April 6, 2009

அயன் - திரை விமர்சனம்...!!!


சுரேஷ் - பாலா (சுபா..) தமிழின் மாத நாவல் எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். ஆக்சன் காட்சிகளை இவர்களின் எழுத்தில் படிக்கும்போது நேரில் பார்ப்பது போலவே இருக்கும். இவர்களின் சூப்பர் நாவல் அட்டைப்படத்தின் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர்தான் கே. வி. ஆனந்த். தனது ஒளிப்பதிவில் முதல் படமான தேன்மாவின் கொம்பத்துக்காக தேசிய விருது வாங்கியவர். இவர்களுடைய நட்பு இன்று வரை தொடர்வது சந்தோஷம். ஆனந்த் இயக்கிய முதல் படமான "கனா கண்டேன்" சுபாவின் பூமிக்குள் புதைந்தவன் என்னும் நாவலின் கதைதான். இந்த நண்பர்கள் கூட்டணியுடன் சூர்யா, ஹாரிஸ், சன் பிக்சர்ஸ், AVM முதலான பெரும் தலைகள் இணைந்து இருக்கும் பர பர ஆக்சன் படம்தான் "அயன்".


வெளிநாட்டில் இருந்து வைரம், புதுப்பட சிடி என்று சகலத்தையும் கடத்தி வருபவர் சூர்யா. தன் அப்பாவின் நண்பரான பிரபுவுக்காகவும், த்ரில்லுக்காகவும் இந்த கடத்தல் வேலைகளை செய்கிறார். இவர்களின் தொழில்ரீதியான எதிரி ஆகாஷ். பணத்துக்காக தன் அப்பாவையே கொல்லும் அளவுக்கு மோசமான வில்லன். பிரபுவின் கூட்டத்தில் புதிதாக சேரும் ஜெகன் சூர்யாவின் நண்பன் ஆகிறார். ஜெகனின் தங்கை தமன்னா சூர்யாவைக் காதலிக்கிறார். உண்மையில் ஜெகன் ஆகாஷின் ஆள். பிரபுவை கஸ்டம்சில் போட்டுக் கொடுக்க முயற்சிக்கையில் சூர்யா காப்பாற்றி விடுகிறார். உண்மை தெரிந்து நண்பர்கள் பிரிகிறார்கள்.


பணத்துக்காக ஆசைப்பட்டு வயிற்றில் போதை மருந்துடன் மலேஷியா போகிறார் ஜெகன். அதே விமானத்தில் சூர்யாவும் பயணம் செய்கிறார். வயிற்றுக்குள் போதை மருந்து காப்சூல் உடைந்து போக உயிருக்கு போராடும் ஜெகனை சூர்யா காப்பாற்ற முயல்கிறார். ஆனால் ஆகாஷின் ஆள்கள் ஜெகனைக் கடத்தி போதை மருந்தை எடுப்பதற்காக வயிறைக் கிழித்து கொன்று போடுகிறார்கள். ஊர் திரும்பும் சூர்யா கஸ்டம்ஸ் ஆபிசர் பொன்வண்ணன் உதவியுடன் ஆகாஷின் திட்டங்களை தவிடு பொடியாக்குகிறார். வில்லன் சூர்யாவைக் கொல்ல முயற்சிக்க அதில் பிரபு பலியாகிறார். கடைசியில் வில்லனைக் கொன்று சூர்யா வாழ்க்கையில் நல்வழிக்கு திரும்புவதுதான் கதை.


செம அதிரடியாக, ப்ரெஷாக... சூர்யா. பின்னி எடுக்கிறார். நகைச்சுவை பகுதிகளை ரொம்ப எளிதாக ஹாண்டில் செய்து உள்ளார். சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார். எல்லா ஹேர் ஸ்டைல்களும் அவருக்கு அழகாக இருக்கிறது. உடைகளும் செம மாட்சிங். உள்ளாடையோடு அறிமுகம் ஆகிறார் தமன்னா. (ஆதவா.. நோட் பண்ணுப்பா..) கல்லூரிக்கு பிறகு இந்தப் படத்தில் தான் எனக்கு அவரை பிடித்து இருக்கிறது. பாடல்களுக்கு பயன்பட்டு இருக்கிறார்.


