Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

March 17, 2011

என்னா ஒரு வில்லத்தனம்

மதுரையின் ரொம்பப் புகழ்பெற்ற தமுக்கம் மைதானத்தின் முன்பாக யாருக்குமே தெரியாமல் ஓரமாக இருந்த அந்த டீக்கடையின் வாசலில் அவர்கள் ஆறு பேரும் குழுமி இருந்தார்கள். அனைவருமே 22 வயத்தைத் தாண்டாத இளைஞர்கள். நாளைய உலகை ஆளத் துடித்துக் கொண்டிருப்பவர்கள். அதாவது.. இன்றைக்கு வெட்டி ஆபிசராக இருப்பவர்கள்.

கூட்டத்தில் நடுநாயகமாக இருப்பவன்தான் அவுங்களோட பாஸ். (ஏன்யா இது என்ன கொள்ளைக் கூட்டமா?) ஓகே ஓகே தலைவன்னு வச்சுக்குவோம். கார்த்தின்னு பேரு. அவன் ஏன் தலைவனா இருக்கான்னா.. மிச்ச பயபுள்ளைகளுக்கு எதுனாச்சும் வாங்கிக் கொடுக்குறதுக்கு காசு அவன்கிட்ட மட்டும்தான் உண்டு. அப்பன் சம்பாதிச்ச காசை கரைக்கிரதை விட புள்ளைகளுக்கு வேற ஏதும் முக்கியமான வேலை கிடையாதுன்னு ரொம்பத் தீவிரமா நம்புறவன்.

"இன்னும் எத்தனை நாளைக்குடா இப்படியே இருக்குறது? எல்லாப்பயலும் நம்மளப் பார்த்து வாயப் பொளக்கணும். அந்த மாதிரி கூடிய சீக்கிரம் ஏதாவது செய்யணும்டா மாப்ள.."சொல்லிய பாலு சிகரட்டை கீழே போட்டு நசுக்கினான்.

“ம்ம்.. ஆமாடா.. வீட்டுல இருக்குறய்வங்க நொச்சு தாங்க முடியல..” - உமர்.

இதே கருத்தை மீதியிருந்த மணி, கண்ணன், ஸ்டீபன் (பார்த்துக்கோங்கப்பா.. மத நல்லிணக்கம்) ஆகியோரும் சொல்ல என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தார்கள். சட்டென மண்டைக்கு மேலே பல்பு எரிய பாலுதான் அந்த ஐடியாவைச் சொன்னான்.

“நாம ஏண்டா ஒரு பாப் ஆல்பம் போடக் கூடாது?”

“நாம எப்புடிடா ஆல்பம் போடுறது? நமக்கு என்ன தெரியும்?” கண்ணன் குழம்பியவனாகக் கேட்டான்.

“அது ஒரு மேட்டரே இல்ல மச்சி. இன்னைக்கு ஃபேஷனே ஆல்பம் போடுறதுதான். இப்போ பாரு... நம்ம ஸ்டீபனுக்கு அருமையா கவிதை எழுத வரும். அவன் நமக்காகப் பாட்டு எழுதட்டும். என்னடா ஓகேவா?”

ஸ்டீபன் லைட்டாக வானில் மிதந்து கொண்டிருந்தான். பாக்யாவில் கொடுத்து இருந்த ஒரு போட்டோவைப் பார்த்து “ஏ பெண்ணே நீயே ஒரு கட்டை உன் கண்களோ என் மனதை எரிக்கும் கொள்ளிக்கட்டை”ன்னு எழுதின ஒரு கவிதைக்கு 75 ரூபா சன்மானம் வந்த நாள் முதலாவே தன்னை தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்தப்போற கவிஞன்னு நம்பிக்கிட்டு இருக்குறவன்.

“செஞ்சுடலாம் மாப்ள. இது ஒரு மேட்டரா..”

“அது.. அப்புறம் நம்ம உமர் அருமையா கிடார் வாசிப்பான். யூஸ் பண்ணிப்போம். மணி ஃப்ளுட்ட பார்த்துப்பான். நானும் கண்ணனும் பாடலாம். அப்புறம்.. நம்ம கார்த்திதான் ப்ரொடியூசர். சரியாப் போச்சா?”

ஆக இப்படியாகத்தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த பாப் ஆல்பம் ரெக்கார்டிங்கான விதை தூவப்பட்டது. மிகச்சரியாக ஒரு வாரத்துக்குப் பிறகு சினிப்பிரியா தியேட்டரின் முன்பாக இருந்த ரெக்கார்டிங் தியேட்டரின் வாசலில் நிலாவுக்கு ராக்கெட் ஏறப் போகும் ரேஞ்சுக்கு முனைப்போடு அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

"நில்லுங்கடா நல்ல காரியம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பூஜையைப் போட்டுருவோம்.."

வீட்டிலிருந்து தூக்கிக் கொண்டு வந்திருந்த ஓஞ்சு போன பூசணிக்காயைத் தொம்மென தரையில் போட்டு உடைத்தான் கார்த்தி. தாக்குங்கள் என்று கத்தாத குறையாக அனைவரும் திமுதிமுவென தியேட்டருக்குள் பாய்ந்தார்கள். அவர்களைப் பார்த்த உரிமையாளருக்கு பக்கென்று இருந்தது.

"என்ன தம்பி.. வாசல்ல பூஜை எல்லாம்? ஏதாவது கோயில் கும்பாபிஷேக கலெக்ஷனா?"

"ஊய்.. யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னீங்க. நாங்க தான் நாளைக்கு இசை உலகையே ஆளப்போற M.M.B குழு. புரியுதா?" (மதுரை மேட் பாய்சாமாம்.. கருமம்..)

"ரெக்கார்டிங் பண்ண வந்தவங்களா நீங்க.. கிழிஞ்சது.. சரி சரி.. வாங்க.."

அவருக்குப் பார்த்துவுடனேயே தெரிந்து கொண்டார் இது அல்லக்கை கூட்டம்னு. அதனாலென்ன காசு வந்தா சரி. நாய் வித்த காசு குரைக்கவா போகுது?

"போங்கப்பா.. போய் அந்த ரூம்புக்குள்ள எல்லாம் போய் அவங்கவங்க இடத்துல நில்லுங்க.."

ஒவ்வொருத்தரும் ஜம்மென்று காதில் ஹெட்போனையும் மாட்டிக்கொண்டு நின்றபிறகுதான் அடுத்த பிரச்சினை ஆரம்பமானது.

"ஏண்டா.. என்ன பாட்டுடா பாடுறது?"

நாசாமப் போச்சுன்னு தலைல கை வச்சு உக்கார்ந்துட்டார் ஓனர். "இனிமே தான் பாட்டே முடிவு பண்ணனுமா?"

"ஏண்டா ஸ்டீபா.. டக்குன்னு ஒரு பாட்ட சொல்லேண்டா.."

"ஏய்.. பாட்டுன்னா என்ன சும்மாவா? வான்னா ஒடனே வந்துருமா.. அது ஒரு பீல்டா.. அது எப்படின்னா.."

"டேய் மூடுறா.. சட்டுபட்டுன்னு ஏதாவது பாடுங்கடா.."

"தம்பி.. ஒரு மணி நேரத்துக்கு ரெண்டாயிரம் ரூபா வாடகை.. இருக்குல்ல.."

"ச்சே.. நடு நடுவுல இந்த ஆளு வேற.. அண்ணே கொஞ்சம் யோசிக்க விடுங்க அண்ணே.. கலைண்ணே.. அருவி மாதிரி பொங்கிட்டு வரும்போது தடுக்காதீங்க..”

குசுகுசுவென தங்களுக்குள் பேசி கடைசியாக அந்த முடிவுக்கு வந்தார்கள். "மடை திறந்து ஆடும் இளங்குயில்.. இந்தப் பாட்டே பாடிரலாம்டா.."

"இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா.. பாடித் தொலைங்க.." ஓனர் மனசுக்குள் கருவியபடியே இருந்தார். அவர்கள் பாட ஆரம்பித்து இருந்தார்கள்.

"மடை திறந்து தாவும் நதியலை நான்..
மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான்...
இசைக்கலைஞன் என் தனதன தனன
தனதன தனன தனன.."

"கருமம்.. இந்தப்பாட்டும் முழுசா தெரியாதா" என்று மனசுக்குள் ஓனர் திட்டிக் கொண்டிருந்த வேளையில் பாலு அந்த வினோதமான காரியத்தை செய்தான். வேகமாக மைக்குக்கு அருகில் வந்தவன் தன் கையைக்கொண்டு போய் தொடையிடுக்கில் வைத்துக்கொண்டு ஏதேதோ இங்கிலிஷில் பேத்த ஆரம்பித்தான். ஓனர் பதறிப்போனார்.

"ஏய் ஏய் தம்பி.. என்னய்யா பண்ற.."

"அண்ணே.. இது ராப்புண்ணே.."

"அதெல்லாம் சரிப்பா.. அதுக்கு எதுக்கு கையக் கொண்டு போய் குஞ்சாமணில வச்சுக்கிட்டு ஏதோ வயித்துக்கடுப்பு வந்தவன் மாதிரி அவதிப்படுற?”

“அய்யய்ய.. அப்படி இல்லண்ணே.. நான் எம் டிவில பார்த்திருக்கேன்.. எமினம்னு ஒருத்தரு.. அவரு இப்படித்தான் பாடுவார்.. ராப்புன்னா இப்படித்தான் பாடணும்ணே..”

“என்ன எழவோ செஞ்சு தொலைங்கடா..”

நல்லபடியாக ரெக்கார்டிங் முடிந்தது.

“ஆக மாப்ள.. ஒரு பாட்டு முடிச்சுட்டோம். அடுத்தது என்னைக்கு?”

“அது என்னைக்கு வேணும்னாலும் இருக்கலாம். மொதல்ல இன்னைக்கு பாடுனதுக்கு ரெண்டாயிரம் ரூபாய எடுங்கப்பா..” ஓனர் - சிவபூஜைக் கரடி. கார்த்தி தன் பைக்குள் கை விட்டு காசை எடுத்தான். 1500 இருந்தது.

