July 31, 2010

ஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை (நிறைவு)..!!!

ஊறுகாயின் முதல் பகுதி இங்கே..

தூஸ்ரா பார்ட் இக்கட..

யார் அந்த ராகினி.. ராகினி.. ராகினி..

நீ எதுக்கு அவளுக்கு கார்டு போட்ட.. போட்ட.. போட்ட..

அது எப்படி அந்தக் குரங்குகிட்ட போச்சு.. போச்சு.. போச்சு..

பிளாஷ்பேக் ஸ்டார்ட்..

அது பாருங்க.. சின்ன வயசுல இருந்தே நமக்கு பொம்பளப் பிள்ளைங்கன்னா ஒரு இது.. அட.. இதுன்னா அதுதாங்க.. இப்போக்கூட எங்கம்மா பெருமையா சொல்லுவாங்க.. சிறுசுல எல்லாரும் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு ரொம்ப அடம் பிடிப்பாங்கள்ள.. நான் மட்டும் குடுகுடுன்னு ஓடிப்போய் ரிக்ஷாவுல ஏரி உக்காந்துக்குவேனாம்.. ஆனா அது ஏன்னு எனக்கு மட்டுதான் தெரியும். ஏன்னாக்க, அந்த ரிக்ஷாவுல ஒரே ஆம்பளப்பையன் நான்தான். அப்போ பார்த்துக்குங்க.. எந்த அளவுக்கு பிஞ்சுலேயே பழுத்த கேசுன்னு..

ஆள் வளர வளர, உல்டாவா அறிவு மங்கித்தான் போச்சு. கூட சேந்த டிக்கெட்டுகளும் அந்தக் கேசுதான். அப்புறம் எங்குட்டு உருப்பட? ஆறில் இருந்து அறுபது வரை.. அட படம் இல்லைங்க.. அந்த வயசுக்குள்ள இருக்குற ஒரு பிகரையும் விடுறது கிடையாது. ஆனா ஒரு கொள்கை. எதையும் எட்ட நின்னு ரசிக்கலாம்.. அவ்வளவுதான். தேவை இல்லாம தொந்தரவு பண்ணக் கூடாது.. நல்லா இருக்கில்ல?

ஓகே.. இன்னும் கதைக்குள்ளையே போகாம ஏண்டா இப்படி கழுத்த அறுக்குற - இது வாசிக்குரவங்களோட மைன்ட்வாய்ஸ். சோ.. இனி கதை..

ஒன்பதாம் கிளாஸ் தொடங்குற முத நாளன்னைக்கு அவளைப் பார்த்தேன். புதுசா வந்து எங்க கிளாஸ்ல சேர்ந்தா. ராகினி.. பாருங்க.. பேரை சொல்லும்போதே சிலிர்க்குது. அவளைப் பத்தி ஒரே ஒரு வாக்கியம். அவ்ளோ அழகு.

ஒழுசப் படத்துல வந்த ஒரே ஒரு நல்ல பிட்டு மாதிரி, அமாவாசைல வந்த நிலா மாதிரி.. எங்க கிளாஸ்ல இருந்த அத்தனை பிகரையும் அவ தூக்கி சாப்டுட்டா. அவக்கிட்ட பேச மாட்டோமான்னு எல்லாரும் ஏங்க ஆரம்பிச்சாச்சு. ஆனா அவ கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். பொம்பளப் பிள்ளைங்க கிட்டக் கூட யோசிச்சுத்தான் பேசுவா.

இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. அன்னைக்கு ஒரு நிறைஞ்ச சனிக்கிழமை. முந்தின நாள் சாயங்காலம் பார்த்த "காதலுக்கு மரியாதை" பாட்டை முனங்கிக்கிட்டே பியூரட்டைக் கழுவிக்கிட்டு இருக்கேன். பின்னாடி இருந்து யாரோ "ஹாய்"னு கூப்பிட திரும்புறேன். பார்த்தா.. அப்டியே ஷாக் ஆகிட்டேன். அங்கே ராகினி. கிளாசே பேசணும்னு நினைக்கிற ராகினி தானா வந்து என்கிட்டே பேசுறா.. ஐயோ.. ஐயோ.. இது கனவா இல்லை நிஜமா?

