December 12, 2009

உக்கார்ந்து யோசிச்சது (12-12-09)..!!!

ஒரு சில மனிதர்களைப் பார்க்கும் பொழுது மட்டும் "எப்படி இவர்களால் இத்தனை அன்பானவர்களாக, அடுத்தவர் மீது அக்கறை கொண்டவர்களாக இருக்க முடிகிறது?" என்று வியப்பாக இருக்கும். பதிவுலகில் அப்படிப்பட்ட ஒரு மனுஷி - ரம்யா. "Will to Live" என்கின்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். நல்லவர்களைச் சுற்றி நல்லவர்களே இருப்பார்கள் என்பதற்கு சான்று - ரம்யா அக்காவுடன் இருக்கும் கலையரசி அக்கா மற்றும் நண்பர் சித்தர் சுரேஷ். அருமையான மனிதர்கள். இரண்டு நாட்கள் அவர்களோடு தங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் அன்பில் என்னை திக்குமுக்காட வைத்து விட்டார்கள். இந்த வார "தேவதை" புத்தகத்தில் ரம்யா அக்கா பற்றிய கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. வாழ்வில் தான் சந்தித்த கஷ்டங்களை எதிர்கொண்டு, தைரியத்தோடு போராடி முன்னேறி இருக்கும் ரம்யாக்காவின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம். "இத்தனை கஷ்டங்களா" என்று பரிதாபப்படுவதை விட "நாமும் போராட வேண்டும்" என யாரேனும் ஒருவருக்குத் தோன்றினால் கூட அதுதான் இந்தக் கட்டுரையின் வெற்றி.

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்..

***************

போன வருடம் பூராவும் சாரு அமீரின் "பருத்தி வீரனைத்" தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினார். "Ethnic feel", "Dynosian feel" என்றெல்லாம் என்னென்னமோ சொன்னார். அதுக்கு பதில் சொல்ற மாதிரி "என்னப் பத்தி தப்பா நெனச்சுட்டீங்களே"ன்னு அமீர் யோகியோட வந்திருக்கார். ( யு டூ அமீர்? ) இதுல வேதனை என்னன்னா, இப்போ சாரு மிஷ்கின் பத்தியும் "நந்தலாலா" பத்தியும் பேச ஆரம்பிச்சு இருக்கார். எனக்கு ரொம்பவும் பிடிச்ச இன்னொரு டைரக்டர். அடுத்தது அவர்தானா? அவ்வவ்....

ஒங்குத்தமா.. எங்குத்தமா.. யார நானும் குத்தம் சொல்ல..

***************

இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக பல கலவரங்கள் நடந்தது நமக்குத் தெரியும். இதை அடிப்படையாகக் கொண்டு பல புத்தகங்கள் வந்து இருக்கின்றன. "1947 - தி எர்த்" என்று சமீபத்தில் கூட ஒரு படம் வந்தது. ஆனால் அதே நேரத்தில், நமக்கு வெகு அருகே இதே போல ஒரு பிரச்சினை நடந்து இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சுதந்திர இந்தியாவுடன் இணைய மறுத்த ஹைதராபாத் நிஜாம் அரசு பற்றியும், அதனால் ஏற்பட்ட கலவரங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது அசோகமித்திரனின் "18ஆவது அட்சக்கோடு". சந்திரசேகரன் என்னும் தனி மனிதனின் பார்வையில் அன்றைய சூழலை படம் பிடித்துக் காட்டுகிறது அசோகமித்திரனின் பேனா. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து சேரும் அகதிகள், அவர்கள் வாழ்க்கை, பிற மதத்தின் மக்கள் மீதான துவேஷம், மாணவர் போராட்டம் என்று பல விஷயங்களைப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி பரிசையும் வென்றிருக்கிறது. நடை கொஞ்சம் கொழ கொழ வளா வளா தான் என்றாலும் தமிழின் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவுகளில் ஒன்று என்றுசொல்லலாம்.

***************

மொபைலில் பேசிக் கொண்டே போய் விபத்தில் சிக்கிக் கொள்ளுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது கவலையளிக்கிறது. நேற்று காலை மதுரையிலும் ஒரு விபத்து. கணவன், மனைவி சென்ற பைக். போனில் பேசிக்கொண்டே போய் நேராகச் சென்று குப்பை வண்டிக்குள் விட்டிருக்கிறார்கள். மனைவி ஸ்பாட் அவுட். கணவன் பிழைப்பது கஷ்டம்தான் என்கிறார்கள். ஒன்றரை வயது குழந்தை வேறு இருக்கிறதாம். ஏன் இப்படி? வண்டியை நிறுத்தி விட்டு பேசலாம்.. இல்லையா... வீட்டுக்கு போய் சேர்ந்து விட்டு பேசலாம். முடியாதென்றால் ஒரேடியாகப் போக வேண்டியதுதான். மக்கள் யோசிப்பார்கள்?

