April 29, 2009

கேள்வியும் நானே..பதிலும் நானே..!!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் அத்திரி இந்த தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருந்தார். கிட்டத்தட்ட முப்பது கேள்வி. ரொம்ப யோசிக்க எல்லாம் இல்ல.. மனசுக்கு என்ன தோணுச்சோ, அதை அப்படியே எழுதுறேன்.. படிச்சு பாருங்க..
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஊருல இருக்குற எல்லா முருகன் கோவிலுக்கும், மதுரை பாண்டி கோவிலுக்கும் எங்கம்மா அலையா அலைஞ்சு பெத்தெடுத்த புள்ள நானு.. இப்படி ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வரும்னுதான் என்னோட அம்பதாவது பதிவுல என்னோட பெயர்க்காரணத்தை விரிவா சொல்லி இருக்கேன்.. முடிஞ்சா இங்கே க்ளிக்கி அதையும் படிங்க..
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
சமீபத்தில் என்னுடைய இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழாவில் அழுதேன்.. மூன்று வருடம் என்னுடைய நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.. கண்டிப்பாக எங்கு போனாலும் அவர்களின் நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கும்..
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எங்க வாத்தியார் எல்லாம் அதை கையேழுத்துன்னே சொல்ல மாட்டாங்க.. கோழி கிண்டுறதுன்னுதான் சொல்வாங்க... இந்த லட்சணத்துல நீ எல்லாம் வாத்தியாரான்னு என் நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணும் அளவுக்கு ரொம்ப மோசமா இருக்கும்.. ஆனா எனக்கு என் கையெழுத்து ரொம்ப பிடிக்கும் :-)
4).பிடித்த மதிய உணவு என்ன?
சிக்கன் பிரியாணி
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
வாழ்க்கையில நான் சம்பாதிக்கிற நினைக்கிறது மனிதர்களைத்தான்.. நல்லவங்கன்னு நம்பிக்கை வந்துட்டா கடைசி வரைக்கும் நட்பைத் தொடரனும்னு நினைப்பேன்.. உடனே பழகுனாலும் ரொம்ப நாள் ஆனாலும், அது வாழ்க்கை பூரா கூட வரதா இருக்கணும்.. அவ்வளவுதான்..
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல்.. சின்ன வயசுல இருந்தே கடல் மேல சொல்ல முடியாத காதல் உண்டு.. குறிப்பா கன்னியாகுமரியும், புதுச்சேரி கடலும் ரொம்பப் பிடிக்கும்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்ணத்தான் பார்ப்பேன்.. அதுல ஒரு உண்மை இல்லன்னா நெகிழ்வு தெரியும்..
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என்னோட தன்னம்பிக்கை பிடிக்கும்.. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வெளியே காட்டிக்க மாட்டேன்.. அந்தக் கஷ்டத்த எப்படி கடந்து வரலாம்னுதான் யோசிப்பேன்..

