August 19, 2009

எருமை - கழுதை - குதிரை..!!!

குருவிடம் சிஷ்யன் சொன்னான்.

"தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"
"மகனே.. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.
"புரியவில்லை குருவே.."

"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"

"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."

"கழுதையைப் பின்னால் தட்டினால்?"

"தட்டியவரை எட்டி உதைக்கும்.."
"ஆனால் குதிரை..?"

"முன்னால் பாய்ந்து செல்லும்.."

"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்.."

சிஷ்யன் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றான்.
***************
பானை செய்து விற்கும் குயவன் அவன். கடவுள் மீது அபார நம்பிக்கை கொண்டவன். அதிகாலையில் எழுந்து தான் செய்த பானைகளை ஒரு வண்டியில் அடுக்கி சந்தைக்கு கொண்டு சென்று விற்பான். அவனுடைய அன்றாடத் தேவைகளை அந்தப் பணத்தைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்வது அவனுடைய வழக்கமாக இருந்தது.
அன்றைக்கும் எப்போதும் போல பானைகளை வண்டியில் எடுத்துக் கொண்டு சந்தைக்கு கிளம்பினான். ஆனால் வண்டி வழியில் இருந்த சேறு நிறைந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அவன் கவலைப்படாமல் ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டான். எக்காரணம் கொண்டும் கடவுள் தன்னைக் கை விட மாட்டார், வண்டியை வெளியே எடுக்க உதவுவார் என்ற நம்பிக்கை.
வழியில் செல்வோர் எல்லாம் அவனை என்னவென்று விசாரித்தனர். நான் பார்த்துக் கொள்கிறேன், கவலை வேண்டாம் என்று எல்லோரையும் அனுப்பி விட்டான். நேரம் சென்றது. மாலை வேளை நெருங்கியவுடன் இருட்டத் தொடங்கியது. இப்போதுதான் முதல் முறையாக குயவனுக்கு பயம் தோன்றியது.
பானைகள் எதையுமே விற்காவிட்டால் இன்றைய பொழுதை எப்படிக் கழிப்பது? அழத் தொடங்கினான். அழுகை சிறிது நேரத்தில் கோபமாய் மாற கடவுளை திட்டத் தொடங்கினான். உன்னை நம்பினேனே, என்னை இப்படி மோசம் செய்து விட்டாயே என்றெல்லாம் புலம்பத் தொடங்கினான்.
சட்டென்று அவன் முன்னே கடவுள் தோன்றினார். பளாரென்று ஒரு அறை. குயவனுக்கு பொறி கலங்கிப் போனது.

"காலை முதல் கடவுள் காப்பாற்றுவார் எனச் சொல்லி சும்மாவே இருந்தாயே? அந்நேரத்திற்கு பள்ளத்தில் இறங்கி வண்டிச் சக்கரத்தைக் கொஞ்சமாவது நகட்ட முயற்சி செய்து இருந்தால் இந்நேரம் நான் உனக்கு உதவி இருப்பேன்... முதலில் உன்னை நீ நம்பி முயற்சி செய்.. வாழ்வில் தன்னம்பிக்கை தான் முக்கியம்.."

குயவன் புரிந்து கொண்டவனாக சந்தைக்கு கிளம்பினான்.
***************
பெண் ஒருவள் தன் காதலனுடன் கொண்ட உறவால் கர்ப்பமாகிப் போனாள். வீட்டில் இருந்தவர்கள் விவரம் தெரிந்து யார் காரணமெனக் கேட்டபோது அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பயத்தில் தன் வீட்டின் அருகில் இருந்த துறவியின் பெயரைச் சொல்லி விட்டாள். கோபம் கொண்ட உறவினர்கள் துறவியிடம் சென்று தாறுமாறாக சத்தம் போட்டனர்.
பொறுமையாகக் கேட்ட துறவி சொன்னார்..

"அப்படியா..?"

குழந்தை பிறந்தவுடன் அதை ஆசிரமத்தில் கொண்டு வந்து விட்டார்கள். துறவி அந்தக் குழந்தையை சீராட்டி வளர்க்கத் தொடங்கினார். கொஞ்ச காலம் கழித்து அந்தப்பெண்ணின் காதலன் திரும்பி வந்து தன் தவறை ஒத்துக் கொண்டான்.
துறவியை தவறாகப் பேசியதை எண்ணி ஊர் மக்களும் வருத்தம் கொண்டனர். அவரிடம் சென்று நடந்த விஷயங்களைக் கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு குழந்தையை தந்து விட சொன்னார்கள். சம்மதம் சொன்ன துறவியிடம் குழந்தையின் தந்தை யாரென அவர்கள் சொன்னார்கள்.
அதற்கும் துறவி சொன்னது..

"அப்படியா..?"
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

42 comments:

நையாண்டி நைனா said...

mee firste

நையாண்டி நைனா said...

அப்படியா...

குடிகாரன் said...

