March 26, 2009

பெயர்க்காரணம் - 50 வது பதிவு..!!!

மதுரை திருமலை நாயக்கர் மஹால். வருடம் - 1990. செவன்த் டே பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர்கள் சுற்றுலாவுக்கு வந்து இருந்தாங்க. குட்டிபசங்கள எல்லாம் வரிசைல நிக்க வச்சிட்டு டிக்கட் வாங்கிட்டு வர அவங்க டீச்சர் போய்ட்டாங்க. அப்போ ஒரு வயசான பாட்டி பசின்னு சொல்லிக்கிட்டு தர்மம் கேட்டு வந்துச்சு. வரிசைல நின்னுக்கிட்டு இருந்த ஒரு பையன் அவங்கம்மா அவனுக்காக கொடுத்து இருந்த அஞ்சு ரூபாயையும் தூக்கிக் கொடுத்துட்டான்.

சுத்தி முடிச்சுட்டு வெளில வந்த பசங்க எல்லாம் ஆளாளுக்கு மிட்டாயும் ஐசும் வாங்கி சாப்பிட்டப்போ அந்தப் பையன் மட்டும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தான். அதப் பார்த்துட்டு அவங்க டீச்சர் அவனுக்கு வேணும்கரத வாங்கி குடுத்து கூட்டிக்கிட்டு வந்தாங்க. நடந்த விஷயத்த கேள்விப்பட்ட அவனோட அம்மாச்சி சொன்ன வார்த்தைகள் இதுதான்.. "இந்த வயசுலேயே இப்படி இளிச்சவாத்தனமா இருக்கே.. இதெல்லாம் இந்த உலகத்துல எப்படித்தான் பொழைக்கப் போகுதோ?" அந்த இளிச்சவாப்பய.. சத்தியமா நாந்தாங்க..

***************

மார்ச் 26, 1978 - என் பெற்றோரின் திருமணம் நடந்த நாள். அம்மாவின் முதல் பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்து மூன்றே நாளில் இறந்து போயின. அடுத்த குழந்தை எட்டு மாதத்தில் குறைப்பிரசவமாக இறந்தே பிறந்தது. அம்மாவுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். குறிப்பாக முருகன் மீது அபார பக்தி. எனவே மீண்டும் கருத்தரித்த போது இந்த குழந்தையாவது நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று எல்லா முருகன் கோயிலையும் சுற்றி வந்திருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருந்த சாமியாடும் ஒருவர் அம்மாவிடம் சொன்னாராம்.. "நீ பாண்டி கோயிலுக்கு போய் வேண்டிக்கோ.. இந்த குழந்தைக்கு அவன் பெயரை வை.." அம்மாவும் அதை செய்து இருக்கிறார். கடைசியில் நல்லபடியாக குழந்தை பிறந்தது. முருகனுக்கும் பாண்டி சாமிக்கும் நன்றி சொல்ல அவர்கள் குழந்தைக்கு வைத்த பெயர்.. "துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்".

என் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி தங்கி இருந்தவர்தான் நான் படித்த பள்ளியின் பிரின்சிபால் - ஜேம்ஸ் அங்கிள். ரொம்ப பெரிசா இருக்கு என்று அவர்தான் என்னுடைய பெயரை சுருக்கியவர். ஆனால் பள்ளியில் பதிவு செய்யும்போது தப்பாக கார்த்திகைப் பாண்டியன் என்று எழுதி விட்டார். அதன் பின்னர் அதுவே நிலைத்து விட்டது.

மனுஷனுக்கு எப்போதும் என்னைக் கிண்டல் செய்வது என்றால் அவ்வளவு சந்தோஷம். என்னை தீபாவளிப் பாண்டியா என்றுதான் கூப்பிடுவார். கேட்டால் கார்த்திகையும் பண்டிகை, தீபாவளியும் பண்டிகைதானே என்பார். நானும் அவரோடு மல்லுக்கு நிற்பேன் - பேரை தப்பா எழுதனதும் இல்லாம கிண்டல் வேற பண்றீங்களான்னு.. ஆனா அவர் கண்டுக்கவே மாட்டார்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வேறொரு பள்ளிக்கு மாற்றல் ஆகி சென்று விட்டார். சமீபத்தில் விரகனூரில் அவர் தங்கி இருக்கும் வீட்டை தேடி போய் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டேன். ரொம்ப சந்தோஷப் பட்டார் .

