March 7, 2009

1977 - திரை விமர்சனம்...!!!


இயக்குனர்: அண்ணே.. தமிழ்நாட்டுல இப்படி ஒரு படம் இதுக்கு முன்னாடி வந்ததே இல்லண்ணே.. உங்களுக்கு ரெண்டு வேஷம்.. பாதி படம் மலேஷியாவுலையே எடுக்குறோம்.. கிட்டத்தட்ட பாண்ட் படம் மாதிரி..

சரத்: அடடா.. சொல்லுங்க பார்ப்போம்..

இயக்குனர்: மொத சீனு.. குப்பத்து மக்கள் எல்லாம் உங்கள சாமின்னு கும்பிடுறாங்க.. அப்போ ஒரு வில்லன் வந்து அவங்கள கொடும பண்றான்.. ஒரு சின்ன பையன் வந்து மரத்துல கட்டி வச்சு இருக்க மணிய அடிச்சு ராசையான்னு கத்துறான்.. உங்கள காட்டுறோம்.. கடலுக்கு நடுவுல இருக்கீங்க.. எல்லாரும் நீங்க வந்து வில்லன அடி நொறுக்கப் போறீங்கன்னு நினைக்கிறாங்க.. ஆனா ட்விஸ்ட்.. நீங்க அவன பேசியே அழ வைக்கிறீங்க..

சரத்: சூப்பரப்பு.. அப்புறம்?

இயக்குனர்: அடுத்து மகன காட்டுறோம்.. அவரு விஞ்ஞானி.. அவர் ஊருக்குள்ள வர்றப்ப பாட்டு.. உங்க கட்சி கொடிய காடுறோம்.. ஆடுறவங்க எல்லாருக்கும் டிரஸ் கலர் உங்க கொடிதான்.. அப்படியே எம்ஜியார் மாதிரி பாட்டிய கட்டிப்பிடிச்சு எல்லாம் ஆடுறீங்க..

சரத்: பின்னீட்டிங்க.. இந்த படம் நாம கண்டிப்பா பண்றோம்..

இயக்குனர்: இன்னும் கதைய கேக்கவே இல்லையே அண்ணே..

சரத்: அது கிடக்கு கழுத..
***************

இந்தப் படம் இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நான் சமீபத்தில் பார்த்த மிக மோசமான தமிழ்ப்படம் இதுதான் (நான் வில்லு பார்க்கவில்லை). படம் முடிந்த பின் படம் எடுக்கப்பட்ட காட்சிகளை எல்லாம் காட்டுகிறார்கள். எங்க ஊருப்பக்கம் சொல்வார்கள்.."விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போல" என்று..படத்தையே பார்க்க முடியவில்லை.. இதில் இதை எங்கே பார்ப்பது.? ஒரு போட்டோவை பார்த்து அப்பா சரத் செத்துப்போகிறார். உண்மையை கண்டுபிடிக்க மகன் மலேஷியா செல்கிறார். அங்கே அவர் அப்பா கொலைக்குற்றம் சாட்டப்பட்ட தூக்குதண்டனை கைதி என்று தெரிய வருகிறது. உண்மை என்ன என்பதை சரத் கண்டுபிடிப்பதே படம்.

சரத் தான் நம்ம ஊரு சில்வர்ஸ்டேர் ஸ்டேலோன் என்று சொல்லலாம். உடலை கும்மென்று வைத்து இருக்கிறார். ஆனால் எல்லா காட்சிக்கும் ஒரே எக்ஸ்ப்ரெஷன் தான். நான்தான் உன்னோட அம்மான்னு ஜெயசுதா சொன்ன உடனே ஒரு பீல் கொடுக்குறாரு பாருங்கள்.. பாக்குறவன் எல்லாம் அழுகணும். (ஏண்டா இந்த படத்துக்கு வந்தோம்னு..) அப்பா சரத் அதுக்கு மேல. மேக்கப் போட்டவர தேடிப்பிடிச்சு கால்ல விழணும். சட்டையத் தொறந்து போட்டிக்கிட்டு ரெண்டு கதாநாயகியோடவும் சரத் ஆடுறப்போ.. முடியல.. நம்ம கழுத்துல நாமலே சுருக்கு மாட்டிக்கிட்ட உணர்வு.

