August 23, 2009

கந்தசாமி - திரை விமர்சனம்..!!!


கலைப்புலி S. தாணுவின் "V" கிரியேஷன்சுக்கு இது இருபத்து ஐந்தாவது வருடம். வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கி இருக்கும் படம் தான் "கந்தசாமி".


--> படத்தின் அழைப்பிதழே பதினைந்தாயிரம் ரூபாய் செலவில் டிரைலராகத் தயாரிக்கப்பட்டது...--> பாடல் வெளியீட்டின் போது தயாரிப்பாளர்கள் இரண்டு கிராமங்களைத் தத்து எடுத்தார்கள்


--> தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் ...--> மெக்சிக்கோவில் எடுக்கப் பட்டு இருக்கும் முதல் தமிழ் படம்..--> பீமா என்ற தோல்விப் படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் விக்ரம் படம்..இப்படி பல எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கும் படம் அவற்றை பூர்த்தி செய்கிறதா? மேலே படியுங்கள்..திருப்போரூரில் இருக்கும் கந்தசாமி கோவிலில் மக்கள் எழுதி வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறுகின்றன. கடவுளின் பெயரால் அதை செய்பவர் "கந்தசாமி" விக்ரம். CBI ஆபிசர். பல்வேறு வேஷங்களில் போய் கெட்டவர்களின் கறுப்புப் பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு உதவுகிறார். அவருக்குத் துணையாக ஒரு பெரிய டீமே இருக்கிறது. கந்தசாமி யார் என்பதை கண்டுபிடிக்க வரும் போலிஸ் ஆபிசர் பிரபு.PPP (ஆசிஷ் வித்யார்த்தி) என்னும் பெரும் பண முதலையுடன் மோதும் விக்ரம் அவருடைய மகள் சுப்புலக்ஷ்மியுடன் (ஸ்ரேயா) காதல் கொள்கிறார். விக்ரமுடன் மோதும் இன்னொரு பணக்கார வில்லன் ராஜ்மோகன் (முகேஷ் திவாரி). வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை கொண்டு வந்தால் இந்தியாவின் துயரை நீக்கி விடலாம் என்ற கருத்து சொல்லி ஓய்கிறான் கந்தசாமி.செம ஸ்மார்ட்டாக விக்ரம். பாட்மேனை நினைவு படுத்தும் சேவல் கெட்டப்பில் அறிமுகம் ஆகிறார். பறந்து பறந்து சண்டை போடுகிறார். பெண்வேடம், கிழவன் என்று தன்னை மிகவும் வருத்திக் கொண்டுள்ளார். ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர். ஜென்டில்மேனில் ஆரம்பித்து சிவாஜி வரை ஷங்கர் நார் நாராய் கிழித்து தொங்க விட்ட கதையில் அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்?ஸ்ரேயா படத்துக்குத் தேவையா? கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கேரக்டரில் ஏதோ புதுசா செய்யப் போகிறார் என்று பார்த்தால் புஸ். கவர்ச்சி காட்டுவதோடு சரி. இவ்வளவு பவர்புல்லாக காட்டும் ஹீரோக்குத் தகுந்த வில்லன்கள் இருக்க வேண்டாமா? ஆசிஷும் முகேஷ் திவாரியும் தண்டமாக வந்து போகிறார்கள். படத்துக்கு சம்பந்தமே இல்லாத வடிவேலுவின் ஜோக்குகள் கொஞ்சமாக சிரிக்க வைக்கின்றன. பிரபு.. ஹ்ம்ம். இது போதாதென்று சுசி கணேசன் வேற வந்து போறார்.தேவிஸ்ரீ பிரசாதின் இசையில் பாடல்கள் எல்லாமே ஹிட். ஆனால் பின்னணி இசை சொதப்பல். "அலேகா" பாட்டில் ஸ்ரேயாவின் நடனம் அப்படியே தால் படத்தில் ஐஸ்வர்யா ஆடும் ஆட்டத்தையும், ஷக்கீராவின் "whenever wherever" பாட்டையும் ஞாபகப்படுத்துகிறது. நடனம் அமைத்த புண்ணியவான் யார் என்று தெரியவில்லை. "Excuse me", "கந்தசாமிதான் டாப்பு" பாட்டுக்களுக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. "மியா மியா பூனை"...ஐயோ.. பாட்டு எழுதிய விவேகாவை என்ன செய்தாலும் தகும். "மாம்போ மாமியா" பாட்டில் மெக்சிக்கோவை சுற்றிக் காமிக்கிறார்கள். "என் பேரு மீனாக்குமாரி" பாட்டின் நடன அசைவுகளில் ஆபாசம் அருவியாய் வழிந்தோடுகிறது.சத்ரபதி சக்தி மற்றும் கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் ஓகே. குறிப்பாக கண்ணைக் கட்டிக் கொண்டு விக்ரம் போடும் சண்டை அம்சம். ஏகாம்பரத்துக்கு யாரவது சூனியம் வைத்து விட்டார்களா? அவர் காமிராவை சுத்துற சுத்துல நமக்கு கண்ணக் கட்டுது. எடிட்டிங்கும் சரி இல்லை. படம் பல நேரங்களில் ஜவ்வா இழுக்குது.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சுசி கணேசன். அழகா பார்த்து பார்த்து செதுக்குன ஒரு மரச்சட்டம். ஆனா அதுக்கு உள்ளே ஓவியம் இல்லாம வெறும் வெள்ளைக் காகிதம் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் இங்க நடந்து இருக்கு. பழைய கதைக்கு சொதப்பலா திரைக்கதை. தாணுவின் காசைக் கொட்டி ஷங்கர் ஆக முயற்சி பண்ணி இருக்கார் சுசி. இந்தப் படத்தின் மூலமா சில கிராமங்களை தத்து எடுத்து இருக்குறதா சொன்னாங்க. அதுதான் மிச்சம்.கந்த(ல்)சாமி..!!!(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

