிங்கு அப்பால அல்லாம் உண்டுதான வாத்யார :)

-காசிமேடு கபாலி

☀நான் ஆதவன்☀ said...

சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்