September 26, 2009

அழகு,காதல்,பணம்,கடவுள் - ஆசையும் உண்மையும்.. !!!

சில பல நாட்களுக்கு முன்பாக நண்பர் "தினசரி வாழ்க்கை" mayvee இந்தத் தலைப்பில் என்னை சங்கிலித் தொடராக எழுதும்படி அழைத்து இருந்தார். அந்த நேரத்தில் தான் காலேஜில் இருக்கும் புண்ணியவான்களின் தயவால் ப்ளாகர் ப்ளாக் செய்யப்பட்டது. சரி, பொறுமையாக எழுதிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். பின்னர் நண்பர் "இலக்கியா" அன்புமணியும் எழுதும்படி கேட்டுக் கொண்டார். "பசங்கள மட்டும் ஒழுங்கா அசைன்மென்ட் எல்லாத்தையும் நேரத்துல சப்மிட் பண்ண சொல்றீங்க.. நீங்க ரொம்ப யோக்கியமா?"ன்னு கண்டனக் குரல்கள் வேற வந்தாச்சு. இதற்கு மேல் ஓப்பியடிக்க முடியாது என்பதால்.. இதோ இடுகை.


அழகு,காதல்,கடவுள்,பணம் - நான்கு விஷயங்களைப் பற்றி எழுத சொல்லி இருக்கிறார்கள். நான்குமே கொஞ்சம் விவகாரமான விஷயங்கள். கடவுளைத் தவிர மற்ற மூன்றும் ஒன்றுக்கொன்று ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை. இவை எப்படி இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுவதையும், உண்மையில் இன்றைய உலகில் நிதர்சனம் என்ன என்பதையும் சொல்ல விரும்புகிறேன். பதிவர்களின் மாறுபட்ட கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த தொடரை ஆரம்பித்து வைத்த தோழி ஹேமாவுக்கு நன்றி.

அழகு

ஆசை: புற அழகு என்பதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு ஒருவரை அழகு என்று சொல்ல முடியாது. மனது தான் முக்கியம். வயது ஆகும்போது புற அழகு மாறிப்போகக் கூடும். ஆனால் நல்ல மனம் என்றும் மாறாது. உடம்பு அழகாக இருந்தும் உள்மனம் அழுக்காக இருந்தால் அதனால் என்ன பிரயோஜனம்? ரோட்டில் நடந்து போகும்போது யாரென்றே தெரியாத ஒருவர் அடிபட்டுக் கிடந்தால், அவருக்கு உதவ வேண்டும் என்று யோசிக்கிறது பாருங்கள்.. அந்த நல்ல மனதுதான் உண்மையான அழகு.

உண்மை: வடிவேலு ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது.."சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.. இவன் கருப்பன்.. பொய் சொல்லுவான்.. இவனப் போட்டு அடிங்கடா.." இதுதான் இன்றைய மக்களின் மனநிலை. கருப்பு என்றால் ஏதோ அவலட்சணம் என்பதைப் போல உருவகப்படுத்துகிறார்கள். நின்று நிதானமாக மனதைப் பார்க்க யாருக்கும் நேரம் இல்லை. ஆடை பாதி, ஆள் பாதி என்பதெல்லாம் மாறி இன்றைக்கு ஆடையும் அழகும்தான் மதிப்பே என்பது போல ஆகி விட்டது.

காதல்

ஆசை: எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, இரு மனங்கள் ஒன்றை ஒன்றை விரும்பி ஏற்றுக் கொண்டு, கடைசி வரை தங்கள் வாழ்கையை ஒன்றாக வாழ்வது தான் காதல். அழகைப் பார்த்தோ, அந்தஸ்தைப் பார்த்தோ வருவது கிடையாது. அது ஒரு நம்பிக்கை. என் வாழ்க்கை பூராவும் இவர் நம்மோடு இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற உணர்வு. உண்மையான காதலில் அழகு ரெண்டாம் பட்சமாகத்தான் இருக்கும்.

