June 16, 2010

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள்-2..!!!

ஒரு சில பாட்டுகள்.. ரொம்ப நல்ல பாட்டா இருக்கும்.. ஆனா ஏதாவது டுபுக்கு படத்துல இருக்குற காரணத்துனாலேயே யாருக்கும் தெரியாமயே போயிரும். அந்த மாதிரி ஒரு சில பாடல்களை தொகுத்து (கவனிக்கப்படாத) மனத்தைக் கவர்ந்த பாடல்கள் என்கிற தலைப்புல ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதி இருக்கேன். இப்போ அதே மாதிரி எனக்குப் பிடிச்ச.. ஆனா அவ்வளவா பிரபலம் ஆகாத பாடல்களோட ரெண்டாவது தொகுப்பு. பாடல்களுக்கான சுட்டியும் கொடுத்து இருக்கேன்.. பார்த்துட்டு (அல்லது) கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நண்பர்களே..

நிஜமா நிஜமா (படம் - போஸ் இசை - யுவன் ஷங்கர் ராஜா)

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட படம். புலி - சூர்யா.. பூனை - ஸ்ரீகாந்த். "காக்க காக்க மாதிரி ஒரு படம் பண்றோம் சார்"னு இயக்குனரு ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லி இருப்பார் போல. ஸ்ரீயும் நம்பி ஏமாந்துட்டார். மகா மொக்கையான படத்துல இந்த ஒரு பாட்டு மட்டும் நல்லா இருக்கும். சிநேகா அழகா இருப்பாங்க. பாட்டோட ஒரு ஷாட்டுல "உயிரின் உயிரே" பாட்டுல சூர்யா ஓடி வர மாதிரி ஸ்ரீகாந்த் முழு நீள கோட்டு போட்டு ஓடி வருவார் பாருங்க.. அவ்வ்வ்வவ்வ்வ்வ்

ஒரு தேதி பார்த்தா (படம் - கோயமுத்தூர் மாப்ள இசை - வித்யாசாகர்)

அது ஒரு அழகிய நிலாக்காலம். விஜய் + சங்கவி ஜோடின்னாலே சும்மா அள்ளும். இந்தப் படத்துல கவுண்டமணியும் சேர்ந்து பட்டயக் கிளப்பி இருப்பார். அர்ஜுனோட எல்லாப் படத்துக்கும் இசை அமைச்சுக்கிட்டு, அப்பப்போ வேற யார் படமாவது கிடைக்காதான்னு வித்யாசாகர் ஏங்கிக்கிட்டு இருந்த டைம். அருமையான மெலடியா இந்தப் பாட்டக் கொடுத்திருப்பார். பார்க்கவும் நல்லா இருக்கும். (பாட்டோட லிங்க் ஏதாவது இருந்தா சொல்லுங்கப்பா..)

முகம் என்ன (படம் - சுபாஷ் இசை - வித்யாசாகர்)

அர்ஜுன் ரேவதியோடவும், அபு சலீம் புகழ் மோனிகா பேடி கூடவும் சேர்ந்து நடிச்ச படம். எல்லாப் பாட்டுமே நல்லா இருக்கும். இந்தப் பாட்ட பாலா ரொம்ப ரசிச்சு பாடி இருப்பார். படத்த பத்தின இன்னொரு முக்கியமான தகவல்.. இதுக வர "ஏய் சலோமா சலோ" பாட்டுதான் கடைசியா சிலுக்கு ஆடுன பாட்டு. தீக்குள்ள இருந்து வந்து தீக்குள்லையே போற மாதிரி எடுத்து இருப்பாங்க..:-(((

இருபது வயசு (படம் - அரசாட்சி இசை - ஹாரிஸ் ஜெயராஜ்)

"வல்லரசு" மகராஜன் இயக்கத்துல அர்ஜுன் நடிச்ச படம். மொதப்படம் தமிழ்ல நடிச்சா நாமளும் ஒரு ஐஸ்வர்யான்னு நம்பி லாரா தத்தா நடிச்சாங்க. ஆனா படம் பப்படம். ஹாரிசோட இசைன்னே பல பேருக்குத் தெரியாது. இந்தப் பாட்டு சக்கையான ஐட்டம் சாங். ஹரிணி செமையா பாடி இருப்பாங்க. பாட்டுக்கு ஆடுனது "தாஜ்மகால்" ரியா சென். பார்க்க சூப்பரா இருக்கும். அதுலையும் கீழ படுத்துக்கிட்டு இடுப்ப மட்டும் தூக்கி ஒரு ஸ்டெப் போடுவாங்க பாருங்க.. ஆகா ஆகா.. (வெறும் பாட்டு லிங்க் தான் கொடுத்து இருக்கேன்.. யாராவது வீடியோ லிங்க் கொடுங்கப்பா..)

