April 18, 2009

The Road Home (1999) - காப்பி அடித்தாரா "பூ" சசி....?!!!



உலகில் ஆதி மனிதன் காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வரும் உணர்வு - காதல்தான். நாம் பல வகையான காதல் கதைகளைக் கேட்டிருப்போம். நண்பர்களின் காதலுக்கு உதவியும் இருப்போம். ஆனால் நமக்கு வெகு அருகே இருந்தும் அதிகம் அறிந்திராத ஒரு காதல் உள்ளதென்றால் நீங்கள் நம்புவீர்களா? அது நம் பெற்றோரின் காதல் கதை.. தன்னுடைய அப்பா அம்மாவின் கண்ணியமான காதலை நினைத்துப் பார்க்கும் ஒரு மகனின் கதைதான் - The Road Home. 1999 ஆம் வருடம் இந்த சீன மொழித் திரைப்படம் வெளியானது. பௌ ஷி என்னும் எழுத்தாளரின் "Remembrance" என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.



மலைப் பாதையின் வழியெங்கும் பனி பெய்து கொண்டிருக்கிறது. இறந்து போன தன் அப்பாவின் இறுதிச் சடங்குகளை செய்வதற்காக யூஷேங் தனது கிராமத்திற்கு திரும்பி வருகிறான். அவனுடைய அப்பா கிராம பள்ளிக்கூடத்தின் டீச்செராக இருந்தவர். பள்ளிக்கான கட்டிடம் கட்டுவதற்காக ஊர் ஊராய் அலைந்து கொண்டு இருந்தவர். இதய நோய் வந்து இறந்து போய்
விட்டார். அவருடைய உடம்பு ஊரில் இருந்து நாற்பது கிலோமீடர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் உள்ளது. அவர் உடம்பை வண்டியில் கொண்டு வர மேயர் ஏற்பாடு செய்கிறார். ஆனால் அதை யூஷேங்கின் அம்மா ஏற்க மறுக்கிறாள்.


தன்னுடைய கணவரின் உடம்பை மலைப்பாதை வழியாக மனிதர்கள் சுமந்து கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகிறாள். அவ்வாறு செய்வது சீனாவில் ஒரு சம்பிரதாயம். இதன் மூலம் தனது இறுதி யாத்திரையை மேற்கொள்ளும் மனிதன் தன் வீட்டுக்கான பாதையை மறக்க மாட்டான் என நம்புகிறார்கள். ஆனால் ஊரில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வேலை தேடி நகருக்கு சென்று விட்டதால் அம்மாவின் வேண்டுகோளை நிறைவேற்றுவது கஷ்டம் என மேயர் சொல்லுகிறார். அந்த மலைப்பாதைக்கும், தங்களுக்கும் நிறைய உறவு இருப்பதால் தனது கணவனின் உடல் அந்த வழியாகத்தான் வர வேண்டும் என்று சொல்லுகின்ற அம்மா, தறியில் தனது கணவரின் மீது போர்த்த வேண்டிய இறுதித் துணியை நெய்யத் தொடங்குகிறாள். அம்மாவின் அறைக்குள் இருக்கும் தனது பெற்றோரின் புகைப்படத்தை பார்க்கிறான் யூஷேங். அவனுடைய நினைவுகள் பின்னோக்கி நகர ஆரம்பிக்கின்றன.



புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக்கு ஆசிரியராக வருகிறார் சாங்க்யூ. கிராமத்தில் அழகியான தீக்கு அவரை பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. பள்ளியில் கட்ட வேண்டிய துணியை அவள்தான் நெய்கிறாள். கட்டிடம் கட்டும் மக்களோடு சேர்ந்து ஆசிரியரும் வேலை பார்க்கிறார். உணவு உண்ணும் நேரத்தில் அவர் தன்னுடைய சாப்பாட்டைத்தான் சாப்பிட வேண்டும் என்று தீ விரும்புகிறாள். வீட்டுக்கு வரும் ஆசிரியருக்கு அருமையாக மரியாதை செய்கிறாள். இருவருக்கு உள்ளும் ஒரு இனம்புரியாத அன்பு பெருகுகிறது. தீயின் தாய்க்கு இது பிடிக்கவில்லை. அரசியல் பிரச்சினைகளால் ஆசிரியர் ஊரை விட்டு செல்ல நேரிடுகிறது. தீ அவருக்காக காத்து இருக்கிறாள். விடுமுறை முடிந்து திரும்பி வரும் ஆசிரியர் தீயை மணந்து கொள்கிறார். அன்றில் இருந்து அவர்கள் ஒருவரை ஒருவரை பிரியாமல் வாழ்கிறார்கள். இத்துடன் நினைவுகள் முடிகின்றன.



