April 26, 2009

மரியாதை - திரை விமர்சனம்..!!!


தமிழகத்தை தாக்க வந்த..ச்சீ.. காக்க வந்த தங்கத் தலைவர், இளைஞர்களின் விடிவெள்ளி, புரட்சிக் கலைஞர் விசயகாந்துக்கு சில விண்ணப்பங்கள்..


1. தயவு செஞ்சு உங்க தொப்பைய குறைங்க.. நீங்க திரைக்கு வரதுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடியே தொப்பை ஸ்க்ரீனுக்கு வந்துருது.. போற போக்கை பார்த்தா ஸ்க்ரீனில் முக்காவாசி இடத்தை நிறைப்பது நமீதாவா இல்லை நீங்களான்னு போட்டியே வைக்கலாம் போல..


2. உங்க ஒப்பனைக் கலைஞர்கிட்ட சொல்லி நல்ல விக்கா வாங்க சொல்லுங்க.. உங்கள க்ளோசப்புல காட்டுறப்போ பிள்ளைங்க எல்லாம் பயப்படுதுல்ல..


3. உங்களுக்கு காஸ்டியூம் டிசைன் பண்றவரு யாருன்னு சொல்லுங்க.. தேடிப் பிடிச்சு கால்ல விழணும்.. ரோஸ், பச்சை, மஞ்சள்னு இத்தனை கலர்ல கோட் சூட் போட முடியும்னு கண்டுபிடிச்சு பல பேரு கண்ணை குருடாக்குன அந்த புண்ணியவானுக்கு.. இருக்கு..


இல்லை.. இதெல்லாம் என்னால மாத்த முடியாதுன்னு சொன்னா.. ரொம்ப ஈசியா ஒரு விஷயம் இருக்கு.. தயவு செஞ்சு நடிக்கிறத விட்டுடுங்க.. தமிழ் மக்கள் பொழச்சு போகட்டும்..


***************


ஒரு அம்மா வீட்டுக்கு முன்னாடி பெருக்கிக்கிட்டு இருக்காங்க.. அவங்க பையன் வானத்துல இருக்குற சூரியன பார்த்துக்கிட்டே இருக்கான்..


"என்னப்பா. ரொம்ப நேரமா சூரியனையே உத்துப் பாத்துக்கிட்டு இருக்க?"


"இல்லம்மா.. அந்த சூரியனுக்கு மீசை இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்.."


"வேற என்ன.. நம்ம அண்ணாமலை ஐயா மாதிரி இருக்கும்.."


சூரியன க்ளோசப்புல காட்டுறாங்க.. அதுக்கு மீசை, கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் கிராபிக்ஸ்ல வரைஞ்சா விசயகாந்து.. தாங்க முடியல.. தமிழ் சினிமா திருந்த வாய்ப்பே இல்லடா சாமி..


***************


ஊரிலேயே பெரிய மனிதர் விஜயகாந்த். மகனை அன்பாக அவன் இஷ்டப்படி வளர்க்கிறார். மகன் விஜயகாந்த் விவசாயம் படித்து விட்டு ஊரிலியே இருக்கிறார். கெமிக்கல் பாக்டரி ஆரம்பிக்க விரும்பும் வில்லன்களுக்கு நிலத்தை விற்க அப்பா விஜயகாந்த் மறுத்து விடுகிறார். மீனா (இவர் உண்மையில் வில்லனின் காதலி..) மகன் விஜயகாந்தை காதலிப்பதுபோல் நடித்து சொத்துக்களையும் நிலத்தையும் ஏமாற்றி வாங்கி விடுகிறார். இவர்களின் வீட்டுக்கு புதிதாக வரும் மீரா ஜாஸ்மின் குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சியை கொண்டு வருகிறார். அவர் யார்? வாழ்க்கையில் மீண்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றாரா? வில்லன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்க முடிந்ததா? இதுதான் மரியாதை படத்தின் கதை.


வீட்டுக்கு வருபவர் பொய் சொல்லி உள்ளே நுழைந்து எல்லோருக்கும் சந்தோஷத்தை கொண்டு வருவது - பூவே உனக்காக..


காதலித்த பெண் ஏமாற்றி விட்டதால் நொந்து போன கதாவை அடுத்த பெண் மாற்றி வாழ்க்கையில் முன்னேறச் செய்வது - சூர்யா வம்சம்..


மொத்த குடும்பமும் ஒன்றாக வாழ்ந்து வரும் காட்சிகள் - வானத்தை போல..


முந்தைய படங்கள் எல்லாத்தையும் கலந்து கட்டி ஒரு மொக்கை படத்தை எடுத்துள்ளார் விக்ரமன். பொதுவாக இவர் படங்களில் இருக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் கூட இந்தப் படத்தில் இல்லை.


