March 29, 2009

ரெஷசன் - பிளேஸ்மென்ட் - ஐ.டி - என்னதான் நடக்குது?.... (பாகம் - 2)!!!

(பாகம் - 1 படிக்க இங்கே க்ளிக்கவும்.... )
பொறியியல் கல்லூரிகளில் பிளேஸ்மென்ட் எப்படி நடக்கிறது? ஒரு கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், ECE, EEE, EIE, CSE, IT என்று பல துறைகள் இருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் எங்கே வேலையில் உள்ளார்கள் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.. அது IT துறையாகத்தான் இருக்கும். எங்கள் கல்லூரிக்கு செமினார் கொடுக்க வந்த மனிதர் ஒருவர் நொந்து போய் சொன்னார்.. "எல்லாருக்குமே IT வேலை என்றால் காலேஜில் இத்தனை துறைகள் எதற்கு..?"

வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களின் மிகப் பெரிய பிரச்சினை.. ஆள் பற்றாக்குறை. எனவே அவர்கள் தங்களுடைய வேலைகளை இந்தியா போன்ற மனிதவளம் பொருந்திய நாடுகளில் ஒப்படைக்கிறார்கள். அத்தோடு இன்னொரு முக்கியமான காரணம், அமெரிக்காவில் ஒருவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் இங்கே ஐந்து இந்தியர்களிடம் வேலை வாங்கலாம். இந்த சூழல் 2003 - 2004 வாக்கில் தொடங்கியது.


இப்போது இந்தியக் கம்பனிகளுக்கு வெளிநாட்டில் இருந்து ப்ராஜெக்ட் கிடைக்க வேண்டும் என்றால் நிறைய ஊழியர்களை கணக்கு காட்ட வேண்டும். அத்தனை பேருக்கு எங்கே போவது? அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் பொறியியல் கல்லூரிகள். எல்லா பெரிய கல்லூரியும் ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பனியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) போட்டுக் கொள்ளும். வருடா வருடம் இத்தனை மாணவர்களை கம்பனிகள் பிளேஸ்மென்ட் என்ற பெயரில் எடுத்துக் கொள்வார்கள். அதற்கு பலனாக கல்லூரி கம்பனிக்கு ஏதாவது செய்ய வேண்டும். இப்போது எங்கள் கல்லூரியில் நூறு சதவிகிதம் பிளேஸ்மென்ட் என்று விளம்பரம் செய்யும் பொறியியல் கல்லூரிகள், அட்மிஷன் நேரங்களில் வேண்டுமளவு டொனேஷனை மாணவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்வார்கள். எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொள்வதுதான்.


இப்போ ரெஷசன் காரணமா இந்த பிளேஸ்மென்ட் சக்கையா அடி வாங்கி இருக்கு. குறிப்பாக இதனால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் 2008ஆம் வருடம் தங்கள் படிப்பை முடித்த மாணவர்கள்.போன வருடம் எனது துறையில் மொத்தம் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை நாற்பத்து ஐந்து. அதில் முப்பது ஒன்பது பேர் கல்லூரியில் படிக்கும்போது ஜூன் 2007யிலேயே வேலைவாய்ப்பு பெற்றவர்கள். எல்லாமே முன்னணி சாப்ட்வேர் கம்பனிகள். (பிரச்சினை என்பதால் பெயர்களை சொல்லவில்லை). ஆனால் மூன்றே பேரைத் தவிர மற்றவர்கள் வேலைக்கு சேர அழைக்கப் படவில்லை. இந்த வருஷம் பாதி பேருக்கு மேல இன்னும் வேலை கிடைக்காமத்தான் இருக்காங்க..


சமீபத்தில் எங்கள் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு வரும்படி அழைத்தபோது நெறைய பேர் முடியாது என்று மறுத்து விட்டனர். வேலையில் சேராமல் எப்படி வருவது என்று சங்கடம். அப்புறம் எல்லாரையும் சமாதானம் செய்து வர வைத்தோம். வந்தவர்கள் எல்லாம் தங்கள் சோகத்தை சொன்னபோது என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரே ஒரு மாணவரை பற்றி மட்டும் சொல்கிறேன்..அவருடைய வார்த்தைகள் இவை... "நான் கிராமத்தை சேர்ந்தவன். அப்பா கடன் வாங்கி படிக்க வைச்சார். ஒண்ணுக்கு ரெண்டு வேலை (dual placement) கிடைச்சதுன்னு சந்தோஷமா இருந்தேன். ஆனா இன்னைக்கு வரைக்கும் எந்த கம்பனியும் கூப்பிடலை. இந்த ரெஷசன் பத்தி சொன்னா புரிஞ்சுக்குற மக்கள் எங்க ஊர்ல கிடையாது.. ரொம்ப அசிங்கமா இருக்கு.. என்ன பண்றதுன்னே தெரியல.."