"நான் உனக்கு சொல்லிக் கொடுத்த காலம் போய் நீ இப்போ இத்தன பேருக்கு சொல்லிக் கொடுக்குறியாடா.. ரொம்ப பெருமையா இருக்கு.."

அவர் சொன்னபோது மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன். நிறைய நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன்.வாசல் வரை வந்திருப்பேன்..

" டேய் தீபாவளிப் பாண்டியா.."

சட்டென்று திரும்பிப் பார்த்தேன். ஜேம்ஸ் அங்கிள் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.

"மறந்துட்டியோன்னு.. ச்சும்மா.. கூப்பிட்டு பார்த்தேனப்பா.. "

சிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன். சொல்ல முடியாத ஏதோ ஒரு சந்தோஷ உணர்வு எனக்குள் நிரம்பி வழிந்தபடி இருந்தது.

(இன்று என் பெற்றோரின் திருமண நாள். அவர்களுக்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும்.. அதே நேரத்தில் இது என்னுடைய அம்பதாவது பதிவு. என்னுடைய எழுத்துக்களை ஊக்குவித்து வரும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. )

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

104 comments:

புதியவன் said...

உங்கள் பெற்றோரின் திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...

Anbu said...

உங்கள் பெற்றோரின் திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா

குடந்தை அன்புமணி said...

முதலில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

வேத்தியன் said...

மீ த 4th..
:-)

Anbu said...

\\\"இந்த வயசுலேயே இப்படி இளிச்சவாத்தனமா இருக்கே.. இதெல்லாம் இந்த உலகத்துல எப்படித்தான் பொழைக்கப் போகுதோ?" அந்த இளிச்சவாப்பய.. சத்தியமா நாந்தாங்க..\\\

ம்ம்ம்...

வேத்தியன் said...

முதலில் 50க்கு வாழ்த்துகள்...
ஹால்ஃப் செஞ்சுரி மட்டுமில்லாம செஞ்சுரி,டபுள், செஞ்சுரி, ட்ரிபுள் செஞ்சுரின்னு அடிச்சுகிட்டு மேல முன்னேற இறைவனை பிராத்திக்கிறேன் நண்பா...

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் பெற்றோர்களுக்கு..:)

குடந்தை அன்புமணி said...

பெற்றோருக்கு திருமணநாளா... வாழ்த்துக்கள். உங்க பெயர் காரணத்துக்கு விளக்கம் தெரிஞ்சிக்கிட்டோம். ஆமா, தீபாவளிப்பாண்டி...(சும்மா நானும் கூப்பிட்டு பார்த்தேன்) வாத்தியாரா நீங்க?

வேத்தியன் said...

"இந்த வயசுலேயே இப்படி இளிச்சவாத்தனமா இருக்கே.. இதெல்லாம் இந்த உலகத்துல எப்படித்தான் பொழைக்கப் போகுதோ?" அந்த இளிச்சவாப்பய.. சத்தியமா நாந்தாங்க..//

ஹிஹி..
அதுசரி, அந்த சின்ன வயசுலயே ஆரம்பிச்சுட்டீங்க போல???
:-)
செஞ்சது நல்ல விசயம் தான் போங்க...

சொல்லரசன் said...

வாழ்த்துகள் நண்பரே 50 வது பதிவுக்கு,உங்கள் பெற்றோர்க்கும் திருமண நாள் வாழ்த்துகள்

Anbu said...

நானும் நீண்ட நாட்கள் கழித்து எனக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை சில நாட்களுக்கு முன் பார்த்தேன் அண்ணா..

சொல்ல வார்த்தையில்லை..நல்ல சந்திப்பு

வேத்தியன் said...

