May 14, 2009

பட்டையக் கிளப்பிய பதிவர் சந்திப்பு - நன்றி..!!!

திருச்சியில நடந்த பதிவர் சந்திப்புக்கு வந்த மக்கள் எல்லாருக்கும் மொதல்ல நன்றி சொல்லிக்கிறேன். நேற்றைய சந்திப்புக்கு வந்த நண்பர்கள்..
தமிழ்த்துளி - டாக்டர் தேவன்மாயம்...
அம்மா அப்பா - ஆ. ஞானசேகரன்
இளைய கவி - கணேஷ் குமார்
அகநாழிகை - பொன். வாசுதேவன்
அப்புறமா.. நான்..
உடம்பு முடியாமப் போனதால ஆதவாவும், கடைசி நேர பிரச்சினைகளால அன்பும் வர முடியாத சூழ்நிலை.
செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து மணிக்கே நண்பர் வாசுதேவன் திருச்சி வந்து ரூம் எடுத்து தங்கி விட்டார். நான் அவருடன் போய் சேர்ந்து கொண்டபோது நேரம் இரவு பத்து மணியைத் தொட்டு விட்டிருந்தது. வலையுலகில் எனக்கு அறிமுகம் ஆன முதல் நண்பர். அருமையாக கவிதைகள் எழுதக் கூடியவர். பயணங்களை விரும்புபவர். இரவு இரண்டு மணி வரை புத்தகங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அவருடன் கழித்த பொழுதுகள் மிகவும் பயன் உள்ளவையாக இருந்தன.
காலையில் ஒன்பதரை மணி போல முதலில் வந்து சேர்ந்தவர் நண்பர் மெல்போன் கமல். கூடவே அவரது துணைவியாரையும் அழைத்து வந்திருந்தார். மிகச் சமீபத்தில்தான் திருமணம் ஆகி உள்ளது. நேற்று அவருக்கு ரிசப்ஷன். இருந்தும் நண்பர்களைப் பார்க்க வந்தார். எக்கச்சக்கமாக போட்டோ எடுத்துக் கொண்டார். அருமையான இலங்கைத் தமிழில் கதைத்தார். இரண்டு மணி நேரங்கள் இருந்து விட்டு கிளம்பி சென்றார்.
ஒரே ஒரு முறை மட்டுமே டாக்டர் தேவன்மாயம் அவர்களிடம் நான் சாட்டில் பேசி இருந்தேன். அவருடைய நம்பரை வாங்கி நான் முதல் முதல் பேசியதே பதிவர் சந்திப்புக்கு அழைக்கத்தான். எந்த தயக்கமும் இல்லாமல் ஒத்துக் கொண்டார். அவருடைய பின்னூட்டங்கள் மூலமாக அவரை ரொம்ப மூத்தவர் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். ஆனால் உண்மையில் டாக்டர் பார்ப்பதற்கு ரொம்ப இளமையாக இருக்கிறார். துறை சார்ந்து வரும் நபர் பற்றியும் பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கும் நண்பர் ஞானசேகரன் - அநியாயத்துக்கு அமைதி. அவருடைய பதிவுகளை போலவே தெளிவான விஷயங்களை நிறுத்தி நிதானமாக பேசுகிறார். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை உற்று நோக்கி தன்னுடைய பார்வைகளை முன்வைத்தார்.
சொல்லரசன் - என்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமல்லாது என்னுடைய நலம் விரும்பியும் கூட. பின்னூட்டங்கள் இடுவது தொடர்பாக அவருக்கும் வாசுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அதைப் பற்றியும் நேற்று தெளிவாக பேசினார். சமூகம் சார்ந்த தன்னுடைய கவலைகளையும் பகிர்ந்து கொண்டார்.
திருச்சி சந்திப்பு பற்றிய பதிவை படித்து விட்டு இணைந்து கொண்டவர் நண்பர் கணேஷ் குமார். வலையுலகில் ரொம்பப் பெரிய ஆள்..(உடலமைப்பில் மட்டும் அல்ல..) முதல் முறை பார்க்கிறோம் என்கின்றன சங்கோசம் ஏதும் இல்லாமல் ரொம்ப சாவகசாமகப் பேசினார். தான் வளர்ந்த முறை, தன்னுடைய குடும்பம் என எந்த ஒளிவு மறைவும் அவரிடம் இல்லை. பாசாங்கு செய்யாத ஒரு நல்ல மனிதை சந்திக்க முடிந்ததில் ரொம்ப சந்தோஷம்.
எல்லோரோடும் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஓரமாக நின்று காமெடி பண்ணிக்கொண்டு இருந்தேன். எல்லோரும் அறிமுகம் செய்து கொண்ட பிறகு பல விஷயங்களைப் பற்றி பேசினோம். மதிய உணவுக்குப் பின்பு நண்பர் கணேஷ் விடை பெற்றுக் கொண்டார். மீதம் இருந்த ஐந்து பேரும் மாலை நாலரை மணி வரை பேசிக் கொண்டிருந்து விட்டு விடை பெற்றோம். அருமையான அனுபவம். இதை சாத்தியம் ஆக்கிய நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
சந்திப்பின் போது போன் பண்ணி வாழ்த்திய அன்பு உள்ளங்கள் சக்கரை சுரேஷ், குமாரை நிலாவன், நையாண்டி நைனா மற்றும் ஆ.முத்துராமலிங்கம் ஆகிய நண்பர்களுக்கும் நன்றி. (எனக்கு போட்டோ எல்லாம் பதிவுல எப்படி போடுறதுன்னு தெரியாது.. அதனால மற்ற நண்பர்கள் போட்டோ போடுவாங்க.. கொஞ்சம் அஜ்ஜிஸ் பண்ணிக்கோங்க மக்களே.. )
பதிவர் சந்திப்பு புகைப்படங்களைப் பார்க்க இங்கே க்ளிக்குங்க..டாக்டர் தேவாவோட பதிவு..
***************
புதுமணத் தம்பதிகளான கமல் மற்றும் அவரின் துணைவியாருக்கு பதிவுலகின் சார்பாக திருமண நல்வாழ்த்துக்கள்..
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் சொல்லரசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..(அண்ணே..உங்க வயச சொல்லல:-)...)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

