July 20, 2009

இப்படியும் சில மனிதர்கள் - 100 வது இடுகை...!!!

டிசம்பர் 2006. நான் கொங்கு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த நேரம். வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஹாஸ்டல் வாழ்க்கை. கல்லூரி நகரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி இருந்தது. ஆத்திர அவசரத்திற்கு டவுனுக்கு போக வேண்டுமானால் நேரத்துக்கு பஸ் வசதி கூட கிடையாது. கேன்டீன் சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. என் வசதிகளை உத்தேசித்து மதுரையில் இருந்து பைக்கை கொண்டு போய் ஹாஸ்டலில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.




வெகு தூரத்துக்கு வண்டியில் செல்வது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே மதுரையில் இருந்து ஈரோட்டுக்கு வண்டியை ஓட்டி செல்ல முடிவு செய்தேன். அன்று கிறிஸ்துமஸ் தினம். லீவுக்கு மதுரையில் இருந்தேன். பைக்கை மத்தியான ட்ரைனுக்கு புக் செய்து விட்டதாகவும், அதே ட்ரைனில் நானும் போக இருப்பதாகவும் வீட்டில் சொல்லி விட்டுக் கிளம்பினேன். என் நெருங்கிய நண்பனுக்கு அன்று குழந்தை பிறந்து இருந்தது. அவனை பார்த்து வாழ்த்தி விட்டு பயணத்தை தொடங்கினேன்.




வாடிப்பட்டி வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நெடுஞ்சாலை வெறிச்சோடிக் கிடந்தது. வெயிலும் அவ்வளவாக இல்லை. எனக்கு பிடித்த பாடல்களை ஹம் செய்தவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். திடீரென எங்கிருந்து வந்ததென தெரியாமலே ஒரு கார் சாலையின் வளைவில் இருந்து வெளிப்பட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிரேக் போட்டால் பின்னால் வரும் பஸ்காரன் தட்டி விடக் கூடும். சட்டென வண்டியை சாலையை விட்டு இறக்கினேன். மணல் பிரதேசம் என்பதால் வாரி விட்டது. என் கால் முட்டி போய் தார் சாலையின் முனையில் மோதியது மட்டுமே தெரிந்தது. அடுத்து என்ன நடந்தது என்று என் நினைவில் இல்லை.




எனக்கு நினைவு திரும்பிய போது என் முகத்தின் வெகு அருகே குனிந்து நின்ற மனிதர் ஒருவரைப் பார்த்தேன். வயதானவர். "தம்பி.. தம்பி.. எந்திரிப்பா.." என அவர் தான் என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். அவர் கண்களில் கலவரத்தை மீறி ஒரு கருணை இருந்தது. நான் எழுந்து கொள்ள முயன்றேன். முடியவில்லை. வலது காலை நகர்த்த முடியாத அளவுக்கு வலி. அவர் என் கைகளை தனது தோளின் மீது போட்டுக் கொண்டு என்னை மெதுவாக எழுப்பினார். வயல் வேலை பார்ப்பவர் போல.. அவருடைய உடையில் இருந்த சேறு என் மீதும் அப்பிக் கொண்டது. எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். என் வண்டி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது இருந்தது.




"வண்டிக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல.... அப்படி ஓரமா நிக்கட்டும்.. விடுங்க தம்பி.. ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிருச்சுன்னு சந்தோஷப்படுங்க" பேசியவாறே நடந்தார். இப்போது வலி கொஞ்சம் குறைந்து இருந்தது. அருகில் இருந்த சரிவில் பத்தடி தூரம் நடந்து அவருடைய வீட்டை அடைந்தோம். காரை வீடு. எளிமையாக இருந்தது.




என்னைப் பார்த்து அவருடைய மனைவி பதைபதைத்துப் போனார். என்னை திண்ணையில் அமரவைத்து காலை சுத்தம் செய்தார். பெரிய அளவில் வெட்டுக்காயம் இருந்தது. தையல் போட வேண்டி இருக்கும் எனத் தோன்றியது. வேறு எங்கும் பெரிய அளவில் அடிபடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார். அவர் வைத்துக் கொடுத்த தேநீரை அருந்திய போது தேவாமிர்தமாக இருந்தது. "கொஞ்சம் பொறுத்துக்கோ தம்பி.. என் மகன் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.. பிறகு டாக்டர்கிட்ட போகலாம்.." அந்த அம்மா சொன்னார்.