இறந்து போன சாங்க்யூவின் உடலை அவரது மாணவர்களே தூக்கி வருகிறார்கள். தனது கணவருக்கு கம்பளி ஆடையை தீ அணிவிக்க பள்ளியின் அருகிலேயே அவரின் உடல் அடக்கம் செய்யப் படுகிறது. யூஷேங் அம்மாவை தன்னோடு நகரத்துக்கு வரும்படி அழைக்கிறான். அதற்கு மறுத்து விடும் தீ ஒரு முறையாவது அவன் அப்பா பாடம் நடத்திய பள்ளியில் அவனும் பாடம் நடத்த வேண்டும் என்று சொல்கிறாள். அம்மாவின் ஆசைக்காக யூஷேங் பள்ளியில் பாடம் நடத்துகிறான். அது அவனுடைய அப்பாவின் குரலாகவே தீக்குக் கேட்கிறது. அவள் சந்தோஷத்தோடு பள்ளியை நோக்கி செல்வதோடு படம் முடிகிறது.



மிக மெதுவாக நகரும் இந்தப் படத்தின் இயக்குனர் ஜாங் ஈமு(Zhang Yimou..). இவருடைய படங்கள் எல்லாவற்றிலுமே வண்ணங்களுக்கு எனத் தனி இடம் உண்டு. இந்தப் படத்தில் நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் கருப்பு வெள்ளையிலும் நினைவுகள் வண்ணத்திலும் படமாக்கப் பட்டிருப்பது ஒரு வித்தியாசமான உணர்வைத் தருகிறது. பனி விழும் மலைகள், மஞ்சள் நிற இலைகள் பூத்துக் குலுங்கும் மரங்கள், நீண்ட செம்மண் பாதை என காட்சிகள் எல்லாமே ஓவியங்களை நினைவூட்டும். படத்தின் பின்னணி இசையாக பெரும்பாலும் இயற்கை ஒலிகளே பயன்படுத்தப் பட்டுள்ளன. காதலர்கள் சந்திக்கும் காட்சியில் மட்டுமே மனதை வருடும் காதலின் இசை பெருகி வழிகிறது.


* ஆசிரியர் முதல் முதலாய் தன்னை பார்க்கும் போதும் தீ பரவசம் கொள்ளும் காட்சி.. இந்தப் படத்தில்தான் Zhang ziyi அறிமுகம் ஆனார்.. கண்களில் மகிழ்ச்சியோடு அவர் துள்ளிக் குதித்து ஓடுவது நமக்கும் பெருத்த சந்தோஷத்தை தருகிறது..



* மலைப்பாதையில் சாங்க்யூவிற்காக பலநாள் காத்து இருக்கிறாள் தீ.. தீராத தனிமையும் அவரை பார்க்கும்போது அவளின் மனம் கொள்ளும் உவகையும் இசையில் மிக அருமையாக சொல்லப்பட்டு இருக்கும் காட்சிகள்


* ஆசிரியர் தான் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் என்பதற்காக பிறரின் பாத்திரங்களை நகர்த்தி தன்னுடைய உணவை முன்னாடி வைக்கிறாள் தீ.. பின்னாளில் வீட்டிற்கு உணவு உண்ண வரும் ஆசிரியரிடம் தன்னுடைய பாத்திரத்தை அடையாளம் தெரிகிறதா என தீ கேட்பது..


* அவளுக்கு பரிசாக க்ளிப் ஒன்றை ஆசிரியர் தருவது.. ஆசிரியரை துரத்தி ஓடுகையில் மலைப்பாதையில் தீ அதை தொலைத்து விடுகிறாள்.. வரும் வழி எல்லாம் தனது கால் சுவடுகளின் கூட க்ளிப் எங்கேனும் கிடக்கிறதா என தீ தேடும் காட்சி...


* உடைந்து போன பாத்திரத்தை மகளுக்காக தீயின் அம்மா சரி பண்ணி வைப்பது..


* கடைசி காட்சியில் வயதான தீ பள்ளியை நோக்கி நடக்கும்போது அவளுடைய இளவயது ஞாபகங்கள் வருவது..



எல்லாக் காட்சிகளுமே கவிதையைப் போல் படமாக்கப் பட்டுள்ளது. மிகக் குறைந்த வசனங்களே இருந்தாலும் படம் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் அருமை. பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிச்சிங்கம் விருதினை இந்தப் படம் வென்றது.

சரி, தலைப்புக்கு வருவோம்..