யார் என்ன சொன்னாலும் மூஞ்சிக்கு நேரா மறுத்துப் பேச தெரியாது.. எனக்குத் தெரிஞ்சே சில நேரங்களில் மக்கள் என்னை யூஸ் பண்ணிக்குவாங்க.. அப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என் தேவதையை எங்கமா அப்பா தேடிக்கிட்டு இருக்காங்க.. கிடைச்சதுக்கு அப்புறம்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என்னுடைய உற்ற தோழி.. கிட்டக்க இல்லையேன்னு என்னை மிஸ் பண்ணக்கூடிய ஜீவன் அதுதான்.. பையனா பொரந்ததுக்காக என்னை ரொம்பவே வருத்தப்பட வச்சவங்க..
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
இளம்பச்சை நிறத்தில் சட்டை.. அடர்த்தியான பச்சையில் பேன்ட்..
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மொபைலில்..."ஒரு கல் ஒரு கண்ணாடி.. - சிவா மனசுல சக்தி.."
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கடலலையின் நீல நிறம்
14.பிடித்த மணம்?
மளிகைக் கடையில போய் நிக்குறப்ப என்னன்னு சொல்ல முடியாத ஒரு மணம் வரும்.. அது ரொம்ப பிடிக்கும்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ஆதவா - இளைஞர்... கவிதைகளில் கலக்குபவர். சின்ன வயசுதான்னாலும் கருத்துக்களில் முதிர்ச்சி உண்டு..(பிஞ்சிலே பழுத்தவர்னு கூட சொல்லலாம்.. ஹி ஹி ஹி..) நல்ல நண்பரும் கூட..
டக்ளஸ்... - பாசக்கார பயபுள்ள.. நம்ம ஊரு வேற.. குசும்புக்கு குறைவே கிடையாது.. வந்து கொஞ்ச நாள்லயே நிறைய மக்களை பழகி வச்சிருக்கவர்..
குமரை நிலாவன் - மலேஷியாவில் இருந்து எழுதுபவர்.. அருமையான மனிதர்.. நட்பை மதிப்பவர்.. நாம இந்த சமுதாயத்துக்கு எதாவது செய்யணும் நண்பா என்று அடிக்கடி சொல்பவர்..
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அத்திரியோட அரசியல் பதிவுகளில் இருக்கும் நையாண்டி ரொம்ப பிடிக்கும்.. குறிப்பா இந்தப் பதிவு..
17. பிடித்த விளையாட்டு?
கால்பந்து.. F1.. கிரிக்கட்.. டென்னிஸ்.. எல்லாமே பார்க்க பிடிக்கும்.. கிரிக்கட் விளையாடுவேன்.. ஷட்டிலும்..
18.கண்ணாடி அணிபவரா?
+2 படிக்குறப்பவே வலது கண்ணு அவுட்டு... அப்ப இருந்தே போட்டிருக்கேன்..
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதைத் தொடும் விதத்தில் இருக்கணும்.. இல்லைன்னா போரடிக்காம போகணும்..
20.கடைசியாகப் பார்த்த படம்?
அது ஒரு சோகக் கதை.. அவ்வ்வ்.. மரியாதை..
21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஜெயமோகனின் "ஊமைச் செந்நாய்.." நான் படிக்குற அவரோட முதல் புத்தகம்.. வட்டார வழக்குல இருக்குறதால ரொம்பப் பொறுமையா படிச்சிக்கிட்டு இருக்கேன்..
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
நான் பயன்படுத்துறது காலேஜ் கம்ப்யூட்டர்.. அதனால அதை நோண்ட மாட்டேன்..
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
குழந்தைகள் கிட்ட இருந்து வர எல்லா சத்தமும் பிடிக்கும்..

ரொம்ப எரிச்சல் தரது வாகனங்களோட ஹார்ன் சத்தம்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மதுரையில் இருந்து ஷிம்லா வரை.. எங்கப்பா ரயில்வேயில் இருக்குறதால அது ஒண்ணுதான் மிச்சம்.. மொத்த இந்தியாவையும் காசே குடுக்காம ரயில்ல சுத்தி இருக்கேன்.. கண்டிப்பா நம்ம மக்கள் எல்லாருமே ஒரு தடவையாவது கல்கா டூ ஷிம்லா ரயில்ல போய் பாருங்க.. அவ்வளவு அருமையா இருக்கும்..
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
மிமிக்ரி பண்ணுவேன்.. பாடுவேன்.. காலேஜ்ல தமிழ் மன்றத் தலைவரா இருந்திருக்கேன்..
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சமுதாயத்துல இருக்குற ஏற்றத்தாழ்வு.. கொஞ்ச பேர் பணக்காரனாவும் மீதி எல்லாரும் சோத்துக்கே கஷ்டப்பட்டு.. என்னால இதை ஒத்துக்கவே முடியாது.. இந்த மாதிரி சமயங்கள்லதான் சாமின்னு ஒன்னு இருக்கானே கோபம் வரும்..
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எல்லாரும் நம்மை கவனிக்கனும்னு ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன்.. அது சரி கிடையாது..
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கனும்னு ஆசை உண்டு.. இந்தியால எனக்கு நான் பார்த்த இடத்துல பிடிச்சது.. ஜெய்ப்பூர்..
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
சந்தோஷமா இருக்கணும்.. என்னை சுத்தி இருக்கவங்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்.. போதும்..
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
கேள்வி நமக்கு செல்லாது..
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நாம இங்க, இப்படி பொறக்கனும்னு நாம முடிவு பண்றது கிடையாது.. ஆனா நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும்னு நாம்தான் தீர்மானம் பண்றோம்.. நாலு பேருக்கு நல்லது பண்ண முடியாட்டியும், யாருக்கும் கெட்டது செய்யாம வாழ்ந்தாலே பெரிசு..
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
1. ஆதவா
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

58 comments:

லோகு said...

