November 25, 2009

உறுமீன்களற்ற நதி..!!!

ஒரு கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும்? கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா? மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா? கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும் உள்ளதா? ஒரு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கிறதே? எது நல்ல கவிதை? சாமானியன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதினால்தான் நல்ல கவிதையா? அதுதான் இலக்கியத் தரமா? என் மனதுக்குள் பல நாட்களாகவே இருந்து வரும் கேள்விகள் இவை.

சமீபத்தில் நண்பர் மற்றும் கவிஞர் யாத்ராவிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் அழகாகச் சொன்னார்.. "கவிதை என்பது எப்படி வேண்டுமானாலும் எழுதப்பட்டு இருக்கலாம். எந்த விதிகளும் கிடையாது. பத்தி பத்தியாகக் கூட எழுதலாம். ஆனால் அதைப் படித்து முடிக்கும் போது உங்களுக்குள் ஒரு சிறு சலனத்தையேனும் உண்டாக்கி இருந்தால் அதுதான் நல்ல கவிதைக்கான அடையாளம். வாசிப்பு அனுபவத்தைப் பொறுத்து ஒவ்வொருவரின் புரிதல் தன்மை வேறுபடலாம். புரியா விட்டால் நல்ல கவிதை, புரிந்தால் அது சாதாரணமானது என்றெல்லாம் கிடையாது.. எல்லாமே இலக்கியம்தான்." யோசித்துப் பார்க்கும்போது இது எத்தனை ஆழமான உண்மை என்று புரிகிறது.

கவிதைகளைப் பொறுத்த மட்டில் நான் வாசிப்பின் ஆரம்பநிலையில் இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். புத்தகமாக வாங்கிப் படிக்கும் முன்பே முகுந்த் நாகராஜனின் கவிதைகளை இணையத்தில் வாசித்து இருக்கிறேன். எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், அற்புதமான விஷயங்களை கவிதைகளில் சொல்ல முடியும் என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. அதன் பின்னர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் என்னைப் பெருமளவில் ஈர்த்து இருக்கின்றன. அந்த வரிசையில், நான் வாசித்தவரையில், என்னைப் பெரிதும் கவர்ந்த கவிதைப் புத்தகமென இசையின் "உறுமீன்களற்ற நதி"யைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இசை தன் மீதும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீதும் காட்டும் அன்பும் பாசமும் இந்தப் புத்தகத்தின் கவிதைகள் வழியே வெளிப்படுகின்றன. பொதுவாக கவிதைகளில் காணக் கிடைக்காத கேலியும், கிண்டலும் இசையின் கவிதைகள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. சமூக அவலங்களின் மீதான சாடல்களையும், தன் மன அடுக்குகளில் தோன்றும் விசித்திரமான எண்ணங்களையும் அழகிய கவிதைகளாய் மாற்றும் வித்தை இசைக்கு மிக எளிதாக கைவருகிறது. கண்முன்னே நடக்கும் அக்கிரமங்களைக் கண்டும் காணாதது போல் போக வேண்டிய சூழல், ஆசைக்கும் நிஜ வாழ்க்கைக்குமான முரண்கள், கடவுளின் மீதான தன் கோபம் என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது அவருடைய கவிதைமொழி.

தமிழில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான கவிஞர்களில் தானும் ஒருவர் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் பதிவு செய்து இருக்கிறார் இசை. இசையின் இயற்பெயர் .சத்தியமூர்த்தி. கோவையில் வசித்து வருகிறார். தற்போது உயிர்மையில் தொடர்ச்சியாக கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. "காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி" என்பது முதல் கவிதைத் தொகுப்பு. 'உறுமீன்களற்ற நதி" அவருடைய இரண்டாவது தொகுப்பு. டங்குடிங்குடு என்பற பெயரில் பதிவுலகிலும் எழுதி வருகிறார்.

புத்தகத்தில் இருந்து சில கவிதைகள்..