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த தமிழ்ப்படம் - பூ. அருமையான திரைக்கதையும் பார்வதியின் அற்புதமான நடிப்பும் தமிழில் ஒரு உலக சினிமா என்று சொல்ல வைத்தது. அந்தப் படத்தின் இடைவேளைக் காட்சி.. மாமன் கேட்ட கள்ளிப்பழங்களை எடுத்துக்கொண்டு நாயகி அவன் வீட்டுக்கு வருவாள். அவன் ஊருக்கு கிளம்பி விட்டதாக கேள்விப்பட்டு அவனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று துரத்திப் போவாள். ஒரு கட்டத்தில் கீழே விழுந்து பழம் எல்லாம் சிதறி போகும். இந்தக் காட்சி அப்படியே "The Road Home" படத்தில் உள்ளது. ஆசிரியருக்காக தீ காளான் உணவைத் தயாரிக்கிறாள். திடீரென அவர் ஊருக்கு கிளம்பியதை அறிந்து உணவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அவரை துரத்தி ஓடுகிறாள். மலைப்பாதையில் வழுக்கி விழுந்து பாத்திரம் உடைந்து போகிறது. அழுது கொண்டே திரும்புகிறாள். மலைப்பாதையில் தீ காத்து நிற்பது, அப்படியே ஸ்ரீகாந்திற்காக பார்வதி காத்து நிற்கும் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. அதே போல, பூவின் பின்னணி இசை.. ட்ரைலர் பார்க்கும் போதே அசத்தலாக இருந்தது. அதுவும் இந்தப் படத்தின் பின்னணி இசையில் இருந்துதான் சுட்டிருப்பார்கள் போலத் தெரிகிறது. தமிழில் ஒரு உலக சினிமா எடுங்க.. அதுக்காக உலக சினிமாவையே சுட்டு எடுக்காதீங்கப்பா..தமிழில் வந்த சினிமாக்களில் பூ ஒரு மிகச்சிறந்த படம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனால் அதில் இப்படி சில விஷயங்கள் நடந்து இருப்பதுதான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது... !!!

(இந்தப் படத்தின் டிவிடியை தந்து உதவிய நண்பர் அகநாழிகை - பொன்.வாசுதேவனுக்கு நன்றிகள் பல.. )
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

69 comments:

வேத்தியன் said...

இப்பிடியும் நடக்குதா???

வேத்தியன் said...

நல்ல தமிழ் படங்கள் எல்லாவற்றிலும் (சிலதை தவிர) அதிகமான கலப்புகள் இருப்பது வருத்தம் தான்...
நல்ல செய்தி நண்பா...

ஆ.சுதா said...

the road home பார்த்து சிலமாதங்கள் ஆகிவிட்டது. பூ இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. இடையிடையே பார்த்துள்ளேன் அதில் நீங்கள் சொல்லும்

|அவன் ஊருக்கு கிளம்பி விட்டதாக கேள்விப்பட்டு அவனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று துரத்திப் போவாள். ஒரு கட்டத்தில் கீழே விழுந்து பழம் எல்லாம் சிதறி போகும். இந்தக் காட்சி அப்படியே "The Road Home" படத்தில் உள்ளது. ஆசிரியருக்காக தீ காளான் உணவைத் தயாரிக்கிறாள். திடீரென அவர் ஊருக்கு கிளம்பியதை அறிந்து உணவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அவரை துரத்தி ஓடுகிறாள்.|

இந்த காட்சியை பார்திருக்கிறேன் எனக்கும் இவ்வென்னமே தோன்றியது.
பூவை முழுமையாக பார்க்கவேண்டும்.

Raju said...

\\த‌மிழில் ஒரு உலக சினிமா எடுங்க.. அதுக்காக உலக சினிமாவையே சுட்டு எடுக்காதீங்கப்பா..\\
ஆமாங்கப்பா...
இதுக்கே இவ்ளோ பீல் பண்ணுறீங்களே...
இன்னும் கமல் அடிச்ச காப்பியப் பத்தி ஒருத்தரு பதிவு போட்டு இருந்தாரு...
அத பார்வார்டு பண்ணுனா எப்படி பீல் பண்ணுவீங்களோ...!

Prasanna Rajan said...

'பூ' திரைப்படத்தை முழுமையாக பார்த்தீர்களா, அந்த திரைப்படத்தின் முதலிலும் சரி, இறுதி பாகத்திலும் சரி 'தி ரோடு ஹோம்' திரைப்படத்தின் இயக்குனர் 'ஷாங் யிமு'விற்கு நன்றி சொல்லி இருப்பார் சசி. மேலும் பல பேட்டிகளில் தான் இந்த படத்தை தான் தழுவி எடுத்தாக தெளிவாக சொல்லி இருப்பார் சசி. 'ஜட்ஜ்மென்ட் நைட்' என்ற படத்தை அப்பிடியே சுட்டு 'சரோஜா' என்று படம் எடுத்தார்கள். அந்த படத்துக்கு எல்லாம் 'பூ' எவ்வளவோ தேவலாங்க...

லோகு said...

உங்களுக்கு அகநாழிகை கொடுத்தார்.. சசிக்கு யார் கொடுத்தார்களோ?? :)

அகநாழிகை said...