சிந்தனை செய் மனமே..

***************


அரசுப் பேருந்துகளில் எல்லாம் சமீப காலமாக "பூம் டிவி" என்று புதிதாக ஒன்றைக் காட்டி வருகிறார்கள். நல்ல முயற்சி. ஆனால் மனசாட்சி இல்லாத யாரோ ஒருவர்தான் பாடல்களை செலக்ட் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். கஸ்தூரிராஜாவின் விசிறி போல.. பிரபுவும் தேவயானியும் நடித்த கும்மிப்பாட்டு, காலம் போன காலத்தில் சிவாஜி நாட்டுப்புறக் கலைஞராக நடித்த படம் - இதிலிருந்து எல்லாம் பாட்டு போட்டால் மனுஷன் பஸ்சுக்குள் ஒக்கார்ந்திருக்க முடியுமா? நடுநடுவில் விளம்பரங்கள் வேற.. ஷ்.. யப்பா.. முடியல.. ஏதோ தலைவரோட "பணக்காரன்" புண்ணியத்துல கொஞ்சமா பொழுது போகுது.


மாத்தி யோசி..


***************


சமீப காலமாக அடிக்கடி கண்களில் தட்டுப்படும் பெயர் - நாவிஷ் செந்தில்குமார். மனிதர் கவிதைகளில் பிரித்து மேய்கிறார். திண்ணை.காமில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவருடைய இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.


நட்பு

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்
"கவலைப்பட வில்லை" என
அப்பாவிடமும்
"அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது...
"காலையிலிருந்து சாப்பிடல…
ரொம்பப் பசிக்குதுடா,
ஏதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது...

***************

சூப்பர் ஸ்டார் - எத்தனை பேர் வந்தாலும் இந்தப் பட்டத்துக்கு உரியவர் ஒருவர்தான். ஆறிலிருந்து அறுபது வரை - அனைவரின் உள்ளம் கவர்ந்த மனிதர். பிறந்த தின வாழ்த்துகள்.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..

இப்போதைக்கு அவ்வளவுதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))))))))

44 comments:

மேவி... said...

ஆமாங்க, என்னை ரம்யா அக்கா வின் வீட்டிற்க்கு அழைத்து போன தற்கு ரொம்ப நன்றி சகா

மேவி... said...

சாரி, நான் சாரு வின் பிளாக் யை அதிகம் படிபதில்லை.......கொண்டாடினார் ன்னு சொல்லுரிங்க ...அது என்ன மாதிரியான ஆட்டம் ன்னு சொல்லவே இல்லை

நாடோடி இலக்கியன் said...

நல்ல பகிர்வு நண்பா.

மேவி... said...

"அசோகமித்திரனின் "18ஆவது அட்சக்கோடு"


இதை படித்துவிட்டு ...அறிமுகபடுத்தி ஓர் பதிவு போடலாமே ????

ஈரோடு கதிர் said...

//ரம்யாக்காவின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம்.//


ஆமாம் கார்த்தி

காரணம் ஆயிரம்™ said...

நல்ல தொகுப்பு கார்த்திகைபாண்டியன்...

நல்ல புத்தகங்களுக்கும், உலக சினிமாக்களுக்கும் ஒரு நேரம் ஒதுக்கவேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை.

/*
சூப்பர் ஸ்டார் - எத்தனை பேர் வந்தாலும் இந்தப் பட்டத்துக்கு உரியவர் ஒருவர்தான். ஆறிலிருந்து அறுபது வரை - அனைவரின் உள்ளம் கவர்ந்த மனிதர். ரஜினிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்.
*/

ஏதேது.. நீங்களும் என்வழி வழியா??

http://kaaranaam1000.blogspot.com

மேவி... said...

"மக்கள் யோசிப்பார்கள்?"ச்சா.. ச்சா ... அதுக்கு எல்லாம் அவர்களுக்கு எது நேரம்... மொபைல் பேசவே நேரம் சரியா இருக்கு

மேவி... said...

"ஆனால் மனசாட்சி இல்லாத யாரோ ஒருவர்தான் பாடல்களை செலக்ட் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்"


இலக்கியவாதிக்கு இது போதும்

மேவி... said...