பார்த்துக் கொண்டிருந்த வேலையை இழக்கும் மக்கள் ஒருபுறம்.. வேலை கிடைத்தும் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்கள் இன்னொரு புறம்.. நாம் ஒரு இக்கட்டான சூழலில் நின்று கொண்டு இருக்கிறோம். அங்கங்கே சில தற்கொலைகள் கூட நடைபெற்றுள்ளன. (மாதவராஜ் அவர்கள் இது பற்றி விரிவான ஒரு பதிவினை எழுதி உள்ளார்..)


பொறியியல் மாணவர்களைப் பொறுத்தவரை என்னுடைய ஆசை எல்லாம் ஒன்றுதான்.. அவரவர் துறை சார்ந்து முன்னேற வேண்டும். IT ஒன்றை மட்டுமே நம்பக் கூடாது. IT மக்களுக்கு.... பத்து வருடங்களுக்கு ஒரு முறை இதுபோல் IT துறையில் பிரச்சினைகள் வருவதும் பின்பு அது சரியாவதும் உண்டு என்று சொல்கிறார்கள். நம்புவோம்.. பிரச்சினைகள் சரியாகும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

67 comments:

வினோத் கெளதம் said...

நண்பா நல்லா Analyze பண்ணி எழுதி இருக்கீங்க.
எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு நம்புவோம்..
நீங்கள் IT துறை ஆசிரியரா..

முரளிகண்ணன் said...

\\பொறியியல் மாணவர்களைப் பொறுத்தவரை என்னுடைய ஆசை எல்லாம் ஒன்றுதான்.. அவரவர் துறை சார்ந்து முன்னேற வேண்டும்\\

அருமையான வரிகள்

காரணம் ஆயிரம்™ said...

அட மதுரை விரிவுரையாளரா நீங்க... ? எந்த கல்லூரி?

நானும் மதுரைப்பக்கம்தான்... சென்னையில் விரி.யாளனாக பணிபுரிந்த அனுபவம் உண்டு...

நான் இருந்த காலங்களில், IT யில் பணி உத்தரவு பெற்ற மாணவர்கள், 'ஸ்டார்' மாதிரி நடந்துகொள்வார்கள்...

ஆசிரியர்களையும், பிற மாணவர்களையும் (நண்பர்களைகூட)மதிப்பது கிடையாது...

இப்பொழுது வேலை கிடைப்பது அரிது என்பதால் தற்கொலை முதலான தவறான முடிவிற்கு மாணவர்கள் போகிறார்கள்... இரண்டுமே தவறுதான்..

சுயவேலைவாய்ப்பு முயற்சிகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு தெரியப்படுத்தினால், IT மோகம் குறைவதோடு, பிற துறைகளுக்கும் திறமையானவர்கள் கிடைப்பார்கள் என்பது என் கருத்து..

மிக நல்ல பதிவு...

அன்புடன்
காரணம் ஆயிரம்

குடந்தை அன்புமணி said...

நன்றாக சொன்னீர்கள் நண்பா! ஒவ்வொருவரும் படித்த படிப்பைத் தவிரவும் இதர தகுதிகளையும் வளர்ததுக்கொள்வது எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. பதிவுக்கு வாழ்த்துகள்!

வினோத் கெளதம் said...

//IT யில் பணி உத்தரவு பெற்ற மாணவர்கள், 'ஸ்டார்' மாதிரி நடந்துகொள்வார்கள்...

ஆசிரியர்களையும், பிற மாணவர்களையும் (நண்பர்களைகூட)மதிப்பது கிடையாது...

இப்பொழுது வேலை கிடைப்பது அரிது என்பதால் தற்கொலை முதலான தவறான முடிவிற்கு மாணவர்கள் போகிறார்கள்... இரண்டுமே தவறுதான்..

சுயவேலைவாய்ப்பு முயற்சிகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு தெரியப்படுத்தினால், IT மோகம் குறைவதோடு, பிற துறைகளுக்கும் திறமையானவர்கள் கிடைப்பார்கள் என்பது என் கருத்து.. //

உண்மை..