கார்த்தி,
“வாழ்விலிருந்து தோன்றுவதுதான் படைப்பும் இலக்கியமும்“ என்பார்கள். என்னை மிகவும் கவர்ந்த வரிகள். அதுபோன்ற இப்படத்தைப் பற்றிய உங்கள் கருத்துப் பதிவு மிகவும் அழகான நடையில் உள்ளது.
இப்படம் குறித்து நான் எழுத நினைத்திருந்து பிறகு வேறு பணிகள் காரணமாக எழுத முடியாமல் போய் விட்டது.
படத்தில் என்னைக் மிகவும் கவர்ந்த காட்சி காதலனுக்காக உணவு தயாரிக்கும் தீயின் செய்கையும், உடைந்த பீங்கான் ஜாடியை இணைத்து தரும் காட்சியும். பீங்கான் ஜாடியை இணைத்து தரும் காட்சியில் தாய்ப்பாசம், காதல், அன்பு, நேசம், அந்த காலத்தில் உடைந்த பீங்கானை இணைக்கும் தொழில் நுட்பம் (இன்று இருக்கிறதா எனத்தெரியவில்லை) என இக்காட்சி நமக்குள் ஏற்படுத்தும் உணர்வெழுச்சி எழுத்தில் விவரிக்க இயலாதது.
‘பூ‘ படத்தை நான் பார்க்கவில்லை.
நன்றாக எழுதியிருந்தீர்க்கள்.
வாழ்த்துக்கள், கார்த்தி.

அன்புடன்,
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said..
நல்ல தமிழ் படங்கள் எல்லாவற்றிலும் (சிலதை தவிர) அதிகமான கலப்புகள் இருப்பது வருத்தம் தான்...
நல்ல செய்தி நண்பா...//

கண்டிப்பாக நாம் நல்ல படங்களைக் கொடுக்கலாம்.. ஆனால் அதை என்ற பெயரில் மற்ற படங்களில் இருந்து எடுப்பது நல்லது கிடையாது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. முத்துராமலிங்கம் said..
இந்த காட்சியை பார்திருக்கிறேன் எனக்கும் இவ்வென்னமே தோன்றியது.
பூவை முழுமையாக பார்க்க வேண்டும்.//

நன்றி நண்பா.. எனக்கும் அவ்வாறே தோன்றியதால்தான் எழுதினேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said.. ஆமாங்கப்பா...இதுக்கே இவ்ளோ பீல் பண்ணுறீங்களே...இன்னும் கமல் அடிச்ச காப்பியப் பத்தி ஒருத்தரு பதிவு போட்டு இருந்தாரு...//

முடிஞ்சா அனுப்பி வைங்க நண்பா.. எனக்கு கமல் படுத்தலேயே பிடிச்சது அன்பே சிவம் தான்.. ஆனா அதையே காப்பின்னுதான் சொல்றாங்க.. உண்மையா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரசன்னா இராசன் said..
அந்த திரைப்படத்தின் முதலிலும் சரி, இறுதி பாகத்திலும் சரி 'தி ரோடு ஹோம்' திரைப்படத்தின் இயக்குனர் 'ஷாங் யிமு'விற்கு நன்றி சொல்லி இருப்பார் சசி. //

இது எனக்கு புதிய தகவல் நண்பா.. சரி.. அதற்காக ஒரு காட்சியையும் இசையையும் inspiration என்ற பெயரில் சுடலாமா.. இப்போதும் சொல்கிறேன்.. பூ நான் ரொம்ப விரும்பிப் பார்த்த படம்.. ஆனால் அதில் இப்படி செய்து இருக்கிறார்கள் என்பதை எனக்கு தாங்கிக் கொள்ள முடியவில்லை..

//'ஜட்ஜ்மென்ட் நைட்' என்ற படத்தை அப்பிடியே சுட்டு 'சரோஜா' என்று படம் எடுத்தார்கள்.//

மசாலா படங்கள் எப்படி எடுத்தால் என்ன.. ஆனால் நம் வாழ்வை திரையில் காட்டிய ஒரு நல்ல படம் பூ என்பதால் தான் இந்த வருத்தமே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said..
உங்களுக்கு அகநாழிகை கொடுத்தார்.. சசிக்கு யார் கொடுத்தார்களோ?? :)//

வாங்க நண்பா.. எல்லாம் நேரக்கொடுமை..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை..
“வாழ்விலிருந்து தோன்றுவதுதான் படைப்பும் இலக்கியமும்“//

நிச்சயமாக.. நானும் இன்னும் நெறைய எழுதலாம் என்று இருந்தேன் நண்பா.. ஆனால் பதிவின் நீளம் கருதி சுருக்கி விட்டேன்.. எல்லாக் காட்சிகளுமே ரொம்ப நுட்பமாக படமாக்காப்பட்டு இருந்தன.. நன்றி வாசு..

ச.பிரேம்குமார் said...

பாண்டியன், உலகப்படங்கள் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சாச்சா? அருமையான பதிவு :)

There is a lot of difference between getting inspired and copying. In this case of inspiration, Sasi's efforts can be considered

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆமாம் பிரேம்.. ரொம்ப நன்றி.. பூ போன்ற படம் தந்ததற்காக சசி பாராட்டப்பட வேண்டியவர்.. அதே நேரம் இந்த சின்ன சறுக்கலை தவிர்த்து இருக்கலாம் என்பது என் எண்ணம்..

Anonymous said...

Hi,
Read through your post and this is not a comment on it directly since I have not seen both films. So can't say whether the tamil film is a copy or just inspired by the original filmJust want to say that the concept of originality itself is a myth. Nothing is original. Anything being done currently would have at least a similarity with something done earlier. Once can look at Borges's quote 'Every Writer Has A Precussor' in this light.
There will always be some traces of some original work in all art forms. As a digression one could say that Mr.S.Ramakrishnan's earlier works have been profoundly influenced by Latin American masters and magic realism. This is in no way demeaning Sa.Ra who is a great writer in his own right.
The same would apply for other art forms also.

