November 23, 2009

உக்கார்ந்து யோசிச்சது - கல்லூரி ஸ்பெஷல்...!!!

அழகர்மலையின் அடிவாரத்தில் எழில் கொஞ்சும் சூழலில் அமைந்திருக்கும் பொறியியல் கல்லூரி அது. கடந்த ஒரு வாரமாக செய்முறைத் தேர்வுகள் ஆய்வாளராக (External Lab Examiner) அங்கேதான் சென்று வந்து கொண்டிருந்தேன். ஆரம்பித்து மூன்று வருடமே ஆகி இருந்தாலும் மாணவர்களுக்கான எல்லா வசதிகளையும் நிர்வாகம் செய்து தந்திருக்கிறது. காற்றோட்டத்துடன் கூடிய வகுப்பறைகள். அருமையான ஆய்வுக்கூட வசதிகள். அசந்து போய் விட்டேன்.

பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள்தான் அந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களோடு உரையாடுகையில், கேள்விகள் கேட்கையில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனித்தேன். நன்றாக படிப்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களால் தாங்கள் நினைப்பதை தெளிவாக சொல்ல முடியவில்லை. காரணம் - அவர்கள் வளர்த்துக் கொள்ள தவறிய மிக முக்கியமான திறமை. அது "Communication Skills"" என்று சொல்லப்படும் தொடர்பு கொள்ளும் திறன்.

ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். முதலில் வாயைத் திறந்து பேச வேண்டும் அல்லவா? என்னுடைய மாணவர்களிடம் அடிக்கடி இதைப் பற்றி நான் பேசுவதுண்டு. பொதுவாகவே தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை மாற ஒவ்வொரு கல்லூரியும் தனிப்பட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய நிறுவனங்கள் எல்லாம் சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே கேம்பஸ் பிளேஸ்மென்டுக்காக செல்வார்கள். நிலைமை மாறும் என்று நம்புவோம்.

***************

நாம் எத்தனைதான் நல்ல பிள்ளை மாதிரி அடங்கி இருக்க நினைத்தாலும் நம்ம சுழி சும்மாவே இருப்பதில்லை. ஆய்வாளராகப் போன இடத்திலும் அங்கிருந்த மக்களோடு நன்றாகப் பழகி விட்டேன். குறிப்பாக மின்னியல் துறையின் தலைவர் நமக்கு நெருங்கிய நண்பராகி விட்டார். அட்டகாசமான மனிதர். தமிழை நேசிக்கக் கூடியவர். கவிதை எல்லாம் எழுதுவாராம். அது மட்டுமல்லாது செம வேடிக்கையாய் பேசுகிறார். சாம்பிளுக்கு ஒன்று... அவர் என்னிடம் சொல்லியது..

"சார்.. நீங்க லெக்சரர்.. பாடம் சொல்லித்தாறவர்.. அதாவது பிரசங்கி.. நான் துறைத்தலைவர்.. உங்களை விட ஜாஸ்தி பேசணும்.. அப்போ நான்? அதிகப் பிரசங்கி.."

வாத்தியார் என்றால் மூன்று கிலோ இஞ்சியை முழுதாக அரைத்துக் குடித்த மாதிரியே அலைய வேண்டும் என்று யார் சொன்னது?

***************

என்னுடைய கல்லூரியில் உடன் வேலை பார்க்கும் நண்பர் அவர். ஆய்வுக்கூட உதவியாளராகப் பணிபுரிகிறார். மதுரை தியாகராயர் கல்லூரியில் பகுதி நேர பொறியியல் படிப்பு படித்து வருகிறார். நண்பருக்குத் திருமணம் ஆகி குழந்தையும் உண்டு. அவருடைய மகள் இரண்டாம் வகுப்பில் படித்து வருகிறாள். மாலை நேரத்தில் அவரை சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். நான் போன நேரம் நண்பர் தரையில் அமர்ந்து கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து அவருடைய மகளும் வந்து சேர்ந்தாள். அவர்களுக்கு இடையேயான உரையாடல் இங்கே..

"என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்க..?"

"அப்பா ஹோம்வொர்க் பண்ணிட்டு இருக்கேன்மா.."

"இவ்வளவு நேரமாவா? என்ன பாடம்?"

"கணக்குமா.."

"எங்க மிஸ் கூடத்தான் ஹோம்வொர்க் கொடுத்தாங்க.. நான் முடிச்சுட்டேனே.."