மகன் விஜயகாந்த்தை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. இஞ்சி தின்ன குரங்கு போலவே இருக்கிறார். அப்பா கேரக்டேர் எவ்வளவோ பரவா இல்லை. அம்பிகாவும் அம்முவும் அம்மா மகளாக வந்து போகிறார்கள். ரமேஷ் கன்னா வானத்தை போல படத்தில் செய்த அதே ரோல். சமைக்கத் தெரியாத அம்பிகா, பாடத் தெரியாத அம்மு, மொக்கை ஜோக் சொல்லும் ரமேஷ், பழைய காலத்து காமெடி மியூசிக் என நகைச்சுவை காட்சிகள் எல்லாமே பிளேடு போடுகின்றன. வில்லனாக ஷண்முகராஜன், சம்பத்.. ரெண்டுமே காமெடி பீஸ். மீனாவுக்கு வயதாகி விட்டது ரொம்ப நன்றாகத் தெரிகிறது. கடைசியில் அவர் மனம் திருந்துவதும் நம்பும்படி இல்லை. படத்தின் ஒரே ஆறுதல், மீரா ஜாஸ்மின். நல்ல நடிச்சு இருக்கார். ஆளும் பார்க்க பிரெஷா இருக்கார்.


விஜய் ஆண்டனியோட இசையில பாடல்கள் எல்லாமே மெலடியா நல்லா இருக்கு. ஆனா, இன்பமே பாட்டை பாடின உதித் நாராயணனோட வாயில வசம்பைக் கொண்டு தேய்க்க.. ஒளிப்பதிவு நல்ல தெளிவு. பாட்டு எல்லாம் கொஞ்சம் பார்க்குற மாதிரி இருக்கு. என்ன.. பாட்டியாலா பாண்ட், ரோஸ் கோட் எல்லாம் போட்டுக்கிட்டு விஜயகாந்த் ஆடுறதை கொஞ்சம் சகிச்சிக்கணும். சென்னை காதல் என்ற மகா மொக்கை படத்துக்கு பிறகு விக்ரமனுக்கு கிடைச்ச வாய்ப்பை வீண் அடிச்சுட்டார்னுதான் சொல்லணும். எத்தனை நாளைக்குத்தான் ஒரே கதையவே எடுப்பீங்க? கொஞ்சம் மாத்தி யோசிங்க சார்.


படம் பார்த்தவங்களோட "மரியாதை" கெட்டுப் போச்சு..!!!


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

77 comments:

நையாண்டி நைனா said...

எங்க அண்ணனை வச்சு காமெடி பண்ணுறே, இருடி....உனக்கு ஆப்பு இருக்குடி...

லோகு said...

2011 க்கு மேல உங்களுக்கு தமிழ் நாட்டுல இருக்குற ஐடியா இல்லையா..

குசும்பன் said...

//சூரியன க்ளோசப்புல காட்டுறாங்க.. அதுக்கு மீசை, கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் கிராபிக்ஸ்ல வரைஞ்சா விசயகாந்து.. தாங்க முடியல.. தமிழ் சினிமா திருந்த வாய்ப்பே இல்லடா சாமி.. //

தியாக செம்மல், பொருமையின் சிகரம் கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு மெரினாவில் வாழும் காலத்திலேயே ஒரு சிலைவைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்!

குசும்பன் said...

//மீனாவுக்கு வயதாகி விட்டது ரொம்ப நன்றாகத் தெரிகிறது. //

எதைவைத்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும்:)

வேத்தியன் said...

ரொம்ப நொந்து போயிருக்கீங்க போல???
:-)

இதுக்கு தான்.. இந்தாளு நடிச்ச படத்தை எங்களை மாதிரி பாக்காம இருக்கணும்...
பாத்தா இப்பிடித் தான்...
நொந்து போய் ஒக்காந்துரணும்...
:-)

ஆதவா said...

முதலில் உங்களைச் சொல்லணும்ங்க.... இந்தமாதிரி படத்துக்கு விமர்சனம் போட்டு நீங்க "மரியாதை" கெடுத்துக்கிறீங்க....

"மரியாதை"யா சொல்றேன் விஜயகாந்தை புகழ்ந்து எழுதிடுங்க

இல்லாட்டி "மரியாதை" கெட்டுடும்.

----------------------------------------------------------------

திரு.விக்ரமனுக்கு கைவசம் இருப்பது நிறைய கதைகள்.... அவை எல்லாவற்றுக்கும் கரு ஒன்றுதான்... சோ, பார்க்கப் போறவங்க பன்ற தப்பு... இதில விக்ரமனைச் சொல்லி என்ன தப்பு?