கதாநாயகி பார்சானா. சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க. படம் பூரா அரையும் குறையுமாத்தான் அலையறாரு. அவர்க்கு கண்ணு சொருகுனா நமக்கு கண்ண கட்டுது. ஏன்னா அடுத்து பாட்டு போடப் போறங்கன்னு அர்த்தம். சரத்த ஒருதலையா காதலிக்குற வக்கீலா.. நமீதா. திரையில முக்காவாசி அவுங்கதான் தெரியுறாங்க. சரத்துக்கு கூட கொடுக்காத அளவுக்கு நமீதாவுக்கு அறிமுகம். கிட்டத்தட்ட மூணு நிமிஷம் தண்ணிக்குள்ள உருள விட்டு காமிக்கிறாங்க. (அவங்கள பாக்குறப்ப எல்லாம் அதிஷாவோட அகம் ட்ரம்மாஸ்மி பதிவு தான் ஞாபகத்துக்கு வந்து தொலையுது). ரொம்ப பழைய காமெடி - விவேக் வேஸ்ட். ஜெயசுதா, விஜயகுமார், ராதாரவி எல்லாம் வந்து போறாங்க. வில்லன கண்டா எரிச்சல்தான் வருது.

படத்தோட முதல் பாதியில கொஞ்சம் மலேஷியாவ அழகாக் காட்டுறாங்க. வித்யாசாகர் இசையில ரெண்டு பாட்டு நல்லா இருக்கு. ஆனா பின்னணி இசை.. அப்படியே பாண்டு படத்துல இருந்து காப்பி. அதோட ஒரு பாட்டுல பிரிட்னி ஸ்பியர்ஸ் மியூசிக் எல்லாம் வருது. படத்தோட மிகப் பெரிய நகைச்சுவை ஆக்க்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதம். தீபாவளி துப்பாக்கி மாதிரி வச்சுக்கிட்டு ஆளாளுக்கு டுமீல் டுமீல்னு சுடுறாங்க. ஆனா ஒரு குண்டாவது சரத் மேல படனுமே.. ? சூப்பர்மான் தோத்தான்.

குறிப்பா அப்பா சரத்.. பொண்டாட்டி புள்ள கூடவே போய் காபரே டான்ஸ் வேற ஆடறாரு. எதிரிகள பிடிக்கிற காட்சியில சண்டை போடுறப்ப கருப்பு சூட் போட்டு இருக்காரு. ஆனா அர்ரஸ்த் பண்ண உடனே அவரோட யுனிபாமுக்கு மாறுற கடமை உணர்வு புல்லரிக்க வைக்குது. கடைசியில குண்டடி பட்டும் குழந்தையோட படகுல தப்பிச்சு கடல் வழியாவே இந்தியாக்கு வந்துருராறு. இயக்குனரும் நம்மள மாதிரி உக்கார்ந்து யோசிச்சிருப்பார் போல தெரியுது. கிளைமாக்ஸ் இருபது நிமிடங்கள் அப்படியே டை அனதர் டே படத்தோட உல்டா. வந்ததும் சரியில்ல வாச்சதும் சரியில்லன்னு சொல்வாங்க. அரசியலும் ஒத்துவரலை.. படமும் ஓடலை.. சரத் என்ன பண்ணுவார் பாவம்.. இது சரத்தின் சொந்தப்படம் வேற. இயக்குனர் பெயர் தினேஷ்குமார். மனுஷன் சரத் தலைல நல்லா மொளகா அரச்சு இருக்கார். ஒரு வார்த்தைல சொன்னா..

1977 - சொந்தக் காசுல சூனியம் வச்சு இருக்காங்க...!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

63 comments:

அத்திரி said...

இந்தப் படத்தையும் விடலியா.......

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க நண்பா.. திரும்பி வந்தாச்சா.. வீட்டுல எல்லாரும் சௌக்கியம்னு நம்புறேன்..

அத்திரி said...

// (நான் வில்லு பார்க்கவில்லை). //

தேவையில்லாமல் எங்கள் தளபதியை சீண்டவேண்டாம் என்று எச்சரிக்கிறேன்

அத்திரி said...

எல்லோரும் நலம் நண்பா

தமிழ் மதுரம் said...

நீங்கள் எப்பவுமே குசும்பு.....

குமரை நிலாவன் said...

1977 - சொந்தக் காசுல சூனியம் வச்சு இருக்காங்க...!!!

ரெம்ப பேர் இப்படித்தான் இருக்காங்க


படம் பார்க்க ஒரு மாசம் ஆகும்
இப்பவே சொல்லிட்டிங்க
இனிமே எங்க படத்த பாக்குறது

தமிழ் மதுரம் said...

எத்தினை நாளைக்குத் தான் இப்படிப் படத்தை ஓட்டுவாங்களோ??

ஏதாச்சும் புதுசா யோசிக்க வேண்டியது தானே????

முரளிகண்ணன் said...