படத்தின் முக்கியமான நபர் ஜெகன் ( விஜய் டிவி கடவுள் பாதி மிருகம் பாதி புகழ் நண்டு) . கேரக்டர் ஒரு மாதிரி என்றாலும் பின்னி எடுத்துள்ளார். இவர் பேசும் ஒரு வரி வசனங்கள் சக்க காமெடி. கடைசியில் நண்பன் கண் முன்னாடியே உயிர் விடும்போது மனதைத் தொடுகிறார். வில்லன் ஆகாஷ் ஓகே ரகம்தான். சூர்யாவின் அம்மாவாக ரேணுகா . பிரபு நியாய சிந்தனைகள் கொண்ட கடத்தல்வாதியாக வருகிறார். கருணாசும் உள்ளார்.


படத்தின் உண்மையான ஹீரோ - ஒளிப்பதிவாளர் M.S. பிரபு. டைட்டில் பறவைப் பார்வையில் வெவ்வேறு நாடுகளை காண்பிக்கும்போது ஆரம்பிக்கிறது அதகளம். ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் பயன்படுத்தி இருக்கும் கலர் டோன்கள் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசு. காங்கோவில் நடைபெறும் சேஸ்.. மலேஷியா கார் சேஸ் என்று காமிரா வித்தை காட்டுகிறது. பாடல்களை படமாக்கி இருக்கும் விதம்.. அட்டகாசம். பாலைவனம், நீண்ட வானம், அந்திச் சூரியன், கடல் எல்லாம் ஒன்று சேரும் நெஞ்சே நெஞ்சே பாடலில் அசத்தி உள்ளார்கள். கனல் கண்ணன் சண்டைக் காட்சிகளை தூளாக அமைத்துள்ளார். முதல் சேஸ் Casino royale, ong bak, rumble in the bronx போன்ற படங்களை நினைவு படுத்தினாலும் நன்றாக எடுத்துள்ளார்கள். ஹாரிஸின் இசையில் பாடல்கள் ஹிட். ராஜீவனின் கலையும் ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்தை கூட்டுகின்றன.


படத்தின் மிகப் பெரிய மைனஸ் - லாஜிக்கே இல்லாதது...

* பல வேடங்களில் சூர்யா கடத்தல் செய்வது நம்பும்படி இல்லை..

* அண்ணன் ஜெகன் தங்கையின் காதலை பார்க்கும் விதம்...

* சென்னை பாஷை சூர்யாவுக்கு சுத்தமாக பொருந்த வில்லை..

* தேவையே இல்லாமல் வரும் ஹனி ஹனி பாடல்..

* கண்முன்னே வில்லன் ஒரு சின்ன பெண்ணை நாசம் செய்வதை சூர்யா வேடிக்கை பார்த்துவிட்டு வீடியோ மட்டும் எடுத்து வருவது..


இப்படி பல கேள்விகள் இருந்தாலும் அதை அனைத்தையும் மறக்கடித்து விடுகிறது.. கே. வி. ஆனந்தின் திரைக்கதை. காங்கோவில் நடக்கும் ராணுவக் கொடுமைகளை குழந்தைகள் புட்பால் விளையாடும் ஒரே காட்சியில் புரிய வைத்து விடுகிறார். (தேவை இல்லாமல் சிட்டி ஆப் காட் படம் ஞாபகத்திற்கு வருகிறது...) சின்ன சின்ன உத்திகளை படம் முழுக்க சுவாரசியமாக பயன்படுத்தி உள்ளார். குறிப்பாக.. குல்பி ஐஸின் மணிச் சத்தம் மூலம் சூர்யா வில்லனை அடையாளம் காணும் காட்சி. அதே போல் படம் முழுவதும் வரும் அந்த "ரீவைண்ட்" யுத்தியும் அருமை. மொத்தத்தில் ஒரு நல்ல ஆக்சன் படம் பார்த்த திருப்தி.