"அப்பா.. பெரிய பையன்ல.. அதான் கொஞ்சம் பெரிய கணக்கா கொடுத்திருக்காங்கமா.."

"சும்மா ஏமாத்ததப்பா.. நானும் நோட்டுலதான் எழுதுறேன்.. நீயும் நோட்டுலதான் எழுதுற... உனக்கு தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுப்பா.."

சொல்லிவிட்டு ஓடி விட்டாள். நண்பர் என்னைப் பார்த்து அசடு வழிய, நான் சிரித்தபடி கிளம்பினேன்.

***************

வெள்ளிக்கிழமை சாயங்காலம் கல்லூரி முடிந்து வெளியே தான் வந்திருப்பேன். திடீரென மழை பிடித்துக் கொண்டது. நனைந்து கொண்டே வண்டியைக் கிளப்பினேன். தெப்பக்குளம் வரை என்னோடு டபுள்ஸ் வரும் நண்பரும் ஓடி வந்து ஏறிக் கொண்டார்.

"நல்ல வேளை.. இன்னைக்காவது மழை பெஞ்சதே" என்றார்.

"அடடா, மழை பெஞ்சு ஊரெல்லாம் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்களே.. ரொம்ப சந்தோஷம்" என்றேன்.

"நீங்க வேற.. கிட்டத்தட்ட ஒரு வாரமாவே இந்த ஜெர்கினையும் தொப்பியையும் எடுத்துக்கிட்டு வரேன்... மழையே இல்லை.. ஏதோ இன்னைக்கு பெய்தாலாவது நாம இதுகளத் தூக்கிட்டு திரிஞ்சதுக்கு ஒரு அர்த்தம் இருக்குல்ல.."

அடப்பாவி மனுஷா? எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்களோ..

***************

நண்பர்களே.. நான் எப்போதுமே என்னுடைய இடுகைகளில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் பழக்கம் உடையவன். ஆனால் கடந்த மூன்று நான்கு மாதங்களாகவே என்னால் அவ்வாறு பதில் சொல்ல இயலவில்லை. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கல்லூரியில் இணைய வசதிகள் அதிகமாக இல்லாததும், அங்கே ப்ளாகர் தடை செய்யப்பட்டு இருப்பதும்தான் காரணம். என்னுடைய பதிவை பிரவுசிங் சென்டரில் இருந்துதான் எழுதி வருகிறேன். இருக்கக் கூடிய நேரத்தில் இடுகைகள் எழுதவும், மற்ற நண்பர்களின் இடுகைகளைப் படித்து பின்னூட்டம் இடவும் மட்டுமே முடிகிறது. கூடிய விரைவில் எனக்கென ஒரு கணினி வாங்கி விட்டால் இந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடும். எனவே பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறேன் என்று யாரும் தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி..!!

***************

கல்லூரி ஸ்பெஷல்னு போட்டதால, வழக்கமா சொல்ற கவிதைக்கு பதிலா ஒரு புதிர் கணக்கு.. விடையைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க நண்பர்களே..

ஒரு கல்யாண வீடு. அங்கே வருகிற எல்லோருக்கும் ஆப்பிள் பழம் தருகிறார்கள். பெரிவர்களில் ஆண் என்றால் ஐந்து பழமும், பெண் என்றால் மூன்று பழமும் தர வேண்டும். குழந்தைகளுக்கு அரை பழம் (1/2) மட்டுமே கொடுக்க வேண்டும். திருமணத்துக்கு வந்தது மொத்தம் நூறு பேர் . நம்மிடம் இருப்பதும் நூறு ஆப்பிள்கள்தான். சரியாகப் பகிர்ந்து கொடுத்தாயிற்று. அப்படியானால் வந்த நூறு பேரில் எத்தனை ஆண், எத்தனை பெண் மற்றும் எத்தனை குழந்தைகள் இருந்தார்கள்? யோசிங்க யோசிங்க..

நெக்ஸ்டு மீட் பண்றேன்.... :-))))))))))

58 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...
This comment has been removed by the author.
Raju said...

என்னாது புதிரா..?
யாரப்பார்த்து என்னா பேச்சு...!
பிச்சுப்புடுவேன் பிச்சு. ஆராச்சும் சொல்லுவாகல்ல,அதுக்கு I am Repeating.

Raju said...

Anbu Said...
நல்ல பதிவு அண்ணா..!
அருமையான பதிவு கலைஞர்..!
கலக்கல் பதிவு காமராஜர்..!
சூப்பர் பதிவு ஜே.கே.ஆர்.எம்.பி..!

