July 23, 2010

உக்கார்ந்து யோசிச்சது (23-07-10)..!!!

தனது கலைப்படைப்புகள் மூலமாக சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்.

இந்த வார்த்தைகளின் சொந்தக்காரர், தமிழின் ( மறைந்த ) மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவர் யாரென்பதை இடுகையின் கடைசியில் சொல்கிறேன்.

***************

நான் திண்டுக்கல்லில் வேலை பார்த்த கல்லூரியில் நடந்த வேடிக்கையான சம்பவம் இது. தகவல்தொழில்நுட்பத்துறையின் (IT) தலைமைப் பொறுப்பில் இருந்த பெண்மணி அவர். வயது நாற்பதுக்கும் மேல் இருக்கும். ஒரு முறை கல்லூரியின் வராந்தாவில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த இறுதியாண்டு மாணவனைப் பார்த்திருக்கிறார்.

"என்னப்பா.. நல்லாயிருக்கியா? புராஜக்ட் எல்லாம் எப்படி போகுது?"

"ஒண்ணும் பிரச்சினை இல்ல மேடம்.. நல்லா போய்க்கிட்டு இருக்கு.."

"குட்.. எதுல புராஜக்ட் பண்ற?"

"MS Office ல மேடம்.."

"ஓ.. ஏன்ப்பா அவ்ளோ கஷ்டப்பட்டு ஏதோ ஒரு ஆபிஸ்ல பண்ணனும்? நம்ம காலேஜ் ஆபிஸ்லேயே பண்ணலாமே.."

அந்த மாணவனின் முகம் போன போக்கு எப்படி இருந்திருக்கும் (இஞ்சி தின்ன குரங்கு மாதிரி?!) என்பதை யோசித்துப் பார்க்கவே சிரமமாக இருக்கிறது.

***************

இதுவும் மற்றொரு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதுதான். அதே தொழில்நுட்பத்துறை. ஆனால் இங்கே துறைத்தலைவர் ஒரு ஆண். கிட்டத்தட்ட அறுபது வயதைத் தாண்டியவர். அவருடைய உதவியாளர் ஒருமுறை அவரிடம் சொல்லி இருக்கிறார்.

"சார்.. கம்ப்யூட்டர்ல நிறைய வைரஸ் வந்திருச்சு.. பார்மட் (format) பண்ணலாம்னு இருக்கேன்.. அதனால உங்க பைல எல்லாம் ஒரு பேக்கப் (back-up) எடுத்து வச்சிக்கிட்டா உதவியா இருக்கும்..."

"சரிப்பா.."

சிறிது நேரம் கழித்து துறைத்தலைவர் தனது உதவியாளரை அழைத்து சொல்லி இருக்கிறார்.

"தம்பி... எல்லா பைலையும் காப்பி பண்ணி டெஸ்க்டாப்புல (Desktop) சேவ் பண்ணிட்டேன்.. இப்போ நீங்க ஏதோ பார்மட் பண்ணனும்னு சொன்னீங்களே.. அதைச் செய்யுங்க.."

உதவியாளருக்கு எங்கே போய் முட்டிக் கொள்ளுவதே என்றே தெரியவில்லை. "ஞே.."தான்.

அடயெங்கப்பா.. எங்க இருந்துதான் இவங்கள எல்லாம் பிடிச்சுட்டு வர்றாய்ங்களோ? இரண்டுமே உண்மையாக நடந்த சம்பவம்.. புனைவல்ல.. ஏதும் IT துறைக்கு வந்த சாபமா இருக்குமோ?

***************மேலே படத்தில் இருப்பது மதுரையின் பைபாஸ் ரோட்டில் இருந்து எல்லீஸ் நகருக்கு பிரியும் எண்பது அடி சாலையின் முகப்புப் பகுதி. அங்கே தரையோடு தரையாக இருக்கிறதே.. அது சாலையை இரண்டாகப் பிரிப்பதற்காக போடப்பட்ட தடுப்பு. ராத்திரி நேரங்களில் இது இருப்பதே தெரியாததால் நிறைய பிரச்சினை. இதனால் வாரத்துக்கு இரண்டு விபத்தாவது ஏற்பட்டு விடுகிறது. இரு சக்கர வாகனங்கள் நேராகப் போய் இதன் மீது மோதி விழுந்து விடுகிறார்கள் அல்லது யாரேனும் தங்களுடைய காரை இதன் மீதாக நட்டக்குத்தலாக ஏற்றி பார்க் (park) செய்து விடுகிறார்கள். உயிர்ச்சேதம் ஏற்படுமுன் மதுரை மாநகராட்சி மக்கள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா?

