December 27, 2009

தீராத விளையாட்டு பிள்ளை..!!!



சத்யம், தோரணை என்று பொறி கலங்கிப் போய் கிடக்கும் விஷாலின் அடுத்த படம். அகத்தியனின் மருமகன் திரு இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். சண்டக்கோழி, திமிரு என்று பட்டையைக் கிளப்பிய விஷால் - யுவன் காம்போ இந்தப் படத்திலும் தொடர்கிறது. குறிப்பாக சண்டக்கோழியின் "தாவணி போட்ட தீபாவளி"யும் , திமிருவின் "அடங்கொப்புரானே"வும் இன்றளவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். சில படங்களில் எல்லாப் பாடல்களுமே ஹிட்டாகும். மற்ற படங்களில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கும். தீராத விளையாட்டுப் பிள்ளை இதில் எந்த வகை? எதிர்பார்ப்புகளை பாடல்கள் பூர்த்தி செய்கின்றனவா?

எல்லாப் பாட்டுமே வெஸ்டர்ன் அடிதான்.

1. Introduction (யுவன் ஷங்கர் ராஜா)

ஒரு நிமிடம் மட்டுமே ஒலிக்கும் சின்ன இசைக்கோர்வை. "காதல் வைரஸ்"இன் பைலாமோர் பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. தியேட்டரில் படம் ஆரம்பிக்குமுன் போடும் ஆங்கில இசை ஒன்று போடுவார்கள் இல்லையா? அதேபோல பாட்டுக்களுக்கு முன்பாக வரும் அறிமுகம். சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

2 . பூ முதல் பெண் வரை (யுவன் ஷங்கர் ராஜா)

வாழ்க்கையில் எனக்கு எல்லாம் விதம் விதமாக வேண்டும் என்று பாடும் கதாநாயகனின் அறிமுகப் பாடல். ரொம்ப மெனக்கெடாமல் எழுதி இருக்கிறார் பா.விஜய். காதலின் பிரம்மன் நான் என்றெல்லாம் ஓவராகவே ஹீரோவைப் புகழ்ந்து தள்ளுகிறார். ஆனாலும் வரிகளில் இளமைத் தாண்டவம்.

அழகான பெண்ணொன்று..அறிவான பெண்ணொன்று..அன்பான பெண்ணொன்று..
ஒவ்வொன்றாய் பாரென்று.. என்னவள் யாரென்று.. சொல்கின்ற நாளென்று..

எப்போதும் பெதொஸ் பாடலாக தேடித் பிடித்து பாடும் யுவன் கொஞ்சம் வித்தியாசமாக இந்த வெஸ்டர்ன் பாடலை பாடியிருக்கிறார். முதல் முறை கேட்கும்போது பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஆனால் கேட்க கேட்க பரவாயில்லை. பாடலின் ஊடாக வரும் கோரஸ் நன்றாக இருக்கிறது.

3. என் ஜன்னல் வந்த காற்றே ( ரோஷினி, ப்ரியா, திவ்யா)

படத்தில் இருக்கும் மூன்று கதாநாயகிக்களுக்கான அறிமுகப் பாடலாக இருக்கலாம். பாண் பண்டியின் ராப்போடு ஆரம்பிக்கிறது. மூன்று வித்தியாசமான குணாதிசயங்களை பாட்டின் ஊடாக கொண்டு வந்திருக்கிறார்கள். முதல் நாயகி இயற்கையை பெரிதும் வியப்பதோடு ஆரம்பிக்கிறது பாட்டு. இசை, கவிதை, அணில் என்றெல்லாம் பயணிக்கிறது. அடுத்ததாக வரும் நாயகி தன்னை ஒரு சாக்லேட் கேர்ள் என்கிறார். யார் என்னை கவனித்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை என சொல்லும் தைரியசாலி. மூன்றாவது நாயகி பற்றி சொல்லும் பாட்டின் கடைசி பகுதியில்தான் அதகளம்.

