கிட்டத்தட்ட ரெண்டரை வருஷமா பதிவுகள் எழுதிக்கிட்டு இருக்கேன். வெறுமனே பின்னூட்டம் போடுறதுக்காக ஆரம்பிச்ச பதிவுதான் இது. அதுக்கப்புறம் வேலையத்துப் போய் என்னத்தையாவது கிறுக்கி வைக்க நாலஞ்சு பயபுள்ளைங்க மாப்ள சூப்பருன்னு ஏத்தி விட்டதுல தொடர்ச்சியா எழுத ஆரம்பிச்சேன். இதுல எழுதுறதால எனக்குக் கிடைச்சது என்னன்னா முகம் தெரியா மக்களோட அன்பும் சில அருமையான நட்புகளும்தான். ரொம்ப நாளைக்கு முன்னாடி "நான் ஏன் எழுதுகிறேன்"னு இதைத்தான் சொல்லி இருக்கேன்.
ஒரு சிலர் பதிவை தங்களோட டைரிக்குறிப்புகளா வச்சிருக்காங்க. எழுதிப் பழக ப்ளாக் ஒரு அருமையான இடம் நம்மை அடுத்த தளத்துக்கு நகர்த்திட்டுப் போக இது உதவும்னு பத்திரிக்கைகள்ல எழுத ஆசைப்படுற மக்கள் சொல்றாங்க. எனக்கு இது மொக்கை போட அருமையான இடம் நம்மள மாதிரியான ஜாலியான மக்களை சந்திக்க இது உதவுதுன்னு சொல்றது சில பேரு. ஆக பதிவு எழுதுறதுக்கு எல்லாருக்கும் ஒரு காரணம் இருக்கு. அதே மாதிரி மக்களைத் தொடர்ச்சியா எழுத வைக்கிறதுலயும் அவங்களோட ஆர்வத்த தக்க வைக்கிறதுலயும் பின்னூட்டங்கள் ரொம்ப முக்கியமானவை.
எதை எழுதினாலும் அதுக்கு மக்கள் என்ன சொல்றாங்கன்னு உடனே தெரிஞ்சிக்கிறது பின்னூட்டங்கள் மூலமாத்தான். பதிவை எழுதிப்புட்டு எத்தனை பின்னூட்டம் வந்திருக்குன்னு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி ரெப்ரெஷ் பண்ணிப் பாக்குற வியாதி எனக்கும் இருந்திருக்கு. எல்லாம் எதுக்காக? ஒரு சின்ன அங்கீகாரம்.. நாம நல்லாத்தாண்டா எழுதி இருக்கோம்னு நண்பர்கள் பாராட்டும்போது ஒரு சந்தோசம். அதுக்குத்தானே ஆசைப்படுறோம். அதே மாதிரி நல்லாயில்லைன்னு நண்பர்கள் சொன்னாலும் நம்மள நாமளே திருத்திக்க ஒரு வாய்ப்பை பின்னூட்டங்கள் தருது.
சொல்லப்போனா பின்னூட்டம் அப்படிங்கிற வார்த்தையே தப்புத்தான். ஆங்கிலத்துல "comments" அப்படிங்கிறத மொழிபெயர்த்தா "கருத்துரைகள்"னு வேணும்னா சொல்லலாம். அதுதான் சரியா இருக்கும். பதிவுல இருக்குற விஷயங்கள் பத்தி வாசிக்கிறவங்களோட கருத்து என்ன? இது சரியா தப்பா.. என்ன மாதிரியான மாற்றுக்கருத்து இருக்கு? இதை எல்லாம் தெரிஞ்சுக்குறதுக்கான இடமாத்தான் பின்னூட்டங்கள் இருக்கணும். ஆனா இன்னைக்கு அப்படி இருக்கா?
நண்பர் ஒருத்தர் எழுதின பதிவு அது. ஒரு தொலைகாட்சி நிறுவனத்துல வேலை பார்த்த பெண்மணி ஒருத்தவங்க மர்மமான முறையில இறந்து போயிட்டதப் பத்தின பதிவு. அதுல இருந்த மொத பின்னோட்டம் என்ன தெரியுமா? எனக்குத்தான் சுடுகஞ்சி. ஏன்யா உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? எழவு வீட்டுல போய் ஆதித்யா சேனல் போடுங்கன்னு சொல்ற மாதிரியான அபத்தம் இல்லையா அது? பதிவு என்ன எது பத்தின்னு கொஞ்சம் கூட வெவரம் தெரியாம எதுக்குங்க பின்னூட்டம் போடணும்? உங்க நண்பர் அதப் பார்த்துத்தான் நீங்க வந்து இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கணும்னா அப்படி ஒரு அவசியமே இல்லைன்னுதான் சொல்லுவேன்.