உங்கள் பெற்றோருக்கு பதிவுலகம் சார்பாக எங்கள் நல்வாழ்த்துகள் நண்பா...

வேத்தியன் said...

"துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்". //

ஆஹா கொஞ்சம், இல்ல ரொம்ப பெருசு தான் போங்க...
ச்சும்மா உல்லுலாயிக்கு...
:-)

வேத்தியன் said...

நண்பர் தீபாவளி பாண்டியன் வாழ்க...

Anbu said...

விருந்து எப்போது வைக்கப்போறீங்க அண்ணா

வேத்தியன் said...

நீங்க அவருக்கு தீபாவளி வாழ்த்துக்கு பதிலா கார்த்திகை வாழ்த்துகள்ன்னு சொல்லியிருக்கலாம் தானே???
:-)

வேத்தியன் said...

Anbu said...

விருந்து எப்போது வைக்கப்போறீங்க அண்ணா//

ரிப்பீட்டேய்....

வேத்தியன் said...

சிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன். சொல்ல முடியாத ஏதோ ஒரு சந்தோஷ உணர்வு எனக்குள் நிரம்பி வழிந்தபடி இருந்தது.//

உணர முடிகிறது...
நாங்களும் இன்னும் மாணவர் தானெ..
அதான்...
:-)

ஷங்கர் Shankar said...

50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்

வேத்தியன் said...

பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..//

கருத்துரையும் வழங்குவோம், ஓட்டும் குத்துவோம்ல நாம...
:-)

Anbu said...

வேத்தியன் said...

சிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன். சொல்ல முடியாத ஏதோ ஒரு சந்தோஷ உணர்வு எனக்குள் நிரம்பி வழிந்தபடி இருந்தது.//

உணர முடிகிறது...
நாங்களும் இன்னும் மாணவர் தானெ..
அதான்...
:-)

இன்னைக்கு என்ன பதிவு தல..

Anbu said...

22

Anbu said...

23

Anbu said...

24

Anbu said...

ஐய்யா 25!!

Anbu said...

போதுமா அண்ணா கருத்துரை எங்க இருக்கீங்க

முரளிகண்ணன் said...

உங்கள் பெற்றோருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.

50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

தொடருங்கள்

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் நண்பா..உங்களுக்கும் தங்கள் பெற்றோருக்கும்

ச.பிரேம்குமார் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். உங்கள் பெற்றோருக்கும் வாழ்த்துகள் :)

//பேரை தப்பா எழுதனதும் இல்லாம கிண்டல் வேற பண்றீங்களான்னு.. ஆனா அவர் கண்டுக்கவே மாட்டார். //

ஹா ஹா ஹா

//நான் உனக்கு சொல்லிக் கொடுத்த காலம் போய் நீ இப்போ இத்தன பேருக்கு சொல்லிக் கொடுக்குறியாடா.. ரொம்ப பெருமையா இருக்கு//
பெருமையா இருக்குன்னாரா? இல்ல அந்த புள்ளைங்கள் நினைச்சு பீல் பண்ணாரா ;)

கிரி said...

// டேய் தீபாவளிப் பாண்டியா.."
சட்டென்று திரும்பிப் பார்த்தேன். ஜேம்ஸ் அங்கிள் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.
"மறந்துட்டியோன்னு.. ச்சும்மா.. கூப்பிட்டு பார்த்தேனப்பா.. //

கலக்கல் :-)

உங்கள் 50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..

ச.பிரேம்குமார் said...

நாளைய சமுதாயத்தை உருவாக்க இருக்கும் மாணவர்களை உருவாக்கும் அருமையான பணியில் இருக்கிறீர்கள். இந்த வலைப்பதிவு மூலமும் இன்னும் நிறைய நல்ல பதிவுகளை தொடர்ந்து தருவீர்கள் என்று நம்புகிறோம்

பொன்.பாரதிராஜா said...

//அந்த இளிச்சவாப்பய.. சத்தியமா நாந்தாங்க..

அஜித் ரசிகன்னு சொல்லும்போதே தெரியும் கார்த்தி...

பொன்.பாரதிராஜா said...