கார்த்திகைப் பாண்டியன் said...

your point is a real valid one mate.. i would have been happy if you have said your name..

//Nothing is original. Anything being done currently would have at least a similarity with something done earlier.//

gotta admit.. and i think.. you are someone who know me vey well.. or else u would have not taken s.raa for example.. anyway.. thanks for the comment dude..

Anonymous said...

Hi,
I have been reading your posts for quite some time and that's why I mentioned about S.Ra. There are others too who have been influenced by the 'Latin American Masters' like Suresh Kumar Indrajit and Gouthama Siddharthan.

கார்த்திகைப் பாண்டியன் said...

they are some new names to me.. thanks mate.. for reading continuously and giving your comments.. keep coming..:-)

Raju said...

\\முடிஞ்சா அனுப்பி வைங்க நண்பா.. எனக்கு கமல் படுத்தலேயே பிடிச்சது அன்பே சிவம் தான்.. ஆனா அதையே காப்பின்னுதான் சொல்றாங்க.. உண்மையா?\\

அனுப்புறேன்..எனக்கு கமல் படங்களில் பிடித்தவை "அன்பே சிவம்" " நம்மவர்:..
இரண்டுமே காப்பிதான்...!



அன்பே சிவம்-Planes, Trains and Automobiles

நம்மவர்-To Sir, With Love

கார்த்திகைப் பாண்டியன் said...

சரிங்க டக்கு... அனுப்புங்க.. படிப்போம்..

hariharan said...

hi sir... this is hari.. congrates.. your post is in youth vikatan sir..

Raju said...

\\நம் வாழ்வை திரையில் காட்டிய ஒரு நல்ல படம் பூ என்பதால் தான் இந்த வருத்தமே..\\

நம் வாழ்வா?
இதுல ஏதோ ஒரு உள்குத்து இருக்கு..!
உண்மைய சொல்லுங்க பேராசிரியரே..?

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி ஹரி.. தொடர்ச்சியாக யூத் விகடனில் வரும் இரண்டாவது பதிவு இது.. எனக்கு என்னமோ அவர்கள் தலைப்பை வைத்துத்தான் தெரிவு செய்கிறார்கள் என்று தோன்றுகிறது..

குமரை நிலாவன் said...

பூ படம் ஒரு சிறந்த படம் .
யாருமே தைரியமாக யதார்த்தமான
கதைகளை படமாக எடுக்க முன்வருவது இல்லை
அந்த விதத்தில் சசி சாருக்கு ஒரு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்
பூ படத்தில் பிடித்த சில யதார்த்தங்கள்
வேட்டு ஆவுசுல வேலை பார்க்கும் பெண்கள்
இரு பெண்களின் நட்பு
மாரியின் வீடு யதார்த்தம்
பேனாக்காரராக வந்தவரின் நடிப்பு
அந்த ஏரியால வாழ்க்கை எப்படி இருக்குமோ
அப்படியே இருந்தது
சினிமாத்தனம் இல்லாத சினிமா
ஆவுசுல அந்த ஏரியால அப்படிதான் சொல்லுவாங்க

ஆங்கில, சீன படங்களை மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள்
என்பது ஒரு காரணம் .

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said..
நம் வாழ்வா?இதுல ஏதோ ஒரு உள்குத்து இருக்கு..!உண்மைய சொல்லுங்க பேராசிரியரே..?//

அட.. பொதுவா சொன்னேனப்பா.. இதெல்லாம் தோண்டி துருவி கேக்கக்கூடாது... சொல்லிப்புட்டேன்.. :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரைநிலாவன் said..
பூ படம் ஒரு சிறந்த படம் .
யாருமே தைரியமாக யதார்த்தமான
கதைகளை படமாக எடுக்க முன்வருவது இல்லை //

ஆமாம் நண்பா.. உண்மையிலேயே பூ மிகச்சிறந்த படம்தான்.. ஒரு சில காட்சிகளை மட்டும் கோர்த்து விட்டார்களே என்பதுதான் என் வருத்தம்..

Karthik Lollu said...

enna ne full padamum kaapi adicha maari kochikireenga.. sila peru telugu hero sattai collara kadicha kooda kadichithu vaaranga.. innoru sila peru coat suitoda thiriyuraangya.. nallada thaan ne suthaanga.. adhuvum oriru scene thaane.. vidunganee

பொன்.பாரதிராஜா said...

ஆசிரியர் முதல் முதலாய் தன்னை பார்க்கும் போதும் தீ பரவசம் கொள்ளும் காட்சி.. இந்தப் படத்தில்தான் Zhang ziyi அறிமுகம் ஆனார்.. கண்களில் மகிழ்ச்சியோடு அவர் துள்ளிக் குதித்து ஓடுவது நமக்கும் பெருத்த சந்தோஷத்தை தருகிறது..