94 comments:

வினோத் கெளதம் said...

Kaarthi romba aavala ethirpparten neenga photo podula..

Pathivar santhipu nallapdiyaga nadanthu mudinthatil santhoshamey..

Irunthalum Yaarum vote podula illa..
sar appuramaa pesikiren..:))

குடந்தை அன்புமணி said...

சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி! கலந்துகொள்ள முடியாமல் போனாதற்கு வருத்தமாக இருக்கிறது. அடுத்தமுறை நிச்சயமாக கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன். ஆதவாவுக்கு என்ன ஆச்சு? உடல்நிலை குணமாக பிரார்த்தனைகள

குடந்தை அன்புமணி said...

புதுமணத் தம்பதிகளுக்கு (கமல்) திருமணநாள் வாழ்த்துகள்!

மற்றும் சொல்லரசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

தீப்பெட்டி said...

//புதுமணத் தம்பதிகளான கமல் மற்றும் அவரின் துணைவியாருக்கு பதிவுலகின் சார்பாக திருமண நல்வாழ்த்துக்கள்..
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் சொல்லரசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..//

நானும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதில் உங்களுடன் இணைகிறேன்.

குடந்தை அன்புமணி said...

//போட்டோ எல்லாம் பதிவுல எப்படி போடுறதுன்னு தெரியாது.. அதனால மற்ற நண்பர்கள் போட்டோ போடுவாங்க... //

தெரியாதுன்னு சொல்லீட்டீங்களே... யாராவது சீக்கிரம் போடு்ங்கப்பா...

புதியவன் said...

பதிவர் சந்திப்பு நல்ல பகிர்வு கார்த்திகைப் பாண்டியன்...

ஜெட்லி... said...

உங்கள் பதிவர் சந்திப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

சென்ஷி said...

புதுமணத் தம்பதிகளுக்கு (கமல்) திருமணநாள் வாழ்த்துகள்!