ஏன் எப்படின்னு தெரியல. ஆனா அங்க ஆரம்பிச்சு அவ எனக்கு நல்ல பிரண்ட் ஆகிட்டா. பசங்களுக்கு எல்லாம் ஒரே காண்டு. அவனுங்கள எவன் மதிச்சான்? கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஓடிப் போச்சு. உள்ளுக்குள்ள உருவாகிட்ட என்னோட காதலை எப்போ அவக்கிட்ட சொல்றது?

அந்த நாள் தானா வந்துச்சு. என்கிட்டே அவளே எதேச்சியா கேட்டா.

"ஏன்டா.. என்னைய உனக்கு ரொம்பப் புடிக்குமா?"

"ஆமா ராகினி.. நிறைய.. நிறையப் புடிக்கும்.."

"எனக்காக என்ன வேணும்னாலும் செய்வியா?"

"கண்டிப்பா.. சொல்லு.. என்ன பண்ண? ஹோம் வொர்க் பண்ணலன்னு உன்ன அடிச்சானே வாத்தி.. அவன் மூஞ்சில பிளேட் போட்டுரவா? இல்ல வேற ஏதாவது?"

"ஏய்.. அதெல்லாம் வேண்டாம்.. நீ தைரியசாலிதான்.. ஒத்துக்குறேன்.. ஆனா அத எனக்கு புரூப் பண்ணனும்.."

"எப்புடி?"

"எங்க வீட்டுக்கு, என் பேருக்கு ஒரு கிரீட்டிங் கார்டு போடணும்.. அவ்வளவுதா.."

ஆகா.. மூர்த்தி.. இப்படி ஒரு வாய்ப்புக்குத்தாண்டா ஏங்கிக்கிட்டு இருந்த. யூஸ் பண்ணிக்கோ. கடை கடையா அலஞ்சு ஒரு பிரண்ட்ஷிப் கார்டு (அவங்க வீட்டுல மாட்டிக்கிட்டா சமாளிக்கனும்ல) வாங்கி.. அதுல அழகா கையெழுத்தும் போட்டு அனுப்பினா.. அதுதான் இப்போ ஒரு கொரங்கு கையில சிக்கி, அது வந்து என்னைய மிரட்டிட்டு போகுது. இது எப்படின்னு நாளைக்கு ராகினிக்கிட்ட கேட்டுரணும்.

பிளாஷ்பேக் ஓவர்.. இட்ஸ் டைம் டு கம் பேக் டு நார்மல்..

மறுநாள் ஸ்கூலுக்குப் போறேன். எனக்காக ராகினி படபடப்பாக் காத்துக்கிட்டு இருக்கா.

"என்னடா ஆச்சு? நேத்து ஸ்கூலுக்கு வரல?"

"அது.. அது.. அம்மா கூட கோயிலுக்குப் போயிட்டேன்.."

"அப்பாடா.. அவ்வளவுதான? நான் கூட யாரும் மிரட்டுனதால நீ மெரண்டு போய் வரலையோன்னு ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?"

டமார் டுமீர்.. எனக்குள்ள ஒரு டிரான்ஸ்பாமர் வெடிக்குது. என்னது.. என்னை ஆளுங்க மெரட்டினது இவளுக்கு தெரியுமா?

"உனக்கு எப்படி..?"

அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

"நேத்து சாயங்காலம் ராஜா வந்து என்கிட்ட பேசினான்.."

ராஜா? அது யாரு? ஓ.. ஓவரா ஆடுனானே அந்த ஒல்லிப்பிச்சான்.. அவனா? சரி..?

"இல்லடா.. தப்பா எடுத்துக்காத.. அவன் ரொம்ப நாளா என் பின்னால சுத்திக்கிட்டு இருக்கான்.. ஆனா அவன் என்ன விரும்புறானா இல்ல விளையாட்டுக்கு சுத்துறானான்னு தெரியல.. அதனாலத்தான்.."

"அதனால..?"

"உன்னை எனக்கு ஒரு கார்டு போடச் சொன்னேன்.. தெரியாத மாதிரி அந்தக் கார்ட நானே அவன் கண்ணுல படுற மாதிரி ரோட்டுல போட்டுட்டு போனேன்.. அதைப் பார்த்துட்டுத்தான் அவன் உன்னை மிரட்டினான்... அப்புறமா என்கிட்டே வந்து பேசிட்டான்.."