பிச்சாந்தேகி

ஒவ்வொரு இரவிலும்
தன்னுடலை வட்டவடிவ
அலுமினியத் தட்டாக்கி
யௌவனம் கொழுத்த வீடுகளின்
முன் நிற்கிறான் அவன்

காலையில் கதவு திறக்கும் பெண்ணுடலில்
முட்டி மோதி அலையுமவன் பெருமூச்சு

விளக்கை அணைத்ததும்
எங்கிருந்து கிளம்பி உடலில் நுழைகிறது
அந்த நுண்கிருமி

எரிக்க எதுவும் கிடைக்காமல்
படுக்கையில் கிடந்து புரள்கிறது ஆறடி ஜுவாலை

தலையணை எங்கும் குவிந்து கிடக்கிறது உதடுகள்

அவன் நினைவில் புணர்ந்த
பதிவிரதைகளின் சாபமோ என்னவோ
இதுவரையிலும் ஒரு சில்லரைக்காசும்
பெற முடியாத தன் தட்டை
நாற்பத்தி மூன்றாம் வயதில்
கிணற்றில் முக்கி அழித்தான்

3 கி.மீ

அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்துக்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்து விட்டது ஒரு நாள்

வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்து கொண்டிருக்க

3 கி.மீ 3 கி.மீ எனத்
தன்னைப் பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்

தற்கொலைக்குத் தயாராகுபவன்

தற்கொலைக்குத் தயாராகுபவன்
பித்துநிலையில்
என்னன்னெவோ செய்கிறான்

அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து
தனியே தன்னுருவைப்
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்திரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கை கோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல்நுனி
கூடவே வருவேன் என்கிறது

உறுமீன்களற்ற நதி

பதிப்பகம்: காலச்சுவடு

விலை: ரூ.60/-

(பின்குறிப்பு: வருகிற வெள்ளிக்கிழமை (27-11-09) அன்று நண்பர் யாத்ராவின் திருமண தாம்பூல நிச்சய விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..)

57 comments:

மேவி... said...

tamilmanathil serthachu,,

மேவி... said...

me the first ah

மேவி... said...

pagirvukku nantri

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் யாத்ரா!

Raju said...

கவிஞர் யாத்ராவுக்கு வாழ்த்துக்கள்.

பாலகுமார் said...

"உறுமீன்களற்ற நதி..!!!" தலைப்பே வசீகரிக்கிறது.

//எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கை கோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல்நுனி
கூடவே வருவேன் என்கிறது //

கவிதை அருமை. அறிமுகத்திற்கு நன்றி கார்த்தி.

யாத்ராவிற்கு வாழ்த்துக்கள் பல !

மண்குதிரை said...

thanks for sharing karthi

க.பாலாசி said...

கவிதைகள் பற்றின அழகிய பகிர்தல். அவரின் மூன்றாம் கவிதையை மிக ரசித்தேன்.

cheena (சீனா) said...

அன்பின் காபா

அருமையான அறிமுகம் - படித்து ரசித்து எழுதப்பட்ட அறிமுகம் - நன்று நன்று - எடுத்துக்காட்டிய கவிதைகள் அனைத்தும் அருமை

இரவினில் அவன் படும் பாடு உணர்ச்சிகரமாக விவரிக்கப்பட்டிருக்கிறது

சாபங்கள் 43 வயது வரை தடுத்தனவா

ஊர் பின்னோக்கி நகருகிறது

சுண்டு விரல் நுனி - அடடா என்ன சிந்தனை

நல்வாழ்த்துகள் காபா

நல்வாழ்த்துகள் யாத்ரா

vasu balaji said...

கவிதை குறித்த விளக்கம் அருமை. கவிதைகள் அடிக்கரும்பு. யாத்ராவுக்கு வாழ்த்துகள்.

ஊர்சுற்றி said...

நல்ல பகிர்வு.

நர்சிம் said...

மிக நல்ல பதிவு நண்பா.

மிக பயனுள்ள தகவல்கள்.

ஹேமா said...