அவருடைய மகன் வந்ததும் விஷயத்தை சொல்லி என்னுடன் அனுப்பி வைத்தனர். கொடைரோட்டுக்கு பைக்கிலேயே போய் டாக்டரைப் பார்த்து தையல் போட்டுக் கொண்டேன். திண்டுக்கல்லில் இருக்கும் என்னுடைய நண்பனுக்கு போன் வரச் சொல்லி விட்டு, நான் பத்திரமாக போக முடியுமா என்பதை உறுதி செய்து கொண்டு அவர்களின் மகன் கிளம்பிப் போனார். (அதன் பிறகும் தையல் போட்ட காலுடன் ஈரோடு வரை வண்டி ஓட்டிப் போனது எனது திமிர்)




என் கால் சரியாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆனது. கல்லூரியிலேயே இருந்தேன். ஊருக்குப் போகவில்லை. கால் சரியாகி ஊருக்குப் போன பிறகுதான் அம்மாவிடம் கூட உண்மையை சொன்னேன். அம்மா அவர்களைப் பார்க்க வேண்டும் என்றார். அழைத்துக் கொண்டு போனேன். அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். நான் யார் இவர்களுக்கு? முன்பின் தெரியாத ஒருவன் மேல் எதற்காக இவர்கள் இத்தனை அக்கறை காட்ட வேண்டும்? என்னுடைய நன்றியைத் தெரிவித்தபோது அந்தப் பெரியவர் சொன்னார்.."கண்ணுக்கு முன்னாடி ஒரு உசிரு கஷ்டப்படுரப்ப, ஒதவ முடியாட்டி நாம மனுஷனா பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல தம்பி.." எத்தனை நல்ல மனது அவர்களுக்கு.. தெரிந்தவர்களுக்கு உதவவே யோசிக்கும் காலத்தில் முகம் தெரியாத மக்களின் மீது கூட அன்பு செலுத்த முடியும் என்னும் இது போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.




இதை சொல்லும் போது எனக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்தில் இருக்கும் "அன்பின் வலி" என்னும் கட்டுரை ஞாபகத்துக்கு வருகிறது. உயிரைக் காக்க உதவி செய்யுங்கள் என்ற விளம்பரத்தை பார்த்து பணம் அனுப்பி வைக்கிறார் ஒரு வாட்ச்மேன். உதவி பெற்ற மனிதர் ஆப்பரேஷன் முடிந்த பிறகு தன்னுடைய மனைவியோடு சென்று பணம் அனுப்பிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லுகிறார். யாராவது பார்த்து உதவி செய்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தானே விளம்பரம் செய்கிறார்கள்.. ஏதோ என்னால் முடிந்ததை செய்தேன் என்று தன்னடக்கத்துடன் சொல்கிறார் அந்த வாட்ச்மேன்.
நாம் தினமும் பத்திரிக்கையில் இதுபோன்ற பல விளம்பரங்களை பார்க்கிறோம். ஆனால் என்றேனும் உதவ வேண்டும் என்று தோன்றி இருக்கிறதா? சக மனிதர்களின் மீது அன்பு செலுத்த, அக்கறை காட்ட இன்று யாருக்கும் நேரம் இல்லை. இது போன்ற சூழலில் அன்பு என்கின்றன ஒன்று எங்கே எனத் தேட வேண்டியதாக இருக்கிறது. எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறது இந்தக் கட்டுரை. எல்லோரிடத்திலும் அன்பு இருக்கிறது. அதை நாம் உணர்கிறோமா என்பதுதான் முக்கியம். யாரும் நம்மிடம் அன்பு செலுத்த மாட்டேன் என்கிறார்கள் என்று புலம்புவதை விட, நாம் பிறர் மீது அன்பு செலுத்தத் தொடங்குவோம். இந்த உலகை இன்னும் அழகாக மாற்றக் கூடியது, சக மனிதரின் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே..!!!




