December 31, 2010

டாப் டென் டப்பா படங்கள் 2010

வருஷம் முடியப்போகுதுங்கிறதால நம்ம மெய்நிகர் ஒலகத்துல இருக்குற எல்லாப் பயபுள்ளைகளும் பத்து போட்டுக்கிட்டு திரியுதுங்க. அட தலைக்கு போடுற பத்து இல்லைங்க. எனக்குப் பிடிச்ச பத்து படம், பத்து பாட்டு, பத்து நடிகை.. அடடடடா நாட்டுல இந்த பத்து போடுறவங்க இம்சை தாங்க முடியலப்பா.. ஹிஹிஹி.. ஆனாலும் பாருங்க.. ஊரோட ஒத்துப் போகணும்கிற ஒரே காரணத்தினால நாமளும் ஒரு பத்த வெளியிடுறோம். அதாவது, கடந்த வருஷம் அதிகமா எதிர்பார்ப்ப கெளப்பி விட்டு புஸ்வாணமாப் போன பத்து படங்களோட தொகுப்பு இது.

ஜக்குபாய்

அகில இந்திய ரீதியில டொராண்ட்ல வெளியான முதல் பிரபல தமிழ்ப்படம். ரவிக்குமார் - சரத்குமார்னு நம்பிப் போன மக்கள குனிய வச்சு நல்லா குமுறு கும்றுன்னு குமுறித் தள்ளிய படம். படத்த விட படத்துக்கு வெளில நடந்த ஒலகக் காமடிதான் மக்களுக்கு செம குஜால்ஸ். என் காசு போச்சேன்னு ராதிகா அழுவ, ஆறுதல் சொல்ல யாரும் வர மாட்டாங்களான்னு பார்த்து சரத் கூட்டம் போட, மேடைக்கு வந்த தலைவரு "இது வாசபின்னு ஒரு பிரெஞ்சு படம், மக்கள் நல்லா இருந்தா தானே தியேட்டருக்கு வருவாங்க.. அய்யாங் டொய்யாங்"னு வழக்கம் போல போட்டு பின்னிப் பெடலெடுக்க.. ஹே பாபாஜி.. உன் கருணையே கருணை. சரியான மக்குபாய்.

ஆறுதல்: அப்படி ஒண்ணுமே இல்ல.. அவ்வவ்..

கோவா

கதை இல்லைன்னாத்தான் நான் படமெடுப்பேன்னு அடம் பிடிக்கிற வெங்கட்பிரபுவோட மூணாவது படம். சூப்பர் ஸ்டார் மவ காசுல பொங்க வச்சு தம்பிய புரமோட் பண்ண படம் எடுத்தா வெளங்குமா? மக்கள் "கோ - வா"ல "கோ"வ மட்டும் பிடிச்சுக்கிட்டு போயிட்டு வாங்கப்பான்னு சொல்லிட்டாங்க. கடன் பிரச்சினைல ஐஸ்வர்யா மானம் சந்தி சிரிச்சதும் சினேகா பிகினில வர்றாங்கன்னு பொய்ப்பிரச்சாரம் (வருத்தம்ஸ் ஆப் இந்தியா) பண்ணி ஏமாத்துனதும் தான் படத்தோட சாதனை. வெத்து பாவ்லா.

ஆறுதல் - பியா, இது வரை இல்லாத உறவிது

அசல்

"நீங்க நடக்கிறீங்க. நடக்குறீங்க.. நடந்துக்கிட்டே இருக்கீங்க. கோட்டு சூட்டு கண்ணாடியும் உண்டு.. எப்பூடி.." இதச் சொல்லி ஒரு மனுஷன நடிக்க வைக்க முடியுமா? தலகிட்ட போங்க. வட்டாரம், மோதி விளையாடுன்னு புல் பார்ம்ல இருந்த சரண்கிட்ட கொடுத்தப்பவே தெரிஞ்சு போச்சு இது தரிசு தான்னு. போதாக்குறைக்கு டோட்டட்டைங்க்னு பரத்வாஜ் வேற. மொத மூணு நாள்ல பதினெட்டு கோடி எல்லாம் சரி, ஆனா நாலாவது நாள்ல இருந்து ஒரு பய கூட தியேட்டர் பக்கம் போகவே இல்ல. அசல்னு பேரு வச்சுப்புட்டு அத்தனையும் காப்பி. ஊசல்.