மற்றும் சொல்லரசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக்கியதற்கும் வாழ்த்துக்கள் :)

ஆ.சுதா said...

நண்பா.. போட்டுட்டீங்களா!!!
பதிவ... கலக்கல்.
படிக்க படிக்க சுவாரசியம் மிளிருது,
பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி+மகிழ்ச்சி.

என்னது.. படம் போடதெரியாத!!!
என்ன பாண்டியன் இப்படி ஜகா வாங்கிட்டீங்க.. சரி சரி வாசு சார் படத்தொட பதிவு போடுவாங்க
நாங்க அங்க பாத்துக்கரோம்..!!

ஆ.சுதா said...

புதுமணத் தம்பதிகளுக்கு கமல் அவர்களுக்கும்.
மற்றும் சொல்லரசன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

Rajeswari said...

கல்லணை எப்படி இருந்தது.?

சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கமலுக்கும் அவரது மனைவிக்கும் திருமண வாழ்த்துக்கள்.

சொல்லரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆதவாவிற்கு என்ன ஆச்சு? உடம்பு நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.

Raju said...

வாழ்த்துக்கள் டு சொல்லரசன்..!

Raju said...

புதுமணத் தம்பதிகளுக்கு பிளேட்டடு திருமணநாள் வாழ்த்துகள்!

தேவன் மாயம் said...

என்ன அழகு!! கார்த்திகைப் பாண்டி!!
கார்த்திகைக்கும் பொண்ணு பாக்குறாங்கோ!!!

போட்டோக்கள் பதிவிடப்பட்டதும் பெண் பார்க்கும் படலம் தொடரும்!!

அப்துல்மாலிக் said...

பதிவர் சந்திப்பை சிறப்பாக செய்ததற்கு வாழ்த்துக்கள்

தங்கமீன் said...

கலந்து கொண்ட அனைவருக்கும் "நகை கடை" சார்பா வாழ்த்துக்கள்.

தங்கமீன் said...

புதுமண தம்பதிகளுக்கு "ஒரு காசு மாலை" கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

சுந்தர் said...

//என்ன அழகு!! கார்த்திகைப் பாண்டி!!
கார்த்திகைக்கும் பொண்ணு பாக்குறாங்கோ!!!

போட்டோக்கள் பதிவிடப்பட்டதும் பெண் பார்க்கும் படலம் தொடரும்!!// அப்டின்னா, இன்னம் நீங்க மாட்டிக்கலையா

குமரை நிலாவன் said...

பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி நண்பா

புதுமணத் தம்பதிகளுக்கு கமல் அவர்களுக்கும்.
மற்றும் சொல்லரசன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

Vishnu - விஷ்ணு said...

// புதுமணத் தம்பதிகளான கமல் மற்றும் அவரின் துணைவியாருக்கு பதிவுலகின் சார்பாக திருமண நல்வாழ்த்துக்கள்..
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் சொல்லரசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் //


என்னுடைய வாழ்த்துகளையும் சேர்த்து சொல்லிடுங்க.

கலையரசன் said...

பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!

நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com

யூர்கன் க்ருகியர் said...

பகிர்வுக்கு நன்றி ....

வெற்றி-[க்]-கதிரவன் said...

நா வரலாம்ன்னுதான் பாத்தேன், கடசிநேரதுல என்னோட பொண்டாட்டி துணிய துவைக்க சொல்லிபுட்டா :(

Athisha said...

vaalthukkal thala!

Anonymous said...

கலக்கல் தல!
வாழ்த்துக்கள்!

Suresh said...

காலையில் இருந்து இந்த பதிவுக்கு தான் வெயிடிங்க் லேட்டா படிச்சிட்டேன்..

அருமையான சந்திப்பு எங்க ஊருல நடந்தும் இதை மிஸ் பண்ணினது எனக்கு வருத்தம்

அனைத்து நண்பர்களும் என் வாழ்த்துகள்

போட்டோவ போடுங்க பாஸ் ;)

Suresh said...