"சமீப காலமாக அடிக்கடி கண்களில் தட்டுப்படும் பெயர் - நாவிஷ் செந்தில்குமார்"


லிங்க் தந்து இருந்த நல்ல இருக்கும் .... உடனே லிங்க் தாங்க.. இல்லாட்டி போன் பண்ணி கவிதை வசிப்பேன்

மேவி... said...

"மாத்தி யோசி"


அதாவது எப்புடி ... வேற முளை வைச்சு முயற்சி பண்ணனுமா ????

மேவி... said...

en blog vanthu parunga .... makkale

Raju said...

இன்னா மேவீ அண்ணே..!
இன்னைக்கி இங்க பட்டறையா.?
நடத்துங்க. நடத்துங்க.

கலையரசன் said...

நட்பு கவிதை அருமை தல...
தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

பீர் | Peer said...

:)

மேவி... said...

"ராஜு ♠ said...
இன்னா மேவீ அண்ணே..!
இன்னைக்கி இங்க பட்டறையா.?
நடத்துங்க. நடத்துங்க."ஆமாங்க ...... ஆனா இங்கே நடத்த ஆடும் இல்லை மாடும் இல்லை என்ன செய்ய ....

இல்லாட்டி இலக்கிய கூட்டத்தை நடதலமா

மேவி... said...

"பீர் | Peer said...
:)"


என்ன பீர் அண்ணே ... இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதிருக்கார் ... எதாவது பார்த்து போட்டு கூடுங்க

மேவி... said...

"நாடோடி இலக்கியன் said...
நல்ல பகிர்வு நண்பா.'தஞ்சாவூரில் இருக்கும் உங்களிடம் மதுரையில் இருக்கும் அவர் அப்படி என்ன பகிர்ந்து கொண்டார் அண்ணே

Anonymous said...

அருமை! ;)

மேவி... said...

"டம்பி மேவீ said...
"அசோகமித்திரனின் "18ஆவது அட்சக்கோடு"


இதை படித்துவிட்டு ...அறிமுகபடுத்தி ஓர் பதிவு போடலாமே ????"


அதற்க்கு நீங்களே வாங்கி படிக்கலாமே ????

(அட ச்சே ...இது நான் போட்ட பின்னோட்டம் தானா ??)

மேவி... said...

" manippakkam said...
அருமை! ;)"


*** ஐ லவ் ராஜபக்க்ஷே..! நீங்க…?!! வை எழுதினவர் தானே நீங்க ????

vasu balaji said...

சகோதரி ரம்யாவின் தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் வழிகாட்டி எனக் கருதுகிறேன். கவிதை அருமை.

க.பாலாசி said...

//மொபைலில் பேசிக் கொண்டே போய் விபத்தில் சிக்கிக் கொள்ளுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது கவலையளிக்கிறது.//

நேற்றிரவு ஈரோட்டில் கண்ட சிறிய விபத்தொன்றும் ஞாபகம் வருகிறது. பெரும்பாலும் இந்த செயலை செய்வது நடுத்தர வயதினர் என்றே தோன்றுகிறது. அதுவும் மனைவி மக்களுடன். விழுந்து சாவரவன் தனியா செத்தா பரவாயில்ல, பொண்டாட்டி புள்ளையோடல்ல சாகிறான்.

ரம்யாக்கா பற்றின தகவலும், புத்தகப்பகிர்வும், கடைசியில் கவிதையும் சிறப்பு.

கார்க்கிபவா said...

ஆசை ஆசையா ஓடி வந்தேன். கார்க்கி விஜய் ரசிகர் என்றாலும் என்னிடம் இனிமையாக பழகினார். அவர் ஒரு நல்லவரு வல்லவரு அப்படின்னு போட்டு தல ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நல்ல பேரை கொடுப்பிங்கன்னு பார்த்தா

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

:))))))))

மேவி... said...

@ karki : 2 much:)

Raju said...

@Mayvee 123456987 Much.

Prabhu said...

நல்லா யோசிச்சிருக்கீங்க!!

மேவி... said...

@ rajoo : 34244593030 much square

மேவி... said...

@ pappu : கார்த்தி யோசிச்சது எல்லாமா தெரியுது இந்த பதிவில் ....

மேவி... said...

karki and stage come to stage

Anonymous said...

ரம்யா வாழ்க்கை பயில அதில் போராட நமக்கெல்லாம் ஒரு முன்னோடி...இவங்க அன்புக்கடலில் மூழ்கினாலும் மூச்சு திணறாது

துணுக்குகள் அனைத்தும் உங்களுக்கே உரிய பாணியில் அசத்தல் கவிதை நெஞ்சை தொட்டு நட்பின் ஆழத்தை சொல்கிறது...

Ganesan said...

