April 14, 2011

வாத்தியார் வேலைன்னா அம்புட்டு இளப்பமா?

போன வாரம் வேறொரு துறையைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவனொருவன் என்னைப்பார்க்க வந்திருந்தான்.

"உங்ககிட்ட ஒரு விஷயம் பத்தி கைடன்ஸ் வேணும் சார்.."

"என்னடா.. சொல்லு.."

"நான் அடுத்ததா எம்.இ படிச்சுட்டு வாத்தியார் வேலைக்கு வந்திடலாம்னு இருக்கேன் சார்.."

எனக்கு ஆச்சரியம். காரணம் அவனுக்கு நல்லதொரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்து இருந்தது. அதை விடுத்து ஆசிரியர் வேலைக்கு வர ஆசைப்படுகிறான் என்றால்..

"ரொம்ப சந்தோஷம்டா. நல்ல விஷயம்தான். ஆனா ஏன்? டீச்சிங் உனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கா என்ன?"

"அதுதான் சார் உங்ககிட்ட கேக்க வந்தேன். இப்போ நான் டீச்சிங் வந்தா எவ்ளோ சம்பளம் கிடைக்கும்?"

"நல்ல காலேஜ்னா ஆரம்பத்துல 25 ,000 வரைக்கும் தருவாங்கடா.."

"போதும் சார். எந்த பிரச்சினையும் இல்லாம நிம்மதியா பாடம் நடத்துனோம்னு இருக்கலாம். சாப்ட்வேர் போனாலும் இதே சம்பளம் ஆனா டார்கெட் அது இதுன்னு டென்ஷன் ஆகணும்.. அத்தோட இதுல வேலையும் கம்மி. ஒரு நாளைக்கு ரெண்டு ஹவர் எடுத்தா போதாது?"

என்னுடைய உற்சாகம் சுத்தமாக வடிந்து போனது.

"இதுக்காகத்தான் சொன்னியாடா? உனக்குன்னு ஆசை எல்லாம் இல்லையா?"

"அடப்போங்க சார்.. அப்படி எல்லாம் ஒரு டாஷும் கிடையாது. நல்ல சம்பளம், அலட்டிக்காத வேலை, ஜாலியான லைப்னா போதும்னு தான் வர்றேன்.."

வந்த கோபத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு, கண்டிப்பாக ஆசிரியர் வேலை என்பது கடனுக்கு செய்வது கிடையாது, அதற்கென நிறைய பொறுப்புகள் உண்டு, வெறுமனே உடல் நோகாமல் வேலை செய்ய வேண்டுமென்பதற்காக பார்க்கும் வேலை இது கிடையாது என்றெல்லாம் அவனுக்கு நிறைய புத்தி சொல்லி அனுப்பி வைத்தேன். அதை அவன் எடுத்துக் கொண்டானா இல்லையா என்பது தெரியவில்லை.

கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக இந்தத் துறையில் வேலை பார்த்து வருகிறேன். இதுவரை என்னோடு வேலை பார்த்த நான் பழகிய நூறு நபர்களில் எத்தனை பேர் ஆசிரியர் வேலைக்கு விரும்பி வந்தவர்கள் எனக் கேட்டால்.. மிகுந்த துயரத்தோடு இதை நான் சொல்ல வேண்டி இருக்கிறது.. பத்து பேர் கூடத் தேற மாட்டார்கள். வேறு ஏதும் வேலை கிடைக்காத சூழலிலும் இந்த வேளையில் இருக்கும் சவுகரியங்கள் காரணமாகவும் ஆசிரியர் வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வேதனைக்கு உரியது.

அடுத்த தலைமுறையை உண்டாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு, அவர்கள் செய்வது ஒரு தவம், தங்களை உருக்கி மாணவர் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும் பணி ஆசிரியர் பணி எனப் பேசிய காலமெல்லாம் மலையேறிப் போய் அதையும் ஒரு தொழிலாகப் பார்க்கும் மனப்பான்மை இன்றைக்கு அதிகமாகி விட்டது.