“இம்புட்டுத்தாண்டா இருக்கு..”

எல்லாப்பயலும் கையில் கிடைத்த காசை போட்டு பார்த்தபோதும் ரெண்டாயிரத்துக்கு நூறு குறைந்தது.

“அஜ்ஜஸ் பண்ணுண்ணே.. அடுத்த ரெக்கார்டிங்குக்கு வெயிட்டா கவனிப்போம்..” மண்டை காய்ந்து போனவராக ஓனர் அதை வாங்கிக் கொண்டு உள்ளே போனார்.

“இப்போ வீட்டுக்கு எப்படிடா போறது.. கைல பத்து காசு கூட இல்லையே..”

“வேற எப்படி.. நடராஜா சர்வீஸ்தான்..”

புலம்பிக்கொண்டே கலைந்து போனவர்களில் உமரும் கண்ணனும் அண்ணா நகர் ஆர்ச்சுக்கு அருகே இந்தக் கதைசொல்லியை சந்தித்து தாங்கள் பாடல் பதிந்த கதையைச் சொல்கிறார்கள். அவனும் வெகு சுவாரசியமாகக் கேட்பதைப் போல நடிக்க வேண்டியதாகிறது.

“அடப்பாவிகளா.. கலை மேல இருக்குற ஆர்வத்துல இப்படியா பஸ்ஸுக்குக் கூட காசு இல்லாம நடந்து வருவீங்க? பரவாயில்லடா.. நல்லா வருவீங்க..”

“ஆமாம்ணே.. நீ அடுத்த பதிவுக்குக் கண்டிப்பா வரணும் சரியா?” சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினார்கள். (ஆகா.. என்னா ஒரு வில்லத்தனம்? ) நடந்தவர்களில் ஒருவன் திரும்பி வந்து மெதுவாக கதைசொல்லியிடம் கேட்டான்.

“அண்ணே.. காலைல இருந்து ஒண்ணுமே சாப்பிடல.. பசிக்குது.. ஒரு டீ சொல்றியா?”

January 28, 2011

எஸ்.எம்.எஸ் மொக்கைகள் (2)

1980 - டி பி (IDBI) பேங்க்ல அம்பானிக்கு லோன் தர முடியாதுன்னு சொன்னாங்க. இன்னைக்கு அதே பேங்கை நாம வாங்கலாமான்னு அம்பானி யோசிச்சுக்கிட்டு இருக்காரு. மனுஷன் நினைச்சா சாதிக்க முடியாதது எதுவுமே இல்லைன்னு இதுல இருந்து தெரியுது. அதே மாதிரி..

இப்போ.. 2011 - எனக்கு கனரா பேங்க்ல லோன் தர மாட்டேன்னு சொல்லிடாங்க. அதனால கண்டிப்பா 2025..

ரொம்ப யோசிக்காதீங்க. நான் மறுபடியும் லோன் தான் அப்ளை பண்ணப் போறேன். ஏன்னா.. கனரா பேங்க் கவர்மெண்டு பேங்க். விலைக்குக் கேட்டா கொன்டேபுடுவாங்க..

***************

டீச்சர்: உன்னோட பேர் என்னமா?

பெண்: ஐஸ்வர்யா

டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?

பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..

டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..

***************

இரண்டு குடிகாரர்கள் ரயில்வே தண்டவாளத்தின் மீது நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

"மச்சி என்னடா இவ்ளோ தூரம் நடந்தும் படியேறியும் இன்னும் நாம மேல போகவே இல்லையே.."

"அட அது கூட பரவாயில்ல மாமு.. சனியன் புடிச்சவனுங்க.. கைப்பிடிய எம்புட்டு கீழ வச்சிருக்காங்க பாரு.."

***************

சர்தாரும் அவருடைய மனைவியும் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டில் அப்ளை செய்திருந்தார்கள். ஜட்ஜ் எவ்ளவோ சொல்லியும் ரெண்டு பேரும் பிரியணும்னு தீர்மானமா சொல்லிட்டாங்க. கடைசியா ஜட்ஜ் கேட்டார்.

"உங்களுக்குத்தான் மூணு பிள்ளைங்க இருக்காங்களே.. அவங்கள எப்படி பிரிச்சுப்பீங்க.."

ரொம்ப யோசிச்சுட்டு சர்தார் சொன்னார்.

"சரி விடுங்க.. நான் அடுத்த வருஷம் டைவர்ஸ் பண்ணிக்கிறேன்.."

***************

காதலர் தினம் இருப்பதால்தான் என்னமோ, அந்த மாதத்திற்கு கூட ஆயுள் குறைவு..

***************

பெண்களின் கண் அசைவுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஆனால் ஒரு உண்மையான ஆண் நண்பனின் கண் அசைவுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் உண்டு.

"மச்சி.. டக்குன்னு திரும்பாத.. ஒரு சூப்பர் பிகரு நம்மள கிராஸ் பண்ணிப் போகுது.."

***************

மயிலுக்கும் கிளிக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன?

மயில் தேசியப்பறவை..

கிளி ஜோசியப்பறவை...

ஓகே ஓகே நோ டென்ஷன்.. இந்த மாதிரியான அறிவாளி விஷயமெல்லாம் எனக்குத்தான் தெரியுமாக்கும்..

***************

எனக்குக் கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு. நல்லா விம் போட்டு வெளக்குனீங்கன்னா வசதியா இருக்கும்.

-> தண்ணிப்பாம்புக்கு ஜல்ப்பு பிடிக்குமா?

-> கருப்பா இருக்குற எருமைமாடு எப்படி வெள்ளக் கலர்ல பால் கொடுக்குது?

-> சரக்கு ரயில் தள்ளாடுமா?

-> பிராந்திய ஹாட் டிரின்க்னு சொல்றாங்களே.. அதை அப்படியே குடிக்கணுமா இல்ல ஆத்திக் குடிக்கணுமா?

-> ஒல்லியா இருக்குற பின்ன (pin) ஏன் குண்டூசின்னு சொல்றோம்?

-> கொசு கொட்டாவி விடுமா?

- இவண்
இப்படியெல்லாம் யோசிச்சாலாவது பெரிய விஞ்ஞானி ஆக முடியுதான்னு முயற்சிப்போர் சங்கம்.

இப்போதைக்கு அவ்ளோதான். இம்மாதிரியான கடிகள் இனிமேல் அடிக்கடி தொடரும். நெக்ஸ்டு மீட் பண்ணுவோம்..:-)))

January 21, 2011

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அபத்தங்கள் (2)

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அபத்தங்கள்

கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த மொத பதிவை எழுதினேன். ஆனா அது இன்னைக்கு வர்ற படங்களுக்குக் கூட பொருத்தமா இருக்கு. ஒரு சில விஷயங்கள் எப்போ சொன்னாலும் எந்த காலத்துக்கும் பொருந்தும் போல... இன்னைக்கும் கூட சில விஷயங்கள் தமிழ் சினிமாவுல இன்னும் மாறாமயே இருக்குன்னு சொல்லும்போது தனியா பொலம்புரதத் தவிர வேறென்ன பண்ண முடியும்? வாங்க.. நம்ம ஊரு சினிமால மாறாத இன்னும் சில விஷயங்களை பார்ப்போம்..

--> ஹீரோ ரெட்டைப்புள்ளையா இருந்தா அதுல ஒருத்தர் கண்டிப்பா ரொம்பக் கெட்டவனா இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல “நான் ஏன் அப்படி இருந்தேன் தெரியுமா”ன்னு ஒரு பாடாவதி டயலாக் பேசி நல்லவனா மாறிடுவார். அவருக்கு ஒரு இளிச்சவா ஃபிகரு சோடியா வேற இருக்கும்.

--> படத்தோட உச்சக்கட்டமா வில்லன் எங்கேயாவது பாம் வச்சுடுவான். அதை டிஃப்யூஸ் பண்ண வர்ற ஹீரோ எந்த கலர் வயர வெட்டுறது அப்படின்னு டென்ஷனாகி செவப்பா நீலமான்னு மாத்தி மாத்தி யோசிப்பார். ஆனா அவர் கவலையே பட வேண்டாம். ஏன்னா அவர் எந்த வயர வெட்டினாலும் பாம் அமந்து போகும். (நீ புடுங்குற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..)

--> வில்லன் குரூப்பு அடி பின்னி எடுப்பானுங்க.. கத்தியக் கொண்டு குத்துவாங்க.. ஏன் அப்பப்ப துப்பாக்கி குண்டு கூட உண்டு. அதை எல்லாத்தையும் தாங்கிகிட்டு சண்டை போட்டு முடிப்பாரு நம்ம ஹீரோ. அப்ப எல்லாம் எதுவும் தெரியாது. ஆனா ஹீரோயின் ஃபிகரு அந்தக் காயத்த கிளீன் பண்ண வந்தா மட்டும் அவனுங்க கொடுக்குற சவுண்டு எஃபக்டு இருக்குதே.. ங்கொய்யால.. உலக நடிப்புடா சாமி..

--> லஃப்ஸ் வந்த ஒடனே ஹீரோ தெருவுல லூசு மாதிரி ஆடிக்கிட்டே வரணும்.. அது ஒரு ரூல். அட.. இது கூட ஓகே.. சோஷியல் மேட்டர்.. பண்ணிக்கலாம்.. ஆனா ரோட்டுல சும்மா போறவய்ங்களும் கரெக்டா அதே ஸ்டெப்பப் போடுற கொடுமைய என்னான்னு சொல்றது.

--> போலிஸ் ட்யூட்டில இருக்கும்போது எதையுமே நம்ம ஹீரோ கண்டுபிடிக்க மாட்டாரு.. ஆனா எவனாவது தீவரவாதி எஸ்ஸாகி அவர சஸ்பெண்டு பண்ணிட்டா போதும்.. எங்க இருந்து தான் அந்த வீரம் வருமோ.. ஒடனே குடு குடுன்னு ஓடிப்போய் வில்லன் குரூப்ப ஒரு கை பார்த்துப்புடுவாரு..