மங்களூர் சிவா said...

\\பொறியியல் மாணவர்களைப் பொறுத்தவரை என்னுடைய ஆசை எல்லாம் ஒன்றுதான்.. அவரவர் துறை சார்ந்து முன்னேற வேண்டும்\\

சூப்பர்.

சுயமாகவும் தொழில்புரியும் அளவு திறனை மற்றும் அறிவை வளர்த்துக்கொள்வது மிக அவசியம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
நண்பா நல்லா Analyze பண்ணி எழுதி இருக்கீங்க.எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு நம்புவோம்..
நீங்கள் IT துறை ஆசிரியரா..//

நன்றி நண்பா.. நான் இருப்பது EIE dept

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிகண்ணன் said...
அருமையான வரிகள்//

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி முரளி

கார்த்திகைப் பாண்டியன் said...

//காரணம் ஆயிரம் said..//

ரொம்ப நன்றிங்க.. நான் இப்போ வேலை பாக்குறது மதுரை இல்லைங்க... ஆனா இன்னும் ரெண்டு மாசத்துல ஊருப்பக்கம் போய்டுவேன்.. நெறைய சொல்லி இருக்கீங்க.. உங்கள் அனுபவம் சரிதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தைஅன்புமணி said..
நன்றாக சொன்னீர்கள் நண்பா! ஒவ்வொருவரும் படித்த படிப்பைத் தவிரவும் இதர தகுதிகளையும் வளர்ததுக்கொள்வது எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. பதிவுக்கு வாழ்த்துகள்!//

வாங்க நண்பா.. ரொம்ப நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மங்களூர் சிவா said..
சுயமாகவும் தொழில்புரியும் அளவு திறனை மற்றும் அறிவை வளர்த்துக்கொள்வது மிக அவசியம்.//

நன்றி நண்பா.. கண்டிப்பாக என் ஆசையும் அதுதான்.. இந்தப் பதிவை எழுதக் காரணமே அந்த ஆசைதான்...

ச.பிரேம்குமார் said...

//ஆசிரியர்களையும், பிற மாணவர்களையும் (நண்பர்களைகூட)மதிப்பது கிடையாது...
//

இதெல்லாம் ரொம்ப அதிகம் :)
சும்மா கதை கட்ட கூடாது

மேவி... said...

correct ya sonninga.....

yennai madiri economics padichavanga correct solluvanga....

nalla padivu

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
இதெல்லாம் ரொம்ப அதிகம் :)
சும்மா கதை கட்ட கூடாது//

ஆகா பிரேம்.. கோவம் வேண்டாம்... எங்கோ யாரேனும் அதுபோல் நடந்து கொண்டிருக்கலாம்.. எல்லாரையும் ஒட்டுமொத்தமாக குறை சொல்ல வேண்டாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
correct ya sonninga.....
yennai madiri economics padichavanga correct solluvanga..//

வாங்க நண்பா.. நீங்க எக்கனாமிக்ஸா.. பெரிய பொருளாதார மேதை ஒருத்தர் உருவாகிக்கிட்டு இருக்கார்னு சொல்லுங்க...

ஆ.ஞானசேகரன் said...

//"நான் கிராமத்தை சேர்ந்தவன். அப்பா கடன் வாங்கி படிக்க வைச்சார். ஒண்ணுக்கு ரெண்டு வேலை (dual placement) கிடைச்சதுன்னு சந்தோஷமா இருந்தேன். ஆனா இன்னைக்கு வரைக்கும் எந்த கம்பனியும் கூப்பிடலை. இந்த ரெஷசன் பத்தி சொன்னா புரிஞ்சுக்குற மக்கள் எங்க ஊர்ல கிடையாது.. ரொம்ப அசிங்கமா இருக்கு.. என்ன பண்றதுன்னே தெரியல.." //

கலங்க வச்சுபுட்டீங்களே நண்பரே....

ச.பிரேம்குமார் said...

// IT மோகம் குறைவதோடு, பிற துறைகளுக்கும் திறமையானவர்கள் கிடைப்பார்கள் என்பது என் கருத்து..//

இந்த பொறுப்பு கல்லூரிகளுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கிறது.