அப்ப்ப்ப்ப்ப்ப்ப்படியா????????????

GHOST said...

அப்படித்தான்

Raju said...

தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?

ஈரோடு கதிர் said...

நல்லா கத வுடுறீங்க சாமீ

மணிஜி said...

எப்படிய்யா?..இப்படி...உருப்படியா?

குடந்தை அன்புமணி said...

கார்த்தி... கலக்கிட்டீங்க போங்க... மூன்றுமே அருமைங்க...

ஹேமா said...

கார்த்தி,வாழ்வுக்கு பாடம் சொல்லும் கதைகள்.மனதில் பதித்துக்கொண்டால் நல்லது.

யாசவி said...

kutty athisa?

:-)

Prabu M said...

நீதிக்கதை கேட்டு நாளாச்சு....
மூன்றுமே நல்ல கதைகள்... முதல்கதை ரொம்பவே சூப்பர் :)

வால்பையன் said...

அப்படியா!

நர்சிம் said...

குதிரை மேட்டர் சூப்பர் நண்பா..நல்லா எழுதி இருக்கீங்க.

லோகு said...

இதுவரை கேட்டிராத நீதிக்கதைகள்.. நல்லா இருக்குங்க..

க.பாலாசி said...

நல்ல இடுகை அன்பரே. மூன்று கதைகளும் அருமை. படித்தேன் ரசித்தேன்.

நன்றி.
க. பாலாஜி (ஈரோடு)

SK said...

ஒண்ணு ரெண்டு சரி :-)
மூணு புரியலை :(

ஆ.ஞானசேகரன் said...

அப்படியா!
மூன்றும் நல்லாயிருக்கு நண்பா

Hindu Marriages In India said...

Nalla kathai.

சுந்தர் said...

நல்ல தத்துவங்கள் அண்ணே !

வழிப்போக்கன் said...

1 வது கதை கலக்கல்...
மற்றவையும் நல்லாயிருந்தது...

புல்லட் said...

உங்களுடைய எல்லாப்திவுகளையும் வாசித்து ரசித்தாலும் பின்னூட்டுவதில்லை காரணம்... நீங்கள் அதை எல்லாம் தாண்டிபபோய் விட்டீர்கள்.. இனி நீங்கள் எழுதுவது எல்லாம் அக்செப்பட்ட்.. தினப்பத்திரிகைகள் பேல வாசித்து பயன்பெறுவதே எம் வேலை.. :-)

Karthik said...

அதிஷா எங்க???

நல்ல பதிவு. :)

Unknown said...

:))))))))

சிவக்குமரன் said...

குதிரை மேட்டர் சூப்பர்ண்ணா..

Jackiesekar said...

கதைகதையாம் காரணமாம்

Unknown said...

அட..!
அடடே..!!
அப்படியா..??

Thomas Ruban said...

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.

நன்றி.. நன்றி.

சொல்லரசன் said...

நீதிகதைகள் அருமை

நிகழ்காலத்தில்... said...

குட்டிக்கதைகளும், கருத்துக்களும் அருமை

வாழ்த்துக்கள் நண்பரே

சம்பத் said...

மூன்று கதைகளும் அருமை boss...

தருமி said...

ஓ! அப்படியா???????????

ப்ரியமுடன் வசந்த் said...

மூன்றும் அருமை

குதிரை மேட்டர் பளிச்

அ.மு.செய்யது said...

கருத்துள்ள கதைகள்.

இவ்வாறாக நடந்து கொண்டால் வருடத்தின் இந்த நாள் மாத்திரமல்ல..எல்லா நாளுமே இனிய திருநாளாக வாய்த்திருக்கும்.

மேவி... said...

:))

அத்திரி said...

என்ன திடீர்னு புரொபசர் கத சொல்ல ஆரம்பிச்சிட்டார்

Sanjai Gandhi said...

முதல் கதை நல்லா இருக்கு..
( அதை மட்டும் தான் படிச்சேன்:) )

தருமி said...

சஞ்சய்காந்தி --> எருமை.

அதாவது அவர் அது மட்டும் வாசிச்சார் என்பதை சுறுக்கமாக இங்கே கூறியுள்ளேன்!

ஒரு நம்பிக்கை - தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்.!!!!!!!

Sanjai Gandhi said...

ஆஹா தருமி ஐயா.. தவறாக எல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பணிவான நன்றிகள். :)

தருமி said...

சும்மா ..லுலுயாயி ...

நன்றி

தருமி said...

சஞ்சய்,
நீங்க 'அந்த' மூணுல ஒண்ணு மட்டும்' நானெல்லாம் 'அந்த மூணும்' சேர்ந்தது !!!

Anonymous said...

கலக்கிட்டீங்க

"உழவன்" "Uzhavan" said...

நல்ல தொகுப்பு நண்பா.. ஆனா இந்த அப்படியா ல என்ன உள்குத்து இருக்குதுனுதான் தெரியல :-)