March 9, 2011

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள் - 3

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள் - 1

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள் - 2

பட்டியல் தொடருது. நல்ல பாட்டா இருந்து டுபுக்கு படங்கள்ல சிக்கி காணாமப் போன பாடல்களை பத்திப் பேசுற முயற்சி இது. உங்களுக்குப் பிடித்த, இதே மாதிரியான, அதிகம் ஹிட்டாகாத நல்ல பாடல்கள் இருந்தாலும் சொல்லுங்க மக்களே..

அது ஒரு காலம் அழகிய காலம்
(படம்: அதே நேரம் அதே இடம் இசை:பிரேம்ஜி அமரன்)

ஜெய்யையும் நம்பி ஹீரோவாப் போட்டு எடுத்த படம். சென்னை 28 விஜயலட்சுமிதான் ஹீரோயினி. காதலி பணத்துக்காக காதலனை ஏமாத்துறான்னு காமா சோமான்னு ஒரு மொக்கப்படம். ஆனா இந்தப் பாட்டு.. சின்ன வலியை உண்டு பண்ணிப் போகும் எளிமையான வரிகள், அலட்டிக்காத இசை. "ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா.. முத்துப்போல் சிரித்தாள் மொத்தமாய் அழத்தானா.." காதலிச்சு தோத்தவங்க எல்லாருக்கும் கண்டிப்பா ரொம்பப் பிடிக்கும்.

காதல் அடைமழைக்காலம்
(படம்: ஆண்மை தவறேல் இசை: மரிய மனோகர்)

படம் வெளிவரவே இல்லை. புதுமுகங்கள் நடிச்சு குழந்தை வேலப்பன்கிறவர் இயக்குன படம். ராகால எதேச்சையா கேக்கப் போய் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. பாடல்கள் எழுதினது யார்னு தெரியல, மனுஷன் அசத்தி இருக்கார். இந்தப் பாட்டோட ஆரம்பத்துல வர்ற மழை சத்தமும் ஹம்மிங்கும் அட்டகாசமா இருக்கும். இதே பாட்டோட ரீமிக்சும் இருக்கு.

ஆறு கஜம் சேலை உடுத்தி
(படம்: நேதாஜி இசை: வித்யாசாகர்)

ஏதோ ஒரு தீபாவளிக்கு “தினபூமி” பத்திரிக்கைல இந்தப்படத்துக்கு ஓசியா டிக்கட் கொடுத்தாங்களேன்னு போய்ப் பார்த்தேன். அவ்வ்வ்.. சரத்குமார் ஃபுல்ஃபார்ம்ல கொன்னு எடுத்தாரு. நாயகி லிசா ரே. பாவம் அந்தம்மாவ என்ன சொல்லி ஏமாத்திக் கூட்டிட்டு வந்தாய்ங்கன்னு தெரியல. ஒரு மழைப்பாட்டுக்கு போட்ட கெட்ட ஆட்டம் மட்டும் இப்போதைக்கும் ஞாபகம் இருக்கு. வித்யாசாகர் ஆள் யாருன்னு தெரியாம இருந்த காலத்துல ம்யூசிக் பண்ண படம். இந்தப்பாட்டு கொஞ்சம் நாட்டுப்புற எஃபக்ட்ல கேக்க நல்லாயிருக்கும். பாடுனது கோபால்ராவ் மற்றும் சிந்து.

ஒரு தேவதை பார்க்கும்
(படம்: வாமனன் இசை: யுவன்ஷங்கர் ராஜா)

மறுபடியும் ஜெய். மறுபடியும் ஒரு மொக்கை படம். இதே காலத்துல “முத்திரை”ன்னு ஒரு படம் வந்துச்சு. அதுவும் இதுவும் ஒரே கதை, எந்த வெளிநாட்டுப் படத்துல இருந்து சுட்டாய்ங்கன்னு தெரியல. அதுலையும் வாமனன்ல கூடுதலா கிம் கி டுக்கோட திரீ அயன்ல இருந்து வேற சுட்டிருப்பாய்ங்க. படத்தோட ஒரே ஆறுதல் - யுவனோட இசை. இந்தப்பாட்டும் ஏதோ செய்கிறாய் பாட்டும் நல்லா இருக்கும். அப்புறம் அந்த ஹீரோயின்.. ஹி ஹி.. ஷி இஸ் சோ நைஸ் யு நோ.

ஏதோ ஒரு ஏக்கமோ
(படம்:தா இசை: ஸ்ரீவிஜய்)

நிறைய இளையராஜாவின் சாயல் கொண்ட இசை. ஸ்ரீவிஜய் இலங்கைக்காரர் என்பதாகக் கேள்வி. நல்ல படமாக இருந்தும் கவனிக்கப்படாமல் டப்பாவுக்குள் போனதற்கு தாடி வச்சு கருமமாக இருந்த நாயகனும் திரும்ப திரும்ப பேசிப் பேசி சலித்துப்போன மதுரைப் பின்னணியும் கூட காரணமாக இருக்கலாம். எல்லாப் பாட்டுமே நல்லா இருந்த இந்தப்படத்தில் என்னைத் தொட்டுப்புட்டாவும், இந்தப்பாட்டும் என்னோட ஹாட் சாய்ஸ்.