//.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?மனதைத் தொடும் விதத்தில் இருக்கணும்.. இல்லைன்னா போரடிக்காம போகணும்..//

மரியாதை மாதிரி தானே..

வினோத் கெளதம் said...

கார்த்தி சில பேரின் கேள்வி பதில்கள் படித்தேன் பாஸ்ட் பார்வர்ட் பாணியில்..
அனால் உங்களின் இந்த பதில் கடைசி வரை சுவாரசியம் குறையாமல் படித்தேன்..
நூறு இருந்து இருந்தால் கூட படித்து இருப்பேன் போல் இருக்கிறது..
ஒரு வேலை தெரிந்தவர் என்பதால் வந்த ஆர்வமாக கூட இருக்கலாம்..
எல்லாவற்றையும் மீறி உங்களின் ஆளுமை திறன்..

நான் கேக்க நினைக்கும் 33வது கேள்வி மகேஷ் பத்தி விசரிசிங்கள..:))

சொல்லரசன் said...

//மிமிக்ரி பண்ணுவேன்.. பாடுவேன்.. காலேஜ்ல தமிழ் மன்றத் தலைவரா இருந்திருக்கேன்.. //

இதுவேற இருக்க?

லோகு said...

எல்லா பதில்களும் அருமை..

ஆசிரியருக்கே கேள்வியா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு..
மரியாதை மாதிரி தானே..//

கிழிஞ்சது கிருஷ்ணகிரி..


//எல்லா பதில்களும் அருமை..
ஆசிரியருக்கே கேள்வியா..//

நன்றி லோகு.. இதெல்லாம் பொது வாழ்க்கைல சாதரணமப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
கார்த்தி சில பேரின் கேள்வி பதில்கள் படித்தேன் பாஸ்ட் பார்வர்ட் பாணியில்..அனால் உங்களின் இந்த பதில் கடைசி வரை சுவாரசியம் குறையாமல் படித்தேன்..நூறு இருந்து இருந்தால் கூட படித்து இருப்பேன் போல் இருக்கிறது..ஒரு வேலை தெரிந்தவர் என்பதால் வந்த ஆர்வமாக கூட இருக்கலாம்.. எல்லாவற்றையும் மீறி உங்களின் ஆளுமை திறன்..//

நன்றி நண்பா..

//நான் கேக்க நினைக்கும் 33வது கேள்வி மகேஷ் பத்தி விசரிசிங்கள..:))//

மகேஷ் பற்றி விசாரித்தேன்.. அவர் இங்கே technical assitant ஆக வேலை செய்வதாக சொன்னார்கள்.. சந்திக்க முயல்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
//மிமிக்ரி பண்ணுவேன்.. பாடுவேன்.. காலேஜ்ல தமிழ் மன்றத் தலைவரா இருந்திருக்கேன்.. //
இதுவேற இருக்க?//

அதெல்லாம் காலேஜ் டயத்துல நெறைய சேட்டை பண்ணியிருக்கேன் தலைவரே.. பொறுமையா சொல்றேன்

Anonymous said...

5,7,8,27,32 இதற்கு பதில்கள் ரொம்ப நல்லா இருக்கு...மத்த பதில்கள் ரொம்ப எதார்த்தம்...ஆசிரியர் அல்லவா...அதான் மணியடித்தது போல பதில்கள்...உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா நான் சொல்லும் ஒரு ப்லொக் பாருங்க அவரும் உங்களைப் போல ஒரு விரிவுரையாளர்.. நீங்க நட்பானால் நலம் என நான் எண்ணுகிறேன்..gunathamizh.blogspot.com.. நன்றி தொடர்ந்து நற்பதிவுகள் விழைகிறேன்...

குமரை நிலாவன் said...

முதல்ல நன்றி நண்பா

என்னைய நம்பி இந்த தொடர்
பதிவுக்கு அழைத்ததுக்கு

ஒரு பதிவு எழுதுறதுக்கு
மூன்று நாள் யோசிச்சு
யோசிச்சதுல கால்வாசிகூட
எழுத மாட்டேன் .