//இன்று என் பெற்றோரின் திருமண நாள்

இன்னும் பல திருமண நாள் காண வாழ்த்துக்கள்....

பொன்.பாரதிராஜா said...

//கேட்டால் கார்த்திகையும் பண்டிகை, தீபாவளியும் பண்டிகைதானே என்பார்.

இனிமேல் நான் உங்களை பொங்கல் பாண்டியன்னுதான் கூப்பிடுவேன் :))))

பொன்.பாரதிராஜா said...

//இது என்னுடைய அம்பதாவது பதிவு...

நீங்க சச்சின் மாதிரிங்க...விரைவில் செஞ்சுரி போட வாழ்த்துக்கள்...

ஆதவா said...

உங்கள் பெற்றோர் திருமண தின வாழ்த்துக்கள் கார்த்திகைப்பாண்டியன். நீங்க எப்போ திருமண தினத்தைக் குறிக்கப் போறீங்க???

ஆதவா said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா. பெயர் மர்மம் ஏற்கனவே எனக்கு முடிச்சவிழ்ந்து விட்டதால் இப்போது கேட்பதற்கு சுவாரசியம் இல்லாமல் போய்விட்டது!!! :((

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.. இங்க கல்லூரில ஒரு கமிட்டி விசிட் இருக்கறதால வலைப்பக்கம் வர முடியல.. சாயங்காலம் எல்லாருக்கும் பொறுமையா நன்றி சொல்றேன்..

நையாண்டி நைனா said...

நண்பா, பதிவிற்கு வாழ்த்துக்கள். பெற்றோர்களுக்கு பிள்ளையாய் வாழ்த்துகளை வேண்டுகிறோம்.

சொல்லரசன் said...

பொன்.பாரதிராஜா said...

//அந்த இளிச்சவாப்பய.. சத்தியமா நாந்தாங்க..

அஜித் ரசிகன்னு சொல்லும்போதே தெரியும் கார்த்தி...//

இதிலும் உங்க "தல" புராணமா?

சொல்லரசன் said...

//மதுரை திருமலை நாயக்கர் மஹால். வருடம் - 1990. அப்போ ஒரு வயசான பாட்டி பசின்னு சொல்லிக்கிட்டு தர்மம் கேட்டு வந்துச்சு. வரிசைல நின்னுக்கிட்டு இருந்த ஒரு பையன் அவங்கம்மா அவனுக்காக கொடுத்து இருந்த அஞ்சு ரூபாயையும் தூக்கிக் கொடுத்துட்டான்.//

அம்புட்டு தர்மவானா நீங்க‌

ஹேமா said...

அருமையான நினைவுப் பதிவு.ஒரு குட்டிக்கதை போலவே.உங்கள் அம்மா அப்பாவுக்கும்,உங்கள் பதிவின் வளர்ச்சிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

குமரை நிலாவன் said...

50வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
நண்பா
திருமண நாள் வாழ்த்துக்கள்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
சொல்லிவிடுங்கள்.

குமரை நிலாவன் said...

செவன்த் டே பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர்கள் சுற்றுலாவுக்கு வந்து இருந்தாங்க. குட்டிபசங்கள எல்லாம் வரிசைல நிக்க வச்சிட்டு டிக்கட் வாங்கிட்டு வர அவங்க டீச்சர் போய்ட்டாங்க. அப்போ ஒரு வயசான பாட்டி பசின்னு சொல்லிக்கிட்டு தர்மம் கேட்டு வந்துச்சு. வரிசைல நின்னுக்கிட்டு இருந்த ஒரு பையன் அவங்கம்மா அவனுக்காக கொடுத்து இருந்த அஞ்சு ரூபாயையும் தூக்கிக் கொடுத்துட்டான்.

அம்புட்டு நல்லவரா .

சும்மா ....

மேவி... said...

உங்கள் பெற்றோர்க்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் .....

மேவி... said...

எதாவது re-publish பண்ணுங்க சகா

மேவி... said...

உங்களின் 50 தாவது பதிவில் நானே 50

மேவி... said...