ஹே தங்கா தங்கா தங்கா
இது தாவணி போட்ட மங்கா
இது அல்லிராணி பொண்ணு
என் மேல வைக்காத கண்ணு

டப்பாங்குத்து ரேஞ்சுக்கு வெஸ்டர்ன் இசையிலேயே இறங்கி குத்தி இருக்கிறார் யுவன். செமபாட்டு.

4. என் ஆசை எதிராளியே (விஜய் யேசுதாஸ், வினைதா )

சீனப் படங்களில் போர்க்காட்சிகளின் போது இசைக்கப்படும் ஒலிக்கோர்வையை ஒத்திருக்கிறது இந்தப் பாட்டின் prelude. அதற்குப் பின் வருவது நமக்கு பழக்கமான வெஸ்டர்ன் இசைதான். நாயகனை மண்டியிட சொல்லும் நாயகி, மறுத்துப் பேசும் நாயகன் என்று போகிறது பாடல். படத்திலேயே இந்தப் பாட்டில் தான் பா.விஜய் கலக்கி இருக்கிறார்.

சிறையில் வைத்து உன்னை சிதிலமாக்கி விட எனது காலடியில் கிடக்க வா..

ஒரு வித ஆண்மையுடன் வினிதாவின் குரல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது.

கைதட்டி கூப்பிட்டு பார் கார்மேகம் தூறல் தருமா...
கண்ணே
நீ ஆணையிட்டால் ஆகாயம் தரையில் வருமா..

விஜயின் குரல் எப்போதும் போல நம்மை ஈர்க்கிறது. ஆனாலும் பாட்டு என்னை பெரிதாக கவரவில்லை.

5 . ஒரு புன்னகை தானே (ரஞ்சித்)

Pick of the album. காதல் ஈடேறிய சந்தோஷத்தில் நாயகன் பாடும் பாடல். எளிமையான வரிகளுக்கு ரொம்ப சிம்பிளாக இசை அமைத்து இருக்கிறார் யுவன். Excellent Arrangements.

ஹே பெண்ணே நீ என்ன அழகான கூர்வாளா..
கொல்லாமல் கொல்கின்றாய் உடைகின்றேன் தூள் தூளா..

ரஞ்சித்தின் குரல் வசீகரிக்கிறது. இருந்தும் இந்தப் பாடலை யுவன் பாடியிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்.

6. தீராத விளையாட்டுப் பிள்ளை (ஆண்ட்ரியா, தன்வி,ரஞ்சித்)

"நெற்றிக்கண்" பாடலின் ரீமிக்சாக இருக்குமோ என்று பயந்து கொண்டே கேட்டேன். நல்ல வேளையாக இல்லை. ஒரு பாடலை மட்டும் வாலி எழுதி இருக்கிறார். இனி அடிக்கடி டிஸ்கோக்களில் பிளே செய்ய ஒரு பாடல் கிடைத்து விட்டது.

ஓயாமல் கொடுப்பாயே தொல்லை..
அம்மம்மா
உன்னைப்போல பிளேபாயே இல்லை..

கிடாரில் பொளந்து கட்டி இருக்கிறார் யுவன். ஆண்ட்ரியாவின் குரலில் உற்சாகம் தளும்பி வழிகிறது.கொஞ்சம் கொஞ்சம் "கள்வனின் காதலியின்" கட்டில் காட்டு மன்னனும் ஞாபகம் வருகிறது. பாட்டு கண்டிப்பாக ஹிட் ஆகும்.


படத்துக்கான எல்லா பாடல்களும் ஹிட்டாவதில் இசையமைப்பாளரைப் போலவே நாயகன், இயக்குனருக்கும் பெரும்பங்கு உண்டு. உதாரணத்துக்கு ஹாரிஸை எடுத்துக் கொள்வோம். கவுதமுக்கு ம்யூசிக் போட்ட வாரணம் ஆயிரத்தில் எல்லாப் பாட்டுமே சூப்பர் ஹிட். ஆனால் ரவிக்குமாருக்கு ஆதவனில் மூன்று பாடல்கள் மட்டுமே ஹிட். இந்த உதாரணம் இளையாராஜாவுக்கும் பொருந்தும். இப்போது யுவன்ஷங்கரும் இதே பார்முலாவைப் பின்பற்றி ஆள்பார்த்துதான் அடிக்கிறாரோ என்றெண்ணத் தோன்றுகிறது. சர்வம், வாமணன், முத்திரை என்று தொடர்ந்து சொதப்பியவர் பையாவில் நிமிர்ந்து இருந்தார். தீ.வி.பி யில் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தீராத விளையாட்டு பிள்ளை - கொஞ்சம் சுதி கம்மிதான்

(ஹோய் டக்கு.. நாங்களும் பாட்டு பத்தி எழுதிட்டோம்ல..)