இன்னொரு கொடுமை. ஒரு பதிவர் தான் ஒரு இன்டர்வியூக்குப் போயிட்டு வந்த கதையை எழுதி இருக்காங்க. ஏற்கனவே ஆளைத் தேர்ந்து எடுத்துட்டு வெறுமனே கண்துடைப்புக்கு நடத்துறாங்கன்னு நொந்து போய் எழுதி இருக்க இடத்துல நம்மாளுங்க போய் போடுற பின்னூட்டம் "மொத வடை". இவங்கள எல்லாம் என்ன பண்றது? இதோட நிப்பாட்டுறாங்களா.. வாய்ல வர்றது எல்லாம் பின்னூட்டம். கோடாலி சுத்தியல் தயிர் தக்காளின்னு.. கருமம்டா. இப்படி எல்லாம் பின்னூட்டம் போடுறதுக்கு போடாமயே இருக்கலாம்.
வாசிச்சு நல்லா இருக்கு இல்லைன்னு சொல்றதுக்குத்தாங்க பின்னூட்டம். இந்த மாதிரி ஈத்தரையா மீ தி ஃபர்ஸ்ட், சுத்தியல், வடைன்னு போடுறதுக்கு இல்லைங்க. விளையாட்டு பண்ணுங்க.. ஆனா பதிவு எதப் பத்தின்னு தெரிஞ்சுக்கிட்டாவது பண்ணுங்க. போற போக்க பார்த்தா அருமை, நல்லாயிருக்கு, :-)))) மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டங்களே பரவாயில்லைன்னு சொல்ற மாதிரி வந்துரும்னுதான் நினைக்கிறேன்.
பதிவுகள் இன்னைக்கு ரொம்பவே நல்லா வளந்துக்கிட்டு இருக்கு. மத்த மீடியால இருந்தெல்லாம் நம்மள கவனிக்கிறாங்க. இங்க இருந்து பத்திரிக்கைகளுக்கு எழுதப் போற அளவுக்கு முக்கியமான இடத்துல இருக்கோம். நமக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. அதனாலத்தான் சொல்லணும்னு தோணுச்சு. சொல்லிட்டேன். இனிமே உங்க பாடு. அம்புட்டுத்தான்.
ஒரு சிலர் பதிவை தங்களோட டைரிக்குறிப்புகளா வச்சிருக்காங்க. எழுதிப் பழக ப்ளாக் ஒரு அருமையான இடம் நம்மை அடுத்த தளத்துக்கு நகர்த்திட்டுப் போக இது உதவும்னு பத்திரிக்கைகள்ல எழுத ஆசைப்படுற மக்கள் சொல்றாங்க. எனக்கு இது மொக்கை போட அருமையான இடம் நம்மள மாதிரியான ஜாலியான மக்களை சந்திக்க இது உதவுதுன்னு சொல்றது சில பேரு. ஆக பதிவு எழுதுறதுக்கு எல்லாருக்கும் ஒரு காரணம் இருக்கு. அதே மாதிரி மக்களைத் தொடர்ச்சியா எழுத வைக்கிறதுலயும் அவங்களோட ஆர்வத்த தக்க வைக்கிறதுலயும் பின்னூட்டங்கள் ரொம்ப முக்கியமானவை.
எதை எழுதினாலும் அதுக்கு மக்கள் என்ன சொல்றாங்கன்னு உடனே தெரிஞ்சிக்கிறது பின்னூட்டங்கள் மூலமாத்தான். பதிவை எழுதிப்புட்டு எத்தனை பின்னூட்டம் வந்திருக்குன்னு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி ரெப்ரெஷ் பண்ணிப் பாக்குற வியாதி எனக்கும் இருந்திருக்கு. எல்லாம் எதுக்காக? ஒரு சின்ன அங்கீகாரம்.. நாம நல்லாத்தாண்டா எழுதி இருக்கோம்னு நண்பர்கள் பாராட்டும்போது ஒரு சந்தோசம். அதுக்குத்தானே ஆசைப்படுறோம். அதே மாதிரி நல்லாயில்லைன்னு நண்பர்கள் சொன்னாலும் நம்மள நாமளே திருத்திக்க ஒரு வாய்ப்பை பின்னூட்டங்கள் தருது.
சொல்லப்போனா பின்னூட்டம் அப்படிங்கிற வார்த்தையே தப்புத்தான். ஆங்கிலத்துல "comments" அப்படிங்கிறத மொழிபெயர்த்தா "கருத்துரைகள்"னு வேணும்னா சொல்லலாம். அதுதான் சரியா இருக்கும். பதிவுல இருக்குற விஷயங்கள் பத்தி வாசிக்கிறவங்களோட கருத்து என்ன? இது சரியா தப்பா.. என்ன மாதிரியான மாற்றுக்கருத்து இருக்கு? இதை எல்லாம் தெரிஞ்சுக்குறதுக்கான இடமாத்தான் பின்னூட்டங்கள் இருக்கணும். ஆனா இன்னைக்கு அப்படி இருக்கா?