:-)

நையாண்டி நைனா said...

ரொம்ப உக்காந்து யோசிக்காதீங்க... அப்புறமா உக்காருற எடத்திலே கட்டி வந்திரும்... (புதிரு போடுராராம் புதிரு....!)

Anbu said...

\\\♠ ராஜு ♠ said...

Anbu Said...
நல்ல பதிவு அண்ணா..!
அருமையான பதிவு கலைஞர்..!
கலக்கல் பதிவு காமராஜர்..!
சூப்பர் பதிவு ஜே.கே.ஆர்.எம்.பி..!

:-)\\\\


This is Too much Thala........

vasu balaji said...

ம்கும். எக்ஸ்டெர்னலுக்கு போனாலும் டச்சு விட்டு போக கூடாதுன்னு கணக்கெல்லாம் குடுத்து படுத்தப்படாது. இடுகை சூப்பர்.

Raju said...

அட..இவ்ளோ நேரம் பொடனிக்கி பின்னாலதான் இருந்தீங்களா அன்பு..!

சிவக்குமரன் said...

யப்பா...புதிருக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா!!! நானும் பதிலுக்கு காத்திருக்கேன்!!

Prabhu said...

தல மூணு ஈக்வேஷன் இல்லாம கொடுத்திட்டீங்க. ட்ரையல் அண்ட் எரர்ல கண்டு பிடிச்சோம். ஆண்-10, பெண்-2, குழந்தைகள்-44. ரைட்டா?

ச.பிரேம்குமார் said...

Communication skills பற்றி நீங்கள் சொன்னது மிகவும் சரி. அலுவலகத்திலும் கவனித்திருக்கிறேன். நம்ம தமிழ் பசங்க தான் மாங்கு மாங்குன்னு வேலை செய்வாங்க, ஆனா communicationன்னு வரும் போது பல சமயம் கோட்டை விட்டுடுவாங்க....

பாண்டியன், இந்த பதிவு ஏனோ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது :-)

க.பாலாசி said...

மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்துகொடுத்த அந்த கல்லூரி நிர்வாகத்தை பாராட்டியே தீரவேண்டும்.

சின்னச்சின்ன அனுபவங்கள் நன்று...

நானும் யோசிச்சதுல அந்த கணக்கு சரியா வரமாட்டுது. நீங்களே சொல்லிடுங்க வாத்தியாரே....

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said...
தல மூணு ஈக்வேஷன் இல்லாம கொடுத்திட்டீங்க. ட்ரையல் அண்ட் எரர்ல கண்டு பிடிச்சோம். ஆண்-10, பெண்-2, குழந்தைகள்-44. ரைட்டா?//

குழந்தைகள்-44..?தப்பு... 88 தான் கரெக்ட்.. சரியான விடையைக் கண்டுபிடித்த அவசரத்தில் தப்பாக டைப் செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.. இன்னொரு விடை கூட உண்டு.. அதையும் முடிஞ்சா கண்டுபிடிங்கப்பா..

ச.பிரேம்குமார் said...

//ஆண்-10, பெண்-2, குழந்தைகள்-44. ரைட்டா?//

பப்பு, என்னய்யா உங்க கணக்கு??! ஆளுங்களும் நூறு வரல, பழத்துலயும் நூறு வரல....

புள்ளைங்கள எல்லாம் நல்லா கணக்கு பண்ணுங்க! இந்த கணக்கு விட்டுடுங்க ;-))))

ச.பிரேம்குமார் said...

பப்பு சொன்ன மாதிரி Equationல ஏதோ ஒன்னு இடிக்குது. லைட்டா மண்டைய பிச்சுக்கிட்டதுல இந்த விடை தான் வந்துச்சு
80 குழந்தைகள் - 40 பழங்கள்
20 பெண்கள் - 60 பழங்கள்

அடப்பாவீகளா? அப்போ ஆண்களே வரலீயா? இல்ல வந்தவுங்களுக்கு எல்லாம் ‘பிம்பிலிக்கு பிலாப்பி’யா?

நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய!!

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரேம்.. இந்தப் புதிருக்கு இரண்டு விடைகள்.. ஒன்றை பப்பு கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்டார்..
ஆண்கள் -10...
பெண்கள்-2..
குழந்தைகள்..88

கூட்டிக் கழிச்சு பாருங்க.. கணக்கு எல்லாம் சரியா வரும்..:-))))

அப்புறம் அந்த இரண்டாவது விடையைக் கண்டுபிடக்க முயற்சி பண்ணுங்கப்பு..

