April 19, 2010

உக்கார்ந்து யோசிச்சது (19-4-10)..!!!

"காரியம் ஆகுற வரைக்கும் காலைப் பிடிடா.. ஆனபிறகு தூக்கி மிதிடா.." - இது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ.. இணைய வசதி செய்து தரும் நிறுவனங்களுக்குக் கண்டிப்பா பொருந்தும் போல.. ரிலையன்ஸ் வயர் கட் ஆகி ஒரு வாரமாச்சு. கல்லூரியிலையும் கனெக்ஷன் இல்ல. நெட் இல்லாம மண்டை காயுது. நாயா அலஞ்சு பார்த்துட்டேன். மதிக்க மாட்டேங்குராய்ங்க.. "நாங்க தரோம் சார்னு" அடிச்சு பிடிச்சு வந்து அவங்க கனெக்ஷன் கொடுத்த காட்சி எல்லாம் கட் ஷாட்ல வந்து வந்து போகுது... அவ்வவ்... இப்படி பொலம்ப விட்டுட்டாய்ங்களே மக்கா..

இந்த அநியாயத்தக் கேக்க யாருமே இல்லையா?

***************

நிகழ்வு ஒண்ணு:

"கார்த்தி சார்.. இன்னைக்கு உங்க கிளாஸ்ல ஒரு பத்து நிமிஷம் எனக்குத் தர முடியுமா? ஒரு சின்ன டாபிக் நடத்த வேண்டி இருக்கு.."

"சாரி மேடம்.. நானே இன்னும் சிலபஸ் முடிக்கல..அதனால.."

"பரவாயில்ல சார்.. பார்த்துக்கலாம்.."

முதுகுக்குப் பின்னாடி

"பரதேசி.. என்னமோ இவன் மட்டும்தான் பாடம் நடத்துற மாதிரியும்.. மத்தவங்க எல்லாம் சும்மா சம்பளம் வாங்குற மாதிரியும்.. ஓவர் சீன்.. இவன் நடத்துற லட்சணம் எனக்குத்தெரியாதா?"

நிகழ்வு ரெண்டு:

"கார்த்தி சார்.. இன்னைக்கு உங்க கிளாஸ்ல ஒரு பத்து நிமிஷம் எனக்குத் தர முடியுமா? ஒரு சின்ன டாபிக் நடத்த வேண்டி இருக்கு.."

"ஒண்ணும் பிரச்சினை இல்ல மேடம்.. எடுத்துக்கோங்க.."

"ரொம்ப தாங்க்ஸ் சார்.."

முதுகுக்குப் பின்னாடி

"நான் சொல்லல.. அவன் எப்பவுமே இப்படித்தான்... கேட்டவுடனே கொடுத்துட்டான் பார்த்தியா? சும்மா பேருக்குத்தான் கிளாசுக்குப் போறான். பாடமே நடத்துறது கிடையாது.. டுபாக்கூரு.. இது கிட்ட படிக்கிற பசங்க எப்படி வெளங்கப் போகுது?"

அடப்பாவிகளா.. நான் என்னதாண்டா பண்ண?

***************

சமீபத்தில் என்னை மிகவும் எரிச்சல் அடைய வைத்த விளம்பரம் - டாடா டோகோமோ. அம்மா உட்கார்ந்து ஏதோ பண்ணிக் கொண்டிருக்கிறார். பின்னாடி சாமி பாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது அவர் பாரம்பரியத்தை விரும்புகிறவர் என்று காட்டுகிறார்களாம். அப்போது அவளுடைய பெண் வருகிறாள்.

"அம்மா.. நான் உங்ககிட்ட ஒண்ணு காட்டணும்.."

"என்னமா"

உடனே திரும்பி தான் அணிந்திருக்கும் குர்தாவைத் தூக்கி முதுகை காட்டுகிறாள் மகள். அங்கே பிருஷ்ட பாகத்துக்கு சற்று மேலே ஏதோ ஒரு டாட்டூ. ஒரு நிமிஷம் திகைத்துப் போகும் அம்மா சுதாரித்துக் கொண்டு "நல்லா இருக்குமா" என்கிறார். மகளுக்காக தன்னை மாற்றிக் கொள்கிறார் என்பதுவரை கான்சப்ட் எல்லாம் சரிதான். அதற்காக காட்டுவதற்கு வேறு விஷயமே இல்லையா? கருமம்.. இன்னும் விளம்பரத்தில் என்ன என்னத்தைக் காட்டப் போறாய்ங்களோ ?