ஆறுதல் - பாவனா

தீராத விளையாட்டுப் பிள்ளை

இளைய தளபதி மாதிரி வரணும்னு விஷால் நினைக்கிறது தப்பில்லை. ஆனா அதுக்காக அவர மாதிரி ஓடாத மொக்கப் படமாத்தான் நடிப்பேன்னா என்ன நியாயம்? சத்யம், தோரணைக்குப் பிறகு வந்த ஹாட்ரிக் தோல்வி. மூணு பொண்ணுங்க. தொரத்தி தொரத்தி லவ் பண்ணி மூணு பேரையும் ஏமாத்துற ஹீரோ நல்லவரு. ஏன்னா அவரு ஆம்பிளையாமாம். ஆனா அதே ஒரு பொண்ணு திருப்பி அடிச்சா "அடங்கி நடக்கணும், பஜாரித்தனம் பண்ணாத"னு பொறுப்பா அட்வைஸ். ஏண்டா திருந்தவே மாட்டிங்களா? சன் டிவி கழுத்தைப் பிடிச்சு தள்ளுனாக் கூட ஒரு பயலும் தியேட்டருக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டாய்ங்க. லூசுப்பயபுள்ள.

ஆறுதல் - தனுஸ்ரீ, யுவன்ஷங்கர் ராஜா

ரெட்டைச்சுழி

ஷங்கர் தயாரிக்கிற படம்னா ஏதாவது ஒண்ணு இருக்கும்னு சொல்ற மக்களுக்கு மரண அடி. "இயக்குனர் இமயமும் இயக்குனர் சிகரமும்" சேர்ந்து படம் எடுக்கச் சொன்னா இது ஏதோ மேடை நாடகம் மாதிரி இருந்தது. ஒரு வேளை பசங்க படம் ஏற்கனவே வந்துட்டதால ஊத்திக்கிச்சோ என்னமோ? செழியனும் தாமிராவும் இதை விட நல்லா செய்யக் கூடிய ஆளுங்க. இருந்தும் ஏமாத்திட்டாங்க.இத்தோட ஆனந்தபுரத்து வீடும் சொதப்ப ஷங்கர் அடுத்து படம் தயாரிக்கிற மனநிலைல இல்லைன்னு சொல்றாங்க. அது தமிழ் சினிமாவுக்குத்தான் நஷ்டம். ஹ்ம்ம்.. பார்ப்போம். வெற்றுச்சுழி.

ஆறுதல் - அஞ்சலி

சுறா

நானும் மூணு வருஷமா இந்த டப்பா பட லிஸ்ட் எழுதிக்கிட்டு இருக்கேன். வருஷம் தவறாம இடம்பிடிக்கிற ஒரு ஆள் - ஒரே ஆள்.. நம்ம இளைய தளபதி டாக்டர் தமிழகத்தை காக்கப் போற புரட்சி மனிதர் "விஜய்"தான். தண்ணிக்குள்ள இருந்து அவர் பாஞ்சு வந்ததைப் பார்த்து சில பல டால்பின்கள் தண்ணிக்கு உள்ளயே மூச்சடக்கி செத்துப் போனதா கேள்வி. தெலுங்கு பாட்டு ட்யூனக் காப்பி அடிக்கிறதுக்கு ஒரு படி மேல போய் படம் பிடிச்ச விதத்தையும் காப்பி அடிச்சு தமன்னா டவுசர தூக்கி தூக்கி தளபதி டான்சு ஆடுனது படத்தோட சாதனைகள்ல ஒண்ணு. யாழ் நகர்னு எல்லாம் பேரு வச்சு.. அட அட அடா.. அரசியல்ல பெரிய சாணக்கியனா வருவீங்க தளபதி. கூடிய சீக்கிரம் குதிங்க. கருவாடு.

ஆறுதல் - தஞ்சாவூர் ஜில்லாக்கரி, நான் நடந்தா அதிரடி, நடனம்

ராவணன்

இந்திய சினிமாவின் முகம் - அப்படித்தானா சொல்லிக்கிராய்ங்க - மணிரத்னத்தோட படம். அது ஏண்டா விக்ரமா நீ மட்டும் ரெண்டு வருஷம் உசிரக் கொடுத்து நடிச்சாலும் படம் ஓட மாட்டேங்குது? காட்டுக்குள இருக்குற பழங்குடித் தலைவன் பாரதி கவிதை சொல்றதெல்லாம்.. ங்கொய்யால.. பின் நவீனத்துவ புடலங்கா. ஐச பிருத்வி பிடிச்ச பிடியப் பார்த்தும் கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறான்னா.. அபிஷேக் பெரிய ஜித்தன்யா நீயி. தனிப்பட்ட முறையில எனக்குப் பிடிச்ச படம். இருந்தாலும் படம் ஜம்பலக்கடி பம்பா ஆகிப்போச்சு. சாதாரணன்.

