September 8, 2009

மூன்று கவிதைகள்..!!!


எதிர் வீட்டு ஸ்ரீவித்யாவிற்கு அஞ்சு வயசு..
சிறகுகள் இல்லாத குட்டி தேவதை...
இரு கைகளையும் இறுக மூடியவளாக
என் முன்னே வந்து நிற்கிறாள்..
"மாமா.. உள்ளே என்ன இருக்கு
கண்டுபிடிங்க பார்ப்போம்.."
எத்தனை யோசித்தும் கண்டுபிடிக்காத
முடியாதவனாய் ஏதேதோ சொல்கிறேன்..
"நீயே சொல்லிரும்மா.."
கடைசியாய் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்..
"ஒண்ணுமே இல்லையே"
என்று கைகளை விரித்து
பூவானமாய் சிரிக்கிறாள்..
தோற்றுப் போனதற்காக
வாழ்க்கையில்
முதல் முறையாய்
பெருமைப்படுகிறேன் நான்..!!!

***************

பாலத்தில் வரும்பொழுது விரூமென்று
என்னை தாண்டிப் போனது ஒரு வண்டி..
பின்னால் அமர்ந்து இருக்கிறாள்
தேவதை ஒருத்தி..
முகத்தை மறுபக்கமாக திருப்பியவாறே..
எப்பாடு பட்டேனும் அவள் முகம்
பார்க்க வேண்டும் என்ற முடிவுடன்
துரத்தத் துவங்குகிறேன் நான்..
என்னுடைய வேகத்தை விட
அதிகமாய் இருக்கிறது முன்னால்
செல்லும் வண்டியின் வேகம்..
ஏதோவொரு வளைவில் சட்டெனத்
திரும்பி காணாமல் போனது..
ஓட்டிப் போன பரதேசியை
பொறாமையோடு திட்டியவாறே
என் பாதைக்கு திரும்புகிறேன்..
கடந்து போகிறது இன்னுமொரு வண்டி..
மற்றொரு தேவதையை சுமந்தபடி..
மீண்டும் தொடங்குகிறது என் துரத்தல்..!!!

***************

மரம்
செடி
கொடி
இலை
காய்
பழம்
வானம்
நீர்
நதி
கடல்
நிறம்
விலங்குகள்
பறவைகள்
உலகின் சந்தோஷம் அனைத்தும்
எழுதி சலித்துப் போய் விட்டேன்..
மனம் நொந்து, வாய் விட்டு
கதறி அழ சோகத்தைத் தா..
கடவுளின் முன் கூனிக்
குறுகியவனாக நின்று இருந்தான்
உலகத்தின் ஆதி கவிஞன்..
சிரித்துக் கொண்ட கடவுள்
கைகளைத் தட்டினார்..
காதல் பிறந்தது..!!!


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

38 comments:

மணிஜி said...

மூன்றும் முத்துக்கள் நண்பா
அழகாய் வந்திருக்கிறது
யதார்த்தமாயும் கூட
வாழ்த்துக்கள்..

ஈரோடு கதிர் said...

கவிதைகள் அருமை

//முதல் முறையாய்
பெருமைப்படுகிறேன் நான்..!!!//

அற்புதம்

Raju said...

எனக்கு முதலாவது பிடித்தது.
மூன்றாவது புரியவில்லை.
இரண்டாவதும் அருமை.

நையாண்டி நைனா said...

sarithaan Nanba...

Anbu said...

நல்லா இருக்கு அண்ணா..

இளைய கவி said...

கலியுக கம்பன் அண்ணன் கார்த்திகை பாண்டியன் வாழ்க. சூப்பரு கவிதை எழுதிய நவின திருவள்ளுவர் கார்த்திகை பாண்டியன் வாழ்க. வருங்கால தமிழக முதல்வர் கார்திகை பாண்டியன் வாழ்க. மதுரை மணம் காக்கும் மாமன்னர் கார்த்திகை பாண்டியன் வாழ்க.

அ.மு.செய்யது said...

முத‌ல் க‌விதை ர‌ச‌னை !!!!

மூன்றாவ‌து க‌விதை அச‌த்த‌ல் ர‌க‌ம் !!! ( உண்மைய‌ சொல்லிட்டீங்க‌ண்ணே !! )

லோகு said...

மூன்றும் அருமை..

முதலாவது அழகு..
இரண்டாவது ஆசை..
மூன்றாவது அழுகை..

கலக்கல்..

வழிப்போக்கன் said...

முதலிரண்டும் அருமை....

ஆ.ஞானசேகரன் said...