***************




இது என்னுடைய நூறாவது இடுகை. இப்போதுதான் விளையாட்டாக ஆரம்பித்தது போல உள்ளது. எட்டு மாதங்கள். நூறு இடுகைகள். என் மீது அன்பும் அக்கறையும் காட்டும், முகம் தெரியாத நிறைய நண்பர்கள். சந்தோஷமாக இருக்கிறது. நான் ஏதோ பெரிதாக சாதித்து விட்டடதாக நினைக்கவில்லை. போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. ஆனாலும் நடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னை இன்று வரை ஆதரித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் என்னை வழி நடத்திச் செல்லும் என நம்புகிறேன். மீண்டும் நன்றி..!!!



(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

60 comments:

ஸ்ரீ.... said...

நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல சாதனைகள் புரிவதற்கும்!

ஸ்ரீ....

Raju said...

மொதல்ல 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல..
:)

ப்ரியமுடன் வசந்த் said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் கார்த்திகேய பாண்டியன்.

மேலும் பல நூறுகள் படைக்க வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

நாம் யார் எப்படிப்பட்டவர் என்று பார்த்து வருவதில்லை மனிதாபிமானம் என்பதற்க்கு இந்த நிகழ்ச்சி உதாரணம்.

நர்சிம் said...

100க்கு வாழ்த்துக்கள்.

எஸ்ராவை நினைவுபடுத்தும் வரிகள் என்று நான் நினைக்கும்முன்னரே நீங்கள் அன்பின்வலிபற்றி சொல்லிவிட்டீர்கள்.

நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.

Raju said...

"அந்த பெரியவர் குடும்பம் மாதிரி ஆளுங்க இருக்கறதனாலதான் இன்னும் மழை பெய்யுது போல.."
இந்த வசனம் பழசாகவும் சினிமாத்தனமாகவும் இருப்பினும், பதிவைப் படித்தவுடன் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

மற்றபடி மாஸ்டர் பீஸ்..!

தேவன் மாயம் said...

இது என்னுடைய நூறாவது இடுகை. இப்போதுதான் விளையாட்டாக ஆரம்பித்தது போல உள்ளது. எட்டு மாதங்கள். நூறு இடுகைகள். என் மீது அன்பும் அக்கறையும் காட்டும், முகம் தெரியாத நிறைய நண்பர்கள்.//

100க்கு வாழ்த்துக்கள்!!

Jackiesekar said...

நல்ல மனிதர்கள் இருப்பதாலேயே இன்னும் மழை பெய்து கொண்ட இருக்குகின்றது...

உங்களை போல நானும் பைக் பயண விரும்பி...

தேவன் மாயம் said...

வாடிப்பட்டி வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நெடுஞ்சாலை வெறிச்சோடிக் கிடந்தது. வெயிலும் அவ்வளவாக இல்லை. எனக்கு பிடித்த பாடல்களை ஹம் செய்தவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். திடீரென எங்கிருந்து வந்ததென தெரியாமலே ஒரு கார் சாலையின் வளைவில் இருந்து வெளிப்பட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிரேக் போட்டால் பின்னால் வரும் பஸ்காரன் தட்டி விடக் கூடும். சட்டென வண்டியை சாலையை விட்டு இறக்கினேன். மணல் பிரதேசம் என்பதால் வாரி விட்டது. என் கால் முட்டி போய் தார் சாலையின் முனையில் மோதியது மட்டுமே தெரிந்தது. அடுத்து என்ன நடந்தது என்று என் நினைவில் இல்லை.///

அவ்வளவுதூரம் தேவையா?

தேவன் மாயம் said...

அவருடைய மகன் வந்ததும் விஷயத்தை சொல்லி என்னுடன் அனுப்பி வைத்தனர். கொடைரோட்டுக்கு பைக்கிலேயே போய் டாக்டரைப் பார்த்து தையல் போட்டுக் கொண்டேன். திண்டுக்கல்லில் இருக்கும் என்னுடைய நண்பனுக்கு போன் வரச் சொல்லி விட்டு, நான் பத்திரமாக போக முடியுமா என்பதை உறுதி செய்து கொண்டு அவர்களின் மகன் கிளம்பிப் போனார். (அதன் பிறகும் தையல் போட்ட காலுடன் ஈரோடு வரை வண்டி ஓட்டிப் போனது எனது திமிர்)///

அடங்க மாட்டீங்களே மக்கா!!!