நண்பர் ஒருத்தர் எழுதின பதிவு அது. ஒரு தொலைகாட்சி நிறுவனத்துல வேலை பார்த்த பெண்மணி ஒருத்தவங்க மர்மமான முறையில இறந்து போயிட்டதப் பத்தின பதிவு. அதுல இருந்த மொத பின்னோட்டம் என்ன தெரியுமா? எனக்குத்தான் சுடுகஞ்சி. ஏன்யா உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? எழவு வீட்டுல போய் ஆதித்யா சேனல் போடுங்கன்னு சொல்ற மாதிரியான அபத்தம் இல்லையா அது? பதிவு என்ன எது பத்தின்னு கொஞ்சம் கூட வெவரம் தெரியாம எதுக்குங்க பின்னூட்டம் போடணும்? உங்க நண்பர் அதப் பார்த்துத்தான் நீங்க வந்து இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கணும்னா அப்படி ஒரு அவசியமே இல்லைன்னுதான் சொல்லுவேன்.
இன்னொரு கொடுமை. ஒரு பதிவர் தான் ஒரு இன்டர்வியூக்குப் போயிட்டு வந்த கதையை எழுதி இருக்காங்க. ஏற்கனவே ஆளைத் தேர்ந்து எடுத்துட்டு வெறுமனே கண்துடைப்புக்கு நடத்துறாங்கன்னு நொந்து போய் எழுதி இருக்க இடத்துல நம்மாளுங்க போய் போடுற பின்னூட்டம் "மொத வடை". இவங்கள எல்லாம் என்ன பண்றது? இதோட நிப்பாட்டுறாங்களா.. வாய்ல வர்றது எல்லாம் பின்னூட்டம். கோடாலி சுத்தியல் தயிர் தக்காளின்னு.. கருமம்டா. இப்படி எல்லாம் பின்னூட்டம் போடுறதுக்கு போடாமயே இருக்கலாம்.
வாசிச்சு நல்லா இருக்கு இல்லைன்னு சொல்றதுக்குத்தாங்க பின்னூட்டம். இந்த மாதிரி ஈத்தரையா மீ தி ஃபர்ஸ்ட், சுத்தியல், வடைன்னு போடுறதுக்கு இல்லைங்க. விளையாட்டு பண்ணுங்க.. ஆனா பதிவு எதப் பத்தின்னு தெரிஞ்சுக்கிட்டாவது பண்ணுங்க. போற போக்க பார்த்தா அருமை, நல்லாயிருக்கு, :-)))) மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டங்களே பரவாயில்லைன்னு சொல்ற மாதிரி வந்துரும்னுதான் நினைக்கிறேன்.
பதிவுகள் இன்னைக்கு ரொம்பவே நல்லா வளந்துக்கிட்டு இருக்கு. மத்த மீடியால இருந்தெல்லாம் நம்மள கவனிக்கிறாங்க. இங்க இருந்து பத்திரிக்கைகளுக்கு எழுதப் போற அளவுக்கு முக்கியமான இடத்துல இருக்கோம். நமக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. அதனாலத்தான் சொல்லணும்னு தோணுச்சு. சொல்லிட்டேன். இனிமே உங்க பாடு. அம்புட்டுத்தான்.
54 comments:
அங்கீகார ஆர்வத்தால் இடப்பாடும் பின்னூட்டங்கள் அவை.
பழகப் பழக அவர்களும் மாறிக் கொள்வர்
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை கா பா
very good analysis about comments..
எனக்குதான் நாலாவது வடை!
ஐந்தாவது வடையயும் எனக்கே!
அதே மர்ம மரணம் பதிவில் எனது பின்னூட்டம் உங்கள் கருத்தை போன்றதே..அதயும் வாசிக்கவும்!
மொக்கை பின்னூட்டங்களை பற்றிய விவாதம் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியே !
மிக தெளிவான உதாரணங்களுடன் சொல்லி இருக்கிறீர்கள் ..
மொக்கை கமெண்ட்ஸ் போடுபவர்கள் பலர் உண்மையில் நல்ல பதிவுகளை எழுதுபவர்களே ..
வேறொருவர் கவிதை ஒருவர் உண்மையான கவிஞர் பெயர் குறிப்பிடாமல் பதிவிட,..
அதனை பாராட்டி கமெண்ட்ஸ் .
நான் சுட்டி காட்டிய பின்பு உண்மையான கவிஞர் பெயர் சேர்க்கிறார் ![கரு ஒன்றே என்று சமாளித்தார் ]
இந்த உரையாடல் க்கு பிறகும் பதிவரையே பாராட்டி கமெண்ட்ஸ்!
விகடன் இல் இருந்து copy-paste செய்த பதிவுகளுக்கு பதிவரை பாராட்டுவது ! என பல உதாரணங்கள் !
மாற்றத்தை வேண்டும் உங்கள் குரலுக்கு மிக்க நன்றி!
//ஐந்தாவது வடையயும் எனக்கே!//
இங்கேயும் வடை வியாபாரம் ஆரம்பிச்சுட்டாங்க... என்ன பண்ண முடியும் உங்களால்?
பதிவுலகமும் நாதாரி பின்னூட்டங்களும்//
தலைப்பு சூப்பர் :-)
மொக்கை பின்னூட்டங்களை பற்றிய கண்டன எண்ணங்கள் வெளிவர துவங்கியிருப்பதே புதிய துவக்கம் தான்..
சிந்திக்கும் விதமாவே சொல்லியிருக்கீங்க நண்பா..