ம்ம்ம்..... இந்த படத்தை இராஜ் டி.வியில போடுவாங்க... ஒருநாள் முழுக்க... அன்னிக்கு ஒண்ணு ரெண்டு சீன் பார்த்துக்கிட வேண்டியதுதான்...

தருமி said...

இன்பமே பாட்டை பாடின உதித் நாராயணனோட வாயில வசம்பைக் கொண்டு தேய்க்க.//

இத யாராவது நம்ம சர்வேசனிடம் போய் சொல்லணுமே ...

யாரங்கே...........!

பீர் | Peer said...

போனது விசயகான்ட் நடிச்ச விக்ரமன் படத்துக்கு, அங்க வேற என்னத்த எதிர்பார்த்தீங்கப்பு?
(அரசியல் சாரா திரைவிமர்சனத்திற்கு பாராட்டுக்கள் நண்பா)

Suresh said...

//இன்பமே பாட்டை பாடின உதித் நாராயணனோட வாயில வசம்பைக் கொண்டு தேய்க்க//

இதுல விழுந்து விழுந்து வாய் விட்டு சிரித்தேன் நல்லா சொன்னிங்க அப்பு

ஹம் நிறையா இடத்துல சிரித்தேன்... லா லா மியூசிக் இல்லையா

ஆமா தெரிந்தே படத்துக்கு போய்டு என்ன செய்ய.. சொந்த காசுல சூனியம் வச்சிகிட்டுங்க

ஆனா எங்க அம்மா போன மாதம் கூட வானத்தபோல 5.1 டிவிடி வாங்கிட்டு வர சொன்னாங்க அது நல்லா இருக்கும் ... தாய் மார்கள் படம் ..

அப்புறம் நிங்க தேவலாம்
என் நன்பன் மாயாஜால் பாத்ததே இல்லை கூட்டிட்டு போனேன் பைக்கில் அங்க போன எந்த படத்துக்கும் டிக்கெட் இல்லை, விஜயகாந்த் நடித்த அரசாங்கம் படம் எவனும் இல்லை, சரி டிக்கெட் கொடுங்க என்று சொன்ன போது First Day Fist Show டிக்கெட் கொடுப்பவர் ஒரு மாதிரி பார்த்து சிரித்து டிக்கெட் கொடுத்தார் மொத்தமா 4 பசங்க தான் தியேட்டரில் ஹ்ம்ம் ஒரே காமெடி தான் ஹ்ம்ம் இன்னமும் அந்த நினைவு போகவில்லை பார்த்திங்களா

ஆ.ஞானசேகரன் said...

என்னங்க கார்த்திக் பாண்டியன் படம் பார்த்து நொந்துபோய் எழுதியிருகீங்க போல இருக்கு... கொஞ்சம் பார்த்து போகக்கூடாதா?... ... எப்படியோ ஒரு படம் பார்க்காம விடமாட்டீங்க போல இருக்கே..... கவலைய விடுங்க சில சமயம் இதுபோல படம் பார்க்கவேண்டி வந்துரும்..... நான் இன்னும் படம் பார்க்கவில்லைபா...

அப்பரம் ஆதவா சொல்லுரதையும் கொஞ்சம் கணக்குல எடுத்துக்கங்க...

பாலகிருஷ்ணா said...

ஹிக்..ஹிக்...ஈ...ஈ....

Technologies Unlimited said...

சூப்பர்

கடைக்குட்டி said...

டிரைலர பாத்துட்டே நாங்கள்ளாள்ம் டெரர் ஆயிட்டோம்.. அதயும் மீறி தியேட்டர் போனது உங்க தப்புங்கண்ணோவ்...

Karthik Lollu said...

hey.. en padatha kalaikiriya??


tamilnaathula motham 40 thogudi irukku..

adula 789 theatre irukku

adhula 356 theatre la en padam odudu

adhula ac potha theatre 113

DTS potha theatre 245

idula enda theatre la makkal kuranjaalum unakku mariyaadai irukaadu...


KP: anne.. manichudunga.. inimel unga padatha kalaikka maaten


manippu tamila enakku pidikaada ore vaartha!! angggg!!

Venkatesh Kumaravel said...

வாய்விட்டு சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு! ஆரம்பத்துல பாயிண்டு பாயிண்டா கேப்டன் ரேஞ்சுல நீங்க எழுதியிருக்குற நையாண்டி தூள்ங்க!

அத்திரி said...

மதுரைக்கார நண்பா ஆனாலும் உனக்கு தில்லு ரொம்ப்ப்ப்ப்ப அதிகம்.... பின்ன விசயகாந்து படத்தையெல்லாம் பாத்துருக்குறியே........

தர்ஷன் said...