--> படம் மதுரைப்பக்கம் நடக்குறதா இருந்தா தொலஞ்சான் ரசிகன். ஹீரோவுக்கு பதினஞ்சு நாளா சிரைக்காத தாடி.. இத்துப்போன ஒரு கைலி.. வேலை வெட்டி இல்லாத ரவுடித்தனம்.. இதுதான் மதுரை தமிழ்னு அவங்களா நம்பிக்கிட்டி இழுத்து இழுத்துப் பேசுறது... அப்புறம் படத்துல கொடூரமா ஒரு கிளைமாக்ஸ் தவிர்க்கவே முடியாதது..

--> அடுத்ததா பேய்ப்பட ஸ்பெஷல்.. பேய்ப்படமா இருக்க தகுதி என்னன்னா, படத்துல ஆளே வராத ஒரு பாழடஞ்ச பங்களா அவசியம்.. அப்புறம் அங்க ஒரு வேலைக்காரனோ காரியோ வாய் கோணிக்கிட்ட மாதிரி இழுத்து இழுத்து பேசுறதும் அவசியம்.. யாராவது மொத தடவை வீட்டுக்குள்ள நொழஞ்சு சுத்திப் பாக்குற போது, ஒரு பூனையோ எலியோ அலமாரிக்குள்ள இருந்து தவ்வி ஓடி எல்லாரையும் பயமுறுத்த வைக்கும்.

--> இப்போ நான் சொல்றது ரொம்ப முக்கியமான விஷயம்.. அது என்ன மாயமோ இல்ல மந்திரமோ இல்ல அந்த பேய்களுக்கு எல்லாம் எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ.. கரெக்டா சொல்லி வச்ச மாதிரி ஹீரோவும் ஹீரோயினும் மேட்டர் பண்ணும்போதுதான் கொல்ல வரும்.. சீனுக்கு சீனும் ஆச்சு.. பேயையும் காட்டியாச்சு..

--> அப்புறம் பேய்ங்களோட காஸ்ட்யூம்.. எல்லாப் பேய்களுமே வெள்ள பொடவையும் ஒரு கம்பெனி பாட்டோடயுமே சுத்துதுங்க.. ஏதாவது சொட்டுநீலம் வெளம்பரத்துல நடிச்ச பேயோட பரம்பரையா இருக்குமோ?

ஸ்டாப்.. இதுல நெறய விஷயங்கள் குறுந்தகவலா வந்தது. நம்ம சினிமால இந்த மாதிரியான காமெடிகள் ஒரு வத்தாத கடல் மாதிரி. விட்டா வந்துக்கிட்டே இருக்கும். அதானல ஞான் இவிடே முடிக்குன்னு. ஒங்களுக்குத் தெரிஞ்ச வேற மாதிரியான அபத்தங்களயும் பின்னூட்டங்கள்ல சொல்லுங்க மக்களே..:-))

December 6, 2010

பதிவர்கள் உங்கள் சாய்ஸ் (2)

அன்பின் பதிவுலக நண்பர்களே.. இது உங்கள் அபிமான "பதிவர்கள் உங்கள் சாய்ஸ்" நிகழ்ச்சி. நான் உங்க பிரியத்துக்குரிய கப்சி ரமா. போன தடவை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏகோபித்த ஆதரவைக் கொடுத்து வெற்றிபெற செய்த உங்க அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்க கொடுத்த தைரியத்துல நம்ம பதிவர்களை கலாய்க்குற இந்த நிகழ்ச்சி தொடருது. வாங்க.. இன்னைக்கு பிரியாணி ஆகப்போற ஆடுங்க யார் யாருன்னு பார்ப்போம்.

மொதல்ல நாம பேசப்போற பதிவர் பதிவுலகின் டெர்ரர் மனிதர். ஜெயமோகனையே அலற விட்டவர். அவர்தான் நம்ம ”ஆல் இன் ஆல் அழகுராஜா” ராம்ஜி யாஹூ.

டிரிங் டிரிங்..

ரமா: வணக்கம் ராம்ஜி சார். என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

ராம்ஜி: வணக்கம். உலக இலக்கியத்துக்கும் உள்ளூர் சிட்டுக்குருவி லேகியத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்னன்னு விளக்க சொல்லி மச்சி சாருக்கு மெயில் பண்ணிக்கிட்டு இருந்தேன். நடுவுல நீங்க போன் பண்ணிட்டீங்க.

ரமா: பிரதியை எழுதி முடித்த பின் எழுத்தாளன் இறந்து போறான்னு இலக்கியவாதிகள் சொல்றாங்களே.. அது பத்தி என்ன நினைக்கிறீங்க?

ராம்ஜி: மரணம் எல்லாருக்கும் பொதுவானது. நம்ம சிலுக்கு கூட தூக்கு போட்டு செத்துப் போனாங்க. அதைப் பத்தி இவங்க யாரும் ஏன் பேச மாட்டேன்னு சொல்றாங்க?

ரமா: எப்படி சார் உங்களால மட்டும் இத்தனை விசயங்ளைப் பத்தி தெரிஞ்சு வச்சுக்க முடியுது?

ராம்ஜி: எல்லாம் நாம பாக்குற பார்வை தாங்க. நந்தலாலாவோ நாயர் கடை டீயோ.. நம்ம அறிவு தாகத்துக்கு ரெண்டு சொட்டு லிம்கா கிடைக்குதான்னு பார்க்கணும். இதைத்தானே இன்னைக்கு வைரமுத்துவும் அன்னைக்கே பூக்கோவெஸ்கியும் சொல்லிட்டுப் போயிருக்காங்க..

ரமா: ஆகா ஆகா.. புல்லரிக்குதுங்க. அப்புறம் ஒரு சந்தேகம். உங்க கணினியோட திரையில மட்டும் இருபது சானல் வரதாகவும், அதுல உலகின் அத்தனை செய்திகளும் வரதா பதிவுலகுல பேசிக்கிறாங்களே?

ராம்ஜி: எல்லாம் புரளிங்க. வயித்தெரிச்சல். உண்மையில வெறும் பதினாறு சானல் தாங்க வருது..:-(

ரமா: அடங்கப்பா.. முடியலடா சாமி.

ராம்ஜி: சாமிங்கிறது விக்ரம் நடிச்ச படம். அதுல திரிஷா ஒரு பாட்டுக்கு போட்டுக்கிட்டு வர்ற டிரஸ் கூட 1953இல் வெளிவந்த இசபெல்லா கோஸ்டாங்கிற கொலம்பியா படத்துல ஒரு அம்மணச் சாமியார் போட்டிருந்த டிரஸ்ஸோட காப்பிங்க.

ரமா: கிழிஞ்சது போங்க.. அய்யா இதுக்கு மேல எனக்குத் தாங்காது. உங்களுக்கான பாட்டு வருது கேளுங்க..

எவண்டா நம் முன்னே வந்து எதிர்ப்பவன் இங்கே.. தலை எகிறிப்போகும் அங்கே..

பேஸ்தடிச்சுப் போயிருக்கும் நேயர்கள் எல்லாரும் மறுபடியும் ஆட்டைய கவனிங்க. அடுத்து நாம பாக்கப் போறது ஒரு பிரபல பெண் பதிவர். பதிவர்னு சொல்றதை விட பிரபல பஸ்ஸர்னு சொல்லலாம்.

டிரிங் டிரிங்..

ரமா: வணக்கம் மயில் விஜி. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

விஜி: வணக்கங்.. கதைப்போட்டிக்கு நான் எழுதுன கதைய படிச்சதுக்கு அப்புறமா பரிசல்காரன் பதிவுல எழுதுறதையே நிப்பாட்டிட்டாருங்க.. அதனால.. முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்கிற மாதிரி.. மறுபடியும் அவருக்காக ஒரு கதை எழுதிக்கிட்டு இருக்கேங்க. படிச்சா அவருக்கு தெளிஞ்சுருங்க.

ரமா: ஐய்யய்யோ.. இன்னொரு கதையா? பரிசல் செத்தார். அப்புறம் விஜி.. பதிவுலகம் எப்படி இருக்கு? என்ன விசேஷம்?

விஜி: காபா ப்ரித்திக்கு க்யாரண்டி இருக்கான்னு கேட்டுக்கிட்டு இருக்கார். ஆதவன் அலமேலுவா இல்ல சேட்டனா இல்ல ஆதம்பாக்கம் அன்னலட்சுமியா இல்ல புலிக்குட்டியான்னு அலைபாயுறார். அப்புறம்..

ரமா: ஆத்தாடி. போதும் சாமி. உங்களப் பத்தி சொல்ல ஏதுமில்லையா?

விஜி: ஏன் இல்ல? இதோ சொல்றேன். நான் ஒரு அப்பாவி.

(அடிப்பாவி என யாரோ பின்னாடி இருந்து புலம்பும் சத்தமும் டொமீல் என ஏதோ கட்டையால் சாத்தும் சத்தமும் கேட்கிறது..)

விஜி: அப்புறம் ரமா வேற என்ன கேக்கணும்?

ரமா: ஹி ஹி ஹி. வேற ஒண்ணுமே இல்லைங்க. இப்போ அடி வாங்குன ஜீவனுக்காக ஒரு பாட்டு வந்துக்கிட்டே இருக்குங்கோவ்..

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு.. இதில் நீயென்ன.. ஞானப்பெண்ணே..

அடுத்து நாம பாக்கப்போறது ஒரு மூத்த பதிவர். மதுரை தந்த தங்கம், தன்மானச் சிங்கம், அன்புக்கும் பாசத்துக்கும் உரிய சீனா அய்யா அவர்கள்.

டிரிங் டிரிங்..

ரமா: அய்யா.. வணக்கம்.

சீனா: வணக்கம்.. சொல்லுங்கோ.

ரமா: எங்க நிகழ்ச்சி பத்தி என்ன நினைக்கிறீங்க?