காலையில் இருந்து இந்த பதிவுக்கு தான் வெயிடிங்க் லேட்டா படிச்சிட்டேன்..

அருமையான சந்திப்பு எங்க ஊருல நடந்தும் இதை மிஸ் பண்ணினது எனக்கு வருத்தம்

அனைத்து நண்பர்களும் என் வாழ்த்துகள்

போட்டோவ போடுங்க பாஸ் ;)

Suresh said...

புதுமணத் தம்பதிகளுக்கு (கமல்) திருமணநாள் வாழ்த்துகள்!

மற்றும் சொல்லரசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள்
மிஸ் பண்ணிட்டேன் நண்பா இந்தியா வரும்பொழுது உங்கள் அனைவரையும் சந்திப்பேன்

தருமி said...

சந்திப்பறிந்து மகிழ்ச்சி.....

Anonymous said...

புதுமணத் தம்பதிகளுக்கு திருமணநாள் வாழ்த்துகள்!

Anonymous said...

பதிவர் சந்திப்பை சிறப்பாக செய்ததற்கு வாழ்த்துக்கள் thala.

வால்பையன் said...

http://dailycoffe.blogspot.com/

இது தான் இளையகவியோட ப்ளாக் ஐடி!

அடுத்த சந்திப்புல கண்டிப்பா கலந்துகிறேன்!

சனி,ஞாயிறு பார்த்து வையுங்க!

ச.பிரேம்குமார் said...

கமல் மற்றும் சொல்லரசனுக்கு வாழ்த்துகள். பாண்டியா, புகைப்படங்கள எதிர்பார்த்து வந்தேன். இப்படி செஞ்சுட்டீங்களே ;-)

ச.பிரேம்குமார் said...

:)

cheena (சீனா) said...

பதிவர் சந்திப்பு மகிழ்வுடன் நடந்தேறியது குறித்து மிக்க மகிழ்ச்சி

Anonymous said...

போட்டோ போடத்தெரியலியா? பதிவர் சந்திப்பில் கேட்டு தெரிந்துகொண்டு இருக்கலாமே? சந்திப்பை வேஸ்ட் பண்ணிட்டீங்க.

குப்பன்.யாஹூ said...

many many happy wishes and nice to hear that.

all over Tamilnadu Bloggers met should be happened often.

நசரேயன் said...

கலக்கல்.. வாழ்த்துக்கள் கமல் தம்பதியர்களுக்கு

உமா said...

வலையுலக நண்பர்கள் பற்றிய அறிமுகம் எங்களுக்கும் கிடைத்தது மிக்க நன்றி. அருமையான பகிர்வு. தொடர வாழ்த்துகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
Kaarthi romba aavala ethirpparten neenga photo podula..//

தேவா படங்கள் போட்டு இருக்கார் நண்பா.. இப்போ லிங்கும் கொடுத்து இருக்கேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தைஅன்புமணி said...
சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி! கலந்துகொள்ள முடியாமல் போனாதற்கு வருத்தமாக இருக்கிறது. அடுத்தமுறை நிச்சயமாக கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன். //

நன்றி நண்பா.. கூடிய சீக்கிரம் உங்களை சந்திக்க முடியும் என நம்புகிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said...
பதிவர் சந்திப்பு நல்ல பகிர்வு கார்த்திகைப் பாண்டியன்...//

நன்றி தோழரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said...
நானும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதில் உங்களுடன் இணைகிறேன்.//

//குடந்தைஅன்புமணி said...
புதுமணத் தம்பதிகளுக்கு (கமல்) திருமணநாள் வாழ்த்துகள்!
மற்றும் சொல்லரசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!//

வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெட்லி said...
உங்கள் பதிவர் சந்திப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//சென்ஷி said...
புதுமணத் தம்பதிகளுக்கு (கமல்) திருமணநாள் வாழ்த்துகள்!
மற்றும் சொல்லரசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
பதிவர் சந்திப்பை வெற்றி கரமாக்கியதற்கும் வாழ்த்துக்கள் :)//