ஞாயிற்று கிழமை பதிவு கண்டிப்பாக இருக்கும்
நண்பா

sakthi said...

எங்க வாத்தியார் எல்லாம் அதை கையேழுத்துன்னே சொல்ல மாட்டாங்க.. கோழி கிண்டுறதுன்னுதான் சொல்வாங்க... இந்த லட்சணத்துல நீ எல்லாம் வாத்தியாரான்னு என் நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணும் அளவுக்கு ரொம்ப மோசமா இருக்கும்.. ஆனா எனக்கு என் கையெழுத்து ரொம்ப பிடிக்கும் :-)

athu tats gud

sakthi said...

?இளம்பச்சை நிறத்தில் சட்டை.. அடர்த்தியான பச்சையில் பேன்ட்..

ada superb color pa

sakthi said...

என்னுடைய உற்ற தோழி.. கிட்டக்க இல்லையேன்னு என்னை மிஸ் பண்ணக்கூடிய ஜீவன் அதுதான்.. பையனா பொரந்ததுக்காக என்னை ரொம்பவே வருத்தப்பட வச்சவங்க..

enakum varuthama eruku pa

enna seyya life na appadithan

alagana pathivu

eliya nadai

really gud

குமரை நிலாவன் said...

மிமிக்ரி பண்ணுவேன்.. பாடுவேன்..

இதுவேற இருக்க

சமுதாயத்துல இருக்குற ஏற்றத்தாழ்வு.. கொஞ்ச பேர் பணக்காரனாவும் மீதி எல்லாரும் சோத்துக்கே கஷ்டப்பட்டு.. என்னால இதை ஒத்துக்கவே முடியாது.. இந்த மாதிரி சமயங்கள்லதான் சாமின்னு ஒன்னு இருக்கானே கோபம் வரும்..

பதில்கள் அனைத்தும் அருமை நண்பா

Suresh said...

மச்சி சூப்பர் ;) மாப்பு வீட்டுக்கு வ்ந்து இன்னும் ஒரு த்பா படிச்சுட்டு கருத்து சொல்றேன்

Suresh said...

1.ஆதவா 2. டக்ளஸ்..3. குமரை நிலாவன்

மூணு பேருக்கு வாத்துகள் எல்லாம் நம் நண்பர்களே

வினோத் கெளதம் said...

//மகேஷ் பற்றி விசாரித்தேன்.. அவர் இங்கே technical assitant //

He is a Lecturer..!!
M.E(Manufacturing).

Anonymous said...

நண்பா பின்னி எடுத்திட்டீங்க போங்க. கிட்டதட்ட பல கேள்விகளுக்கு உங்களுடைய பதில் என்னுடன் ஒத்து போகிறது? இப்படி தான் நண்பா இருக்கணும்.

நீங்கள் அழைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்,

Anonymous said...

அப்புறம் நண்பா சின்ன வேண்டுகோள் இந்த பதிவை ஆரம்பித்தவர் நிலவும் அம்மாவும் முடிந்தால் பதிவின் முகப்பில் அவர்களின் பெயர்களை சேர்த்து விடுங்கள்.

தொடர் பதிவை தொடருபர்கள் எல்லோரும் அவர் பெயரை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

ஆ.சுதா said...

எல்லா கேள்விகளுக்கும் சரியா பதில் சொல்லியி புரொபசர்னு நிருபிச்சிட்டீங்க (பிட் ஏதும் அடிக்கலையே)
நல்லா எழுதியிருக்கீங்க கார்த்திகைப் பாண்டியன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழரசி said...
5,7,8,27,32 இதற்கு பதில்கள் ரொம்ப நல்லா இருக்கு...மத்த பதில்கள் ரொம்ப எதார்த்தம்...ஆசிரியர் அல்லவா...அதான் மணியடித்தது போல பதில்கள்...//

ரொம்ப நன்றிங்க

//உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா நான் சொல்லும் ஒரு ப்லொக் பாருங்க அவரும் உங்களைப் போல ஒரு விரிவுரையாளர்.. நீங்க நட்பானால் நலம் என நான் எண்ணுகிறேன்..gunathamizh.blogspot.com.. நன்றி தொடர்ந்து நற்பதிவுகள் விழைகிறேன்...//