தொடர்புடைய மற்றொரு இடுகை..

ராஜூ - குட்டி பாடல்கள்..!!!

33 comments:

மேவி... said...

இதற்க்கு ஹீரோனி படம் போட்டு இருந்தால் நல்ல இருக்கும் ...நீது சந்திர படம் கிடைக்கவில்லை என்றால் உங்க படத்தை போட்டு இருக்கலாமே ...

ஜெட்லி... said...

//ஹே தங்கா தங்கா தங்கா
//
இந்த பாட்டை கேட்டேன்..
நன்றாக தான் இருக்கிறது...

மேவி... said...

உங்களை போல் ஓர் இலக்கியவாதி பாடல் விமர்சனம் எழுதும் போது இன்னும் கொஞ்சம் இலக்கிய தரம் காட்டு காட்டு ன்னு காட்டி இருக்கலாம்

மேவி... said...

ஜி......... நான் எப்பொழுதும் பாடல்களை ரசிப்பது இல்லை ...பாடல்களில் வரும் நடிகைகளை ரசிப்பதோடு என் வேலை ஓவர் .......

மேவி... said...

"காதல் வைரஸ்"இன் பைலாமோர் பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை"


அப்ப நீங்க அந்த கால யூத் அஹ ????

மேவி... said...

படம் பார்த்தால் தான் எனக்கு பாடல்கள் புரியும் ...... அந்த அளவுக்கு நான் இசைல ஞான சூனியம்

மேவி... said...

sundAY LA padivu pottu terror kaatturinga...hmmmm

மேவி... said...

"தீராத விளையாட்டு பிள்ளை..!!!"



தொல்லை தராமல் இருந்தால் சரி ....

மேவி... said...

"ஜெட்லி said...
//ஹே தங்கா தங்கா தங்கா
//
இந்த பாட்டை கேட்டேன்..
நன்றாக தான் இருக்கிறது..."



appadiyaaa

க‌ரிச‌ல்கார‌ன் said...

//(ஹோய் டக்கு.. நாங்களும் பாட்டு பத்தி எழுதிட்டோம்ல..)//

):

க‌ரிச‌ல்கார‌ன் said...

// டம்பி மேவீ said...
இதற்க்கு ஹீரோனி படம் போட்டு இருந்தால் நல்ல இருக்கும் ...//

வெறித்த‌ன‌மாக‌ வ‌ழிமொழிகிறேன்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//டம்பி மேவீ said...
உங்களை போல் ஓர் இலக்கியவாதி பாடல் விமர்சனம் எழுதும் போது இன்னும் கொஞ்சம் இலக்கிய தரம் காட்டு காட்டு ன்னு காட்டி இருக்கலாம்//

காட்டி இருக்கலாம்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//டம்பி மேவீ said...
உங்களை போல் ஓர் இலக்கியவாதி பாடல் விமர்சனம் எழுதும் போது இன்னும் கொஞ்சம் இலக்கிய தரம் காட்டு காட்டு ன்னு காட்டி இருக்கலாம்//

காட்டி இருக்கலாம்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//டம்பி மேவீ said...
உங்களை போல் ஓர் இலக்கியவாதி பாடல் விமர்சனம் எழுதும் போது இன்னும் கொஞ்சம் இலக்கிய தரம் காட்டு காட்டு ன்னு காட்டி இருக்கலாம்//

காட்டி இருக்கலாம்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//டம்பி மேவீ said...
"தீராத விளையாட்டு பிள்ளை..!!!"

தொல்லை தராமல் இருந்தால் சரி ....//

இந்த‌ ப‌திவையா சொல்றிங்க‌

கார்க்கிபவா said...