இன்னும் கவிதைகள் பற்றிய விளக்கம் அறிந்ததில் மகிழ்ச்சி.நன்றி கார்த்திக்.

யாத்ராவுக்கு வாழ்த்துக்களும் கூட.

மேவி... said...

வாழ்த்துக்கள் யாத்ரா

அ.மு.செய்யது said...

அற்புதமான இடுகை கா.பா..!!! பகிர்வுக்கு நன்றி !!

ரசித்து வாசிக்க முடிந்தது.கவிஞர் யாத்ராவுக்கு வாழ்த்துக்கள் !!!

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு,கா.பா.

உங்களை எனக்கு அறிமுகம் செய்து தந்ததிற்கும் மிகுந்த அன்பு.யாத்ராவிற்கு என் வாழ்த்தை தெரிவியுங்கள்.நன்றி மக்கா!

தேவன்மாயம் said...

யாத்ராவுக்கு வாழ்த்துக்கள் நல்ல அறிமுகம்!!

நசரேயன் said...

நல்ல பகிர்வு

வினோத் கெளதம் said...

நல்ல பகிர்வு..கவிஞர் யாத்ராவுக்கு வாழ்த்துக்கள்..

யாத்ரா said...

நண்பர் இசை பற்றிய அறிமுகம் அருமை நண்பா.

வாழ்த்திய உங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள் பல.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி..

யாத்ராவுக்கு வாழ்த்துகள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
tamilmanathil serthachu,,pagirvukku nantri//

நன்றி நண்பா

//பீர் | Peer said...
வாழ்த்துக்கள் யாத்ரா!//

// ♠ ராஜு ♠ said...
கவிஞர் யாத்ராவுக்கு வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றி மக்கா.. அப்படியே இடுகையைப் பத்தியும் ரெண்டு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல..

கார்த்திகைப் பாண்டியன் said...

// பாலகுமார் said...
"உறுமீன்களற்ற நதி..!!!" தலைப்பே வசீகரிக்கிறது.கவிதை அருமை. அறிமுகத்திற்கு நன்றி கார்த்தி.//

அருமையான புத்தகம் பாலா.. முடிந்தால் வாசித்துப் பாருங்கள்

//மண்குதிரை said...
thanks for sharing karthi//

Most welcome boss:-))))

//க.பாலாசி said...
கவிதைகள் பற்றின அழகிய பகிர்தல். அவரின் மூன்றாம் கவிதையை மிக ரசித்தேன்.//

நன்றி பாலாஜி..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//cheena (சீனா) said...
அன்பின் காபா அருமையான அறிமுகம் - படித்து ரசித்து எழுதப்பட்ட அறிமுகம் - நன்று நன்று - எடுத்துக்காட்டிய கவிதைகள் அனைத்தும் அருமை//

ரொம்ப நன்றி ஐயா

//வானம்பாடிகள் said...
கவிதை குறித்த விளக்கம் அருமை. கவிதைகள் அடிக்கரும்பு. யாத்ராவுக்கு வாழ்த்துகள்.//

நன்றி நண்பரே

//ஊர்சுற்றி said...
நல்ல பகிர்வு.//

நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//நர்சிம் said...
மிக நல்ல பதிவு நண்பா.மிக பயனுள்ள தகவல்கள்.//

ரைட்டு தல

// ஹேமா said...
இன்னும் கவிதைகள் பற்றிய விளக்கம் அறிந்ததில் மகிழ்ச்சி.நன்றி கார்த்திக்.யாத்ராவுக்கு வாழ்த்துக்களும் கூட.//

உங்கள மாதிரி கவிஞர்கள் கிட்ட இருந்து தானே நாம எல்லாம் கத்துக்க முடியும் தோழி..

