April 2, 2009

பற பற பற.. பட்டாம்பூச்சி...!!!


பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள ஒரு பறக்கும் பூச்சி... இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் பறப்பதும் பலரும் கண்டு களிப்பது. பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது பப்புவா நியுகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். அமெரிக்காவில் காணப்படும் மேற்குக் குட்டிநீலம் எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும். (நன்றி: தமிழ் விக்கிப்பீடியா...)


இருங்க இருங்க.. பொறுமை.. இப்போ இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா.. நாம வாங்குன பட்டாம்பூச்சி விருத நம்ம நண்பர்களுக்குத் தரப் போறோம். கூடவே கொஞ்சம் பொது அறிவையும் வளர்ப்போம்னுதான். (ஹி ஹி ஹி...) ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நண்பர் வேத்தியன் எனக்கு இந்த விருதைக் கொடுத்தார். நேத்து நம்ம நண்பர் ஷீ-நிசி போனப் போட்டு தி(கு)ட்டிட்டார். "அழகா சுதந்திரமா பறக்க வேண்டிய பட்டாம்பூச்சிய உன்னோட வலையில ஏன் சிறைப்பிடிச்சு வைக்குறன்னு.." அதனால விருதைக் கொடுத்திர வேண்டியதுதான்..


அதுக்கு முன்னாடி.. என்ன இது சின்னப்புள்ளத்தனமா உங்களுக்கு உள்ளேயே விருது கொடுத்து வெளையாண்டுக்கிட்டுன்னு கேள்வி கேக்குறவங்களுக்கு.. தப்பில்ல.. நாலு பேருக்கு சந்தோஷம் கிடைக்கும்னா எதுவும் தப்பில்ல.. இந்த மாதிரி விருது கொடுக்குறது எதுக்கு? ஒரு சின்ன ஊக்கம் தானே.. நாலு பேரு நாம எழுதறத படிக்குரதுங்கறதே ஒரு சந்தோஷம்தான.. கூடவே ஒரு அங்கீகாரம் கிடைச்சா இன்னும் நல்லா எழுதணும்னு மக்கள் நினைப்பாங்கல்ல.. நண்பர்களை சந்தோஷப்படுத்தி பாக்குறதை விட உலகத்துல பெரிய விஷயம் ஏதும் இருக்கா என்ன..?


நான் பட்டாம்பூச்சி விருது கொடுக்கும் நண்பர்கள்..
புதிய பதிவர்களைத் தேடிப்பிடித்து ஊக்குவிப்பவர். குறைவாக எழுதினாலும் நல்ல பதிவுகளை எழுதுபவர். பதிவுலகில் நான் மட்டுமே படித்து வந்த என் பதிவுகளை மற்றவரும் அறியச் செய்தவர். இவருடைய காதல் கவிதைகள் ரொம்ப அருமையாக இருக்கும்.
ரொம்ப ஜாலியான மனிதர். மற்றவர்களை ஓட்டுவது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். மும்பையில் வேலை பார்க்கிறார். இவருடைய கற்பனை கவிதைகளும், கார்ட்டூன் குசும்புகளும் அட போட வைக்கும்.
போலிஸ் என்பதையும் தாண்டி எனக்கும் ராமிடம் பிடித்த விஷயம் -நல்ல மனிதர். தீடிர்னு காதல் கவிதை எழுதுவார். அடுத்த நாளே நாட்டுப் பற்றோட சல்யூட் வைப்பார். இன்னொரு முறை தன்னை அசத்திய மனிதர்கள் பற்றி.. எல்லாம் எழுதுபவர். பழமொழியில் சதம் கண்டவர்.
திருப்பூரில் இருந்து எழுதும் நண்பர் சொல்லரசன் சமூகத்தின் மீது தீராத கோபம் கொண்டவர். இவருடைய எல்லாப் பதிவுகளுமே ஏதோ ஒரு வகையில் அரசியல் மீதான கோபம் கொண்டதாகவே இருக்கும். கொஞ்சமாக, ஆனால் காட்டமாக எழுதுபவர்.
புகைப்படக் கலையில் அலாதி விருப்பம் கொண்டவர். யாரும் தொடாத தளங்களை பற்றி திடீர்னு கவிதைகள் எழுதுவார். அவ்வப்போது கதைகளும்... கொஞ்சம் அரசியல் கோபமும் உண்டு.
இளைஞர். சிவகாசியில் இருப்பவர். வாழ்க்கையின் கஷ்டங்களுக்கு இடையே தன்னுடைய விருப்பங்களை காக்க போராடி வருபவர். வித விதமான படங்களாக தேடி பதிவிடுவார். நகைச்சுவையாக படிக்க இவரது தளத்துக்கு சென்றால் போதும். கவிதைகளும் தத்துவமும் கூட உண்டு.