"ஐயையையோ.. அதுக்கு நீ என்ன சொன்ன?"

"சீ போடா.. எனக்கு வெக்கமா இருக்கு.." ஓடியே போயிட்டா.

அடப் பாதகத்தி.. அவன லவ் பண்றாளா? அப்போ நானு?

இப்போ இந்தக் கதையோட தலைப்ப நல்ல அழுத்திப் படியுங்க மக்களே..

ஊறுகா..

இப்படியாக ஒரு தெய்வீகக் காதல் ஊத்தி மூடப்பட்டது..!!!

14 comments:

மேவி... said...

ஒரு புள்ள கிட்ட பல்பு வாங்கிகிட்டு , அதை வேற புனைவுன்னு எழுதுறீங்க ...என்ன கொடுமை இது .....அதுவும் அந்த புள்ள போதைக்கு நீங்க ஊறுகாய் யானைத பெருமையா வேற சொல்லிருக்கீங்க

அப்பவே அந்த புள்ளைக்கு தெரிஞ்சு போயிருச்சு ..இது வெறும் காமெடி பீஸ்ன்னு ......

இன்னும் இலக்கியம், சங்க தமிழ்ன்னு சுத்திகிட்டு இருங்க, எந்த பிகரும் செட் ஆகாது.

(தல என்னையும் 12 வயசு ல இருந்து எல்லா பொண்ணுகளும் இப்படியே டீல் பண்ணுறாங்க ..... )

(ஆயிரம் வசதிருந்தும், கடலை போட ஒரு பிகர் இல்லையே ...no peace of mind )

ஆதவா said...

ஹாஹா.... கடைசி நேர ட்விஸ்ட் எதிர்பார்த்தாப்ல அருமை..
பாவம்ங்க. இப்படியெல்லாமா யோசிப்பாங்க பெண்கள்?

கதை நல்லா இருக்கு. ஆனா அதைவிட ஏமாந்த புள்ளயை நெனச்சாத்தான்....

சிப்பு சிப்பா வருது

ஆதவா said...

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=608650

அண்ணே, தமிழ்மணத்தில உங்களுக்கு ஓட்டு போட்டா வேற யாருக்கோ போவுதே.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
ஒரு புள்ள கிட்ட பல்பு வாங்கிகிட்டு , அதை வேற புனைவுன்னு எழுதுறீங்க ...என்ன கொடுமை இது .....அதுவும் அந்த புள்ள போதைக்கு நீங்க ஊறுகாய் யானைத பெருமையா வேற சொல்லிருக்கீங்க //

கெத்துல..

//அப்பவே அந்த புள்ளைக்கு தெரிஞ்சு போயிருச்சு ..இது வெறும் காமெடி பீஸ்ன்னு ......இன்னும் இலக்கியம், சங்க தமிழ்ன்னு சுத்திகிட்டு இருங்க, எந்த பிகரும் செட் ஆகாது. //

அவ்வ்வ்வவ்

//(தல என்னையும் 12 வயசு ல இருந்து எல்லா பொண்ணுகளும் இப்படியே டீல் பண்ணுறாங்க ..... )//

why blood? same blood..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
ஹாஹா.... கடைசி நேர ட்விஸ்ட் எதிர்பார்த்தாப்ல அருமை..
பாவம்ங்க. இப்படியெல்லாமா யோசிப்பாங்க பெண்கள்?கதை நல்லா இருக்கு. ஆனா அதைவிட ஏமாந்த புள்ளயை நெனச்சாத்தான்....
சிப்பு சிப்பா வருது//

பையன் ஏற்கனவே நொந்து போய் இருக்கான்.. பாவம்.. விட்டுருங்கப்பா..

//ஆதவா said...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=608650அண்ணே, தமிழ்மணத்தில உங்களுக்கு ஓட்டு போட்டா வேற யாருக்கோ போவுதே//

நான் தமிழ்மணத்துல இணைக்கல ஆதவா.. வேற யாரோ இணைச்சு இருக்காங்க.. ஒரு வேளை அவங்களுக்கு போகுதோ என்னவோ? இப்போ சரி ஆகிடுச்சு..