தேவன் மாயம் said...

எத்தனை நல்ல மனது அவர்களுக்கு.. தெரிந்தவர்களுக்கு உதவவே யோசிக்கும் காலத்தில் முகம் தெரியாத மக்களின் மீது கூட அன்பு செலுத்த முடியும் என்னும் இது போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.///

ஆம !!கார்த்தி!!

நையாண்டி நைனா said...

Congrates NANBA...

Joe said...

//
கண்ணுக்கு முன்னாடி ஒரு உசிரு கஷ்டப்படுரப்ப, ஒதவ முடியாட்டி நாம மனுஷனா பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல தம்பி.." எத்தனை நல்ல மனது அவர்களுக்கு.
//
லேசாக கண் கலங்க வைத்து விட்ட வரிகள்.

கிராமங்களில் தான் இன்னும் அந்த மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கின்றன. நகரங்களில் வாழும் மனிதர்களுக்கு பணத்தைத் தேடி அலையவே தான் நேரம் சரியாக இருக்கிறது.

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள், கார்த்திக்!
நான் அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்ததா?

M.Rishan Shareef said...

மிகவும் நல்லதொரு பதிவு. மனம் நெகிழச் செய்தது.

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..தொடருங்கள் !

ஆ.ஞானசேகரன் said...

100வது பதிவுக்கு வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//"கண்ணுக்கு முன்னாடி ஒரு உசிரு கஷ்டப்படுரப்ப, ஒதவ முடியாட்டி நாம மனுஷனா பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல தம்பி.." //

உண்மைதான் நண்பா
நல்ல எழுதியிருக்கீங்க நண்பா

வினோத் கெளதம் said...

நல்ல பதிவு கார்த்தி..
வாழ்த்துக்கள் 100க்கு.

Admin said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் கார்த்திகேய பாண்டியன்.

மேலும் பல நூறுகள் படைக்க வாழ்த்துக்கள்.


100 வது இடுகையிலும் நல்ல பல விடயங்களைச் சொல்லி இருக்கிறிங்க. நன்றிகள்..

குடந்தை அன்புமணி said...

நூறாவது இடுகைக்கு முதலில் என் வாழ்த்துகள். மேன்மேலும் பலநூறு இடுகைகள் தருக. படிச்சிட்டு வர்றேன்.

குடந்தை அன்புமணி said...

கிராம மக்கள் கிராம மக்களே. அவர்களின் அன்பிற்கு ஈடு இணை எதுமில்லை.

பைக் பயணம், இளம் ரத்தம் சுகமாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் கவனமும் இருக்க வேண்டாமா? நெடி நேரத்தில் தாங்கள் கவனித்ததால் போயிற்று. இல்லையேல்... நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. இந்த சம்பவம் உங்களுக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
அந்த மனிதநேயமிக்க விவசாயிக்கு என் வந்தணங்கள்.

அகநாழிகை said...

கார்த்தி,
அன்பிற்கான தேடலில்தான் வாழ்வின் இயக்கமே இருக்கிறது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பல பதிவுகளை தொடர்ந்து எழுத என் நெஞ்சார்ந்த அன்பும், வாழ்த்துகளும்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

geevanathy said...

நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....


தொடருங்கள் !

பாலகுமார் said...

//தெரிந்தவர்களுக்கு உதவவே யோசிக்கும் காலத்தில் முகம் தெரியாத மக்களின் மீது கூட அன்பு செலுத்த முடியும் என்னும் இது போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.//

உண்மை தான் கார்த்தி ..... அருமையான் பதிவு....

100 க்கு வாழ்துத்துக்கள் பல .... இன்னும் சிறப்படைவீர்கள் !!!!

எம்.எம்.அப்துல்லா said...