* மலைப்பாதையில் சாங்க்யூவிற்காக பலநாள் காத்து இருக்கிறாள் தீ.. தீராத தனிமையும் அவரை பார்க்கும்போது அவளின் மனம் கொள்ளும் உவகையும் இசையில் மிக அருமையாக சொல்லப்பட்டு இருக்கும் காட்சிகள்



* ஆசிரியர் தான் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் என்பதற்காக பிறரின் பாத்திரங்களை நகர்த்தி தன்னுடைய உணவை முன்னாடி வைக்கிறாள் தீ.. பின்னாளில் வீட்டிற்கு உணவு உண்ண வரும் ஆசிரியரிடம் தன்னுடைய பாத்திரத்தை அடையாளம் தெரிகிறதா என தீ கேட்பது..



* அவளுக்கு பரிசாக க்ளிப் ஒன்றை ஆசிரியர் தருவது.. ஆசிரியரை துரத்தி ஓடுகையில் மலைப்பாதையில் தீ அதை தொலைத்து விடுகிறாள்.. வரும் வழி எல்லாம் தனது கால் சுவடுகளின் கூட க்ளிப் எங்கேனும் கிடக்கிறதா என தீ தேடும் காட்சி...



* உடைந்து போன பாத்திரத்தை மகளுக்காக தீயின் அம்மா சரி பண்ணி வைப்பது..




* கடைசி காட்சியில் வயதான தீ பள்ளியை நோக்கி நடக்கும்போது அவளுடைய இளவயது ஞாபகங்கள் வருவது..

விமர்சனம்னா கார்த்திதான்...படம் பாக்கனும்னு ஆசையா இருக்கு...

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthik lollu..//
நீங்க சொல்றதும் சரிதான் கார்த்தி.. ஒரு ஆதங்கம்தான்.. நமக்கு பிடிச்ச படத்துல இப்படி பண்ணி இருக்காங்களேன்னு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பொன். பாரதிராஜா..//

என்கிட்டே சிடி இருக்கு பாரதி.. வேணும்னா அனுப்பி வைக்கிறேன்..

அத்திரி said...

நண்பா தொடர் பதிவுக்கு உங்களை அழைத்திருக்கிறேன்... என் கட பக்கம் வரவும்

போன மாசம் வேல்டு மூவிஸ் சேனல்ல மை கேர்ள் என்ற தாய்லாந்து மொழி திரைப்படம் பார்த்தேன்... 2003ல் வந்த படம்... கிளைமாக்ஸ் ஆட்டோகிராப் படத்தை ஞாபக படுத்தும்

ராம்.CM said...

தமிழ் சினிமா பார்க்கவே நேரமில்லை என சில நேரங்களில் நான் வருந்தியதுண்டு(உங்களை பார்த்து பொறாமைபட்டதுண்டு.)இதுல உலக சினிமாவா?.

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
நண்பா தொடர் பதிவுக்கு உங்களை அழைத்திருக்கிறேன்... என் கட பக்கம் வரவும்//

நண்பா.. நீங்க நம்ம கடைல இருந்தப்ப நான் உங்க கடைல..:-) பார்த்துட்டேன்.. அழைத்தமைக்கு நன்றி.. கூடிய சீக்கிரம் எழுதுறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
தமிழ் சினிமா பார்க்கவே நேரமில்லை என சில நேரங்களில் நான் வருந்தியதுண்டு(உங்களை பார்த்து பொறாமைபட்டதுண்டு.)இதுல உலக சினிமாவா?.//

கண்ணு வைக்காதீங்க ராம்.. நானே ஏதோ கொஞ்சமா ஊரு சுத்திக்கிட்டு சந்தோஷமா இருக்கேன்..

வினோத் கெளதம் said...

கார்த்தி அருமையா எழுதி இருக்கீங்க..
இந்த பட விமர்சனம் ஏற்கனவே விகடன்ல படித்து இருக்கேன் என்று நினைக்கிறேன்..
பூ ஒரு அருமையான முயற்சி தான்..(நான் இன்னும் பார்க்கவில்லை)

Anonymous said...

Ju dou. Another movie by the same director. Adult theme. இந்த படம் முடியும் போது என்ன சொல்வது என்று புரியவில்லை. சில படங்கள் முடியும் போது பேச முடியாமல் செய்து விடும். தமிழகத்து கிராமங்களை நினைவுபடுத்தியது. அருமையாகப் படமாக்கப்பட்டிருந்தது

பாலா said...

ரெண்டு நாளுக்கு முன்னாடி, ஷண்முகப்ரியன் சார், இந்த படத்தை பார்க்க சொன்னார். அப்ப ‘பூ’ படத்தை பத்தியும் சொன்னார். :))

ஆ.ஞானசேகரன் said...

சில நேரங்களில் ஒத்த கருத்து இருவருக்கு வருவதும் இயற்கையே....

நன்றாக சொல்லியுள்ளீர்கள் நன்றி நண்பரே

சொல்லரசன் said...