இதுல என்னங்க இருக்கு? கண்டிப்பா பாக்குறேன்.. புது நண்பர்கள் கிடைச்சா சந்தோஷமே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
முதல்ல நன்றி நண்பா என்னைய நம்பி இந்த தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு..ஒரு பதிவு எழுதுறதுக்கு மூன்று நாள் யோசிச்சு
யோசிச்சதுல கால்வாசிகூட
எழுத மாட்டேன் .ஞாயிற்று கிழமை பதிவு கண்டிப்பாக இருக்கும்
நண்பா//

குட்.. குட்.. கும் கலக்குங்க நில்லவன்.. உங்க பதிவை ஆவலா எதிர்பார்க்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//sakthi said...
athu tats gud..ada superb color pa..enakum varuthama eruku pa..
enna seyya life na appadithan..
alagana pathivu..eliya nadai ..
really gud//

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க ஷக்தி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said...
மச்சி சூப்பர் ;) மாப்பு வீட்டுக்கு வ்ந்து இன்னும் ஒரு த்பா படிச்சுட்டு கருத்து சொல்றேன்..


பொறுமையாப் படிப்பா..

//மூணு பேருக்கு வாத்துகள் எல்லாம் நம் நண்பர்களே//

என்னது வாத்துக்களா? அட.. உண்மையா சத்தம் போட்டு சொல்லாத மாமு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
//மகேஷ் பற்றி விசாரித்தேன்.. அவர் இங்கே technical assitant //
He is a Lecturer..!!
M.E(Manufacturing).//

some confusion..sorry.. will enquire pa..

கார்த்திகைப் பாண்டியன் said...

/கடையம் ஆனந்த் said...
நண்பா பின்னி எடுத்திட்டீங்க போங்க. கிட்டதட்ட பல கேள்விகளுக்கு உங்களுடைய பதில் என்னுடன் ஒத்து போகிறது? இப்படி தான் நண்பா இருக்கணும்.நீங்கள் அழைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்,//

நன்றி நண்பா.. நான் இன்னும் உங்க பதிவை படிக்கல.. பாத்துடறேன்..

//அப்புறம் நண்பா சின்ன வேண்டுகோள் இந்த பதிவை ஆரம்பித்தவர் நிலவும் அம்மாவும் முடிந்தால் பதிவின் முகப்பில் அவர்களின் பெயர்களை சேர்த்து விடுங்கள்.//

செஞ்சுடலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
எல்லா கேள்விகளுக்கும் சரியா பதில் சொல்லியி புரொபசர்னு நிருபிச்சிட்டீங்க (பிட் ஏதும் அடிக்கலையே) நல்லா எழுதியிருக்கீங்க கார்த்திகைப் பாண்டியன்.//

ஆண்டவன் சத்தியமாக.. இது எல்லாம் எனது சுய சிந்தனையில் உதித்த பதில்களே.. நம்புங்கப்பா.. பிட் எல்லாம் அடிக்கல..

ராம்.CM said...

அருமையான பதிவு! அழகான கேள்விகள்!. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.தங்கள் அப்பா இரயிவே என்பதை சொல்லவே இல்லை.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கு நன்றி ராம்.. அப்பா (ironsmith) ரயில்வேயில் முப்பது வருடங்களாக பணியாற்றி வருகிறார்.. என்னுடைய 21 வயது வரை ஓசிபாஸ் தான்.:-)

Karthik said...

இன்ட்ரெஸ்டிங்..! :)

//சமீபத்தில் என்னுடைய இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழாவில் அழுதேன்..

வாவ், நானும் என் சீனியர்ஸ் பேர்வல் பார்ட்டியில் இப்படிதான் பீல் பண்ணேன். இங்க வந்தா நீங்களும் அதைத்தான் எழுதியிருக்கீங்க.

Good to see a prof writing abt students. :)

Karthik said...

e mail follow up

ஆதவா said...

சட்டென்று உங்களுக்குள் நுழைந்ததைப் போன்று இருக்கிறது. என்னை ஏற்கனவே இரவீ எனும் பதிவர் இழுத்துவிட்டிருந்தார். தேங்கியிருக்கும் பல பதிவுகளினூடாக எப்படி செய்வதென்ற யோசனை இருந்தது..

