August 7, 2010

ஒரு டுபாக்கூரின் வாக்குமூலம்..!!!

வலை(டை)யுலகில் நான் என்னும் தொடர்பதிவை எழுதும்படி அழைப்பு விடுத்த நண்பர் முகிலனுக்கு நன்றி..

1)வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

கார்த்திகைப்பாண்டியன்
(பதிவுக்கு வச்சிருக்கிற பேரு "பொன்னியின் செல்வன்" - எனக்கு ரொம்பப் பிடிச்ச புத்தகத்தோட பேருப்பா...)

2)அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

எழுதறதுக்கு வச்சுக்கிட்ட கா.பா - என்னோட நிஜப்பேரே இதுதாங்க... எங்க வீட்டுல வச்ச உண்மையான முழுப்பேர கேட்டு மயக்கம் போட்டு விழ மாட்டீங்கன்னா சொல்றேன்.. துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்.. பள்ளிச் சான்றிதழ் எல்லாத்துலையும் இதை எழுதுறதுக்கே ஒரு மணி நேரம் ஆகும்னு பக்கத்து வீட்டு மாமா ஒருத்தரு சுருக்கி வச்சதுதான் இந்தப் பேரு.. இன்னும் விரிவாத் தெரியணும்னா என்னோட அம்பதாவது பதிவப் படிங்கப்பா...

3)
நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?

அது ஒரு விபத்துன்னு சொல்லலாமா? ஹி ஹி ஹி.. சரி சரி.. ஒரு எதேச்சையான இணையத்தேடலில் அதிஷாவின் வலைப்பூ கண்ணில் சிக்கியது.. அங்க தொட்டு இங்க தொட்டு நெறைய பேரைப் படிச்சேன்.. எல்லாருக்கும் பின்னூட்டம் போட நமக்குன்னு ஒரு தளம் வேணும்னு ஆரம்பிச்சதுதான் இந்தப்பதிவு...எதுவுமே தெரியாமதான் ஆரம்பிச்சேன்.. அப்புறம் கையப் பிடிச்ச கரகரப்பு எதையோ பிடிச்சு பிசையச் சொல்லுங்கிற மாதிரி... இயல்பாகவே இருந்த தமிழார்வம் காரணமா எழுத ஆரம்பிச்சு இப்போ ஒண்ணரை வருஷம் முடிஞ்சு போச்சு..

4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன எல்லாம் செய்தீர்கள்?

ரொம்பப் பெரிய விஷயமெல்லாம் இல்ல நண்பா.. ஆரம்பத்துல திரட்டி பத்தி தெரியாத காரணத்தால நானே எழுதி நான் மட்டுமே படிச்சுக்கிட்டு இருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமா நெட்டே கதின்னு உக்கார்ந்துதான் சூதக் கண்டுபிடிச்சேன்..

இங்க எல்லாமே கிவ் அண்ட் டேக் பாலிசி தான்.. நிறைய நண்பர்களுக்குப் பின்னூட்டம் போட்டேன்.. அப்புறம் ஆரம்பத்துல கொஞ்சம் வெவகாரமா எழுதினேன்.. விஜய் ஓட்டுறது, துப்பட்டா போடலாமா வேண்டாமா, பிடிக்காத விளம்பரங்கள் .. இந்த மாதிரி.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மக்கள் கவனிக்க ஆரம்பிச்சாங்க..

பதிவுல நாம எழுதுறது ஒரே ஒரு எண்ணத்துலதான்.. வாசிக்குரவங்க கூட இயல்பா உரையாடுற மாதிரி இருக்கணும்னு எழுதுவேன்.. அவ்வளவுதான்.. எல்லா நண்பர்களின் ஊக்கமும் ஆதரவும்தான் இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்து எழுத வச்சுக்கிட்டு இருக்கு..

5)வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னுடைய எல்லா இடுகைகளிலுமே எங்கோ ஓர் இடத்தில் நான் இருக்கிறேன். ஒரு பங்கேற்பாளனாக அல்லது ஒரு பார்வையாளனாக.. முழுவதும் புனைவு என்பது என்னால் அவ்வளவாக, தெளிவாக சொல்ல இயலாத ஒரு விஷயமாகவே இருப்பதால், என்னுடைய சொந்த வாழ்விலிருந்தே சம்பவங்களைக் கோர்த்து எழுதுகிறேன்.

விளைவு என்று சொன்னால், ஒரு சம்பவத்தை சொல்லலாம். விஜயைக் கிண்டல் பண்ணி ஒரு இடுகை எழுதி இருந்த நேரம்.. பிரைவேட் நம்பர் என்று நடு ராத்திரி ரெண்டு மணிக்கு ஒரு நாதாரியிடமிருந்து போன் வந்தபோது வீட்டில் பயந்து போனார்கள். அதன் பிறகுதான் பதிவல் இருந்த என்னுடைய அலைபேசி எண்ணை எடுத்துவிட்டேன்.

6)நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சத்தியமாக இது பொழுதுபோக்கு கிடையாது. பிறகு? பதிவுகளின் மூலம் நிறையவே சம்பாதித்து இருக்கிறேன்.. அன்பான உறவுகளை. இந்த நட்புகளே எனக்கு பதிவுலகில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

7)நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு. தமிழ்லதான் - அதுவும் இது மட்டும்தான்.

8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

அன்பையும் உறவுகளையும் மீறி எப்போதாவது வெடித்துக் கிளம்பும் பிரச்சினைகளின்போது பொதுவாகக் கோபம் வந்திருக்கிறது.
அப்பவெல்லாம் எதுலையும் தலையிடாம அமைதியா இருந்துடுவேன்.(கள்ள மவுனம்?!) காரணம், கோபத்தில் ஏதேனும் வார்த்தைகள் வந்து விட்டால் அதை மீண்டும ள்ள முடியாது. எனவே கப் சிப் காரவடைதான்.

மற்றபடி
சில பதிவர்கள் மேல் பொறாமை நெறையவே உண்டு. ஏன் நம்மால் இப்படி எழுத முடியவில்லை என்று நிறைய பேர் மேல் காண்டாக இருக்கிறேன். நான் அடிப்படையில் ஒரு கோமாளி.. ஆனால் எழுத்தில் எனக்கு அது வந்து தொலையாது. எனவே
நகைச்சுவையாக எழுதும் மக்கள் மீது கொஞ்சம் பொறாமை உண்டு.

9)உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

பின்னூட்டங்களில் நண்பர் பிரேம்குமார் சண்முகமணி. என்னுடைய முதல் வாசகர் அவர்தான். நான் எழுதத் தொடங்கிய காலத்தில், பல புதிய பதிவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஊக்குவித்த நல்ல மனிதர். அவர் எங்க ஊருக்காரர் என்பது எனக்கு இன்னும் பெருமை. இதுவரை அவரை ஒருதடவை கூட சந்தித்தது கிடையாது, அலைபேசியிலும் பேசியது கிடையாது என்பதில் எனக்கு வருத்தமுண்டு. நான் சந்திக்க விரும்பும் மனிதர்.

அலைபேசியில் கூப்பிட்டு பாராட்டிய முதல் நண்பர் சொல்லரசன். திருப்பூர்க்காரர். பதிவு, நட்பு என்பதையும் மீறி என் மீது அக்கறை செலுத்தும் பாசத்துக்குரிய அண்ணன் அவர்.

10) கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தேங்கி நிற்காத ஆறு போல ஓடிக் கொண்டியிருக்க வேண்டும், தெரிந்து கொள்வதற்கான விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது என்று நம்புகிறவன். அவ்வளவே...

விருப்பமிருக்கும் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் இதைத் தொடரலாம்..

31 comments:

மேவி... said...

உங்களை மிரட்டியே அந்த விஜய் ரசிகர் யாருன்னு தெரிஞ்சுதா ???? கண்டுபிடிச்சா சொல்லுங்க ண்ணே.... ஒரு பாராட்டு விழா எடுக்கணும் ....

மேவி... said...

"என்னோட அம்பதாவது பதிவப் படிங்கப்பா..."



சார் ஏன் இந்த விளம்பரம் ..... நான் கூட தான் ஒபாமாவின் பெயர் காரணத்தை தெரிந்தும் சொல்லாமல் இருக்கிறேன்.

ஆளும் வளரனும்..... அறிவும் குறையணும் ...அது தான்டா வளர்ச்சி

மேவி... said...

"அது ஒரு விபத்துன்னு சொல்லலாமா?"


இன்னைக்கு வரைக்கும் உங்களோட புது பதிவு பார்க்கிற பொழுதெல்லாம் ...அதொரு இலக்கிய விபத்தாக தான் தெரிகிறது

மேவி... said...

"ஒரு டுபாக்கூரின் வாக்குமூலம்..!!!"

ஒரு இலக்கிய அடியாளின் மரண மொக்கை வாக்குமுலம்ன்னு சொல்லலமா ???

மேவி... said...

"விஜய்ய ஓட்டுறது"

எனக்கு பைக் ஓட்ட தெரியும்.... கார் கூட ஏதோ ஓட்டுவேன் ...விஜயை எப்புடின்னே ஓட்டுறது ???? அதுக்குன்னு எதாச்சு லைசென்ஸ் இருக்கா ???

மேவி... said...

"Anonymous said...
"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்."


யாருன்னே இது ...... சைக்கிள் கேப் ல பகுத்தறிவு வளர்க்குறது ????

உங்களுக்கு வேண்டியவரா ???

மேவி... said...

"என்னுடைய எல்லா இடுகைகளிலுமே எங்கோ ஓர் இடத்தில் நான் இருக்கிறேன்"

ஆமாங்க ..அதை டைப் பண்ணும் போது கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு இருப்பீங்க ....

மேவி... said...

"ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு. தமிழ்லதான் - அதுவும் இது மட்டும்தான்."

இந்த ஒரு வலைபதிவையே REFRESH பண்ணி பண்ணி ஹிட்ஸ் வருதான்னு பார்க்கவே டைம் சரியா இருக்கு ...

கார்த்திகைப் பாண்டியன் said...

@ mayvee..

mudiyala..:-))))

மேவி... said...

"பொன்னியின் செல்வன்"

அது ஏன் பிடிச்சிருக்குன்னாசும் சொல்லிருக்கலாமே ??

(அப்பாடா உருபடிய ஒரு கமென்ட் போட்டாச்சு .......)

க.பாலாசி said...

//துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்..//

எவ்ளோ ஆசஆசயா பேரு வச்சிருக்காய்ங்க... அதப்போயி சுருக்கிட்டீங்களே....

அன்பேசிவம் said...

நண்பா, நிறைய விஷயங்களில் ஒத்துபோகிறோம்.... எனக்கும் வைத்த பெயர் வேணு கோபால முரளீதரன். ஹிஹிஹி

Manoj said...

Nice one sir...... see u soon in madurai

நர்சிம் said...

வாழ்த்துகள் நண்பா. நிறைய எழுதுங்கள்

ஆதவா said...

பதிவு எப்பவும் போல..... நீங்க நின்னு பேசறமாதிரி இருக்கு!!
பதிவு ஆரம்பிச்சதிலிருந்து இன்று நீங்க பலதூரங்கள் கடந்துட்டீங்க.!!!
வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

// க.பாலாசி said...
எவ்ளோ ஆசஆசயா பேரு வச்சிருக்காய்ங்க... அதப்போயி சுருக்கிட்டீங்களே..//

நாம என்ன பண்ண தல.. எல்லாம் தானா நடக்குது

//முரளிகுமார் பத்மநாபன் said...
நண்பா, நிறைய விஷயங்களில் ஒத்துபோகிறோம்.... எனக்கும் வைத்த பெயர் வேணு கோபால முரளீதரன். ஹிஹிஹி//

நானும் கவனித்து இருக்கிறேன் முரளி.. ஒரு சில விஷயங்கள் தவிர்த்து நமக்குள் நிறைய ஒற்றுமைகள்.. எஸ்ராவும் அதில் ஒன்று..:-))))

// Manoj said...
Nice one sir...... see u soon in madurai//

கண்டிப்பா சந்திக்கலாம்டா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நர்சிம் said...
வாழ்த்துகள் நண்பா. நிறைய எழுதுங்கள்//

நன்றி தல

//ஆதவா said...
பதிவு எப்பவும் போல..... நீங்க நின்னு பேசறமாதிரி இருக்கு!! பதிவு ஆரம்பிச்சதிலிருந்து இன்று நீங்க பலதூரங்கள் கடந்துட்டீங்க.!!!
வாழ்த்துக்கள்//

மறுபடியும் முழுமூச்சாய் இயங்க ஆரம்பிச்சாச்சா? நன்றி ஆதவ்..

Katz said...

Nice...

மதன் said...

"துப்பட்டா போடலாமா வேண்டாமா," இந்த ஒரு பாய்ண்ட் தான் தல ம்ம விவகாராமா யோசிச்சிருகீங்க, வாழ்த்துகள் தொடர்ந்து நிறைய எழுதுங்க, ஆனா என் பேர வச்சி எல்லாரும் வாக்குமூலம் தரீங்க ரைட்டு நடத்துங்க.....

நேசமித்ரன் said...

கா.பா தலைப்பும் மேவி பின்னூட்டமும் :))))

Jackiesekar said...

வாத்தியாரே நல்லா எழுதி இருக்கிங்க...ஒரு போனுக்கே நம்பரை தூக்கலாமா?

kannamma said...

nalla irunthathu thozhare.
vilaivugal:
ungalukku 2 manikku call-pannathukku pathila 2-manikku
"THURAI VEL SANMUGA KARTHIKEYAPPANDIYARAI"pesaama kataththirukkalam.............
yaarunnu sonna call-panni sollalaam

கார்த்திகைப் பாண்டியன் said...

//வழிப்போக்கன் said...
Nice...//

Thanks..:-)))

//டுபாக்கூர்கந்தசாமி said...
"துப்பட்டா போடலாமா வேண்டாமா," இந்த ஒரு பாய்ண்ட் தான் தல ம்ம விவகாராமா யோசிச்சிருகீங்க, வாழ்த்துகள் தொடர்ந்து நிறைய எழுதுங்க, ஆனா என் பேர வச்சி எல்லாரும் வாக்குமூலம் தரீங்க ரைட்டு நடத்துங்க.......//

ஆகா.. உண்மையாவே டுபாக்கூரே இருக்கீங்களா? நன்றிங்க

// நேசமித்ரன் said...
கா.பா தலைப்பும் மேவி பின்னூட்டமும் :))))//

:-))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜாக்கி சேகர் said...
வாத்தியாரே நல்லா எழுதி இருக்கிங்க...ஒரு போனுக்கே நம்பரை தூக்கலாமா?//

வீட்டுல ரொம்ப பயந்து நம்மளையும் பயமுறுத்திட்டாங்கண்ணே..

// kannamma said...
nalla irunthathu thozhare. vilaivugal:ungalukku 2 manikku call-pannathukku pathila 2-manikku
"THURAI VEL SANMUGA KARTHIKEYAPPANDIYARAI" pesaama kataththirukkalam.............
yaarunnu sonna call-panni sollalaam//

அடப்பாவி தோழி.. என்னா ஒரு வில்லத்தனம்..:-)))

Balakumar Vijayaraman said...

ம்ம்ம், போன் பண்ணி மிரட்டுறாங்க, வாசகர் கடிதம் வருது... இலக்கியவாதி ஆகிட்டே வர்றீங்க போல. :)

bharathi said...

"ஒரு டுபாக்கூரின் வாக்குமூலம்..!!!"இத படிக்கும் பொது ஒரு நண்பர் சொன்ன மாதிரி நீங்களே நேர என் கேள்விகளுக்கு அன்ச்வேர் பண்ண ma3 இருக்கு!!!!!!!ம்ம் // பதிவுகளின் மூலம் நிறையவே சம்பாதித்து இருக்கிறேன்.. அன்பான உறவுகளை. இந்த நட்புகளே எனக்கு பதிவுலகில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.//gr8..................

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்... வாழ்த்துகள் தலைவா.... தொடர்ந்து எழுத்துங்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//வி.பாலகுமார் said...
ம்ம்ம், போன் பண்ணி மிரட்டுறாங்க, வாசகர் கடிதம் வருது... இலக்கியவாதி ஆகிட்டே வர்றீங்க போல. :)//

வெளில சொல்லாதீங்க தல..:-)

//bharathi said...
இத படிக்கும் பொது ஒரு நண்பர் சொன்ன மாதிரி நீங்களே நேர என் கேள்விகளுக்கு அன்ச்வேர் பண்ண ma3 இருக்கு!!!!!!!ம்ம் gr8......//

நன்றி தோழி...

//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம்... வாழ்த்துகள் தலைவா.... தொடர்ந்து எழுத்துங்கள்//

கண்டிப்பா தலைவா.. நன்றி..:-)))

ச.பிரேம்குமார் said...

ஏகப்பட்ட அலுவல்களுக்கிடையே மாட்டிக்கிட்டதால மதுரை பக்கமே வர முடியல. கூடிய சீக்கிரம் சந்திச்சிரலாம் பாண்டியன் :)

வால்பையன் said...

//துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்//


இனிமே எங்க போனாலும் உங்க பெயரை முழுசா தான் சொல்லனும்!

ஸ்ரீதர் கிட்ட சொல்லி எனக்கு போன் பண்ணச்சொல்லுங்க!

கார்த்திகைப் பாண்டியன் said...

// ச.பிரேம்குமார் said...
ஏகப்பட்ட அலுவல்களுக்கிடையே மாட்டிக்கிட்டதால மதுரை பக்கமே வர முடியல. கூடிய சீக்கிரம் சந்திச்சிரலாம் பாண்டியன் :)//

பிசி பாடி.. சீக்கிரமா ஊருப்பக்கம் வாங்கண்ணே..:-))

//வால்பையன் said...
இனிமே எங்க போனாலும் உங்க பெயரை முழுசா தான் சொல்லனும்!
ஸ்ரீதர் கிட்ட சொல்லி எனக்கு போன் பண்ணச்சொல்லுங்க!//

கூப்பிடச் சொல்றேன் தல.. எத்தன தடவதான் போன தொலைப்பீங்க?