March 20, 2010

கச்சேரி ஆரம்பம் - திரைப்பார்வை..!!!

சமீப காலமாக தமிழ் சினிமாவை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் மசாலா + ஆக்சன் ஹீரோ ஜூரம் ஜீவாவுக்கு அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது என்பதை அடித்துச் சொல்லும் படம்தான் "கச்சேரி ஆரம்பம்". ராம், கற்றது தமிழ், ராமேஸ்வரம்னு போனவர் டிராக் மாறி... கொஞ்ச நாள் முன்னாடி தெனாவட்டு, இப்போ இந்தப் படம். சரி விடுங்க, அப்பா சவுத்ரி தயாரிப்பாளரா இருக்க பயமேன்? படத்தோட கதையைக் கேட்டு ஆஆஆஆனு வாயப் பொளக்கக் கூடாது.. சரியா? ஏன்னா இதுவரைக்கும் யாருமே சொல்லாத அற்புதமான கதை..வேல வெட்டி இல்லாம ஊரு சுத்துற, அப்பா பேச்ச மதிக்காத உத்தமபுத்திரன் ஜீவா. (சிங்கக்குட்டில..) வீட்டுல சண்ட போட்டுக்கிட்டு ராம்னாட்ல இருந்து கிளம்பி சென்னை வாராரு.(ரொம்பப் புதுசா இருக்கே..) அங்க கதாநாயகிய பார்த்தவுடனே காதல். (அடடா..) ஆனா அவங்க மேல வில்லனுக்கு ஒரு கண்ணு. (இதப் பாருடா..) நாயகிகூட யாராவது பேசினாக்கூட அவங்கள கொல்ற அளவுக்கு வெறித்தனமா காதல்.(அச்சோ..). இப்போ ஜீவா என்ன பண்றாருன்னா, வில்லன் கூடவே இருந்து குழி பறிக்கிராறு.(மாஸ்டர் பிளான் மன்னாரு..) கடைசியில அவங்க காதல் என்னா ஆச்சு (அஆவ்வ்வ்) என்பதை வெள்ளித்திரையில் காண்க. (அடைப்புக் குறிக்குள் இருப்பது இந்தப் பதிவைப் படிக்கும் புண்ணியவான்களின் புலம்பல் என்று கொள்க...)

அருமையா டான்ஸ் ஆடுறார். நகைச்சுவையும் ஈசியா வருது. சண்டைக் காட்சிகளும் ஓகே. ஜீவா எல்லா வேலையையும் கச்சிதமா பண்றார். ஆனா கதைய செலக்ட் பண்றதுல மட்டும் கோல் அடிக்கிறாரு. இவ்வளவு அரதப் பழசான கதையில எதப் புதுசாக் கண்டாருன்னு தெரியல.. மாஞ்சு மாஞ்சு அவர் கஷ்டப்பட்டு நடிச்சது எல்லாம் வீண். ஒரு சிலரை ஏன் பிடிக்குதுன்னு சொல்ல முடியாது. ஆனா ரொம்பப் பிடிக்கும். கொழுக் மொழுக்னு செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்குற பூனம் பாஜ்வா அந்த வகையறா. லோகட் சுடில சும்மா நம்ம மனசப் பூரா அள்ளிக்கிறார். நடிப்பா? அது கிடக்கு கெரகம்..(ஹி ஹி ஹி)இந்த வருஷத்துல இது வரைக்கும் வந்த படங்கள்ல.. சிறந்த "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" விருதை சக்ரவர்த்திக்கு கொடுக்கலாம். தெலுங்கு, ஹிந்தின்னு டெர்ரரா இருந்த மனுஷன வில்லன்கிற பேர்ல காமெடி பீசா ஆக்கி இருக்காங்க. அது எப்படிப்பா ஊரே பயப்படுற வில்லன் எல்லாம் ஹீரோக்கிட்ட மட்டும் லூசா மாறிடுறீங்க? வடிவேலு காமெடியப் பார்த்தா அவருக்கே சிரிப்பு வருமாங்கிறது சந்தேகம். அவர விட கிரேன் மனோகர் + கிங்காங் காமெடி எவ்வளவோ பரவாயில்லை. ஆர்த்தி - வழக்கம் போல நாயகியின் கல்லூரித் தோழியா வந்து கடியப் போடுறாங்க.