***************

இதுவரை எல்லாப் படங்களிலும் ஹிட்டடித்த ஜெயம் ராஜா - ரவியின் கூட்டணியில் தில்லாங்கடி இன்று வெளியாகிறது. எப்போதும் டிரைலர்களில் (மட்டுமாவது) அசத்தும் சன் டிவி இந்த முறை கோட்டை விட்டிருக்கிறார்கள். அதுவும் நளினியிடம் பன்ச் டயலாக் பற்றிப் பேசும் ஜெயம் ரவியின் குரல் - அவ்வ்வ்வவ்வ்வ்... சுத்தமாக ஒத்துழைக்கவில்லை. சன் டிவி - படம் என்ன ஆகுமெனத் தெரியவில்லை... பார்ப்போம்.

வெகு சமீபமாக வெளியான யுவனின் இசை ஆல்பங்களிலேயே "
தில்லாங்கடி"தான் படுமோசம் எனத் தைரியமாக சொல்வேன். எதுவுமே நம்ம ஊருப் பாட்டு மாதிரியே இல்லை. ஒரே கொல்டி வாடை. சொதப்பி எடுத்திருக்கிறார். அதே போல "நான் மகான் அல்ல"வும் Below par தான். புது வசந்தம் காலத்து பாட்டு போல ஆரம்பிக்கும் வா வா நெலாவப் புடிச்சு தரவா ஒரு பாட்டுதான் நன்றாக இருக்கிறது. கார்த்தி - யுவன் காம்பினேஷன் என்ற எதிர்பார்ப்புக்கு ஆப்பு.

***************

பொதுவாக ஆங்கில நாவல்களை விரும்பிப் படிக்க மாட்டேன். ஆனால் டான் பிரவுனின் "டாவின்சி கோட்" படித்த நாள் முதலாக அவருடைய ரசிகனாக மாறி விட்டேன். அவருடைய எழுத்தில் இருக்கும் வரலாற்றுப் பிழைகள், ஒரே மாதிரியான கதை சொல்லும் முறை என எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ரொம்ப நாட்களாகத் தேடி வந்த அவருடைய புத்தகமான "தி லாஸ்ட் சிம்பல்" இப்போதுதான் கிடைத்து இருக்கிறது. அடுத்து அதைத்தான் வாசிக்க வேண்டும்.

***************

வாழ்க்கையில் ஜெயித்தவர்களைப் பற்றிப் பேச நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் தோற்றவர்கள் பற்றி? மனதெல்லாம் ஆசைகளைச் சுமந்து, கனவுலகில் வாழ்ந்து, நிதர்சனத்தில் எதையுமே சாதிக்க முடியாமல்.. இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்து போனவர்கள் எத்தனை எத்தனை பேர்? அது போன்ற ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது அஜயன் பாலாவின் "ஒரு இலையின் வாழ்வு" என்கிற இந்த இடுகை. வாசித்துப் பாருங்கள் நண்பர்களே..

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி.. வழக்கம் போல ஒரு ஜோக்.

இன்னைக்கு உலகக் கோப்பை கால்பந்தால யாருக்கு ரொம்ப லாபம்னு கேட்டிங்கன்னா.. அது Paul க்குதான். அதாங்க.. ஜோசியம் சொல்ற ஆக்டோபஸ். இப்போ அதுக்கு ரொம்பக் கடினமான ஒரு டெஸ்ட். அதுக்கு முன்னாடி ரெண்டு டப்பா கெடக்குது. அதுல ஒண்ணை அது செலக்ட் பண்ணியாகணும். ஒரு நாள், ரெண்டு நாள், மூணு நாள்.. ஊஹும். அதுவும் யோசிக்குது யோசிக்குது.. ஒண்ணும் வேலைக்கு ஆகல. கடைசியாப் பார்த்துச்சு. டபக்குன்னு தண்ணிய விட்டு வெளில தவ்வி தற்கொலை பண்ணிக்கிச்சு. அட.. அப்படி என்ன அந்த ரெண்டு டப்பால எழுதி இருக்குன்னு கேக்குறீங்களா?

ஒண்ணுல .. வேட்டைக்காரன். இன்னொண்ணுல சுறா..

(நன்றி -அத்திரி)

***************

மேலே இருக்கும் பொன்மொழியைச் சொன்ன எழுத்தாளர் - ஜி.நாகராஜன்

இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

22 comments:

இராகவன் நைஜிரியா said...

பாவம் ஆக்டோபஸ்...

துறைத்தலைவர்களை பற்றி எழுதியது.. என்னா செய்வது அது அப்படித்தான்...

