May 6, 2010

இரவில் உலாவும் கழுகுகள் (200வது இடுகை)..!!!

கோயம்பேடு பேருந்து நிலையம். இரவு பத்து மணி. எறும்புக்கூட்டம் போல மனிதர்கள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலை. பயணம் செய்வதற்கான ஏதோ ஒரு காரணம்.

அம்மா ஒருத்தி "சனியனே, தின்னு தொலை" என்று தன் குழந்தைக்கு பாசமாக உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். அதீத மேக்கப்புடன் சுற்றிக் கொண்டிருந்த பெண்கள் தங்களுக்கான வாடிக்கையாளரைத் தேடிக் கொண்டிருந்தார்கள். "எந்த ஊர் சார்.. சொல்லு சார்.." என்று குலையாத நம்பிக்கையோடு ஒவ்வொருவரின் பின்னாடியும் ஓடிக் கொண்டிருந்த பஸ் புரோக்கர்கள்.

எதையும் லட்சியம் செய்யாதவனாக அவன் ஓரமாக நின்று பாஸ்ட் புட் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வயது முப்பது - நாற்பது வரை இருக்கலாம். அவன்.. அல்லது அவர்?.. சரி, அவன் என்றே வைத்துக் கொள்வோம். மாநிறம். கொஞ்சம் குள்ளம். ஒல்லியாக இருந்தான்.தரையில் இருந்த கைப்பை அவன் ஏதோ ஒரு பாடாவதி கம்பெனியின் ரெப் என்பதை சொல்லாமல் சொல்லியது. ஒரே ஒரு ராத்திரி நம்மோடு பயணம் செய்யப் போகிறவனைப் பற்றி... இந்த விபரங்கள் போதும்.

அவன் முன்பே பதிவு செய்திருந்த சேலம் போகும் பஸ் வந்து நின்றது. ஏறினான். தன்னுடைய இருக்கை எண்ணைத் தேடி ஜன்னல் ஓரமாக அமர்ந்தான். மென்மையான காற்று முகத்தை வருடியது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பஸ்ஸில் ஏறத் தொடங்கி இருந்தார்கள். இன்னும் எத்தனை நேரம் ஆகுமோ என்ற மெல்லிய சலிப்போடு அவன் தலையைத் திருப்பியபோது.. அவளைப் பார்த்தான்.

தேவதை என்றொரு ஒற்றை வார்த்தைக்குள் அவளை அடைக்க முடியாது. அதையும் மீறிய அழகு.. (ச்சே.. இதற்கு மேல் வர்ணிக்க ஆரம்பித்தல் உடனே கார்த்திக்கு கல்யாணாம் பண்ணி வையுங்கள் என்று ஒரு கூட்டமே கிளம்பி வந்து ஓட்டும் அபாயம் இருப்பதால்.. இத்தோடு நிப்பாட்டிக்குவோம்) சோ.. அவள் ரொம்ப அழகாக இருந்தாள். கூடவே ஒரு குட்டி தேவதை. மகள்? கழுத்தில் இருந்த தாலி அதை உறுதி செய்தது. பெரியதொரு டிராவல் பேகை தூக்க முடியாமல் இழுத்து வந்து அவனுக்கு முன் இருக்கையில் வைத்தாள். அவன் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கொஞ்சம் எந்திரிக்கிறீங்களா? அது என்னோட சீட்.."

சட்டெனக் கேட்ட குரல் அவனை மீண்டும் நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. திரும்பிப் பார்த்தால்.. திடகாத்திரமாக ஒரு மனிதன். யார் இந்த பூஜை வேளைக் கரடி? அவள் கணவனாகஇருப்பானோ?

"சார்?.."

"நீங்க உட்கார்ந்து இருக்குற ஜன்னல் சீட் என்னோட நம்பர் சார்.."

"சாரி.."

நகர்ந்து அமர்ந்தான். மற்றவன் உள்ளே சென்று சீட்டில் சாவகாசமாக சாய்ந்து கொண்டான். முன்சீட் தேவதை இன்னமும் அந்தப் பையைத் தூக்கி மேலே வைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

"எக்ஸ்க்யூஸ் மீ.. நான் ஹெல்ப் பண்றேன்.."