வாத்து கூட்டமாக இருப்பதை விட்டு மாற வேண்டும்

INDRAKIRUBASHANKAR said...
This comment has been removed by the author.
கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said..
கலங்க வச்சுபுட்டீங்களே நண்பரே..//

நன்றி நண்பா.. இன்று பல மாணவர்களின் நிலை இதுபோல கேள்விக்குறியாகத்தான் உள்ளது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
இந்த பொறுப்பு கல்லூரிகளுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கிறது.
வாத்து கூட்டமாக இருப்பதை விட்டு மாற வேண்டும்//

கண்டிப்பாக பிரேம்.. நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை.. கல்லூரிகள் தான் இந்த நிலையை மாற்ற வேண்டும்..

சம்பத் said...

///
ரொம்ப நன்றிங்க.. நான் இப்போ வேலை பாக்குறது மதுரை இல்லைங்க... ஆனா இன்னும் ரெண்டு மாசத்துல ஊருப்பக்கம் போய்டுவேன்.. ///

இன்னா தல...வூட்டுல பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டங்களா? :-)

RAMYA said...

//
"நான் கிராமத்தை சேர்ந்தவன். அப்பா கடன் வாங்கி படிக்க வைச்சார். ஒண்ணுக்கு ரெண்டு வேலை (dual placement) கிடைச்சதுன்னு சந்தோஷமா இருந்தேன். ஆனா இன்னைக்கு வரைக்கும் எந்த கம்பனியும் கூப்பிடலை. இந்த ரெஷசன் பத்தி சொன்னா புரிஞ்சுக்குற மக்கள் எங்க ஊர்ல கிடையாது.. ரொம்ப அசிங்கமா இருக்கு.. என்ன பண்றதுன்னே தெரியல.."
//

மனது வலிக்கின்றது, படித்து முடித்து தந்தையின் சுமையை தாங்க வேண்டிய
இந்த மகனின் எண்ணங்களும், மன வேதனைகளும் மனதை அப்படியே சுடுகின்றது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் யாருமே கணினி துறைக்கு வராதீர்கள் என்று தான் நான் கூறுவேன்.

ஏனெனில் நானும் அந்தத் துறையில் ஒரு உயர் அதிகாரியாகத்தான் பணி புரிகின்றேன்.

நிர்வாகம் தினம் தினம் ஒரு முடிவை எடுக்கும். அதற்கு உடன் படவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிகாரிகள்.

ஏனெனில் எல்லா பக்கமும் கதவுகள் (projects ) மூடப்பட்டு விட்டன. நிர்வாகம் என்ன செய்யும்? யாரை வேலைக்கு எடுக்கும்?

நான் மனதாரக் கூறிக் கொள்கின்றேன், இது போல் படித்து டித்திருப்பவர்கள், Software தான் போவோம் என்று இல்லாமல், வேறு துறைக்கு (Teaching) செல்ல மனதை மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இதை படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கும். கனவு நனவாகவில்லையே என்ற வேதனையும் இருக்கும்.

ஆனால் இன்றும் இந்த கணினித் துறை மிகவும் நலிந்த நிலையில் இருக்கிறது. என்று சரியாகும் என்று தெரியவில்லை.

இரெண்டு, மூன்று மாதம் என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

மிகவும் பிரபலமான கம்பென்யில் எனது நண்பர்கள் பலர் பெஞ்சில் தான் இருக்கிறார்கள்.

மனம் தளராமல், வெறுத்துப் போகாமல் வேறு ஏதாவது யோசித்து செயல்படுங்கள், இது என் தோழமையான அறிவுரை.

கணினித் துறை அல்லாத மாணவர்கள் அவரவர்கள் படிக்கும் Subject வேலை தேடுவது மிகவும் அவசியமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

குறிப்பாக MECH., EC, EEE. இந்த subject படித்தவர்கள் கண்டிப்பா சாப்ட்வேர் பக்கம் வராதீர்கள். இன்று இருக்கும் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது.

வேத்தியன் said...

நல்ல அலசல் நண்பா...
நானும் IT தான் படிக்கலாம்ன்னு முடிவுல இருக்கேன்...
பாக்கலாம்..
நிலைமை சரியாகும்...

வேத்தியன் said...

ஓட்டு போட்டாச்சுங்க...

புல்லட் said...

சிறந்த பதிவுங்க... நல்லா நச்சுன்னு சொன்னீங்க... ஓட்ட குத்துவம்னு பாத்தா ஏதோ பிரச்சனை படுத்துது! நான் நண்பர்களை வாசிக்க சொல்லுறேன்.. :) வாழ்த்துக்கள்... :)

ஆதவா said...