விமர்சனமும் கவிதையாக உள்ளது நண்பா.


//தமிழில் ஒரு உலக சினிமா எடுங்க.. அதுக்காக உலக சினிமாவையே சுட்டு எடுக்காதீங்கப்பா.//

உலகத்தையும் உலகசினிமாவை அறிய பாமரனுக்கு அந்த கருத்தை யார் சொல்வது.

காப்பிஅடிப்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது,ஏன் நீங்கள் எஸ்.ரா வை பின்பற்றுவதும் ஒரு வித காப்பிதான்(ஒரு பதிவுதானே என்று பின்னுட்டம்போட வேண்டாம்}அது போல அவருக்கு பிடித்த அன்னிய மொழி படத்தின் நிகழ்வை அவர் கடைகோடி தமிழனுக்கு தருகிறார்.தமிழில் வரும் ஒரே மாதிரியான‌ கதை அமசம் உள்ள படங்களுக்கு இந்த "சுட்டு" வார்தை பொருந்தும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பூ படத்தில் Zhang Yimouக்கு நன்றி போட்டு தான் படத்தையே துவக்குகிறார் சசி. inspiration போலத் தான் தோணுது. தவறில்லை.

சொல்லரசன் said...

பொன்.பாரதிராஜா said.
//விமர்சனம்னா கார்த்திதான்...படம் பாக்கனும்னு ஆசையா இருக்கு...//

இரண்டு வரி பின்னுட்டத்திற்கு தேவையே இல்லாமல் இருபது வ‌ரியை காப்பிஅடிப்பதை ஒப்புகொள்ளும் நீங்கள் அன்னிய கதையை அவர்காப்பி அடித்து
அந்த‌மொழிதெரியாத மக்களுக்கு சொல்வதை ஏன் ஏற்றுகொள்ள‌மறுக்கிறீர்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வால்மீகி ராமாயணத்தைக் காப்பியடித்து கம்ப ராமாயணம் எழுதப் பட்டது தவறு என்கிறீர்களா.............?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அந்த வெளிநாட்டு படங்கள் பார்க்கமுடியாத என் போன்றோர்க்கு இந்தப் படங்கள் வரப் பிரசாதம் இல்லையா...?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதைதான் தருமி அன்றே சொன்னார்..

குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்குபவர்கள்........

Anonymous said...

good post anna

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
கார்த்தி அருமையா எழுதி இருக்கீங்க..
இந்த பட விமர்சனம் ஏற்கனவே விகடன்ல படித்து இருக்கேன் என்று நினைக்கிறேன்..
பூ ஒரு அருமையான முயற்சி தான்..(நான் இன்னும் பார்க்கவில்லை)//

நன்றி நண்பா.. பூவும் நல்ல படம்தான் பாருங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anynomous said..
Ju dou. Another movie by the same director. Adult theme. இந்த படம் முடியும் போது என்ன சொல்வது என்று புரியவில்லை. சில படங்கள் முடியும் போது பேச முடியாமல் செய்து விடும். தமிழகத்து கிராமங்களை நினைவுபடுத்தியது. அருமையாகப் படமாக்கப்பட்டிருந்தது//

தகவலுக்கு நன்றி நண்பரே.. பார்க்க முயற்சிக்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹாலிவுட் பாலா said..
ரெண்டு நாளுக்கு முன்னாடி, ஷண்முகப்ரியன் சார், இந்த படத்தை பார்க்க சொன்னார். அப்ப ‘பூ’ படத்தை பத்தியும் சொன்னார். :))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said..
சில நேரங்களில் ஒத்த கருத்து இருவருக்கு வருவதும் இயற்கையே....நன்றாக சொல்லியுள்ளீர்கள் நன்றி நண்பரே//

ஆமாம் நண்பா.. பூ நல்ல படம்தான்.. ஆனால் நேரடியாக காட்சியை எடுக்காமல் இருந்திருக்கலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
காப்பிஅடிப்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது,ஏன் நீங்கள் எஸ்.ரா வை பின்பற்றுவதும் ஒரு வித காப்பிதான்(ஒரு பதிவுதானே என்று பின்னுட்டம்போட வேண்டாம்}அது போல அவருக்கு பிடித்த அன்னிய மொழி படத்தின் நிகழ்வை அவர் கடைகோடி தமிழனுக்கு தருகிறார்.தமிழில் வரும் ஒரே மாதிரியான‌ கதை அமசம் உள்ள படங்களுக்கு இந்த "சுட்டு" வார்தை பொருந்தும்.//

என் மேல் ஏன் இந்தக் கோபம் நண்பா.. நான் ஒரு சிறுவன் எஸ்ரா பாணியில் எழுதுவதற்கும் படத்தை காப்பி அடிப்பதற்கும் என்ன சம்பந்தம்? ஒரு படம் பிடித்து அதில் இருந்து எல்லாரும் காட்சிகளை எடுக்க ஆரம்பித்தால் என்ன ஆவது? பாமர மக்களுக்கு சொந்தமாக எடுக்கலாமே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ரவிசங்கர் said..
பூ படத்தில் Zhang Yimouக்கு நன்றி போட்டு தான் படத்தையே துவக்குகிறார் சசி. inspiration போலத் தான் தோணுது. தவறில்லை.//