உண்மை: இன்றைக்கு காதல் ஒரு வியாபாரமாகிப் போய் விட்டது. ஒரு ஆண் நன்றாக சம்பாதிக்கிறானா, அவனிடம் கார் இருக்கிறதா, வீடு இருக்கிறதா.. இதை எல்லாம் பார்த்து தான் பெண்ணுக்கு காதல் வருகிறது. பெண் அழகாக இருக்கிறாளா, வீட்டில் எந்த இம்சையும் இருக்கிறதா.. இதைப் பார்த்து தான் ஆண் காதல் கொள்கிறான். அன்பு என்னும் ஆதாரமான விஷயத்தைத் தவிர இன்றைய காதலில் மற்ற எல்லாமே இருக்கிறது. காதல் இன்று பலருக்கு பொழுதுபோக்காக மாறிப் போனது இன்னும் கொடுமை.

பணம்

ஆசை: பணம் நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாக, அளவோடு இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் காப்பாற்றும் அளவுக்கு பணத்தை வைத்துக் கொண்டு, அதிகமாக இருப்பதை இல்லாத மக்களுக்கு கொடுக்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? அதன் பின்னர் உலகத்தில் யாருமே ஏழை என்று இருக்க மாட்டார்கள் இல்லையா?

உண்மை: காசைத் தேடி ஓடி ஓடி தங்கள் வாழ்வை தொலைத்தவர்கள் தான் இன்று உலகம் முழுதும் நிறைந்து இருக்கிறார்கள். "கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் நமக்கு எஜமானன்.." எத்தனை உண்மை? ஒருவனுக்கு காசு சம்பாதிக்கும் வெறி இல்லை என்றால் சமூகம் அவனுக்குத் தரும் பட்டம் "பிழைக்கத் தெரியாதவன்". பணம் இருந்தால் தான் இன்று உறவுகள் கூட மனிதனை மதிக்கின்றன. பணம் என்னும் விஷயத்தை ஏன் தான் மனிதன் கண்டுபிடித்தானோ என்று பலமுறை நொந்து இருக்கிறேன். பணம் இருந்தால் தான் மரியாதை. இல்லை என்றால் மனிதனுக்கு பிணத்துக்கு சமமாகத்தான் மதிப்பு.

கடவுள்

ஆசை: ஒரு சின்ன சம்பவம். என் பெற்றோருக்கு அதிகமான கடவுள் பக்தி உண்டு. என் தங்கையின் திருமணம் நல்ல படியாக முடிந்ததற்கு நேர்த்திக்கடன் செய்வதற்காக பட்டமங்கலம் (குருஸ்தலம், காரைக்குடி போகும் வழியில் உள்ளது) போயிருந்தோம். அங்கே அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு தம்பதியைப் பார்க்க நேர்ந்தது. குழந்தை இல்லை என்ற குறை நீங்க அவர்கள் போகாத மருத்துவமனை கிடையாதாம். அவர்களை சோதனை செய்த எல்லா மருத்துவர்களுமே இருவருக்கும் உடம்பில் எந்தக் குறையும் இல்லை என்று சொல்லி விட்டார்களாம். இருந்தும் பிள்ளை இல்லையே என்ற சோகத்தில் இருந்தவர்கள், யாரோ சொன்னதைக் கேட்டு, பட்டமங்கலம் சென்று வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வந்து இருந்தார்கள். அவர்கள் கதையைக் கேட்டு நான் ஆடிப்போனேன். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து அந்த தம்பதியை இந்தக் கோயில் வரை செலுத்திக் கொண்டு வந்தது எது? அவர்களுடைய நம்பிக்கை தானே.. அந்த நம்பிக்கைக்காகவாவது கடவுள் என்ற ஒன்று உண்மையாக இருக்க வேண்டும்.

உண்மை: மனிதர்களின் நன்மைக்காக என்பதை மீறி, இன்றைக்கு கடவுளின் பெயரால் சண்டைகளும் பிரச்சினைகளும் தான் நடக்கின்றன. அறிவியல் வளர வளர, மக்களுக்கு கடவுள் மீதான பக்தியும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை பக்தி என்று சொல்லுவதை விட பயம் என்று சொல்லாம். "மரணத்துக்குப் பின் நாம் என்ன ஆவோம்? கடவுள் என்ற ஒன்று இருந்து, அதை நாம் மறுக்கப் போய், பின்னால் நரகத்தில் உழல நேரிட்டால்?" இந்த பயம் தான் இன்றளவும் மனிதனைக் கடவுளின் பால் செலுத்திக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். கஷ்டங்களின் போது மக்களுக்கு உதவாத கடவுள் இருந்துதான் என்ன பிரயோஜனம்? கடவுள் என்னும் விஷயத்தைப் பொறுத்தவரை நான் குழப்பவாதிதான். இதுபற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

இதுதான் உண்மை நிலை என்று நான் இங்கே சொல்லி இருப்பவை என்னுடைய கருத்துக்கள் மட்டுமே.. நண்பர்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இந்தத் தலைப்பில் தொடர்ந்து எழுத நான் மூன்று நண்பர்களை அழைக்கிறேன்.