நேற்று என் நண்பர் ஒருவரிடம் பேசினேன். அவரிடம் ஐடி குறித்து விசாரித்த பொழுது அவர் இண்டெர்னெட் ரூட்டிங்கில் இருப்பதால் நாங்கள் இருந்தால்தான் மற்ற கம்பனிகளே என்று தெளிவாகச் சொன்னார். ஐடி கம்பனிகளில் நாமும் போய் சேர்ந்திருக்கமுடியாமல் போச்சே என்று வருத்தப்பட்ட காலம் போய், சேர்ந்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று வருத்தப்படவேண்டிய காலம் ஆகிவிட்டது.

நல்ல அலசல் பதிவு கார்த்திகைப்பாண்டியன்

malar said...

I.T துறை மட்டும் இல்லை தற்பொழுது எல்லா துறைகளுக்கும் (வேலையில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களும் ) டப்பா டான்ஸ் ஆடுகிறது .

அகநாழிகை said...

கார்த்தி, நல்லா எழுதியிருக்கீங்க. எல்லாரும் ஒரே துறையை தேர்ந்தெடுத்தா என்னவாகும்... என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.
நல்ல பதிவு.
‘தலைவன் இருக்கின்றான்‘ படத்துல கமலோட உங்க ‘தல‘ இணைகிறார். வாழ்த்துக்கள். (‘தல‘ படம் வேற போடுங்க தல.)

- பொன்.வாசுதேவன்

*இயற்கை ராஜி* said...

nalla analysis..
aanal maanavarkal manam maara maatenkirathe...
ivlo nadanthum innum IT grace ah vida maatenguraanga:-(

*இயற்கை ராஜி* said...

.//.. ஆனா இன்னும் ரெண்டு மாசத்துல ஊருப்பக்கம் போய்டுவேன்.. //

Karthik sir..yenna ithu..notice yellam kuduthacha..college la bit ah poottudalama:-)))))))

ராம்.CM said...

நல்ல அலசல்! நல்லாயிருந்தது. ஐ.டி.துரையைப்பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. நல்லா பதிவில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

Anonymous said...

சிந்திக்க வேண்டிய விடையம்..!
கலக்கல் பதிவு

கிரி said...

நீங்கள் குறிப்பிட்டு இருந்ததை போல கிராமத்து மாணவர்களின் நிலைமையும் உணர்வுகளும் ரொம்ப மோசம். நகரத்து மாணவர்களை போல எளிதாக எடுத்துக்கொள்ளும் நிலைமையில் அவர்களும் அவர்களது குடும்பங்களும் இல்லை என்பதே உண்மை.

இந்த நிலை கண்டிப்பாக மாறும் என்பதில் சந்தேகமில்லை ..ஆனால் ஐ டி க்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் (ரொம்ப அதிகம்) ஓரளவு இதன் மூலம் கொஞ்சம் குறையும் என்று நினைக்கிறேன் ..ஆனால் நிலைமை மாறும் போது இதுவும் மாறி விடும்

புருனோ Bruno said...

//பொறியியல் மாணவர்களைப் பொறுத்தவரை என்னுடைய ஆசை எல்லாம் ஒன்றுதான்.. அவரவர் துறை சார்ந்து முன்னேற வேண்டும். IT ஒன்றை மட்டுமே நம்பக் கூடாது.//

நல்ல கருத்து.

ராஜ நடராஜன் said...

இப்ப பேர் மறக்க மாட்டேனே:)

இனி பதிவுக்கு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு

ராஜ நடராஜன் said...

நல்ல அலசல்.இதுவரையில் இந்தியாவிற்கு கொடுத்து வந்த அவுட்சோர்ஸிங் வேலைகளை மீண்டும் அமெரிக்காவுக்கு எடுத்துக் கொள்ளாமல் புதிய வேலை வாய்ப்புக்களை மட்டுமே அமெரிக்க மக்களுக்கு உருவாக்கத் திட்டம் என ஒபாமா அறிவிப்பு.

கொஞ்ச நாட்கள் ஏதாவது துறை சம்பந்தப் பட்ட அல்லது அல்லாத வேலைகளில் ஒட்டிக் கொள்வது,சுய வேலை அல்லது மேல்படிப்பு என தொடர்வது மட்டுமே இப்போதைக்கு சரிப்படும்.

kuma36 said...

இவை எனக்கு புதிய விடங்கள் சார்!