35 comments:

நாடோடி இலக்கியன் said...

அப்போ இது வேலைக்காகாதுன்றீங்க.
ரைட்டு.

நையாண்டி நைனா said...

sarithaan..raittu...

இராகவன் நைஜிரியா said...

பார்த்து நொந்து போனவர்கள் பட்டியிலில் நீங்களும் இணைஞ்சாச்சா...

தேவன் மாயம் said...

கந்தசாமி கந்தல்சாமியா!!! சரிதான்!!

Prabhu said...

nan mudala elutha arambichen..... ipo pathivulagame pathutu polambudu... nondha samy... ithukaga dan mudalaye enga pecha kekanumradu!

அ.மு.செய்யது said...

நச்னு எழுதியிருக்கீங்க...!!!

மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவந்திருக்கும் படம்.பழைய சோற்றையே குழைத்தடித்து பரிமாறியிருந்தாலும்
ஏற்று கொள்ளலாமென்று நினைக்கிறேன்.

சென்னை வந்ததும் பார்க்க வேண்டும்.பகிர்வுக்கு நன்றி கார்த்திக் !!

Anonymous said...

கந்த(ல்)சாமி..!!!
//
right ok.

sakthi said...

அப்போ புட்டுகிச்சா

பாவம் தயாரிப்பாளர்

வழிப்போக்கன் said...

பாவம் விக்ரம்...
:(((

பீர் | Peer said...

//மேலே படியுங்கள்..//

மறுபடியும் மேலே படித்தேன், மீண்டும் அதே வரி,
மறுபடியும் மேலே படித்தேன், மீண்டும் அதே வரி,
மறுபடியும் மேலே படித்தேன், மீண்டும் அதே வரி,

கடைசிவரை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததான்னு தெரியவே இல்லை. என்ன பண்ணலாம், கார்த்திக்?

அத்திரி said...

புட்டுக்கிச்சா............பாவம் தாணு

மேவி... said...

eppudi ippadi ellam

Jay said...

ஆக மொத்தம் ஒரு மொக்கை திரைப்படம் எடுத்திருக்கானுகள் ???? அடப் பாவமே!! பார்ப்போம் ஒருக்கால்.. பிரமாண்டத்திற்காகவாவது திரையரங்கில் போய் பார்க்கலாமா?

தருமி said...

முதல், கடைசி பத்திகளைப் படிச்சாச்சு. பெரிய படங்கள் இப்படி ஆவதில் ஒரு திருப்தி வந்தால் தப்பில்லையே ...

ஆ.ஞானசேகரன் said...

///அழகா பார்த்து பார்த்து செதுக்குன ஒரு மரச்சட்டம். ஆனா அதுக்கு உள்ளே ஓவியம் இல்லாம வெறும் வெள்ளைக் காகிதம் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் இங்க நடந்து இருக்கு.///

படம் பார்க்கலாமா வேண்டாமா?

RAMYA said...

அப்போ பாக்க வேண்டாமா? தப்பிச்சோம் நாங்க :))

அருண். இரா said...

குத்துங்க எசமான் குத்துங்க ..இந்த சினிமாவே இப்படி தான் ...

kanagu said...

நல்லா, சூப்பரா மோசமா படத்த எடுத்துட்டாங்க...

எனக்கு அதுல கூட கோபம் இல்ல.. இத எடுக்க 2 வருஷம் அப்டிங்கிறத தான் தாங்க முடியல..

அமர பாரதி said...