நான் பொறியியல் படிக்கும்போதே ஆசிரியர் வேலைக்குத் தான் வரவேண்டும் எனத் தீர்மானம் செய்து கொண்டேன். ஆசிரியர் பணி மீது எனக்கிருந்த ஆச்சரியமும், நான் படித்த விஷயங்களை எளிதில் என் நண்பர்களுக்குக் கடத்த முடிந்த நம்பிக்கையும், எப்போதும் மாணவர்களுடனே இருப்பது நம்மை சந்தோஷமாக வைத்திருக்கும் எனும் ஆசையும் என்னை இந்தத் துறை நோக்கி செலுத்தின.

ஆரம்பத்தில் கொடைக்கானலில் வேலைக்குப் போனபோது ரொம்பவே விளையாட்டுப் பிள்ளையாக இருந்தேன். அங்கேதான் என் வாழ்வையும், ஆசிரியர் பணியின் பொறுப்பு பற்றிய என் பார்வையையும் மொத்தமாக திருப்பிப் போட்ட சம்மபவம் ஒன்று நிகழ்ந்தது. எனக்கு அப்போது 23 வயது. என்னை விட நான்கு அல்லது ஐந்து வயது மட்டுமே கம்மியான மாணவர்களுக்கு பாடம் நடத்தியதால் கிட்டத்தட்ட அவர்களில் ஒருவனாகவே இருந்து சந்தோஷமாகப் பொழுது போய்க் கொண்டிருந்தது.

ஒருநாள் என்னைப் பார்க்க மாணவி ஒருவரின் அப்பா வந்திருந்தார். அந்தப் பெண் சரியாகப் படிக்காமல் நிறைய தேர்வுகளில் தோற்றுப் போயிருந்ததால் அவர்கள் வீட்டில் வரச் சொல்லியிருந்தார்கள். அவளுடைய வகுப்பாசிரியர் நான்தான் என்பதால் அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். பேசிக் கொண்டே இருந்தவர் சட்டென கண்களில் கண்ணீர் மல்க எழுந்து என் கைகளைப் படித்துக் கொண்டார். "தம்பி.. அவதான் எங்க வீட்டோட கனவு. கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைக்கிறோம். நீங்கதான் எப்படியாவது புத்தி சொல்லி அவளை திருத்தணும் தம்பி. உங்க கூடப்பொறந்த பொறப்புன்னு நினைச்சுக்கோங்க.."

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்னைப் பார்த்துக் கொள்ளவே எனக்குத் தெரியாது என்பது என் அம்மாவின் குற்றச்சாட்டு. என்னைப் போய் இந்த மனிதர் இத்தனை நம்புகிறார் என்றால், அது என் பணியின் காரணமாக, அதன் முக்கியத்துவம் காரணமாக. நாம் செய்து கொண்டிருப்பது விளையாட்டுக் காரியமல்ல, பலரின் வாழ்வை தீர்மானிக்கும் பணி என்பதை நான் அன்றுதான் உளப்பூர்வமாக உணர்ந்தேன்.

அன்று முதல் இந்த வேலையை என்னால் இயன்ற அளவு நூறு சதம் முனைப்போடுதான் செய்து வருகிறேன். பாடம் என்பது வகுப்புக்குள் சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்களில் மட்டும் இல்லை, அதைத் தாண்டியும் இந்த வாழ்க்கை இருக்கிறது என்பதே நான் என் பிள்ளைகளுக்கு சொல்லிப் போகும் விஷயம். ஒரு உன்னதமான ஆசிரியர் பணியில் இருக்கிறோம் என்று ரொம்பப் பெருமையாகவும் உணருகிறேன். சமீபத்தில் டெல்லியில் இருந்த என்னுடைய முன்னாள் மாணவன் ஒருவன் போன் செய்து தனக்கு கிடைத்த பாராட்டை பகிர்ந்து கொண்ட போது சந்தோஷத்தில் என் கண்களில் துளிர்த்த கண்ணீர்தான் இந்த பணியில் கிடைக்கக்கூடிய உண்மையான வெகுமதி.