முள்ளாக குத்தக் கூடாது
(படம்: சொன்னால்தான் காதலா இசை: விஜய டி ராஜேந்தர்)

வழக்கமான டியார் படம். தங்கச்சி செத்த பிறகு நம்ம கரடியார் ஒரு அழுகை அழுவார் பாருங்க.. வாட்டெர்ரர் மென். அத விடுங்க. பாட்டுக்கு வருவோம். சிம்பு பாடுன கொஞ்சம் வேகமான பாட்டு. காதல் வேண்டாம்னு சொல்ற ரோஜாவை முரளி கெஞ்சுற மாதிரி எடுத்திருப்பாங்க. நடுவுல நடுவுல வர்ற ஜில்பா ம்யூசிக்லாம் கொஞ்சம் தாங்கிக்கிற மனசு இருந்தா ஓரளவுக்குப் பிடிக்கலாம்.

பூப்பூக்கும் தருணம்
(படம்: அம்பாசமுத்திரம் அம்பானி இசை: கருணாஸ்)

இலங்கையைக் சேர்ந்த இராஜ், கிரேஸ் பாடின பாட்டு. பாப் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைல் கலந்து கட்டி அடிச்சிருப்பாரு கருணாஸ். பாட்டை படமாக்குன விதமும் டான்சும் பட்டாசு கிளப்பும். நல்ல வளர்ந்து ஓங்குதாங்கா இருக்குற ஹீரோயின் உக்கார்ந்து எந்திருச்சு ஆடும்போது.. ஊப்ஸ். பாட்டுக்கு நடுவுல நடுவுல வர்ற "ஹேய்" சத்தமும் ராப்பும் பாட்டுக்கு இன்னமும் பெப்பைக் கூட்டும். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு.

கோரே கோரே
(படம்: மாஸ்கோவின் காவேரி இசை: தமன்)

ரொம்ப எதிர்பார்க்க வச்சு பப்படமாப் போன ரவிவர்மனோட படம் (யார் எதிர்பார்த்தான்னு எல்லாம் எதிர்க்கேள்வி கேட்கக்கூடாது). இன்னைக்கு சினிமால பத்தே ட்யூன வச்சு மாத்தி மாத்தி ம்யூசிக் போட்டுக்கிட்டு இருக்குறது ரெண்டு பேரு. ஒண்ணு - ஹாரிஸ். இன்னொண்ணு - தமன். இந்தப்பாட்டும் ஏற்கனவே கேட்ட ஏதோ ஒரு பாட்டுதான் ஆனாலும் நல்லாயிருக்கும். நம்ம சமந்தாவுக்காக இந்தப்பாட்டைக் கேளுங்க..

{பாடல் வரிகளுக்கு மேல் கிளிக் செய்யும்போது அதன் யூட்யூப் வீடியோவோ அல்லது பாடல்கள் தரவிறக்கம் செய்வதற்கான லின்குகளோ இணைக்கப்பட்டு இருக்கின்றன..}

10 comments:

ILA (a) இளா said...

//இந்தப்பாட்டும் ஏற்கனவே கேட்ட ஏதோ ஒரு பாட்டுதான் //
இந்தப் பாட்டு தெலுகுல ‘கிக்’ல வந்தப் பாட்டு, தமிழில தில்லாங்கடி.

http://www.youtube.com/watch?v=ne8yj2nA1-U

ஸ்வர்ணரேக்கா said...

இதுல ஒரு பாட்டு கூட நாட் கேட்டதில்லைங்க.. இனிமை தான் கவனிச்சு கேட்கனும்...

ஆனா உங்க குட்டி குட்டி விமர்சனம் சூப்பர்..

//நம்ம கரடியார் ஒரு அழுகை அழுவார் பாருங்க.. வாட் எ டெர்ரர் மென்.//
-- முடியலைங்க.. சிருப்பு சிரிப்பா வருது..

Unknown said...

தேவதை பார்க்கும் நேரமிது.... :-))
ரொம்ப புடிச்சபாட்டு நண்பா...

Speed Master said...

நானும் எந்த பாடாலையும் கேட்கவில்லை

'பரிவை' சே.குமார் said...

உங்க குட்டி குட்டி விமர்சனம் சூப்பர்.

RAJA RAJA RAJAN said...

அருமையான தொகுப்பு...

மனசாலி said...

உங்கள் பதிவை பார்த்து நானும் எனக்கு தெரிந்த பாடல்களை எழுதலாம் என்று http://manasaali.blogspot.com/2011/03/blog-post_14.html பதிவை தொடங்குகிறேன்

Anonymous said...

how i have missed these songs. might be bcoz sun music plays only sun pictures movie songs :)

any way nice post. good.

ராகவன் பாண்டியன் said...

அருமையான தேடல்கள்!...

இன்னும் நிறைய பாடல்கள் சேத்துக்கோங்க...

*) திசை மாறி போயாச்சு மனசு..