ரொம்ப நன்றிண்ணே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நண்பா.. போட்டுட்டீங்களா!!!
பதிவ... கலக்கல்.
படிக்க படிக்க சுவாரசியம் மிளிருது,
பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி+மகிழ்ச்சி.//

நீங்க பேசியது ரொம்ப சந்தோஷம் முத்து..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Rajeswari said...
கல்லணை எப்படி இருந்தது.?
சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

தேர்தல் பிரச்சினைனால எங்கேயும் போகல தோழி.. ஹோட்டல் ரூம்லேயே முடிஞ்சு போச்சு.. வாழ்த்துக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்....... said...
வாழ்த்துக்கள் டு சொல்லரசன்..!புதுமணத் தம்பதிகளுக்கு பிளேட்டடு திருமணநாள் வாழ்த்துகள்!//

நன்றி டக்கு.. சீக்கிரமா ஊருக்கு வந்து சேருப்பா...

கார்த்திகைப் பாண்டியன் said...

//thevanmayam said...
என்ன அழகு!! கார்த்திகைப் பாண்டி!!
கார்த்திகைக்கும் பொண்ணு பாக்குறாங்கோ!!!போட்டோக்கள் பதிவிடப்பட்டதும் பெண் பார்க்கும் படலம் தொடரும்!!//

தேவா சார்.. நான் பாட்டுக்கு நிம்மதியா இருக்கேன்.. ஏன் என்னை மாட்டி விடப் பாக்குறீங்க..?

(தேவா சார்.. அவன் அப்படித்தான் உளருவான்.. கண்டுக்காதீங்க.. நீங்க சொன்னதுதான் சரி.. - கார்த்தியோட மனசாட்சி.. ஹி ஹி ஹி..)

கார்த்திகைப் பாண்டியன் said...

//அபுஅஃப்ஸர் said...
பதிவர் சந்திப்பை சிறப்பாக செய்ததற்கு வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நகைக்கடை நைனா said...
கலந்து கொண்ட னைவருக்கும் "நகை கடை" சார்பா வாழ்த்துக்கள்.//

அடுத்த சந்திப்புக்கு நைனா அவர்கள் எல்லா பதிவர்களுக்கும் ஒரு பவுன் மோதிரம் மொய் செய்வார் என்று அறிவப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி நைனா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேனீ - சுந்தர் said...
அப்டின்னா, இன்னம் நீங்க மாட்டிக்கலையா//

இன்னும் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கேனே நண்பா..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி நண்பா
புதுமணத் தம்பதிகளுக்கு கமல் அவர்களுக்கும்.மற்றும் சொல்லரசன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!//

வாழ்த்துக்கு நன்றி நிலாவன்..நீங்கள் பேசியது ரொம்ப மகிழ்ச்சி

கார்த்திகைப் பாண்டியன் said...

//விஷ்ணு. said...
என்னுடைய வாழ்த்துகளையும் சேர்த்து சொல்லிடுங்க.//

கண்டிப்பா நண்பா.. நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//கலையரசன் said...
பதிவு நன்று!பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com//

நன்றிங்க.. உங்க ப்ளாகை ஓபன் பண்ண எர்ரடிக்குது.. ஏதோ வைருஸ்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜுர்கேன் க்ருகேர்..... said...
பகிர்வுக்கு நன்றி ....//

வருகைக்கு நன்றி நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//பித்தன் said...
நா வரலாம்ன்னுதான் பாத்தேன், கடசிநேரதுல என்னோட பொண்டாட்டி துணிய துவைக்க சொல்லிபுட்டா :(//

கடமைதான் அண்ணே முக்கியம்..:-) நீங்க வரணும்னு நினச்சீங்க பாருங்க.. சந்தோஷம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அதிஷா said...
vaalthukkal thala!//

நன்றி அதிஷா.. நீங்க தளத்துக்கு வந்தது சந்தோஷம்.. டக்கு உங்களை பார்க்குறதா சொன்னாரு.. வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said...
கலக்கல் தல!வாழ்த்துக்கள்!//