பூவரசம் பூவே (படம் - கடவுள் இசை - இளையராஜா)

கடவுள் மறுப்ப மையமா வச்சு வேலு பிரபாகரன் இயக்கிய முதல் படம். மணிவண்ணன் கடவுளா வந்து கடைசியா செத்துப் போவார். இந்தப் பாட்டு என்ன ஸ்பெஷல்னா.. தமிழ்ப்படங்கள்ள வந்த மிகச் சிறந்த கில்மாப்பாடல்கள்ன்னு ஒரு லிஸ்ட் எடுத்தா கண்டிப்பா இந்தப் பாட்டுக்கும் அதுல இடம் உண்டு. கேக்குறதுக்கும் நல்லா இருக்கும்.. ஹி ஹி ஹி.. வீடியோவ பாருங்க.. கொடுத்து வச்ச தாடிக்காரன்... ஹ்ம்ம்ம்..

முதன்முதலாக (படம் - எதிரி இசை - யுவன் ஷங்கர் ராஜா)

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம். மாதவன் மாஸ் ஹீரோவாக முயற்சி பண்ணின படம். "பாட்டில் மணி"யா வந்து அவர் ரவுடிசம் பண்றதப் பார்த்தா காமெடியா இருக்கும். சதாவும், கனிகாவும் நாயகிகள். இந்தப் பாட்டு.. ஒரு மாதிரியாக தனது சோகத்தையும் காதலையும் நாயகன் சொல்ற மாதிரி இருக்குற பாட்டு. ஹரிஹரன் ரசிச்சு பாடி இருப்பாரு. பாட்டு படமாக்கின விதம் அக்மார்க் கே.எஸ்.ஆர் ஸ்டைல். நல்லா இருக்கும்.

சோனாலி சோனாலி (படம் - காமா இசை - ஆதித்யன்)

தமிழ் சினிமால ஒரு கில்மா படத்துக்கு சினிமா எக்ஸ்பிரஸ் ஒரு தனிப் புத்தகமே போட்டுச்சுன்னா அது இந்தப் படம்தான். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் தன்னோட மகன (?!) ஹீரோவைப் போட்டு எடுத்தா அஜால் குஜால் படம். படத்துல ஒண்ணுமே இல்லாம எல்லாத்தையும் சென்சார் படுபாவிங்க வெட்டி விட்டு பல ரசிக பக்த கேடிகளோட பாவத்த சம்பாதிச்சது தனிக்கதை. பாட்டப் பொறுத்த வரைக்கும்.. ஹரிஹரன் கும்முன்னு பாடி இருப்பாரு. (எப்படி தேடியும் லிங்க் கிடைக்கல.. யாராவது தெரிஞ்சா சொல்லுங்க..)

வெண்ணிலா சிறகடித்து (படம் - பொன்னியின் செல்வன் இசை - வித்யாசாகர்)

எனக்கு ரொம்பப் பிடிச்ச கோபிகாவும், சுத்தமா பிடிக்காத ரவிகிருஷ்ணாவும் நடிச்ச படம். தயாரிப்பாளருக்காக அவர் மகன ஹீரோவாப் போட்ட நல்ல படம் கூட நாறிடும்னு ராதாமோகனுக்கு நல்ல பாடம் சொன்ன படம். நாயகன், நாயகியோட சுத்தி இருக்குறவங்க எல்லாரும் ரொம்ப நல்லா நடிச்சு இருப்பாங்க. அமைதியான அழகு - அதுதான் கோபிகா.. அருமையான பாட்டு.

மக்கள்ஸ்.. இது எனக்குப் பிடிச்ச ஒரு சில பாட்டுதான்.. உங்களுக்கும் இந்த மாதிரி பிடிச்ச, ஆனா நிறைய பேருக்குத் தெரியாத பாட்டு இருந்தா பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்கப்பா...

32 comments:

அருண்மொழிவர்மன் said...

போஸ் திரைப்படத்தில் 'வைத்த குறி வைத்ததுவும் ' அருமையான பாடல்

கோயமுத்தூர் மாப்ளே பாடல் 'ஒரு தேதி பார்த்தா' என்றூ தொடங்கும்

அருண்மொழிவர்மன் said...

வைத்த குறி என்பது 'வைத்த கண் வைத்தது' என்றிருக்கவேண்டும்

"ராஜா" said...

//புலி - சூர்யா.

எடுத்ததா? எடுக்காததா?....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

ஜெய்சக்திராமன் said...

நல்ல தொகுப்பு தலைவரே... ஆனாலும் பட்டியல் நீள்கிறது...