இத்தனை புனிதமான ஆசிரியர் பணி இன்றைக்கு வெறும் தொழிலாகப் பார்க்கப்படும் அவலநிலை வந்து விட்டதே என்பதே கவலை. பள்ளியும் கல்லூரியும் வெறும் பாடம் சொல்லிக் கொடுக்கும் இடங்கள் மட்டுமல்ல, ஒரு மாணவனை நல்ல மனிதனாக மாற்றும் இடங்களும் கூட. அதில் பெரும்பங்கு வகிக்கக் கூடியவர்கள் ஆசிரியர்களே. இதை உணர்ந்து உண்மையாகத் தங்களை இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடிய மனிதர்கள் ஆசிரியர்களாக வரவேண்டும் என்பதே எனது ஆசை.

38 comments:

Balakumar Vijayaraman said...

நல்ல இடுகை வாத்தியாரே ! வாழ்த்துகள்.

Speed Master said...

நான் விரும்பிய பணி கிடைக்கவில்லை

Speed Master said...

நான் இந்த அளவிற்காவது இருப்பதற்கு காரணம் என் ஆசிரியர்களே

அகல்விளக்கு said...

true... really true Anna...

selventhiran said...

Grt work!

Unknown said...

நல்ல பதிவு....நானும் தான் ஆசை பட்டேன்...
அது ஒரு தவம்..!அதை விரும்பி என்று கொள்பவர்கள் குறைவு...!
படித்ததும் வருத்தமாகப் போய்விட்டது..

Saminathan said...

மிக அருமை...அவசியமான பதிவும் கூட.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சில பேர் சொல்லும் மிக மலிவான கணக்குகளைக் கேட்கும் போதும், முதுகலை பட்டம் பெற்றபின் அதே கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் சொல்லும் வியாக்கினங்களையும் கேட்கும் போதும் குழந்தைகளை ஏன் இங்கே படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாகிறது...

மேவி... said...

unmai

Sudharsan said...

சார்!!!! சூப்பர்!!!!!! அதுவும் "தவம்" மிகவும் ரசித்தேன். உங்களுக்கு இந்த டீசிங் ப்ரோபிச்சியன் எவ்வளவு புடிக்கணும்னு எனக்கு தெரியும்..!!!! நல்ல பதிவு வாழ்த்துக்கள்....

இனிய தமிழ் வாழ்த்துக்கள்...!!!!

சத்யா said...

remba correct a solli irukeenga...

ithe anubavam enakkum irukku...ippa irukura maanavargal teaching profession a oru panam sambaathikkum thozhilaa thaan paakuraanga.....

yaarume manapoorvama panrathu illa...

naanum virumbi remba interestoda vandhaen...but students ku,yen en kooda paniyaatrum saga aasiriyargalukku indha maadhiri advice panniye azhuthuruchu.....

neraiya aasiriyargale aasiriyargalaaga nadanthukirathu illa... OP adikiraanga.......

students ku lectures mela ulla mahippu ithunaalaiye koranchuruchu...

iniyavathu indha ulagam thirinthumaanu paarpom...


thangal pathivu migavum arumai sagotharare..........indha pathivukku nanri sollum matroru aasiriyar........

"ராஜா" said...

Nanum oru aasiriyan endra muraiyil ungal pathivai mikavum rasiththen. Enakku 22vayasu irukkirappa oru paiyanin appa vayathu 50kku mel irukkum mariyathaiyai kumbitta pozhuthuthan intha paniyin perumai enakku purinthathu. Neengal solliyathai pola ithu oru thavam niraiya porumai vendum

Gurusamy said...

I wish you all the best in the teaching carrier. I can proudly say that teachers played a big role in my life !!!.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
எனக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் என்றால் நான் எட்டாவது படிக்கும்போது எனக்கு சொல்லிக்கொடுத்த ராஜலக்ஷ்மி டீச்சர் தான்.

Mahi_Granny said...

நல்ல ஆசிரியராக இருந்து அனுபவித்தவர்களுக்கே அதன் அருமையும் மகத்துவமும் புரியும். இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என் முக புத்தகங்களின் வழியாக எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் என் ஆசிரியப் பணிக்காக மட்டுமே கிடைத்தது

bandhu said...

உங்களை போல் ஒரு ஆசிரியரிடம் கற்க வேண்டும் என்ற ஆசையை கிளப்பி விட்டீர்கள். நான் வசிப்பது USA வில். இங்கு என் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளியில் சில ஆசிரியர்கள் பல துறைகளிலிருந்து கற்பிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் ஆசிரியராக வந்தவர்கள். அது போன்ற நிலை நம் ஊரிலும் வர வேண்டும். ஆசிரியர்கள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தின் சிற்பிகள் என்ற எண்ணம் அரசுக்கு வர வேண்டும்.