உங்கள் பதில்கள் தெளிவானதாகவும் சட்டென்று வாத்தியார் கேட்டதும் மாணவன் சொல்லுவதைப் போலவும் இருந்தது.. நீங்கள் வாத்தியார் என்பதால் அந்த நினைப்பு வந்திருக்கலாம்.

ஊமைச்செந்நாய் குறித்து நான் உயிர்மையில் ஒரு கட்டுரை படித்தேன்... விரைவில் வாங்கிவிடவேண்டும்!!

பீர் | Peer said...

கபடமில்லா பதில்கள்...
இதுதான் கார்த்திகைப் பாண்டியன் என்று ஃபிரேம் போட்டு சுவற்றில் மாட்டலாம்.

முதல் கேள்வியை என்னிடம் கேட்டால், நானும் அதே பதில் தான் சொல்லுவேன். (பாண்டி கோவிலுக்கு பதிலாக, தக்கலை பீர் முகம்மது ஒலியுல்லா... அவ்வளவுதான்)

மேவி... said...

nalla padivu....

வேத்தியன் said...

ஆஹா....

கேள்விகளும் பதிலகளும் ரொம்ப நன்னா கீது...
:-)

வாழ்த்துகள்...

வேத்தியன் said...

தொடர்ந்து எழுதப் போகும் டக்ளஸ், ஆதவா மற்றும் குமரை நிலாவன் ஆகியோருக்கு வாழ்த்துகள்...

கலக்குங்க...

Raju said...

அருமையான பதிவு (தமிழ் மன்ற) தலைவரே...
மாட்டி விட்டுட்டீங்களே நண்பா...! :)))

யோவ்..சக்கர உனக்கு தமிழ் மேல ஆர்வம் இருக்குன்றதுக்குகாக, இப்புடி என் பேரை "வாத்து"ன்னுட்டேயே..!
மற்றபடி வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து சக நண்பர்களுக்கும் நன்றிகள் பல...

Suresh said...

காலையில் படித்த முதல் பதிவு, அருமையா இருக்கு, நீ சொன்ன விதம் ;) ரசித்தேன் மச்சி, அதுலயும் அன் ம்ரியாதை, நட்பு, நம்ம பசங்கள பத்தி சொன்னது, எல்லாம் அருமை ;)

Suresh said...

//யோவ்..சக்கர உனக்கு தமிழ் மேல ஆர்வம் இருக்குன்றதுக்குகாக, இப்புடி என் பேரை "வாத்து"ன்னுட்டேயே..!
மற்றபடி வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து சக நண்பர்களுக்கும் நன்றிகள் பல...//

:-) எப்பாயா வாத்து சொன்னே;) ஹீ ஹீ அப்படி சொன்னா வாத்துகள் எல்லாம் கோவிச்சிக்க போது மச்சி..

ஹா ஹா ;) ரசித்தேன் வாழ்த்துகள் நீ தான் கலாச்சி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுவாய்

புதியவன் said...

//என்னுடைய உற்ற தோழி.. கிட்டக்க இல்லையேன்னு என்னை மிஸ் பண்ணக்கூடிய ஜீவன் அதுதான்.. பையனா பொரந்ததுக்காக என்னை ரொம்பவே வருத்தப்பட வச்சவங்க..//

மிகவும் நெகிழவைத்த பதில்...வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik said..
Good to see a prof writing abt students. :)e mail follow up..///

thanks karthik.. will check my mail bro..

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஆதவா said...
சட்டென்று உங்களுக்குள் நுழைந்ததைப் போன்று இருக்கிறது. என்னை ஏற்கனவே இரவீ எனும் பதிவர் இழுத்துவிட்டிருந்தார். தேங்கியிருக்கும் பல பதிவுகளினூடாக எப்படி செய்வதென்ற யோசனை இருந்தது..உங்கள் பதில்கள் தெளிவானதாகவும் சட்டென்று வாத்தியார் கேட்டதும் மாணவன் சொல்லுவதைப் போலவும் இருந்தது.. நீங்கள் வாத்தியார் என்பதால் அந்த நினைப்பு வந்திருக்கலாம்.//