கனாக் கண்டேன் - மூளை திருகும், சின்ன சின்ன சிகரங்கள் (இசை- வித்யாசாகர்)
கண்டநாள் முதல் - மேற்கே மேற்கே (இசை - யுவன்)
பொய் - லா ளா ழா இனியவளே (இசை - வித்யாசாகர்)
கற்றது தமிழ் - பறவையே (இசை - யுவன்)

கார்த்திகைப் பாண்டியன் said...

//அருண்மொழிவர்மன் said...
போஸ் திரைப்படத்தில் 'வைத்த குறி வைத்ததுவும் ' அருமையான பாடல்
கோயமுத்தூர் மாப்ளே பாடல் 'ஒரு தேதி பார்த்தா' என்றூ தொடங்கும்//

நன்றி நண்பா.. நோட் பண்ணிக்கிறேன்

//ராஜா" said...
புலி - சூர்யா. எடுத்ததா? எடுக்காததா?....//

அடப்பாவிகளா.. என்ன ஒரு கொலவெறி?

@உலவு.காம்

நன்றிங்க

//ஜெய்சக்திராமன் said...
நல்ல தொகுப்பு தலைவரே. ஆனாலும் பட்டியல் நீள்கிறது...//

அடுத்த தொகுப்புல பயன்படுத்திக்கிறேண்டா..:-))))

யாசவி said...

எனக்கு பொன்னியின் செல்வன் ஓக்கே

:)

Karthik said...

நல்ல பாட்டுக்கள்ங்ணா. புதுக்கோட்டையிலிருந்து சரவணன்னு ஒரு டப்பா படத்துல சில பாட்டுக்கள் நல்லா இருக்கும். 'மலர்களே மலர வேண்டாம். உறங்கிடுங்கள்'னு பாம்பே ஜெயஸ்ரீ குரல்ல ஒரு பாட்டு எனக்கு புடிச்சது.

ஜெய்சக்திராமன் said...

@Karthik
//நல்ல பாட்டுக்கள்ங்ணா. புதுக்கோட்டையிலிருந்து சரவணன்னு ஒரு டப்பா படத்துல சில பாட்டுக்கள் நல்லா இருக்கும். 'மலர்களே மலர வேண்டாம்.//

But songs from this film are hits.

Karthik said...

@jaisakthiraman

i don't know if the word 'hit' is a bit of an overstatement but yeah i agree that i misunderstood the title of the post. :(

கார்த்திகைப் பாண்டியன் said...

// யாசவி said...
எனக்கு பொன்னியின் செல்வன் ஓக்கே
:)//

:-)))))

// Karthik said...
நல்ல பாட்டுக்கள்ங்ணா. புதுக்கோட்டையிலிருந்து சரவணன்னு ஒரு டப்பா படத்துல சில பாட்டுக்கள் நல்லா இருக்கும். 'மலர்களே மலர வேண்டாம். உறங்கிடுங்கள்'னு பாம்பே ஜெயஸ்ரீ குரல்ல ஒரு பாட்டு எனக்கு புடிச்சது.//

எனக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டுதான்

குடந்தை அன்புமணி said...

//வெண்ணிலா சிறகடித்து (படம் - பொன்னியின் செல்வன் இசை - வித்யாசாகர்)//
நீங்கள் குறிப்பிட்ட பாடல்களில் இந்த பாட்டு மட்டுமே அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

ச.முத்துவேல் said...

இந்தப் பட்டியலில் நிறைய பாடல்கள் இடம்பெறும்தான். பிரபலமடைந்ததா இல்லையா என்கிற சந்தேகத்துடன் இங்கே ஒரு பாடலை மட்டும் சட்டென்று நினைவுகூர்ந்து சொல்லவிரும்புகிறேன். அது இருவர் படத்தில்’ பூக்கொடியின் புன்னகை...’

ச.முத்துவேல் said...

for comments follow up.

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
வெண்ணிலா சிறகடித்து (படம் - பொன்னியின் செல்வன் இசை - வித்யாசாகர்)நீங்கள் குறிப்பிட்ட பாடல்களில் இந்த பாட்டு மட்டுமே அடிக்கடி கேட்டிருக்கிறேன்.//

எல்லாரும் இந்தப் பாட்ட கேட்டிருக்குறதா சொல்றீங்க நண்பா:-))

//ச.முத்துவேல் said...
இந்தப் பட்டியலில் நிறைய பாடல்கள் இடம்பெறும்தான். பிரபலமடைந்ததா இல்லையா என்கிற சந்தேகத்துடன் இங்கே ஒரு பாடலை மட்டும் சட்டென்று நினைவுகூர்ந்து சொல்லவிரும்புகிறேன். அது இருவர் படத்தில்’ பூக்கொடியின் புன்னகை.//

உங்களுக்கு பிடிச்ச பாடல்களை ஒரு தொகுப்பா எழுதுங்க தலைவரே..