\\1977 - சொந்தக் காசுல சூனியம் வச்சு இருக்காங்க...!!! \\

அண்ணா நீங்களும் வச்சுக்கிட்டீங்களேன்னு வருத்தமா இருக்குன்னா.

Anbu said...

///கிட்டத்தட்ட மூணு நிமிஷம் தண்ணிக்குள்ள உருள விட்டு காமிக்கிறாங்க.///

ஆஹா!!இதுக்கே படத்துக்கு போலாம் போல் இருக்கே

Anbu said...

\\\(நான் வில்லு பார்க்கவில்லை). \\

கார்க்கி அண்ணா கிட்ட சொல்லி டிக்கெட் வாங்கி தரச்சொல்லட்டுமா அண்ணா

Anbu said...

விமர்சனம் கலக்கல் அண்ணா!!

Rajeswari said...

நான் இன்னும் படம் பாக்கல ..ஆனா நான் சமிபத்தில் பாத்து இதே மாதிரி நொந்த படம் S.M.S

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
தேவையில்லாமல் எங்கள் தளபதியை சீண்டவேண்டாம் என்று எச்சரிக்கிறேன்//

என்ன நண்பா பண்ண.. அது தானா வருது.. ஹி ஹி ஹி

கார்த்திகைப் பாண்டியன் said...

//கமல் said..
நீங்கள் எப்பவுமே குசும்பு.....
எத்தினை நாளைக்குத் தான் இப்படிப் படத்தை ஓட்டுவாங்களோ??//

வருகைக்கு நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
விமர்சனம் கலக்கல் அண்ணா!!
ஆஹா!!இதுக்கே படத்துக்கு போலாம் போல் இருக்கே//

நன்றி அன்பு.. என்ன கொஞ்சம் சேட்டை பண்ற மாதிரி மாதிரி தெரியுது? நமீதா ரசிகரா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிகண்ணன் said..
அண்ணா நீங்களும் வச்சுக்கிட்டீங்களேன்னு வருத்தமா இருக்குன்னா.//

என்ன பண்ண முரளி.. விதி வலியது.. நமக்காவது இருபத்து அஞ்சு ரூபாயோட போச்சு.. அங்க கோடிக்கணக்குல இல்ல போகுது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன் said..
ரெம்ப பேர் இப்படித்தான் இருக்காங்க
படம் பார்க்க ஒரு மாசம் ஆகும்
இப்பவே சொல்லிட்டிங்க
இனிமே எங்க படத்த பாக்குறது//

உங்கள காப்பாத்திட்டேன்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Rajeswari said..
நான் இன்னும் படம் பாக்கல ..ஆனா நான் சமிபத்தில் பாத்து இதே மாதிரி நொந்த படம் S.M.S//

why blood? same blood.. அய்யோ அய்யோ..

Anbu said...

\\\நன்றி அன்பு.. என்ன கொஞ்சம் சேட்டை பண்ற மாதிரி மாதிரி தெரியுது? நமீதா ரசிகரா?\\\

அப்படி இல்லை சும்மாதான்...தமாசு அண்ணா

http://urupudaathathu.blogspot.com/ said...

உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு...
அவ்வ்வ்வ்வ்வ்

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
அப்படி இல்லை சும்மாதான்...தமாசு அண்ணா//

இருக்கட்டும் அன்பு.. வயசு அப்படி.. என்ஜாய்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//உருப்புடாதது_அணிமா said..
உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு.அவ்வ்வ்வ்வ்வ்..//

நம்ம தலைஎழுத்து நண்பா.. யாரால மாத்த முடியும்?

ஆதவா said...

ஆதவா :நீங்க இந்த மாதிரி படம் பார்த்ததே தப்பு!!!! எப்படி உசுறோட இருக்கீங்க???

கா.பா : அட போய்யா... நாங்க குருவிக்கே அசராத ஆளுங்க.. இதென்ன... சுண்டைக்கா படம்...

ஆதவா said...

இயக்குனரும் நடிகரும் பேசி முடிக்கிற சீன்.....

அட... அதுக்காகவவ குத்தலாம் ஓட்டு!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க ஆதவா.. உங்கள் கவனத்துக்கு.. நான் விஜய் படம் பார்க்கவே மாட்டேன்.. அது நம்மால முடியாதுடா சாமி..

உண்மைத்தமிழன் said...

சரத்குமாரின் மீதுதான் தவறு..?

எத்தனை வருட அனுபவம் இருக்கிறது அவருக்கு..? கதையும், திரைக்கதையும் நேர்த்தியாக இல்லையெனில் தேறாது என்பது அவருக்குத் தெரிய வேண்டாமா..?