ஏய்.. ஏய்.. நிப்பாட்டு.. மூணு பேருக்குத்தான கொடுக்கணும்.. நீ பாட்டுக்கு கொடுத்துகிட்டே போறன்னு நினைக்காதீங்க நண்பா.. என்னைய விட்டா எல்லாருக்கும் கொடுத்துருவேன்.. அப்புறம் நம்ம நண்பர்கள் விருது கொடுக்க ஆள் இருக்க மாட்டாங்கலேங்குற ஒரே காரணத்துக்காக இத்தோட நிப்பாட்டிக்குறேன்.. மத்தபடி இந்த விருது என்ன பண்ணனும்.. எப்படி கொடுக்கணும்.. எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சதாத்தான் இருக்கும்.. பட்டாம்பூச்சி விருத என்ன பண்ணனும்னு கேக்குறவங்க வேத்தியனோட இந்தப் பதிவ படிங்க.. விருது பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.. !!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துறை
போடுங்க..)

83 comments:

லோகு said...

//கூடவே கொஞ்சம் பொது அறிவையும் வளர்ப்போம்னுதான். //

பேராசிரியர் எப்பொழுதும் பேராசிரியர்தான்..


விருதுக்கு வாழ்த்துக்கள்..

Raju said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...
கூடவே,பட்டாம்பூச்சி பற்றி நாயகன் கமல் ரேஞ்சுக்கு விளக்கமளித்த பாண்டி அண்ணனுக்கு
கூடுதல் வாழ்த்துக்கள்.
உண்மைதான்..அடுத்தவங்கள சந்தோசப்படுத்தறதுதான் ரொம்ப பெரிய விஷயண்ணே...

Anbu said...

நன்றி அண்ணா சொல்ல வார்த்தையில்லை அண்ணா..

Anbu said...

அண்ணா நம்மளோட பதிவிற்கு கொஞ்சம் வாங்களேன்..

Anbu said...

பட்டாம் பூச்சி விருது கொடுத்த எங்கள் தல-க்கு நன்றிகள் கோடி..

RAMYA said...

பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் கார்த்திகைபாண்டி !!

உங்களிடம் இருந்து பட்டாம்பூச்சி விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் !!

Anonymous said...

வாழ்த்துக்கள்... கொடுத்தவருக்கும்.. கிடைத்தவர்களுக்கும்!

வினோத் கெளதம் said...

பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் கார்த்திகைபாண்டி !!

உங்களிடம் இருந்து பட்டாம்பூச்சி விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் !!

குடந்தை அன்புமணி said...

பட்டாம்பூச்சி விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

குமரை நிலாவன் said...

பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் கார்த்திகைபாண்டி !!

உங்களிடம் இருந்து பட்டாம்பூச்சி விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் !!

நையாண்டி நைனா said...

விருது கொடுத்த கார்த்திகை பாண்டியனுக்கு நன்றி.

விருது வாங்கிய சக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எனகென்னமோ இது நேற்றே கொடுக்க நினைச்சி இன்னிக்கு கொடுத்த மாதிரி இருக்கு. ஏப்ரல் முதல் தேதி குடுக்காமே இன்னிக்கு கொடுத்ததற்கு மற்றும் ஒரு நன்றி.

நையாண்டி நைனா said...