உங்க பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகா

மேவி... said...

இதே மாதிரி என் நண்பன் பெயர் கதிர்கம பாண்டியன் ,

சொல்லரசன் said...

MayVee said...

47
March 26, 2009 6:22 PM
MayVee said...

48
March 26, 2009 6:22 PM
MayVee said...

49
March 26, 2009 6:22 PM
MayVee said...

50


நீங்க தான் மே(தா)வியா

அகநாழிகை said...

கார்த்தி,
அம்மாவிற்கும், அப்பாவிற்கும் எனது அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் 50-வது பதிவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
விரைவில் நேரில் சந்திக்கலாம்.

- பொன். வாசுதேவன்

தேவன் மாயம் said...

அப்போ ஒரு வயசான பாட்டி பசின்னு சொல்லிக்கிட்டு தர்மம் கேட்டு வந்துச்சு. வரிசைல நின்னுக்கிட்டு இருந்த ஒரு பையன் அவங்கம்மா அவனுக்காக கொடுத்து இருந்த அஞ்சு ரூபாயையும் தூக்கிக் கொடுத்துட்டான்.///

வள்ளலே !!! சின்ன வயசிலேயே அவ்வளவு இரக்கமா?
வாழ்க நீ எம்மான்!!!

Anonymous said...

அடடே! வாழ்த்துக்கள் உங்களின் பெற்றோருக்கு!

பெயர்க்காரண பதிவு பசுமை! பாண்டி!!!

அத்திரி said...

//"துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்". //

பேரு ரொம்ப சிறுசா இருக்கே....
50 வது பதிவுக்கும், உங்கள் பெற்றோரின் திருமணநாளுக்கும் இனிய வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் தீபாவளி பாண்டி.. வாழ்த்துகள்.. உங்களின் 50 வது பதிவில் உங்களின் பெற்றோரின் திருமணநாளையும் நினைவுகூர்வதில் பாராட்டுகள்.... 50 து 500ஆக ...

500 று 5000 ஆக ........................................... வாழ்த்துகள்

ஆளவந்தான் said...

வாஙக் இளிச்சவாயன் :)))

வாழ்த்துக்கள் உங்கள் பெற்றோருக்கு :)

சம்பத் said...
This comment has been removed by the author.
சம்பத் said...

வாழ்த்துக்கள் உங்களின் பெற்றோருக்கு!

பெயர்க்காரண பதிவு சூப்பர் பாண்டி!

கொஞ்ச நாள்லயே பெரிய ஆளா ஆயிட்டீங்க.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

நசரேயன் said...

உங்கள் பெற்றோருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.

50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

புதியவன்..
அன்பு..
குடந்தைஅன்புமணி..
வேத்தியன்..

வாழ்த்துக்கு நன்றி தோழர்களே..

கார்த்திகைப் பாண்டியன் said...

சொல்லரசன்..
தமிழ் பிரியன்..
ஷங்கர்..

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தைஅன்புமணி said..
ஆமா, தீபாவளிப்பாண்டி...(சும்மா நானும் கூப்பிட்டு பார்த்தேன்) வாத்தியாரா நீங்க?//

ஆமாங்க.. பொறியியல் கல்லூரில ஆசிரியரா இருக்கேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said..
விருந்து எப்போது வைக்கப்போறீங்க அண்ணா//

கூடிய சீக்கிரம் வைத்து விடலாம் அன்பு

கார்த்திகைப் பாண்டியன் said...

முரளிகண்ணன்..
நான் ஆதவன்..