சீனா: அருமை - பதிவர்கள் உரையாடல் - சகட்டு மேனிக்கு கலாய்த்தல் - உலகத்தரமான கேள்விகள் - அற்புதமான தொகுப்பாளினி - வாழ்த்துகள்.

ரமா: (ஆகா.. பின்னூட்டம் போடுற மாதிரியே பேசறாரே..)

சீனா: ரமா.. கேக்க மறந்துட்டேன்.. அப்புறம் எப்போ வலைச்சரம் எழுதுறீங்க?

ரமா: அய்யா.. நான் பதிவர் இல்லைங்க..

சீனா: அட ஆமாம்ல.. எல்லார்கிட்டயும் இதைக் கேட்டு பழகிப்போச்சு..

ரமா: அய்யா சமீபமாத்தான் உங்களுக்கு மணிவிழா நடந்ததா கேள்விப்பட்டோம். உங்களுக்கும் செல்விஷங்கர் அம்மாவுக்கும் இந்த நேரத்துல வாழ்த்து சொல்றதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுக்கான பாட்டு வந்துக்கிட்டே இருக்கு.. கேட்டு என்ஜாய் பண்ணுங்க..

நல்லதொரு குடும்பம்.. பல்கலைக்கழகம்..

அடுத்ததா நாம பாக்கப் போரது ஒரு சேட்டைக்காரப் பதிவர். மொக்கை போடுறதுல சூரர். வாங்க அவர் யாருன்னு பார்க்கலாம்.

டிரிங் டிரிங்..

ரமா: வணக்கம் மேவி. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

டம்பி மேவி: ரொம்ப கஷ்டமான வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். அதாவது.. சும்மா இருக்கேன்.

ரமா: சார்...

டம்பி மேவி: சாருவா? எனக்கு அவரைத் தெரியாதே.. பீருன்னு ஒருத்தர் பழவந்தாங்கல்ல பலசரக்கு கடை வச்சிருக்கார். அவரை மட்டும்தான் தெரியும்.

ரமா: சுத்தம். நீங்க ஒரு பெரிய வாசகர். உலக இலக்கியத்த எல்லாம் கரச்சுக் குடிச்சவர்னு சொன்னாங்களே.. தஸ்தாவெஸ்கிய படிச்சிருக்கீங்களா?

டம்பி மேவி: என்னது.. தாத்தா கைல விஸ்கியா?

ரமா: அவ்வ்வ்வ்வ்.. ரமா.. இது உனக்குத் தேவையா?

டம்பி மேவி: இங்க எல்லாமே எல்லாருக்கும் தேவைதான் பாஸ். இப்படித்தான் ஒரு இங்க்மெர் பெர்க்மென் படத்துல...

ரமா: படத்துல?

டம்பி மேவி: யாருக்குத் தெரியும்? சும்மா வாயில வந்தத சொன்னேன்.

ரமா: அய்யோ.. எனக்குத் தலையே வெடிச்சிடும் போலயிருக்கு..

டம்பி மேவி: நான் வேணும்னா ஏதாவது பாட்டு பாடட்டுமா? பாடியே தலைவலியை போக்க முடியும்னு அபிதான சிந்தாமணில சொல்லியிருக்காங்க.. ஏழாம் நூற்றாண்டுல சமண முனிவர்கள் கூட..

ரமா: யோவ்.. இதுக்கு மேல ஏதாவது பேசுன உந்தலையில கல்லைத் தூக்கிப் போட்டுருவேன். பாட்டு போடுறேன்.. கேட்டுட்டு ஓடிப் போயிரு..

டம்பி மேவி: ஹே ஹே ஹே.. நீ என்னம்மா எனக்கு பாட்டு போடுறது? இப்போ நான் உனக்கு பாட்டு போடுறேன் பாரு..

சுட்டி சுட்டி உன் வாலக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளுடி..

ரமா: (ஆகா.. இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்ல போல இருக்கே.. நமக்கே பாட்டு போடுறாய்ங்களே.. எஸ்ஸாகிற வேண்டியதுதான்..)

ஆகவே நேயர்களே.. இந்த பதிவர்கள் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி இத்தோடு முடிகிறது. மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் வேறு சில பிரபல பதிவர்களோடு உங்களை சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து வடைபெறுவது.. உங்கள் அன்புத் தொகுப்பாளினி கப்ஸி ரமா. பை பை.

October 22, 2010

ஒரு எழுத்தாளனின் (சோகக்) கதை - 2

ஒரு எழுத்தாளனின் (சோகக்) கதை - 1

எழுத்தாளர் ஆக "நமக்கு நாமே" திட்டம்னு முடிவு பண்ணியாச்சு. ஆனா எங்க இருந்து ஆரம்பிக்கிறது?

முதல்ல எழுதுறதுக்கான சூழலை உருவாக்கணும்.

வீட்டுல என்னோட அறைல இருந்த ஜன்னலை எல்லாம் நல்லா திரை போட்டு மூடியாச்சு. எல்லாமே மூடி இருந்தாத்தான் எழுதுறதுக்கு மூடு வரும். காமா சோமான்னு சுவத்துல பூரா கிறுக்கனும். அப்புறம் அடுக்கி வச்சு இருந்த துணிகள், சாமான் எல்லாத்தையும் கலைச்சுப்போட்டு வீடு முழுக்க பரப்பி விட்டாச்சு. பப்பரக்கான்னு ஒழுங்கு இல்லாமக் கிடந்தாத்தானே கட்டுடைத்தல், பின் நவீனத்துவம், பின்னாத நவீனத்துவம் எல்லாமே.. "உனக்கு மறை கிறை கழண்டு போச்சா.."அம்மா திட்டினபோதுதான் நிம்மதியா இருந்தது. அப்போ ஒழுங்காத்தான் எல்லாத்தையும் உருப்புடாமப் பண்ணியிருக்கோம்.

அடுத்தது, எழுத்தாளனுடைய உடமைகள்.

அழுக்கு ஜிப்பா
இத்துப் போன ஜோல்னா பை
நல்ல தடியான கண்ணாடி
காந்தி காலத்து பேனா
கிலோ கணக்குல பேப்பர்
காயலான் கடை சைக்கிள்

செட் பிராப்பர்டி எல்லாத்தையும் எறக்கியாச்சு. அத்தோட கைல பேனாவோட வானத்த வெறிக்கிற மாதிரி, ஜிப்பாவோட சைக்கிள் ஒட்டிக்கிட்டு வர மாதிரி, ஆளே இல்லாத ரோட்டுல அலப்பறையா நடந்து வர மாதிரி போட்டோவும் எடுத்தாச்சு. பின்ன.. நாளைக்கு நம்ம கதை விகடன், குமுதம்ல எல்லாம் வரும்போது தேவைப்படும்ல.

என்னதான் நான் பெரிய ஆளா இருந்தாலும் நல்ல எழுத்தாளனுக்கு வாசிப்பனுபவம் முக்கியம். அதனால மைய நூலகத்துல மெம்பர் ஆகிட்டேன். யாருமே படிக்காத புத்தகங்கள் எங்க இருக்குன்னு தேடித் பிடிச்சு படிக்க ஆரம்பிச்ச போதுதான் அவர் எனக்கு அறிமுகமானாரு. புரட்சிக் கவிஞர் இடிமுட்டி. ஆகா.. நமக்கு புரட்சிக் கலைஞர் தெரியும்.. அது யாருடா இந்த புரட்சிக் கவிஞர்?

புத்தகத்த எடுத்துப் பார்த்தவன் அப்படியே மிரண்டுட்டேன். முப்பது நாற்பது பேரு முன்னுரை எழுதி இருக்காங்க. இடிமுட்டியின் இடிமுழக்கம்னு ஒருத்தர் ஆய்வு நூல் எழுதி இருக்காராம். என் புத்தகங்களின் மீதான ஆய்வுகள் பற்றிய கருத்துத் தெறிப்புகள்னு இடிமுட்டியே ஒரு புத்தகம் போட்டிருக்காரு. அடேங்கப்பா.. ரொம்பப் பெரிய ஆள்தான் போலன்னு படிக்க ஆரம்பிச்சேன்.

முதல் கவிதையே டெர்ரர்தான்.

ஓ உலக இளைஞனே
பார்க்க எடுப்பாக
இருப்பதை விட
நாலு பேருக்கு
எடுத்துக்காட்டாக நீ
இருந்தால் நாடு செழிக்கும்

அடுத்தது பெண்களுக்கான அறைகூவல்.

இன்றைய மங்கை
அவள்
பொங்கி வரும் கங்கை
தோழியே உனக்குத்
தொல்லை கொடுப்பவனை
தோல்செருப்பால்
தொரத்தி தொரத்தி அடி

காதல் கவிதைகள்ல எப்படி பட்டையைக் கெளப்புறாரு பாருங்க..

பூவும் பொண்ணும் ஒண்ணு
அறியாதவன் வாயில மண்ணு

வானில் இருப்பது வெண்மதி
என் காதலே எனக்கு வெகுமதி

ஐயோ ஐயோ.. எனக்குப் படிக்க படிக்க சந்தோஷமா இருக்கு. கவிதை எழுதுறது இம்புட்டு ஈசின்னா கண்டிப்பா நாமளும் கவிஞன் ஆகிடலாம்டா.. கஷ்டப்பட்டு அவரோட வீட்டைக் கண்டுபிடிச்சு போயிட்டேன்.

"எழுத்தாளன் ஆகணும்னு ஆசை சார். யாரையுமே பார்க்கக் கூடாதுன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா உங்க புத்தகத்தைப் படிச்ச பின்னாடி... முடியல.. அதான் ஓடோடி வந்துட்டேன்.."

மனுஷனைக் கைல பிடிக்க முடியல. உள்ளே போய் ஒரு நூறு, இருநூறு புத்தகத்த எடுத்துட்டு வந்தாரு. எல்லாமே வாரமலர், குடும்ப மலர் மாதிரியான புத்தகங்கள். எல்லாத்துலையும் அவர் கவிதையும், கதையும் வந்திருக்காம்.