*) உன்னில் நானும் என்னில் நீயும் ஒளிந்துகோள்வோமா? ஓ நெஞ்சே ---- படம் : இரண்டு

Bharani said...

Hi... some songs from my list:
JUNE R - Rim Jim (Hariharan)
காதலர் குடியிருப்பு - கங்கை நத்தை எங்கையோ
காதலர் குடியிருப்பு - கங்கை நத்தை எங்கையோ
கனிமொழி - முழுமதி முழுமதி
அ ஆ இ ஈ - நட்ட நடு ராத்திரியை
ஆர்வம் - தேவதை கண்டேனே
அள்ளி அர்ஜுன - சொல்லையோ சோலைக்கிளி
அமுதே - அன்பே அது ஒரு காலம்
அமுதே - என்ன என்ன நான் சொல்ல
அதே நேரம் அதே இடம் - அது ஒரு காலம் அழகிய காலம்
அவள் பெயர் தமிழரசி - ஒத்த சொல்லு சொல்லு
அவள் பெயர் தமிழரசி - guju guju guju goods vandi
சதுரங்கம் - என்ன தந்திடுவேன்
சின்ன கண்ணம்மா - எந்தன் வாழ்வில்
ஜித்தன் - காதலியே காதலியே
கம்பீரம் - நானாக நான் இருந்தேன்
கம்பீரம் - கண்ணின் மணியே கண்ணின் மணியே
குணா - உன்னை நான் அறிவேன்
இளைஞன் - ஒரு நிலா ஒரு குளம்
ஜெயம் - கண்ணாம்பூச்சி ரே ரே
ஜூலி கணபதி - என்னக்கு பிடித்த பாடல்
காலை பனி - சித்திரம் பேசுதடி
காலை பனி - தொட்டு விடும் தூரத்தில்
காலை பனி - கண்டேனே நான் உன்னை
காதல் சொல்ல வந்தேன் - அன்புள்ள சந்தியா
காதல் சொல்ல வந்தேன் - ஒரு வானவில்லின்
காதல் சொல்ல வந்தேன் - என்ன என்ன ஆகிறேன்
குளிர் 100 - மனசெல்லாம் நீ
மலபார் போலீஸ் - என் கண்ணடித் தோப்புக்குள்
மலை மலை - பூ பறிக்கச் சொல்லி
முத்தம் - ஒரு முறை
முத்திரை - ஜூன் ஜூலை
முத்திரை - ஓம் சாந்தி ஓம் ஓம்
முத்துக்கு முத்தாக - மண் வாசனை
நந்தலாலா - தாலாட்டு கேட்க நானும்
நெல்லை பட்டினம் - என் அன்பே என் உயிரே
நெல்லை பட்டினம் - கண்கள் ரெண்டும்
பாட்டு பாடவே - சின்ன கண்மணிக்குல்லே
பேசு - வெண்ணிற இரவுகள்
பேசு - கேட்டிமெல்லாம்
பேசு - என் பேர் தேவதை
பொய் சொல்ல போறோம் - ஒரு வார்த்தை பேசாமல்
பூ - ஆவாரம் பூ
பூ மகள் ஊர்வலம் - மலரே ஒரு வார்த்தை
பூ மகள் ஊர்வலம் - அந்த வானுக்கு
புத்தம் புது பூவே - சாமந்தி
புத்தம் புது பூவே - செவந்தி பூவுக்கும்
ரெட்டைசுழி - பர பர பறவை
ராஜாதி ராஜா (லாரன்ஸ் நடிச்ச படம்) - யாரோ ஒருத்தி யாரோ ஒருத்தி
ராமச்சந்திரா - சின்ன சின்ன
ரேணிகுண்டா - விழிகளிலே விழிகளிலே
சகாக்கள் - ஆறு படையப்பா
தெனாவெட்டு - எங்கே இருந்தாய்
தக திமி தா - காதலை யாரடி முதலில் சொல்ல்வது
தக திமி தா - இம்மசையே உனக்கு
தம்பி - பூவனத்தில்
தம்பி அர்ஜுணா - நல்லமழை நடுங்கும் குளிர்
தவம் - கண்ணதாசா கண்ணதாசா
தீ - நீ இல்லாமல் நான் இங்கு ஏது
உத்தம புத்திரன் (தனுஷ்) - தூறல் போடும்
வனஜா கிரிஜா - உன்னை எதிர் பார்த்தேன்
வேதம் - கொஞ்சி கொஞ்சி
வீட்ல விசேஷம் - மலரே தென்றல்
விகடன் - யார் இவளோ யார் இவளோ
விசில் - சிங்கார சீமையிலே
யோகி - யாரோடு யாரோ
இங்கிலிஷ்காரன் - யாரது யாரது
ஸ்டுடென்ட் நம்பர் 1 - விழாமலே இருக்க முடியுமா
உயிரிலே கலந்தது - உயிரே உயிரே அழைத்தது என்ன
அம்மாவாகிய நான் - உன்னை சரண் அடைந்தேன்
திருமகன் - தட்டி தட்டி பானை செஞ்சேன்

And Many more :) for which i dont know the movie songs!!! :) :)
Anyways Thanks for initiating this.... :) Great job....