//மீனாவுக்கு வயதாகி விட்டது ரொம்ப நன்றாகத் தெரிகிறது. //

என்ன இது ஆட்டோ ஏதும் அனுப்பனுமா

ராம்.CM said...

என்ன கார்த்திகைப்பாண்டியன் அவர்களே! எங்க தலய பத்தி இப்படியா நாறடிப்பது?... நாங்க எலக்ஸனுல செசிச்சதுக்கப்புறம் வச்சிகிறேன் உங்களை...

மேவி... said...

app comedy padamnnu sollunga...

மேவி... said...

enna romba busy ah professor sir????

வழிப்போக்கன் said...

இருந்தாலும் உங்களுக்கு ரொம்பதான் தைரியம்...
இந்த படத்த எல்லாம் பாத்திருக்கீங்க???
:)))

வினோத் கெளதம் said...

செம்ம நையாண்டி விமர்சனம் கார்த்தி..
நான் எல்லாம் விஜயகாந்த் படத்த காமெடிக்கு மட்டும் தான் பாக்குறது..ஊர்ல அடிக்கடி போர் அடிக்குற அப்ப எல்லாம் கஜேந்திரா படத்த போட்டு பார்ப்பேன்..
விழுந்து விழுந்து சிரிக்கலாம்..
அதுவும் இது விக்ரமன் படம் வேற கேக்கனுமா..

Anonymous said...

அடப் பாவிகளா..விஜயகாந்த் படத்தை தியேட்டர்ல போயி பாக்குற தைரியம் இருக்குதா? எதுக்கும் அஞ்சாத வீரன் தானய்யா நீயு..ஒத்துக்குறேன்

Prabu M said...

விஜயகாந்த் படங்கள சத்தியமா ரசிச்சு பார்க்க சாத்தியம் இல்லை ஆனா அவர் பட விமர்சனங்களை ரசிக்கிற அளவு லொள்ளு சபாவைக் கூட ரசிக்க முடியுறதில்ல!!
கலாய்க்க வேண்டிய மேட்டரை செமயா கலாய்ச்சிருக்கீங்க பாஸ்!!

அட நீங்களும் மதுரையா?? நானும்தான் தல‌!!

ச.பிரேம்குமார் said...

ஒரு முழு நீள காமடிப்படத்தை பாத்துட்டீங்களா? இதுக்கு பொறுமையா உக்காந்து விமர்சனம் வேற எழுதியிருக்கீங்க..... நீங்க ரொம்ப நல்லவருங்க !!!

ALIF AHAMED said...

:))

:))))

அடி பலமோ ..:)

பாலா said...

எல்லாம் வல்ல.. பரம்பொருளே.... இந்த படத்தின்.. டிவிடி-யை விரைவில் வெளியிடுவீராக..!!!

Prabhu said...

நான் அப்பவே சொன்னேன் கேட்டீயளா?

ஆ.சுதா said...

அப்பாடா...! படம்பார்த்தாச்சுப்பா.
மூனுமணி நேரம் மிச்சம்.

ஆரம்ப 1,2,3 செம காமடி என்ன ஒரு நிஜம். (கற்பனை இல்லீங்க உண்மைதானுங்க)

அப்புறம் ஆதவா சொன்ன மாதிரி
மரியாதை"யா சொல்றேன்
புகழ்ந்து எழுதிடுங்க.
இல்லாட்டி..... அடுத்த படத்த சீக்கிரமா வெளியிட்டுருவாரு பார்த்துக்குங்க தாங்க மாட்டீங்க!!!
ஹா..ஹா...!!!

Cable சங்கர் said...

எனக்கில்லாத தைரியம் உங்களுக்கு எப்படி வந்திச்சு..?

Raju said...

\\இவர்களின் வீட்டுக்கு புதிதாக வரும் மீரா ஜாஸ்மின் குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சியை கொண்டு வருகிறார். அவர் யார்? \\

வேற யாரா இருக்கும்...? (புரிஞ்சுருச்சா மக்களே..!)

அதெப்படி விஜய் ஆண்டனி படத்துல ரீமிக்ஸ் இல்லாமயா..?
அவருதாம்பா மருத்துவ‌ரோட (அவரு இல்லீங்கோ...!) அடுத்த மியூசிக்கு டயரடக்கரு..!

Anonymous said...

இன்பமே பாட்டை பாடின உதித் நாராயணனோட வாயில வசம்பைக் கொண்டு தேய்க்க.. ayyo ayyo.. epdi ipdi ellam yosichi exhudhareenga???? :)

Anbu said...

\\இன்பமே பாட்டை பாடின உதித் நாராயணனோட வாயில வசம்பைக் கொண்டு தேய்க்க.\\\

:))

Anonymous said...