எழுந்து பையை சிரமப்பட்டு உள்ளே சொருகினான். அவள் பார்வையினால் நன்றி சொன்னாள். சந்தோஷமாக தன் இருக்கைக்கு மீண்டும் திரும்பியபோதுதான் கவனித்தான். பக்கத்து சீட்டில் இருந்த மற்றவன் அவனையே முறைத்துக் கொண்டிருந்தான். இவன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான். சற்று நேரத்தில் பஸ்கிளம்பியது.

எப்போது தூங்கிப் போனான் என்று தெரியவில்லை. சட்டென்று முழிப்பு வந்தது. ரேடியம் வாட்சின் முட்கள் மணி இரண்டு என்றன.

"போச்சுடா.. இனிமேல் தூக்கம் அவ்வளவுதான்" என்று மனசுக்குள் சொல்லியவனாக சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாரும் எட்டாம் ஜாமத்தில் இருந்தார்கள். அவனருகே இருந்த கரடியும் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் கைகளை நீட்டி சோம்பல் முறித்தான்.

உடம்பை முறுக்கியபோது அவனுக்கேத் தெரியாமல் கால்கள் முன் இருக்கைக்குக் கீழே போயின. மெத்தென எதன் மீதோ இடித்த மாதிரி இருந்தது. சடாரென்று கால்களை உள் இழுத்துக் கொண்டான். அந்த தேவதையின் கால்களோ? அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. லேசாக சூடாவது போல இருந்தது.

யாரும் தன்னை கவனிக்க வில்லையே என்பதை உறுதி செய்து கொள்வது போல சுற்றிப் பார்த்தான். மெதுவாக, அறியாமல் கால்களை விடுகிறவன் போல முன்னே நீட்டினான். சற்று நேரத்தில் அவனால் ஸ்பரிசத்தை உணர முடிந்தது. மெல்லிய சதைப்பகுதியின் மீது அவன் கால்கள் உரசிக் கொண்டிருந்தன.

அவள் பாட்டுக்கு எழுந்து குய்யோ முய்யோ என்று கத்தி விட்டால்? அவனுக்கு பயமாக இருந்தது. இருந்தும் கால்களை எடுக்க மனம் வரவில்லை. மெதுவாக கால்களைக் கொண்டு உரசத் தொடங்கினான்.

அவன் பயந்தாற்போல அவள் எந்தக் கூப்பாடும் போடவில்லை. அசந்து தூங்குகிறாளோ? இல்லை அவளுக்கும் இது பிடித்து இருக்கிறதோ? கேள்விகள் அவனுக்குள் சுழன்று அடித்தன. தைரியம் பெற்றவனாக அந்த உடலின் மீது தன் கால்களைப் படர விட்டான். போதை.. மயக்கம்..

அவனுக்கு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. தெரியாமல் தவற விடுவதைப் போல தன்னுடைய வாட்சை தவற விட்டான். வெளியே குனிந்து அதை எடுக்க முயல்பவன் போல முன்னாடி இருக்கையை பார்த்தபோது.. அவனுக்கு சுரீர் என்று மின்னல் தாக்கியது.

அந்தப் பெண் தன்னுடைய இரு கால்களையும் நன்றாக மடக்கி வைத்து இருக்கைகளுக்குள் அடங்கியவளாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அப்படியானால் கீழே இருந்தது?

மெதுவாகக் குனிந்து பார்த்தான். இத்தனை நேரம் எந்த எதிர்ப்பும் வராததன் அர்த்தம் புரிந்து போனது. அங்கே அந்தப் பெண் குழந்தை படுத்துக் கிடந்தது. அவனுக்கு குப்பென்று வேர்த்து விட்டது. இத்தனை நேரம் அந்தப் பத்து வயது பெண் குழந்தையிடம் தான்..? அவன் முகம் இருண்டு போனது. கண்களை மூடியவனாக படுத்துக் கொண்டான்.

பதினைந்து நிமிடங்கள் போயிருக்கும். கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தான். எதுவும் தெரியாமல் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உடம்பு இன்னும் தணலாக தகித்துக் கொண்டிருந்தது. ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக, மெதுவாக.. தன் கால்களை முன் இருக்கைக்குள் நுழைத்தான்.