"கவிதை எழுதுறது ரொம்ப ஈசி தம்பி. இப்போப் பாருங்க.. நாலு திசை இருக்கு. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் மறைகிறான். வடக்கும் தெற்கும் எப்போதும் ஒன்று கூடுவதே இல்லை. அவ்வளவுதான். இதையே கொஞ்சம் மாத்திப் பாருங்க.. கவிதை ரெடி.."

இதை.. இதை.. இதை.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

"உங்கள சுத்தி இருக்குற விஷயங்கள நல்லா கவனிச்சாலே போதும். அப்புறம் எழுதுங்க.. கதையும் கவிதையும் ஊத்து மாதிரி.. சும்மா அப்படியே உங்க நாபிக்கமலத்துல இருந்து பீறிக்கிட்டு வரும்"

எனக்கு புல்லரிக்குது. அவருக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன். வெளில வானத்துல ஒரு காக்கா கத்திக்கிட்டே பறந்து போகுது. உடனே எழுதுனேன் ஒரு கவிதை.

காகமே
இந்தக் கேடு கெட்ட மனிதர்களோடு
பேச மாட்டேன் என
சொல்வதற்காகத்தான்
(டூ)கா (டூ)கா
என்று கரைகிறாயோ?

அடுத்து நடந்தது எல்லாம் சரித்திரம் நண்பா. என்னோட வாழ்க்கைய நான் எலக்கியத்துக்கே அர்ப்பணிக்க முடிவு பண்ணிட்டேன். ஒரு நாளைக்கு இருபத்தெட்டு மணி நேரமும் எழுத்துத்தான். விடுறதில்லை. எலக்கியத் திமிங்கலம்னு பேரு வாங்காம விடுறதில்லை. கண்ணுல பாக்குற எல்லாத்தையும் பதிவு பண்ண ஆரம்பிச்சேன். மனுஷன், மரம், நாய், நரி, நண்டு , நட்டுவாக்கிளி.. எதையும் விட்டுவைக்கல.

ஒவ்வொரு கதையும், கவிதையும் நான் இந்த நாட்டுக்குத் தந்த பொக்கிஷம். ஆனா இந்த பாழாப்போன தமிழ்ச்சூழல்ல எழுத்தாளன யாரு மதிக்கிறா? நான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பின கதைய எல்லாம் ஒரு பயலும் மதிக்கல. சரி.. அவனுங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான். அதுக்காக நான் எழுதாம இருக்க முடியுமா?

வீட்டுலதான் நம்மள ஒரு கணக்காவே எடுத்துக்கலைன்னா.. இந்த சேக்காளிப் பயலுவ.. "அது நம்ம பக்கமாத்தான் வருதுன்னு" ஜுராசிக் பார்க்கப் பார்த்த மாதிரி அவனுகளும் நம்மள கண்டாலே ஓடுறானுங்க. அப்படி அவனுகள நான் என்னத்த கேட்டுட்டேன்? ஏண்டா.. என் எழுத்த எல்லாம் புத்தகமா போடுறீங்களான்னு கேட்டேன். இது ஒரு குத்தமா? சரி விடுங்க பாஸ்.. இவங்க எப்பவுமே இப்படித்தான். இதெல்லாம் பார்த்தா எழுத்தாளன் ஆக முடியுமா?

இந்த உலகத்துக்கு என்னை நிரூபிக்கிற வரைக்கும் இந்த லட்சியப்பயணம் கண்டிப்பா தொடரும் பாஸ். அப்புறம்.. நீங்க தப்பா நினைக்கலைன்னா உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? ஹி ஹி ஹி.. நீங்க ஏன் என்னோட புத்தகத்த போடக்கூடாது? ஹலோ ஹலோ.. எங்க ஓடுறீங்க..

(நகைச்சுவைக்காக மட்டுமே.. யாரையும் குறிப்பிடுவது அல்ல.. நீங்க யாரையாவது பொருத்திப் பார்த்தா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.. அப்புறம் கவிதைகளுக்கான காப்பிரைட்ஸ் - கானா பானா)

October 18, 2010

ஒரு எழுத்தாளனின் (சோகக்) கதை

முடிவு பண்ணி விட்டேன். வேறு வழியே இல்லை. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வீட்டில் வெட்டிப்பயல், தண்டம் என்றெல்லாம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பது? உருப்புடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும். ஆமாம். அதனால் நான் எழுத்தாளராகப் போகிறேன்.

சுப்.. அப்படி எல்லாம் சிரிக்கக் கூடாது. நான் என் அம்மாவிடம் இதைச் சொன்னபோது அவரும் இப்படித்தான் சிரித்தார். "நீ திருந்தவே மாட்டியாடா?" என்று அட்வைஸ் வேறு. பரவாயில்லை. கண்ணம்மாவுக்குத் தெரியுமா கதை எழுதுபவனின் அருமை. என்னடா இந்த சின்னப் பையனுக்கு இவ்ளோ அறிவான்னு உங்கள் எல்லாருக்கும் பொறாமை.

ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணிட்ட.. அது ஏன் கதை எழுதணும்னு தோணுச்சு?

அப்படி கேளுங்க.. சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள ஒரு பொறி இருந்திருக்குங்க (ஆயுத பூஜைக்கு தரது கிடையாது). சிறுவர் மலர், பாப்பா மலர்ல எல்லாம் நிறைய கதை வாசிச்சுக்கிட்டே இருப்பேனாம். ஸ்கூல்ல என்னோட பரீட்சை பேப்பரைத் திருத்தி முட்டை போடுற வாத்திமாருங்க கூட நீ கதை எழுதத்தாண்டா லாயக்குன்னுதான் திட்டுவாங்கன்னா பாருங்களேன்.

எல்லாத்துக்கும் மேல, அன்னைக்கு ராத்திரி நான் ஒரு கனவு கண்டேன். ஒரு பெருசு நமக்கு சால்வை எல்லாம் போத்தி "எழுத்தாளர் குல திலகம் வாழ்க" அப்படின்னு சொல்றார். அப்படியே திகைப்புல முழிச்சு பார்த்தா மணி காலைல அஞ்சு மணி. எப்பவுமே அதிகாலைல காணுற கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க. அதனாலத்தான் நான் முடிவு பண்ணினேன் - எழுத்தாளர் ஆகுறதுன்னு...

முடிவு எடுத்தாச்சு. ஆனா என்ன எழுதுறது எதப்பத்தி எழுதுறது? யாருக்கிட்ட கேக்கலாம்? கழுதை கெட்டா குட்டிச்சுவரு. நேரா நம்ம நண்பர்கள்கிட்ட போய் நின்னேன். எல்லாப்பயலும் எங்கம்மா மாதிரியே சிரிச்சானுங்க- ஒருத்தனைத் தவிர. குமார் - நீதாண்டா என் உயிர் நண்பன். அவன் சொந்தமா பழைய பேப்பர் கடை வச்சிருக்கான்கிற விவரம் நமக்குத் தேவை இல்லாதது.

"டேய் மாப்ள... எந்த வேலைய செய்யும்போதும் முன்னோர்களோட அறிவுரை அவசியம்டா.. இப்போ நீ ஏதாவது எழுதனும்னா ஏற்கனவே எழுதிக்கிட்டு இருக்குற ஒருத்தரோட வழிகாட்டுதல் வேணும்டா.."

எனக்கு அப்படியே உடம்பு புல்லரிச்சுப் போச்சு. ஒரு நிமிஷத்துல அவன் சோனியா காந்தி மாதிரியும் நான் மன்மோகன் மாதிரியும் ஒரு உணர்வு. (எப்பவுமே கிருஷ்ணர் - அர்ஜுனனைத் தான் சொல்லனுமா?)

"யாரடா மாப்ள போய்ப் பார்க்கலாம்?"

"எங்க தெருவுல செல்வம் அண்ணன்னு ஒருத்தர் இருக்காரு.. எனக்குத் தெரிஞ்சு பதினஞ்சு வருஷமா எழுதிக்கிட்டு இருக்காரு.. அவரப் போய் பார்ப்போம்டா.."

நாங்கள் போனபோது செல்வம் அண்ணன் அவர் வீட்டில் அதிபயங்கர சிந்தனையில் இருந்தார்.

"வா குமாரு.. தம்பி யாரு.."

"நம்ம பயதானே.. எழுதிப் பழகணும்னு ஆசைப்படுறான்.. அதான் உங்க கூட சேர்த்து விடலாம்னு.."

அண்ணனின் கண்கள் ஒரு வினாடி பெருமையில டாலடிச்சது.

"செஞ்சிரலாம் தம்பி.. நம்ம கிட்ட வந்துட்டீங்க இல்ல.. இனிமேல் உங்களுக்கு எல்லாமே ஜெயம்தான்.. ஊருக்குள்ள நம்மளப் பத்திக் கேட்டுப் பாருங்க.. கதை கதையா சொல்லுவாங்க.. எம்.ஜி.யார் ஜெயிச்ச்சதுக்குக் காரணம் என்ன.. எல்லாம் நம்ம எழுத்துத்தானே.."

எனக்குப் புரியவில்லை. "அது எப்படிண்ணே.."

"பின்ன.. ஊருல ஒரு சுவரு விடாம புடிச்சு புரட்சித் தலைவர் வாழ்கன்னு எழுதி பட்டையக் கிளபிட்டோம்ல.. இப்பக் கூட பாருங்க.. அடுத்தத் தேர்தல்ல நீங்க நமக்குத் தான் எழுதணும்னு ரெண்டு கட்சிக்காரனும் உசிர வாங்குறானுங்க.. அதான் யார் பக்கம் போகலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.."

"என்னது.. செல்வம் சுவத்துல விளம்பரம் எழுதுறவரா? டேய்.. குமார் என்னடா இது?"

நான் காண்டாக குமாரைப் பார்த்தபோது அவன் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். செல்வத்திடம் அப்புறம் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டுக் கிளம்பினோம். தெருவில் நடந்தபோது ரெண்டு பேரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை.