நன்றி ஆதவா.. உங்களைப் பத்தி தெரிந்து கொள்ள இந்த பதிவு இன்னும் உதவியா இருக்கும்.. சீக்கிரம் எழுதுங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//Chill-Peer said...
கபடமில்லா பதில்கள்...
இதுதான் கார்த்திகைப் பாண்டியன் என்று ஃபிரேம் போட்டு சுவற்றில் மாட்டலாம். //

ரொம்ப ரொம்ப நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//MayVee said...
nalla padivu....//

thanks mayvee

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said...
ஆஹா....கேள்விகளும் பதிலகளும் ரொம்ப நன்னா கீது...:-)வாழ்த்துகள்...//

ஹி ஹி ஹி.. தாங்க்ஸ்ப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்....... said...
அருமையான பதிவு (தமிழ் மன்ற) தலைவரே...மாட்டி விட்டுட்டீங்களே நண்பா...! :)))//

நக்கலுக்கு குறைவே இல்லாம கலக்குங்க டக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said...
காலையில் படித்த முதல் பதிவு, அருமையா இருக்கு, நீ சொன்ன விதம் ;) ரசித்தேன் மச்சி, அதுலயும் அன் ம்ரியாதை, நட்பு, நம்ம பசங்கள பத்தி சொன்னது, எல்லாம் அருமை;)//

எல்லாம் உங்க அன்புதான் நண்பா.. அடுத்து உங்களை எதுலயாவது இழுத்து விடனும்...:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said...
மிகவும் நெகிழவைத்த பதில்...வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...//

தொடரும் ஆதரவுக்கு நன்றி புதியுவன்...

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

”எல்லாரும் நம்மை கவனிக்கனும்னு ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன்.. அது சரி கிடையாது”

வாங்க..வாங்க .வாத்தியார் அய்யா..
எப்படி இப்படி மனம் திறந்து எல்லாத்தைம் சொல்லுறிங்க..!

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி தமிழ்.. நண்பர்கள் கிட்ட உண்மைய சொல்றதுல என்ன வருத்தம்?

குடந்தை அன்புமணி said...

உங்களைப்பற்றி நிறைய விசயங்கள் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது நண்பா! என் மதிப்பில் உயர்ந்து நிற்கிறீர்கள். வாழ்த்துகள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க நண்பா.. நன்றி

அத்திரி said...

//லோகு said...
//.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?மனதைத் தொடும் விதத்தில் இருக்கணும்.. இல்லைன்னா போரடிக்காம போகணும்..//

மரியாதை மாதிரி தானே..//

ஹாஹாஹாஹா..

கார்த்திகைப் பாண்டியன் said...

எழுதச் சொல்லிட்டு இப்போ நக்கல் வேறையா? உங்களால என்னை நானே திரும்பி பார்க்க முடிஞ்சது.. நன்றிப்பா..

Raju said...

\\ஹா ஹா ;) ரசித்தேன் வாழ்த்துகள் நீ தான் கலாச்சி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுவாய்\\

\\நக்கலுக்கு குறைவே இல்லாம கலக்குங்க டக்கு..\\

கடவுளே.. நம்மள எல்லாரும் "சிரிப்பு போலீஸ்" நு நினைச்சுட்டாங்களெ..!

கார்த்திகைப் பாண்டியன் said...

சில நேரங்களில் உண்மை கசக்கத்தானே செய்யும்.. ஹி ஹி ஹி..:-)

லொள்ளு சபா said...

//"குறிப்பா கன்னியாகுமரியும், புதுச்சேரி கடலும் ரொம்பப் பிடிக்கும்"//

அது தான் அப்பப்ப சுனாமி வந்து போற இடம்.

லொள்ளு சபா said...

நல்லாருக்கு. உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

"உழவன்" "Uzhavan" said...

நண்பா.. எல்லா கேள்விகளையும் படித்து முடித்தபோது, உங்களுடன் நிறைய பழகியதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. இந்தக் கேள்விகளனைத்துமே நமக்கு நாமே வைத்துக்கொள்கிற சுய முன்னேற்றத் தேர்வு போலவே இருந்தது.
தலைவா.. கவலைப்படாதீங்க.. கையெழுத்து சரியில்லேனா, தலையெழுத்து நல்லாருக்கும்ணு சொல்லுவாங்க :-)