/*அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். அமெரிக்காவில் காணப்படும் மேற்குக் குட்டிநீலம் எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும். */

இந்த வெவரமெல்லாம் இருக்கட்டும். நீங்க பாடம் எடுக்கும்போது முன் பெஞ்சிக்காரன் விடும் கொட்டாவி எவ்வளவு பெருசா இருக்கும் என்று சொன்னா மாணவச் செல்வங்களுக்கு பயன் உள்ளதா இருக்கும்.

ஆதவா said...

ஆஹா....... பட்டாம்பூச்சி குறித்த (சுட்ட) தகவல் அருமை!!! 28 செ.மீ யில் பட்டாம்பூச்சியா.... அட யப்பா!!!

விருது பெற்ற அறுவருக்கும் வாழ்த்துகள்!!

அதென்ன உறைங்க??? கருத்துறை??? ஹி ஹிஹி...
-----------

ஒவ்வொரு பதிவரையும் நன்கு உள்வாங்கி கொடுத்திருக்கிறீர்கள்! நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எப்படி எல்லாரையும் படிப்பது , நேரம் கிடைக்கமாட்டேங்குதே எனும் அவஸ்தை இன்னும் என்னுள் உள்ளது!

வாழ்த்துக்கள் உங்களுக்கும், அறுவர்களுக்கும்!!1

நையாண்டி நைனா said...

/*அதுக்கு முன்னாடி.. என்ன இது சின்னப்புள்ளத்தனமா உங்களுக்கு உள்ளேயே விருது கொடுத்து வெளையாண்டுக்கிட்டுன்னு கேள்வி கேக்குறவங்களுக்கு.. */

உள்ளுக்குள்ளே பாராட்டாம தான் இப்ப பல கழகங்களே டரியலாகி கிடக்கு என்றும் சொல்லுங்க.

/*தப்பில்ல.. நாலு பேருக்கு சந்தோஷம் கிடைக்கும்னா எதுவும் தப்பில்ல..*/

"முதல்லே இந்த டைலாக்கு எழுதினவரை "போட்டா" நாலுகோடி பேரு சந்தோசப்படுவாங்கடே" என்று சவுண்டு வருது...

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said..
பேராசிரியர் எப்பொழுதும் பேராசிரியர்தான்..//

நன்றி லோகு.. நம்ம நண்பர்கள் சந்தோஷப்பட்டா சரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said...
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...கூடவே, பட்டாம்பூச்சி பற்றி நாயகன் கமல் ரேஞ்சுக்கு விளக்கமளித்த பாண்டி அண்ணனுக்கு கூடுதல் வாழ்த்துக்கள்.
உண்மைதான்..அடுத்தவங்கள சந்தோசப்படுத்தறதுதான் ரொம்ப பெரிய விஷயண்ணே...//


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said..
நன்றி அண்ணா சொல்ல வார்த்தையில்லை அண்ணா..//

நன்றி எல்லாம் எதுக்கு அன்பு.. நல்லா எழுதுறீங்க.. கொடுத்தோம்.. வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//RAMYA said..
பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் கார்த்திகைபாண்டி !!
உங்களிடம் இருந்து பட்டாம்பூச்சி விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் !!//

நன்றி தோழி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
வாழ்த்துக்கள்... கொடுத்தவருக்கும்.. கிடைத்தவர்களுக்கும்!//

வாழ்த்துக்கு நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtahm said..
பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் கார்த்திகைபாண்டி !!உங்களிடம் இருந்து பட்டாம்பூச்சி விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் !!//

ஏன்ப்பா.. ரம்யாக்கா எழுதுனத அப்படியே காப்பியடுச்சு ஒட்டிட்டியா? சோம்பேறிப் பையா.. இருந்தாலும்.. நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said..
பட்டாம்பூச்சி விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.//

வருகைக்கு நன்றி நண்பா.. வாழ்த்துக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன் said..
பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் கார்த்திகைபாண்டி !!உங்களிடம் இருந்து பட்டாம்பூச்சி விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் !!//