ச.பிரேம்குமார் said...

சே! ஒரு நிமிசம் பயபுள்ளைய தப்பா நெனைச்சுட்டேன்.... புள்ள என்னமா யோசிச்சு இருக்கு!!!

சரி, நான் சொன்ன விடை அந்த இரண்டாவது விடை இல்லையா?

வ(வி)டை போச்சே!!!!

அ.மு.செய்யது said...

பயனுள்ள இடுகை கா.பா

//தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை மாற ஒவ்வொரு கல்லூரியும் தனிப்பட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய நிறுவனங்கள் எல்லாம் சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே கேம்பஸ் பிளேஸ்மென்டுக்காக செல்வார்கள். நிலைமை மாறும் என்று நம்புவோம்.//

டிப்ளமோ முடித்து,கேம்பஸில் வேலை கிடைத்து 2 ஆண்டுகளுக்கு
பிறகு பழைய நணபர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து டிப்ளமோ மாணவர்களுக்காக ஒன்றை
ஆரம்பித்தோம்.அந்த கோர்ஸின் முக்கிய நோக்கம் ஆங்கிலத்தில்
சரளமாக அவர்களை பேச வைப்பதை விட,அவர்களுக்கான‌
தன்னம்பிக்கையை எப்படி வளர்ப்பது என்பது தான்.

இன்னும் ஊரக மாணவர்களிடையே நிறைய இது போன்ற வீகெண்ட் புரோகிராம்களை தொடங்க நம் வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதாவது செய்யலாம்.நேர்காணலை சமாளிப்பது,வேலை வாய்ப்பு,பாடி லாங்குவேஜ் இவற்றுக்கு முக்கியத்துவம் தரலாம்.

எதாச்சும் செய்யணும் பாஸ் !!!

அ.மு.செய்யது said...

//ஒன்றை
ஆரம்பித்தோம்.//

அது என்ன ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.

Personality development program !!

ச.பிரேம்குமார் said...

//இன்னும் ஊரக மாணவர்களிடையே நிறைய இது போன்ற வீகெண்ட் புரோகிராம்களை தொடங்க நம் வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதாவது செய்யலாம்.நேர்காணலை சமாளிப்பது,வேலை வாய்ப்பு,பாடி லாங்குவேஜ் இவற்றுக்கு முக்கியத்துவம் தரலாம்.//

அருமையான யோசனை. பாண்டியன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் தயாராக இருக்கிறேன்!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல யோசனை பிரேம்.. இது பற்றி நாம் இன்னமும் தெளிவாக பேச வேண்டும்.. ஊரக மாணவர்கள் என்றில்லை.. பொதுவாகவே மாணவர்களிடம் இருக்கும் வெட்கத்தைப் போக்க நாம் ஏதாவது செய்யலாம்.. நானும் தயார்நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

இது போல ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் என்ன என்ன பண்ணலாம் என்ற யோசனைகளைச் சொல்லுங்கள் நண்பர்களே..
@ செய்யது..

உங்களுடைய எண்ணங்களை சொல்லுங்கள்.. இவற்றை செயல்படுத்த முடிகிறதா என்றுபார்ப்போம்

இராகவன் நைஜிரியா said...

நல்லாவே யோசிக்கிறீங்க அப்பு...

இடுகை ரொம்ப பிடிச்சு இருக்கு.

மாணவர்களுக்கு நல்லது செய்த கல்லூரி நிர்வாகாத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லியிருப்பது - அந்த காலத்து ஆசிரியர்கள் - இப்போ பேர் பகுதி ஆசிரியர்கள் - நீங்க சொன்ன மாதிரி ரொம்ப ஜாலி டைப்தாங்க.

மறத்தமிழன் said...

பாண்டியன்,

ஜெர்கின்,தொப்பி மேட்டர் நச்..

புதிர் இன்னொரு விடை:
5 ஆண்கள்‍
11 பெண்கள்
84 குழந்தைகள்..

நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க...

அன்புடன்,
மறத்தமிழன்.

அ.மு.செய்யது$ said...

//@ செய்யது..

உங்களுடைய எண்ணங்களை சொல்லுங்கள்.. இவற்றை செயல்படுத்த முடிகிறதா என்றுபார்ப்போம்

November 23, 2009 12:33 PM//


மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.பாருங்கள் !!!!

பாலகுமார் said...