அயன் - அதிரடி அசத்தல்..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

67 comments:

ஆ.ஞானசேகரன் said...

படம் பார்த்தாச்சு, பதிவும் போட்டாச்சு... நல்லது நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை.. உங்கள் விமசனதிற்கு பின் பார்க்க தூண்டுகின்றது

Anbu said...

உங்கள் விமர்சனம் அருமை..
நானும் பதிவினை இட்டுவிட்டேன் அண்ணா...

kishore said...

நான் நேத்து தான் படம் பார்த்தேன்... குடுத்த காசு வீனா போகல... சூர்யா அம்மாவாக நடித்தவர் ரோகினி இல்லை ரேணுகா...

நையாண்டி நைனா said...

அதுக்குள்ளே படமும் பார்த்து விமர்சனமும் போட்டாச்சா.... நான் தான் லேட்டா.... வரேன் வரேன் நம்மோளோட "புதிய" சிந்தனைகளோட...

Suresh said...

தலைவா :-) சூப்பர் விமர்ச்னம்

Suresh said...

@ கிஷோர்

nan sonnan la machan padam super nee than vimarsanam padichitu padam nalla illai na kelampiduvanu sonna

Anonymous said...

Can anyone tell how is this works?

If AVM is producing the film, what is the role of Sun pictures? Is Sun picture the sole distributor of the movie???

yaaravathu en ayyappaatti neekungalen.. :-)

வினோத் கெளதம் said...

Super Review Nanba..:)

Raju said...

கே.வி.ஆனந்த விட நீங்க கலக்குறீங்களே..

Muniappan Pakkangal said...

Nalla vimarsanam Karthihai pandian.You've pointed out the negative aspects also, making u a neutral person.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said..
நான் இன்னும் படம் பார்க்கவில்லை.. உங்கள் விமசனதிற்கு பின் பார்க்க தூண்டுகின்றது//

நன்றி நண்பரே.. படம் பாருங்க.. நல்லா இருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
உங்கள் விமர்சனம் அருமை..
நானும் பதிவினை இட்டுவிட்டேன் அண்ணா...//

நன்றி அன்பு.. உங்கள் பதிவை நானும் படித்து விட்டேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//KISHORE said..
நான் நேத்து தான் படம் பார்த்தேன்... குடுத்த காசு வீனா போகல... சூர்யா அம்மாவாக நடித்தவர் ரோகினி இல்லை ரேணுகா...//

நன்றி நண்பா.. மாத்திடுறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
அதுக்குள்ளே படமும் பார்த்து விமர்சனமும் போட்டாச்சா.... நான் தான் லேட்டா.... வரேன் வரேன் நம்மோளோட "புதிய" சிந்தனைகளோட...//

சீக்கிரமா வாங்க நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said..
தலைவா :-) சூப்பர் விமர்ச்னம்//

நன்றி சுரேஷ்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
Can anyone tell how is this works?
If AVM is producing the film, what is the role of Sun pictures? Is Sun picture the sole distributor of the movie???yaaravathu en ayyappaatti neekungalen.. :-)//

they are the sole distributors boss.. buying the film at a cost and they distribute.. the gain is also shared aith the producers..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
Super Review Nanba..:)//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said...
கே.வி.ஆனந்த விட நீங்க கலக்குறீங்களே..//

ரொம்ப புகழாதீங்க நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Muniappan pakkangal said..
Nalla vimarsanam Karthihai pandian.You've pointed out the negative aspects also, making u a neutral person.//

நம்ம கடமை நண்பா.. நன்றி...

narsim said...

பார்க்கவேண்டிய படமோ என எண்ணவைத்துவிட்டீர்கள்.

நல்ல வரிகள்

புல்லட் said...

நல்லாயிருக்கு விமர்சனம்...
அப்ப படத்த பாத்திடுவம் :)
நன்றி!

Unknown said...

//narsim said..
பார்க்கவேண்டிய படமோ என எண்ணவைத்துவிட்டீர்கள்.
நல்ல வரிகள்//

வருகைக்கு நன்றி நர்சிம்..