பஸ் சேலம் பேருந்து நிலையத்துக்கும் நுழைந்த போது விடிந்து இருந்தது.

"விலகிக்கிறீங்களா.. நான் எறங்கணும்.."

பக்கத்து இருக்கை கரடியின் குரல் கேட்டு கண் முழித்தான். விலகினான். அந்த ஆள் பின் கதவு வழியாக இறங்கிப் போனான். முன் சீட் பெண் மேலே இருந்த தன்னுடைய பையோடு போராடிக் கொண்டிருந்தாள். அப்படி ஆனால்.. அவன் இவளுடைய கணவன் இல்லையா?

"இருங்க, நான் எடுத்து தரேன்.."

அந்த டிராவல் பேகையும் தன்னுடைய பையையும் எடுத்துக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினான். குழந்தையை கூட்டிக் கொண்டு அந்தப் பெண்ணும் இறங்கினாள்.

"புஜ்ஜிமா.. அங்கிளுக்கு தாங்க்ஸ் சொல்லு.."

"தாங்கயூ அங்கிள்.." அந்தக் குழந்தை வெள்ளந்தியாக சிரித்தப்படி சொன்னது.

"ஒரு நிமிஷம்.. இந்தப் பையைப் பிடிங்க.."

அவளிடம் பையைக் கொடுத்து விட்டு ஓடினான். அருகில் இருந்த கடையில் இருந்து இரண்டு சாக்லேட்டுகளை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான். குழந்தையிடம் நீட்டினான். அது தன் அம்மாவின் முகத்தை பார்த்தது.

"பரவாயில்ல.. வாங்கிக்கோ.."

அது சந்தோஷமாக வாங்கிக் கொண்டது. குனிந்து குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.

"நான் வர்றேங்க.."

திரும்பி நடக்கத் தொடங்கினான்.

34 comments:

Raju said...

ஐ ஆம் த ஃபர்ஸ்ட் ஆள் ஆஃப் தட் கூட்டம்!

கார்த்திக்கு கல்யாணம் பண்ணி வைங்கப்பா.

Balakumar Vijayaraman said...

கதையில் ஏதோ நெருடுது கார்த்தி. பிறிதொரு சமயம் விரிவாக விவாதிப்போம்.

200 க்கு வாழ்த்துகள்.

kunthavai said...

கதை தான் என்றாலும்.... ரெம்பவே அருவருப்பாக இருக்கிறது.

வால்பையன் said...

//ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக, மெதுவாக.. தன் கால்களை முன் இருக்கைக்குள் நுழைத்தான்.//


இது தான் நெருடுது!
ஒற்றை வரியில் முடிக்காமல் அவனது எண்ண போராட்டாங்களை விவரித்திரிக்க வேண்டும், இல்லையென்றால் கதை எழுதியவரும் சேர்த்து வில்லனாவீர்கள்!

200 க்கு வாழ்த்துக்கள்!

பதிவை முழுசா படிக்கிறாய்ங்களான்னு டெஸ்ட் வைக்கிறிங்களோ!

Prabu M said...
This comment has been removed by the author.
பனித்துளி சங்கர் said...

முதலில் உங்களின் 200 -வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் .
கதை மிகவும் அருமையாக இருந்தது . இன்னும் பல சிறந்த படைப்புகளை உங்களிடம் எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் நானும் ஒருவனாய் .

செ.சரவணக்குமார் said...

200 க்கு வாழ்த்துக்கள் சார்.