இந்த பதிவின் இறுதி பாரா ஒட்டுமொத்த பதிவுலகமும் கவனிக்க வேண்டிய விஷயத்தை எடுத்துக்காட்டுகிறது.
நல்ல பதிவு.. ஆனா டேக் இட் ஈஸி
இந்த ராஜூ யாருன்னு தெரியாது; தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.
ஆனால் ஒன்று சொல்லணும் அவரைப் பற்றி: இந்த மாதிரி ஆளுகளுக்கு சூடு, சுரணை என்று எதுவும் இருக்காதா?
என்னமோ பழமொழி சொல்வாங்களே: நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு ...
சம்பந்தப்பட்ட பதிவர்கள் இந்த மாதிரியான சீரழிவு விஷயங்களை தொடர்ந்து வருவார்கள். ஆனால், தங்கள் பதிவுகளில் சமூக சிந்தனை, புரட்சி போன்ற விஷயங்களைக்கூறி தங்களுக்குள்ளேயே திருட்டு ஓட்டுப் போட்டுக்கொள்ளும் ஐந்தறிவு ஜீவிகள்.
திருடிய பதிவிற்கு விழும் ஓட்டுகளில் தங்களை பிரபல பதிவர்கள் என க்கூறிக்கொண்டு வாழும் சாக்கடை பிரியர்கள்.
திருட்டு,காப்பி பேஸ்ட் செய்யும் பதிவிற்கு தமிழ்மணம், இன்டெலியில் ஓட்டு போட்டு பிரபலப்படுத்த வேண்டாம் என தார்மீகமாக சொல்லலாமே! அதை செய்ய மாட்டார்கள்.காரணம், அவர்கள் போலித்தனம். தமிழ்வலையை அழிக்காமல் ஓயமாட்டார்கள்.
மேலும் இதையும் படித்து பாருங்கள்
http://vemarsanam2011.blogspot.com/2011/05/blog-post.html
அதிலேயும் ஒருத்தர் இருக்கார் பாருங்க.... வடை - ன்னு ஆரம்பிச்சு ஒரு 15 பின்னோட்டங்கள் ஒரு வார்த்தையிலேயே போடுவாரு... ஆனா என்ன எழுதியிருக்குன்னு படிக்க மாட்டாரு.... என்னத்த சொல்ல
\\தருமி said...
நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு ...\\
நல்ல மாடுன்னா எதுக்குங்கய்யா சூடு போடணும்..?
:-)
//பதிவை எழுதிப்புட்டு எத்தனை பின்னூட்டம்வந்திருக்குன்னு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி ரெப்ரெஷ் பண்ணிப் பாக்குற வியாதிஎனக்கும் இருந்திருக்கு. // இப்போது எனக்கு தொற்றிகொண்டுல புது வியாதி.. கன்னி பதிவர்னாலே இப்படி தா போல
தற்போது உள்ள சூழ்நிலையில் அவசியம் அனைவருக்கும் தேவையான பதிவு இது. இதுல என்ன காமெடின்னா முதல் வடைன்னு போட பெரிய போட்டியே நடந்து கிட்டு இருக்கு. நேற்று ஒரு பதிவில் ஒருவரே 40 கமென்ட் வரை தொடர்ச்சியாக இது போல போட்டுக்கொண்டே உள்ளார். எதற்க்காக இது போல போடுகிறோம், இதனால் என்ன பயன் என்று யாரும் யோசிப்பதில்லை.
\\இங்க இருந்து பத்திரிக்கைகளுக்கு எழுதப் போற அளவுக்கு முக்கியமான இடத்துல இருக்கோம்\\
இது உங்க விஷயத்திலே உண்மையாகப் போகுது... (காத்திருங்கள்)
ராம்ஜி_யாஹூ said...
அங்கீகார ஆர்வத்தால் இடப்பாடும் பின்னூட்டங்கள் அவை.
பழகப் பழக அவர்களும் மாறிக் கொள்வர்
நான் இதை ஆமோதிக்கிறேன்
நல்ல பதிவு.
எழுத ஆரம்பிக்கும்போது நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம்.
சூப்பர் நண்பா......நான் ரொம்ப நாள் மனசுல நினைச்சிக் கிட்டிருந்ததை அப்படியே எழுதிட்டீங்க!.......இதுக்கும் வட போச்சேன்னு பின்னூட்டம் வராம இருந்தா சரி!.....
இப்பதிவு பதிவுலகத்திற்க்கு அவசியமானது.
எப்பதிவுக்கு எப்படி கருத்துக்களாக இடவேண்டும் என அறிந்துகொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.
எழுதுபவர்களின் எழுத்துக்களை ஊக்கப்படுத்தவும். குறை நிறைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும் நமது கருத்துரைகள் அமையவேண்டும்..
உண்மைதான் கா.பா. தற்போதெல்லாம் தமிழ் மணத்த திறப்பதற்கே எரிச்சலாக இருக்கிறது. நிறைய பதிவுகள் சுய விளம்பரமாகவும் இருக்கிறது. இந்த வடை (சுடு சோறு இன்ன பிற) பின்னூட்டங்கள் கேவலமாக இருக்கிறது.