தில்லாலங்கடி தெலுங்கு படத்தில் ரீமேக். மினிமம் கேரண்டியில் ஓடிடும் என்று நினைக்கின்றேன்..

இராகவன் நைஜிரியா said...

ஹையா மீ த ஃபர்ஸ்ட்டோய்..

இராகவன் நைஜிரியா said...

war & piece படிச்சுப் பாருங்க... கீழே வைக்கவே மனசு வராது..

vasu balaji said...

ஹி ஹி. எங்க ஆபீஸ்ல டாக்டருக்கு தேவையான மெடிகல் சாஃப்ட்வேர், தரமானதா, வாங்கலாமான்னு டெக்னிக்கல் கிளியரன்ஸ் குடுக்கறது கோபாலும், ஆரக்கிளும் தெரிஞ்ச ஆசாமி. ஒரு டாக்டர் பயலாவது அவனுக்கு என்ன தெரியும்னு அவன நான் கேக்கறதுன்னு கேட்டதில்லை. இவரும் நாள பின்ன அதுல பிரச்சனைன்னா தனக்கு ஆப்புன்னு யோசிக்காம, ஆகா நாஞ்சொன்னாத்தானா வாங்க முடியும்னு ஹாப்பியா க்ளியரன்ஸ் குடுப்பாரு:))

ஆதவா said...

ஆக்டோபஸ் காமெடி... அசத்தல்.. தளபதியோட அடுத்த அஸ்தரம் ரெடியாயிட்டே இருக்கு சாரே.....

மேவி... said...

முதல் சம்பவம் நீங்கள் மாணவராக இருந்த பொழுது நடந்திருக்க வேண்டும் ..இரண்டாவது நீங்கள் வாத்தியாராக இருந்த பொழுது

அந்த படத்துல வடிவேலுக்கும் தமன்னாவுக்கும் டூயட் இருக்காமே ????

நான் மகான் இல்லை ட்ரைலர் ....சுத்த மோசம் ....

ரோடு அப்படிருக்கா ??? அதுக்கு தான் நான் உங்களை சென்னைக்கு வேலை பார்த்துகிட்டு வந்துற சொன்னேன் ......

நீங்க அஜித் என்பதை நான் ஒத்துகொள்கிறேன்

மேவி... said...

அண்ணே ..இல்லை இல்லை ...அங்கிள் நீங்க இன்னும் என் பிளாக் பக்கம் வரல

மேவி... said...

war & peace தமிழ் ல கூட வந்து இருக்கு...ஆனா நீங்க இங்கிலீஷ் லையே படிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

// இராகவன் நைஜிரியா said...
ஹையா மீ த ஃபர்ஸ்ட்டோய்.. war & piece படிச்சுப் பாருங்க... கீழே வைக்கவே மனசு வராது..//

நன்றிண்ணே.. அந்தப் புத்தகத்த வாங்கிப் படிக்கிறேன்..

// வானம்பாடிகள் said...
ஹி ஹி. எங்க ஆபீஸ்ல டாக்டருக்கு தேவையான மெடிகல் சாஃப்ட்வேர், தரமானதா, வாங்கலாமான்னு டெக்னிக்கல் கிளியரன்ஸ் குடுக்கறது கோபாலும், ஆரக்கிளும் தெரிஞ்ச ஆசாமி. ஒரு டாக்டர் பயலாவது அவனுக்கு என்ன தெரியும்னு அவன நான் கேக்கறதுன்னு கேட்டதில்லை. இவரும் நாள பின்ன அதுல பிரச்சனைன்னா தனக்கு ஆப்புன்னு யோசிக்காம, ஆகா நாஞ்சொன்னாத்தானா வாங்க முடியும்னு ஹாப்பியா க்ளியரன்ஸ் குடுப்பாரு:))//

Why Blood? Same Blood..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
ஆக்டோபஸ் காமெடி... அசத்தல்.. தளபதியோட அடுத்த அஸ்தரம் ரெடியாயிட்டே இருக்கு சாரே.....//

அது நம்ம பக்கமாத்தான் வருது.. எல்லோரும் ஓடுங்க..:-)))

@டம்பி மேவீ

உன்னைய போன்ல பேசிக்கிறேண்டி..

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//மதுரை சரவணன் said...
பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்//

வாங்க நண்பா..:-))

செ.சரவணக்குமார் said...

ஆக்டோபஸ் காமெடிய விட ஐ.டி காமெடி சூப்பர்.