நன்றி கவின்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said...
காலையில் இருந்து இந்த பதிவுக்கு தான் வெயிடிங்க் லேட்டா படிச்சிட்டேன்..அருமையான சந்திப்பு எங்க ஊருல நடந்தும் இதை மிஸ் பண்ணினது எனக்கு வருத்தம்
அனைத்து நண்பர்களும் என் வாழ்த்துகள் போட்டோவ போடுங்க பாஸ் ;)//

அடுத்த தடவை கண்டிப்பா பார்க்கலாம் மாப்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்......வசந்த் said...
வாழ்த்துக்கள் மிஸ் பண்ணிட்டேன் நண்பா இந்தியா வரும்பொழுது உங்கள் அனைவரையும் சந்திப்பேன்//

கண்டிப்பா சந்திக்கலாம் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
சந்திப்பறிந்து மகிழ்ச்சி.....//

வாழ்த்துக்கு நன்றி ஐயா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said...
பதிவர் சந்திப்பை சிறப்பாக செய்ததற்கு வாழ்த்துக்கள் thala.//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said... http://dailycoffe.blogspot.com/
இது தான் இளையகவியோட ப்ளாக் ஐடி!அடுத்த சந்திப்புல கண்டிப்பா கலந்துகிறேன்!சனி,ஞாயிறு பார்த்து வையுங்க!//

சேர்த்துட்டேன் வால்.. அடுத்த சந்திப்பு ஞாயிறுதான் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//ச.பிரேம்குமார் said...
கமல் மற்றும் சொல்லரசனுக்கு வாழ்த்துகள். பாண்டியா, புகைப்படங்கள எதிர்பார்த்து வந்தேன். இப்படி செஞ்சுட்டீங்களே ;-)//

நன்றி பிரேம்..படங்களுக்கு லிங்க் கொடுத்து இருக்கேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//cheena (சீனா) said...
பதிவர் சந்திப்பு மகிழ்வுடன் நடந்தேறியது குறித்து மிக்க மகிழ்ச்சி//

நன்றி ஐயா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//shirdi.saidasan@gmail.com said...
போட்டோ போடத்தெரியலியா? பதிவர் சந்திப்பில் கேட்டு தெரிந்துகொண்டு இருக்கலாமே? சந்திப்பை வேஸ்ட் பண்ணிட்டீங்க.//

யாரும் லாப்டாப் எடுத்துட்டு வரல நண்பா.. சொல்லித் தந்தாங்க.. நான் டெக்னிக்கலா கொஞ்சம் வீக்குங்கோ..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குப்பன்_யாஹூ said...
many many happy wishes and nice to hear that.all over Tamilnadu Bloggers met should be happened often.//

நன்றி.. நீங்க சொல்றது நல்ல விஷயம் தான்.. பார்க்கலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said...
கலக்கல்.. வாழ்த்துக்கள் கமல் தம்பதியர்களுக்கு//

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//உமா said...
வலையுலக நண்பர்கள் பற்றிய அறிமுகம் எங்களுக்கும் கிடைத்தது மிக்க நன்றி. அருமையான பகிர்வு. தொடர வாழ்த்துகள்.//

உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழி..

Jackiesekar said...

திருச்சி பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//jackiesekar said... //

நன்றி நண்பா..

சொல்லரசன் said...

//எல்லோரோடும் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.//

இதுதான் பதிவர் சந்திப்பின் வெற்றி நண்பா,

சொல்லரசன் said...

//இன்று பிறந்த நாள் காணும் நண்பர் சொல்லரசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..(அண்ணே..உங்க வயச சொல்லல:-)...)//

நண்பர் வாசு எழுதியது

வயது என்பது ஒரு மனோபாவம்தான். இருபதில் நாற்பதாகவும், நாற்பதில் இருபதாகவும் இருக்க முடியும்.

39 ஆரம்பம் நண்பா

வாழ்த்திபதிவிட்ட உங்களுக்கும்,வாழ்த்துகூறிய நல் உள்ளங்களுக்கும்

நன்றி

Muniappan Pakkangal said...

Pathivar santhippu nalla vishayam.

தங்கமீன் said...

