July 28, 2010

ஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை(1)..!!!

அவ காத்துல மிதந்து வர்றா. என் கிட்டக்க வந்து என் கைய எடுத்து அவ இடுப்புல வச்சுக்கிறா. அப்படியே பேக்ரவுண்டுல பாட்டு.. ஸ்டார்ட் ம்யூசிக்.

"அன்பே அன்பே கொல்லாதே.."

நச்சு.. நச்சு..

"அடடா.. இது என்ன அதிசயம்.. காதல்ல முத்தம் கொடுத்தா இச்சு இச்சுன்னு தான கேக்கும்? இங்க என்ன நச்சு நச்சு? அத்தோட வலிக்குது? சரி விட்ட இடத்துல இருந்து தொடருவோம்.. அன்பே அன்பே கொல்.."

மறுபடியும் அந்த நச்சு நச்சு..

ச்சே.. கனவுல கூட நிம்மதியா காதலிக்க விட மாட்டாய்ங்களே.. என்ன கொடுமை சார் இது? அரைக்கண்ண மெதுவா தொறந்து பார்த்தா.. எதிர்த்தாப்பிடி பத்ரகாளி கணக்கா எங்கம்மா. ஓ.. என்னை மிதிச்சது நீதானா?

"ஏம்மா காலங்கார்த்தால இப்புடி உயிரை வாங்குற?"

"ஏண்டா நாயே.. எட்டு மணி உனக்கு காலங்கார்த்தலையா? எந்திரிடா.. ஸ்கூலுக்குப் போக வேணாம்? வெளில உன்னைப் பார்க்க யாரோ ரெண்டு தடிப்பசங்க வந்திருக்காய்ங்க.. என்னன்னு போய் பாரு"

ஆகா? யாரப்பா அது? இந்த உலகப் புகழ் பெற்ற தலைவரை காலைல தேடிக்கிட்டு வந்திருக்கிறது? கைலி பனியனோட எந்திரிச்சி வெளில வந்தேன். அங்க ரெண்டு பேர் நின்னுக்கிட்டு இருந்தானுங்க. எங்கம்மா சொன்னதுல தப்பே இல்ல.

ஒருத்தன் ஒடிசலா வளர்த்தியா இருக்கான். மத்தவன் கொஞ்சம் குண்டு. ஆளும் குட்டை. அவங்களுக்கு என் வயசுதான் இருக்கும். ராஜ்கிரண் படமெல்லாம் பார்த்திருக்கீங்க தான.. அதுல ஓடி வந்து அவர்கிட்ட அடி வாங்கி ரெண்டா மடிஞ்சு விழுவானுகளே.. அதே மாதிரி இருக்கானுங்க. என்ன அவங்க எல்லாம் கைலியும் அரைக்கை சட்டையும் போட்டிக்கிட்டு திரிவானுங்க. இதுக பேன்ட் போட்டு பனியன் போட்டிருக்குதுக. அவ்வளவுதான் வித்தியாசம்.

(கதை நடப்பது 1998 ல - அதனால ராஜ்கிரண் படத்த எடுத்துக்காட்டா சொல்ல வேண்டியிருக்கு.. அப்புறம் கதைல லாஜிக், நேட்டிவிட்டி எல்லாம் இல்லைன்னு சொல்லக் கூடாது பாருங்க..)

"யார் நீங்க.. உங்கள எனக்கு தெரியலையே.."

"குமார் அண்ணே அனுப்பிச்சாரு. நாங்க சிவாவப் பார்க்க வந்தோம்.. உங்களைக் கேட்டா தெரியும்னு சொன்னாங்க..."

"ஹலோ ஹலோ.. யார் சிவா.. யாரு குமார்.. எனக்குத் தெரியாதே?"

"நீங்க மூர்த்திதான.."

"ஆமா"

"சுந்தரம் ஸ்கூல்ல பத்தாப்பு?"

"டபுள் ஆமா.."

"அப்பா நாங்க சரியாத்தான் வந்திருக்கோம்.. கொஞ்சம் சட்டைய போட்டுக்கிட்டு வாங்க தம்பி.. நடந்துக்கிட்டே பேசுவோம்..."

இவங்க பேசுற தோரணையே சரியில்லையே.. யோசிச்சுக்கிட்டே சட்டைய போட்டுக்கிட்டு கிளம்புறேன். தெரு முக்குக்கு வந்தாச்சு. அது வரைக்கும் அமைதியா வந்துக்கிட்டு இருந்தவங்கள்ள குண்டா இருந்தவன் திடீர்னு என் பக்கம்மா திரும்புறான்.

"ஏன்டா வெண்ண.. வந்தோமா படிச்சோமான்னு போகாம உனக்கு எதுக்குடா இந்த வெட்டி வேலை எல்லாம்?"

அடக் கருமம் படிச்சவனே.. என்ன பிரச்சினைனே சொல்லாம இப்படி திடீர்னு திட்டுறியே.. நீ வெண்ணையா நானா? நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு?

"என்ன சொல்றீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல"

"அட என்னண்ணே நீங்க.. இவன்கிட்ட போய் பேசிக்கிட்டு.. ரெண்டு நொக்கு நொக்கு நோக்கிட்டு போய்க்கிட்டே இருப்போமா? அத விட்டுட்டு?" வளந்தவன் எம்மேல பாயப் பார்க்க மத்தவன் அவனைத் தடுத்துட்டான்.

ஆகா.. ஏதோ பெரிசா மாட்டி இருக்கோம் போல இருக்கே.. இவ்ளோ டெரரா இருக்கான்.. அப்படி என்ன தப்பு பண்ணினோம்? எனக்கு அடிவயத்துல அப்படி புளிய கரைக்க ஆரம்பிக்குது.