ரொம்ப நன்றி நண்பர்களே.. உங்கள் ஆதரவுக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
பெருமையா இருக்குன்னாரா? இல்ல அந்த புள்ளைங்கள் நினைச்சு பீல் பண்ணாரா ;)//

நீங்களும் ஓட்டுறீங்களே பிரேம்.. நான் அப்புறம் அழுதிடுவேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கிரி said..
கலக்கல் :-)உங்கள் 50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..//

ரொம்ப நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
நாளைய சமுதாயத்தை உருவாக்க இருக்கும் மாணவர்களை உருவாக்கும் அருமையான பணியில் இருக்கிறீர்கள். இந்த வலைப்பதிவு மூலமும் இன்னும் நிறைய நல்ல பதிவுகளை தொடர்ந்து தருவீர்கள் என்று நம்புகிறோம்//

நன்றி பிரேம்.. கண்டிப்பாக உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பொன். பாரதிராஜா said..
நீங்க சச்சின் மாதிரிங்க... விரைவில் செஞ்சுரி போட வாழ்த்துக்கள்...//

நன்றி பாரதி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
உங்கள் பெற்றோர் திருமண தின வாழ்த்துக்கள் கார்த்திகைப்பாண்டியன். நீங்க எப்போ திருமண தினத்தைக் குறிக்கப் போறீங்க???//

உங்களுக்கு தெரியாமலா நண்பா.. கூடிய சீக்கிரம் சொல்கிறேன்.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா..
நண்பா, பதிவிற்கு வாழ்த்துக்கள். பெற்றோர்களுக்கு பிள்ளையாய் வாழ்த்துகளை வேண்டுகிறோம்//

உங்கள் வாழ்த்து கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்.. உங்களுக்கும் என் பெற்றோரின் வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
அம்புட்டு தர்மவானா நீங்க‌//

நீங்கதான் நண்பா சொல்லணும் நம்ம குணத்தைப் பத்தி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said..
அருமையான நினைவுப் பதிவு.ஒரு குட்டிக்கதை போலவே.உங்கள் அம்மா அப்பாவுக்கும்,உங்கள் பதிவின் வளர்ச்சிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//

நன்றி சகோதரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன் said..
50வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
நண்பா திருமண நாள் வாழ்த்துக்கள்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
சொல்லிவிடுங்கள்.//

வாங்க நண்பா.. நன்றி.. உங்களோட பேசுனதுல ரொம்ப சந்தோஷம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee..
உங்களின் 50 தாவது பதிவில் நானே 50...உங்க பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகா..இதே மாதிரி என் நண்பன் பெயர் கதிர்கம பாண்டியன் ,//

உங்க தாராள மனசுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை said..
கார்த்தி,
அம்மாவிற்கும், அப்பாவிற்கும் எனது அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நண்பா.. அம்மா அப்பாவிடம் உங்கள் வாழ்த்துக்க போய் சேர்ந்து விட்டன.. ரொம்ப சந்தோஷப் பட்டார்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//thevanmayam said..
வள்ளலே !!! சின்ன வயசிலேயே அவ்வளவு இரக்கமா?
வாழ்க நீ எம்மான்!!!//

ரொம்ப புகழாதீங்க நண்பா.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஷீ-நிஷி said..
அடடே! வாழ்த்துக்கள் உங்களின் பெற்றோருக்கு!பெயர்க்காரண பதிவு பசுமை! பாண்டி!!!//

நன்றி நண்பா.. உங்க போன்காலுக்கு ரொம்ப நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
50 வது பதிவுக்கும், உங்கள் பெற்றோரின் திருமணநாளுக்கும் இனிய வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said..
வணக்கம் தீபாவளி பாண்டி.. வாழ்த்துகள்.. உங்களின் 50 வது பதிவில் உங்களின் பெற்றோரின் திருமணநாளையும் நினைவுகூர்வதில் பாராட்டுகள்.... 50 து 500ஆக ...
500 று 5000 ஆக ...................................... வாழ்த்துகள்//

ரொம்ப நன்றி தோழரே.. நீங்க உங்க விருப்பபடி கூப்பிடுங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆளவந்தான் said..
வாஙக் இளிச்சவாயன் :)))
வாழ்த்துக்கள் உங்கள் பெற்றோருக்கு :)//

கூச்சமா இருக்கு நண்பா.. ரொம்ப புகழாதீங்க.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said..
வாழ்த்துக்கள் உங்களின் பெற்றோருக்கு!பெயர்க்காரண பதிவு சூப்பர் பாண்டி!கொஞ்ச நாள்லயே பெரிய ஆளா ஆயிட்டீங்க.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.//

எல்லாம் உங்கள் வாழ்த்தும் தொடரும் அன்பு தான் காரணம் நண்பா.. ரொம்ப நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said..
உங்கள் பெற்றோருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா..