கதை பற்றிய நண்பர் வால்பையனின் கருத்து மிக அருமை, அதோடு உடன்படுகிறேன். நீங்கள் சிறந்த இடுகையாளர், இதைவிட சிறந்த கதையை உங்களால் எழுத முடியும். வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//♠ ராஜு ♠ said...
த ஃபர்ஸ்ட் ஆள் ஆஃப் தட் கூட்டம்!
கார்த்திக்கு கல்யாணம் பண்ணி வைங்கப்பா.//

ஊருக்கு வருவல்ல.. உனக்கு இருக்குடி..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//வி.பாலகுமார் said...
கதையில் ஏதோ நெருடுது கார்த்தி. பிறிதொரு சமயம் விரிவாக விவாதிப்போம்.200 க்கு வாழ்த்துகள்.//

வெளிப்படையான கருத்துக்கு நன்றி பாலா.. கண்டிப்பாக விவாதிப்போம். அதன் மூலமே எழுத்துக்களை இன்னும் கூர் தீட்டிக் கொள்ள முடியும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// kunthavai said...
கதை தான் என்றாலும்.... ரெம்பவே அருவருப்பாக இருக்கிறது.//

இது போன்ற மனிதர்கள் நிஜத்திலும் இருக்கிறார்களே.. மேடம்..:-(((.

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
இது தான் நெருடுது!ஒற்றை வரியில் முடிக்காமல் அவனது எண்ண போராட்டாங்களை விவரித்திரிக்க வேண்டும், இல்லையென்றால் கதை எழுதியவரும் சேர்த்து வில்லனாவீர்கள்!//

நிறையவே குழப்பத்தோடு தான் எழுதினேன் தல.. மனச்சிக்கல் என்றொரு நிலையில் எழுதினால் அது ஆபாசமாக முடிந்து விடுமோ என்றுதான் அப்படியே விட்டு விட்டேன்.. சொல்ல வந்த விஷயத்தை சரியாக சொல்ல வில்லை என்று புரிகிறது.. மாற்றிக்கொள்கிறேன்..

//200 க்கு வாழ்த்துக்கள்!//

நன்றி தல

//பதிவை முழுசா படிக்கிறாய்ங்களான்னு டெஸ்ட் வைக்கிறிங்களோ!//

லைட்டா..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

@ pirabu.M

உங்க பின்னூட்டத்தை நான் ஏற்கனவே வாசிச்சுட்டேன் நண்பா.. ஏன் எடுத்தீங்க? பாராட்டுற மாதிரி தவறுகளையும் சுட்டிக் காட்டுறது ஒன்னும் தப்பில்லையே? நான் நினச்சது ஒரு மாதிரி.. கதை வேற மாதிரி வந்திருக்கு.. கண்டிப்பா நான் sportiveஆ தான் எடுத்துப்பேன்..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...முதலில் உங்களின் 200 -வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் . கதை மிகவும் அருமையாக இருந்தது . இன்னும் பல சிறந்த படைப்புகளை உங்களிடம் எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் நானும் ஒருவனாய்//

ரொம்ப நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//செ.சரவணக்குமார் said...
200 க்கு வாழ்த்துக்கள் சார். கதை பற்றிய நண்பர் வால்பையனின் கருத்து மிக அருமை, அதோடு உடன்படுகிறேன். நீங்கள் சிறந்த இடுகையாளர், இதைவிட சிறந்த கதையை உங்களால் எழுத முடியும். வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பா.. உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்.. வலைப்பக்கம் என்பது எழுதிப் பழகுவதற்கான ஒரு தளம்தானே.. கண்டிப்பா அடுத்த தடவை இன்னும் நல்லா எழுத முயற்சிக்கிறேன்..:-))

vasu balaji said...

200க்கு வாழ்த்துகள் கார்த்தி:)

"உழவன்" "Uzhavan" said...

நண்பா.. சம்பவங்கள் அப்படியே கண் முன்னால் விரிகின்றன. நல்ல எழுத்து.
200க்கு வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//வானம்பாடிகள் said...
200க்கு வாழ்த்துகள் கார்த்தி:)//

வாழ்த்துக்கு நன்றி பாலா சார்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//உழவன்" "Uzhavan" said...
நண்பா.. சம்பவங்கள் அப்படியே கண் முன்னால் விரிகின்றன. நல்ல எழுத்து.
200க்கு வாழ்த்துகள்//

நன்றி நண்பா

Santhappanசாந்தப்பன் said...

வாழ்த்துக்கள்!!


கதையின் மையக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

எழுத்து நடை அருமை!!

தேவன் மாயம் said...

200 க்கு வாழ்த்துக்கள் கார்த்தி!!

சிநேகிதன் அக்பர் said...

200 க்கு வாழ்த்துகள்.

dheva said...