தேனீ சுந்தர்

சொல்லரசன்

அ.மு.செய்யது


26 comments:

Karthik said...

நல்ல பதிவில் மீ த ஃபர்ஸ்ட் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. கலக்கல் பதில்கள். :)

Karthik said...

அடடா, ஃப்ரபஸருக்கே அஸைன்மென்ட் கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறதே? கொடுத்திருவோம். :P

*இயற்கை ராஜி* said...

//"பசங்கள மட்டும் ஒழுங்கா அசைன்மென்ட் எல்லாத்தையும் நேரத்துல சப்மிட் பண்ண சொல்றீங்க//


இப்பிடி எல்லாம் வேற எதிர்பார்க்கறீங்களா நீங்க‌‌?:-)))

*இயற்கை ராஜி* said...

//ஒருவனுக்கு காசு சம்பாதிக்கும் வெறி இல்லை என்றால் சமூகம் அவனுக்குத் தரும் பட்டம் "பிழைக்கத் தெரியாதவன்". //

சம்பாதிக்கணும்..சம்பாதிச்ச காசை வச்சி பந்தா பண்ணனும்.. எளிமையா இருந்தா கூட ஏமாளின்னு தான் சொல்றாங்க‌:-(

thiyaa said...

அருமையான பதிவு

vasu balaji said...

நல்ல இடுகை. பாராட்டுக்கள்.

வினோத் கெளதம் said...

கார்த்தி ஒவ்வொன்றும் அருமை..
குறிப்பாக காதல் மற்றும் பணம்..
பணம் சம்பாதிக்கும் வேகம் இல்லையெனில் உலகம் அவனுக்கு கொடுக்கும் பட்டம் பிழைக்க தெரியாதவன் என்பது தான்..

அன்புடன் அருணா said...

நல்லா எழுதிருக்கீங்க!

ச.பிரேம்குமார் said...

பாண்டியன், ஆசையும் உண்மைகளும் அருமை. உங்களைப் போலவே எல்லோருக்கும் ஆசை இருந்துவிட்டால் இந்த உலகம் தான் எத்தனை அழகாக மாறிவிடும்

//பணம் இருந்தால் தான் மரியாதை. இல்லை என்றால் மனிதனுக்கு பிணத்துக்கு சமமாகத்தான் மதிப்பு.
//
பணமும் சுயநலமும் தான் இப்போது மனிதனை எதிர்கொண்டுருக்கும் பேராபத்துகள். உலகத்தை அழிக்க இவையே போதுமானவை

அ.மு.செய்யது said...

ஆழ்ந்த‌ க‌ருத்துக‌ள் கார்த்திக்..இந்த‌ அள‌வுக்கு நான் எழுத‌ணுமே ?!?!?!?!!?

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌மைக்கு ந‌ன்றி !!! இன்று சென்னைக்கு கிள‌ம்புறேன். ஒருவாரம் ஸ்டே.போயிட்டு
வந்து எழுதுகிறேன்.

ஹேமா said...

கார்த்திக் அருமையாய் அத்தனையையும் பிரித்து எழுதியிருக்கிறீர்கள்.எதையென்று சொல்வதற்கில்லை.உங்கள் மனதோடு பேசியிருக்கிறீர்கள் என்றே சொல்லலாம்.நான் தொடங்கிவிட்ட தொடர் ஒவ்வொருவரையும் தொட்டு வரவதை நினைக்கச் சந்தோஷமாகவே இருக்கு.

உங்கள் எல்லாப் பதிவுகளிலும் இப்போ எழுத்தின் முதிர்வைக் காண்கிறேன்.வாழ்த்துக்கள்.

குமரை நிலாவன் said...

நல்ல பதிவு நண்பா


காதல் மற்றும் பணம் மிக அருமை

கார்த்திகைப் பாண்டியன் said...