Unknown said...

//புல்லட் பாண்டி said..
நல்லாயிருக்கு விமர்சனம்...
அப்ப படத்த பாத்திடுவம் :)
நன்றி!//

வாங்க பாண்டி.. படம் பாருங்க.. நன்றி..

Anonymous said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை.. விமர்சனம் அருமை தலைவா.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க ஆனந்த்.. நன்றி நண்பா..

அகநாழிகை said...

கலக்கறீங்க நண்பா.

கார்த்திகைப் பாண்டியன் said...

என்ன வாசு.. இப்படி ஒரு வார்த்தைல சொன்னா எப்படி..

மேவி... said...

sir neenga professor ; student madiri ella padathaiyum parthuvittu vimarsam eluthuringa...
kalakkal thaan ponga....
naanum padathai parthu vitten....

hari said...

sir im hariharan(3rd year)
very nice review.. i saw film twice..

லோகு said...

அயன் படத்துக்கு ஏற்கனவே 165 பேர் விமர்சனம் எழுதி இருந்தாலும், உங்க விமர்சனம் புதுசா, நல்லா இருக்கு.. ஓட்டும் போட்டாச்சு

Prabhu said...

நாளைக்கு போறேன். பாத்துட்டு சொல்றேன்.

குமரை நிலாவன் said...

உங்கள் விமர்சனம் அருமை..

படத்தை பார்க்க தூண்டுகிறது

ஆதவா said...

படத்தோட முழுவிபரம், ப்ளஸ் மைனஸ் எல்லாமே அழகாக அம்சமாக கொடுத்திருக்கீங்க தல.

தமண்ணாவைப் பற்றி ரொம்ப எதிர்பார்த்தேன்... ஏப்ரல் ஒண்ணு பதிவு மாதிரி ஏமாத்திட்டீங்க.

ரீவைண்ட் உத்தி என்பது கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்னு நினைக்கிறேன். படத்தைப் பார்க்கலாம்தான்... நல்லா இல்லாட்டி என்னோட மூணுமணிநேரம் வேஸ்டாயிடுமேன்னு ஃபீல் பண்றேன்!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

கண்ணு வைக்காதீங்க நண்பா.. நான் பாட்டுக்கு சிவனேன்னு ஜாலியா இருக்கேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//hari said...
sir im hariharan(3rd year)
very nice review.. i saw film twice..//

நம்ம மாணவருமா.. நன்றி ஹரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said..
அயன் படத்துக்கு ஏற்கனவே 165 பேர் விமர்சனம் எழுதி இருந்தாலும், உங்க விமர்சனம் புதுசா, நல்லா இருக்கு.. ஓட்டும் போட்டாச்சு//

மதுரைக்கு போய்ட்டதால விமர்சனம் கொஞ்சம் தாமதம் நண்பா.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said..
நாளைக்கு போறேன். பாத்துட்டு சொல்றேன்.//

உங்களை பார்க்க முடியாம போச்சே பப்பு.. கூடிய சீக்கிரம் சந்திப்போம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said..
உங்கள் விமர்சனம் அருமை..
படத்தை பார்க்க தூண்டுகிறது//

பேரை மாத்திட்டீங்களா நண்பா.. இப்ப எல்லாம் ஊரு பேரை சேர்த்து வைக்குரதுதான் பேஷனா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
தமண்ணாவைப் பற்றி ரொம்ப எதிர்பார்த்தேன்... ஏப்ரல் ஒண்ணு பதிவு மாதிரி ஏமாத்திட்டீங்க.//

யோவ் அதுக்கு மேல அந்தப் பிள்ளைய பத்தி சொல்ல படத்துல ஒண்ணுமே இல்லய்யா..

சொல்லரசன் said...

//உள்ளாடையோடு அறிமுகம் ஆகிறார் தமன்னா. (ஆதவா.. நோட் பண்ணுப்பா..) கல்லூரிக்கு பிறகு இந்தப் படத்தில் தான் எனக்கு அவரை பிடித்து இருக்கிறது. பாடல்களுக்கு பயன்பட்டு இருக்கிறார்.//

நீங்களும் அ.உ.த.ர மன்ற உறுப்பினரா.

