சுறா படத்தின் கதை என்ன?
(விஜய் படத்துல கதை என்னன்னு கேக்குறாங்களே.. இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா?)
கதைப்படி நம்ம இளைய தறுதலைக்கு ஒரு பெஸ்ட் பிரண்டு. அவரு சீன நாட்டை சேர்ந்தவரு. வேலைக்கு வந்த இடத்துல அவருக்கு பிடிச்ச கெரகம்.. நம்ம டாக்டருக்கு பிரண்ட் ஆகிடுறாரு. பாஷையே தெரியலைன்னாலும் நீதாண்டா என் உயிர் நண்பன்னு நம்ம விஜய் அவரோட டூயட் பாடறாரு. (எப்படி வித்தியாசம் காமிச்சோம் பார்த்தீங்களா?) ஒரு தபா நம்ம சைனாக்காரரு.. பெரிய விபத்துல சிக்கி ஆஸ்பத்திரில கெடக்காரு. தன்னை பார்க்க வந்த விஜய் கிட்ட "நிக் மக் சுக் டக் அகோ பயோ" அப்படின்னு சொல்லிட்டு மண்டைய போட்டுடுறாரு.
தளபதி அப்படியே ஷாக் ஆகுறாரு. ஆகா.. நம்ம தோஸ்து என்ன சொல்லிட்டு செத்தான்னு தெரியலையேன்னு காண்டு ஆகி.. உண்மை என்னான்னு கண்டுபிடிக்க சைனாவுக்கே போறாரு. எப்படி போறாரு? கடல்ல சைக்கிள் ஓட்டிட்டு போறாரு. அதுதான்யா கெத்து. மீனெல்லாம் வழில மெரண்டு ஓடுது. அப்போ அந்தப் பக்கமா போட்ல வந்துக்கிட்டு இருக்குற தமன்னாவ ஒரு ஜெல்லி மீன்கிட்ட இருந்து காப்பாத்தி.. அப்புறம் என்ன? சுவிட்சர்லாந்துல டூயட்தான். கொஞ்ச நேரத்துல வில்லங்க எல்லாம் வராங்க. அவங்க யாருன்னு பார்த்தா.. எல்லாருமே சைனாவுல பெரிய ரவுடிங்க. எங்க தருதல நம்மா ஊருக்கு வந்து நம்மள எல்லாரையும் வேட்டை ஆடிடுவாரோன்னு பயந்து சண்டைக்கு வராய்ங்க. அப்படியே கடல்ல ஆறு சண்டை.. நடுவுல மூணு குத்துப் பாட்டு எல்லாம் முடிஞ்சு விஜய் சைனா வராரு. அங்க வந்து அவரோட பிரண்டு என்ன சொன்னாருன்னு கண்டுபிடிச்சு பார்த்தா..
"அட நாயே.. ஆக்சிஜன் ட்யூப்ல இருந்து கைய எடுடா லூசு.."
***************
படத்துல பஞ்ச டயலாக் பேசிப் பார்த்து இருப்பீங்க.. ஆனா நாங்க படம் பார்க்குறதுக்கே பஞ்ச வைப்போம்ல..
"சுறா" டிக்கட் வாங்குறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவ நல்லா யோசிச்சுக்கோ.. ஏன்னா.. தியட்டருக்கு உள்ள போனதுக்கு அப்புறம் நீ யோசிக்கவேமுடியாது..
***************
டிக்கட் கொடுக்குறவர்: ஐயா.. சுறா பட டிக்கட்ட யாருமே வாங்க வரலைங்க
முதலாளி: எல்லா டிக்கட்டையும் ஒரு ரூபாய்க்கு வித்துத் தள்ளுடா
டிக்கட் கொடுக்குறவர்: அய்யய்யோ.. அப்புறம் நாம போட்ட காச எப்படிங்க எடுக்குறது?
முதலாளி: டிக்கட் வாங்கிட்டு எல்லா பயலும் உள்ளே நுழைஞ்சவுடனே கதவ சாத்தி பூட்டு போடு.. படம் ஆரம்பிச்ச பத்து நிமிஷத்துல எல்லாரும் வெளிய போகணும்னு கதறுவானுங்க.. அப்போ ஆளுக்கு ஐநூறு ரூபா வாங்கிட்டு வெளிய விடு.. எப்பூடி?
***************
நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - இது நம்ம மக்கள் சொன்னது.. ஹி ஹி ஹி
***************
விஜய் ஏன் ரொம்பக் கோவமா இருக்காரு?
அப்புறம்? சுறான்னு பேரு வச்சுட்டு குரங்கு நடிச்ச படம்னு சொல்லி டிஸ்கவரி சானலுக்கு வித்துட்டாங்களாம்..
***************
தமிழ் நடிகர்கள் vs இந்தியன் கிரிக்கட் டீம்
ரஜினி = சச்சின் (எப்பவுமே டாப்பு)
கமல் = கங்குலி (எக்கச்சக்கமான திறமை.. ஆனாலும் ஹிட் ஆக முடியல)
சூர்யா = யுவராஜ் (கொஞ்சம் திறமையோட லக்கும் உண்டு)
விக்ரம் = தோனி (எப்படியாச்சும் ஹிட் ஆகிடும்)
மாதவன் = ஸ்ரீ சாந்த் (மெகா பிளாப் ஆனாலும் எல்லாருக்கும் பிடிக்கும்)
அஜித் = சேவாக் (அடிச்சா சிக்சர் இல்லன்னா டக்கு)
விஜய் = அட.. இவன் பால் பொறுக்கிப் போடுற பயபுள்ளைப்பா..
***************
எஸ்.பி.ராஜ்குமார்: சார்.. சுறா - இந்தப் படம் கண்டிப்பா நூறு நாள் ஓடும் சார்..