புது டெக்னிக்காக பதிவை பற்றி எதுவுமே எழுதாமல் பின்னூட்டத்தில் தன்னுடைய பதிவின் லிங்க்கை மட்டும் கொடுப்பது. பதிவைப் பற்றி ஏதாவது எழுதி விட்டு இதைச் செய்தால் கூட பரவாயில்லை.
தருமி சார்,
இந்த மாதிரி ஆட்களிடம் "ஆய் போகும் போது சாப்பிட வேண்டாம்" என்று சொன்னால், "நீ என்ன சொல்றது நான் அதை தொட்டுக்கிட்டுக் கூட சாப்பிடுவேன்" என்று சொல்வார்கள்.
அப்படியா? ஓகே...ஓகே... உங்க ஆதங்கம் புரிகிறது நண்பா....
இதெல்லாம் ஆரம்பத்துல இருக்கிற ஆர்வக்கோளாறுதாங்க. அப்புறம் சலிச்சு/புளிச்சுப் போயிரும், மறந்துருவாங்க, அவுங்களே அப்புறமா சிரிச்சுக்குவாங்க (நாங்க சிரிச்சுகிட்டோம்ல, இப்ப என்ன அப்படியா பண்றோம்?)
{"மேவி said...
:)
April 5, 2011 8:00 AM"
"கார்த்திகைப் பாண்டியன் said...
மேவி
இப்படி சிரிப்பான் போடுறதுக்கே மூக்குல குத்தப் போறேன் பாரு..
April 5, 2011 4:27 PM"}
{" :-)))) மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டங்களே பரவாயில்லைன்னு சொல்ற மாதிரி வந்துரும்னுதான் நினைக்கிறேன்
posted by கார்த்திகைப் பாண்டியன் at 10:21 AM on May 3, 2011"}
ஒரே மாதத்தில் எப்படி இப்படி ஒரு மாற்றம் ???
வலைப்பதிவு என்பது சிலபேருக்கு வருங்கால சமுதாயத்திற்கான வழிகாட்டி..
பலருக்கு பொழுதுபோக்கும் இடம்.
இதுதான் நாதாரி பின்னூட்டங்களின் பின்னணி !
அடிப்படைக்குணம் மாறவேண்டும் பதிவ்ர்களுக்கு.. பதிவர்களேனும் தனித்து தெரியவேண்டும் முன்னேற்றப்பாதையில்..இது என் அவா..
நறுக்கென்று சொல்லி இருக்கறீர்கள் கார்த்தி..
//ராம்ஜி_யாஹூ said...
அங்கீகார ஆர்வத்தால் இடப்பாடும் பின்னூட்டங்கள் அவை.
பழகப் பழக அவர்களும் மாறிக் கொள்வர்//
இல்லை ராம்ஜி
வடை கிடைக்கலயே!....
If a blog is intensely a personal blog like the one maintained by Nanjil Mano, it is written only for him and his close friends. They sort of run a club where they can talk anything intimate, decent or indecent.
Blogosphere should be free for all where one breaths free air and comment w/o fear of reprisals. If you find such blogs with such flippant comments, why go there at all? Has any one forced you to go through them?
If you do complain, then I am afraid, you have not understood the rules of blogosphere. The rule is: There is no rule!
If you insist on reading only such comments which should be food for thought to read and then ruminate, or get benefited, as someone has put it, I am further afraid, the irrepressible habit of a teacher comes out of you.
What is the stereotype of a teacher ? A kill joy or a spoilsport or an elderly female warden in a hostel for young girls on her nocturnal beat with a cane in hand looking out for delinquent girls!
Such teachers or wardens are caricatures, Karthigai Pandian !!
Still, to seek worthy comments, you can read the blog posts of, say, Iqbal selvan. For e.g his recent one on Islamic rule of smartening an errant Muslim wife by beating her mildly. In the said blog you can read comments, including mine - serious, very very serious. Isn’t that all you want?
Lets not kill the freedom of bloggers and their commenters ! As long as the comments are not obscene or vulgar, we have no business to complain.
‘There is nothing better than a judicious levity in life’ –
R.L,Stevenson
(The quotation is not exact)
Jo.Amalan
பிரபு...!! சகோ ராஜு சும்மா கலாய்ச்சிருக்கார் ன்னு தான் தோணுது கா.பா வை...:)) தருமி சார் ராஜுவை சும்மா கலாய்ச்சிருக்கார்னு தான் தோணுது...:))) கூல்...:))
கா.பா இது எல்லாம் ஊசி போன வடை என்று அவர்கள் கண்டிப்பாக நினைப்பார்கள்.. என்னத்த சொல்ல இவங்க திருந்துவாங்கன்னு நினைகிறீங்க ??
//If a blog is intensely a personal blog like the one maintained by Nanjil Mano, it is written only for him and his close friends. They sort of run a club where they can talk anything intimate, decent or indecent.//
அது பிரச்சனை அல்ல. அவர்கள் நண்பர்களுக்காக வைத்து இருந்தால் அவர்களுக்குள் வைத்து கொள்ள வேண்டியதுதானே.