இமானின் பாடல்கள்ல இரைச்சல் கொஞ்சம் ஜாஸ்தி என்றாலும், ஒரு சில, கேட்க வைக்கும் ரகம். ஜீவா டான்சில் பட்டையைக் கிளப்பும் வித்த வித்த, ஜெய்ப்பூரில் அழகாகப் படமாக்கி இருக்கும் காதலே, அமோகா ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடிப் போகும் வாடா வாடா என்று மூன்று பாட்டுகள் தேறுகின்றன. வில்லனுக்குப் பின்னாடி ஒலிக்கும் ஒரு மாதிரியான பின்னணி இசை நன்றாக இருக்கிறது. அறிமுக கலை இயக்குனர் நன்றாக செய்து இருக்கிறார். குறிப்பாக வாடா வாடா பாட்டின் செட்டுகள் அட்டகாசம். ஒளிப்பதிவு படத்தோட இணைஞ்சு வருது. இழுத்துக் கொண்டே போகும் இரண்டாம் பாதியில் இருக்கும் தேவை இல்லாத மொக்கை காட்சிகளை எடிட்டர் கொஞ்சம் கவனித்து இருக்கலாம்.முதல் பாதி ஓரளவுக்கு போர் அடிக்காமல் போகிறது. இரண்டாம்பாதிதான் கொஞ்சம் ஜவ்வு. முழுக்க முழுக்க பி மற்றும் சி செண்டர் மக்களைக் குறிவைத்து எடுத்து இருக்கும் படம். படத்தின் நிறைய காட்சிகளில் "தமிழ்ப்படம்" ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதற்குத் தகுந்தாற்போல ஆரம்பம் முதல் கடைசி வரை தங்கள் படத்தை தாங்களே கிண்டல் செய்து கொள்ளும் விதமாக காட்சிகள் இருக்கின்றன. அதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் எரிச்சல்தான் வருகிறது.

"பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" என்ற அட்டையைக் காண்பித்து கொண்டே திரையில் தலை காட்டும் இயக்குனர் திரைவண்ணனுக்கு முதல் படம். இது சிரிப்புப் படமா இல்லை சீரியஸ் படமா என்பதில் இயக்குனர் ரொம்பவே குழம்பி இருக்கிறார். திரைக்கதையிலும், நகைச்சுவையிலும் காட்டி இருக்கும் கவனத்தை கொஞ்சம் கதையிலும் காட்டி இருந்தால் கச்சேரி நிஜமாகவே களை கட்டியிருக்கும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

கச்சேரி ஆஆஆ... ரம்பம்

21 comments:

Cable சங்கர் said...

rightu..

sathishsangkavi.blogspot.com said...

ஆஹா...

வாத்தியாரே விமர்ச்சனம் கிளப்பறீங்களே.....

settaikkaran said...

நிறைய பேருக்கு செலவு மிச்சம். வாழ்க உங்கள் தொண்டு!! :-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//Cable Sankar said...
rightu..//

thanks thala

//Sangkavi said...
ஆஹா... வாத்தியாரே விமர்ச்சனம் கிளப்பறீங்களே.....//

ithu eppavum panrathuthaan nanbaa

//சேட்டைக்காரன் said...
நிறைய பேருக்கு செலவு மிச்சம். வாழ்க உங்கள் தொண்டு!! :-))//

நேசமித்ரன் said...

கா.பா விமர்சனம் என்பது பார்வையில் இருக்கிறது !

உங்களின் பார்வை மேம்பட்ட பார்வை :)

பனித்துளி சங்கர் said...

நல்ல பகிர்வு நண்பரே .