அவ்வ்வ்வவ்வ்வ்.... முடியல

***************

"சுறா" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். அடப்பாவிகளா? எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா? வந்து பேசுனவுங்க எல்லாரும் சன் பிகச்சர்ஸ் க்ரூப்புக்கு ஓசியில விளம்பரம் பண்ணிட்டுப் போனாய்ங்க. அதை விடக் கொடுமை, ஒவ்வொரு தடவையும், கலாநிதி மாறன் பேரைச் சொல்லும்போதும், சன் பிக்சர்ஸ் பேரை சொல்லும் போதும், இவங்களே போட்டுக்கிட்ட கைத்தட்டல் சத்தம். என்னத்த சொல்ல? மற்றபடி பாடல்கள் பற்றி.. பொம்மாயியும் நான் நடந்தால் அதிரடியும் டாப். மத்தது எல்லாம் டூப். அதே போல மதராசப்பட்டிணம் பாடல்கள் கூட அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எல்லாமே சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி போட்டு இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் மீண்டும் பையா, அங்காடித்தெரு என்று செட்டிலாகிவிட்டேன்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..

***************

ஒரு குட்டி கதை..

ஒரு குருவும், சிஷ்யனும் மாட்டு வண்டியில் ஏறி தங்கள் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். வழியில் ஒரு பெண் தனியாக நின்று கொண்டிருந்தாள். தன்னை வழியில் இருக்கும் ஊரில் இறக்கி விடும்படி கேட்டுக் கொண்டாள். சிஷ்யன் குருவின் முகத்தைப் பார்த்தான். அதில் எந்த சலனமும் இல்லை. அந்தப் பெண்ணை ஏறிக் கொள்ளச் சொன்னார். வழியில் அந்தப் பெண் இறங்கிக் கொண்டு நன்றி சொல்லிச் சென்றாள். சிறிது நேரத்துக்குப் பிறகு சிஷ்யன் குருவிடம் கேட்டான்.

"குருவே, நீங்கள் ஏன் அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டீர்கள்.. நம் துறவு விதிகளுக்கு அது எதிரானது இல்லையா..?"

துறவி இப்போதும் சலனமில்லாமல் சொன்னார்.

"நான் அந்தப் பெண்ணை அங்கேயே இறக்கி விட்டு வந்து விட்டேனே.. நீ மட்டும் ஏன் இன்னும்..?"

அப்படிப் போடு அருவாள..

***************

"மீட்சி" பழைய இதழ் ஒன்று கிடைத்தது. பாதசாரி எழுதிய "காசி" என்கிற சிறுகதையை வாசித்து முடித்தபோது மனது கனத்துப் போனது. இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாத, தெரியாத ஒரு மனிதனின் கதை. எஸ்ராவின் "உறுபசி" சம்பத்தின் ஞாபகம் வந்து போனது. அடுத்த புத்தக விழாவில் பாதசாரியின் எழுத்துக்களை தேடிப் பிடித்து வாங்க வேண்டும்.

மனிதர்களில் எத்தனை நிறங்கள்

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சில முடியலத்துவம்... (நன்றி: செல்வா)

--> என்னதான் நாம செகப்பா இருந்தாலும் நம்ம நிழல் கருப்பாத்தான் இருக்கும்

--> என்னதான் டிவி விடிய விடிய ஓடினாலும் ஒரு இன்ச் கூட நகராது

--> தூங்குறதுக்கு முன்னாடி தூங்கப் போறேன்னு சொல்லலாம்.. ஆனா.. எந்திரிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?

--> செருப்பு இல்லாம நாம நடக்க முடியும்.. ஆனா.. நாம இல்லாம செருப்பு நடக்க முடியுமா?

எல்லாமே குறுந்தகவல்களில் வந்தவை... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?