பலரும் கூடும் பொது இடத்தில் ஏன் காட்டுகிறார்கள். தமிழ்மணம், இன்ட்லியில் ஏன் பகிர்கிறார்கள்? கேவலமான அந்த விஷயங்கள் பலர் கண்ணில் படும் போது தானே விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
சிலர் காரி துப்பி விட்டு ஒதுங்கி விடுகிறார்கள். சிலர் இப்படி பதிவு போட்டு ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்கள்.
இங்கு யாரும் விதிகள் போடவில்லை. பொது இடத்தில் கொஞ்சம் நாகரீகமாக இருந்து கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறோம்.
உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் தினமும் காலை உங்கள் தெருவில் நிர்வாணமாக வாக்கிங் போவேன் என்று கிளம்பினால் அது அவர் சுதந்திரம் என்று நீங்கள் விட்டு விடுவீர்களா?
நல்லாத்தான் சொல்லுறீங்க பின்னுட்டம் போடும்போது கருத்துக்கள் புதிய தீர்வைத்தருகிறது!
நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவு..! மிக்க நன்றி சகோ..!
தாங்கள் அவசியம் என்னுடைய " பதிவுலகில் பிரபலமான டாப் 50 ஹிட்ஸ் " என்ற இந்த பதிவையும் படித்துப்பாருங்கள்..!
ரொம்பவும் நொந்து போய்த்தான் எழுதியுள்ளேன்..!
அவசியமான பதிவு. எப்பதிவுக்கு எப்படியான கருத்துக்கள் இடவேண்டும் என அறிந்துகொண்டு கருத்துக்களை பரிமாற வேண்டும்.
ஒரு சிறிய விளக்கம்.
மேலேயிருக்கும் என் பின்னூட்டங்கள்...மன்னிக்க,, Comments எல்லாம், சும்மா கலாய்த்தலுக்காக போட்டதுதான்.
மேலும், இந்த பதிவுடன் முற்றிலும் முரண்படுகின்றேன்.
:-)
:-)
(ரெண்டு ஸ்மைலி போட்டுருக்கேன். ஏதாவது பார்த்துப் போட்டுக் கொடுக்கவும்)
நண்பரே சிலர் வலைப்பதிவை தங்கள் எழுத்து நடையை மேம்படுத்தி கொள்ள , தங்கள் சிந்தனையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள என்று பயன்படுத்துவார்கள் ... சிலர் பொழுதுபோக்கிர்க்காக பயன்படுத்துகின்றனர் ... எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது அவரவர் இஷ்டம் , பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறவர்கள் அவ்வாறு பின்னூட்டம் இட்டு அவர்களுக்குள் ஜாலியாக கலாய்த்து கொள்கிறார்கள் அவ்வளவே .... பிடிக்காதவர்கள் அந்தமாதிரியான வலைபூக்கள் பக்கம் போகாமல் இருந்து விட வேண்டியதுதான் ...
உங்களின் தலைப்பில் இருக்கும் நாதாரி பின்னூட்டங்கள் என்பது உங்களுக்கு வந்த(உங்கள் வலைபூவில் இடபட்ட) அந்தமாதிரியான பின்னூட்டங்களைதான் சொல்லுகிறீர்கள் என்று நம்புகிறேன்....
ராஜா,
/////நண்பரே சிலர் வலைப்பதிவை தங்கள் எழுத்து நடையை மேம்படுத்தி கொள்ள , தங்கள் சிந்தனையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள என்று பயன்படுத்துவார்கள் ..////
உங்கள் தெருவில் உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் நிர்வாணமாக தினசரி ஓடினால் அது அவன் இஷ்டம் என்று சகித்து கொள்வீர்களா.
அப்படி எழுத்து திறமையை வளர்த்து கொள்கிறவர்கள் "என்னைய பாரு" என்று திரட்டிகளில் இணைப்பது தான் பிரச்சனை. அங்கே தானே கண்களில் சிக்குகிறது.
இது உங்கள் வீட்டு வாசில் தினமும் பிட்டு பட போஸ்டரை ஓட்டுவது போலத்தான்.
நல்ல உணவு பதார்த்தங்களுக்கு இடையில் மலம் போன்று அந்த பதிவுகள் அமர்ந்து கொள்கின்றன.
//அவ்வளவே .... பிடிக்காதவர்கள் அந்தமாதிரியான வலைபூக்கள் பக்கம் போகாமல் இருந்து விட வேண்டியதுதான் //
உங்களுக்கு சோறு போட்டு பல வகை பொரியல்களை வைத்து + ஒரு தட்டில் மலத்தை தொட்டுக்கொள்ள தினமும் வைத்தால் இதே பாலிசியை follow செய்வீர்களா.
\\உங்கள் தெருவில் உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் நிர்வாணமாக தினசரி ஓடினால் அது அவன் இஷ்டம் என்று சகித்து கொள்வீர்களா.\\
'என்னைப் படியுங்கள்' என்று அவர்கள் 'உங்களிடம்' தனியாக, வேண்டுகோள் எதுவும் வைக்கவில்லையே!