100வது இடுகைக்கு வாழ்த்துகள்

:)

நாஞ்சில் நாதம் said...

100வது இடுகைக்கு வாழ்த்துகள்.

3 வருடங்கள் நானும் அந்த கல்லுரியில் தான் படிதேன்.

Cable சங்கர் said...

செஞ்சுரிக்கும் மேலும்பல செஞ்சுரிகளை காணவும் வாழ்த்தும் அன்பு
கேபிள் சங்கர்.

ஆதவா said...

அன்பு கார்த்திகைப் பாண்டியன்..

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

ஒருமுறை தண்டவாளத்தில் மயங்கி விழுந்த ஒரு பெரியவரைக் காப்பாற்றிய நினைவு (அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்) வருகிறது. என்னை ஒரு பெண்மணி (அதே மாதிரி காலில் அடிபட்டு) காப்பாற்றியதும்....

தொடர்ந்து எழுதுங்கள்!!

Mohan said...

நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொடருங்கள்!!

Unknown said...

Congrats for tour th edition.when statrted reading thought that i will be in picture some where.... buzz.
all the very best

Anbu said...

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா..

லோகு said...

இன்னும் கொஞ்ச நல்லவங்க மிச்சம் இருக்காங்க,, (இருக்கோம்)

***
சென்சுரிக்கு வாழ்த்துக்கள்..

Karthik said...

sema pathivu!

100 kku vaazhthukkal. :))

வழிப்போக்கன் said...

wishes for ur 100th pathivu..

அத்திரி said...

செஞ்சுரி அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் நண்பா............

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துகள் பாண்டியன். இது போன்ற சிறப்பான பல இடுகைகளை இட வாழ்த்துகள்

ச.முத்துவேல் said...

இப்படில்லாம் எழுதினா நான் அழுதுடுவேன் ஆமா. :)
100 க்கு வாழ்த்துகள்.தொடருங்கள் வெற்றிப் பயணத்தை.(மதுரை-ஈரோடு இல்ல)

பொன்.பாரதிராஜா said...

ரொம்ப சந்தோஷம் கார்த்தி...உன்னோட எழுத்தப் படிக்கும் போதுதான் நேர்ல பேசற மாதிரி ஒரு உணர்வு...
100வது பதிவு அட்டகாசம்...கலக்கிட்ட...கலக்கிகிட்டே இருப்ப...
வாழ்த்துக்கள்...

நிகழ்காலத்தில்... said...

கிராமத்து மனிதர்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் நண்பரே

பீர் | Peer said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் கார்த்திக்.

அன்பின் வலியை நானும் உணர்ந்துள்ளேன்.
அன்பான வலி... அருமையான பகிர்வு.

100 க்கு பின்னாடி இன்னும் நிறைய முட்டை இட மீண்டும் வாழ்த்துக்கள். :)

சொல்லரசன் said...

//எல்லோரிடத்திலும் அன்பு இருக்கிறது. அதை நாம் உணர்கிறோமா என்பதுதான் முக்கியம். யாரும் நம்மிடம் அன்பு செலுத்த மாட்டேன் என்கிறார்கள் என்று புலம்புவதை விட, நாம் பிறர் மீது அன்பு செலுத்தத் தொடங்குவோம்//

இதுதான் உண்மை பிறரை குறைசொல்வதைவிட,நாம் எப்படி என்று சிந்திப்பதே இல்லை சிலர்.

100 வது பதிவிற்கு வாழ்த்துகள்.

அப்துல்மாலிக் said...

100 க்கு வாழ்த்துக்கள்

மென்மேலும் நல்ல பதிவுகள் இடுங்கள்

ஹேமா said...

இனிய வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்.இன்னும் இன்னும் நிறைய எழுதணும்.

உங்கள் பதிவுக்கு சிலசமயங்களில் வரமுடியாமல் இருக்கு.இப்போகூட Firefox ஊடாகத்தான் வருகிறேன்.அப்படி வரும்போது எழுத்துக்கள் விளங்காமல் இருக்கு.

வால்பையன் said...

நூறுக்கு வாழ்த்து!

நான் அடிக்கடி இம்மாதிரியான புதையல்கள் எடுப்பேன்!