ஆறுதல் - ரகுமான், ஒளிப்பதிவு

சிந்து சமவெளி

படத்தொடக்கப் போஸ்டர்லையே கதாநாயகிய ஒரு மார்க்கமாப் படுக்கப்போட்டு மேட்டர சொல்லி இருந்தாய்ங்க. படம் ரிலீஸ் ஆனவுடனே அது கன்பார்ம்டு. மாமனாரின் இன்பவெறியே தான். இந்த கில்மா படத்துக்கு ஜெயமோகன் வேற. துருக்னேவ் கதையாம் - அந்த ஆளு இருந்தா தூக்குப் போட்டு செத்துருப்பான். ஆனாலும் அமலா பால் எனும் தேவதையைக் கொடுத்ததுதான் படத்தின் சாதனை.

ஆறுதல் - சுந்தர் சி பாபு

ஈசன்

சுப்ரமணியபுரம் - இது தவிர வேற ஏதும் சொல்லணுமா படத்துக்கான எதிர்பார்ப்பு பத்தி? ஆனா ஒரு டுபுக்கு பழிவாங்குற கதை. அதுக்கு சம்பந்தமே இல்லாம அமைச்சரு, போலீஸ்ன்னு மண்டை காய வச்சுட்டாரு சசி. ஜில்லா விட்டு ஜில்லா வந்து பாட்டு மட்டும் ஒரு தனி சிறுகதை. ஒரே டீமு, ஒரே மாதிரியான மக்கள் இதுல இருந்து வெளில வந்து அடுத்த படத்துல கலக்குங்க மக்கா..

ஆறுதல் - ஜேம்ஸ் வசந்தன், நமோ நாராயணன்

மன்மதன் அம்பு

உலக நாயகனின் ரசிகர்களுக்கு அவர் கொடுத்த புத்தாண்டு பரிசான நசுங்கிப் போன சொம்பு. மும்பை எக்ஸ்பிரஸ் பரவாயில்லைன்னு பயபுள்ளைங்க தெறிச்சு ஓடுதுங்க. வழக்கம் போல எவனோ ஒரு ஹாலிவுட்காரன் 1950 ல எடுத்தத என் கதைன்னு சொல்லி, ஓரமா கே.எஸ்.ரவிக்குமார ஒக்கார வச்சிட்டு கமல் தானே எடுத்திருப்பார் போல. ஆனாலும் உதயநிதி பெரிய ராஜதந்திரிதான். இல்லைனா படத்த ஜெமினிக்கு கை மாத்தி விட்டுருப்பாரா? ஆனாலும் ஊர் ஊரா கப்பல்ல சுத்தி பார்த்துட்டு வந்தத எல்லாம் ஒரு படமா எடுக்கவும் தில்லு வேணும். அக்காங்..

ஆறுதல் - மாதவன், தேவி ஸ்ரீ பிரசாத்

இது எல்லாமே எதிர்பார்க்க வச்சு ஏமாத்துன படம். நான் டப்பான்னு மண்டை காஞ்சு பெரிய வெற்றி பெற்ற படம்னா அது "விண்ணைத்தாண்டி வருவாயா". அதே மாதிரி இந்த வருஷம் நான் பார்த்ததிலேயே ரொம்பக் கேவலமான படம் கைபேசி எண். அதப்பத்தி படிக்க இங்க சொடுக்குங்க மக்கா.

எவ்ளோ பெரிய நடிகரா இருந்தாலும் கதையும் திரைக்கதையும் நல்லா இல்லைனா ஆப்புத்தான். மக்கள் முழிச்சிக்கிடாங்க - இது ஒரு நல்ல டிரெண்டு. அதை மனசுல வச்சுக்கிட்டு நல்ல படங்கள் இயக்குனர்கள் தரணும் - தருவாங்க அப்படிங்கிற நம்பிக்கை இருக்கு. வர்ற வருஷம் தமிழ் சினிமாவுக்கு நல்லதா அமையட்டும். (முடிக்கும்போது தத்துவம் சொல்லணும்ல)

பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

20 comments:

Unknown said...

சூப்பர் பாஸ்! அருமையான திரைப்பார்வை! அதிலும் 'மன்மதன் சொம்பு' படு கலக்கல்!! :-))

சண்முககுமார் said...

அருமையான திரைப்பார்வை

வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

சக்தி கல்வி மையம் said...

பிளாப் ஆன படங்கள் பற்றி எழுத உட்காந்து யோசிச்சிங்களோ?

