January 19, 2009

படிக்காதவன் - விமர்சனம்!!!



முந்தி எல்லாம் நம்மாளுங்க தெலுங்கு படத்த கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்போம். நாலு பாட்டு, ரெண்டு சண்டை, ஒரு மழை டான்ஸ்... இதெல்லாம் இல்லாம அவங்களால படம் எடுக்க முடியாதுன்னு. ஆனா இனிமேல் அவங்க தான் நம்மள கிண்டல் பண்ணுவாங்க போல. வர வர நம்ம மக்கள் எடுக்கற படமெல்லாம் தெலுங்கு படத்தையே தோக்கடிச்சுரும் போல இருக்கு. அதுல லேட்டஸ்ட் தான்.. படிக்காதவன். கொஞ்சம் வின்னர், கொஞ்சம் பொல்லாதவன், ரன் கிளைமாக்ஸ் எல்லாத்தையும் ஒண்ணா கலந்து அடிச்சிருக்காங்க.


அப்பாவுக்கு பிடிக்காத பிள்ளையா தனுஷ். வீட்ல அவர் மட்டும் தான் சரியா படிக்கல. நல்லா படிக்கற ஒருத்திய கல்யாணம் பண்ணினா உன் வாழ்க்கைல பெரிசா வரலாம்னு நண்பர்கள் கொடுக்குற உலகமகா அட்வைஸ கேட்டு ரோட்டுல போறப்ப லிப்ட் கேக்குற தமன்னாவ லவ் பண்றாரு. அந்தம்மா ஒரு பெரிய ரவுடியோட(சுமன்) மக. சொந்த ஊருல இருந்தா அவள கொன்றுவாங்கன்னு சுமன் மெட்ராஸ் அனுப்பி வச்சா அது லவ் பண்ணிக்கிட்டு திரியுது. ஒரு பிரச்சினைல மறுபடியும் சொந்த ஊருக்கே போறாங்க தமன்னா. அங்க சுமனோட எதிரி ஷாயாஜி ஷிண்டே ஆளுங்க கொல்ல வரும்போது தனுஷ் புகுந்து காப்பத்திராரு. அதனால தனுஷ் கல்யாணம் பண்ண தமன்னாவுக்கு சுமன் சமாதம் சொல்றாரு. இதுக்கு இடையில திருநெல்வேலி தாதா அதுல் குல்கர்னி தனுஷ கொல்ல ட்ரை பண்றாரு. கடைசியில என்ன ஆகுதுங்கறது தான் படம்.


தனுஷுக்கு பழக்கமான ரோல். இன்னும் எத்தன படத்துக்குத்தான் அப்பன மதிக்காத பிள்ளையா நடிப்பாரோ. ஆனாலும்.. நல்லா ஆடுறார், ஒரே அடியில அத்தன பேரையும் அடிச்சு நொறுக்குகிறார். கொடுத்த வேலைய கரெக்டா செஞ்சிருக்கார். கிளைமாக்ஸ்ல அதுல் குல்கர்னி கூட சண்ட போடுறப்ப கொடுக்குறாரு பாருங்க ஒரு எபெக்ட்.. பழைய காதல் கொண்டேன் மாதிரி.. சூப்பர். தமன்னா, வேஸ்ட். அத பார்த்தா நம்ம ஊர் பொண்ணு மாதிரியே இல்ல. மைதா மாவ பெசஞ்சு வச்சா மாதிரி இருக்கு. நாலு பாட்டுக்கு ஆடிட்டு போகுது. அவ்ளோ தான். விவேக் இண்டெர்வல் அப்புறமா தான் வரார். ரொம்ப நாள் கழிச்சு சிரிக்க வச்சு இருக்கார். ஆனா இந்த ரோல் வடிவேலுக்காக எழுதுனதுங்கறது நல்லா தெரியுது.


தமிழ் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செஞ்சு ஒரு வில்லனோட நிப்பாட்டுங்க சாமிகளா. ஒருத்தரையே தாங்க முடியாது. இந்த படத்துல நாலு பேரு. அதுலயும் ஷாயாஜி ஷிண்டே.. முருகா.. அவரோட கெட்டப்பும் பேச்சும்.. கெரகம்.. அதுல் குல்கர்னி கடைசி ஒரு சண்டைக்கு. நல்லா எடுத்திருக்காங்க. காதல் தண்டபாணி முத சீன்லையே செத்து போறாரு. சுமன் கொஞ்சம் சௌன்ட் விட்டுட்டு பாதிலேயே ஆஃப் ஆகிடுராறு.


படத்துக்கு இசை மணிஷர்மா. அவரோட தெலுங்கு பாட்டெல்லாம் தட்டி எடுத்து மெட்டு போட்டிருக்காரு. பரவாயில்லைதான். கடைசியா சுராஜ். படத்தோட இயக்குனர். சாப்பாட்டுல மசாலா சேத்துக்கலாம். ஆனா மசாலாவையே சாப்பாடா கொடுத்தா.. முடியாது ராசா.அடுத்த படமாவது கொஞ்சம் பாக்குற மாதிரி எடுங்க.



படிக்காதவன் - பெயில்.

9 comments:

Anonymous said...

//தமன்னா, வேஸ்ட். அத பார்த்தா நம்ம ஊர் பொண்ணு மாதிரியே இல்ல. மைதா மாவ பெசஞ்சு வச்சா மாதிரி இருக்கு//

வன்மையாக எதிர்க்கிறேன். பாவம்யா அந்த பொண்ணு.

கார்த்திகைப் பாண்டியன் said...

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி..

நையாண்டி நைனா said...

நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்

//*{ஒரே அடியில அத்தன பேரையும் அடிச்சு நொறுக்குகிறார்.}*//

நம்மளையும் தான்.

கூட்ஸ் வண்டி said...

விமர்சனம் மிக நன்றாய் இருக்கிறது.

நாம் தெலுங்கு படத்தை கேலி செய்துகொண்டே அவர்கள் படத்தை மறு-தயாரிப்பு செய்கிறோம். ஆனால், அவர்களை விட படு கேவலமாக...

கார்த்திகைப் பாண்டியன் said...

நைனா.. கூட்ஸ் வண்டி... வருகைக்கு நன்றி தோழர்களே..

Unknown said...

படிக்காதவன் - பெயில்
sir villu??????????????

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் விஜய் படங்கள் பார்ப்பதில்லை.. ஆனால்.. வில்லு.. கேள்விப்பட்டவரை.. படம் பார்த்தவர்க்கெல்லாம் எகிறி போச்சு பல்லு

மேவி... said...

நான் இந்த படத்தையே பார்க்கல......
120 ரூபாய் , டிக்கெட் காசு மிச்சம்.......

கார்த்திகைப் பாண்டியன் said...

பார்த்திருந்தால்.. கதறி அழுதிருப்பீர்கள் நண்பரே..