August 2, 2010

நாங்களும் ரவுடிதாண்டியேய்..!!!

கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா இணையத்துல எழுதிக்கிட்டு இருக்கோமே.. இதனால் நமக்கு என்ன கிடைச்சிருக்குன்னு யோசிச்சு பார்த்தா, சட்டுன்னு ரெண்டு விஷயத்த சொல்லலாம்ணே... மனசு நெறைய சந்தோசம், நட்புங்குரதையும் மீறி நம்ம மேல அன்பு செலுத்துற நல்ல உள்ளங்கள். இது போதாதா? சின்னதா ஒரு அயர்ச்சி வரும்போதெல்லாம் உங்க அன்புதாண்ணே நம்மள நிக்காம ஓட வச்சுக்கிட்டு இருக்கு.. அதுக்கு உங்க எல்லோருக்கும் முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.

சரி.. எதுக்குடா இப்போ இந்த பில்டப்புன்னு கேகுறீங்களா? எல்லாம் ஒரு சின்ன சூதுதாண்ணே. நம்ம பதிவுலக நண்பர்கள் பலரும் அவவங்க தளத்துல வாசகர் கடிதம்னு போடுவாங்க. எனக்கு அதையெல்லாம் பாக்குறப்ப கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கும். என்னடா.. நாமளும் எழுதுறோம்.. ஆனா இது வரைக்கும் ஒரு வாசகர் கடிதம் கூட வந்தது இல்லையே.. ஏன்?

சரி விடுடா பாண்டியா.. நமக்கு துபாய், ஓமன், அண்டார்டிகா முதலான பல நாடுகள்லதான் வாசகர்கள் இருக்குறாங்க.. அவங்களுக்கு தமிழ் எழுதத் தெரியாததனால கடிதம் வரலன்னு நம்மள நாமளே சமாதனம் பண்ணிக்கிறது.. ஒரு சில சமயம் நமக்கு நாமே திட்டத்த பயன்படுத்திக்குவோம்மான்னு நினைப்பேன். அப்புறம்.. ச்சே ச்சே.. இந்த இலக்கியவாதி எழுத்தாளப் பயலுகதான் அப்படி பண்ணுரானுங்கன்னா, நம்மளுமா? வேண்டாம்னு விட்டாச்சு. ஹி ஹி ஹி.. கானா பானா வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்தான..

ஆனாலும் ஒரு சின்ன சோகம் உள்ளுக்குள்ளியே இருந்துச்சுண்ணே. இப்போ விஷயம் என்னன்னா.. அந்த சின்ன சோகமும் நமக்கு இல்லாம போச்சு. வந்துருச்சுல வந்துருச்சுல.. எங்களுக்கும் வாசகர் கடிதம் வந்திருச்சுல.. அந்தக் கடிதங்களையும், சந்தோஷத்தையும் உங்களோட பகிர்ந்துக்கத்தான் இந்த இடுகை.

கடிதம் 1:

அன்புள்ள கார்த்தி,

நான் மகி. என் பெயர் வேண்டுமானால் இளமையாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நிரம்ப வயதானவள். பல நாட்களாக உங்களுடைய தளத்தை (சத்தமில்லாமல்) வாசித்து வருகிறேன். இதுவரை எந்தப் பின்னூட்டமும் போட்டது கிடையாது. நானும் ஒரு ஆசிரியர். என்னைப் போன்ற ஆசிரியர் ஒருவர் தமிழின் மீது ஆர்வம் கொண்டு எழுதுவதைக் காணும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு தமிழ்ப் பழமொழியைச் சொல்லி உங்களை வாழ்த்த விரும்புகிறேன். "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.." அதேதான். நீங்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்ய செய்ய தங்களுக்கான நல்ல விஷயங்கள் தானே நடந்தேறும். தொடர்ந்து எழுதுங்கள். விரைவில் உங்கள் திருமணம் நடந்தேற வாழ்த்துக்கள்.

ரொம்ப நன்றிங்க.. அந்த கடைசி வரிய நோட் பண்ணுங்கப்பா..:-)))))

கடிதம் 2:

அண்ணே வணக்கம். உங்க தம்பி பாசத்துடன் எழுதும் சாரி டைப் பண்ணும் மெயில். உங்க வலைப்பூவோட அதிதீவிர ரசிகன் நான். உங்க பதிவுகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. நானும் மதுரைக்காரன்தாண்ணே. மதுரைய ஒட்டி வர உங்கப் பதிவுகளை ரொம்ப விரும்பி படிப்பேன்.

