May 9, 2011

சாம்பல் மிருகங்கள்


சதுரம் வட்டம் முக்கோணம் செவ்வகம்
என விதவிதமான வடிவங்களில்
தபால்தலைகளை சேர்ப்பது
ரொம்பப் பிடித்தமானது அபிக்கு
கிடைப்பதற்கரிய தபால்தலைகளை
பத்திரமாக ஒட்டிவைக்கிறாள்
மெலிதான பிளாஸ்டிக் உறைகளுக்குள் போட்டு
எளிதாக கிடைக்கும் மற்ற தபால்தலைகளை
அவள் அழகாக வெட்டி ஒட்ட
மானும் புலியும் பூனையும் பட்டாம்பூச்சியும்
அபியைப் பார்த்து சிரிக்கின்றன
தன் வாழ்வின் மாபெரும் பொக்கிஷம்
அதுவென நம்பினாள் அபி
பிறிதொரு நாளின் எதிர்பாரா சமயம்
வீட்டில் சட்டென்று பற்றிக் கொண்ட தீயில்
சாம்பலாகிப் போன ஆல்பத்தை பார்த்து
அழுதுகொண்டிருந்த அபியை
என்ன சொல்லி தேற்றுவதெனத் தெரியாமல்
மீண்டும் புதிதாக வாங்கிக் கொள்ளலாம்
என சொன்னவனை நிமிர்ந்து பார்த்து
தபால்தலைகளை வாங்கலாம்
செத்துப் போன புலியும் மானும்
பூனையும் பட்டாம்பூச்சியும்
மறுபடியும் வருமா
கண்கள் கசக்கி கேட்பவளிடம்
பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து
திகைத்து நிற்கிறேன் நான்.

(முகுந்த் நாகராஜனுக்கு)

12 comments:

vasu balaji said...

நல்லாருக்கு கார்த்தி:)

ஆதவா said...

நீங்கள் எரித்தது ஒரு புத்தகம்!! அபிக்கு அது உலகம்!
தீப்பிடித்த உலகத்திலிருந்து எதுவும் மீளுவதில்லை!
கவிதை அருமைங்க.

Esha Tips said...

அருமை கலக்கீட்டீங்க கார்த்திக் பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Anonymous said...

மனதில் நிற்கிறாள் அபி..

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

"உழவன்" "Uzhavan" said...

சில பொருட்களை மனிதர்கள்போலவே பாவித்து பழகுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். நல்லாருக்கு நண்பா

ராகவன் said...

அன்பு கார்த்தி,

கொஞ்சம் எடிட் பண்ணீங்கன்னா நல்ல கவிதை இது...

அப்புறம்... ஸ்டாம்ப் ஆல்பம்(?) எரிஞ்சு போச்சுன்னு சொல்ற இடம் கொஞ்சம் மாற்றி எளிமையான காரணமாய் இருக்கலாம் என்று தோன்றியது...

இது எனக்குத் தோன்றிய விஷயம் அவ்வளவே...

அன்புடன்
ராகவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

பாலா சார்.. நன்றி

தமிழ்த்தோட்டம்.. நன்றிங்க

இந்திரா..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

குடந்தை அன்புமணி
ஆகா.. நல்ல விஷயம் தலைவரே.. அலைபேசில கூப்புடுறேன்

உழவன்
நன்றி தலைவரே

ராகவன்
மின்னஞ்சல் அனுப்புறேன்.. பார்ங்க தலைவரே..

மேவி... said...

அந்த புலி, மான், பூனை, பட்டாம்பூச்சி எல்லாம் காட்டுக்குள்ளே போயிருச்சு .... வேற புதுசா வரும்ன்னு சொல்லி சமாளிக்க வேண்டியது தானே ...அதை விட்டுட்டு தலையை குனிந்து நின்னா எப்புடி ...நீங்களெல்லாம் ஒரு இலக்கியவாதியா ?????

ஆமா காபா, பிள்ளை இலக்கியம்ன்னு ஒன்னு இருக்குல ????

கார்த்திகைப் பாண்டியன் said...

யோவ் மேவி.. பிள்ளை இலக்கியமா? ஏன்யா ஜாதிப் பிரச்சினைய தூண்டி விடுறீங்க..:-))

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 55/100 மார்க். நன்றி