December 10, 2009

காதல் கிறுக்கல்கள்..!!!

னக்கான
உன்
கவிதைகளை
நீ
என் மூலமாக
எழுதிக்
கொண்டிருக்கிறாய்..!!

***************

ன்றேனும்
உன்னைப் பார்க்க முடியும்
என்னும் நம்பிக்கையிலேயே
விடிகின்றன என் பொழுதுகள்..
ஆனால் - கனவிலும்
முகம் காட்ட மறுப்பவளாக
இருக்கிறாய் நீ..!!

***************

த்தனையோ
தேவதை கதைகளை
சொன்ன பாட்டி
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!

***************

நான் சொல்லும்
ஒவ்வொரு பொய்க்கும்
செல்லமாய் கோபப்பட்டு
என் கன்னங்களில் தட்டுவாய்..
நீ தட்ட வேண்டும் என்பதற்காகவே
பொய்களை
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நான்..!!

***************

தோழிகளோடு போய் வந்த
சுற்றுலாவின் புகைப்படங்களை
என்னை நெருங்கி அமர்ந்தவளாக
காட்டிக் கொண்டிருக்கிறாய்..
எதையுமே கவனிக்காமல்
உன் விழிகளின் நடனத்தை
ரசித்தபடி இருக்கிறேன்..
உனக்கு மிகவும் பிடித்த
இடமெதுவென சட்டென்று நீ கேட்க
யோசிக்காமல் உன் மடிதான்
என்று சொல்கிறேன்..
"ச்சீய்.." என்றவாறே
வெட்கம் கொண்டவளாக
என் தோள்களில்
சாய்ந்து கொள்கிறாய்..!!

எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு feelல எழுதினது.. கண்டுக்காதீங்கப்பா..:-))))

35 comments:

தாரணி பிரியா said...

//எத்தனையோ
தேவதை கதைகளை
சொன்ன பாட்டி
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!
//

இது சூப்பர்

தாரணி பிரியா said...

எல்லாமே நல்லா இருக்குங்க‌

க.பாலாசி said...

//எத்தனையோ
தேவதை கதைகளை
சொன்ன பாட்டி
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!//

அட ஆமால்ல....

கடைசியும் அருமை....

தேவன்மாயம் said...

நான் சொல்லும்
ஒவ்வொரு பொய்க்கும்
செல்லமாய் கோபப்பட்டு
என் கன்னங்களில் தட்டுவாய்..
நீ தட்ட வேண்டும் என்பதற்காகவே
பொய்களை
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நான்..!!
///

கன்னத்திலே நாங்களும் தட்டலாமா!!

பூங்குன்றன்.வே said...

ஐந்து கவிதையும் அறுசுவை(அய்யோ..ஒரு சுவை எக்ஸ்ட்ரா சொல்லிட்டேனே!)
நல்லாவே இருக்கு பாஸு.

Rajan said...

//எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு feelல எழுதினது.. கண்டுக்காதீங்கப்பா..:-))))///

மூணு வரி !
ஒரு இங்கிலீஷ் வார்த்தை !

கூ ! கூ ! ஹைக்கூ !

பிரிச்சிட்டீங்க தலைவா

Balakumar Vijayaraman said...

போலாம் ரைட்ட்ட்ட் :)

நாடோடி இலக்கியன் said...

//எத்தனையோ
தேவதை கதைகளை
சொன்ன பாட்டி
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!
//

நல்லாயிருக்கு நண்பா.

vasu balaji said...

ஏப்பு! இவ்வளவு அருமையா எழுதிட்டு கண்டுக்காதீங்கப்பா. பீலிங்சுன்னு போட்டது சரி. யாருக்கு எழுதினதோ அவங்களும் படிச்சிட்டு கன்னத்தில செல்லமா இல்லாம தட்டீருவாய்ங்க. =))

vasu balaji said...

/க.பாலாசி said...

அட ஆமால்ல....

கடைசியும் அருமை....//

ஏம் பாலாசி! காதல் கவிதை யாரு இடுகை போட்டாலும் பொளிச்சுன்னு லேண்ட் ஆயிடுறியே. இதுக்கு ஏதும் விட்ஜெட் வச்சிருக்கியாப்பா. இல்லீன்னா மொழி படத்துல வரா மாதிரி மண்டைல விளக்கெரியுமா=))

இறைவனை தேடி said...