விஜய காந்த் ஏன் அண்ணன் ..அப்பா கேரக்டர்களுக்கு மட்டுமே இனி நடிக்கலாம்னு முடிவெடுக்கக் கூடாது, கண்ணெல்லாம் ஒரே தண்ணி படம் பார்க்கும் போது சிரிச்சு ...சிரிச்சு,பிரபுவை பாலோவ் பண்ணலாம் விஜி அண்ணன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

பின்னூட்டம் போட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி.. இங்கே கல்லூரில மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடப்பதால கொஞ்சம் பிசி.. அதனால் நேரம் கிடைக்கும்போது பதில் பின்னூட்டம் போட்டுடுறேன்.. இப்போதைக்கு ஜகா வாங்கிக்கிறேன்..:-)

Anonymous said...

நண்பா கொஞ்சம் வேலை பிசி. வலையுலகத்திற்கு வர முடியாத நிலை. இ-மெயிலில் தங்கள் அனுப்பிய தகவலை இன்று தான் பார்த்தேன் மகிழ்ச்சி. தங்களுக்கு பிறகு மெயில் அனுப்புகிறேன்.


அப்புறம் மரியாதை படத்தை நேற்று முன்தினம் இரவு ஆல்பர்ட் திரையரங்கில் பார்த்தேன். என்ன சொல்ல... நீங்கள் தான் எல்லாம் எழுதி விட்டீர்களே? விஜயகாந்தை திரையில் பார்க்க முடியவில்லை.

jagadeesh , melbourne said...

hi,
if vijaykandh stop his acting from cine field he may start acting in tv serials. Please think about our peoples. just leave him as he do.

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
எங்க அண்ணனை வச்சு காமெடி பண்ணுறே, இருடி....உனக்கு ஆப்பு இருக்குடி...//

போங்கண்ணே.. உங்களுக்கு ரொம்ப குறும்பு.. ஆப்பு நமக்கு இல்லண்ணே.. இப்படி படம் நடிச்சா, அவருக்குத்தான் ஆப்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said...
2011 க்கு மேல உங்களுக்கு தமிழ் நாட்டுல இருக்குற ஐடியா இல்லையா..//

2011? அப்படி ஒரு நம்பிக்கை இருக்கா? நைஸ் ஜோக்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குசும்பன் said...
தியாக செம்மல், பொருமையின் சிகரம் கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு மெரினாவில் வாழும் காலத்திலேயே ஒரு சிலைவைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்!//

உங்களுக்கு புண்ணியமா போவும்.. மேல ஒரு கூரையும் சேர்த்து போடச் சொல்லுங்கண்ணே.. இல்லன்னா நம்ம செல காக்கா குருவிக்கு எல்லாம் பாத்ரூமா போய்டும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குசும்பன் said...
எதைவைத்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும்:)//

நீங்க எப்படின்னு தெரியலைண்ணே.. நான் மூஞ்சியும், மேக்கப்பையும் மட்டும்தான் பார்த்தேன்.. ஹி ஹி ஹி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said...
ரொம்ப நொந்து போயிருக்கீங்க போல???//

விக்ரமன் படம் குடும்பப் படமா இருக்கும்னு நம்ம்ம்ம்ம்பி.. போயிட்டேன் நண்பா.. நோகடிச்சுட்டானுங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஆதவா said...
முதலில் உங்களைச் சொல்லணும்ங்க.... இந்தமாதிரி படத்துக்கு விமர்சனம் போட்டு நீங்க "மரியாதை" கெடுத்துக்கிறீங்க.//

என்ன பண்ண நண்பா.. நமக்கு சினிமா பாக்குறதுதான் ரொம்பப் பிடிச்ச விஷயம்.. அந்தக் கருமம் நல்லா இல்லைன்னா மக்களுக்கு சொல்றது நம்ம கடமை இல்லையா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
இத யாராவது நம்ம சர்வேசனிடம் போய் சொல்லணுமே ...
யாரங்கே...........!//

நண்பர் உதித்துக்கு அந்தளவுக்கு ரசிகரா? விடுங்கப்பா... அடுத்த விமர்சனத்துல பாராட்டி எழுதலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Chill-Peer said...
போனது விசயகான்ட் நடிச்ச விக்ரமன் படத்துக்கு, அங்க வேற என்னத்த எதிர்பார்த்தீங்கப்பு? (அரசியல் சாரா திரைவிமர்சனத்திற்கு பாராட்டுக்கள் நண்பா)//

நியாயம்தான்.. வேற என்னத்த எதிர்பார்க்க முடியும்? நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said..
இதுல விழுந்து விழுந்து வாய் விட்டு சிரித்தேன் நல்லா சொன்னிங்க அப்பு
ஹம் நிறையா இடத்துல சிரித்தேன்... லா லா மியூசிக் இல்லையா//