//அது "Communication Skills"" என்று சொல்லப்படும் தொடர்பு கொள்ளும் திறன்.//

நிச்சயமாக....
எங்க கல்லூரி சமயத்துல அடிக்கடி கேள்விப்பட்டு மனதில் பதிந்தது "நீ என்ன வேலை பண்ணேன்னு சொல்லி புரிய வைக்க முடியாட்டி அந்த வேலை பண்ணி என்ன பிரயோஜனம்!"

//வாத்தியார் என்றால் மூன்று கிலோ இஞ்சியை முழுதாக அரைத்துக் குடித்த மாதிரியே அலைய வேண்டும் என்று யார் சொன்னது?//
:) :)

//அடப்பாவி மனுஷா? எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்களோ..//
அவரும் உங்களோட சேர்ந்தவரா இருக்கும் :)

//"சும்மா ஏமாத்ததப்பா.. நானும் நோட்டுலதான் எழுதுறேன்.. நீயும் நோட்டுலதான் எழுதுற... உனக்கு தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுப்பா.."//

லாஜிக் கரெக்ட் தானே ! :):)

அப்பறம் புதிர்...
2 equation, 3 variable ....
trial and error மட்டும் தான் சாத்தியமா?

////நல்ல யோசனை பிரேம்.. இது பற்றி நாம் இன்னமும் தெளிவாக பேச வேண்டும்.. ஊரக மாணவர்கள் என்றில்லை.. பொதுவாகவே மாணவர்களிடம் இருக்கும் வெட்கத்தைப் போக்க நாம் ஏதாவது செய்யலாம்.. நானும் தயார்நண்பா..

November 23, 2009 ////

வாய்ப்பிருந்தால், என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

☀நான் ஆதவன்☀ said...

//சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே கேம்பஸ் பிளேஸ்மென்டுக்காக செல்வார்கள். நிலைமை மாறும் என்று நம்புவோம்.//

ஒரு ஆசிரியராக நியாயமான கவலை.

கூடிய சீக்கிரம் அதிகப்பிரசங்கி ஆவதற்கு வாழ்த்துகள் நண்பா :)

உங்கள் ராட் மாதவ் said...

நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி...
மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவினரால், தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு முதல் பரிசாக ரூபாய். 2,000/- (இந்திய ரூபாய் இரண்டாயிரம்) வழங்கப்படும்
மேலதிக விபரங்களுக்கு
http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

குமரை நிலாவன் said...

இன்னும் ஊரக மாணவர்களிடையே நிறைய இது போன்ற வீகெண்ட் புரோகிராம்களை தொடங்க நம் வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதாவது செய்யலாம்.நேர்காணலை சமாளிப்பது,வேலை வாய்ப்பு,பாடி லாங்குவேஜ் இவற்றுக்கு முக்கியத்துவம் தரலாம்.


எதாச்சும் செய்யணும் பாஸ்

மேவி... said...

ஐ... வாத்தியாரே ... எனது இது .... கணக்கு எல்லாம் தந்துட்டு .....

venkat said...

அருமை

விநாயக முருகன் said...

//தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள்.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சீக்கிரம் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்கள். ஆனா‌‌‌ல் பேசுவதிலதான் தயக்கம்+கூச்சம். தயக்கத்தை களைந்தால் சிகரத்தை அடையலாம்.

ajay said...

nan dhan answer kandupidichu pappuvuku anupne... avana kandupidicha madri poturkan... koduma adhayum thapa poturkan.. pappu cat padikrapa ipdi copy adikuradhulaye careless mistake panalama???

வினோத் கெளதம் said...

நல்லா இருந்த்ச்சு..:)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))))))))))

வால்பையன் said...

வேலை மாத்திட்டிங்களா?

ஆ.ஞானசேகரன் said...

யோசித்தது எல்லாம் நல்லாயிருக்கு

ஆ.ஞானசேகரன் said...

யோசித்தது எல்லாம் நல்லாயிருக்கு

Unknown said...

//.. வாத்தியார் என்றால் மூன்று கிலோ இஞ்சியை முழுதாக அரைத்துக் குடித்த மாதிரியே ..//

அப்படித்தானே இதுவரைக்கும் பார்த்துருக்கேன்.. :-)

//.. பொதுவாகவே மாணவர்களிடம் இருக்கும் வெட்கத்தைப் போக்க நாம் ஏதாவது செய்யலாம்.. //

நானும் மாணவனா இருக்கும்போது அப்படித்தான் இருந்தேன், இப்போதான் வேற வழி இல்லாம கஷ்டப்பட்டு பேசுறேன்.. :-(

//.. வால்பையன் said...