எப்பூடி.. இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

31 comments:

சங்கர் said...

//அதற்காக காட்டுவதற்கு வேறு விஷயமே இல்லையா? கருமம்.. இன்னும் விளம்பரத்தில் என்ன என்னத்தைக் காட்டப் போறாய்ங்களோ ?//

தல, நீங்க எதிர்பாக்குறது நடக்காது, அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

சங்கர் said...

கம்பைன்ட் ஸ்டடி மாதிரி கம்பைன்ட் கிளாஸ் முயற்சி பண்ணி பாருங்களேன்

ஈரோடு கதிர் said...

//சங்கர் said...
தல, நீங்க எதிர்பாக்குறது நடக்காது, அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்//

நானும் அதே தான் நினைச்சேன்

இந்த கார்த்திக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்கனும்னு யாருக்குமே தோணலையா

Prabu said...

//சமீபத்தில் என்னை மிகவும் எரிச்சல் அடைய வைத்த விளம்பரம் - டாடா டோகோமோ//

ஹாஹா உங்களுக்குமா....
எனக்கும் ஸேம் ப்ளட் தான்... அதுவும் மேட்ச் பார்க்கும்போது அடிக்கடி இடையே வந்துத் தொலைக்கிறது...

நீங்க நியாயமா விமர்சிச்சிருக்கீங்க பட் நான் கொஞ்சம் ஓவராவே போயிட்டேன்!! :)

http://vasagarthevai.blogspot.com/2010/04/blog-post.html

vasu balaji said...

/ஈரோடு கதிர் said...

//சங்கர் said...
தல, நீங்க எதிர்பாக்குறது நடக்காது, அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்//

நானும் அதே தான் நினைச்சேன்

இந்த கார்த்திக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்கனும்னு யாருக்குமே தோணலையா/

மொதல்ல எங்க பாலாசிக்கு ஒரு வழி சொல்லீட்டு அப்புறம் மதுரைக்கு வழி சொல்லலாம். அட்வைசு குடுக்குறாய்ங்க அட்வைசு:))

vasu balaji said...

/அடப்பாவிகளா.. நான் என்னதாண்டா பண்ண?/

என்ன கோவம் இருந்தாலும் மேடத்த செல்லமா டா போட்டு பேசுறாய்ங்கப்பு. நெலம அப்புடி:))

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இந்த அநியாயத்தக் கேக்க யாருமே இல்லையா?//
ஏன் இல்ல‌
ச‌ங்க‌த்துக்கு ஒரு மெயில் அனுப்புங்க‌ த‌ல‌ அப்புற‌ம் பாருங்க‌ என்ன‌ ந‌ட‌க்குதுன்னு

Anonymous said...

//நிகழ்வு ஒண்ணு:

"கார்த்தி சார்.. இன்னைக்கு உங்க கிளாஸ்ல ஒரு பத்து நிமிஷம் எனக்குத் தர முடியுமா? ஒரு சின்ன டாபிக் நடத்த வேண்டி இருக்கு.."

"சாரி மேடம்.. நானே இன்னும் சிலபஸ் முடிக்கல..அதனால.."

"பரவாயில்ல சார்.. பார்த்துக்கலாம்.."

முதுகுக்குப் பின்னாடி

"பரதேசி.. என்னமோ இவன் மட்டும்தான் பாடம் நடத்துற மாதிரியும்.. மத்தவங்க எல்லாம் சும்மா சம்பளம் வாங்குற மாதிரியும்.. ஓவர் சீன்.. இவன் நடத்துற லட்சணம் எனக்குத்தெரியாதா?"

நிகழ்வு ரெண்டு:

"கார்த்தி சார்.. இன்னைக்கு உங்க கிளாஸ்ல ஒரு பத்து நிமிஷம் எனக்குத் தர முடியுமா? ஒரு சின்ன டாபிக் நடத்த வேண்டி இருக்கு.."

"ஒண்ணும் பிரச்சினை இல்ல மேடம்.. எடுத்துக்கோங்க.."

"ரொம்ப தாங்க்ஸ் சார்.."