தேவன் மாயம் said...

கார்த்தி நல்ல தொகுப்பு!!!

நாடோடி இலக்கியன் said...

ந‌ல்ல‌ தொகுப்பு ந‌ண்பா.



இதே போன்று இபோதைக்கு நினைவில் வ‌ரும் பாட‌ல்க‌ள்,

இவ‌ள் யாரோ வான்விட்டு ம‌ண் வ‌ந்து கூடும் நில‌வோ‍‍ - ராஜாவின் பார்வையிலே

யாரைக் கேட்டு ஈரக் காற்று - நீ பாதி நான் பாதி

ஒரு நில‌வு வ‌ந்த‌து நில‌வு வ‌ந்த‌து ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌ - என்றும் அன்புட‌ன்.

கோய‌முத்தூர் மாப்ளே பாட‌ல் ஒரு தேதி பார்த்தா தென்ற‌ல் வீசும் என்று தொட‌ங்கும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேவன் மாயம் said...
கார்த்தி நல்ல தொகுப்பு!!!//

நன்றி டாக்டர் சார்..

//நாடோடி இலக்கியன் said...
ந‌ல்ல‌ தொகுப்பு ந‌ண்பா.//

நன்றி நண்பா.. சிங்கப்பூர் எப்படி இருக்கு? ஊருப்பக்கம் வந்தா சொல்லுங்கப்பா..

பனித்துளி சங்கர் said...

ஆஹா பாடல்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன.
மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

ஹேமா said...

முகம் என்ன... பாடல்தான்
இங்கே கிங் !பாலாவும் ஜானகியும் சேர்ந்திட்டால் கேட்கவும் வேணுமோ !

Anonymous said...

சக்தி (வினித் , யுவ ராணி ) நடித்த படத்தில் அச்சு வெள்ளமே ,அச்சு வெள்ளமே என்ற பாடல் எனக்கு பிடிக்கும் ,,,பொன்னியின் செல்வன் வெண்ணிலா பாடல் எனக்கு மிக வும் பிடாத பாடல்

கார்த்திகைப் பாண்டியன் said...

// !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...ஆஹா பாடல்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன. மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி//

நெஜமாவே கேட்டிருந்தீங்கன்னா சந்தோஷம் த்லைவரே..

// ஹேமா said...
முகம் என்ன... பாடல்தான் இங்கே கிங் !பாலாவும் ஜானகியும் சேர்ந்திட்டால் கேட்கவும் வேணுமோ//

அதேதான் தோழி..:-)))

//RajaK.S said...
சக்தி (வினித் , யுவ ராணி ) நடித்த படத்தில் அச்சு வெள்ளமே ,அச்சு வெள்ளமே என்ற பாடல் எனக்கு பிடிக்கும் ,,,பொன்னியின் செல்வன் வெண்ணிலா பாடல் எனக்கு மிக வும் பிடாத பாடல்//

நன்றிங்க..

தருமி said...

ரகசியமானது காதல் ...

படம்?

கார்த்திகைப் பாண்டியன் said...

@தருமி

ரகசியமானது காதல் - கோடம்பாக்கம் இசை - சிற்பி..

Anbu said...

\\\\\தருமி said...

ரகசியமானது காதல் ...

படம்?\\\\\\\\\\\


கோடம்பாக்கம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

@அன்பு

தம்பி சத்தத்தையே காணோமே? ஏரியாக்கு உள்ள தான் இருக்கீங்களா?

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றிபா,....

Maya said...

Kodeesawaran - Movie
Tholaiviniley - Song
Music - ARR

http://www.musicplug.in/songs.php?movieid=5460

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஆ.ஞானசேகரன் said...
நல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றிபா,..//

வாங்க தலைவரே..

//Maya said...
Kodeesawaran - Movie
Tholaiviniley - Song
Music - ARR//

நண்பா.. கோடீஸ்வரனுக்கு இசை ஆகொஷ்.. இந்தப் பாடலைக் கேட்டுப் பார்க்கிறேன்.. நன்றி..

Maya said...

Oh...Kodeeswaran 'akosh'a ? nandri.

Some more to add

1. Thamarai Poovukkum - Pasumpon

2. Oru nathi , Oru oadam - Samurai

3. Vizhigalin aruginil - Azhagiya Theeye

கார்த்திகைப் பாண்டியன் said...

@Maya

Thanks for the songs.. noted.:-)))

Riyas said...

எதிரி படத்தில் வரும்..

முதல் முதலாக.. பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.. ஹரிஹரன் மிக அருமையாக பாடியிருப்பார்..