அத்திரி said...

தமன்னா ஜுரம் எல்லோருக்கும் கொஞ்சம் ஒவராத்தான் அடிச்சிருக்கு

சொல்லரசன் said...

//படத்தின் மிகப் பெரிய மைனஸ் //

இதை "தல" பட விமர்சனத்திலும் எதிர்பார்க்கலாமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
நீங்களும் அ.உ.த.ர மன்ற உறுப்பினரா.//

ஐயோ நண்பா.. பிலீவ் மீ.. எனக்கு இந்த படத்துல அவங்க கிளாமர் காட்டாதனால தான் பிடிச்சது..

மேவி... said...

u didnt reply for my comment. wy so???????

Karthik Lollu said...

padam paarthu naa comment podren!!

Unga review padi

AYAN- Strong as IRON

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
sir neenga professor ; student madiri ella padathaiyum parthuvittu vimarsam eluthuringa...
kalakkal thaan ponga....
naanum padathai parthu vitten....//
கண்ணு வைக்காதீங்க நண்பா.. நான் பாட்டுக்கு சிவனேன்னு ஜாலியா இருக்கேன்..this was actually for you boss.. but somehow i missed out ur name. sorry.. thanks for checking back the replies too..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
இதை "தல" பட விமர்சனத்திலும் எதிர்பார்க்கலாமா?//

கண்டிப்பா நண்பா.. கடமைனா நாங்க கரெக்டா இருப்போம்ல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
அத்திரி.. ஹி ஹி ஹி.. கொஞ்சமா காய்ச்சல் அடிக்கத்தான் செய்யுது நண்பா.. //

ஹி ஹி ஹி.. கொஞ்சமா காய்ச்சல் அடிக்கத்தான் செய்யுது நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

// Karthik Lollu said...
padam paarthu naa comment podren!!
Unga review padi
AYAN- Strong as IRON//

ya ya.. lollu? my students? anymway.. thanks for the comment mate..

Anonymous said...

எங்கடா தல் ஐ கானம்னு பார்த்தன், அயனோடை வந்த்ஹ்டிருக்கீங்க!
படம் கண்டிபா பார்க்கனும்
பாஸ் விமர்சனம் கலக்கல்! ஆனா முடிவை சொல்லமல் விட்டிருக்கலாம்!
புதுசா பார்க் போறவங்களுக்கு நல்லா இருக்கும்!

ச.பிரேம்குமார் said...

//சூர்யாவின் அம்மாவாக ரோகிணி//
அவுங்க பேரு ரேணுகா ;-)

அப்புறம் சூர்யாவுக்கு சென்னை தமிழ் பொருந்தலன்னு ஏன் சொல்றீங்க... அருமையா தானே பேசியிருக்காரு!!

Prabhu said...

அடுத்து வராமலா போயிடுவீங்க! சந்திப்போம்.

நசரேயன் said...

எல்லா ஓட்டும் போட்டுட்டேன், இன்னும் படம் பார்க்கலை

Karthik Lollu said...

Unga student illa.. LOLLUM NAKKALUM blog paiyan!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
எங்கடா தல் ஐ கானம்னு பார்த்தன், அயனோடை வந்த்ஹ்டிருக்கீங்க!
படம் கண்டிபா பார்க்கனும்
பாஸ் விமர்சனம் கலக்கல்! ஆனா முடிவை சொல்லமல் விட்டிருக்கலாம்!
புதுசா பார்க் போறவங்களுக்கு நல்லா இருக்கும்!//

விடுங்க நண்பா.. அடுத்த விமர்சனத்துல சஸ்பென்ஸ் வச்சு சொல்லுவோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
அப்புறம் சூர்யாவுக்கு சென்னை தமிழ் பொருந்தலன்னு ஏன் சொல்றீங்க... அருமையா தானே பேசியிருக்காரு!!//