முதுகுக்குப் பின்னாடி

"நான் சொல்லல.. அவன் எப்பவுமே இப்படித்தான்... கேட்டவுடனே கொடுத்துட்டான் பார்த்தியா? சும்மா பேருக்குத்தான் கிளாசுக்குப் போறான். பாடமே நடத்துறது கிடையாது.. டுபாக்கூரு.. இது கிட்ட படிக்கிற பசங்க எப்படி வெளங்கப் போகுது?"//

எப்படி பாண்டியன் இப்படி உங்களை பத்தி நீங்களே வெட்ட வெளிச்சமாக்கி ஹிஹிஹி நெம்ப தெகிரியம்......

ஜெட்லி... said...

மதரசப்பட்டினம் பாட்டில் வாம்மா துரையம்மா பாட்டு
கேக்குறது நல்லா இருக்கு.....தமிழை உதித் நாராயணன்
வாழவைக்கிறத விடுங்க,,,,

நேசமித்ரன் said...

வானம்பாடிகள் said...
/ஈரோடு கதிர் said...

//சங்கர் said...
தல, நீங்க எதிர்பாக்குறது நடக்காது, அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்//

நானும் அதே தான் நினைச்சேன்

இந்த கார்த்திக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்கனும்னு யாருக்குமே தோணலையா/

மொதல்ல எங்க பாலாசிக்கு ஒரு வழி சொல்லீட்டு அப்புறம் மதுரைக்கு வழி சொல்லலாம். அட்வைசு குடுக்குறாய்ங்க அட்வைசு:))

April 19, 2010 10:32 AM
வானம்பாடிகள் said...
/அடப்பாவிகளா.. நான் என்னதாண்டா பண்ண?/

என்ன கோவம் இருந்தாலும் மேடத்த செல்லமா டா போட்டு பேசுறாய்ங்கப்பு. நெலம அப்புடி:))

April 19, 2010 10:35 AM


:)

Jackiesekar said...

கார்த்தி..சுறா படத்துக்கு மணிசர்மா மியூசிக்...

பனித்துளி சங்கர் said...

//////நிகழ்வு ஒண்ணு:

முதுகுக்குப் பின்னாடி

"பரதேசி.. என்னமோ இவன் மட்டும்தான் பாடம் நடத்துற மாதிரியும்.. மத்தவங்க எல்லாம் சும்மா சம்பளம் வாங்குற மாதிரியும்.. ஓவர் சீன்.. இவன் நடத்துற லட்சணம் எனக்குத்தெரியாதா?"

நிகழ்வு ரெண்டு:

"கார்த்தி சார்.. இன்னைக்கு உங்க கிளாஸ்ல ஒரு பத்து நிமிஷம் எனக்குத் தர முடியுமா? ஒரு சின்ன டாபிக் நடத்த வேண்டி இருக்கு.."

"ஒண்ணும் பிரச்சினை இல்ல மேடம்.. எடுத்துக்கோங்க.."

"ரொம்ப தாங்க்ஸ் சார்.."

முதுகுக்குப் பின்னாடி

"நான் சொல்லல.. அவன் எப்பவுமே இப்படித்தான்... கேட்டவுடனே கொடுத்துட்டான் பார்த்தியா? சும்மா பேருக்குத்தான் கிளாசுக்குப் போறான். பாடமே நடத்துறது கிடையாது.. டுபாக்கூரு.. இது கிட்ட படிக்கிற பசங்க எப்படி வெளங்கப் போகுது?"///////ஏலே இப்ப நீங்க ரெண்டுபேருமே வந்து பாடம் நடத்தலைனு யார் அழுதது . வந்திருச்சுக அதிகம் படிச்சு ஆசிரியர் ரம்பங்கள் .

என்ன கொடுமை ஸார் இது !எங்கபோனாலும் திட்டுறாங்க

Ganesh Babu said...

பாண்டியன் உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு

வரதராஜலு .பூ said...

நல்லாவே உக்காந்துக்குனு யோசிக்கிற்ங்க.

:)

க.பாலாசி said...

//முதுகுக்குப் பின்னாடி //

அதெப்படிங்க... பின்னாடி பேசுறதையும் கரைட்டா...கண்டுபிடிக்கிறீங்க...

நல்லது....