வேலை மாத்திட்டிங்களா? ..//

இல்ல தல, வேல செய்யுற இடத்த தான் மாத்திட்டாராம்.. எப்பூடி.. ;-)

Prabhu said...

டேய் வெங்காயம் அஜய், இத விளம்பரம் பண்ணதான் கமெண்டுக்கு வந்தயா? அதான் கண்டுபிடிச்'சோம்'னு போட்டிருக்கேன்ல. மானத்த வாங்குறதுக்குன்னே வந்திருக்கான்சார்!

நசரேயன் said...

வாத்தியாரு எம்புட்டு யோசிக்கிறாரு

செந்தில் நாதன் Senthil Nathan said...

வாத்தியார் ஐயா, நல்லதொரு இடுகை!! நானும் கைகோர்க்க தயார்..மின்னஞ்சல் அனுப்பி இருக்கேன்!!

இடுகைக்கு நன்றி...

தருமி said...

முதல்ல சொன்ன விஷயம் ரொம்ப முக்கியம். செய்ய வேண்டியது நிறைய. பள்ளியிலேயே ஆரம்பிக்கணும்...

malarvizhi said...

என் கணவர் மருத்துவ கல்லூரி பேராசிரியர் . அவரும் மாணவர்களிடம் ஒரு நெருங்கிய நண்பரை போல் பழகி அவர்களுக்கு அறுவைசிகிச்சையில் அனைத்தையும் நன்றாக சொல்லிகொடுப்பார் . மாணவர்களும் மிகவும் பிரியமுடன் பழகுவார்கள் . பகிர்வு அருமை .

cheena (சீனா) said...

நல்ல சிந்தனையுடன், நடநதவற்றை - கண்டவற்றை எழுதிய காபா - நல்வாழ்த்துகள்

ஏதாவது செய்ய வேண்டும் - செய்யலாமே - செய்வோமே

கார்த்திகைப் பாண்டியன் said...

//கிருஷ்ணமூர்த்தி said...
அப்படி ஒரு கடுமையான பழக்கத்தைக் கடைப்பிடித்த நிறைய வாத்திமார்தான்! இதில் சந்தேகம் வேறு இருக்கிறதா என்ன?இவர்கள் இஞ்சிகுடிக்கிறார்களோ அல்லது அடிக்கிறார்களோ என்னவோ, மாணவர்களை நிறையவே விளக்கெண்ணெய் குடிக்க வைத்துவிடுகிறார்கள்:-))//

காலம் மாறிப் போச்சு ஐயா.. இப்பவெல்லாம் அந்த மாதிரி வாத்தியாருங்க ரொம்பக் கம்மி ஆகிட்டாங்க..

// ராஜு ♠ said...
என்னாது புதிரா..?யாரப்பார்த்து என்னா பேச்சு...!பிச்சுப்புடுவேன் பிச்சு. ஆராச்சும் ொல்லுவாகல்ல,அதுக்கு I am Repeating.//

சோம்பேறி நம்பர் ஒன்..

//ராஜு ♠ said...
Anbu Said...
நல்ல பதிவு அண்ணா..!
அருமையான பதிவு கலைஞர்..!
கலக்கல் பதிவு காமராஜர்..!சூப்பர் பதிவு ஜே.கே.ஆர்.எம்.பி..!:-)//

பட்டாசு.. அன்பு மண்டை காஞ்சு சுத்துரானாம்ப்பா..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
ரொம்ப உக்காந்து யோசிக்காதீங்க... அப்புறமா உக்காருற எடத்திலே கட்டி வந்திரும்... (புதிரு போடுராராம் புதிரு....!)//

விடைய யோசிக்க பயந்துக்கிட்டு இப்படி எல்லாம் கிளப்பி விட்டா.. நாங்க மிரண்டிருவோமா?