எனக்கு என்னமோ சூர்யாவுக்கு சென்னை தமிழ் ஒத்து வரலைன்னு தான் நண்பா தோணுது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said..
அடுத்து வராமலா போயிடுவீங்க! சந்திப்போம்.//

கண்டிப்பா நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said..
எல்லா ஓட்டும் போட்டுட்டேன், இன்னும் படம் பார்க்கலை//

ஹா ஹா ஹா.. ஓட்டு போட்டுட்டு படம் பார்க்காம இருந்தா எப்படி.. சீக்கிரம் பாருங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthik lollu said..
Unga student illa.. LOLLUM NAKKALUM blog paiyan!!//

ஓ..ஓ.. சரி நண்பா.. வருகைக்கு நன்றி..

பொன்.பாரதிராஜா said...

//சுரேஷ் - பாலா (சுபா..) தமிழின் மாத நாவல் எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். ஆக்சன் காட்சிகளை இவர்களின் எழுத்தில் படிக்கும்போது நேரில் பார்ப்பது போலவே இருக்கும். இவர்களின் சூப்பர் நாவல் அட்டைப்படத்தின் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர்தான் கே. வி. ஆனந்த். தனது ஒளிப்பதிவில் முதல் படமான தேன்மாவின் கொம்பத்துக்காக தேசிய விருது வாங்கியவர். இவர்களுடைய நட்பு இன்று வரை தொடர்வது சந்தோஷம். ஆனந்த் இயக்கிய முதல் படமான "கனா கண்டேன்" சுபாவின் பூமிக்குள் புதைந்தவன் என்னும் நாவலின் கதைதான்.

எப்படி கார்த்தி இவ்ளோ மேட்டர் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க...உண்மையிலே ஆச்சர்யம்தான்...

பொன்.பாரதிராஜா said...

//செம அதிரடியாக, ப்ரெஷாக... சூர்யா. பின்னி எடுக்கிறார். நகைச்சுவை பகுதிகளை ரொம்ப எளிதாக ஹாண்டில் செய்து உள்ளார். சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார். எல்லா ஹேர் ஸ்டைல்களும் அவருக்கு அழகாக இருக்கிறது. உடைகளும் செம மாட்சிங்.

இப்பவாவது நான் சொன்னத உண்மைன்னு ஒத்துக்குறீங்களா?

கார்த்திகைப் பாண்டியன் said...

நமக்கு பிடிச்ச்சவங்கன்னா தேடி போய் தெரிஞ்சிக்குரதுதான் பாரதி.. உண்மையிலேயே சூர்யா படத்தில் அசத்தி உள்ளார்..

Karthik said...

padam paarthuttu vanthu padikkiren. ok?

நையாண்டி நைனா said...

நாந்தாங்க உங்களோட ஐம்பதாவது பாலோயர்

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthik said..
padam paarthuttu vanthu padikkiren. ok?//

பொறுமையா படிங்க.. கருத்துக்கள் மாறுபடலாம்.. உங்களுக்கு பிடிக்குதான்னு பாருங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
நாந்தாங்க உங்களோட ஐம்பதாவது பாலோயர்//

சந்தோஷம் நைனா.. நன்றிகள் பல.. எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு.. ஆரம்பத்துல எனக்கு கருத்துரைகளே வராது.. அப்புறம் கொஞ்சம் பேர் திரும்பி பார்க்க ஆரம்பிச்சாங்க.. மத்தவங்க தளத்தை பார்க்கும் போதெல்லாம் நூறு இருநூறுன்னு கமெண்ட்ஸ் இருக்கே, நமக்கு ஒரு அம்பது கூடத் தேற மாட்டேங்குதேன்னு கஷ்டமா இருக்கும்.. அப்ப என்னோட கேட்கக் கூடாத கேள்விகள் பதிவுல முதல் தடவையா அம்பதாவது பின்னூட்டம் போட்டது நீங்கதான்.. இன்னைக்கு என்னோட அம்பதாவது பாலோவர் ஆகி இருக்கீங்க.. ரொம்ப ரொம்ப நன்றி நண்பா..