(ஐயோ.. கொஞ்சமாவாது மாத்துங்குப்பா..பாண்டி பாண்டின்னு அந்தரத்துல தொங்குது பேரு.. ) நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
எனகென்னமோ இது நேற்றே கொடுக்க நினைச்சி இன்னிக்கு கொடுத்த மாதிரி இருக்கு. ஏப்ரல் முதல் தேதி குடுக்காமே இன்னிக்கு கொடுத்ததற்கு மற்றும் ஒரு நன்றி.//

நான் நினச்சேன் நண்பா.. இப்படி யாரும் கேட்டுரக் கூடாதேன்னு தான் ஒரு நாள் தள்ளி இன்னைக்கு கொடுத்தேன்.. ஹி ஹி ஹி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
அதென்ன உறைங்க??? கருத்துறை??? ஹி ஹிஹி...//

எங்கயோ பொட்டி தட்டும்போது "ர" நாறிப்போச்சு.. சீ.. மாறிப்போச்சு நண்பா..

Anonymous said...

பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் கார்த்திகைபாண்டி !!
உங்களிடம் இருந்து பட்டாம்பூச்சி விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் !!

வேத்தியன் said...

வாழ்த்துகள், விருது கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும்...

வேத்தியன் said...

ன்னைய விட்டா எல்லாருக்கும் கொடுத்துருவேன்.. அப்புறம் நம்ம நண்பர்கள் விருது கொடுக்க ஆள் இருக்க மாட்டாங்கலேங்குற ஒரே காரணத்துக்காக இத்தோட நிப்பாட்டிக்குறேன்..//

அதூஊஊஊஊ....
(தல ஸ்டைல்...)
:-)

வேத்தியன் said...

அப்புறம் நண்பா ஒரு முக்கியமான விஷயம்...
அந்த தல படத்த மாத்துங்க தல...
ஒரே படத்த பாத்து பாத்து போரடிக்குது...
:-)
தல வாழ்க, வால் ஒழிக...

கார்த்திகைப் பாண்டியன் said...

//மகா said..
பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் கார்த்திகைபாண்டி !!
உங்களிடம் இருந்து பட்டாம்பூச்சி விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் !!//

நன்றி சகோதரி.. (நீங்களுமா..அவ்வ்வ்வ்...)

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said..
வாழ்த்துகள், விருது கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும்...//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said..
அப்புறம் நண்பா ஒரு முக்கியமான விஷயம்...அந்த தல படத்த மாத்துங்க தல...//

சொல்லிட்டீங்கல்ல.. செஞ்சுடுவோம்..

நையாண்டி நைனா said...

என்னோட ஒரு கேள்வியை வேண்டும் என்றே சாயிசில் விட்ட உங்களோட பெரிய அரசியலை வன்மை, வன்மையாக கண்டிக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

கோவப்படாதீங்க நைனா.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
இந்த வெவரமெல்லாம் இருக்கட்டும். நீங்க பாடம் எடுக்கும்போது முன் பெஞ்சிக்காரன் விடும் கொட்டாவி எவ்வளவு பெருசா இருக்கும் என்று சொன்னா மாணவச் செல்வங்களுக்கு பயன் உள்ளதா இருக்கும்.//

நம்ம கிளாஸ்ல தூங்குற பய புள்ளைகளை எல்லாம் பின்னாடி அனுப்பிடுவேன் நண்பா.. நாலஞ்சு பலியாடுகள் இருக்கு.. நாம எவ்வளவு நடத்துனாலும் தாங்குவாங்க.. அம்புட்டு நல்ல பயபுள்ளைங்க.. ஏதோ அவங்கள நம்பித்தான் நம்ம பொழப்பே ஓடுது..

அத்திரி said...

பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள்

சொல்லரசன் said...

எனக்கு விருதுதா?ஆச்சரியமாக உள்ளது பதிவு எழுதவந்து மூன்று மாதம்
முடியாதநிலையில் ....விருது நன்றிங்க கா.பா.
//கொஞ்சமாக, ஆனால் காட்டமாக எழுதுபவர்.//
நன்றாக எழுதமுயற்சி செய்கிறேன்.