சம்பத் said...

////கண்ணுக்கு முன்னாடி ஒரு உசிரு கஷ்டப்படுரப்ப, ஒதவ முடியாட்டி நாம மனுஷனா பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல தம்பி////

எத்தனை ஆத்மார்த்தமான உண்மை.....உண்மையிலேயே அந்த விவசாயி போற்றப்பட வேண்டியவர்....

சம்பத் said...

////இந்த உலகை இன்னும் அழகாக மாற்றக் கூடியது, சக மனிதரின் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே..!!!////

உண்மை தான் நண்பா.....

சம்பத் said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.... சச்சினின் செஞ்சுரிகளை விஞ்ச வாழ்த்துக்கள்.

ஊர்சுற்றி said...

இதுபோல மனிதர்கள் நம் வாழ்வின் எல்லா தூரத்திலும் விரவிக் கிடக்கிறார்கள்.

நம்பிக்கையோடு நாம் இருக்க உதவுகிறார்கள்.

உங்கள் இடுகையைப் படித்ததும் இந்த இடுகையும் ஞாபகத்திற்கு வந்துது. முடிந்தால் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வாருங்கள்.
http://sharavanaanu.blogspot.com/2009/07/blog-post_7860.html

geethappriyan said...

இது தான் இன்றைய பணத்தாசை பிடித்த உலகின் நிதர்சனம்..
அவர்களைப் போல ஒரு சிலர் இருப்பதால் தான் மனிதம் வாழ்கிறது..
வாழ்த்துக்கள்...
மனம் தளர வேண்டாம்.

நசரேயன் said...

வாழ்த்துக்கள் நூறுக்கு

கிருஷ்ண மூர்த்தி S said...

மதுரையைப் பாத்துக் கூடப் பெருமைப் படும் உங்களுக்கு, இன்னொரு மதுரைக்காரனின் வாழ்த்துக்கள்!

Dhavappudhalvan said...

வாழ்த்துக்கள், பதிவு 100ருக்கு விட, அன்பின் ( மனிதாபிமானத்தின் ) அவசியத்தை அடயாளம் காட்டியதற்கு. இப்பதிவின் மூலம் அந்த விவசாயிக்கு எங்கள் மனத்திலுள்ள வா‍ழ்த்துகள் காற்றின் வழியே அஞ்சலாய் அடையும்.

Dhavappudhalvan said...

வாழ்த்துக்கள், பதிவு 100ருக்கு விட, அன்பின் ( மனிதாபிமானத்தின் ) அவசியத்தை அடயாளம் காட்டியதற்கு. இப்பதிவின் மூலம் அந்த விவசாயிக்கு எங்கள் மனத்திலுள்ள வா‍ழ்த்துகள் காற்றின் வழியே அஞ்சலாய் அடையும்.

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களின் 100வது பதிவைப் படிக்கும்போது. வாழ்த்துக்கள் நண்பா :-)

ரெட்மகி said...

வாழ்த்துக்கள் நண்பா ...

Suresh said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் மச்சான்

பதிவுலத்தில் நான் சந்தித்த நல்ல நண்பர்களில் நீயும் ஒருவன் உயர்ந்து நிற்கிறாய்

சுந்தர் said...

நூறு , ஆயிரம் ஆக வாழ்த்துக்கள் .

சுந்தர் said...

//(அதன் பிறகும் தையல் போட்ட காலுடன் ஈரோடு வரை வண்டி ஓட்டிப் போனது எனது திமிர்)// இது திமிர் இல்லை நண்பரே , தன்னம்பிக்கை .தைரியம், சுருக்கமா சொன்னா, தில்.
அந்த தில் இருக்கதுனாலதான் , ஒருநாள் மட்டும் ஓடும் படத்துக்கு கூட திரை விமர்சனம் போட முடியுது.

Anonymous said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் பாண்டியன்.

கதிரவன் said...

இந்த மாதிரியான மனிதர்களைச் சந்திப்பது ரொம்ப அபூர்வம்

நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி

Unknown said...

அருமையான நூறாவது பதிவுங்க..

வாழ்த்துகள்..