Unknown said...

//தங்களை உருக்கி மாணவர் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும் பணி ஆசிரியர் பணி எனப் பேசிய காலமெல்லாம் மலையேறிப் போய் அதையும் ஒரு தொழிலாகப் பார்க்கும் மனப்பான்மை இன்றைக்கு அதிகமாகி விட்டது.///

உங்களுடைய கவலையும், ஆதங்கமும் உண்மை தான்..

Deiva said...

Well done Sir! I totally agree with your views.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கா.பா... வாத்தியார் வேலையினா இளப்பம்னு யார் சொன்னா?
மாணவர்கள் படிக்கையில் ரோல் மாடல் யாருன்னா வாத்தியார் தான்...

Unknown said...

நல்ல இடுகை கா.பா..

வாத்தியார் ஆவணும்னுதான் ஆசை. ஆனா காலம் சுழட்டிப் போட்டுட்டது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல இடுகைங்க.. பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்ற பொழுது, சில ஆசிரியர்களிடம் ஒருவித விரக்தி இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.. சிலரோ நிறைவான மலர்ச்சியுடன் நடத்துவாங்க.. நீங்க சொல்லுற மாதிரி கற்பிப்பதை விரும்பிச் செய்தால் செய்பவருக்கும் நல்லது.. மாணவர்களுக்கும் நல்லது.. முழு நேர ஆசிரியராக விருப்பமில்லை என்றாலும், வேலையினால் கற்றதை அவ்வப்பொழுது ஜூனியர்களுடன் பகிர்வதும் அவர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு இருவருமாக விடை தேடி அறியும் பொழுதிலும் நிறைவாய் இருக்கிறது.. ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்பட்டால் இதிலே வர விரும்புவோருக்கு நல்லதொரு ஊக்கமாகவும் அமையும்..

Unknown said...

//நானும் தான் ஆசை பட்டேன்...
அது ஒரு தவம்..!அதை விரும்பி என்று கொள்பவர்கள் குறைவு...!///

// சில ஆசிரியர்களிடம் ஒருவித விரக்தி இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.. சிலரோ நிறைவான மலர்ச்சியுடன் நடத்துவாங்க.. நீங்க சொல்லுற மாதிரி கற்பிப்பதை விரும்பிச் செய்தால் செய்பவருக்கும் நல்லது.. மாணவர்களுக்கும் நல்லது.. //

சிறப்பான கருத்துக்கள். ஆசிரியப்பணி அறப்பணி என்று நினைக்காமல், அரைப்பணி என்று நினைப்பவர்களால் தான் மிக சிக்கலான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ஆசிரியர்களுக்கும் மரியாதை பாதிப்பு, மாணவர்களுக்கும் சிரமம்.

pudugaithendral said...

அதிகாமான விடுமுறை, நேரத்துக்கு வீட்டுக்கு வந்துவிடலாம் போன்ற காரணங்களுடன் பெண்களுக்கு வீட்டுவேலைக்கும் எளிதான வேலை நேரம் என்பதாலும் பலர் இந்த வேலையை தேர்ந்தெடுக்கின்றனர்.

இதைப்பத்தி பேரண்ட்ஸ் கிளப்ல பேசி இருக்கோம்.

http://parentsclub08.blogspot.com/2008/12/p.html

Anonymous said...

The general opinion that a teaching is not the first priority of young people, in particular, young men, is universal across all countries and cultures.

If you had not watched the film: ‘To Sir with Love’, better do so now. In the film, an engineer fresh from college is seeking a suitable engineering job. Unable to get one, he reluctantly joins a school as a teacher at East End, London, a locality notorious for crimes. It is populated by lower classes of society like blacks, Asian migrants, wife- beaters, alcoholics, prostitutes and drug addicts.

The engineer is a black man who is subjected to racial abuse by the white students of the school daily in and out of the class rooms. He continues to apply for all engineering jobs while working as a teacher because he never likes the profession of teaching as also the behavior of the students.