\\அப்படி எழுத்து திறமையை வளர்த்து கொள்கிறவர்கள் "என்னைய பாரு" என்று திரட்டிகளில் இணைப்பது தான் பிரச்சனை. அங்கே தானே கண்களில் சிக்குகிறது. \\
நல்ல கமெடிங்க இது!
எந்தத் திரட்டியும், 'இலக்கிய ரசம் மற்றும் புளிக்குழம்புகள் சொட்டும் பதிவு' களை மட்டும் நம்பி பிழைப்பு நடத்தவில்லை. சொல்லப் போனால், இவர்களின் காப்பி-பேஸ்ட் பதிவுகளுக்குக் கிடைக்கும் ஹிட்ஸ்களில்தான் திரட்டியின் பிழைப்பு நடந்து வருகிறது.
\\உங்களுக்கு சோறு போட்டு பல வகை பொரியல்களை வைத்து + ஒரு தட்டில் மலத்தை தொட்டுக்கொள்ள தினமும் வைத்தால் இதே பாலிசியை follow செய்வீர்களா.\\
'மலம் வைக்காதே' என்று சொல்வது வேண்டுமானால், உங்கள் கடமை (?)யாக இருக்கலாம்! வைப்பதும் வைக்காததும் அவர்களின் உரிமை என்பதையும் மறுப்பதற்கில்லை.
புரிய வைக்க முயற்சி செய்து இருக்கிறீர்கள்..
புரிந்துகொண்ட அதை பின்பற்ற முயற்சிப்பவர்கள் எத்தனை பேரோ தெரியாது..
என்றாலும் தொடருங்கள் புதிய முயற்சிகளை
வாழ்த்துக்கள்!
http://karadipommai.blogspot.com/
இங்கு யாரும் விதிகள் போடவில்லை. பொது இடத்தில் கொஞ்சம் நாகரீகமாக இருந்து கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறோம்.
உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் தினமும் காலை உங்கள் தெருவில் நிர்வாணமாக வாக்கிங் போவேன் என்று கிளம்பினால் அது அவர் சுதந்திரம் என்று நீங்கள் விட்டு விடுவீர்களா?
Predictable response !
Tamilmanam aggregator is not moral police. They allow almost all types of blogs and intervene only when a lot of complaints pour in against a particular blogger for e.g the blogger Tamilachchi of Paris and she was blocked
Otherwise, there is and should be no control for bloggers. Pothu idam is for them also: I mean, both serious and flippant blogs! Like Porn sites, such flippant sites which make merry of their intimate friendship openly can’t be objected to.
How comes you are able to see or not see the porn sites according to your likes and dislikes?
We have allowed them only on a slight condition that they should declare that the site contains adult content and those above 18 may enter. Haven’t we ?
You can’t therefore teach others how to write and maintain their blogs. You can directly attack and go to cyber crime cell only when such blogs directly indulge in personal attack on you w/o proofs.
You are confusing the real world with the internet world.
For behaviour in public places, laws have already been framed to round up anyone who causes nuisance in public in any form. But beware: There too, you will be in trouble because - Who is to define public obscenity ? You ?
Remember the case involving the famous Mr Vijaykumar IPS. He was then PC of Chennai city when a group of police constables rounded up a few couples sitting in the park at Anna Nagar Tower. The couples were dragged to Anna Nagar Police station and kept at lock-up for behaving obscenely in a public park rejecting the contention of the couples that they just were holding hands and talking. But the police wanted to teach lessons on morals. Among the couples, there was a young man with his fiancée. He went to High Court with an appeal for damages to his reputation. He said he came from US to get married. The betrothal ceremony over, the families had allowed the couple to go out and become familiar with each other. He took his fiancée to the said Park and when he was chatting up with her, holding hands , the police rudely pulled them apart and dragged them to Police Station. The show cause notice was issued to PC. He came and tendered unconditional apology in the court at once. The apology was accepted by the young man and the court; so no damages were awarded. (I write from memory; it happened a decade ago)
So, even if there are rules for public behaviour, you must be sure what constitutes indecent public behaviour.
In internet blogging, no such rules. There are indeed rules called Cyber Laws; yet, they are very liberal because authorities fear if they become moral police using such rules indiscriminately, liberal democratic world will criticise them. We will be called a sort of Taliban. Cyber crime laws are for only serious and motivated malignity against individuals or institutions. You can’t play with it with gay abandon.
Therefore, understand the blogosphere and allow people to write what they like howsoever silly and annoying it may be to you. If you don’t like what they write, put use your mouse to better use and move away from such blogs. If you want to stop the comments which annoy readers like Karthigai Pandian and many others here, you will stand the bad chance of being labelled “ Talibanistic.”
Be happy and let others too happy!
// அப்படி எழுத்து திறமையை வளர்த்து கொள்கிறவர்கள் "என்னைய பாரு" என்று திரட்டிகளில் இணைப்பது தான் பிரச்சனை. அங்கே தானே கண்களில் சிக்குகிறது.
கண்ணுல சிக்குனா எதுக்கு நீங்க கிளிக் பண்ணி அந்த வெப்சைட் போறீங்க?அதான் ஒவ்வொரு லிங்குக்கு கீழேயும் மேலேயும் யாரோட பதிவு இதுன்னு போட்டிருக்குள , அத பாத்திட்டு யார் யாரெல்லாம் உங்களுக்கு பிடிக்கலையோ (அவர்களின் நாதாரி பின்னூட்டங்களை சொல்கிறேன்) அந்த லிங்க கிளிக் பண்ணாம போக வேண்டிதான...