எனக்கு பதிவு போட்ட பின்தான் தெரியும் நண்பா...inspiration என்ற போட்டதும் எனக்கு கொஞ்சம் மனவருத்தம்தான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Sureஷ் said..
வால்மீகி ராமாயணத்தைக் காப்பியடித்து கம்ப ராமாயணம் எழுதப் பட்டது தவறு என்கிறீர்களா.............?//

ஊரெல்லாம் தெரிஞ்ச ஒரு இதிகாசத்தை இரண்டு பேர் எழுதவது சரி நண்பா.. ஆனால் காட்சிகளை கம்பர் தன்னுடைய நடையில்தான் எழுதினர்..?

கார்த்திகைப் பாண்டியன் said...

////Sureஷ் said..
அந்த வெளிநாட்டு படங்கள் பார்க்கமுடியாத என் போன்றோர்க்கு இந்தப் படங்கள் வரப் பிரசாதம் இல்லையா...?//

ஏங்க.. அதுக்காக எல்லா உலகப் படங்களையும் காப்பி அடிச்சா பரவா இல்லைன்னு சொல்றீங்களா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//Sureஷ் said..
இதைதான் தருமி அன்றே சொன்னார்..
குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்குபவர்கள்........//

இதுல என்னத்த நண்பா நான் பெரிசா பேரு வாங்கப் போறேன்? பாருங்க.. உங்க கோபத்தைத்தான் சம்பாதிச்சுருக்கேன்.. ஆனா அதுக்காக எனக்கு தோணுறத எழுதாம இருக்கு முடியுமா? கண்டிப்பா தப்பு கண்டுபிடிச்சு பேரு வாங்கனும்னு அவசியமே இல்லை நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

// Anonymous said...
http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F//

thanks for the link boss.. will see

கார்த்திகைப் பாண்டியன் said...

//மகா said..
good post anna//

நன்றி சகோதரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

////சொல்லரசன் said..
இரண்டு வரி பின்னுட்டத்திற்கு தேவையே இல்லாமல் இருபது வ‌ரியை காப்பிஅடிப்பதை ஒப்புகொள்ளும் நீங்கள் அன்னிய கதையை அவர்காப்பி அடித்து
அந்த‌மொழிதெரியாத மக்களுக்கு சொல்வதை ஏன் ஏற்றுகொள்ள‌மறுக்கிறீர்கள்.//

அது பின்னூட்டத்தில் காப்பி அடிப்பது கிடையாது நண்பா.. பிடித்த வரிகளை கோடிட்டு காட்டுவது.. அவ்வளவுதான்.. ஏன் இந்த தேவை இலாத கோபம்? கூல் பாஸ்..

ஹேமா said...

பாண்டியன் இன்னும் "பூ" நான் பார்க்கவில்லை.நல்ல படம் என்கிற விமர்சனங்கள் பார்த்தேன்.உங்கள் பதிவின் விபரம் நல்லா இருக்கு.

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி தோழி.. பூ படம் பாருங்கள்.. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

Anonymous said...

நண்பா வர வர பதிவு பட்டைய கிளப்புது. அருமை. யூத் விகடனில் உங்கள் பதிவு வந்ததற்கு இந்த நண்பனின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி தலைவரே.. எல்லாம் நீங்க தர ஆதரவும் ஊக்கமும்தான்..

"உழவன்" "Uzhavan" said...

எத்தனை தமிழ் சினிமா ரசிகர்களால் The Road Home திரைப்படம் பார்க்க முடிந்தது? எல்லா தமிழர்களும் பார்க்கட்டுமே என்கிற நல்ல எண்ணத்தினால்தான் அப்படத்தை பூ வாக நமக்குத் தந்திருக்கிறார். சந்தோசப்படுங்கப் பூ :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்க சொல்றதை நான் ஒத்துக்கொள்கிறேன் நண்பரே.. பூ தமிழின் நல்ல படம்..

ஆதவா said...

உங்கள் விமர்சனம் படித்தேன் கார்த்திகைப் பாண்டியன். விமர்சனம் நன்றாக இருக்கிறது. படத்திற்கு நன்றி கொடுத்திருப்பதாக நண்பர்கள் கூறுவதால் சசி செய்திருப்பது தவறல்ல என்று படுகிறது!!! சிலசமயம் நாம் கூட ஒரு உந்துதலில் படைப்பை எழுதுவதுண்டு!!! ஆனால் அந்த உந்துதலுக்குக் காரணமானவரை நாமே அச்சமயம் மறந்துவிடுவதுமுண்டு!!

ஆதவா said...

அந்த சிடிக்களை எனக்கும் அனுப்பவும்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

welcome back aadhavaa.. will send the cd's to u..

RJ Dyena said...

a vergud review

congrats....

Priyamudan
Dyena

கார்த்திகைப் பாண்டியன் said...

thanks a lot dyena