தில்லாலங்கடி தெலுங்கு மூலமான கிக் நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம். தமிழில் நிச்சயம் சொதப்பியிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். காரணம் இயக்குனர் ராஜா காட்சிக்கு காட்சி அப்படியே ரீமேக்குவதில் வல்லவர்.

பகிர்வுக்கு நன்றி.

மேவி... said...

"கார்த்திகைப் பாண்டியன் said...

@டம்பி மேவீ

உன்னைய போன்ல பேசிக்கிறேண்டி.."

என்னொரு ஆணாதிக்க பதில் ....இந்த பதிலில் அமெரிக்காவின் அடக்கு முறையை காணுகிறேன் ....

உங்க அம்மாகிட்ட உங்களை போட்டு குடுத்தால் தான் பின்னோடதுக்கு ஒழுங்கா பதில் சொல்வீங்க போல ...ஹீ ஹீ ஹீ :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//செ.சரவணக்குமார் said...
ஆக்டோபஸ் காமெடிய விட ஐ.டி காமெடி சூப்பர்.தில்லாலங்கடி தெலுங்கு மூலமான கிக் நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம். தமிழில் நிச்சயம் சொதப்பியிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். காரணம் இயக்குனர் ராஜா காட்சிக்கு காட்சி அப்படியே ரீமேக்குவதில் வல்லவர்.//

படம் அவ்வளவு சொஸ்தம் இல்லைன்னு கேள்விப்பட்டேன் நண்பா

//டம்பி மேவீ said...
என்னொரு ஆணாதிக்க பதில் ....இந்த பதிலில் அமெரிக்காவின் அடக்கு முறையை காணுகிறேன் ..//

ஆமா இவரு பெரிய பின்லேடன்.. போப்பா.. கப்பித்தனமா பேசிக்கிட்டு.. அப்புறம்.. ஹி ஹி.. அம்மாக்கிட்ட எல்லாம் எதுக்கு? நாமளே பேசித் தீர்த்துக்குவோம் தல

kannamma said...

தல யோட அடுத்த படத்துக்காக உங்களோட சேர்த்து நாங்களும் வெயிட் பண்றோம் வரட்டும் அப்புறம் பேசிக்குரோம். ஆக்டோபஸ்... ithu ellom romba over............

கார்த்திகைப் பாண்டியன் said...

//kannamma said...
தல யோட அடுத்த படத்துக்காக உங்களோட சேர்த்து நாங்களும் வெயிட் பண்றோம் வரட்டும் அப்புறம் பேசிக்குரோம். ஆக்டோபஸ்... ithu ellom romba over....//

ஓகோ.. இப்படி ஒரு குரூப் வெயிட்டிங்ல இருக்கீங்களா? பார்க்கலாம்..

அத்திரி said...

//நன்றி -அத்திரி)//

::))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

// அத்திரி said...

//நன்றி -அத்திரி)//

::))))))//

Dedicated to அண்ணன் அத்திரி.. வாழ்கே..

ச.பிரேம்குமார் said...

//MS Office ல மேடம்.."

"ஓ.. ஏன்ப்பா அவ்ளோ கஷ்டப்பட்டு ஏதோ ஒரு ஆபிஸ்ல பண்ணனும்? நம்ம காலேஜ் ஆபிஸ்லேயே பண்ணலாமே.."//

இது சத்தியமா புருடாவா இருக்கனும் இல்ல 20 வருசத்துக்கு முன்னாடி நடந்திருக்கனும்.. ஏனா Ms officeல யாரும் ப்ராஜக்ட செய்யுறது கிடையாது

ச.பிரேம்குமார் said...

ஆனாலும், கல்லூரிகளில் இந்த துறையில் படிப்பவர்களை விட சொல்லிக்கொடுப்பவர்கள் கொஞ்சம் outdatedஆக தான் இருப்பார்கள். ஏனென்றால் இந்தத்துறையில் தினம் தினம் மாற்றம் வந்துக்கொண்டே தானிருக்கும்

கார்த்திகைப் பாண்டியன் said...

@ பிரேம்

ஹையா.. காணாமப் போன அண்ணன் பிரேம் திரும்பி வந்தாச்சு.. சத்தியமா அந்த ஆபிஸ் மேட்டர் உண்மையா நடந்ததுதான் தல.. அந்தம்மா பத்தி தெரிஞ்சு அந்தப் பையன் சிம்பிலா எம் எஸ் ஆபிஸ்னு சொன்னதுக்குத்தான் இந்த பதில்.. அப்புறம் இப்போ எங்க இருக்கிங்க நண்பா? அப்பப்போ வந்து போங்க.. முடிஞ்சா உங்க அலைபேசி எண்ணை கொடுங்க பிரேம்