"சரி விடுறா.. இப்போ அடுத்து என்ன செய்யலாம்?"

நாங்கள் அடுத்து போன இடம் ரேடியோ ஸ்டேஷன்ல வேலை பார்க்குற குன்னனோட வீடு.

"வாங்க தம்பி.. எழுத்தாளர் ஆகணுமா? ரொம்ப சந்தோசம். ஆர்வம்தான் முக்கியம். இந்த புத்தகத்த எல்லாம் பார்த்துக்கிட்டு இருங்க.. எல்லாத்துலையும் நாம் எழுதி இருக்கோம்ல.. வந்திடுறேன்."

அவர் கொடுத்த புத்தகத்துல எந்தக் கதைலயும் அவர் பேரும் இல்லை. குமார் வாங்கி பார்த்தான்.

"டேய் இங்க பாருடா.."

"உலகின் ஏழு அதிசயங்களில் தாஜ்மகால் இந்தியாவில் உள்ளது. காக்கை தனக்காக கூடு கட்டிக் கொள்ளாது. பாம்புக்கு காதுகள் கிடையாது. எல்லாமே துணுக்குடா.. இதத்தான் இந்த ஆளு எழுதுவான் போல.."

சிரித்துக் கொண்டே குன்னன் வந்தார்.

"த்தம்பி.. இந்தாங்க நான் பதிப்பிச்ச புக்கு.."

எனக்கு அதை பார்த்தவுடன் திக்கென்றிருந்தது.

"ரேடியோ ரிப்பேர் செய்வது எப்படி?"

"நூறு நாட்களில் பணக்காரன் ஆவது எப்படி?"

எழுதியவர் பேரா.குன்னன் என்று வேறு போட்டிருந்தது.

"ஹி ஹி.. அப்படி போட்டாத்தான் தம்பி ஒரு மரியாதை.."

எனக்கு அழுகையே வரும் போல இருந்தது. குமாரைப் பார்த்தேன். அவனும் பேய் அறைந்த மாதிரித்தான் இருந்தான். நானும் குமாரும் கிளம்பும்போது அந்தாளு சொன்னது இன்னும் வயித்தெரிச்சல்.

"என்னை மாதிரியே நல்ல எழுத்தாளரா வர வாழ்த்துகள்.."

ரெண்டு பேரும் மண்டை காய்ஞ்சு வழியே வந்தோம்.

"குமார்.. இனிமே மத்தவங்கள நம்பி பிரயோஜனம் இல்ல.. நானா முயற்சி பண்ணி எழுதப் போறேன்.."

அவனுக்கு அப்படியே ஜிவ்வுன்னு இருந்திருக்கும் போல. என்னை கட்டிக் கொண்டான்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

- சோகம் தொடரும்

September 25, 2010

எஸ்.எம்.எஸ் மொக்கைகள்

தண்ணி அடிச்சா மப்புல நம்மாளுங்க அடிக்கடி சொல்ற வசனங்கள் என்னென்ன..

* மாப்ள.. நீ ஒண்ணியும் கவலைப்படாத.. நான் ஸ்டேடியாத்தான் இருக்கேன்..

* டேய் மாப்ள.. நா வண்டிய ஓட்டுறேண்டா

* ச்சே.. எவ்ளோ அடிச்சாலும் ஏறவே மாட்டேங்குதுடா

* நான் போதைல உளருறேன்னு மட்டும் தப்பா நினைக்காதீங்க

* இன்னொரு கல்ப் அடிச்சா சும்மா கும்முன்னு இருக்கும்

* இப்போ சொல்றா மாப்ள.. உனக்காக உயிரையும் கொடுப்பேன்

கடைசியா.. இதுதான் பட்டாசு...

* மச்சி.. நாளைல இருந்து இந்த சனியனத் தொடவேக் கூடாது

@@@@@

உலகத்துலேயே சின்ன லீவ் லெட்டர் எது தெரியுமா?

மதிப்பிற்குரிய ஐயா,

உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ
நான் கிளாசுக்கு வரமாட்டேன்

மிக்க நன்றி.

@@@@@

* டீ மாஸ்டர் என்னதான் "லைட்டா" டீ போட்டாலும், அதுல இருந்தாலும் வெளிச்சம் வராது

* பவர் கிளாசை எவ்ளோ நேரம் பிரிட்ஜ்ல வச்சாலும் அது கூலிங் கிளாஸ் ஆகாது

* ரயில் என்னதான் வேகமாப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாத்தான் வரும்..

@@@@@

உலகக் காதலின் சின்னமா தாஜ்மகால சொல்றோம். ஆனா உங்களுக்கு சில உண்மைகள் தெரியுமா?

* மும்தாஜ் ஷாஜகானோட நாலாவது பொண்டாட்டி (மொத்த டிக்கட் ஏழு)

* மும்தாஜ கரெக்ட் பண்றதுக்காக அவளோட புருஷனையே ஷாஜுக்குட்டி போட்டுத் தள்ளியிருக்காரு (இது காதலா கள்ளக்காதலா?)

* மும்தாஜ் செத்தது அவளோட பதினாழாவது பிரசவத்துல (அவ்வ்வ்வவ்வ்வ்)

* அவ செத்ததுக்குப் பிறகு மும்தாஜோட தங்கச்சிய வேற சாசு கரெக்ட் பண்ணியிருக்காரு (மச்சக்காரன்யா..)

தாஜ்மகாலைப் பத்தி இப்போ சொல்லுங்க சாமிகளா..

@@@@@

உனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொள். விருப்பம் போல காதல் செய். உள்மனம் சொல்வதை மட்டும் கேள். மனதில் தோன்றுவதை மட்டுமே பேசு. ஒரு நாள் இந்த உலகம் உன்னைப் பார்த்துச் சொல்லும்..

"தறுதலப் பயபுள்ள.. இது யார் பேச்சையும் கேக்காது.. எங்குட்டு உருப்புடப் போகுது?"

@@@@@

பத்து வருஷத்துக்கு முன்னாடி..

ஒரு பணியாரம் பத்து பைசா, ஒரு போன்காலுக்கு ஒத்த ரூவா

இன்னைக்கு..

ஒரு போன்காலுக்கு பத்து பைசா, ஒரு பணியாரம் ஒத்த ரூவா

அதனாலத்தான் சொல்றேன்..

வாழ்க்கை ஒரு வட்டம்டா

@@@@@

இவ்வளவு சொல்லிட்டு "அவரப்" பத்தி சொல்லலைனா எப்படி?

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே காமெடிதான்.

* "கில்லி"ன்னு சொல்லிக்கிட்டு ஹீரோ கபடி ஆடுவாரு

* "போக்கிரி"ல போலிஸ்னு சொல்லிபுட்டு கடைசில கூர்க்காவ காமிப்பாங்க

* "அழகிய தமிழ்மகன்"னு சொல்லிட்டு கடைசிவரைக்கும் அப்படி யாரையும் கண்ணுல காட்டவே இல்ல

* இது கூட பரவாயில்லைங்க.. "குருவி"ன்னு சொன்னாங்க.. ஆனா தியேட்டர்ல காக்கா கூட இல்ல

* "வேட்டைக்காரன்"னு சொல்லி ஒரு ஈத்தர ஆட்டோக்காரனக் காமிக்குறாங்க

* கடைசி கொடுமை.. "சுறா"ன்னு சொல்லி கருவாடக் காமிக்குறாங்க..

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...

(வர பதிவுகள் எல்லாமே ரொம்ப சீரியஸா இருக்கு.. ஏன் மொக்கை போட மாட்டேங்கிற என்று கேட்ட நண்பர்களுக்காக..)

September 3, 2010

பதிவர்கள் உங்கள் சாய்ஸ்

வணக்கம் நேயர்களே.. நான்தான் உங்கள் அபிமான கப்சி ரமா பேசுறேன்.. இது உங்கள் அபிமான "பதிவர்கள் உங்கள் சாய்ஸ்" நிகழ்ச்சி.. இன்னைக்கு வரைக்கும் இந்த புரோக்ராம் இவ்வளவு சிறப்பா நடந்துக்கிட்டு இருக்குன்னா.. என்னது இன்னைக்குத்தான் நிகழ்சியவே ஆரம்பிக்கிறோமா... கம்பெனி சீக்ரட்ட வெளிய சொல்லாதீங்கப்பா... இதெல்லாம் நாமளாப் பார்த்து சொல்லிக்கிறதுதான.. சரி சரி.. ஆட்டைய கவனிங்க..

வாலிப வயோதிக அன்பர்களே.. ச்சே.. பழக்கதோஷம்.. நேயர்களே இந்த புரோக்ராம் இவ்ளோ நல்லா நடக்க பதிவர்களாகிய உங்களோட ஆதரவுதான் காரணம்.. இந்த நிகழ்ச்சில ஒரு புதுமை என்னன்னா.. எங்களுக்கு போன் போட்டு "காலைல கக்கூசுல முக்க மறந்தாலும் உங்களை டிவில பார்த்து லுக்க மறந்ததில்ல...", "ஆறு வருஷமா பல்லு விளக்குரமோ இல்லையோ உங்களுக்கு போன் லைன் டிரை பண்றத பொழப்பா வச்சுக்கிட்டு இருக்கோம்..", "மேடம் நீங்க தொடச்சு வச்ச வாஷ் பேசின் மாதிரி சும்மா பளபளன்னு இருக்கீங்க" அப்படின்னு எல்லாம் பொலம்ப வேண்டிய அவசியம் கிடையாது..

ஏன்னா வேலையத்துப்போய் நாங்களே உங்களுக்கு போன் போடப்போறோம்.. போனப் போட்டு உங்களையும் பிளேடு போட வைக்கிறோம்.. அதுக்கு அப்புறம் உங்களுக்குப் பிடிச்ச பாட்டப் போடுறோம்.. ஓகேவா.. வாங்க.. முதல் பதிவர் யாருன்னு பார்ப்போம்..