// ஸ்ரீ said...
:-)))))))))//

இதுக்கு நீங்க நேரடியாவே திட்டி இருக்கலாம் அண்ணே..:-)))

kannamma said...

இத நாங்க முன்னாடியே முடிவு பண்ணிட்டோம் .என்ன கூட சேர்த்து அடி விழும்னு எதிபார்த்தோம்.........
ஜஸ்ட் மிஸ்.......
//அப்பவே அந்த புள்ளைக்கு தெரிஞ்சு போயிருச்சு ..இது வெறும் காமெடி பீஸ்ன்னு ....//
நூத்துல ஒரு வார்த்த.........DONT CRY......

நேசமித்ரன் said...

ஒரு புள்ள கிட்ட பல்பு வாங்கிகிட்டு , அதை வேற புனைவுன்னு எழுதுறீங்க ...என்ன கொடுமை இது .....அதுவும் அந்த புள்ள போதைக்கு நீங்க ஊறுகாய் யானைத பெருமையா வேற சொல்லிருக்கீங்க

அப்பவே அந்த புள்ளைக்கு தெரிஞ்சு போயிருச்சு ..இது வெறும் காமெடி பீஸ்ன்னு ......//


என்னா கொலவெறி பாஸ்

ஆனா இல்லைன்னும் சொல்ல முடிலதானே
:)))

மதுரை சரவணன் said...

கதை அருமை.நல்ல தலைப்பு ...நல்ல கதை.

சொல்லரசன் said...

//அடப் பாதகத்தி.. அவன லவ் பண்றாளா? அப்போ நானு?//


ஸ்ரீ யின் சிரிப்பில் இருந்து எனக்கு எல்லாம் புரிந்து விட்டது.

சுவாமிநாதன் said...

உக்காந்து யோசிப்பாங்களோ! நல்லாதான் இருக்குது, இபடியே போனா வெறும் மைன்ட் வாய்ஸ் மட்டும்தான் கேக்கும் (சீக்கிரம் டீல் விடுற வழிய பாருங்க).

ஹேமா said...

//ஆள் வளர வளர, உல்டாவா அறிவு மங்கித்தான் போச்சு.//

கார்த்தி ....ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சிருக்கு உங்களுக்கு !

//கூட சேந்த டிக்கெட்டுகளும் அந்தக் கேசுதான். அப்புறம் எங்குட்டு உருப்பட?//

கூட சேந்ததுல ஒண்ணு
"மேவி"தானே !
பாருங்க பாவம் எவ்ளோ பீலிங்ஸ் !

கார்த்திகைப் பாண்டியன் said...

//kannamma said...
இத நாங்க முன்னாடியே முடிவு பண்ணிட்டோம் .என்ன கூட சேர்த்து அடி விழும்னு எதிபார்த்தோம்.........
ஜஸ்ட் மிஸ்.......//

அடப்பாவிகளா..

//நேசமித்ரன் said...
என்னா கொலவெறி பாஸ்ஆனா இல்லைன்னும் சொல்ல முடிலதானே
:)))//

யூ டூ நேசன்?

// மதுரை சரவணன் said...
கதை அருமை.நல்ல தலைப்பு ...நல்ல கதை.//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

// சொல்லரசன் said...
ஸ்ரீ யின் சிரிப்பில் இருந்து எனக்கு எல்லாம் புரிந்து விட்டது.//

அதேதான் அண்ணே..:-)

//சுவாமிநாதன் said...
உக்காந்து யோசிப்பாங்களோ! நல்லாதான் இருக்குது, இபடியே போனா வெறும் மைன்ட் வாய்ஸ் மட்டும்தான் கேக்கும் (சீக்கிரம் டீல் விடுற வழிய பாருங்க).//

எல்லாம் என் நேரம் சாமி..

//ஹேமா said...
கார்த்தி ....ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சிருக்கு உங்களுக்கு !//

ஹேமா.. நீங்களும் கிண்டல் பண்றீங்க பார்த்தீங்களா?

//கூட சேந்ததுல ஒண்ணு
"மேவி"தானே !பாருங்க பாவம் எவ்ளோ பீலிங்ஸ் !//

ஹி ஹி.. எச்சாட்லி..