"அண்ணே.. நான் என்ன தப்பு பண்ணினே... சொல்லிட்டு அடிங்க.. ஆமா.."

"டேய் தம்பி.. அத எடுர்றா.." குண்டன் சொல்ல ஒடிசல் பார்ட்டி சட்டைக்குள கைய விடுறான்.

ஆகா டூல்ஸ் கீல்ஸ் கொண்டாந்து இருக்காய்ங்களோ? மூர்த்தி.. கடைசில உன் விதி இப்படியா முடியணும்? அட சனியன் போட்ட பனியனுகளா.. இல்ல இல்ல.. பனியன் போட்ட சனியனுகளா.. அய்யய்யோ.. பயத்துல வாய் உளருதே.. என்னன்னே சொல்லாம இப்படி நம்மள கொடும பண்ரானுவளே?

ரொம்ப பில்டப்போட அந்த ஒட்டரக்குச்சி சட்டைக்குள்ள இருந்து கைய எடுத்தா.. அது ஒரு கிரீட்டிங் கார்டு. அட.. இது நாம ராகினிக்கு அனுப்பினது ஆச்சே? இது எப்படி இந்த கிறுக்கன் கிட்ட? எனக்குஅதிர்ச்சி.

அப்படியே ப்ரீஸ் (freeze ) பண்றோம். ஏன்னா..ஒரு ட்விஸ்ட் இருந்தாத்தான இடைவேளை விட முடியும். சோ.. தி கேம் ஸ்டார்ட்ஸ் நவ்... (நன்றி-தில்லாலங்கடி)

15 comments:

டம்பி மேவீ said...

நேத்து நான் போன் பண்ணும் போது அய்யோ அம்மான்னு கத்திகிட்டு இருந்தீங்களே ??? இது தான் விஷயமா ...

அத்துப்படி தல நேத்து வாங்கின அடியை கூட எஸ்ரா மாதிரியே 1998 ல வாங்கின மாதிரி எழுதிருக்கீங்க .....

புனைவு தலைவன் அவரு ..நீங்க குட்டி தலைவன்

டம்பி மேவீ said...

அப்படியே வடிவேலு டயலாக் ஸ்டைல் ல எழுதிருப்பது நன்றாக இருக்கிறது ... யூ கண்டினியு (இது அவனோட கண்டினியு ..இப்ப நீ கண்டினியு)

வி.பாலகுமார் said...

ம்ம்ம், தொடர் வேறயா ! கலக்குங்க !

வானம்பாடிகள் said...

:)) நடத்துங்க ராசா

ஆதவா said...

நல்ல ஆரம்பம்.... கதை சொல்லும் விதமும் அருகிலிருந்து நண்பனொருவன் சொல்லுவதைப் போல பிசிறில்லாமல் இருக்கிறது... உங்கள் அனுபவக் கதையோ?

நேசமித்ரன் said...

போலாம் ரைட் :)

குமரை நிலாவன் said...

கதை கலக்கல் ம்ம்... நடத்துங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

// டம்பி மேவீ said...

நேத்து நான் போன் பண்ணும் போது அய்யோ அம்மான்னு கத்திகிட்டு இருந்தீங்களே ??? இது தான் விஷயமா ...//

இப்படி கோர்த்தது விட்டே பொழப்பு நடத்துனா எப்படி தம்பி?

//அத்துப்படி தல நேத்து வாங்கின அடியை கூட எஸ்ரா மாதிரியே 1998 ல வாங்கின மாதிரி எழுதிருக்கீங்க//

ஹி ஹி ஹி.. அண்ணன் காட்டிய வழி

//வி.பாலகுமார் said...
ம்ம்ம், தொடர் வேறயா ! கலக்குங்க//

நன்றி பாலா

//வானம்பாடிகள் said...
:)) நடத்துங்க ராசா//

உங்களப் பார்த்து கத்துக்கிட்டதுதான் பாலா சார்..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
நல்ல ஆரம்பம்.... கதை சொல்லும் விதமும் அருகிலிருந்து நண்பனொருவன் சொல்லுவதைப் போல பிசிறில்லாமல் இருக்கிறது... உங்கள் அனுபவக் கதையோ?//

நன்றி நண்பா.. கொஞ்சம் அனுபவம், நிறைய புனைவு..

// நேசமித்ரன் said...
போலாம் ரைட் :)//

நன்றி கவிஞரே..

//குமரை நிலாவன் said...
கதை கலக்கல் ம்ம்... நடத்துங்க//

வாங்க நண்பா.. நன்றி..

kannamma said...

eppo climax?(ethukkum 100-kku ippove phone pannirunka usefulla irukkum)

ஆ.ஞானசேகரன் said...

ஏதோ அனுபவம் போலதான் இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

//kannamma said...
eppo climax?(ethukkum 100-kku ippove phone pannirunka usefulla irukkum)//

அடுத்த பாகம் வெள்ளிக்கிழமை ரிலீஸ்ங்க..

//ஆ.ஞானசேகரன் said...
ஏதோ அனுபவம் போலதான் இருக்கு//

ஐயா.. நம்புங்க.. இது புனைவுங்கோ..:-)))

மதுரை சரவணன் said...

புனைவ அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.... அடுத்து நிஜமா தொடருங்க,,, வாழ்த்துக்கள்

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

கார்த்திகைப் பாண்டியன் said...

//மதுரை சரவணன் said...
புனைவ அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.... அடுத்து நிஜமா தொடருங்க,,, வாழ்த்துக்கள்//

:-))))))))))))

@ sweatha

Thanks for the info buddy..;-))