டிரிங்.. டிரிங்...

ரமா: சார்.. வணக்கம்.. உங்களைப் பத்திச் சொல்லுங்க..

நேசமித்ரன்: படுபொருட்களும் பாடுபொருட்களும் நிறை இருண்மை கண்டத்தின் பால்வெளியில் ஆலிவ் இலைகளும் செடார் மரங்களும் நெப்ட்யூன் பூக்களும் ஹெர்குலிஸ் பிரபஞ்சமும் வீச்சற்று சுற்றித்திரியும் ஜெசிக்காவின் போர்வாள் ஏந்திய பெருநகரப் பாணன் நான்...

ரமா: கிழிஞ்சது போங்க.. எவனுக்கும் எதுவும் புரியப் போறதில்ல.. பதிவர்களுக்காக ஏதாவது சொல்லுங்க சார்..

நேசமித்ரன்: பதிவு என்பது ஒரு பிரதி.. எழுதிப்பழக அதுவொரு தளம்.. பதிவென்பது ஆதியும் அந்தமும் அற்ற வெளியின் ஒரு துகள்.. அது படிப்பவர்களை வெறி கொண்டு ஓடச் செய்யும் உன்மத்த நிலையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.. படிமங்கள் குறைந்த பட்சம் நாலு படிக்குக் கீழேயாவது நம்மைத் தூக்கி அடிக்க வேண்டும்.. அதே போல..

ரமா: ஐயா.. நீரே புலவர்.. தெரியாமக் கேட்டுட்டேன்.. விடுங்க.. உங்களுக்கான பாட்டு வருது..

ஒண்ணுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது..

ரமா: அடுத்து நாம பேசப்போற பதிவர் ரொம்பக் கம்மியாப் பேசக்கூடியவர். அமைதியானவர்.. வாங்க...

டிரிங் டிரிங்..

உண்மைத்தமிழன்: வணக்கம்.. எம்பெருமான் முருகன் உங்க எல்லாரையும் நல்லா வச்சிருக்கட்டும்.. அத்தோட என்னையும் கொஞ்சம் கவனிச்சான்னா போதும்..

ரமா: வாழ்க்கைல யாருமே பார்க்காத படத்த எல்லாம் எப்படி சார் துணிஞ்சு பாக்குறீங்க..?

உண்மைத்தமிழன்: வாழ்க்கையே போர்க்களம்.. வாழ்ந்துதான் பார்க்கணும்.. என்னம்மா பண்ண சொல்றீங்க? நானும் ஏதாவது ஒரு படம் நல்லா இருந்துடாதான்னுதான் பாக்குறேன்.. அது ஹிட்டு படமா இல்லைன்னாலும் பரவாயில்ல.. அப்பப்ப பிட்டு படமாப் போயிடுது..

ரமா: என்ன சார் சொல்றீங்க?

உண்மைத்தமிழன்: ஆமாம்மா.. இப்படித்தான் பாருங்க.. "இலக்கணப்பிழை"னு ஒரு படம்.. நான் கூட தமிழ் இலக்கணத்தைப் பத்திய படமோன்னு நினச்சேன்.. அதாவது தமிழ்ல அணி இலக்கணம், யாப்பு இலக்கணம்னு நிறைய இருக்குல.. அது மாதிரின்னு நம்பிப்போனா.. எனக்கு வச்சான் பாருங்க அதுதான் ஆப்பு இலக்கணம்.. அங்க இலக்கணமே இல்ல.. வெறும் பிழை மட்டும்தான் இருந்துச்சு.. சரி அப்பன் முருகன் சோதிச்சுட்டானேன்னு அடுத்து அந்தரங்கம்னு ஒரு படத்துக்குப் போனேன்.. அங்க..

ரமா: அய்யா சாமி.. போதும்..

உண்மைத்தமிழன்: இல்லம்மா.. ஒரு நாலு வரி சொல்றேனே....

ரமா: உங்களோட நாலு வரி எப்படின்னு எல்லாருக்குமே தெரியும்.. அதனால பாட்டக் கேளுங்க..

ஓம் முருகா.. ஓம் முருகா.. உனக்கு நன்றி சொல்வேன்..

ரமா: சரி.. நம்ம அடுத்த பதிவர்.. ஒரு பெண் பதிவர்.. ஏன்னா நாளப்பின்ன இடஒதுக்கீட்டு பிரச்சினை வரக்கூடாது பாருங்க..

டிரிங் டிரிங்..

ரம்யா: ஹா ஹா ஹா.. நான் வந்துட்டேன்..

ரமா: ஆத்தாடி.. எதுக்குங்க இப்படி சிரிக்கிறீங்க..

ரம்யா: தப்பா எடுத்துக்காதீங்க.. பதிவுல எங்க பார்த்தாலும் சிரிப்பான் போட்டே பழகிப் போச்சு.. அந்த ஞாபகம்..

ரமா: சரி சரி.. பதிவர்களுக்கு என்ன சொல்ல போறீங்க..

ரம்யா: நான் பதிவர்களுக்கு ஒண்ணும் சொல்லல.. குட்டீஸ்க்கு கதை சொல்லப் போறேன்.. ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம்.. அப்போ.. ஐயோ.. ஹா ஹா ஹா... ஒரு கிழவிக்கிட்ட.. ஐயோ.. என்னால சிரிப்பா அடக்க.. ஹா ஹா ஹா.... ஒரே சிரிப்புதான் போங்க.. அந்தநரி.. ஹா ஹா ஹா..

ரமா: எங்க ஏதாவது சொல்லிட்டு சிரிங்க.. இல்ல சிரிச்சுட்டு சொல்லுங்க..

ரம்யா: ஏங்க கதையே அவ்ளோதாங்க.. அடுத்து பார்த்திபன் வடிவேலு காமெடி ஒண்ணும் சொல்லட்டுமா..

ரமா: ஐயோடா.. போதுங்க.. இந்தா பாட்டப் போட்டுடுறேன்..

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது..

ரமா: அடுத்த பதிவர்.. ஒரு உலகம் சுற்றும் வாலிபர்..

டிரிங் டிரிங்..

ராகவன்: தம்பி வணக்கம்..

ரமா: ஹலோ.. நாம் ரமா பேசுறேங்க..

ராகவன்: .. அப்படியா.. தங்கச்சி வணக்கம்..

ரமா: ஆமா.. அப்படித்தான்.. இப்போ எந்த ஊர்ல இருக்கீங்க..

ராகவன்: இன்னைக்கு மதுரைல மீட்டிங்கு.. நாளைக்கு அங்க இருந்து கோயம்புத்தூர் போறேன்.. அடுத்து ஈரோடு, திருப்பூர்..

ரமா: ஏங்க.. நான் என்ன உங்ககிட்ட தமிழ்நாடு மேப்பா கேட்டேன்?

ராகவன்: அட இதெல்லாம் நான் போற ஊரும்மா.. வெள்ளிக்கிழம மெட்ராஸ்.. அதுக்கு அடுத்த வாரம் சிங்கப்பூர்... அதுக்கு அப்புறம் நான் எங்க இருக்கேன்னு எனக்கேத் தெரியலையேப்பா..

ரமா: அடங்கப்பா.. தாங்க முடியல.. அப்புறம் சார்.. இந்த பா..

ராகவன்: அய்யய்யோ.. என்ன வார்த்தை சொல்லப் போறீங்க..

ரமா: இல்ல.. இந்தப் பா..

ராகவன்: இங்க பாரும்மா.. எனக்கு அரசியல் தெரியாது.. நான் பாட்டுக்கு சிவனேன்னு அமைதியா இருக்கேன்.. ஏன் தேவையில்லாம பேசுறீங்க?

ரமா: அட அதில்லீங்க.. இந்த பாசக்காரப் பதிவர்கள் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டேன்..

ராகவன்: அப்பாடா.. பதிவர்கள் எல்லாருமே ன்னோட பாசக்காரத் தம்பிங்க.. இப்படி எல்லாம் உறவுகள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. இப்பக்கூட பாருங்க.. அன்டார்டிக்காவுல இருந்து ஒரு தம்பி பின்னூட்டம் போட்டிருக்கார்.. அதனால் அடுத்த ட்ரிப்பு அங்கதான்னு நினைக்கிறேன்..

ரமா: அடேங்கப்பா.. உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு சார்.. ரைட்டு பாட்டக் கேளுங்க..

யாதும் ஊரே யாவரும் கேளிர்.. அன்பே எங்கள் உலக தத்துவம்..

ரமா: சரி நேயர்களே.. இன்றைய நிகழ்ச்சியோட கடைசி பதிவர் யாருன்னு பார்ப்போமா?

டிரிங் டிரிங் ..

கார்க்கி: வணக்கம் தோழி..

ரமா: என்னது நானும் தோழியா?

கார்க்கி: அதும் நானும் தோழி இல்லைங்க.. வெறும் தோழிதான்.. தோழி.. இப்பப் பார்த்தீங்கன்னா.. தோசைல சாதா ஸ்பெஷல் எல்லாம் இருக்குதுல்ல. அது மாதிரித்தாங்க..

ரமா: ரைட்டு.. பதிவர்களுக்கு ஏதாவது சொல்லுங்க..

கார்க்கி: இப்போ ஹாட்டு தோழி அப்டேட்ஸ் தாங்க.. புடிங்க ஒண்ணு.. சுற்றுலா போய் வந்த தோழி தானே எடுத்த புகைப்படங்களைக் காமித்துக் கொண்டிருந்தாள். சட்டென உனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் எதுடா என்று கேட்டால். சற்றும் யோசிக்காமல் சொன்னேன்.."உன் மடிதான்". சட்டென்று என் தோள்களில் சாய்ந்து கொண்டு சொன்னாள்.. "ச்சி.. பொறுக்கி.." ஆம். நீ சிந்து சிரிப்பைப் பொறுக்குபவன் நான்.

ரமா: சுத்தம்.. முத்திப்போச்சு.. சீக்கிரம் இவரைக் கொஞ்சம் கவனிங்கப்பா..