மீண்டும் வருவான் பனித்துளி !

ஜெட்லி... said...

நேத்து நைட் பார்த்தேன்...
கண்ணு சொருகிடுச்சு....

kannamma said...

விமர்சனம் படுச்சவங்க கண்டிப்பா படத்துக்கு போக மாட்டாங்க-னு நினைக்கிறேன் .ஏதோ நம்மளால ஆனது

கார்த்திகைப் பாண்டியன் said...

//நேசமித்ரன் said...
கா.பா விமர்சனம் என்பது பார்வையில் இருக்கிறது ! உங்களின் பார்வை மேம்பட்ட பார்வை :)//

ரொம்பப் புகழாதீங்கண்ணே.. கூச்சமா இருக்கு

/♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... நல்ல பகிர்வு நண்பரே .
மீண்டும் வருவான் பனித்துளி !//

சரி ந்ண்பா..அடிக்கடி வாங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஜெட்லி said...
நேத்து நைட் பார்த்தேன்... கண்ணு சொருகிடுச்சு....//

எல்லாம் பிரம்மை தம்பி..:-)))

//kannamma said...
விமர்சனம் படுச்சவங்க கண்டிப்பா படத்துக்கு போக மாட்டாங்க-னு நினைக்கிறேன் .ஏதோ நம்மளால ஆனது//

பொதுசேவைங்க..:-)))

உண்மைத்தமிழன் said...

ஆஹா..

உதவின்னா இப்படீல்ல இருக்கணும்..!!

நன்றிங்கண்ணா..!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

// உண்மைத் தமிழன் (15270788164745573644) said...
ஆஹா..உதவின்னா இப்படீல்ல இருக்கணும்..!!நன்றிங்கண்ணா..!!!//

எல்லாம் நீங்க கத்துக் கொடுத்ததுதானே அண்ணே..:-))

ILAYA BHARATHAM said...

dec-31(2009)?????onnume illa.emaththetingale sir.

ILAYA BHARATHAM said...

dec-31(2009)?????onnume illa.emaththetingale sir.

கார்த்திகைப் பாண்டியன் said...

@ Ilaiyabharatham

அது 2008 டிசம்பர் 31 மா..:-)))

Anonymous said...

கச்சேரி ஆரம்பம் உடனே பார்த்தீட்டிங்க போல இருக்கு...

கார்த்திகைப் பாண்டியன் said...

// கடையம் ஆனந்த் said...
கச்சேரி ஆரம்பம் உடனே பார்த்தீட்டிங்க போல இருக்கு...//

விடுங்க தல.. நல்லாயிருக்கும்னு நம்பிப்போய் பல்ப் வாங்குறது நமக்குப் புதுசா என்ன (நானே எனக்கு சொல்லிக்கிறேன்.. அவ்வ்வ்)

குமரை நிலாவன் said...

விடுங்க தல.. நல்லாயிருக்கும்னு நம்பிப்போய் பல்ப் வாங்குறது நமக்குப் புதுசா என்ன (நானே எனக்கு சொல்லிக்கிறேன்.. அவ்வ்வ்)

ரைட்டு

Unknown said...

//.. நல்லாயிருக்கும்னு நம்பிப்போய் பல்ப் வாங்குறது ..//

இதவே ஒரு பொழப்ப வச்சுருப்பிங்க போல..??!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
விடுங்க தல.. நல்லாயிருக்கும்னு நம்பிப்போய் பல்ப் வாங்குறது நமக்குப் புதுசா என்ன (நானே எனக்கு சொல்லிக்கிறேன்.. அவ்வ்வ்) ரைட்டு//

ஹி ஹி ஹி

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
இதவே ஒரு பொழப்ப வச்சுருப்பிங்க போல..??!!//

பொது மக்கள் சேவையில் உங்கள் கா.பா..:-)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது தெலுங்கு படம் ஆடா(aata - Sidarth,Iliyana) வோட அப்பட்டமான காபி