உங்க 200 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் கார்த்தி....!

Jerry Eshananda said...

வாழ்த்துகள் கார்த்தி.

முகுந்த்; Amma said...

இப்பொழுது தான் உங்கள் தளத்திற்கு முதலில் வருகிறேன்.

200 க்கு வாழ்த்துக்கள்.

இந்த கதை நிகழ்காலத்தில் நடப்பதை உரைப்பது போல இருக்கிறது. பஸ் பயணத்தில் நிறைய பெண்கள் இதனை போன்றதொரு தொல்லை அனுபவித்து இருப்பார்கள் என்று நினைக்கிறன். கொஞ்சம் அருவருப்பாக தான் இருக்கிறது.

M.G.ரவிக்குமார்™..., said...

வாழ்த்துக்கள் பாஸ்!......சீக்கிரமே 300 ஐத் தொட வேண்டும்!....

Unknown said...

200க்கு வாழ்த்துகள் கார்த்தி..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

200க்கு வாழ்த்துகள் நண்பரே.

ஹேமா said...

கார்த்தி...எங்க நீங்க.
காணவே முடியலயே !

கதை படிச்சேன் கார்த்தி.எழுத்து நடை அருமை.கதையும் இயல் வாழ்வுதான்.
இப்படியும் நடக்கிறதுதான்.

வாழ்த்துகள் கார்த்தி 200 க்கு.

மேவி... said...

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை நல்லாவே சொல்லிருக்கிங்க

இரண்டு மாசத்துக்கு முன்னாடியே இதை என்கிட்டே நீங்க சொல்லிவிட்டதால் படிக்கும் பொழுது சுவாரசியம் ஏற்படவில்லை :(

Prabu M said...

//உங்க பின்னூட்டத்தை நான் ஏற்கனவே வாசிச்சுட்டேன் நண்பா.. ஏன் எடுத்தீங்க?//

கதையைப் போலவே என்னுடைய பின்னூட்டமும் நான் நினைத்ததற்கு வேறுமாதிரி வந்துவிட்டது நண்பா அதுதான் எடுத்துவிட்டேன் :) மெயில் ஒன்று அனுப்பியிருக்கிறேன் :)

ஸ்ரீ.... said...

பாண்டியன்,

200 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல சாதனைகளுக்கும் சேர்த்து!

ஸ்ரீ....

Joe said...

//
தேவதை என்றொரு ஒற்றை வார்த்தைக்குள் அவளை அடைக்க முடியாது. அதையும் மீறிய அழகு.. (ச்சே.. இதற்கு மேல் வர்ணிக்க ஆரம்பித்தல் உடனே கார்த்திக்கு கல்யாணாம் பண்ணி வையுங்கள் என்று ஒரு கூட்டமே கிளம்பி வந்து ஓட்டும் அபாயம் இருப்பதால்.. இத்தோடு நிப்பாட்டிக்குவோம்) சோ.. அவள் ரொம்ப அழகாக இருந்தாள். கூடவே ஒரு குட்டி தேவதை. மகள்?
//
அகில இந்திய ஆண்டிகள் விரும்பிகள் சங்கத் தலைவர் கார்த்திக் வாழ்க! ;-)

200 இடுகைகள் எழுதி முடித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா!

Anonymous said...

வாழ்த்துக்கள் 200 இடுகைக்கு...
வேறு எதாவது சிறப்பா எழுதியிருக்கலாம் 200வது இடுகையின் நினைவாய் சிறப்பாய்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிள்ளையாண்டான் said...
வாழ்த்துக்கள்!!கதையின் மையக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
எழுத்து நடை அருமை!!//

நன்றிங்க.. என்னுடைய கருத்தோடு கண்டிப்பாக நீங்கள் உடன்பட வேண்டும் என்றில்லை.. உங்கள் கருத்தை தெளிவாக சொன்னதற்கு நன்றி..:-)))

//தேவன் மாயம் said...
200 க்கு வாழ்த்துக்கள் கார்த்தி!!//

நன்றி தேவா சார்

// அக்பர் said...
200 க்கு வாழ்த்துகள்.//

நன்றி நண்பா..:-)