பணம் வீணானதுதான் மிச்சம்..!

Raju said...

\\உங்கள் கவனத்துக்கு.. நான் விஜய் படம் பார்க்கவே மாட்டேன்.. அது நம்மால முடியாதுடா சாமி..\\

நீங்களும் என்ன மாதிரி "அக்மார்க் அஜித் " ரசிகரா.....

ராம்.CM said...

என் திருமணத்திற்குபின் திரைப்படம் பார்க்க செல்வதே கிடையாது. திருமணத்திற்குபின் நன் பார்த்தமுதல் படம்..சிவாஜி!., இரண்டாவது படம்.. வில்லு!., மூன்றாவது 1977 போலாமென்றிருந்தேன்... நல்லவேளை..பதிவு போட்டீர்கள்...இந்த படமல்ல.. வாழ்க்கையில எந்த படத்தையையும் பார்க்கனுமுன்னு கனவில்கூட நினைக்க மாட்டேன். நீங்களே..எல்லாப்படத்தையும் பார்த்து விமர்சனம் போட்டுருங்க..

Anonymous said...

என்ன நண்பா இந்த படத்தையும் விட்டு வைக்கலையா?

ஹேமா said...

பாண்டியன்,நான் வில்லு பாக்கல.எனக்கு சரத் குமார் படங்கள் பிடிக்காது.பொதுவாவே படங்கள் பாத்து ரொம்ப நாள் ஆச்சு.

இப்போ வந்த படங்களில் பூ நல்லா இருந்திச்சுன்னு சொன்னாங்க.இன்னும் பாக்கல.

*இயற்கை ராஜி* said...

//1977 - சொந்தக் காசுல சூனியம் வச்சு இருக்காங்க//

neenga thane:-))

*இயற்கை ராஜி* said...

//தீபாவளி துப்பாக்கி மாதிரி வச்சுக்கிட்டு ஆளாளுக்கு டுமீல் டுமீல்னு சுடுறாங்க. ஆனா ஒரு குண்டாவது சரத் மேல படனுமே.. ? //

ella padathu heros um appadithanga:-))not only sarath...

RAMYA said...

யாரும் படம் பார்க்க மாட்டங்க
உங்க வர்ணனை அருமை நண்பரே
போயிட்டு வந்துட்டு செம விளக்கம்
சொல்லி இருக்கீங்க, இதுக்குமேலேயும்
சோ.செ.சூ. வச்சிப்பாங்களா என்னா ??

RAMYA said...

//
ராம்.CM கூறியது...
என் திருமணத்திற்குபின் திரைப்படம் பார்க்க செல்வதே கிடையாது. திருமணத்திற்குபின் நன் பார்த்தமுதல் படம்..சிவாஜி!., இரண்டாவது படம்.. வில்லு!., மூன்றாவது 1977 போலாமென்றிருந்தேன்... நல்லவேளை..பதிவு போட்டீர்கள்...இந்த படமல்ல.. வாழ்க்கையில எந்த படத்தையையும் பார்க்கனுமுன்னு கனவில்கூட நினைக்க மாட்டேன். நீங்களே..எல்லாப்படத்தையும் பார்த்து விமர்சனம் போட்டுருங்க..

//


REPEEEEEEEETTAI!!!

Anonymous said...

(நான் வில்லு பார்க்கவில்லை).
குசும்பு...

Anonymous said...

விமர்சனம் கலக்கல்... இனியுமா செ.செ.சூ வசைச்சுக்குவாங்க...
எப்டிங்க உங்களாளை இதெல்லாதையும் தாங்க முடியுது
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ச.பிரேம்குமார் said...

அப்போ நீங்களும் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டீங்க‌

Anonymous said...

சூப்பர் போங்க..
எங்களையெல்லாம் காப்பாதினதுக்கு நன்றி ராசா....
- பழூர் கார்த்தி

கார்த்திகைப் பாண்டியன் said...