//தோற்றுப் போனதற்காக
வாழ்க்கையில்
முதல் முறையாய்
பெருமைப்படுகிறேன் நான்..!!!//

அருமை... அழகான இடம்

ஆ.ஞானசேகரன் said...

///கடந்து போகிறது இன்னுமொரு வண்டி..
மற்றொரு தேவதையை சுமந்தபடி..
மீண்டும் தொடங்குகிறது என் துரத்தல்..!!!///

ம்ம்ம்ம்ம் ஆகட்டும் ஆகட்டும்.... கொஞ்ச நாளைக்குதானே

குடந்தை அன்புமணி said...

மூன்றும் கலக்கல்..

முதலாவது அழகு..
இரண்டாவது ஆசை..
மூன்றாவது அவ்வவ்வே...

ஆ.ஞானசேகரன் said...

மூன்றும் புதுமையான கனவு

Jerry Eshananda said...

மிரட்டுகிறாய் கார்த்தி, உன்னை என் நண்பன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

அகநாழிகை said...

நல்லாயிருக்கு, கார்த்தி.

தொடர்ந்து எழுதுங்கள்.

பாலகுமார் said...

யதார்த்தமான அழகு.... வாழ்த்துக்கள் கார்த்தி !

படமும் நச் !

க.பாலாசி said...

//தோற்றுப் போனதற்காக
வாழ்க்கையில்
முதல் முறையாய்
பெருமைப்படுகிறேன் நான்..!!!//

ஒப்புக்கொள்ளவேண்டிய தோல்வி...

மூன்று கவிதைகளும் அருமை...மூன்றாமது நச்....

ஹேமா said...

கார்த்திக்,மூன்று கவிதைகளுமே ஒவ்வொரு கோணத்தில் அருமை.படமும் அழகு.

வால்பையன் said...

இரண்டாவது கவிதை இயற்கையாக இருக்கிறது!

Karthik said...

கலக்கல்ஸ்!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

thiyaa said...

மூன்று கவிதைகளும் அருமையாக உள்ளன

இராகவன் நைஜிரியா said...

கலக்கிட்டீங்க...

மூன்றும் மூன்று முத்துகள்.

சுந்தர் said...

அப்பிடியே துரத்திகிட்டே போயி, கன்னியாகுமரி வரைக்கும் போய்டாதீங்க ! நீங்க போற வழில மட்டும் folllow பண்ணுங்க ! இதுக்குதான் ஹெல்மெட் போடாம சுத்துரீங்களா ?

vasu balaji said...

அழகோ அழகு கொள்ளை அழகு.

மேவி... said...

வாவ் ...... நல்ல இருக்கு ...

தேவன் மாயம் said...

யாருடைய படைப்புகளோ என்று நினைத்தேன்!!! மூன்றாவது ச்சூப்பர்!!

தேவன் மாயம் said...

ஓட்டும் குத்திட்டோம்ல!

ப்ரியமுடன் வசந்த் said...

மூன்றாவது கவிதை சின்ன விடுகவிதைபோல நல்லாயிருக்கு..

Nathimoolam said...

நண்பரே,
கவிதைகள் மிகவும் அருமை, அதிலும் முதல்கவிதை சும்மா நச்.....
நட்புடன்,
ந.ஆதி

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

சொல்லரசன் said...

//மற்றொரு தேவதையை சுமந்தபடி..
மீண்டும் தொடங்குகிறது என் துரத்தல்..!!!//

இந்த துரத்தலுக்கு எல்லை கல்யாணம்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள் கா.பா.

Prabu M said...

முதல் கவிதையில் சிலிர்க்க வெச்சுட்டீங்க தலைவா....

இரண்டாவது மூன்றாவது கவிதைகளின் காதல் தேவதைகளைவிட அந்த‌ சிறகில்லாத குட்டி தேவதையின் கபடில்லாத அழகு விளையாட்டு ரொம்பவே சூப்பர்ப்... பின்னிட்டீங்க :)

தீப்பெட்டி said...

மூன்றும் முத்தான கவிதைகள்..

குமரை நிலாவன் said...

கவிதைகள் அருமை

//முதல் முறையாய்
பெருமைப்படுகிறேன் நான்..!!!//

அற்புதம்

யாத்ரா said...

மூன்று கவிதைகளுமே ரொம்பப் பிடித்திருககிறது.

Unknown said...

மூன்று கவிதைகளும் அருமைங்க..

ச.பிரேம்குமார் said...

மூன்றாம் கவிதை நன்றாக இருக்கிறது பாண்டியன்.

இரண்டாவது?! ஹி ஹி ஹி