//அ.மு.செய்யது said...
அற்புதமான இடுகை கா.பா..!!! பகிர்வுக்கு நன்றி !!ரசித்து வாசிக்க முடிந்தது.கவிஞர் யாத்ராவுக்கு வாழ்த்துக்கள் !!!//

வாழ்த்துக்கு நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//பா.ராஜாராம் said...
அருமையான பகிர்வு,கா.பா.உங்களை எனக்கு அறிமுகம் செய்து தந்ததிற்கும் மிகுந்த அன்பு.யாத்ராவிற்கு என் வாழ்த்தை தெரிவியுங்கள்.நன்றி மக்கா//

கண்டிப்பாக சொல்லி விடலாம் நண்பரே

//தேவன்மாயம் said...
யாத்ராவுக்கு வாழ்த்துக்கள் நல்ல அறிமுகம்!! //

நன்றி தேவா சார்

//நசரேயன் said...
நல்ல பகிர்வு//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//வினோத்கெளதம் said...
நல்ல பகிர்வு..கவிஞர் யாத்ராவுக்கு வாழ்த்துக்கள்..//

வாங்க வினோத்.. நன்றிப்பா

//யாத்ரா said...
நண்பர் இசை பற்றிய அறிமுகம் அருமை நண்பா.வாழ்த்திய உங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள் பல. //

திருமண நிச்சயம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள் கவிஞரே

//பட்டிக்காட்டான்.. said...
பகிர்வுக்கு நன்றி..யாத்ராவுக்கு வாழ்த்துகள்..//

நன்றி சம்பத்:-))

குமரை நிலாவன் said...

கவிதை அருமை. அறிமுகத்திற்கு நன்றி நண்பா.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல பகிர்வு நண்பா.. மணிகண்டன் அவர்களின் வலைப்பக்கத்திலும் இந்நூலைப் பற்றிய அறிமுகம் கண்டேன்.

Anonymous said...

கவிதை குறித்த விளக்கம் அருமை

ஆ.ஞானசேகரன் said...

கவிதை பற்றிய விளக்கம் நல்லாயிருக்கு... உங்களின் பகிர்வுக்கும் நன்றிபா....

Karthik said...

நல்ல பதிவு..

Senthilkumar said...

அருமையான பகிர்வு கார்த்தி!
இந்தக் கவிதைத்தொகுப்பை நானும் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
நல்லதொரு அனுபவமாக இருக்கிறது.

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/casino%20online/2_casinoss.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/casino%20online/2_casinoss.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/10_buy_viagra_online.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/10_buy_viagra_online.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/9_buy_viagra_online.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/9_buy_viagra_online.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/casino%20online/3_casinoss.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/casino%20online/3_casinoss.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/16_buy_viagra_online.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/16_buy_viagra_online.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/casino%20online/2_casinoss.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/casino%20online/2_casinoss.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20cialis/3_mycialis.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20cialis/3_mycialis.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20cialis/13_mycialis.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20cialis/13_mycialis.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20cialis/13_mycialis.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20cialis/13_mycialis.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/3_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/3_viagra1.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/6_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/6_buygenericviagra.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/20_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/20_buygenericviagra1.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/12_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/12_viagra1.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/15_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/15_buygenericviagra.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/18_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/18_buygenericviagra1.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/3_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/3_viagra1.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/11_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/11_buygenericviagra.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/2_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/2_buygenericviagra1.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/14_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/14_viagra1.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/16_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/16_buygenericviagra.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/3_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/3_buygenericviagra1.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/casino%20online/2_casinoss.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/casino%20online/2_casinoss.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/casino%20online/3_casinoss.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/casino%20online/3_casinoss.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/casino%20online/1_casinoss.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/casino%20online/1_casinoss.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/casino%20online/3_casinoss.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/casino%20online/3_casinoss.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20cialis/12_mycialis.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20cialis/12_mycialis.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20cialis/6_mycialis.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20cialis/6_mycialis.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20cialis/14_mycialis.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20cialis/14_mycialis.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/casino%20online/20_style_casino.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/casino%20online/20_style_casino.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/casino%20online/10_style_casino.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/casino%20online/10_style_casino.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/casino%20online/7_style_casino.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/casino%20online/7_style_casino.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20cialis/18_mycialis.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20cialis/18_mycialis.png[/IMG][/URL]