பதிவுலக நண்பர்களே..
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

ஆதவா said...

கோவா, தீராதவிளையாட்டுப்பிள்ளை, ராவணன், மன்மதன் அம்பு
இவை மட்டுமே பார்த்தேன்.
இருந்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா வை நீங்கள் டப்பா படம் என்று சொல்வது வியப்பாக இருக்கிறது!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இராகவன் நைஜிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எந்த மொக்க படமா இருந்தாலும், அதையும் பார்த்து விமர்சனம் எழுதுகின்ற உம்மை போன்ற பொறுமைசாலி உலக்கத்தில் உண்டோ?

sathishsangkavi.blogspot.com said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

Anonymous said...

ஒவ்வொரு படத்துக்கும் நீங்க குடுத்துருக்குற வர்ணனையும் விமர்சனமும் அட்டகாசம். குறிப்பா அசலும் சுறாவும்.. ம்ம்ம் உங்க குமுறல் தெரியுது.

2011லயாவது நல்ல படங்கள் வருதானு பாக்கலாம்.

புது வருட வாழ்த்துக்கள்.

Anonymous said...

சிறந்த படங்கள் பட்டியல் தயாரிக்கிறவங்க கிட்ட இருந்து தனிப்பட்டு டப்பா படங்களோட லிஸ்ட் தயாரிச்சதுக்கே உங்கள பாராட்டலாம்.

வித்தியாசமான கலக்கலான பதிவு.

ஜெட்லி... said...

//பியா,இது வரை இல்லாத உறவிது
//


பியாக்கும் உங்களுக்கும் என்ன உறவு...??

குமரை நிலாவன் said...

எந்த மொக்க படமா இருந்தாலும், அதையும் பார்த்து விமர்சனம் எழுதுகின்ற உம்மை போன்ற பொறுமைசாலி உலக்கத்தில் உண்டோ?

சான்சே இல்லை கா.பா விட்டா

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
நண்பரே

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அஞ்சா சிங்கம் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தருமி said...

//தனிப்பட்ட முறையில எனக்குப் பிடிச்ச படம்.//

இப்படி வேற இருக்கா?! அடப் பாவமே!

//எந்த மொக்க படமா இருந்தாலும், அதையும் பார்த்து விமர்சனம் எழுதுகின்ற உம்மை போன்ற பொறுமைசாலி உலக்கத்தில் உண்டோ?//

பரவாயில்லை .. "நல்ல" பேரு வாங்கியிருக்கீங்க. தொடருங்க .. எங்க காசா பணமா?

idroos said...

Enakku theeratha vilaiyaatu pillayil aaruthalaaka therinthathu neethu chandrathaan,

idroos said...

Intha aantin sirantha padamana vinnai t varuvaya ungalukku tappa padama.kadhalil mun anubavam kidaiyadha sir.one of the best romantic movie in tamil boss

idroos said...

Happy new year

மேவி... said...

ரொம்ப நாள் கழிச்சு இந்தியாவுக்கு தான் தனோட அறிவு எல்லாம்ன்னு இங்கிலாந்து ல இருந்து வந்த நண்பனை அசல் படத்துக்கு கூட்டிகிட்டு போனேன். படத்த பார்த்துட்டு இங்கிலாந்து ஓடி போனவன் தான் ...இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஒரு போன் கூட பண்ணல... ம்ம்ம்

இந்த லிஸ்ட் ல ஒன்னு இரண்டு படத்தை தவிர எல்லா படத்தையும் பார்த்துட்டேன் ....தல வலி தான் மிச்சம்...அதுவும் ஈசன் - சத்யமா முடியல

பதிவு நல்லாயிருக்கு காபா

புத்தாண்டு வாழ்த்துக்கள்-

டிஸ்கி - காபா - அப்பருமா மேவியின் பகிர்வுகள் ல வந்து பாருங்க .... இலக்கிய பாஷான்னு ஒரு கதை எழுத போறேன் (நேத்து உங்க கிட்ட கூட சொனேனே ..அதே தான் )

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாண்டியன்..எப்படிப்பா இவ்ளோ பொருமையா பெரிய பதிவு..

வினோத் கெளதம் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா..
மைனா படத்துக்கு கூட நீங்க 'இதே மாதிரி எத்தனை படம்டா சாமிங்கிற'' ரேஞ்சுல தான் விமர்சனம் எழுதிருந்திங்க ..ஆனா படம் ஒரு good entertainer ..
நல்ல ஹிட் கூட.. :)

மதுரை சரவணன் said...

கலக்கல் . ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.