The climax of the story should not be revealed to you: you can yourself know by watching film. The film won Oscar award for the Black actor Sidney Poitier, who was the role model in acting by Shivaji Ganesan as SG told once.

The point is not about the film but about the fact that teaching profession is the last refuge for a person who could not get a 'better' job!

Y? I don’t think that the student who came to you and said many disparaging remarks about the profession gives a clear picture of the reasons, or you have understood him only casually. The reasons may go deeper than that.

Anonymous said...

என்னடா.. சொல்லு..""

The boy who came to you, is not a boy, but a man - an engineer

He should not be addressed vaadaa...poda.

I find this tendency only among teachers of TN, but not in my own college.

In school, I was accustomed to be called all sorts of names, including vaalee poolee, despite the fact that I was the brightest kid in the class. My schoolmates never had any respect to the teachers, except one who was fondly called 'Victor Sir. The reason is obvious: He treated everyone lovingly addressing them as individuals, not pick pockets or criminals

The teachers looked ruffians to me. A sort of aversion developed for their subject also.

In college, we found our teachers pukka gentlement who addressed us: vaanga poonga. However, one Tamil teacher tried to practice 'vaale..poolee'

He was hated to the core.

I threw away my Tamil in college and took to other main. Never again, I resolved, would I touch that subject. I scored a measly 50 percent wilfully.

Love of teacher leads to love of subject also.

Mr Kaarthigai Pandian, we, the students are not criminals. We are not worthless. We are worthy of respect.

(U need not publish it. It is personal to you)

Anonymous said...

A month ago, I went to the school from where my son passed out a few years ago for a minor certificate in his favor from them.

I received the certificate which surprised me. The certificate mentioned his name as Mr...

When asked, the receptionist told us it was their custom to treat their old boys whichever jobs they go to with respect as they have become men and responsible citizens.

Later on, after my son got through one of the toughest selection processes, I went to the school with him. He stood in front of the Principal. But she addressed him Mr...and asked him to kindly take his seat. Further talk involved how he managed the interview and all the pps and would he like to give a pep talk to the school leaving kids as inspiration ?

No need to drag the story. It is clear that the school teachers rose high in our esteem.

Anonymous said...

இத்தனை புனிதமான ஆசிரியர் பணி இன்றைக்கு வெறும் தொழிலாகப் பார்க்கப்படும் அவலநிலை வந்து விட்டதே என்பதே கவலை.

The Bible has a sentence thus: ‘It is an ill wind that blows no body any good.’

It is applied here.

When the whole society is awash with materialism with consumerist culture, your teaching profession can’t pretend to be living in an ivory tower. The external world will affect your world also.

If at all there are some teachers, they are there for some good personal reasons, as in your case you wanted to come to the profession to serve.

Money, more money, makes things attractive to people. If something is considered to be useless and thus, has no takers, make it lucrative, it suddenly becomes useful and attracts people.

Teachers in US are paid corporate salaries - in Ivy League. Further, they have a practice to send teachers to non-teaching positions for a few or more years, and there, the teachers offer their expertise and are talked about. After that, they return to the teaching profession.

For e.g former US ambassador to India is now teaching at Harvard. He was a teacher, but was asked by Clinton to go to India. Do you know who he is. He is the Prof of English literature, which I guessed, and proved right, when he wrote a poignant elegy on the death of Kalpana Chawla.

The famous Kenneth Galbraith, the author of 'Affluent Society', one of the foremost economists on world scale, also served as US ambassador.

Mrs Rice, formerly State Secretary to Clinton, is back to University as prof of political sceince.

In our country, the incumbent Chief Economic Adviser to Finance Minister, Kaushik Basu, who is making our Budget, is in the job, requisitioned by Government of India. He will go back to Presidency College, Kolkata, next year, after his tenure is over. Prime Minister is advised by economists who serve under him; but they are ecomonist teachers by profession and will go back to college after Manmohan Singh demits his office.

The inter-disciplinary approach makes teaching abroad a different story.

You should not be asked to teach for years in your Madurai college. The Government of TN should request your services to give your expert opinion on some engineering matter and, if need be, you should work for them for some years, thus, developing feeling of participation in the direct development of the State.

My own zoology college teacher is active in environmental issues of the town, and he took troubles to prove how fished died from the pollution caused to sea water by Sterile Industries in front of Vaiko. Vaiko talked about that in Supreme Court.