//
அடுத்த சந்திப்புக்கு நைனா அவர்கள் எல்லா பதிவர்களுக்கும் ஒரு பவுன் மோதிரம் மொய் செய்வார் என்று அறிவப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி நைனா..
//

ஹைய்யோ... இங்கே சும்மாவே கடை காத்தாடுது...

O.K. நண்பா கொடுத்துருவோம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

திருச்சி பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்கள்!!

அடுத்த முறை நடக்கும் சந்திப்பில் கலந்து கொள்ளவேண்டும்.

மேவி... said...

present sir

இளைய கவி said...

//திருச்சி சந்திப்பு பற்றிய பதிவை படித்து விட்டு இணைந்து கொண்டவர் நண்பர் கணேஷ் குமார். வலையுலகில் ரொம்பப் பெரிய ஆள்..(உடலமைப்பில் மட்டும் அல்ல..) முதல் முறை பார்க்கிறோம் என்கின்றன சங்கோசம் ஏதும் இல்லாமல் ரொம்ப சாவகசாமகப் பேசினார். தான் வளர்ந்த முறை, தன்னுடைய குடும்பம் என எந்த ஒளிவு மறைவும் அவரிடம் இல்லை. பாசாங்கு செய்யாத ஒரு நல்ல மனிதை சந்திக்க முடிந்ததில் ரொம்ப சந்தோஷம்.//

மக்கா சாச்சுபுட்டியே மக்கா !!

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
இதுதான் பதிவர் சந்திப்பின் வெற்றி நண்பா,வாழ்த்திபதிவிட்ட உங்களுக்கும்,வாழ்த்துகூறிய நல் உள்ளங்களுக்கும் நன்றி..//

:-)))))))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//Muniappan Pakkangal said...
Pathivar santhippu nalla vishayam.//

நன்றி நண்பரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நகைக்கடை நைனா said...
ஹைய்யோ... இங்கே சும்மாவே கடை காத்தாடுது...O.K. நண்பா கொடுத்துருவோம்.//

உங்க பெரிய மனசு எனக்குத் தெரியாதா நண்பா?

கார்த்திகைப் பாண்டியன் said...

// S Senthilvelan said...
திருச்சி பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்கள்!!அடுத்த முறை நடக்கும் சந்திப்பில் கலந்து கொள்ளவேண்டும்.//

நன்றி நண்பா... கண்டிப்பா அடுத்த சந்திப்புக்கு வாங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//MayVee said...
present sir//

வாங்க நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//இளைய கவி said...
மக்கா சாச்சுபுட்டியே மக்கா !!//

உண்மையச் சொன்னேன் நண்பா

"உழவன்" "Uzhavan" said...

கலக்கிட்டீங்க கா.பா.. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உழவன்.. நன்றிங்க நண்பா.. நண்பர்கள் உங்களை சென்னை மீடிங்குல பார்த்ததா சொன்னாங்க..:-)

ஆ.ஞானசேகரன் said...

பட்டைய கிளப்பிடீங்க கார்த்திகை பாண்டியன், வணக்கம் உங்களை சந்திததில் மிக்க மகிழ்ச்சி..

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கும் ரொம்ப சந்தோஷம் நண்பா

லோகு said...

வேலைப் பளு, கூச்சம், பயம் இவற்றால் என்னால் வர முடியவில்லை..
மன்னிப்பீர்களாக..

உங்கள் புகைப்படம் பார்த்தேன்.. அருமை,,

கார்த்திகைப் பாண்டியன் said...

கூச்சம்? அது எதுக்கு? விடுங்க நண்பா.. பார்த்துக்கலாம்

தருமி said...

//....கூச்சம், பயம் ..//

என்ன இது? லோகுவிற்கு ஏனிந்த கூச்சம். பயம்???????

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க ஐயா.. ஊரில் இருந்து திரும்பிட்டீங்களா? குழந்தைகள் எல்லோரும் நலம் என்று நம்புகிறேன்.. எதுக்கு கூச்சம்னு தான் ஐயா நானும்கேட்டுக்கிட்டு இருக்கேன்..