// Anbu said...
This is Too much Thala........//

விடு அன்பு.. டக்கு பொழச்சு போகட்டும்

//வானம்பாடிகள் said...
ம்கும். எக்ஸ்டெர்னலுக்கு போனாலும் டச்சு விட்டு போக கூடாதுன்னு கணக்கெல்லாம் குடுத்து படுத்தப்படாது. இடுகை சூப்பர்.//

நன்றி நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//இரா.சிவக்குமரன் said...
யப்பா...புதிருக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா!!! நானும் பதிலுக்கு காத்திருக்கேன்!!//

//க.பாலாசி said...
மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்துகொடுத்த அந்த கல்லூரி நிர்வாகத்தை பாராட்டியே தீரவேண்டும்.சின்னச்சின்ன அனுபவங்கள் நன்று...நானும் யோசிச்சதுல அந்த கணக்கு சரியா வரமாட்டுது. நீங்களே சொல்லிடுங்க வாத்தியாரே....//

இரண்டு விடைகளுமே பின்னூட்டத்தில் சொல்லிட்டாங்க நண்பர்களே

கார்த்திகைப் பாண்டியன் said...

//இராகவன் நைஜிரியா said...
நல்லாவே யோசிக்கிறீங்க அப்பு... இடுகை ரொம்ப பிடிச்சு இருக்கு. மாணவர்களுக்கு நல்லது செய்த கல்லூரி நிர்வாகாத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லியிருப்பது - அந்த காலத்து ஆசிரியர்கள் - இப்போ பேர் பகுதி ஆசிரியர்கள் - நீங்க சொன்ன மாதிரி ரொம்ப ஜாலி டைப்தாங்க.//

ரொம்ப நன்றிண்ணே..

//மறத்தமிழன் said...
பாண்டியன்,ஜெர்கின்,தொப்பி மேட்டர் நச்..
புதிர் இன்னொரு விடை:
5 ஆண்கள்‍
11 பெண்கள்
84 குழந்தைகள்..
நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க...//

நன்றி தல.. கரெக்டான விடைதான்..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//பாலகுமார் said...
வாய்ப்பிருந்தால், என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்.//

விரிவான விமர்சனத்துக்கு நன்றி பாலா.. இது பற்றி என்ன செய்யலாம் என்பதை யோசிப்போம் நண்பா

// ☀நான் ஆதவன்☀ said...
ஒரு ஆசிரியராக நியாயமான கவலை.
கூடிய சீக்கிரம் அதிகப்பிரசங்கி ஆவதற்கு வாழ்த்துகள் நண்பா :)//

உங்க வாக்கு பொன்னா பலிக்கட்டும் நண்பா :-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//RAD MADHAV said...
நல் வணக்கங்கள்...“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி...மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவினரால், தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு முதல் பரிசாக ரூபாய். 2,000/- (இந்திய ரூபாய் இரண்டாயிரம்) வழங்கப்படும்மேலதிக விபரங்களுக்கு
ttp://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html//

கலந்து கொள்கிறேன் நண்பா

//குமரை நிலாவன் said...
எதாச்சும் செய்யணும் பாஸ்//

முயற்சி பண்ணுவோம் தல

//டம்பி மேவீ said...
ஐ... வாத்தியாரே ... எனது இது .... கணக்கு எல்லாம் தந்துட்டு//

எல்லாம் ஒரு குஜால்ஸ்தான்ப்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

// venkat said...
அருமை//

நன்றிங்க

// என்.விநாயகமுருகன்
தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சீக்கிரம் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்கள். ஆனா‌‌‌ல் பேசுவதிலதான் தயக்கம்+கூச்சம். தயக்கத்தை களைந்தால் சிகரத்தை அடையலாம்.//

உண்மைதான் நண்பா..

//ajay said...
nan dhan answer kandupidichu pappuvuku anupne... avana kandupidicha madri poturkan... koduma adhayum thapa poturkan.. pappu cat padikrapa ipdi copy adikuradhulaye careless mistake panalama???//

பப்பு..மவனே மாட்டுனியா?

//வினோத்கெளதம் said...
நல்லா இருந்த்ச்சு..:)//

// ஸ்ரீ said...
:-))))))))))))))))))//

நன்றி நண்பர்களே

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
வேலை மாத்திட்டிங்களா?//

இல்ல தல.. ஒரு வாரம் வேற கல்லூரியில வேலை

//ஆ.ஞானசேகரன் said...
யோசித்தது எல்லாம் நல்லாயிருக்கு//

நன்றி தலைவரே

// பட்டிக்காட்டான்.. said...
அப்படித்தானே இதுவரைக்கும் பார்த்துருக்கேன்.. :-)//

நாங்க எல்லாம் வேற மாதிரி ஆளுங்க அப்பு..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

// pappu said...
டேய் வெங்காயம் அஜய், இத விளம்பரம் பண்ணதான் கமெண்டுக்கு வந்தயா? அதான் கண்டுபிடிச்'சோம்'னு போட்டிருக்கேன்ல. மானத்த வாங்குறதுக்குன்னே வந்திருக்கான்சார்!//

விடுங்க பப்பு.. இதீல்லாம் பொது வாழ்க்கைல சாதரணமப்பா..