தருமி சார்,

//நல்ல அலசல் மற்றும் அருமையான பதிவு. டாக்டர் என்ன சொல்கிறார் என்று விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.// ஏன்? satire?

ஈரோடு கதிர் said...

சரி... சரி...
படம் பார்க்க போகலை

ஓகே வா?

தருமி said...

// அமர பாரதி said...

தருமி சார்,

//நல்ல அலசல் மற்றும் அருமையான பதிவு. டாக்டர் என்ன சொல்கிறார் என்று விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.// ஏன்? satire?//

புரியலையே அமரபாரதி.......

Jackiesekar said...

அழகா பார்த்து பார்த்து செதுக்குன ஒரு மரச்சட்டம். ஆனா அதுக்கு உள்ளே ஓவியம் இல்லாம வெறும் வெள்ளைக் காகிதம் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் இங்க நடந்து இருக்கு.//
ரொம்ப அற்பதமா சொல்லி இருக்கிங்க. பாண்டியன்

நாஞ்சில் நாதம் said...

:))

Prapa said...

என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
சொல்லி போடுங்க....!!!

Karthik said...

நல்ல விமர்சனம். நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். :)

me the 25th.

குடந்தை அன்புமணி said...

பாட்டு ஹிட்டால் மட்டுமே படம் ஓடுமா? பார்ப்போம்.

ஹேமா said...

கந்தசாமி நொந்தசாமியாயிடுச்சா !

அமர பாரதி said...

தருமி சார்,

காபி & பேஸ்ட் சொதப்பிருச்சு. சொல்ல வந்தது,
//முதல், கடைசி பத்திகளைப் படிச்சாச்சு. பெரிய படங்கள் இப்படி ஆவதில் ஒரு திருப்தி வந்தால் தப்பில்லையே ...// இது ஏன்? என்றும் satire ஆ என்றும் கேட்டேன்.

குமரை நிலாவன் said...

கந்தசாமி கந்தல்சாமியா!!! சரிதான்!!

sarithaan..raittu...

வால்பையன் said...

ஜாக்கிசேகர் பதிவை படிச்சிங்களா!?

தருமி said...

கதையே இல்லாமல் வெறும் காசு மட்டும் போடுற படங்கள் டப்பாவுக்குள் போவது பற்றிச் சொல்லியுள்ளேன்

"உழவன்" "Uzhavan" said...

//தாணுவின் காசைக் கொட்டி ஷங்கர் ஆக முயற்சி பண்ணி இருக்கார் சுசி//

அப்படினா சுசி பட தயாரிப்பாளாரா ஆகிருவாரே.. அடுத்த பட பூஜை எப்ப சுசி சார்? அதுவும் நீங்க தயாரிப்பாளர்னா லோ பட்ஜெட் படம்தான எடுப்பீங்க.

ஆதவா said...

டைட் ஸெட்யூலில் கந்தசாமிக்கு இரவு டிக்கெட் போடலாமா என்று யோசித்து வரும்பொழுதே எதுக்கும் நம்ம கார்த்திகைப்பாண்டியனிடம் கேட்டுடலாம் என்று நினைத்துக் கொண்டு வருகிறேன் நீங்களும் நான் நினைத்தமாதிரியே சொல்லிவிட்டீர்கள்.

கார்த்திகைப்பாண்டியன் : சரிவிடு ஆதவ்.. DVDயில பார்த்துடலாம்.

M.Thevesh said...

நான் கந்தசாமிக்காக ஒரு கவிதை
எழுதினேன்.
http://puthukkavithai.blogspot.com/2009/07/blog-post_31.html

மு.இரா said...

அய்யா, வணக்கம்
நீங்கள் எழுதிய பதிவு சரி. தமிழ் படம் எல்லாமே புரட்டுக்கள் விட்டே, மக்களை ஏமாற்றி படம் பார்க்க வைக்கும். அதுவும் இந்த சோம்பேறி இளைஞர்களூக்கு, பொண்ணூங்கலோடு உடல் அசைவ மட்டும் காட்டினாவே போதும், இப்படி கணக்கு போட்டு படம் எடுக்கும் போது, எங்க? படம் நல்லா இருக்கறது? அதவிடுங்க உங்கள் பதிவு நல்லா இருக்கு, ஆனா இது என்ன? (பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..) இதை நான் கேவலமா நினைக்கிறேன். ஏன், இப்படி உங்களையே மட்ட படுத்திகிறீங்க...? நல்ல எழுத்துக்கு எப்பயுமே? நல்ல வரவேற்பு இருக்கும்... நீங்க கெஞ்சனும்னு அவசியம் இல்லை. அந்த வாக்கியங்களை கொஞ்சம் மாத்தினா நல்லா இருக்கும். நன்றி வணக்கம்.