:)))

நானும் சில முறை கேட்டேன்.. மீண்டும் பையாவுக்கே போய்விட்டேன்..கேட்க கேட்க மயக்குகிறது பையா

Jackiesekar said...

மேவி சொன்னது போல் விஷாலோடு 3 பொண்ணுங்க நிக்ற போட்டோ போட்டு இருக்கலாம்..

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

எப்புடி இப்படியல்லாம் பாட்டை பத்தி
ஆராய்ச்சி பண்ண நேரம் கிடைக்குது...?

vasu balaji said...

தமிழ் வெங்கட் said...

/ எப்புடி இப்படியல்லாம் பாட்டை பத்தி
ஆராய்ச்சி பண்ண நேரம் கிடைக்குது...?//

அதான.

கார்த்திகைப் பாண்டியன் said...

@ டம்பி மேவீ

@ க‌ரிச‌ல்கார‌ன்

ஏம்பா.. இன்னைக்கு கும்மி இங்கதானா? நீங்க சொன்ன மாதிரி படத்த மாத்திட்டேன் ராசா..

@ ஜெட்லி

எல்லாப் பாட்டுமே நல்லா இல்லை நண்பா.. அதுதான் பிரச்சினை

@ கார்க்கி

சரியா சொன்னேங்க சகா.. அதுலயும் சுடச்சுட பாட்டு... சான்சே இல்லை..

@jackiesekar

மாத்தியாச்சு தல..

கார்த்திகைப் பாண்டியன் said...

@ தமிழ் வெங்கட்

ஹி ஹி.. அதெல்லாம் கம்பெனி சீக்ரட் நண்பா

@ வானம்பாடிகள்

கண்ணு போடாதீங்க பாலா சார்..;-))

மேவி... said...

"கார்த்திகைப் பாண்டியன் said...
@ டம்பி மேவீ

@ க‌ரிச‌ல்கார‌ன்

ஏம்பா.. இன்னைக்கு கும்மி இங்கதானா? நீங்க சொன்ன மாதிரி படத்த மாத்திட்டேன் ராசா.."

அது அது ....ரெட் சொன்ன கேட்கனும் ....

மேவி... said...

"தமிழ் வெங்கட் said...
எப்புடி இப்படியல்லாம் பாட்டை பத்தி
ஆராய்ச்சி பண்ண நேரம் கிடைக்குது...?"


oru velai antha madiri irukkumo...?????

மேவி... said...

enna irunthalum BEETHOVEN madiri varaathu


(aama avar yaar??? sra blog la padichathu...he he he he he)

கார்த்திகைப் பாண்டியன் said...

@ டம்பி மேவீ

திரும்பி இங்கயே வந்தாச்சா? ரைட்டு..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பாட்டோட விமர்சனமா?நான் படம் வந்துருச்சோன்னு நெனச்சேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

@ ஸ்ரீ

நாங்க இனிமேல் அட்வான்சா இருப்போம்ல..

மேவி... said...

"கார்த்திகைப் பாண்டியன் said...
@ ஸ்ரீ

நாங்க இனிமேல் அட்வான்சா இருப்போம்ல.."


எப்புடிங்க ...படம் ரிலீஸ் ஆகும் முன் திருட்டு விசிடி உங்களுக்கு வந்துருமா ???

மேவி... said...

"கார்த்திகைப் பாண்டியன் said...
@ டம்பி மேவீ

திரும்பி இங்கயே வந்தாச்சா? ரைட்டு.."


s sir....

வினோத் கெளதம் said...

யுவன் ஏன் சமிபக்காலமா இப்படி சொதப்புறாரு..!!

கார்த்திகைப் பாண்டியன் said...

@ வினோத்கௌதம்

அவருக்கு யாரோ சூனியம் வச்சுட்டாங்க மக்கா..

Raju said...

நைனா, இவரு நம்ம கூடயே வீம்பா விளையாடுறாரு..போட்ருவோமா..?

@வினோத் தல.
பையா கேளுங்க.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல முயற்சி.......

எப்படிங்க உங்களாள மட்டும் இப்படி...........