அகநாழிகை said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
எனக்கு விருதுதா?ஆச்சரியமாக உள்ளது பதிவு எழுதவந்து மூன்று மாதம் முடியாத நிலையில் .... விருது நன்றிங்க கா.பா.//

நான் வந்தே நாலு மாசம் தான் நண்பா ஆகுது. அதனால என்ன.. நல்லா எழுதுற மக்களுக்கு, நம்ம நண்பர்களுக்குத் தானே தரோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை said..
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...//

நன்றி நண்பா..

மேவி... said...

romba nantringa....
tamilyil oru 25 padivu thaan pottu iruppen...
atharkul nanum oru butterfly ah....
santhosama irukku.....

ella pugalum kadavulukke .....

மேவி... said...

sorrynga tamilyil ithuvari 46 padivugal

innum 4 padivu irukku 100 adikka

Anonymous said...

விருதுக்கு வாழ்த்துக்கள்..

Anonymous said...

ready

Anonymous said...

1

Anonymous said...

2

Anonymous said...

3

Anonymous said...

4

Anonymous said...

5

Anonymous said...

me the 50

ஆ.ஞானசேகரன் said...

//நண்பர்களை சந்தோஷப்படுத்தி பாக்குறதை விட உலகத்துல பெரிய விஷயம் ஏதும் இருக்கா என்ன..? //

மிக்க மகிழ்ச்சி நண்பரே... உங்களுக்கும் உங்களால் பகிரப்பட நண்பர்கள் அனைவருக்கும் பட்டம்பூச்சி வாழ்த்துகள்...........

ஆ.ஞானசேகரன் said...

மீண்டும் விருதுக்கு வாழ்த்துகள்

சம்பத் said...

விருதுகள் வழங்கிய கா.பா வுக்கும் , விருதுகள் பெற்ற பிரேம்குமார் சண்முகமணி, நையாண்டி நைனா,ராம். CM,சொல்லரசன்,Mayvee மற்றும்
அன்பு ஆகியோருக்கு வாழ்த்திக்கள். தொடர்ந்து நல்ல எழுத்துக்களை எதிர்பர்த்துக்கொண்டிருக்கிறேன்....

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

புதியவன் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//Mayvee said..
romba nantringa..tamilyil oru 25 padivu thaan pottu iruppen...
atharkul nanum oru butterfly ah....
santhosama irukku.....
ella pugalum kadavulukke .....//

வாழ்த்துக்கள் நண்பா.. இன்னும் நெறைய நல்ல பதிவுகளை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த்.. //

நூறோ, அம்பதோ.. எப்போதும் உடன் வரும் நண்பர் ஆனந்துக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said..
மிக்க மகிழ்ச்சி நண்பரே... உங்களுக்கும் உங்களால் பகிரப்பட நண்பர்கள் அனைவருக்கும் பட்டம்பூச்சி வாழ்த்துகள்...........//

வாழ்த்துக்கு நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said..
விருதுகள் வழங்கிய கா.பா வுக்கும் , விருதுகள் பெற்ற பிரேம்குமார் சண்முகமணி, நையாண்டி நைனா,ராம். CM,சொல்லரசன்,Mayvee மற்றும் அன்பு ஆகியோருக்கு வாழ்த்திக்கள். தொடர்ந்து நல்ல எழுத்துக்களை எதிர்பர்த்துக்கொண்டிருக்கிறேன்....//

தொடரும் ஆதரவுக்கு நன்றி நண்பா...

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said..
வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said..
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...//

நன்றிகள் பல நண்பரே...

ச.பிரேம்குமார் said...

//இவருடைய காதல் கவிதைகள் ரொம்ப அருமையாக இருக்கும்.
//

இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது :)

ச.பிரேம்குமார் said...

பிடித்த பதிவர்கள் வரிசையில் என்னை நினைத்து கொண்ட பாண்டியனுக்கு வாழ்த்திய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி :)

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்களை எப்படி மறக்க முடியும் பிரேம்.. நீங்கள் இல்லாமல் போய் இருந்தால் நான் வலையில் தொடர்ந்து எழுதி இருப்பேனா என்றே தெரியவில்லை.. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..