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
மொதல்ல எங்க பாலாசிக்கு ஒரு வழி சொல்லீட்டு அப்புறம் மதுரைக்கு வழி சொல்லலாம். அட்வைசு குடுக்குறாய்ங்க அட்வைசு:))//

போறயெடத்துல எல்லாம நமக்கு மொய் வைக்கலன்னா தூக்கம் வராதே உங்களுக்கு.... அப்டியாச்சும் ஏதாவது பொண்ணுபாத்து இந்தாப்பா இத ‘முதல்ல’ கட்டிக்க அப்டின்னு சொல்றீங்களா!!!!!

vasu balaji said...

க.பாலாசி said...

// போறயெடத்துல எல்லாம நமக்கு மொய் வைக்கலன்னா தூக்கம் வராதே உங்களுக்கு.... அப்டியாச்சும் ஏதாவது பொண்ணுபாத்து இந்தாப்பா இத ‘முதல்ல’ கட்டிக்க அப்டின்னு சொல்றீங்களா!!!!!//

உன்னைய நம்பி பொண்ணுபார்த்து நான் சீப்படவா. உனக்கு கதிர சர்டிபிகேட் தரசொல்லு பாப்பம். என்ன கொழுப்பிருந்தா ‘முதல்ல’ கட்டிக்கன்னு சொல்ல சொல்லுவ. அப்புறம் ரெண்டாவது மூணாவது எல்லாம் கேப்பியோ. படவா:))

எல் கே said...

//சமீபத்தில் என்னை மிகவும் எரிச்சல் அடைய வைத்த விளம்பரம் - டாடா டோகோமோ//
+1

ஆ.ஞானசேகரன் said...

எல்லாம் நலம்

Anonymous said...

அவ்வ்...

Anonymous said...

ஈரோடு கதிர் said...
இந்த கார்த்திக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்கனும்னு யாருக்குமே தோணலையா
//
அட...ஆமாண்ல...
யாரங்கே.... மேளம் கொட்டட்டும்...

தலயை எங்கப்பா காணும்....கலேஜக்கு போயிட்டாரா?

அன்புடன் அருணா said...

நல்லா யோசிச்சிருக்கீங்க!

மேவி... said...

கார்த்தி, கல்யாண ஆசை வந்துருச்சுன்ன, போய் அமா கிட்ட சொல்லுங்க. இப்படி பதிவில எழுதின எப்புடி அம்மாவுக்கு தெரியும் ??????


பிறகு கோயம்புத்தூர் மேடம் மதுரை காலேஜ் ல சேர்ந்தாச்சு போல் இருக்கே ???? என்ன விஷயம்......???

சொல்லரசன் said...

//--> என்னதான் நாம செகப்பா இருந்தாலும் நம்ம நிழல் கருப்பாத்தான் இருக்கும்

--> என்னதான் டிவி விடிய விடிய ஓடினாலும் ஒரு இன்ச் கூட நகராது

--> தூங்குறதுக்கு முன்னாடி தூங்கப் போறேன்னு சொல்லலாம்.. ஆனா.. எந்திரிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?

--> செருப்பு இல்லாம நாம நடக்க முடியும்.. ஆனா.. நாம இல்லாம செருப்பு நடக்க முடியுமா?//

உங்க‌ கிட்ட படிக்கிற பசங்க எப்படி வெளங்கப் போகுது?"

Anonymous said...

//சமீபத்தில் என்னை மிகவும் எரிச்சல் அடைய வைத்த விளம்பரம் - டாடா டோகோமோ//

இந்த அநியாயத்தக் கேக்க யாருமே இல்லையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nallaa irukkuppaaa

selventhiran said...

படித்தேன் :)

Kannamma said...

"உக்கார்ந்து யோசிச்சது "suraa padaththa paththi ukkanthu balamma yosikkureenga pola .vedungalen padam release aagattum.

Anonymous said...

வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.

நாடோடி இலக்கியன் said...

நல்ல தொகுப்பு.

வெற்றி said...

//அடப்பாவிகளா.. நான் என்னதாண்டா பண்ண?//

இந்த மேடம்களே இப்படித்தான்..குத்துங்க எசமான் குத்துங்க :)