// நல்ல உணவு பதார்த்தங்களுக்கு இடையில் மலம் போன்று அந்த பதிவுகள் அமர்ந்து கொள்கின்றன.
மலம்னு தெரிஞ்சு எதுக்கு நீங்க அத சாப்டுறீங்க.. ஒதுக்கிட்டு அமைதியா போய்விடலாமே...
// உங்களுக்கு சோறு போட்டு பல வகை பொரியல்களை வைத்து + ஒரு தட்டில் மலத்தை தொட்டுக்கொள்ள தினமும் வைத்தால் இதே பாலிசியை follow செய்வீர்களா.
அந்த கடையில மெனுவுல என்ன என்ன இருக்குனு தெளிவா இருக்கும் போது நான் எதுக்கு மலத்த தெரிவு (கிளிக் ) செய்ய போறேன் ...
நண்பரே உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றாள் உங்கள் சொந்த வாழ்கையில் அதை நீங்கள் கடைபிடித்து கொள்ளலாம் .. ஆனால் அதையே எல்லாரும் செய்ய வேண்டும் என்று அலும்பு பண்ணுவது தவறு .. அவர்களுக்கு அது ஒரு ஜாலி .. அவர்கள் அனுபவிக்கிறார்கள் ... உங்கள் வலைபூவில் வந்து அப்படி செய்தால் நீங்கள் அவர்களை என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள் நானும் வந்து ஆதரவு தருகிறேன் ...அதர்க்காக அவர்கள் வலைபூவிலும் அவ்வாறு செய்ய கூடாது என்று சொல்வதில் நியாயம் இல்லை ...
சென்ற பின்னூட்டத்தில் அலும்பு என்ற வார்த்தைக்கு மன்னிக்கவும் ... வாதம் செய்கிறீர்கள் என்ற அர்த்ததில் சொல்ல வந்து , வார்த்தை உபயோகத்தில் நேர்ந்த தவறு அது
// உங்கள் தெருவில் உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் நிர்வாணமாக தினசரி ஓடினால் அது அவன் இஷ்டம் என்று சகித்து கொள்வீர்களா.
வடை குத்து கேசரி சுடுசோறு , என்ற பின்னூட்டங்களை, தெருவில் நிர்வாணமாக ஒடுபவன் போல பாவ செயலாக எடுத்து கொள்வது உங்கள் தவறு ..
அதை தெருவில் வெட்டியாக உக்கார்ந்து அரட்டை அடிப்பவர்களுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம் .. அதை போன்ற செயலே அது ... அவர்கள் அதை அவர்கள் வீட்டுக்குல்லோ அல்லது பொது இடங்களிலோ செய்து கொள்ளலாமே ... உங்கள் வீட்டில் வந்து அரட்டை அடித்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாள் மட்டுமே அவர்களை திட்டும் உரிமை உங்களுக்கு உண்டு...
ம்ம்.. கோயமுத்தூர் பக்கம் அடிக்கடி போனா இப்பிடித்தான் யோசிக்கத் தோணும்ன்னு சொல்லிகிட்டாங்க..சரியாத்தான் போச்சு.
ம்ம்.. நீங்க சொல்றது சரிதான்.. ஆனால் எழுதறவங்க சிலரே அந்த மாதிரி பின்னூட்டம் எதிர்பாக்கறாங்ககிறாப்போ நாம என்ன சொல்ல முடியும்
தற்சமயத்தில் இது ஒரு தேவையான பதிவு பாஸ்.
பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளிலோ (அருமை!! எக்ஸலண்ட்!! பின்னிட்டீங்க..) அல்லது படிக்காமலோ பின்னூட்டம் போடுவது அப்பதிவை, அப்படைப்பை அசிங்கப்படுத்துவதற்குச் சமமானது. அதற்கு பின்னூட்டமே பெறாமல் இருந்துவிடலாம்..
என்னைப் பொறுத்தவரையில் நான் பின்னூட்டம் அல்லது கருத்துரைகளையே எதிர்பார்ப்பதில்லை. படித்தால் போதும் எனும் நிலைக்கே வந்து பலநாட்கள் ஆகிவிட்டது. குறைகளைச் சுட்டிக் காட்டத்தான் பின்னூட்ட முறையை enable செய்து வைத்திருக்கிறேன். இல்லையெனில் அதுவுமில்லை!!
மாற்றத்தை வேண்டும் உங்கள் குரலுக்குப் பாராட்டுக்கள்.
எப்பொருள் யார் யார் பதிவில் படித்தாலும்
எப்பொருள் உணர்ந்து பதிலிடுதல் நன்று.
மொக்கை பின்னூட்ட வாதிகளுக்கு சாட்டை அடி கொடுக்க தாங்கள் எடுத்த ஆரம்ப முயற்சி....பாராட்டுதலுக்கு உரியது.....
Post a Comment