Bhavani Shankar™ said...

hi frnds, I am one of the victim of the recession. Here is list of companies given placements and not yet called.
In Wipro >5000 people are waiting..
In HCL > 7000 people are waiting
In CTS > 5000 people are waiting ..
In Satyam 9000 poeple are waiting..
In Tech Mahindra > 5000 ppl waiting
In Keane>5600 ppl waiting (I got placement in this company).

Yesterday, It was my graduation day. Til the last moment I did have any idea of going to convocation. Only my frnds took me to the college at last. காலெஜ்ல இருந்து வந்து... Night தூக்கம் இல்லாம இந்த பின்னூட்டதை எழுதிகொண்டிருக்கிறேன். நான் கடைசியா சந்தோஷமா இருந்த நாள் எனக்கு நினவில்ல...

Bhavani Shankar™ said...

இன்னும் infosys- இல் நடக்கும் சில உண்மைகள். என்னுடைய நண்பர்களில் 10 ல் 3 மட்டுமே உள்ளேயே இருக்கிறார்கள். மைசூர் training center-ல் இந்த வருடம் ஒரு மாணவி தன்னை மைத்து கொண்டிருக்கிறாள். இன்னொருவன் மன நிலை பாதிக்கப்பட்டு கையில் கிடைத்ததை எல்லாம் ஒடித்திருக்கிறான். மற்றொருவன் training ல் தோல்வியடைந்து வீட்டுக்கு வந்து பெற்றோருக்கு அதை பற்றி சொல்லாமல் விடுமுறை என்று சொல்லி கொண்டு 4 நாள் கழித்து பெற்றோர் இல்லாத சமயம் தூக்கில் இட்டு கொண்டான். TCS மட்டுமே புதியவர்களை தூக்குவதில்லை. நானும் தேர்வான கம்பெனி இன்னும் என்ன கூப்பிடவே இல்ல. எங்க 2008 batch தான் ரொம்ப பாதிக்கப்பட்டது. இன்போசிஸ் paas mark- ஐ அதிக படுத்தி விட்டது. உண்மையா பசங்க ஏன் இப்டி போறாங்கன்னா, என் நிலைமைய எடுத்துகோங்க. நான் first slot la வந்த சிறந்த கம்பெனில place ஆனேன். இது வரைக்கும் arrear என்பதே நான் பாத்ததில்ல. அப்டி தான் நெறைய பேர் படிச்சாங்க. எங்க காலேஜ்ல எனக்கும் பின்னாடி place ஆனவங்க எல்லாம் இப்போ வேலைல இருக்காங்க. இன்னும் சொல்ல போனா core கம்பெனில place ஆனவங்க எல்லாம் நாங்க முடிச்சு ஒரே மாசத்துல உள்ள போய்ட்டாங்க. நான் first companies-ல place ஆகிட்டு ஒரு வருஷம் ஆகியும் இன்னும் வீட்ல தான் இருக்கேன். நாங்க எந்த தப்புமே பண்ணாம எங்களோட எதிர் காலம் புரியாம இருக்கோம். இன்னொரு விஷயம்... நான் எங்க school first பனிரெண்டாம் வகுப்புல. TCS பசங்க இப்போ மாசம் இருபது ஆயிரம் சம்பாதிக்கிறாங்க. இன்னும் எங்க வீட்ல ரெண்டு வருஷம் லோன் கட்டாம இருக்கு. இதே நிலைமைலதான் எல்லோரும் இருக்காங்க. மாசம் 25000 ஆச காமிச்சிட்டு இப்போ எனக்கு ஒன்னுமே இல்ல. 5000 க்கு வேல செய்ய நான் தயார். வேல தர ஆள் இல்ல. எந்த decesion எடுக்க முடியாம நான் பட்ற கஷ்டம்...ஏற்கனவே ஒரு வருஷம் போச்சு. கடைசி ஒரு வருஷமா நாங்க பட்ற மன உளைச்சல் தான் இதுக்கெல்லாம் காரணம். இன்னும் நெறைய பேசலாம். கடைசியா சொல்லனும்னா... இப்போதைக்கு என்கிட்டே இருப்பது ரெண்டு... ஒன்னு படிப்பு.... அதுக்கு இப்போ மதிப்பில்ல. ரெண்டாவது நம்பிக்கை... அது இருஉகும் வரைதான்.. எல்லாமே... என்னோட அப்பா எவ்ளோ கஷ்ட பட்டு படிக்க வெச்சார்னு எனக்கு தெரியும். திரும்ப அவங்க எதுவும் எதிர் பாக்கல. நான் நல்லா இருக்கணும்னு அவரு கஷ்ட பட்டாரு. அவங்களுக்கு நான் செய்ய வேண்டியது அவங்க சந்தோச பட்ற மாதிரி வாழனும். அவங்கள இன்னும் கஷ்ட பட்ற வெக்கிறோமே. என் வீட்ட சுத்தி எல்லோரும் நான் என்னமோ place ஆனேன்னு பொய் சொன்ன மாதிரியே கேக்றாங்க. இது வரைக்கும் எங்க அப்பா-அம்மா என்ன படின்னு சொன்னதே கிடையாது. இப்போ போறவன் வரவன் எல்லாம் சும்மா இருக்காத. இத பண்ணு... அத பண்ணு... யப்பா... என்ன பண்ணனும்னே தெரியல... சின்ன வயசுல இருந்தே யார் கிட்டயும் எதுக்கும் நின்னது கெடயாது... இப்போ தெரிஞ்சவங்க தெரியாதவங்க கிட்ட எல்லாம் reference கேட்டு நிக்க வேண்டி இருக்கு. இது வரைக்கும் எக்ஸ்ட்ரா மார்க் போடுங்கனு நின்னது கெடயாது.... இப்போ... தழைகீழ்... பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... என்னை போன்றோர்க்காக ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள்.