Anonymous said...

வாழ்த்துக்கள்!
அண்ணா.. என்ன இது??? உங்க பக்கம் வரமல் இரும்மனா?? எல்லம் படிசிடுவன்!
கொஞ்சம்பிஸி அதுதான்!

தமிழ் மதுரம் said...

நீங்கள் எப்பவுமே பேராசிரியர் தான் என்பதை நிருபித்திட்டீங்கள்...வாழ்த்துக்கள் நண்பா....தொடர்ந்தும் எழுதுங்கள்...!

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
வாழ்த்துக்கள்!அண்ணா.. என்ன இது??? உங்க பக்கம் வரமல் இரும்மனா?? எல்லம் படிசிடுவன்!
கொஞ்சம்பிஸி அதுதான்!//

சும்மா கிண்டல் பண்ணினேன் கவின்.. சங்கடம் வேண்டாம்.. நன்றி.. அண்ணான்னு கூப்பிட்டீங்க பாருங்க.. ரொம்ப நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நீங்கள் எப்பவுமே பேராசிரியர் தான் என்பதை நிருபித்திட்டீங்கள்...
வாழ்த்துக்கள் நண்பா....தொடர்ந்தும் எழுதுங்கள்...!//

வாங்க கமல்.. வாழ்த்துக்கு நன்றி..

வால்பையன் said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும்
உங்களிடம் வாங்கியவர்களுக்கும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப ரொம்ப நன்றி நண்பா.. உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப நாளாவே நினச்சிக்கிட்டு இருக்கேன்.. கூடிய சீக்கிரம் பேசிடுறேன்..

ராம்.CM said...

நன்றி கார்த்திகைப் பாண்டியன்! விருது கொடுக்கும் அளவுக்கு என் பதிவுக்கு ஆதரவு தந்தமைக்கு மகிழ்ச்சி! ஒன்னேஒன்னுதான் புரியல.... "நான் நல்லவனா????"

கார்த்திகைப் பாண்டியன் said...

சத்தியமா நீங்க ரொம்ப நல்லவர் ராம்.. வாழ்த்துக்கள்..

Muniappan Pakkangal said...

Pattaam poochi viruthu paththi padichen,unga pathivukku ivalavu commenta,athiruthu thambi.Vazhthukkal.

தேவன் மாயம் said...

பட்டாம் பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள்!

Karthik said...

vaalthukkal.. treat eppa? en pera vera vachirukeenga!! So kandippa treat venum!!

யாழினி said...

மற்றவர்களின் சந்தோஷத்தை பார்த்து தானும் மகிழ்பது தான் உண்மையான சந்தோஷம். சரியாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள் பட்டாம்பூச்சி விருது வென்றவர்களுக்கு!

butterfly Surya said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//muniappan pakkangal said..
Pattaam poochi viruthu paththi padichen,unga pathivukku ivalavu commenta,athiruthu thambi.Vazhthukkal.//

ரொம்ப நன்றிண்ணே... நம்ம ஊருக்காரர் வாழ்த்துக்கள் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//thevanmayam said..
பட்டாம் பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள்!//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthik said..
vaalthukkal.. treat eppa? en pera vera vachirukeenga!! So kandippa treat venum!!//

கண்டிப்பா குடுத்துடலாம் நண்பா.. அடிக்கடி வந்து போங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//யாழினி said..
மற்றவர்களின் சந்தோஷத்தை பார்த்து தானும் மகிழ்பது தான் உண்மையான சந்தோஷம். சரியாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள் பட்டாம்பூச்சி விருது வென்றவர்களுக்கு!//

நன்றி சகோதரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வண்ணத்துப்பூச்சியார் said..
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...//

வாங்க சூர்யா.. வாழ்த்துக்கு நன்றி..

ஹேமா said...

பாண்டியன்,நான் லீவில இருந்ததால வரமுடில.இனிய வாழ்த்துக்கள்.
பட்டாம்பூச்சி உங்களுக்கும் வாங்கிய பட்டாம் பூச்சிகளுக்கும்.