அகநாழிகை-புத்தக வெளியீடு-புகைப்படங்கள்.

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html

குமரை நிலாவன் said...

நட்பு கவிதை அருமை

நல்ல பகிர்வு நண்பா

Jerry Eshananda said...

உள்ளேன் ஐயா

தர்ஷன் said...

கோர்வையாய் அழகாய் பகிர்ந்திருக்கீர்கள்
கவிதையை பகிர்ந்தமைக்கு ஒரு Special thanks

அத்திரி said...

கவிதை நல்லாயிருக்கு.........

வினோத் கெளதம் said...

உங்களக்கு நியாபகம் இருக்கா
உங்க கூட ஒரு தடவை பேசுறப்ப பஸ்ல வந்துக்கிட்டு இருந்தேன்..அப்பா அதே மாதிரி ஒரு 'கொடுமையை' தான் அனுபவித்து கொண்டு இருந்தேன்..

தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

கவிதை அருமை..

வண்டி ஒட்டிக்கொண்டு பேசுப்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்..

ஆ.ஞானசேகரன் said...

//உக்கார்ந்து யோசிச்சது (12-12-09)..!!!//

ஒரு நாளைக்கு நின்னுக்கிட்டு யோசித்து சொல்லுங்க நண்பா,..

ஆ.ஞானசேகரன் said...

//ரம்யாக்காவின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம். "இத்தனை கஷ்டங்களா" என்று பரிதாபப்படுவதை விட "நாமும் போராட வேண்டும்" என யாரேனும் ஒருவருக்குத் தோன்றினால் கூட அதுதான் இந்தக் கட்டுரையின் வெற்றி.//

வாழ்த்துகள்... ரம்யா

ஆ.ஞானசேகரன் said...

//மொபைலில் பேசிக் கொண்டே போய் விபத்தில் சிக்கிக் கொள்ளுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது கவலையளிக்கிறது. //

அப்படி பேசிக்கொண்டே வண்டி ஒட்டுபவர்களை பார்த்தால் கல்லால் அடித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோண்றுகின்றது ....

RAMYA said...

என்ன சகோ! இப்படி ஒரு முகவுரை போட்டு தாக்கிட்டீங்க:)

பிறந்துவிட்டோம் ஒரு நாள் முடியப் போகும் இந்த வாழ்க்கையில் நம்மால் முடிந்தவரை அனைவரையுமே நேசிக்க வேண்டும் இதுதான் என்னோட பேச்சு மூச்சு எல்லாம்.

அதன் படி எங்களின் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டோம். தடையின்றி சென்று கொண்டிருக்கிறோம்.

உங்களைப் போல் அன்புள்ளங்கள் பலர் எங்களுடன் சேர்ந்து எங்களின் சிறிய பாதையை ஒரு நீண்ட நெடுஞ்சாலையாக மாற்றிக்
கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினால் அது மிகையாகா.

மகிச்சியான தருணத்தை அளித்த இந்த அன்பு நெஞ்சங்களை எண்ணியெண்ணி மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கிறோம்.

இந்த வலையின் இன்றைய இடுகையில் என்னை சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி சகோ!

என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த சகோதரன் கார்த்திக்கும் எனது நன்றிகள்!

நம் குடும்பத்தினரும் கார்த்திக்கு நன்றியை தெரிவிக்கச் சொன்னார்கள் சகோ.

விரைவில் நல்லதொரு விழாவில் மீண்டும் சந்திப்போம் கார்த்திக்!

RAMYA said...

அப்புறம் அந்த கவிதை படு யதார்த்தம்!

நட்புக்களிடம் மட்டும்தான் மனம் திறந்து பேசமுடியும்!

சம்பத் said...

கவிதை சூப்பர் பாண்டியன்.

ஆதவா said...

சார், எப்படி இருக்கீங்க?

தல எத்தனை அடிச்சாலும் strong தான் போல.. எத்தனை பதிவு கொடுத்தாலும் தரம் தாழ்த்தாம கொடுக்கிறதில்லை.

நந்தலாலாவை நானும் ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்கேன்.. ஒரு சில நெருடல்கள் இருக்கிறது. அதைவிடுங்க. யோகி இன்னும் பார்க்கலை. ஒருவேளை பார்த்தால் அதைப் பற்றி பேசலாம்..

அன்புடன்
ஆதவா

ச.பிரேம்குமார் said...

நல்ல பதிவு பாண்டியன். நாவிஷ் செந்தில்குமாரின் இந்த கவிதையை போல் நிறைய ஏற்கனவே படித்தாயிற்று. மற்ற கவிதைகள் தேடி படித்து பார்க்கிறேன்