விஜய் : சூப்பர் சார்.. அப்போ நூறாவது நாள் விழாவுல உங்களுக்கு ஒரு கார் வாங்கித் தாரேன்..
எஸ்.பி.ராஜ்குமார்: சார்.. சும்மா.. ஜோக் அடிக்காதீங்க சார்..
விஜய்: அடங்கோயால.. படம் நூறு நாள் ஓடும்னு யாருயா முதல்ல ஜோக் அடிச்சது?
***************
இந்த இடுகை எப்போ வரும், எப்போ வரும்னு என்னைத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்த அண்ணன் அத்திரிக்கு சமர்ப்பணம்...
அப்புறம் அந்த டிஸ்கி ரொம்ப முக்கியம்ல.. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.. ஏய்.. யாருப்பா அது.. பேசிக்கிட்டு இருக்கும்போதே நக்கலா சிரிக்கிறது? சொல்றத நம்புங்கையா.. சரி.. இதையும் மீறி என்னைத் திட்ட வரும் டாக்டரின் (வருங்கால) கழகக் கண்மணிகள் நாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தும்படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..:-))))
23 comments:
nee Yeappo tan da thirunthuvea??? Cinnapulla thanama illa...
Ayoo ayoo...
/////தமிழகத்தைத் தாக்க வரும் அடுத்த சுனாமி ரெடி./////
நல்லவேளைக்கு இப்ப நான் தமிழகத்தில் இல்லை .
////////எஸ்.பி.ராஜ்குமார்: சார்.. சுறா - இந்தப் படம் கண்டிப்பா நூறு நாள் ஓடும் சார்..
விஜய் : சூப்பர் சார்.. அப்போ நூறாவது நாள் விழாவுல உங்களுக்கு ஒரு கார் வாங்கித் தாரேன்..
எஸ்.பி.ராஜ்குமார்: சார்.. சும்மா.. ஜோக் அடிக்காதீங்க சார்..
விஜய்: அடங்கோயால.. படம் நூறு நாள் ஓடும்னு யாருயா முதல்ல ஜோக் அடிச்சது?////////
ஹி ஹி ஹி ஹி
வன்மையாக கண்டிக்கிறேன்!
எனது கண்டிப்பும்
"அசலான கண்டிப்பு"!
ரெடிமேடா இருக்கு ஜி, வாத்தியார் புதுசா யோசிக்க வேணாமா?
எங்க இருந்து தான் கிரியேட்டிவிட்டி கொட்டுதோ தெரியலயே.. :))
இதோ பாருங்க, ஏதோ ஒரு விஜய் இருக்கிறதுனாலே தான் நமக்கும் வருசத்துக்கு ரெண்டு மூணு பதிவுக்கு மேட்டர் கிடைக்குது. இப்படியெல்லாம் எழுதி அவரை நோகடிச்சு இண்டஸ்ட்ரீயை விட்டே ஓட வச்சா, என்னை மாதிரி ஆளுங்க கதி என்னாவுறது? :-)
//அப்போ ஆளுக்கு ஐநூறு ரூபா வாங்கிட்டு வெளிய விடு.. எப்பூடி?//
ஆகா.. சூப்பர் ஐடியா...
ம்ம்ம்.. ரொம்ப நாளைக்கு பெறவு....
என்ன பயந்திட்டீங்களா... after approval.???
:-))
வருங்கால எம்எல்ஏ க்களே வாங்க, வருங்கால முதல்வர்களே வாங்க... எபிக்களே வாங்க.....
என்ன பாண்டியன், சித்திரை திருவிழா பத்தி பதிவு இருக்கும்னு ஆவலா ஓடியாந்தேன். இப்படி ஒரு சப்பை பதிவு போட்டு ஏமாத்திட்டீங்களே :((
சூப்பரப்பு!
இதெல்லாம் ஒரு பொழப்பு, அகமொத்ததுல, இளையதளபதியால பொழைகிரவங்கள நீயும் ஒருத்தன். தமிழ் திரைப்பட தயரிபாலர்கள கேட்டுபார், யார் படம் அதிக லாபம் வருதுன்னு. நீஎல்லாம் இதைபோல உருபுடாத கட்டுரை எழுததாண்ட லாயக்கு.
வாத்தியாரே...
எப்படி இப்படி எல்லாம்....
//இந்த இடுகை எப்போ வரும், எப்போ வரும்னு என்னைத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்த அண்ணன் அத்திரிக்கு சமர்ப்பணம்...//
அடப்பாவி ஏன் இந்த கொலைவெறி......................
சரி நானும் ஆட்டத்தை ஆரம்பிச்சிர வேண்டியதுதான்......... எப்படியோ 200ஹிட்ஸ் நிச்சயம்..... நல்லாயிருங்கடே
ஒரு ஜீரோ மிஸ் ஆகிடிச்சி........2000 ஹிட்ஸ் நிச்சயம்
ஹைய்யோ ஹைய்யோ.
உட்கார்ந்து யோசிச்சீங்களோ.ரசிகர்கள ரத்தக்கண்ணீர் விடவச்சுட்டீங்க. இதுல இவங்க இன்னும் படத்தைவேற பாத்துட்டூ...
சூப்பர் டா மாப்ளை ,கலக்கிட்ட ,
// நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னது நம்ம அறிவாளி டாக்டர் விஜய்
நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - இது நம்ம மக்கள் சொன்னது.. ஹி ஹி ஹி
//
இவ்வரிகள் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. அவன் திருந்த மாட்டான் மச்சான்.
நல்லாவே வலி கிளப்பிட்டீங்க!
ஓட்டும் போட்டாச்சி
என்ன தான் இருந்தாலும் இவ்வளவு கிண்டல் பண்ணக்கூடாதுங்க...!!
Post a Comment