//நசரேயன் said...
வாத்தியாரு எம்புட்டு யோசிக்கிறாரு//

அப்பப்போ..:-)))

//செந்தில் நாதன் said...
வாத்தியார் ஐயா, நல்லதொரு இடுகை!! நானும் கைகோர்க்க தயார்..மின்னஞ்சல் அனுப்பி இருக்கேன்!! இடுகைக்கு நன்றி...//

பார்த்தேன் நண்பா.. பதில் போட்டிருக்கேன்.. பாருங்க.. ஏதாவது செய்ய முயலுவோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
முதல்ல சொன்ன விஷயம் ரொம்ப முக்கியம். செய்ய வேண்டியது நிறைய. பள்ளியிலேயே ஆரம்பிக்கணும்...//

ஆமாங்க ஐயா.. நாமும் ஏதாவது செய்யலாமான்னு பார்ப்போம்

// MALARVIZHI said...
என் கணவர் மருத்துவ கல்லூரி பேராசிரியர் . அவரும் மாணவர்களிடம் ஒரு நெருங்கிய நண்பரை போல் பழகி அவர்களுக்கு அறுவைசிகிச்சையில் அனைத்தையும் நன்றாக சொல்லிகொடுப்பார் . மாணவர்களும் மிகவும் பிரியமுடன் பழகுவார்கள் . பகிர்வு அருமை .//

உங்கள் கணவர் பற்றி அறிய வந்ததில் மகிழ்ச்சி.. ரொம்ப சந்தோசம்..நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

// cheena (சீனா) said...
நல்ல சிந்தனையுடன், நடநதவற்றை - கண்டவற்றை எழுதிய காபா - நல்வாழ்த்துகள்.//

நன்றி ஐயா..

//ஏதாவது செய்ய வேண்டும் - செய்யலாமே - செய்வோமே//

ஒதுங்கி நிக்காம வாங்க செய்வோம்னு களத்துல இறங்கத் தயாரா இருக்கீங்க பாருங்க.. நன்றி.. கண்டிப்பா ஏதாவது செய்யலாம் ஐயா..

ஸ்ரீராம். said...

எல்லா வசதிகளுடன் பொறியியல் கல்லூரி...அழகர் மலை அடிவாரத்தில்....
பாராட்டப் படவேண்டிய ஒன்று.

shaan said...

Communication Skills - இதில் தென் மாவட்டம் வட மாவட்டம் என்று கூற முடியாது. நகர மாணவர்கள் கிராம மாணவர்கள் என்று தான் கூற முடியும். ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதை விட முக்கியம் ஆங்கிலத்தில் எழுதிய தொழில்நுட்ப பாடங்களை சரியாக புரிந்து கொள்ளுதலும், எண்ணியதை சரியாக எழுதுவதும். இன்று வலையில் எவ்வளவோ அறிவியல் சார்ந்த விஷயங்கள் கிடைக்கின்றன. அவற்றை நமது மாணவர்கள், ஏன் நமது ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்களா என்பதே ஒரு கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஸ்ரீராம். said...
எல்லா வசதிகளுடன் பொறியியல் கல்லூரி...அழகர் மலை அடிவாரத்தில்....பாராட்டப் படவேண்டிய ஒன்று.//

முயன்றால் மதுரையில் நல்லதொரு கல்லூரியாக வருவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது நண்பா

// shaan said...
Communication Skills - இதில் தென் மாவட்டம் வட மாவட்டம் என்று கூற முடியாது. நகர மாணவர்கள் கிராம மாணவர்கள் என்று தான் கூற முடியும். ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதை விட முக்கியம் ஆங்கிலத்தில் எழுதிய தொழில்நுட்ப பாடங்களை சரியாக புரிந்து கொள்ளுதலும், எண்ணியதை சரியாக எழுதுவதும். இன்று வலையில் எவ்வளவோ அறிவியல் சார்ந்த விஷயங்கள் கிடைக்கின்றன. அவற்றை நமது மாணவர்கள், ஏன் நமது ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்களா என்பதே ஒரு கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது.//

நியாயமான வருத்தம்.. ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே இணையத்தை பாடம் நடத்த பயன்படுத்தி வருகிறோம் என்பதும் உண்மைதான்..