நன்றி நண்பா.. அப்புறம் விக்ரமன் படத்துல லா லா இல்லாமலா? வேற மாதிரி இருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
என்னங்க கார்த்திக் பாண்டியன் படம் பார்த்து நொந்துபோய் எழுதியிருகீங்க போல இருக்கு... கொஞ்சம் பார்த்து போகக்கூடாதா?... ... எப்படியோ ஒரு படம் பார்க்காம விடமாட்டீங்க போல இருக்கே..... கவலைய விடுங்க சில சமயம் இதுபோல படம் பார்க்கவேண்டி வந்துரும்..... நான் இன்னும் படம் பார்க்கவில்லைபா...
அப்பரம் ஆதவா சொல்லுரதையும் கொஞ்சம் கணக்குல எடுத்துக்கங்க.//

படம் பார்க்க ரொம்ப பிடிக்கும் நண்பா.. நல்லா இல்லைன்னா கூட பார்த்துட்டு புலம்புவேன்.. ஆதவா சொல்றது சரிதான்.. மாத்திக்கணும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பாலகிருஷ்ணா..//

//amazing photos..//

வருகைக்கு நன்றி நண்பர்களே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடைக்குட்டி said..
டிரைலர பாத்துட்டே நாங்கள்ளாள்ம் டெரர் ஆயிட்டோம்.. அதயும் மீறி தியேட்டர் போனது உங்க தப்புங்கண்ணோவ்...//

(ரன் பட ஸ்டைல்ல படிங்க..) தப்பு பண்ணிட்டேன்.. என்ன மன்னிச்சுடு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthik lollu..//

thanks buddy.. nice lollu..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வெங்கிராஜா said...
வாய்விட்டு சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு! ஆரம்பத்துல பாயிண்டு பாயிண்டா கேப்டன் ரேஞ்சுல நீங்க எழுதியிருக்குற நையாண்டி தூள்ங்க!//

நன்றி.. ரொம்ப சந்தோஷம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
மதுரைக்கார நண்பா ஆனாலும் உனக்கு தில்லு ரொம்ப்ப்ப்ப்ப அதிகம்.... பின்ன விசயகாந்து படத்தையெல்லாம் பாத்துருக்குறியே........//

ஒரு குருட்டு தைரியத்துல போயிட்டேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

// தர்ஷன் said...
//மீனாவுக்கு வயதாகி விட்டது ரொம்ப நன்றாகத் தெரிகிறது. //
என்ன இது ஆட்டோ ஏதும் அனுப்பனுமா//

அடப்பாவிகளா.. இன்னுமா மீனாவுக்கு ரசிகர் கூட்டம் பாக்கி இருக்கு?

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said...
என்ன கார்த்திகைப்பாண்டியன் அவர்களே! எங்க தலய பத்தி இப்படியா நாறடிப்பது?... நாங்க எலக்ஸனுல செசிச்சதுக்கப்புறம் வச்சிகிறேன் உங்களை...//

காமெடி பண்ணாதீங்க ராம்.. நடக்குரதப் பேசுங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//MayVee said...
app comedy padamnnu sollunga...//

ஆமா.. பசங்களோட போனா சரியா கலாய்ச்சிட்டு வரலாம் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//வழிப்போக்கன் said...
இருந்தாலும் உங்களுக்கு ரொம்பதான் தைரியம்...இந்த படத்த எல்லாம் பாத்திருக்கீங்க???:)))//

அப்பப்ப நட்டு கலண்டா இப்படி படம் எல்லாம் பார்ப்பேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
செம்ம நையாண்டி விமர்சனம் கார்த்தி..நான் எல்லாம் விஜயகாந்த் படத்த காமெடிக்கு மட்டும் தான் பாக்குறது..ஊர்ல அடிக்கடி போர் அடிக்குற அப்ப எல்லாம் கஜேந்திரா படத்த போட்டு பார்ப்பேன்.விழுந்து விழுந்து சிரிக்கலாம்..அதுவும் இது விக்ரமன் படம் வேற கேக்கனுமா.//

நெஜமா கூத்தடிக்கிரதுக்கு நல்ல படம் நண்பா.. நல்லா ஓட்டு ஓட்டுன்னு ஓட்டலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
அடப் பாவிகளா..விஜயகாந்த் படத்தை தியேட்டர்ல போயி பாக்குற தைரியம் இருக்குதா? எதுக்கும் அஞ்சாத வீரன் தானய்யா நீயு..ஒத்துக்குறேன்//

ஹே ஹே ஹே.. நாங்கல்லாம் அஞ்சாநெஞ்சன் ஊரு தம்பி.. இது கூட செய்யலைன்னா எப்படி

கார்த்திகைப் பாண்டியன் said...