//உண்மைத் தமிழன் said..
சரத்குமாரின் மீதுதான் தவறு..?
எத்தனை வருட அனுபவம் இருக்கிறது அவருக்கு..? கதையும், திரைக்கதையும் நேர்த்தியாக இல்லையெனில் தேறாது என்பது அவருக்குத் தெரிய வேண்டாமா..?
பணம் வீணானதுதான் மிச்சம்..!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்... said..
நீங்களும் என்ன மாதிரி "அக்மார்க் அஜித் " ரசிகரா.....//

தல ரசிகரா.. வருக வருக..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
நீங்களே..எல்லாப்படத்தையும் பார்த்து விமர்சனம் போட்டுருங்க..//

தங்கள் சித்தம் என் பாக்கியம் ராம்.. கவலையே படாதீங்க.. எல்லா படத்துக்கும் விமர்சனம் போட்டுறலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சுபாங்கி said..
என்ன நண்பா இந்த படத்தையும் விட்டு வைக்கலையா?//
இல்லங்க.. தலை எழுத்து.. இதையும் பார்த்துட்டேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஹேமா said..
இப்போ வந்த படங்களில் பூ நல்லா இருந்திச்சுன்னு சொன்னாங்க.இன்னும் பாக்கல.//

தமிழ் சினிமாவின் நல்ல படங்களில் பூவும் ஒன்று.. கண்டிப்பாக பாருங்கள் தோழி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//iyarkai said..
neenga thane:-))//

நானே தேடிக்கொண்ட தலைவலி.. என்ன செய்ய..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Ramya said..
யாரும் படம் பார்க்க மாட்டங்க
உங்க வர்ணனை அருமை நண்பரே
போயிட்டு வந்துட்டு செம விளக்கம்
சொல்லி இருக்கீங்க, இதுக்குமேலேயும்
சோ.செ.சூ. வச்சிப்பாங்களா என்னா ??//

ரொம்ப நன்றி தோழி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
எப்டிங்க உங்களாளை இதெல்லாதையும் தாங்க முடியுது
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
நாங்க எல்லாம் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் கவின்.. இன்னும் என்ன என்ன பாக்கி இருக்கோ.. தெரியல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
அப்போ நீங்களும் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டீங்க‌//

ஆமாம் நண்பா.. நானும்தான் மாட்டிக்கிட்டேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பெயரில்லா கூறியது...
சூப்பர் போங்க..
எங்களையெல்லாம் காப்பாதினதுக்கு நன்றி ராசா....
- பழூர் கார்த்தி//

வருகைக்கு ரொம்ப நன்றி கார்த்தி

கார்த்திகைப் பாண்டியன் said...

//newspaanai//
எனது பதிவை இணைத்ததற்கு நன்றி..

மேவி... said...

romba pavam sir neenga.....

insurance claim pannitingala padam partha piragu???

மேவி... said...

["அத்திரி கூறியது...
இந்தப் படத்தையும் விடலியா......."



"பிரேம்குமார் கூறியது...
அப்போ நீங்களும் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டீங்க‌"


"உருப்புடாதது_அணிமா கூறியது...
உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு..."]


periye repeat for all
அவ்வ்வ்வ்வ்வ்

psychoteller said...

அருமை உங்களது விமர்சனம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
romba pavam sir neenga.....
insurance claim pannitingala padam partha piragu???//

விடுங்க நண்பா..ஏதோ நம்மளால முடிஞ்ச கலைசேவை.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//psychoteller said..
அருமை உங்களது விமர்சனம்..//
ரொம்ப நன்றி நண்பரே..

Anonymous said...

சார், இருந்தாலும் இவங்க இந்த படத்தை இவ்வளவு சீக்கரம் பாத்த உங்கள பாராட்டியே ஆகவேண்டும்!! அநேகமா சரத்குமார் உங்க வீட்டுக்கு வந்து நன்றி சொன்னாலும் சொல்லுவார்

கார்த்திகைப் பாண்டியன் said...

யாரப்பா அது.. அவ்வளவு குசும்பு..? வருகைக்கு நன்றி..

வினோத்குமார் said...

migavum arputham

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வினோத்

Anonymous said...

கண்டிபாக வாரம் ஒரு திரைப்பட விமர்சனம் போல இருக்கே தோழரே . இடுகை இடுவதர்க்காக பார்கரீங்கள இல்ல பார்பத போடரீங்கள தோழரே!!

கார்த்திகைப் பாண்டியன் said...

நமக்கு இங்கே விடுதியில் வேறு பொழுதுபோக்குகள் கிடையாது நண்பா.. எழுதாத காலத்தில் இருந்தே வாரம் குறைந்தது இரண்டு படங்களாவது பார்த்து விடுவேன்.. இப்போது அது இடுகை இடவும் உதவுகிறது..

Anonymous said...

விமரசனதுக்காகவே
வாரம் ஒரு படம் போல

Dhavappudhalvan said...

நான் படங்களை( அதுவும் தமிழ் படங்களை பாத்தே நாளாச்சி )இனிமே படம் பார்க்க தேவையில்லை.

Dhavappudhalvan said...

விமர்சனத்துக்கே இவ்வளவு விமர்ச்சனமா?