What about Swami Agnivesh ? He is currently Professor and HOD of Philosophy Department of St Stephen College, Delhi.

Some reforms are direly necessary in teaching profession and the teaching job should be gainfully diversified in order to make you feel important in the eyes of all.

The conviction that your profession is an island insulated from outside society should be extirpated root and branch.

Sooner the better.

கார்த்திகைப் பாண்டியன் said...

//Mr Kaarthigai Pandian, we, the students are not criminals. We are not worthless. We are worthy of respect.//

ஜோ அமலன், மாணவர்களை சிறுமைப்படுத்தும் வழக்காகத்தான் அவர்களை வாடா போடா என அழைக்க வேண்டியதில்லை.. அன்பின் பொருட்டு தங்களின் சகோதரர் என்னு உரிமையோடும் கூட அழைக்கலாம்.. என்னுடைய மாணவர்கள் என்னை சார் என்ரு அழைப்பதைக் காட்டிலும் அண்ணா என்றழைப்பதே அதிகம்.. போக மற்ற உங்கள் கருத்துகளில் இருக்கும் நியாயத்தை ஒத்துக் கொள்கிறேன்..:-))

அருள் said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

(இது TIMES கணிப்பு அல்ல)

அமுதா கிருஷ்ணா said...

வெளிநாடுகளில் மிகவும் அறிவு படைத்தவர்கள் தான் ஆசிரியாராய் பணி செய்வர்.இங்கே தான் வேறு வேலை எதுவும் கிடைக்காதவர்கள் ஆசிரியராகிறார்கள்.

ஹேமா said...

எனக்கு விருப்பமான ஒரு சேவை.ஆனால் கொடுத்து வைக்கவில்லை எனக்கு !

Unknown said...

/-- அதைத் தாண்டியும் இந்த வாழ்க்கை இருக்கிறது என்பதே நான் என் பிள்ளைகளுக்கு சொல்லிப் போகும் விஷயம். --/

என் பிள்ளைகளுக்கு... இந்த உணர்வுதான்யா எல்லா ஆசிரியர்களுக்கும் இருக்கணும். போதிமரத்திற்கு அடுத்து நான் ரசித்த உன்னுடைய வரிகள் இது காபா.

உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வேலை செய்யுறீங்க. ம்... நடத்துங்க.

:-)))

மைத்ரேயி said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.ஆசிரியர் தொழில் மிகவும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று.

Ramesh said...

"வாத்தியார் வேலைன்னா அம்புட்டு இளப்பமா?" கட்டுரை படித்தேன் . வருங்கால எதிர் காலத்தை பொறுப்புடன் உருவாக்கும் ஆசிரி பிரம்மன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ... இன்று நல்லதை விதைப்போம் நாளை நல்லதை அறுவடை செய்வோம்.... என்றும் அன்புடன் கு.ரமேஷ்

RAMASAMY said...

100 % true. I still remember my teachers. You(teachers) are really make real human beings. hats off.

RAMASAMY said...

Hats off to you

Ponniyinselvan/karthikeyan said...

true.exactly.i too was a teacher,[ as you said, not by ambition ] ,because i was the only daughter, my father chose this job, saying that it has lot of holidays,less ''responsibility'',good salary.so i became a teacher much against my ambition of becoming an I.A.S, .BUT AS HAVE WRITTEN, HOW MANY PARENTS CAME AND CRIED. SOON, I BECAME A MOTHER TO 100S OF STUDENTS.i used to call my sons as children, and my students as 'makankal'.
karthik amma

அமுதா கிருஷ்ணா said...

நல்ல பதிவு..

Unknown said...

//அடுத்த தலைமுறையை உண்டாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு, அவர்கள் செய்வது ஒரு தவம், தங்களை உருக்கி மாணவர் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும் பணி ஆசிரியர் பணி எனப் பேசிய காலமெல்லாம் மலையேறிப் போய் அதையும் ஒரு தொழிலாகப் பார்க்கும் மனப்பான்மை இன்றைக்கு அதிகமாகி விட்டது.//
Those who mock teachers...
visit this link:
http://zenpencils.com/comic/124-taylor-mali-what-teachers-make/