கார்க்கி: நாங்க எல்லாம் தளபதியோட தளபதிங்க.. கொஞ்சம் அதப் பத்தியும் கேளுங்க..

ரமா: ஹலோ ஹலோ.. பாருங்க.. ஏதோ ஒரு பேரச் சொன்னாரு.. தானா லைன் கட்டாகிப் போச்சு.. சரி வாங்க பாட்டக் கேப்போம்..

நீ தோழியா என் காதலியா சொல்லடி என் கண்ணே..

நேயர்களே.. இன்றைய நிகழ்ச்சி இத்தோடு முடிகிறது.. இதுக்கு நீங்க தர ஆதரவைப் பொறுத்துத்தான் அடுத்த நிகழ்ச்சி பத்தி நாங்க யோசிக்க முடியும்.. வேற யார் யாரை கலாய்க்கலாம்னு சொல்லுங்கப்பா.. அதனால இப்போதைக்கு அப்பீட்டிக்குறேன்..:-)))

(முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே..)

July 31, 2010

ஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை (நிறைவு)..!!!

ஊறுகாயின் முதல் பகுதி இங்கே..

தூஸ்ரா பார்ட் இக்கட..

யார் அந்த ராகினி.. ராகினி.. ராகினி..

நீ எதுக்கு அவளுக்கு கார்டு போட்ட.. போட்ட.. போட்ட..

அது எப்படி அந்தக் குரங்குகிட்ட போச்சு.. போச்சு.. போச்சு..

பிளாஷ்பேக் ஸ்டார்ட்..

அது பாருங்க.. சின்ன வயசுல இருந்தே நமக்கு பொம்பளப் பிள்ளைங்கன்னா ஒரு இது.. அட.. இதுன்னா அதுதாங்க.. இப்போக்கூட எங்கம்மா பெருமையா சொல்லுவாங்க.. சிறுசுல எல்லாரும் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு ரொம்ப அடம் பிடிப்பாங்கள்ள.. நான் மட்டும் குடுகுடுன்னு ஓடிப்போய் ரிக்ஷாவுல ஏரி உக்காந்துக்குவேனாம்.. ஆனா அது ஏன்னு எனக்கு மட்டுதான் தெரியும். ஏன்னாக்க, அந்த ரிக்ஷாவுல ஒரே ஆம்பளப்பையன் நான்தான். அப்போ பார்த்துக்குங்க.. எந்த அளவுக்கு பிஞ்சுலேயே பழுத்த கேசுன்னு..

ஆள் வளர வளர, உல்டாவா அறிவு மங்கித்தான் போச்சு. கூட சேந்த டிக்கெட்டுகளும் அந்தக் கேசுதான். அப்புறம் எங்குட்டு உருப்பட? ஆறில் இருந்து அறுபது வரை.. அட படம் இல்லைங்க.. அந்த வயசுக்குள்ள இருக்குற ஒரு பிகரையும் விடுறது கிடையாது. ஆனா ஒரு கொள்கை. எதையும் எட்ட நின்னு ரசிக்கலாம்.. அவ்வளவுதான். தேவை இல்லாம தொந்தரவு பண்ணக் கூடாது.. நல்லா இருக்கில்ல?

ஓகே.. இன்னும் கதைக்குள்ளையே போகாம ஏண்டா இப்படி கழுத்த அறுக்குற - இது வாசிக்குரவங்களோட மைன்ட்வாய்ஸ். சோ.. இனி கதை..

ஒன்பதாம் கிளாஸ் தொடங்குற முத நாளன்னைக்கு அவளைப் பார்த்தேன். புதுசா வந்து எங்க கிளாஸ்ல சேர்ந்தா. ராகினி.. பாருங்க.. பேரை சொல்லும்போதே சிலிர்க்குது. அவளைப் பத்தி ஒரே ஒரு வாக்கியம். அவ்ளோ அழகு.

ஒழுசப் படத்துல வந்த ஒரே ஒரு நல்ல பிட்டு மாதிரி, அமாவாசைல வந்த நிலா மாதிரி.. எங்க கிளாஸ்ல இருந்த அத்தனை பிகரையும் அவ தூக்கி சாப்டுட்டா. அவக்கிட்ட பேச மாட்டோமான்னு எல்லாரும் ஏங்க ஆரம்பிச்சாச்சு. ஆனா அவ கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். பொம்பளப் பிள்ளைங்க கிட்டக் கூட யோசிச்சுத்தான் பேசுவா.

இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. அன்னைக்கு ஒரு நிறைஞ்ச சனிக்கிழமை. முந்தின நாள் சாயங்காலம் பார்த்த "காதலுக்கு மரியாதை" பாட்டை முனங்கிக்கிட்டே பியூரட்டைக் கழுவிக்கிட்டு இருக்கேன். பின்னாடி இருந்து யாரோ "ஹாய்"னு கூப்பிட திரும்புறேன். பார்த்தா.. அப்டியே ஷாக் ஆகிட்டேன். அங்கே ராகினி. கிளாசே பேசணும்னு நினைக்கிற ராகினி தானா வந்து என்கிட்டே பேசுறா.. ஐயோ.. ஐயோ.. இது கனவா இல்லை நிஜமா?

ஏன் எப்படின்னு தெரியல. ஆனா அங்க ஆரம்பிச்சு அவ எனக்கு நல்ல பிரண்ட் ஆகிட்டா. பசங்களுக்கு எல்லாம் ஒரே காண்டு. அவனுங்கள எவன் மதிச்சான்? கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஓடிப் போச்சு. உள்ளுக்குள்ள உருவாகிட்ட என்னோட காதலை எப்போ அவக்கிட்ட சொல்றது?

அந்த நாள் தானா வந்துச்சு. என்கிட்டே அவளே எதேச்சியா கேட்டா.

"ஏன்டா.. என்னைய உனக்கு ரொம்பப் புடிக்குமா?"

"ஆமா ராகினி.. நிறைய.. நிறையப் புடிக்கும்.."

"எனக்காக என்ன வேணும்னாலும் செய்வியா?"

"கண்டிப்பா.. சொல்லு.. என்ன பண்ண? ஹோம் வொர்க் பண்ணலன்னு உன்ன அடிச்சானே வாத்தி.. அவன் மூஞ்சில பிளேட் போட்டுரவா? இல்ல வேற ஏதாவது?"

"ஏய்.. அதெல்லாம் வேண்டாம்.. நீ தைரியசாலிதான்.. ஒத்துக்குறேன்.. ஆனா அத எனக்கு புரூப் பண்ணனும்.."

"எப்புடி?"

"எங்க வீட்டுக்கு, என் பேருக்கு ஒரு கிரீட்டிங் கார்டு போடணும்.. அவ்வளவுதா.."

ஆகா.. மூர்த்தி.. இப்படி ஒரு வாய்ப்புக்குத்தாண்டா ஏங்கிக்கிட்டு இருந்த. யூஸ் பண்ணிக்கோ. கடை கடையா அலஞ்சு ஒரு பிரண்ட்ஷிப் கார்டு (அவங்க வீட்டுல மாட்டிக்கிட்டா சமாளிக்கனும்ல) வாங்கி.. அதுல அழகா கையெழுத்தும் போட்டு அனுப்பினா.. அதுதான் இப்போ ஒரு கொரங்கு கையில சிக்கி, அது வந்து என்னைய மிரட்டிட்டு போகுது. இது எப்படின்னு நாளைக்கு ராகினிக்கிட்ட கேட்டுரணும்.

பிளாஷ்பேக் ஓவர்.. இட்ஸ் டைம் டு கம் பேக் டு நார்மல்..

மறுநாள் ஸ்கூலுக்குப் போறேன். எனக்காக ராகினி படபடப்பாக் காத்துக்கிட்டு இருக்கா.

"என்னடா ஆச்சு? நேத்து ஸ்கூலுக்கு வரல?"

"அது.. அது.. அம்மா கூட கோயிலுக்குப் போயிட்டேன்.."

"அப்பாடா.. அவ்வளவுதான? நான் கூட யாரும் மிரட்டுனதால நீ மெரண்டு போய் வரலையோன்னு ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?"

டமார் டுமீர்.. எனக்குள்ள ஒரு டிரான்ஸ்பாமர் வெடிக்குது. என்னது.. என்னை ஆளுங்க மெரட்டினது இவளுக்கு தெரியுமா?

"உனக்கு எப்படி..?"

அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

"நேத்து சாயங்காலம் ராஜா வந்து என்கிட்ட பேசினான்.."

ராஜா? அது யாரு? ஓ.. ஓவரா ஆடுனானே அந்த ஒல்லிப்பிச்சான்.. அவனா? சரி..?

"இல்லடா.. தப்பா எடுத்துக்காத.. அவன் ரொம்ப நாளா என் பின்னால சுத்திக்கிட்டு இருக்கான்.. ஆனா அவன் என்ன விரும்புறானா இல்ல விளையாட்டுக்கு சுத்துறானான்னு தெரியல.. அதனாலத்தான்.."

"அதனால..?"

"உன்னை எனக்கு ஒரு கார்டு போடச் சொன்னேன்.. தெரியாத மாதிரி அந்தக் கார்ட நானே அவன் கண்ணுல படுற மாதிரி ரோட்டுல போட்டுட்டு போனேன்.. அதைப் பார்த்துட்டுத்தான் அவன் உன்னை மிரட்டினான்... அப்புறமா என்கிட்டே வந்து பேசிட்டான்.."

"ஐயையையோ.. அதுக்கு நீ என்ன சொன்ன?"

"சீ போடா.. எனக்கு வெக்கமா இருக்கு.." ஓடியே போயிட்டா.

அடப் பாதகத்தி.. அவன லவ் பண்றாளா? அப்போ நானு?

இப்போ இந்தக் கதையோட தலைப்ப நல்ல அழுத்திப் படியுங்க மக்களே..

ஊறுகா..

இப்படியாக ஒரு தெய்வீகக் காதல் ஊத்தி மூடப்பட்டது..!!!