ரிஷி said...

வணக்கம் நண்பரே. உங்களது பதிவை முதல் முதலில் தமிழ்மணத்தில் பார்த்ததும் ஓர் இன்ப அதிர்ச்சி. ஆம்! எனது பெயரும் கார்த்திகை பாண்டியன் தான். எனது பெயர் உலகத்திலேயே எனக்கு மட்டும் தான் இருக்கிறது; இது போல வித்தியாசமாக யாருக்கும் வைக்க மாட்டார்கள் என்று எண்ணியிருந்தேன். உங்களுக்கும் வச்சிட்டாங்க! நான் பொதுவாக பின்னூட்டம் போடுவதில்லை. உங்கள் பெயர்க்காரணத்தைச் சொல்லியிருப்பதால் நானும் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். நான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தேன். வழக்கமாக எல்லோரும் முதல் மொட்டையை அவரவர் குலதெய்வத்திற்குத் தான் போடுவர். எனக்கோ வித்தியாசமாக மதுரை பாண்டி கோவிலில் போடுவதாக முடிவெடுத்துப் போட்டனர். அதனால் நட்சத்திரமும் கோவிலும் இணைந்து 'கார்த்திகை பாண்டியன்' ஆகி விட்டேன். ரிஷிகுமார் என்ற புனைபெயரில் எழுதி வருகிறேன் (பிளாகில் அல்ல) நான் பிறந்தது 1981ல். நீங்க சொல்லியிருக்கற மேட்டர் பாத்தா உங்க வருஷமும் அதுவாத்தான் இருக்கும்னு நெனக்கிறேன். அப்படியா?

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆச்சரியம் நண்பா.. நண்பா.. நான் பிறந்ததும் 1981 தான்.. உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி..

Karthik said...

deepavali pandian? ha..ha, nice!

happy anniversary for ur parents!

congrats for ur 50th post!!

Karthik said...

me the 90!

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் நண்பா.

Anonymous said...

உங்கள் பெற்றோரின் திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

ரெடி 93

Anonymous said...

94

Anonymous said...

95

Anonymous said...

96

Anonymous said...

97

Anonymous said...

98

Anonymous said...

99

Anonymous said...

50-வது பதில் நான் தான் 100

ரிஷி said...

50வது பதிவிற்காக, கார்த்திகைப் பாண்டியனுக்கு, கார்த்திகை பாண்டியன் வைக்கும் மொய் 101.

ரிஷி said...

//ஆச்சரியம் நண்பா.. நண்பா.. நான் பிறந்ததும் 1981 தான்.. உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி..//

நான் அக்டோபர் 16. நீங்க?

Suresh said...

நண்பரே ,
உங்கள் பெற்றோரின் திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...

அந்த சின்ன வயசுல கூட உங்களால முடிஞ்ச உதவியை செஞ்சு அருமையா வளர்ந்து வந்து இருக்கீங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthik said..
deepavali pandian? ha..ha, nice!
happy anniversary for ur parents!
congrats for ur 50th post!!//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
வாழ்த்துக்கள் நண்பா.//

ரொம்ப நன்றி வினோத்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த்//

வழக்கம் போல நம்ம பதிவுல நூறு அடிச்ச.. பெரிய மனது கொண்ட நண்பர் ஆனந்த்.. வாழ்க!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//ரிஷி said...
நான் அக்டோபர் 16. நீங்க?//

நீங்க கொஞ்சம் குட்டிப்பையா தான்.. நான் பிறந்தது மே 28...

கார்த்திகைப் பாண்டியன் said...

//suresh said..
நண்பரே ,உங்கள் பெற்றோரின் திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...
அந்த சின்ன வயசுல கூட உங்களால முடிஞ்ச உதவியை செஞ்சு அருமையா வளர்ந்து வந்து இருக்கீங்க//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழா..