May 19, 2009

ஜாதிகள் இல்லையடி பாப்பா...?!!!

சம்பவம் 1: தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை. எங்கள் கல்லூரியில் இருந்து வெளியே வரும் மெயின் கேட்டின் அருகே சென்று கொண்டு இருந்தேன். அங்கே பிஹெச்டி முடித்த புரொபசர் ஒருவர் நின்று சக ஆசிரியர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். என்னவென்று தெரிந்து கொள்ளலாமே என அருகில் சென்றேன். அடுத்த நாள் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பதைப் பற்றி ரொம்பத் தீவிரமாக பேசினார். ஆரம்பித்து இரண்டு மாதங்களே ஆன ஒரு ஜாதிக்கட்சிக்கு கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என எல்லோரையும் கேட்டுக்கொண்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
சம்பவம் 2: கல்லூரியின் எதிரே இருக்கும் டீக்கடை. தேர்தலுக்கு மறுநாள். கடைக்கு பால் ஊற்ற வரும் பெரியவருக்கு எப்படியும் எழுபது வயது இருக்கும். அவரிடம் டீ மாஸ்டர் கேட்கிறார்..

"என்ன பெரியவரே.. யாருக்கு ஓட்டு போட்டீங்க..?"

"எல்லாம் நம்ம ..................... தம்பி.."

"நீங்க ரொம்ப நாளா காங்கிரஸ் தான?"

"அட போப்பா.. இவ்வளவு நாளா நம்ம ஜாதிக்குன்னு ஒரு கட்சி இல்லாம இருந்தது.. கைக்கு போட்டேன்.. இப்போத்தான் நமக்குன்னு ஒரு கட்சி இருக்குல்ல.. என்னன்னாலும் நம்ம ஜாதிய விட்டுக் கொடுக்க முடியுமா..?
படித்தவர்கள் என்று பெரிதாக சொல்லிக் கொள்பவர்களுக்கும், படிக்காத பாமர மக்களுக்கும் என்ன வேற்றுமை உள்ளது? தங்களுடைய ஜாதி என்று வரும்போது எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்களே? ஜெயித்தால் நாட்டுக்கு என்ன நன்மை செய்வோம் என்பதைத் தாண்டி ஜாதிப்பாசத்துக்காக ஓட்டு போடும் நிலைமைதான் நம் நாட்டில் இன்னும் உள்ளது.எல்லாத்தையும் விடப் பெரிய கொடுமை, என்னுடைய மாணவர்களில் சிலரும் குறுஞ்செய்திகள் மூலம் இந்த கட்சிக்காக ஓட்டு சேகரித்ததுதான்.
எந்த ஒரு கட்சியானாலும் தொகுதிக்குள் இருக்கும் மக்களில் எந்த ஜாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனப் பார்த்துத்தான் வேட்பாளர்களை களம் இருக்குகிறார்கள். இங்கு மட்டும் அல்ல. எல்லா இடத்திலும் ஜாதிகள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. சமீபத்தில் நடந்தே சட்டக் கல்லூரி பிரச்சினை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அடிப்படைக் காரணம் - ஜாதி.இளைஞர்கள் இடையே இந்த ஜாதி உணர்வு பரவுவது மிகவும் ஆபத்தானது.
வேலை பார்க்கும் இடத்தில் இருந்து பள்ளிகள் தொடங்கி குடியிருக்கும் வீடுகள் வரை எல்லா இடத்திலும் கேட்கப்படும் முதல் கேள்வி.."தம்பி.. நீங்க என்ன ஆளுங்க..?". அடுத்த தலைமுறையாவது ஜாதிகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உண்டாக்கும் என நான் நம்பிக்கொண்டு இருக்கிறேன். அது நடக்குமா இல்லை "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்பது வெறும் பாடப் புத்தகங்களோடு போக வேண்டியதுதானா? விடை தெரியா கேள்வி..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

64 comments:

Rajesh Ramraj said...

Correct a sonnenga Professor :)

Anonymous said...

unga oora vida inga jaathi paasam kuraivu thaan.maduraila thaan vettikittu saavuraanuga..!

சுந்தர் said...

//அடப்பாவிகளா... ஒரு ஜாதி பிரச்சினையால.. அதுக்குள்ளே நான் அண்ணன் ஆகிட்டேனா.. என்ன கொடுமை இது..." மனதுக்குள் புலம்பி கொண்டேன். அதன் பிறகு அவர்கள் என்னிடம் சரியாக பேசவில்லை. அந்த பெண் என்னை பாவமாய் பார்த்து கொண்டு இருந்தது. எனக்குள் ஓங்கி கத்தினேன்..."ஜாதிகள் நாசமாய் போகட்டும்"!!!!!//
இதுவும் மக்களின் ஜாதி வெறியால் பாதிக்கப் பட்ட ஒரு இளைஞனின் புலம்பல்கள்தான்., உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

சுந்தர் said...

அனானி அண்ணே, கார்த்திகை சார், எழுதி இருக்கிறது, ஜாதி எங்கே அதிகம் இருக்குன்னு இல்லே, எங்கே இருந்தாலும் , கண்டிக்க பட வேண்டியவையே., உங்க ஊரு , எங்க ஊரு என்ற பிரச்னை எதுக்கு?

ஆ.ஞானசேகரன் said...

நல்லா பேசுரேளே! .."தம்பி.. நீங்க என்ன ஆளுங்க..?".

என்ன கார்த்திகை இப்படிதால் எல்லா இடத்திலேயும்.

நீங்கள் திருமணத்திற்கு சாதி மதம் கேட்காமல் மணம் முடிக்க முடிகின்றதா என்று பாருங்கள்... இல்லை குறைந்த பச்சம் ஜாதாகம் பார்க்கமல்???????

நமது சமுக அமைப்பு அப்படி, மாறவேண்டும் மாறும்....

இந்த தேர்தலின் வெற்றிக்கு முக்கிய காராணம் மதசார்பின்மையை மக்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள்... ஒரு சாதிய கட்சிக்கு முட்டையை கொடுத்தது....

கார்த்திகைப் பாண்டியன் said...

//Rajesh Ramraj said...
Correct a sonnenga Professor :)//

முதல் தடவையா தளத்துக்கு வந்து இருக்கீங்க..நன்றி தம்பி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
unga oora vida inga jaathi paasam kuraivu thaan.maduraila thaan vettikittu saavuraanuga..!//

ஏங்க.. நான் பொதுவா சொன்னா.. இதுல ஊரு எங்க இருந்து வந்துச்சு? எந்த ஊருன்னாலும் தப்பு தப்புத்தானே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேனீ - சுந்தர் said...
இதுவும் மக்களின் ஜாதி வெறியால் பாதிக்கப் பட்ட ஒரு இளைஞனின் புலம்பல்கள்தான்., உங்களுக்கு ஞாபகம் இருக்கா?//

அட சாமிகளா..பழச எல்லாம் படிச்சாச்சா..? ரொம்ப நன்றி சுந்தர்.. எனக்காக அனானியிடம் பரிந்து பேசியதற்கும் நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
நீங்கள் திருமணத்திற்கு சாதி மதம் கேட்காமல் மணம் முடிக்க முடிகின்றதா என்று பாருங்கள்... இல்லை குறைந்த பச்சம் ஜாதாகம் பார்க்கமல்???????//

முயன்று பார்த்தேன் நண்பா.. முடியவில்லை.. ஆனால் நாளை என் பிள்ளைக்கு என்று வரும்போது என்னால் இதை உறுதியா செய்ய முடியும்.. ஜாதி இல்லாமல் ஜாதகம் பார்க்காமல் தான் என் பிள்ளையின் கல்யாணம் நடக்கும்.. என்னுடைய ஆசை எல்லாம் அடுத்த தலைமுறையில் ஜாதி இல்லாமல் போக வேண்டும் என்பதுதான்..

//நமது சமுக அமைப்பு அப்படி, மாறவேண்டும் மாறும்....//

சமூகம் மாறும் என நம்புவோம்..

//இந்த தேர்தலின் வெற்றிக்கு முக்கிய காராணம் மதசார்பின்மையை மக்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள்... ஒரு சாதிய கட்சிக்கு முட்டையை கொடுத்தது....//

இந்த தேர்தலில் நடந்த ஒரே உருப்புடியான விஷயம் அதுதான் நண்பா..

அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி.
எதை எழுதினாலும் அதில ஒரு அரசியல் பண்ண என்று சிலர் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். சொந்த முகத்தோடு பேசத்துணிவற்ற இவர்கள் கோழைகள்தான்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

குடந்தை அன்புமணி said...

சில ஜாதிகளின் ஓட்டுக்கள் தேவைப்படும்போது அவர்களுக்கு அரசியல்வாதிகள் இடஒதுக்கீடு,தேர்தலில் சீட் அளிக்கின்றனர். அதைக்காணும் மற்ற ஜாதியினரும் தங்களுக்கும் இடஒதுக்கீடு தேவை என்று எண்ணுகின்றனர். அப்படி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் தனித்து நின்று தங்கள் பலத்தை காண்பிக்கின்றனர். இப்படித்தான் நடந்திருக்கிறது. இதன் எதிரொலி அடுத்த தேர்தலில் தெரியும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி வாசு.. நாம சொல்ல நினைக்குரதை சொல்லுறோம்.. ஒரு சில முகம் தெரியா மனிதர்கள் அதை பெயர் சொல்லாம மறுக்குறாங்க.. அவ்வளவுதான..விடுங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
சில ஜாதிகளின் ஓட்டுக்கள் தேவைப்படும்போது அவர்களுக்கு அரசியல்வாதிகள் இடஒதுக்கீடு,தேர்தலில் சீட் அளிக்கின்றனர். அதைக்காணும் மற்ற ஜாதியினரும் தங்களுக்கும் இடஒதுக்கீடு தேவை என்று எண்ணுகின்றனர். அப்படி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் தனித்து நின்று தங்கள் பலத்தை காண்பிக்கின்றனர். இப்படித்தான் நடந்திருக்கிறது. இதன் எதிரொலி அடுத்த தேர்தலில் தெரியும்.//

ஒரு சில கட்சிகளின் முக்கிய நோக்கமே அதுதான் நண்பா.. அடுத்த சட்டசபை தேர்தலில் பெரிய கட்சிகளை மிரட்ட தங்களுது பலத்தைக் காட்ட இந்த தேர்தலை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை..

குடந்தை அன்புமணி said...

//முயன்று பார்த்தேன் நண்பா.. முடியவில்லை.. ஆனால் நாளை என் பிள்ளைக்கு என்று வரும்போது என்னால் இதை உறுதியா செய்ய முடியும்.. ஜாதி இல்லாமல் ஜாதகம் பார்க்காமல் தான் என் பிள்ளையின் கல்யாணம் நடக்கும்.. என்னுடைய ஆசை எல்லாம் அடுத்த தலைமுறையில் ஜாதி இல்லாமல் போக வேண்டும் என்பதுதான்...//

ஜாதியை ஒழிப்பதில் தங்களுக்கு இருக்கும் ஆர்வம் புரிகிறது... ஆனால் அதற்கு அடிப்படையிலிருந்து மாற்றம் தேவை... பள்ளியில் சேர்ப்பதில் தொடங்கிவிடுகிறது ஜாதியின் ஆதிக்கம். நடிகர் கமல் பள்ளியில் ஜாதியைப்பற்றி கேட்கிறார்கள் என்பதால் பள்ளியிலேயே சேர்க்காமல் தன் பிள்ளைகளை படிக்க வைத்தார். எத்தனைபேரால் இப்படி நடக்க முடியும்?

கார்த்திகைப் பாண்டியன் said...

//அன்புமணி.. //

நண்பா.. பெரிய பணம் படித்தவர்களுக்கே இதுதான் நிலைமை என்றல் நாம் என்ன செய்வது? சமூக கட்டமைப்பும் கொஞ்சம் மாற வேண்டும் நண்பா.. பார்க்கலாம்.. வருங்காலம் மாறும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது..

தேவன் மாயம் said...

அட போப்பா.. இவ்வளவு நாளா நம்ம ஜாதிக்குன்னு ஒரு கட்சி இல்லாம இருந்தது.. கைக்கு போட்டேன்.. இப்போத்தான் நமக்குன்னு ஒரு கட்சி இருக்குல்ல.. என்னன்னாலும் நம்ம ஜாதிய விட்டுக் கொடுக்க முடியுமா.////

தற்போது கட்சியில்லாத ஜாதியே இல்லை என்றாகிவிட்டது!!

Rajeswari said...

வேதனையான செய்திதான்.படித்தவர்களுக்கும் படிக்காதவ்ர்களுக்கும் பிறகு என்ன வித்தியாசம் இருக்கிறது?

எப்போ மாறுவாங்க்ளோ தெரியல

Anbu said...

:((

வால்பையன் said...

ப.ம.க விற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை பார்த்தாவது திருந்துவார்களா பார்க்கலாம்!

சாதிகள் தானாக உருவாகவில்லை!
அதனால் தானாக அழியாது

நாம் தான் அழிக்க வேண்டும்!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

ஜாதி இல்லா இந்தியா இல்லை. இங்கு வாழ்வுக்கும் ஜாதிதான், சாவுக்கும் ஜாதிதான். ஜாதியில் படித்தவன் என்ன, படிக்காதவன் என்ன ? எல்லா சாக்கடையும் ஒன்றுதான். ஜாதி சிலருக்கு வரம், சிலருக்கு அதுவே சாபம்.

-தோழன் மபா


www.tamilanveethi.blogspot.com

கார்த்திகைப் பாண்டியன் said...

// thevanmayam said...
தற்போது கட்சியில்லாத ஜாதியே இல்லை என்றாகிவிட்டது!!//

இப்படி ஒரு சூழல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்தானே தேவா சார்?

கார்த்திகைப் பாண்டியன் said...

//Rajeswari said...
வேதனையான செய்திதான். படித்தவர்களுக்கும் படிக்காதவ்ர்களுக்கும் பிறகு என்ன வித்தியாசம் இருக்கிறது?எப்போ மாறுவாங்க்ளோ தெரியல//

எனக்கும் அதுதான் தோழி எரிச்சல்..படிச்சவங்களே இப்படி இருந்தா நாடு எப்படி உருப்படும்?

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said...
:((//

வாங்க அன்பு.. வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
ப.ம.க விற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை பார்த்தாவது திருந்துவார்களா பார்க்கலாம்!
சாதிகள் தானாக உருவாகவில்லை!
அதனால் தானாக அழியாது
நாம் தான் அழிக்க வேண்டும்!//

சரியா சொன்னீங்க வால்..நாம நினச்சா அடுத்த தலைமுறைல ஜாதிங்குற ஒண்ணே இருக்காது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழன் வீதி said...
ஜாதி இல்லா இந்தியா இல்லை. இங்கு வாழ்வுக்கும் ஜாதிதான், சாவுக்கும் ஜாதிதான். ஜாதியில் படித்தவன் என்ன, படிக்காதவன் என்ன ? எல்லா சாக்கடையும் ஒன்றுதான். ஜாதி சிலருக்கு வரம், சிலருக்கு அதுவே சாபம். //

வேதனையான விஷயம்.. உண்மையை உள்ளபடி சொல்லி இருக்கிறீர்கள்..

சொல்லரசன் said...

நேற்று u.k.g படிக்கும் என்பையனுக்கு சாதிசான்றிதழ் வாங்கிவந்தால்தான்
அட்மிசன் என்று சொல்லி திருப்பிஅனுப்பிவிட்டார்கள் இதற்கு என்ன செய்ய?

கார்த்திகைப் பாண்டியன் said...

எந்தப் பள்ளிக்கூடத்தில் ஜாதிகள் இல்லை என்று சொல்லுகிறார்களோ அதே பள்ளியில் ஜாதி சான்றிதழ் இருந்தால்தான் அட்மிஷன்.. கொடுமைதான் நண்பா

மேவி... said...

கரெக்ட் ஆ சொன்னிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//MayVee..??

வாங்க நண்பா.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

அப்துல்மாலிக் said...

இப்போதெல்லம் ஒவொரு கட்சியும் ஜாதியின் அடிப்படையில்தான் இயங்குகிறது, ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கட்சி

ஜாதியை அடிப்படையாக கொண்ட ப.ம.க. வின் அடையை பார்த்தாவது திருந்துவார்களா

கார்த்திகைப் பாண்டியன் said...

//அபுஅஃப்ஸர் said...
இப்போதெல்லம் ஒவொரு கட்சியும் ஜாதியின் அடிப்படையில்தான் இயங்குகிறது, ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கட்சி//

இனிமேல் அது சாத்தியமா என்று தெரியவில்லை நண்பா.. பெரிய கட்சிகள் கூட ஜாதி பார்த்துத்தான் வேட்பாளரை அறிவிக்கிறார்கள்..:-(

நர்சிம் said...

விடை தெரியா கேள்வி.. குமுதம் இதழில் வாரம் ஒரு ஜாதி என்று ஒரு பகுதி வருகிறது பார்த்திருக்கிறீர்களா.. குமுதத்திற்கு காட்டமாக கடிதம் எழுதி பதிவாகவும் போட்டு.. ஹும்ம்ம்..ஒரு எழவும் நடக்கவில்லை.

கார்த்திகைப் பாண்டியன் said...

இங்கே நடக்கும் அரசியல் வியாபாரத்தில் ஜாதியும் ஒரு அங்கமாகிப் போனது நண்பா..:-(

அத்திரி said...

அவர்களாக திருந்தினாலே ஒழிய ஒன்னும் செய்ய இயலாது

கார்த்திகைப் பாண்டியன் said...

நாம அதுக்கான ஆரம்பமா இருப்போம் நண்பா.. நம்ம வீட்டுல இல்லாம பார்த்துப்போமே..:-)

ஆ.சுதா said...

உண்மை பாண்டியன், எங்கும் இந்த சாதிதான் வேர்கள் பாய்ச்சி நிற்கின்றது. நம் சமூகத்தில் அது கலையப்படுவது என்பது முடியாத காரியமாகவே இருந்து வருகின்றது.
இளைஞர்கள் மாற்றம் வந்துள்ளதா என்றால் இல்லையே அதற்கு உதாரனம் நீங்கள் கூறிய சட்டக்கல்லூரி சம்பவமே சான்று. வேறு எப்படி வருங்காலம் மாறும் போங்க பாண்டியன் இது நம் ஆனிவேரிலிருதந்து முளைத்தது.

சமூக அக்கரையுடன் நல்ல பதிவா போட்டு இருக்கீங்க.

உமா said...

சாதி எங்கு இல்லை. பள்ளிக்கூடத்தில் சாதிசான்றிதழ் கேட்காமல் என்னச் செய்வார்கள்? sc/st, bc,obc,oc என்று பலப்பிரிவுகளை வைத்துக்கொண்டு அத்தனைக்கும் கோட்டா இருந்தால் எந்த சாதி என்று தெரிந்துக் கொள்ளத்தானே வேண்டும்? திரு.தேவன் மாயம் மற்றும் சொல்லரசன் மன்னிக்கவேண்டும்.மனதைபுண்டடுத்துவதல்ல என் நோக்கம் ஆனாலும் தேவன் மாயம் அவர்கள் தனது பதிவில் //சாதீய பிடிப்புகள் அதிகம் உள்ள உ.பி.யின் முதல்வர் அரியணையில் மாயாவதி அமர்ந்தார்..இந்தியாவிலேயே ஒரு மாநில முதல்வரான முதல் தலித் இவர்தான்//
என்று பெருமையாக பதிவிடுகிறார், சொல்லரசன் உயர் சாதிகாரரை நம்பி ஏமாந்தார் என பின்னூட்டம் இடுகிறார். படித்தவர்,சாதி பிரிவு வேண்டாம் எனக்கருதுபவர்கள் முடிந்த வரை சாதிபற்றிய செய்திகளை தவிர்க்கலாமே.

//அடுத்த தலைமுறையாவது ஜாதிகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உண்டாக்கும் என நான் நம்பிக்கொண்டு இருக்கிறேன். //

எப்படி எதிர்பார்க்க முடியும். நம்மால் முடியாததை மற்றவர் மேல் போட்டு விடுகிறோம். இன்றய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோட்டா வேண்டாம் என்று சொல்வார்களா. அவர்களை மட்டும் எப்படி எதிர்பார்ப்பது.

சாதிகள் இருந்துவிட்டுப்போகட்டும்,முதலில் சகிப்புத்தன்மை வளரட்டும்.

மதச்சார்பற்ற காங்கிரஸ் முதலில் கோட்டா system த்தை எடுத்துவிட்டு பொருளாதாரத்தை அடிப்படையாக் கொண்டு முன்னுரிமைத்தருமா? அவர்களும் அரசியல் வாதிகள் தான்.

சொல்லரசன் said...

உமா said
தங்கள் குழந்தைகளுக்கு கோட்டா வேண்டாம் என்று சொல்வார்களா. அவர்களை மட்டும் எப்படி எதிர்பார்ப்பது.......என் பெண்னை பள்ளியில் சேர்த்தும் போது கோட்டா எனக்கு தேவையில்லை என்றுசொல்லியும் சாதிசான்றிதழ் கேட்டார்கள் என்ன செய்ய?
அதிலும் நீங்கள் குறிப்பிட்ட உட்பிரிவு என்று வாங்கிவந்தால் BC யில் இருந்து MBC கிடைக்கும் என்று யோசனை சொல்கிறது பள்ளி நிர்வாகம்.

சொல்லரசன் உயர் சாதிகாரரை நம்பி ஏமாந்தார் என பின்னூட்டம் இடுகிறார். படித்தவர்,சாதி பிரிவு வேண்டாம் எனக்கருதுபவர்கள் முடிந்த வரை சாதிபற்றிய செய்திகளை தவிர்க்கலாமே....கொள்கையை பறக்கவிட்ட ஒர் அரசியல்வாதியின் நிலையை விளக்கவே அந்த‌பின்னுட்டம் சகோதரி.


திரு.தேவன் மாயம் மற்றும் சொல்லரசன் மன்னிக்கவேண்டும்....


என்மனதில்பட்ட கருத்தை நான் சொல்கிறேன்.உங்கள் மனதில் பட்டகருத்தை
நீங்கள் சொல்கிறீர்கள் இதற்கெதற்கு மன்னிப்பு.நீங்கள் திட்டினாலும நான் பெரிதாக எடுத்துகொள்ளமாட்டேன்.

செந்திலான் said...

அந்த‌ அனானி நாந்தானுங்க‌ண்ணா விள‌க்க‌மான‌ ப‌திலோடு உங்க‌க‌ளை ச‌ந்திக்கிறேன் ஏனென்றால் இப்பொழுது நேர‌ம் இர‌வு 12.56

ச.பிரேம்குமார் said...

பாண்டியன்? நீங்க என்ன ஆளுங்க?? அது தெரிஞ்சு தான் இனிமே பின்னூட்டம் போடலாம்னு இருக்கேன் ;)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
உண்மை பாண்டியன், எங்கும் இந்த சாதிதான் வேர்கள் பாய்ச்சி நிற்கின்றது. நம் சமூகத்தில் அது கலையப்படுவது என்பது முடியாத காரியமாகவே இருந்து வருகின்றது.
இளைஞர்கள் மாற்றம் வந்துள்ளதா என்றால் இல்லையே அதற்கு உதாரனம் நீங்கள் கூறிய சட்டக்கல்லூரி சம்பவமே சான்று. வேறு எப்படி வருங்காலம் மாறும் போங்க பாண்டியன் இது நம் ஆனிவேரிலிருதந்து முளைத்தது.//

ஆமா நண்பா.. என்னோட கவலையும் அதுதான்.. இன்றைய இளைஞர்கள் மத்தியில அரசியல் காரணங்களுக்காக சாதி பரப்பபடுவது அச்சத்தை தருது.. அதற்கு என்னுடைய சில மாணவர்களே சாட்சி..:-(

கார்த்திகைப் பாண்டியன் said...

//Uma..//

விரிவான விளக்கம்.. நன்றி தோழி.. நீங்கள் சொல்வதுபோல் சகிப்புத்தன்மை வளர வாய்ப்பு இல்லை.. ஜாதி என்னும் பெயரால் சலுகைகள் மறுக்கப்படுவது சரி கிடையாது.. என்னைக் கேட்டால் பொருளாதார அடிப்படியில் வேண்டுமானால் பிரிக்கலாம்.. நண்பர்கள் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்..கண்டிப்பாக அவர்கள் ஜாதியை முன்னிறுத்தி அப்படி சொல்லி இருக்க மாட்டார்கள்.. எனினும் உங்களுடைய கருத்தை வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி..

வினோத் கெளதம் said...

Ennatha solrathu..:-(

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன்...//

நண்பா.. நாம கேக்குற கேள்வி இந்த சமுதாய கட்டமைப்பு பத்தினது.. ஒரே நாள்ல மாறக்கூடியது இல்லை.. ஜாதி என்னும் கேவலமான விஷயம் ஒழிந்தால் சரி.. அவ்வளவுதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// செந்தில் said...
அந்த‌ அனானி நாந்தானுங்க‌ண்ணா விள‌க்க‌மான‌ ப‌திலோடு உங்க‌க‌ளை ச‌ந்திக்கிறேன் ஏனென்றால் இப்பொழுது நேர‌ம் இர‌வு 12.56//

உங்களை வெளிப்படுத்திக் கொண்டமைக்கு நன்றி.. நீங்க உங்க கருத்தை சொல்லுங்க.. அதுக்காகத்தானே நாம எழுதுறதே.. நான் சொல்றதை நீங்க கண்டிப்பா ஒத்துக்கணும்னு கட்டாயம் இல்ல.. உங்களுடைய எண்ணங்களை சொல்லுங்க நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

// ச.பிரேம்குமார் said...
பாண்டியன்? நீங்க என்ன ஆளுங்க?? அது தெரிஞ்சு தான் இனிமே பின்னூட்டம் போடலாம்னு இருக்கேன் ;)//


அடடா..பிரேம்.. இப்படி வேறக் கிளம்பியாச்சா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
Ennatha solrathu..:-(//

வாங்க நண்பா.. எங்க ஒரு வாரமா ஆளையே காணோம்?

"உழவன்" "Uzhavan" said...

நமது நாட்டு சட்டங்களை முதலில் அரசு மாற்றட்டும். சாதி அடிப்படை இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் படித்தவர்களும் இப்படியா என்று சொல்ல நமக்குத் தகுதியில்லை என்றுதான் எண்ணுகிறேன். உயர்சாதியில் (இது உயர் சாதி, இது தாழ்ந்த சாதி என்று நான் சொல்லவில்லை. சட்டம்தான் சொல்லுகிறது) பிறந்த ஒரே காரணங்களுக்காக, தன் மேல்படிப்பைத் தொடரமுடியாத ஏழை மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சாதி இடஒதுக்கீட்டால் பலன் பெறுபவர்கள் ஒருநாளும் சாதியை ஒழிக்கவேண்டும் என்று சொன்னதேயில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒரு உயர் சாதிக்காரந்தானே சொல்லியிருக்கிறான். சாதி அடிப்படை இடஒதுக்கீட்டால் பாரதி அப்போதே அனுபவப்பட்டிருப்பானோ!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

உழவன்... நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி நண்பா..சமூகமும் அதன் அமைப்புகளும் மாறினால் ஒழிய விடிவு பிறக்காது..

வினோத் கெளதம் said...

கார்த்தி என் ப்ளாக் புட்டுகிச்சு..

ஆதவா said...

நம்ம மக்களே எல்லாத்தையும் சொன்னதுக்கு அப்பறம் இனி நாம என்ன சொல்ல?

இதுவரை நான் பழகிய எந்த நண்பரிடமும் என்ன மதம் என்று கூட ஏன், என்ன பெயர் என்றுகூட கேட்டதில்லை. அவர்களாக சொன்னாலோ, அல்லது ஏதாவது ஒரு காரணமிருந்தாழொலிய நான் கேட்பதில்லை.

எனக்கு சொல்லரசன் என்றால் அது சொல்லரசன் தான்... அவரது உண்மையான பெயரை நான் கேட்டதுமில்லை, கேட்டு நினைவில் வைத்துக் கொள்வதுமில்லை.. அதேதான் நம்ம கார்த்திகைப் பாண்டியருக்கும், அகநாழிகைக்கும்... இன்னும் பிற நண்பர்களுக்கும்.

ஜாதி இரண்டொழிய வேறில்லை.. இடைச்சாதியாக அரவாணிகளையும் சேர்த்தால் மூன்று...

ஜாதி இல்லையென்றார்
அப்பா
எனக்கு பெண் பார்க்கப்பட்டது
எங்கள் ஜாதியில்
????!!!!! நீங்க தேர்தல் முடிவுகளை வெச்சு இந்த பதிவு எழுதலையே??

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
கார்த்தி என் ப்ளாக் புட்டுகிச்சு..//

ஆகா.. நகைக்கடை நைனா, முத்துராமலிங்கம் என ஏற்கனவே ரெண்டு அவுட்டு.. இப்போ உங்களுதுமா? நான் என்னோட பதிவுகளை இதுவரை பேக்கப் எடுத்து வச்சதே இல்லை.. பயமா இருக்குப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
நம்ம மக்களே எல்லாத்தையும் சொன்னதுக்கு அப்பறம் இனி நாம என்ன சொல்ல?இதுவரை நான் பழகிய எந்த நண்பரிடமும் என்ன மதம் என்று கூட ஏன், என்ன பெயர் என்றுகூட கேட்டதில்லை. அவர்களாக சொன்னாலோ, அல்லது ஏதாவது ஒரு காரணமிருந்தாழொலிய நான் கேட்பதில்லை. எனக்கு சொல்லரசன் என்றால் அது சொல்லரசன் தான்... அவரது உண்மையான பெயரை நான் கேட்டதுமில்லை, கேட்டு நினைவில் வைத்துக் கொள்வதுமில்லை.. அதேதான் நம்ம கார்த்திகைப் பாண்டியருக்கும், அகநாழிகைக்கும்... இன்னும் பிற நண்பர்களுக்கும்.
ஜாதி இரண்டொழிய வேறில்லை.. இடைச்சாதியாக அரவாணிகளையும் சேர்த்தால் மூன்று...ஜாதி இல்லையென்றார் அப்பா எனக்கு பெண் பார்க்கப்பட்டது எங்கள் ஜாதியில் ????!!!!! நீங்க தேர்தல் முடிவுகளை வெச்சு இந்த பதிவு எழுதலையே?? //

நீங்க நினைக்குற மாதிரி எல்லோருமே நினைக்க ஆரம்பிச்சா ஜாதியே இருக்காது ஆதவா.. நான் தேர்தலை மனதில் வைத்துத்தான் எழுத ஆரம்பிச்சேன்.. ஆனா எழுதும்போது தானா பதிவு வேற பக்கம் போக ஆரம்பிச்சது.. விட்டுட்டேன்..

வினோத் கெளதம் said...

//என்னோட பதிவுகளை இதுவரை பேக்கப் எடுத்து வச்சதே இல்லை.. பயமா இருக்குப்பா//

நண்பா முடிந்தால் எதாவது ஒரு வகையில் முன்பே பாதுகாத்து வைத்தல் நலம்..

சுந்தர் said...

இந்த பதிவு விகடனில் வந்துருக்கு, வாழ்த்துக்கள் நண்பரே.

"உழவன்" "Uzhavan" said...

//vinoth gowtham said...
கார்த்தி என் ப்ளாக் புட்டுகிச்சு..//

ஆகா.. நகைக்கடை நைனா, முத்துராமலிங்கம் என ஏற்கனவே ரெண்டு அவுட்டு.. இப்போ உங்களுதுமா? நான் என்னோட பதிவுகளை இதுவரை பேக்கப் எடுத்து வச்சதே இல்லை.. பயமா இருக்குப்பா//

ஓ.. இதுவேறயா? பேக்கப் எடுக்குறது எப்படி யாராவது சொல்லுங்க நண்பர்களே...

குமரை நிலாவன் said...

//நமது நாட்டு சட்டங்களை முதலில் அரசு மாற்றட்டும். சாதி அடிப்படை இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் படித்தவர்களும் இப்படியா என்று சொல்ல நமக்குத் தகுதியில்லை என்றுதான் எண்ணுகிறேன். உயர்சாதியில் (இது உயர் சாதி, இது தாழ்ந்த சாதி என்று நான் சொல்லவில்லை. சட்டம்தான் சொல்லுகிறது) பிறந்த ஒரே காரணங்களுக்காக, தன் மேல்படிப்பைத் தொடரமுடியாத ஏழை மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சாதி இடஒதுக்கீட்டால் பலன் பெறுபவர்கள் ஒருநாளும் சாதியை ஒழிக்கவேண்டும் என்று சொன்னதேயில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒரு உயர் சாதிக்காரந்தானே சொல்லியிருக்கிறான். சாதி அடிப்படை இடஒதுக்கீட்டால் பாரதி அப்போதே அனுபவப்பட்டிருப்பானோ!!!//

இந்த விஷயத்தை ரெம்ப நாட்களாக யோசித்தது உண்டு நண்பா
நானும் இது பற்றி ஒரு பதிவு போடலாம்னு நினைத்தேன்

Karthik said...

Idharkku ore theervu kalappu thirumanam...

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
நண்பா முடிந்தால் எதாவது ஒரு வகையில் முன்பே பாதுகாத்து வைத்தல் நலம்..//

உண்மைதான் நண்பா.. செய்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

// தேனீ - சுந்தர் said...
இந்த பதிவு விகடனில் வந்துருக்கு, வாழ்த்துக்கள் நண்பரே.//

ரொம்ப சந்தோஷம்.. தகவலுக்கு நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//"உழவன் " " Uzhavan " said...
ஓ.. இதுவேறயா? பேக்கப் எடுக்குறது எப்படி யாராவது சொல்லுங்க நண்பர்களே...//

தனியா நம்ம பதிவுகளை எல்லாம் Word ல காப்பி பண்ணி வச்சுக்கலாம் நானா.. CD கூட போட்டு வைக்கலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
இந்த விஷயத்தை ரெம்ப நாட்களாக யோசித்தது உண்டு நண்பா
நானும் இது பற்றி ஒரு பதிவு போடலாம்னு நினைத்தேன்//

நல்லது.. சீக்கிரமா பதிவைப் போடுங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik said...
Idharkku ore theervu kalappu thirumanam...//

நீங்க சொல்றது சரிதான் நண்பா

Anonymous said...

இப்படி வெட்டியா உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தால் பேசிகிட்டே இருக்கலாம். நானும் பாதிக்கப்பட்டவன் தான் ஜாதி மதத்தால். எனக்கு என்ன சொல்லனு தெரியல . ஏன் வேற ஜாதி மதத்து பெண்ணை திருமணம் பண்றது தப்பா. மக்கள் குறுகிய வட்டத்துக்குள்ள இருந்து வெளிய வரணும் . நாம படிக்கிறது எல்லாமே நம்ம வாழ்க்கையில உபயோகப்படுத்த தான். ஜாதிகள் இல்லையடி பாப்பா னு நடத்துனவரே எனக்கு எமனா வந்து நிக்கிறார் . என்ன பண்ண சொல்றீங்க. இத்தனைக்கும் திருநெல்வேலில இருக்கிற பாரம்பரியமிக்க கல்லூரியின் துணை முதல்வர். இவங்க இப்படி இருந்தாங்கனா எத்தனை பசங்க பேப்பர்ல கை வச்சிருப்பாங்க. தப்பாக பதிவு பண்ணிருந்தா மன்னிக்கவும் . இது என்னுடைய ஆதங்கம்.

சி.ஆரோக்கிய அமல் ராஜ்
arockiaamalrajc@gmail.com