// பிரபு . எம் said...
விஜயகாந்த் படங்கள சத்தியமா ரசிச்சு பார்க்க சாத்தியம் இல்லை ஆனா அவர் பட விமர்சனங்களை ரசிக்கிற அளவு லொள்ளு சபாவைக் கூட ரசிக்க முடியுறதில்ல!!
கலாய்க்க வேண்டிய மேட்டரை செமயா கலாய்ச்சிருக்கீங்க பாஸ்!!
அட நீங்களும் மதுரையா?? நானும்தான் தல‌!!//

சரியாச் சொன்னேங்க.. நன்றி.. நம்ம ஊருக்காரரா? ரொம்ப சந்தோஷம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார்..//

//மின்னுது மின்னல்..//

கொஞ்சம் அடி பட்டாலும் ஜாலியா கூத்தடிச்சிட்டு வந்தோம்.. நன்றி நண்பர்களே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹாலிவுட் பாலா said...
எல்லாம் வல்ல.. பரம்பொருளே.... இந்த படத்தின்.. டிவிடி-யை விரைவில் வெளியிடுவீராக..!!!//

எல்லாம் வல்ல இறைவன் உங்களை ரட்சிப்பாராக..

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said..
நான் அப்பவே சொன்னேன் கேட்டீயளா?//

எல்லாம் தலைவிதி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
அப்பாடா...! படம்பார்த்தாச்சுப்பா.
மூனுமணி நேரம் மிச்சம்.ஆரம்ப 1,2,3 செம காமடி என்ன ஒரு நிஜம். (கற்பனை இல்லீங்க உண்மைதானுங்க)//

நன்றி நண்பா.. உண்மைய எழுத நமக்கு என்ன சங்கடம்?

கார்த்திகைப் பாண்டியன் said...

// Cable Sankar said...
எனக்கில்லாத தைரியம் உங்களுக்கு எப்படி வந்திச்சு..?//

என்ன நண்பா பண்ண.. சனிக்கிழமை கு.பூ.கொ.பு பாக்கலாம்னு இருந்தேன்.. பார்த்த நீங்க நல்லா இல்லைன்னு எழுதறீங்க.. அப்புறம் வேற வழி இல்லாமத்தான் நான் இந்தப் படத்துக்கு போனேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்..//

இங்க கூட கிசுகிசுவா..?

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu..//

thanks anbu

//anonymous said..
விஜய காந்த் ஏன் அண்ணன் ..அப்பா கேரக்டர்களுக்கு மட்டுமே இனி நடிக்கலாம்னு முடிவெடுக்கக் கூடாது, கண்ணெல்லாம் ஒரே தண்ணி படம் பார்க்கும் போது சிரிச்சு ...சிரிச்சு,பிரபுவை பாலோவ் பண்ணலாம் விஜி அண்ணன்.//

nice idea boss

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said...
நண்பா கொஞ்சம் வேலை பிசி. வலையுலகத்திற்கு வர முடியாத நிலை. இ-மெயிலில் தங்கள் அனுப்பிய தகவலை இன்று தான் பார்த்தேன் மகிழ்ச்சி. தங்களுக்கு பிறகு மெயில் அனுப்புகிறேன்.//

நன்றி நண்பா. மெயில் பார்த்தேன்.. நாம கூடிய சீக்கிரம் பேசலாம்.. தேர்தல் பிசில இருப்பீங்க.. tc

கார்த்திகைப் பாண்டியன் said...

//jagadeesh , melbourne said...
hi,if vijaykandh stop his acting from cine field he may start acting in tv serials. Please think about our peoples. just leave him as he do.//

just cant imagine wat u said buddy.. horrible.. thanks for coming

குமரை நிலாவன் said...

படம் பார்த்தவங்களோட "மரியாதை" கெட்டுப் போச்சு..!!!

"அப்ப நம்ம மரியாதை
கெட்டுபோகாது "

நாங்கதான் படத்தை பாக்கல இல்ல

கார்த்திகைப் பாண்டியன் said...

தப்பிச்சுட்டீன்களே தலைவா

சொல்லரசன் said...

உங்கள் விமர்சனத்தை அண்ணியாரிடம் எடுத்து சொல்லி தகுந்த மரியாதை கிடைக்க.... ஏற்பாடுசெய்கிறேன்

ஆகாய நதி said...