உங்க பதிவுலையே எனக்கு ரொம்பப் பிடிச்சது, ரயில்ல உங்களை மாப்பிள்ளை பார்த்ததா வருமே.. அதுதாண்ணே. இப்போ நினைச்சாக்கூட சிரிப்பு வருது. என்னோட மொபைல ஸ்பீட் டயல் ஒண்ணுல உங்க பதிவுதான் இருக்குண்ணே.. மத்த வலைப்பதிவே எல்லாம் புக்மார்க் பண்ணி வச்சிருக்கேன் அண்ணே. ஆனா உங்க பதிவு நானே டைப் பண்ணிடுவேன். மனப்பாடமாத் தெரியும். உங்க பதிவுன்னா எனக்கு அவ்வளவு பிரியம்.

நான் தினமும் உங்க ப்ளாகை பார்ப்பேன். ஆனா நீங்க தினமும் எழுதுறது இல்ல. அது எனக்கு வருத்தம்தான். நீங்க எவ்ளோ பிசியா இருந்தாலும் எனக்காக தினமும் ஒரு பதிவு போடணும்.செய்வீங்களா?

அண்ணே.. நானும் ஒரு லெக்சரர் தான் .. உங்க கூட பேசணும்னு ஆசையா இருக்கு.. உங்க நபரைத் தர முடியுமா? உங்கள் பதிலை எதிர்பார்க்கும அன்புத்தம்பிஅன்பு.

இதைப் படிச்சதும். எனக்கு ஒரே குழப்பம். ஒரு வேளை நம்ம மாணவர்கள் யாரும் நம்ம கூட விளையாடுறாங்களோன்னு? சரி எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு பதில் மடல் அனுப்புனேன்.

அன்பின் அன்பு..

உங்கள் அன்புக்கு நன்றி.. நீங்க என்னை ஓட்டுறீங்கன்னு ரொம்ப நல்லாத் தெரியுது.. சந்தோஷம்.. என்னைய நல்லாத் தெரிஞ்ச யாரோதான் நீங்க.. நானும் ஒரு லெக்சரர்னு சொல்றீங்க.. அது உண்மையில்லைன்னு நினைக்கிறேன்....அப்படி இல்லாமல் நீங்கள் சொல்வது உண்மைனா ரொம்ப மகிழ்ச்சி.. தமிழ் மீது ஆர்வம் கொண்ட இன்னுமொரு ஜீவன்னு மனசு கொண்டாடும்.. என்னோடு பேச நினைத்தால் உங்கள் அலைபேசி எண்ணை அனுப்புங்கள்.. நானே தொடர்பு கொள்கிறேன். மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி..

பிரியமுடன்,
மா.கார்த்திகைப்பாண்டியன்

சற்றே நேரத்தில் பதட்டமான பதில் வந்து சேர்ந்தது.

அண்ணே.. உங்க மேல ஒரு இனம்புரியாத நெருக்கம். அதனாலத்தான் விளையாட்டா மெயில் அனுப்பினேன். தப்பா எடுத்துக்காதீங்க. என்னோட நம்பர் $%^&$#@. உங்களோட பேச ஆர்வமா இருக்கேன்.

கூப்பிட்டேன். தம்பி அன்பு புதுக்கோட்டை அதுகே இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறாராம். என்னுடைய நீண்ட நாள் வாசகர். கூச்சத்தின் காரணமாக இத்தனை நாள் பேசாமல் இருந்ததாகச் சொன்னார். நிறைய பேசினோம். அடுத்த முறை நேரில் சந்திக்கலாம் என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.

பதிவுலகில் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, நாமும் சில மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறோம் என்று கொஞ்சம் பெருமையாக இருக்கிறது. அதே நேரம்.. போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. எதையில் மண்டையில் ஏற விடாத வரைக்கும் நல்லது என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். இந்த வலைப்பூவுக்குத் தங்கள் ஆதரவைத் தந்து கொண்டிருக்கும், எப்போதும் தரப்போகும் பதிவுலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!!!

38 comments:

மேவி... said...

aiyo daa sami

மேவி... said...

கார்த்தி புது வேலை ல நான் செய்ற வரைக்கும் வெட்டியா தானிருப்பேன் ....இப்பதேல்லாம் எழுதி என்னை கொடுமை படுத்தாதீங்க

மேவி... said...

பிறகு உங்க பிளாக் யை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்குற அளவுக்கு கொண்டு போகாதீங்க !!!

பிறகு உங்க டவுசரை கிழிச்ச தான் வழிக்கு வருவீங்க போலிருக்கு ......

கார்த்தி ....உங்க பதிவுகளிலெல்லாம் இப்ப ஒரு
மாற்றம் தெரிதே ??? என்ன காரணம் ???

மேவி... said...

"ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.."

தன் பிள்ளை கொடைக்கானலுக்கு போய் வளரும் .....

மேவி... said...

".. அந்த கடைசி வரிய நோட் பண்ணுங்கப்பா..:-)))))"

நோட் பண்ணினாலும் ஒரு உபயோகமும் இல்லைன்னே ......

(பொண்ணு பார்க்க போகும் பொழுது பொண்ணு கிட்ட தனிய போய் இலக்கியம் பேசாதீங்க ....... நீங்க அப்படி பேசாமல் இருந்தாலே பொண்ணு உங்களை ஓகே பண்ணிடும் )

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//ஒரு சில சமயம் நமக்கு நாமே திட்டத்த பயன்படுத்திக்குவோம்மான்னு நினைப்பேன்//

:)

நா.பார்த்தசாரதி said...

உங்களது எழுத்தாளுமை என்னை பிரமிக்க வைக்கிறது.

vasu balaji said...

/ரொம்ப நன்றிங்க.. அந்த கடைசி வரிய நோட் பண்ணுங்கப்பா..:-)))))/

அட தேதியச் சொன்னா நோட்பண்ண வசதியா இருக்கும்ல கார்த்தி:))

முட்டியாள் said...

300 adikka valthukkal karthigai sir

அப்பாவி முரு said...

//பதிவுலகில் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, நாமும் சில மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறோம் என்று கொஞ்சம் பெருமையாக இருக்கிறது//

:)

Joe said...

எதிர்கால எஸ்.ரா-வே வருக, உங்கள் இணையத் தளத்தில் பல இடுகைகளைத் தருக! ;-)

கலக்குறீங்க கார்த்திக்!

ஹேமா said...

கார்த்தி....நாங்களுமிருக்கிறோம்ல சுவிஸ் ல !உங்க நண்பிதான் !

Jackiesekar said...

உண்மைதான் கார்த்தி அது போலான கடிதங்கள் போன் கால்கள் வரும் போது நாம் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை,,,

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
aiyo daa samiகார்த்தி புது வேலை ல நான் செய்ற வரைக்கும் வெட்டியா தானிருப்பேன் ....இப்பதேல்லாம் எழுதி என்னை கொடுமை படுத்தாதீங்க//

எல்லாம் ஒரு விளம்பரம்தானேப்பா..

//டம்பி மேவீ said...
பிறகு உங்க பிளாக் யை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்குற அளவுக்கு கொண்டு போகாதீங்க !!!பிறகு உங்க டவுசரை கிழிச்ச தான் வழிக்கு வருவீங்க போலிருக்கு ......//

நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்ல தல.. (நன்றி:வால்பையன்)

//டம்பி மேவீ said...
நோட் பண்ணினாலும் ஒரு உபயோகமும் இல்லைன்னே ......
பொண்ணு பார்க்க போகும் பொழுது பொண்ணு கிட்ட தனிய போய் இலக்கியம் பேசாதீங்க ....... நீங்க அப்படி பேசாமல் இருந்தாலே பொண்ணு உங்களை ஓகே பண்ணிடும் )//

முடியாது முடியாது.. பிழியப் பிழிய இலக்கியம் பேசி பிள்ளைய கொலையா கொலையா கொல்வோம்ல..:-))

kannamma said...

naangalum irukkom thozhare............

கார்த்திகைப் பாண்டியன் said...

//ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said... //ஒரு சில சமயம் நமக்கு நாமே திட்டத்த பயன்படுத்திக்குவோம்மான்னு நினைப்பேன்// :)//

தோணுனத அப்படியே எழுதிட்டேன் தல..:-)))

//நா.பார்த்தசாரதி said...
உங்களது எழுத்தாளுமை என்னை பிரமிக்க வைக்கிறது.//

அவ்வ்வ்வ்வ்.. யாரு சாமி நீங்க? மறுபடி மொதல்ல இருந்தா? தாங்காது சாமி...