Bhavani Shankar™ said...

மாதவராஜ்- ன் பதிவு....
http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post_10.html

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said..
இன்னா தல...வூட்டுல பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டங்களா? :-)//

ஹி ஹி ஹி...சீக்ரட்ட சொல்லாதேங்க நண்பா...

கார்த்திகைப் பாண்டியன் said...

//Ramya...//

IT துறையில் இருக்கும் நீங்கள் நிலைமையை நன்கு உணர்ந்தவர்... முழுவதும் புரிந்து அலசி உள்ளீர்கள்.. ரொம்ப நன்றி...

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said..
நல்ல அலசல் நண்பா...
நானும் IT தான் படிக்கலாம்ன்னு முடிவுல இருக்கேன். பாக்கலாம்..நிலைமை சரியாகும்...//

நம்புவோம் நண்பா.. நன்றி...

கார்த்திகைப் பாண்டியன் said...

//புல்லட் பாண்டி said..
சிறந்த பதிவுங்க... நல்லா நச்சுன்னு சொன்னீங்க... ஓட்ட குத்துவம்னு பாத்தா ஏதோ பிரச்சனை படுத்துது! நான் நண்பர்களை வாசிக்க சொல்லுறேன்..:) வாழ்த்துக்கள்..:)//

பரவா இல்லை நண்பா.. ரொம்ப நன்றி...

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
ஐடி கம்பனிகளில் நாமும் போய் சேர்ந்திருக்கமுடியாமல் போச்சே என்று வருத்தப்பட்ட காலம் போய், சேர்ந்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று வருத்தப்பட வேண்டிய காலம் ஆகிவிட்டது.//

வாங்க நண்பா... காலம் நேரம் சரி இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ஆதவா.. பார்க்கலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//malar said..
I.T துறை மட்டும் இல்லை தற்பொழுது எல்லா துறைகளுக்கும் (வேலையில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களும் ) டப்பா டான்ஸ் ஆடுகிறது .//

ஆமாங்க.. ஓரளவுக்கு எல்லாப் பக்கமும் இந்த பிரச்சினை இருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை said..
கார்த்தி, நல்லா எழுதியிருக்கீங்க. எல்லாரும் ஒரே துறையை தேர்ந்தெடுத்தா என்னவாகும்... என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.
நல்ல பதிவு.‘தலைவன் இருக்கின்றான்‘ படத்துல கமலோட உங்க ‘தல‘ இணைகிறார். வாழ்த்துக்கள். (‘தல‘ படம் வேற போடுங்க தல.)//



நன்றி வாசு.. தல பற்றிய தரமான தகவலைச் சொல்லி இருக்கீங்க.. நன்றி...

கார்த்திகைப் பாண்டியன் said...