// Karthik said...
அடடா, ஃப்ரபஸருக்கே அஸைன்மென்ட் கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறதே? கொடுத்திருவோம். :P//

you are most welcome buddy..;-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//இய‌ற்கை said...
சம்பாதிக்கணும்..சம்பாதிச்ச காசை வச்சி பந்தா பண்ணனும்.. எளிமையா இருந்தா கூட ஏமாளின்னு தான் சொல்றாங்க‌:-(//

நிதர்சனம் தோழி..:-((

கார்த்திகைப் பாண்டியன் said...

//தியாவின் பேனா said...
அருமையான பதிவு//

//வானம்பாடிகள் said...
நல்ல இடுகை. பாராட்டுக்கள்.//

நன்றி நண்பர்களே

கார்த்திகைப் பாண்டியன் said...

// வினோத்கெளதம் said...
கார்த்தி ஒவ்வொன்றும் அருமை..
குறிப்பாக காதல் மற்றும் பணம்..
பணம் சம்பாதிக்கும் வேகம் இல்லையெனில் உலகம் அவனுக்கு கொடுக்கும் பட்டம் பிழைக்க தெரியாதவன் என்பது தான்..//

வருத்தப்பட வேண்டிய விஷயம் நண்பா

//அன்புடன் அருணா said...
நல்லா எழுதிருக்கீங்க!//

நன்றி தோழி..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

// ச.பிரேம்குமார் said...
பாண்டியன், ஆசையும் உண்மைகளும் அருமை. உங்களைப் போலவே எல்லோருக்கும் ஆசை இருந்துவிட்டால் இந்த உலகம் தான் எத்தனை அழகாக மாறிவிடும்//

நல்லது நடக்கும் என நம்புவோம் பிரேம்

//அ.மு.செய்யது said...
ழ்ந்த‌ க‌ருத்துக‌ள் கார்த்திக்..இந்த‌ அள‌வுக்கு நான் எழுத‌ணுமே ?!?!?!?!!? //

நீங்க அருமையா எழுதுவீங்க நண்பா.. பொறுமையா வந்து எழுதுங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said...

கார்த்திக் அருமையாய் அத்தனையையும் பிரித்து எழுதியிருக்கிறீர்கள்.எதையென்று சொல்வதற்கில்லை.உங்கள் மனதோடு பேசியிருக்கிறீர்கள் என்றே சொல்லலாம்.நான் தொடங்கிவிட்ட தொடர் ஒவ்வொருவரையும் தொட்டு வரவதை நினைக்கச் சந்தோஷமாகவே இருக்கு.உங்கள் எல்லாப் பதிவுகளிலும் இப்போ எழுத்தின் முதிர்வைக் காண்கிறேன்.வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றி தோழி.. நீங்க ஆரம்பிச்சு வச்ச நல்ல விஷயம்.. நன்றி..

//குமரை நிலாவன் said...
நல்ல பதிவு நண்பா
காதல் மற்றும் பணம் மிக அருமை//

நன்றி நண்பா

Raju said...

ரைட்டு பாஸ்.
நல்லா எழுதியிருக்கீங்க.

வால்பையன் said...

என்னாது சிகப்பா இருக்குறவங்க பொய் சொல்ல மாட்டாங்களா?

Anbu said...

நல்லா இருக்கு அண்ணா

"உழவன்" "Uzhavan" said...

ஒரே அட்வைஸ் மழையா இருக்கு நண்பா. வாத்தியாருங்குறது சரியாத்தான் இருக்கு :-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//♠ ராஜு ♠ said...
ரைட்டு பாஸ்.நல்லா எழுதியிருக்கீங்க.//

நன்றி நண்பா

//வால்பையன் said...
என்னாது சிகப்பா இருக்குறவங்க பொய் சொல்ல மாட்டாங்களா?//

ஒரு ஜோக்குல அப்படி வரும் தல

கார்த்திகைப் பாண்டியன் said...

// Anbu said...
நல்லா இருக்கு அண்ணா//

:-)))))))))))

//" உழவன் " " Uzhavan " said...
ஒரே அட்வைஸ் மழையா இருக்கு நண்பா. வாத்தியாருங்குறது சரியாத்தான் இருக்கு :-))//

அப்பப்போ..:-))))

மேவி... said...

am totally impressed dude... arguements b/w truth and belief are simply awesome.... makes one to think over it.


nowadays truth is a blender of lie

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா,... நன்றாக இருக்கு