Raittu....

Raju said...

முகுந்த் நாகராஜ் அதிகமா படிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்.

ஈரோடு கதிர் said...

சுகமான
கவிதைகள்....

அத்திரி said...

சென்னை வந்திட்டு போனதிலிருந்து லவ்வு லவ்வுனு லவ்றீங்களே புரொபசர் இன்னா மேட்டர்பா

Anbu said...

Raittu...

நையாண்டி நைனா said...

அடி...ஏய்... அது வைரசு பீவர் இல்லடி... கல்யாண பீவர்...
இதுக்கு ஒரு மருந்து, ஒரே மருந்து... தான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு வெளக்குமாறு பூசை ரெண்டு வாங்கினா அடங்கிரும்...

ப்ரியமுடன் வசந்த் said...

எல்லாமே நல்லாருக்கு கார்த்தி

ம்ம்...சீக்கிரம் விசேஷ அழைப்பு சொல்லுங்க...

200 பின்தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்...

குமரை நிலாவன் said...

ஐந்து கவிதையும் அருமை....

மேவி... said...

anni eppudi irukkanga thala.....


avanga MCA lecturer thane?????

RAMYA said...

//
நான் சொல்லும்
ஒவ்வொரு பொய்க்கும்
செல்லமாய் கோபப்பட்டு
என் கன்னங்களில் தட்டுவாய்..
நீ தட்ட வேண்டும் என்பதற்காகவே
பொய்களை
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நான்..!!
//

அது சரி, என்னவோ புரியற மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கு :))

RAMYA said...

பீலிங்க்ஸ் ஆப் இந்தியா :-)
நாளா எழுதி இருக்கீங்க!

எழுதிய ஸ்டைல் சூப்பர்!

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

கவிதை எல்லாம் நல்லாத்தான் இருக்கு

விரைவினில் பத்திரிகை கொடுங்க எல்லாம் சரியாய்டும் - என்ன நான் சொல்றது

நல்வாழ்த்துகள்

Unknown said...

//..எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு feelல எழுதினது.. கண்டுக்காதீங்கப்பா..:-)) ..//
வாத்தியாரே என்னமோ நடக்குது..

அப்புறம் கவிதைகள் அருமை..

ruby said...

எனக்கான
உன்
கவிதைகளை
நீ
என் மூலமாக
எழுதிக்
கொண்டிருக்கிறாய்..!!

really superb........

ச.பிரேம்குமார் said...

என்னய்யா நடக்குது அங்கே? :-)

நசரேயன் said...

வாத்தியாரு நல்லாவே காதல் பாடம் எடுக்குறாரு

ஹேமா said...

கார்த்திக் இப்பவெல்லாம் அடிக்கடி காதல் கவிதை நல்லாவே எழுதுறீங்க !

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எனக்குப் புரியுது,வீட்ல சொல்லி சீக்கிரம் நடக்கும்படி செஞ்சிடலாம் .கவலைப் படாதீங்க,தைரியமா இருக்கணும் .

Anonymous said...

Hello mae,vee sir,(to all MKP friends)


Today's news:
-------------
Ponnu MCA illa M.A., B.Ed.
Lecturer illa, teacher.

Meendum naalai santhipome with hot news.
Pandia, no scolding,
.
Again to all,

Have posted all these true news as per instructions by MKP sir only.
Will get the invite shortly.
Bye

mano said...

Hi Karthik..

1st and the last one was excellent ..

தமிழ் said...

/எத்தனையோ
தேவதை கதைகளை
சொன்ன பாட்டி
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!/

நல்ல இருக்கிறது

ஆ.ஞானசேகரன் said...

//எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு feelல எழுதினது.. கண்டுக்காதீங்கப்பா..:-))))//

நல்லாயிருக்கு

Anonymous said...

க‌விதை சூப்ப‌ர்.

ம்ம்ம்...
யாருண்ணா அந்த‌ பொண்ணு....

priyamudanprabu said...

//எத்தனையோ
தேவதை கதைகளை
சொன்ன பாட்டி
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!
//

இது சூப்பர்
இது சூப்பர்
இது சூப்பர்
இது சூப்பர்
இது சூப்பர்

Rajesh Ramraj said...

sathiyama sollu idha yellam neeya yeluthinea?? yennaku nambikai illa da... unnakulla ivallavu talenta?? yenna kodumai saravana idhu....