நல்ல காமெடியான பதிவு...
:) நல்லா சிரிச்சேன்...
ஆனால் உங்களுக்கு துணிச்சல், பொறுமை 2ம் அதிகம்... இந்தப் படத்தை கூட பார்த்துட்டு வந்து பயப்படாம(அ) அழாம நகைச்சுவையா விமர்சிக்கிறீகளே! பாராட்டுகள் :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
உங்கள் விமர்சனத்தை அண்ணியாரிடம் எடுத்து சொல்லி தகுந்த மரியாதை கிடைக்க.... ஏற்பாடுசெய்கிறேன்//

தேன்க்ச்ன்னே.. திருச்சி வரப்ப நானே வீட்டுக்கு வரணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. அண்ணி கிட்ட சொல்லி நல்லா மரியாதை பண்ண சொல்லுங்க.. அந்த சிக்கன் சூப்ப மறந்துற வேண்டாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஆகாய நதி said...
நல்ல காமெடியான பதிவு...
:) நல்லா சிரிச்சேன்...
ஆனால் உங்களுக்கு துணிச்சல், பொறுமை 2ம் அதிகம்... இந்தப் படத்தை கூட பார்த்துட்டு வந்து பயப்படாம(அ) அழாம நகைச்சுவையா விமர்சிக்கிறீகளே! பாராட்டுகள் :)//

ரொம்ப புகழாதீங்க.. வெட்கமா இருக்கு..

"உழவன்" "Uzhavan" said...

//ரோஸ், பச்சை, மஞ்சள்னு இத்தனை கலர்ல கோட் சூட் போட முடியும்னு கண்டுபிடிச்சு பல பேரு கண்ணை குருடாக்குன அந்த புண்ணியவானுக்கு.. இருக்கு.. //

டமில் நாட்டு மக்கள் தேர்தல்ல ஒருவேளை கவுத்துட்டாங்கனா, அப்படியே ஆந்திரா பக்கம் போயி, " டெலுங்கன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா" னு சொன்னாலும் சொல்லுவாரு.. அதுக்குத்தான் ஆந்திரா காஸ்ட்யூம்.. யாருக்குத் தெரியும்.

//இஞ்சி தின்ன குரங்கு போலவே இருக்கிறார்//

ஓ.. அதனாலதான் மரியாதை பட போஸ்டரைக்கூட கழுதை திங்கமாட்டிக்குதா?? அட பாவமே..

//உதித் நாராயணனோட வாயில வசம்பைக் கொண்டு தேய்க்க//

நல்ல வேளை.. வசம்பதான் வாயில வைக்கனும்னு சொன்னீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்க சீரியசா எழுதுனா மட்டும்தான் படிப்பீங்கன்னு நினைச்சேன்.. ஹா.. ஹா.. ஹா.. இதையும் படிக்கிறீங்க..நன்றி நண்பா..

ஓம் ஸ்ரீ said...

ஹா ஹா உங்க விமர்சனம் படிச்சேன்,
உங்கள் விமர்சனம் பதிவு உலகத்தில் பதிவை பாக்க வரவங்களை வேண்டுமானால் சிரிக்க வைக்க உதவலாம், ஆனால் உண்மையான விமர்சனம் அல்ல இது, எஸ்.எம்.எஸ் என்ற படம் ரொம்ப நாளைக்கு அப்புறம் லாஜிக் இல்லாட்டியும் முழு நீள நகைச்சுவைபடமாக வந்ததை எப்படி ரசித்தேனோ, அதே போல ரொமப நாளுக்கு அப்புறம் எந்த க்ளிவேஜ் சீன்ஸ், தொப்புள் சீன்ஸ், ரத்தம் சதை இப்படி எதும் இல்லாம வந்திருக்க நல்ல படம்,

பழைய 3 படங்களை கலந்துகட்டி வந்திருப்பதுல என்ன பெரிய குறை இருக்குனு தெரியலை,

அவரோட மேக்கப் கண்டிப்பா மாத்தியே ஆகனும், உடம்பை குறைச்சே ஆகனும் என்பது உண்மைதான், ஆனா அதுக்கு இதை போன்ற சாப்ட்கார்னர் படங்களுக்கு அவசியமே இல்லை,

நேற்று பிடிக்காமதான் இந்த படம் போனேன், நான் படம் எதிர்பாராத விதமா பிடிச்சிருந்தது,

விக்கிரமன் படம்த்துல உள்ள ஸ்பெஷலே 10 தன்னம்பிக்கை புத்தகத்துக்கு சமானமானது,

கிண்டல் பண்ணனும்னா 1008 கிண்டல் பண்ணலாம், அதுக்காக திரை விமர்சனம்னு சொல்லாதீங்க,

விமர்சனம் பண்ணும்போது கொஞ்சம் பேக்ட் என்னா என்பதையும் கவனிக்கனும்,


பின் குறிப்பு :

நான் விஜயகாந்த் ரசிகர் மன்ற ஆளும் இல்லை, தேமுதிக தொண்டனும் இல்லை, 40 வயசான ஆளும் இல்லை,

ஜஸ்ட் 26தான்