//வானம்பாடிகள் said...
அட தேதியச் சொன்னா நோட்பண்ண வசதியா இருக்கும்ல கார்த்தி:))//

பாலா சார்.. தெரிஞா நான் ஏன் இப்படி ஒத்தையில பொலம்பிக்கிட்டு இருக்கேன்?

கார்த்திகைப் பாண்டியன் said...

//முட்டியாள் said...
300 adikka valthukkal karthigai sir//

நன்றிங்க..

// அப்பாவி முரு said...
//பதிவுலகில் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, நாமும் சில மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறோம் என்று கொஞ்சம் பெருமையாக இருக்கிறது// :)//

உங்களையும் சேர்த்துத்தான் முரு:-))

// Joe said...
எதிர்கால எஸ்.ரா-வே வருக, உங்கள் இணையத் தளத்தில் பல இடுகைகளைத் தருக! ;-) கலக்குறீங்க கார்த்திக்!//

தல.. நேரடியா ஓட்டுங்க.. சொல்லிப்புட்டேன்..:-))

வார்த்தை said...

//ஒரு சில சமயம் நமக்கு நாமே திட்டத்த பயன்படுத்திக்குவோம்மான்னு நினைப்பேன். அப்புறம்.. ச்சே ச்சே.. இந்த இலக்கியவாதி எழுத்தாளப் பயலுகதான் அப்படி பண்ணுரானுங்கன்னா, நம்மளுமா?//

:)வி.வி.சி
(விழுந்து விழுந்து சிரிக்கிறேன்)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said...
கார்த்தி....நாங்களுமிருக்கிறோம்ல சுவிஸ் ல !உங்க நண்பிதான் !//

ஐயோ.. ஹேமா.. உங்களை விடுவேனா? பிரியத்துக்குரிய தோழி உங்களுக்கும் என் நன்றி..:-)))

//ஜாக்கி சேகர் said...
உண்மைதான் கார்த்தி அது போலான கடிதங்கள் போன் கால்கள் வரும் போது நாம் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை,//

அழைத்து வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றிண்ணே..:-)))

//kannamma said...
naangalum irukkom thozhare......//

நன்றிங்க.. உங்கள மாதிரி மக்கள் தானங்க நமக்கு உந்து சக்தி.. ரொம்ப நன்றிங்க..:-)))

தேவன் மாயம் said...

கார்த்தி! இதுபோல் இன்னும் எத்தனையோ கோடி மக்கள் அன்பை வெளியோ சொல்லமுடியாமல் இருக்கிறார்கள்! அதில் நானும் ஒருவன்!- அனானி! (என்னைக்கண்டு பிடிக்க முயல வேண்டாம்!!!)

Cable சங்கர் said...

ரெளடியானதற்கு வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// வார்த்தை said...
:)வி.வி.சி (விழுந்து விழுந்து சிரிக்கிறேன்)//

ரசிச்சீங்கல.. போதுங்க...:-)

//தேவன் மாயம் said...
கார்த்தி! இதுபோல் இன்னும் எத்தனையோ கோடி மக்கள் அன்பை வெளியோ சொல்லமுடியாமல் இருக்கிறார்கள்! அதில் நானும் ஒருவன்!- அனானி! (என்னைக்கண்டு பிடிக்க முயல வேண்டாம்!!!)//

தேவா சார்ர்..:-)))

//Cable Sankar said...
ரெளடியானதற்கு வாழ்த்துக்கள்.//

ரொம்ப நன்றிண்ணே

sathishsangkavi.blogspot.com said...

////பதிவுலகில் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, நாமும் சில மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறோம் என்று கொஞ்சம் பெருமையாக இருக்கிறது//

வாத்தியாரே...

உங்களுக்கு மட்டுமல்ல நமக்கு எல்லோருக்குந்தான்....

மதுரை சரவணன் said...

அய்யா ரவுடியா...கொஞ்சம் பயமா தான் இருக்கு.... உங்கள ரவுடியாக்கிய பாக்கியம் எனக்கும் உண்டு... வாழ்த்துக்கள்.

நீச்சல்காரன் said...

நானும் உங்கள் தளத்தைப் படிக்கிறேன் நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

/////////?/மனசு நெறைய சந்தோசம், நட்புங்குரதையும் மீறி நம்ம மேல அன்பு செலுத்துற நல்ல உள்ளங்கள். இது போதாதா? சின்னதா ஒரு அயர்ச்சி வரும்போதெல்லாம்/////////


நீங்கள் சொல்வதுபோல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் நண்பரே . எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி . இதனை உறவுகள்.
சில நேரங்களில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியே !

Manoj said...

Vanakkam Sir...very eager to talk with u sir....mail ur number to me manojsmiles@gmail.com...

கார்த்திகைப் பாண்டியன் said...

//Sangkavi said...
வாத்தியாரே... உங்களுக்கு மட்டுமல்ல நமக்கு எல்லோருக்குந்தான்....//

:-)))))))))

//மதுரை சரவணன் said...
அய்யா ரவுடியா...கொஞ்சம் பயமா தான் இருக்கு.... உங்கள ரவுடியாக்கிய பாக்கியம் எனக்கும் உண்டு... வாழ்த்துக்கள்.//

அண்ணே... இவரு அன்பான ரவுடிண்ணே..:-))))

// நீச்சல்காரன் said...
நானும் உங்கள் தளத்தைப் படிக்கிறேன் நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்...

நீங்கள் என்னைப் பின்தொடர்வது தெரியும் நண்பா.. நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

// !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... நீங்கள் சொல்வதுபோல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் நண்பரே . எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி . இதனை உறவுகள். சில நேரங்களில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியே !//

சிலன்னு சொல்லாதீங்க நண்பா.. ”பல”ன்னு சொல்லுங்க..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

// Manoj said...
Vanakkam Sir...very eager to talk with u sir....mail ur number to me manojsmiles@gmail.com...//

கண்டிப்பாடா.. இன்றிரவு அனுப்பி விடுகிறேன்..

ஆனந்த் said...

கொஞ்ச நாளாக படித்து வருகிறேன்.. உங்க ப்ளாக் மாதிரியானவை இருக்கிறதால தான் தமிழில் எழுதவும் படிக்கவும் ஆசையே இவ்ளோ வயசுக்கப்புறம் வருது... காலேஜ்ல நீங்க வாத்தியாரா வந்திருக்கலாம்.. நன்றிகள்.. மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்...

ஜெய்சக்திராமன் said...

//எல்லாம் ஒரு விளம்பரம்தான்!!!//

ஏன் சார் நமக்கு இதெல்லாம் தேவையா? ;-)

அப்புறம், உ- பா படிச்சிட்டு இருக்கேன்... அருமையா போகுது...
ஒவ்வொரு பக்கமும் மனச அள்ளுது...
ரொம்ப நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆனந்த் said...
கொஞ்ச நாளாக படித்து வருகிறேன்.. உங்க ப்ளாக் மாதிரியானவை இருக்கிறதால தான் தமிழில் எழுதவும் படிக்கவும் ஆசையே இவ்ளோ வயசுக்கப்புறம் வருது... காலேஜ்ல நீங்க வாத்தியாரா வந்திருக்கலாம்.. நன்றிகள்.. மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்...//

ரொம்ப நன்றிங்க.. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல.. தொடர்ந்து வாசிங்க.. அத்தோட எழுதுங்க..:-)))

// ஜெய்சக்திராமன் said...
ஏன் சார் நமக்கு இதெல்லாம் தேவையா? ;-) அப்புறம், உ- பா படிச்சிட்டு இருக்கேன்... அருமையா போகுது...ஒவ்வொரு பக்கமும் மனச அள்ளுது...ரொம்ப நன்றி..//

:-)))))))))))))))

நசரேயன் said...

விரைவில் உங்கள் திருமணம் நடந்தேற வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

ரெம்ப சிரமப் படவேண்டாம், என்கிட்டே நிறைய மாதிரி வாசகர் கடிதம் இருக்கு

Hari Rajagopalan said...

Hi Karthik

Keep it up!!

Hari Rajagopalan

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said...
விரைவில் உங்கள் திருமணம் நடந்தேற வாழ்த்துக்கள். //

//நசரேயன் said...
ரெம்ப சிரமப் படவேண்டாம், என்கிட்டே நிறைய மாதிரி வாசகர் கடிதம் இருக்கு//

ரெண்டுமே வில்லத்தனமான கமெண்டா இருக்கேண்ணே..

// Hari Rajagopalan said...
Hi Karthik Keep it up!!//

நன்றி நண்பா

Mahi_Granny said...

பொன்னியின் செல்வன், நான் தான் மகிபனின் பாட்டி மிக்க மகிழ்ச்சி, எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதில் இன்னும் அதிகமாய் .