//இயற்கை said..
Karthik sir..yenna ithu..notice yellam kuduthacha..college la bit ah poottudalama:-)))))))//

ஆமாங்க சீக்கிரம் மதுரை போய்டுவேன்னு நினைக்கிறேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
நல்ல அலசல்! நல்லாயிருந்தது. ஐ.டி.துரையைப்பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. நல்லா பதிவில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
சிந்திக்க வேண்டிய விடையம்..!
கலக்கல் பதிவு//

இப்பல்லாம் கவின் ரொம்ப பிசி போல...வருகைக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கிரி said..
நீங்கள் குறிப்பிட்டு இருந்ததை போல கிராமத்து மாணவர்களின் நிலைமையும் உணர்வுகளும் ரொம்ப மோசம். நகரத்து மாணவர்களை போல எளிதாக எடுத்துக்கொள்ளும் நிலைமையில் அவர்களும் அவர்களது குடும்பங்களும் இல்லை என்பதே உண்மை.//

ஆமாம் நண்பா.. கிராமப்புற மாணவர்களின் நிலை ரொம்ப மோசம்தான்.. சீரானால் சரி...

கார்த்திகைப் பாண்டியன் said...

// புருனோ Bruno said..
நல்ல கருத்து.//

வாங்க டாக்டர் நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//T.V.Radhakrishnan said..
நல்ல பதிவு//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராஜ நடராஜன் said..
கொஞ்ச நாட்கள் ஏதாவது துறை சம்பந்தப் பட்ட அல்லது அல்லாத வேலைகளில் ஒட்டிக் கொள்வது,சுய வேலை அல்லது மேல்படிப்பு என தொடர்வது மட்டுமே இப்போதைக்கு சரிப்படும்.//

உங்கள் கருத்து முற்றிலும் சரி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கலை - இராகலை said..
இவை எனக்கு புதிய விடங்கள் சார்!//

முதல் வருகைன்னு நினைக்கிறேன்.. நன்றிங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Bhavani shankar..//

அன்பின் சகோதரா.. உங்களுடைய பதிலை மாதவராஜ் அவர்களோட பதிவுல படிச்சப்போதான் எனக்கு இதைப்பத்தி எழுதனும்னு தோனுனதே.. வாழ்க்கைல நம்பிக்கையை மட்டும் இழக்காதீங்க.. கண்டிப்பா இந்த நிலைமைகள் மாறும்.. ஒரு வேலை பிளேஸ்மென்ட் இல்லாத சூழலில் நீங்க இருந்து இருந்தா..? நீங்களே வேலை வாங்க முயற்சி பண்ணி இருப்பீங்க இல்லையா? அதனால தைரியமா இருங்க.. கண்டிப்பா நல்லது நடக்கும்..

Suresh said...

ரொம்ப நேரம் எடுத்து நல்லா அருமையா அலசி ஆராய்ந்து எழுதுறிங்க ...
தொன்றந்து எழுதுங்கள் நண்பா .. உங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்பிற்கும் நன்றிகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி சுரேஷ்.. அடிக்கடி வந்து போங்க நண்பா..

சொல்லரசன் said...

//அவரவர் துறை சார்ந்து முன்னேற வேண்டும். IT ஒன்றை மட்டுமே நம்பக் கூடாது.//

இது தான் உண்மை,நல்ல அலசல்.

malar said...
//I.T துறை மட்டும் இல்லை தற்பொழுது எல்லா துறைகளுக்கும் (வேலையில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களும் ) டப்பா டான்ஸ் ஆடுகிறது //

இதுபோன்ற சமயங்களில் மற்ற துறைகளில் costcutting என்பது மூலபொருட்கள்,உற்பத்திசெலவு,
அடுத்தாக ஊதியகுறைப்பு எனறு வரும்,ஆனால் ஜ.டி துறையில் ஊதியகுறைப்பு மட்டுமே சாத்தியம் என்பதால் பாதிப்பு நேரிடையாக ஆட்குறைப்புக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.

யாழினி said...

உண்மையில் நல்ல பதிவு!
சிந்திக்க‌ வைத்துள்ளீர்க‌ள் அண்ணா.

நசரேயன் said...

நல்ல அலசல் .. நிலைமை விரைவில் சரியாகும் என நம்புவோம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
இது தான் உண்மை,நல்ல அலசல்.//

நன்றி நண்பா...உங்கள் அனுபவத்தையும் சொல்லி உள்ளீர்கள்.. எப்படியோ நிலைமை சரி ஆனால் போதும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//யாழினி said..
உண்மையில் நல்ல பதிவு!
சிந்திக்க‌ வைத்துள்ளீர்க‌ள் அண்ணா.//

நன்றி சகோதரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said..
நல்ல அலசல் .. நிலைமை விரைவில் சரியாகும் என நம்புவோம்//

நன்றி நண்பா..

Anonymous said...

நண்பா நல்லா எழுதி இருக்கீங்க. சூப்பர்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றி நண்பா..